உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 03, 2011

கடலூர் வெள்ளிக் கடற்கரையில் (சில்வர் பீச்) கோடை விழா நடத்தப்படுமா?


சில்வர் பீச் உப்பங்கழிப் பகுதியில், சேதமடைந்து காணாமல் போன சுற்றுலாப் படகுத்துறை இருந்த இடம் இதுதான் என அடையாளம் காண்பிக்கும் பனைமரத் தூண்கள்.
கடலூர்:
 
           டலூர் சில்வர் பீச்சில் இந்த ஆண்டாவது கோடைவிழா நடத்தப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. 

              சென்னை மெரீனா கடற்கரைக்கு அடுத்தபடியாக அழகான, நீளமான கடற்கரை என்று வர்ணிக்கப்படுவது சில்வர் பீச். தமிழ்நாடு சுற்றுலாத் துறையின், சுற்றுலாத் தலங்கள் பட்டியலில் கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச் இடம்பெறவில்லை. இருப்பினும், கடலூர் மாவட்ட நிர்வாகம் சில்வர் பீச்சை சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருக்கிறது.  

               அலைகள் தாலாட்டும் நீலநிற வங்கக் கடல், அதன் கரையில் ஆங்காங்கே அமைந்துள்ள மணல் திட்டுகள் மேல் இயற்கையாக வளர்ந்து உள்ள கொடிகளில் கண் சிமிட்டும் ஊதா நிறப் பூக்கள், படகுச் சவாரிக்கு ஏற்ற உப்பங்கழிப் பகுதி, அதன் அருகே சவுக்குத் தோப்புகள், வனத்துறையால் நடப்பட்டு, பராமரிப்பு இன்மையால் சிதைந்து கொண்டு இருக்கும் மாங்ரோவ் காடுகள், இதையடுத்து சிதைந்து கிடக்கும் புனித டேவிட் கோட்டை உள்ளிட்ட ஆங்கிலேயர் காலத்து கட்டடங்கள்.

                இவைகள் தான் வண்ண ஓவியமாய் காட்சி அளிக்கும் சில்வர் பீச்.  சுற்றுலா படகுத் துறை, குழந்தைகள் விளையாட்டுப் பூங்கா, கலையரங்கம், காட்சிக் கோபுரம், அலங்கார செயற்கை நீரூற்று, ஹைமாஸ் விளக்குகள், குடிநீர் வசதி எனப் பல்வேறு பணிகளுக்காக, 2008-ம் ஆண்டு வரை சுமார் ரூ. 1 கோடிக்கு மேல் இங்கு செலவிடப் பட்டது.  2004-ம் ஆண்டு சுனாமியின்போது கடற்கரையியில்  இருந்த காட்சிக் கோபுரம் மண்ணில் புதையுண்டது. 2005-ம் ஆண்டு அது புதுப்பிக்கப்பட்டது. எனினும் தற்போது சிதைந்து பயனற்றுக் கிடக்கிறது. குழந்தைகள் விளையாட்டு பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் உடைந்து கிடக்கின்றன.

               கடற்கரையில் காற்று வாங்க அமர்வதற்கு வசதியாக போடப்பட்ட இருக்கைகள் சேதம் அடைந்து விட்டன.  ரூ. 10 லட்சத்தில் சுற்றுலா படகுத்துறையில் மரத்தால் அமைக்கப்பட்டு இருந்த இறங்கு தளங்கள் முற்றிலும் சிதைந்து, அதற்காக நடப்பட்ட பனை மரங்கள் மட்டும் வரலாற்றுச் சின்னங்கள் போல் காட்சி அளிக்கின்றன. ÷சுற்றுலாப் படகுகள் அனைத்தும் உப்பங்கழி அருகே கவிழ்த்துப் போடப்பட்டுள்ளன. பல ஆண்டுகளுக்கு முன் என்.எல்.சி. நிர்வாகம் அமைத்துக் கொடுத்த மின் விளக்கு கோபுரங்கள் பராமரிப்பு இன்மையால், வெளிச்சத்துக்குப் பதில் இருளை அள்ளித் தெளித்துக் கொண்டு இருக்கின்றன. 

            2001-ம் ஆண்டு ரூ.5 லட்சத்தில் என்.எல்.சி. நிர்வாகம் அமைத்துக் கொடுத்த பூங்கா இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிற்று.  சுனாமியில் சிதைந்து போன சில்வர் பீச் புறக்காவல் நிலையத்துக்குப் பதில், அழகான புறக்காவல் நிலையம், மாடியில் சிற்றுண்டிச் சாலை, அதற்கு மேல் கடலின் அழகை ரசிக்க, காட்சிக் கோபுரம் என ராஜஸ்தான் அரசு கட்டிக் கொடுத்து இருந்தது. தற்போது இக் கட்டடத்தை காவல் துறை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டு, போலீஸ் அதிகாரிகளின் ஓய்வறையாக மாற்றி இருப்பதன் மூலம் சில்வர் பீச் கேட்பாரற்றுக் கிடக்கிறது என்பதை உறுதிப்படுத்த முடிகிறது. 

               ஆண்டுதோறும் 5 நாள் வரை விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வந்த சில்வர் பீச் சுற்றுலா கோடை விழாவும், 2008-ம் ஆண்டுடன் நின்று போயிற்று. இந்த ஆண்டாவது கோடை விழா நடைபெறுமா என்று அரசு அதிகாரிகளைக் கேட்டதற்கு, தேர்தல் பணியில் இருந்து விட்டால் போதும் என்ற நிலையில் இருக்கிறோம். அரசு அலுவலகங்கள் எதுவும் இயங்கவில்லை. நிலைமை இப்படியிருக்க, கோடை விழா பற்றி சிந்திக்க எங்கே நேரம் இப்போதைக்கு வாய்ப்பே இல்லை. புதிய அரசு அமையட்டும் அதன்பிறகு பார்க்கலாம் என்று தெரிவிக்கிறார்கள்.  இந்நிலையில் சில்வர் பீச்சுக்கு வரும் பொதுமக்களிடம், வாகனக் கட்டணம் வசூல் மட்டும் எவ்விதத் தடையும் இன்றி நடந்து கொண்டிருக்கிறது. 

Read more »

நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கு வழங்கக் கோரிக்கை

சிதம்பரம்:

               தமிழகத்தில் நிலவிவரும் மின்வெட்டை நீக்க நெய்வேலி நிலக்கரி நிறுவன மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து சிதம்பரம் கோட்டாட்சியரிடம் தமிழக இளைஞர் முன்னணி நிர்வாகிகள் மனு அளித்தனர்.

             அவ்வமைப்பின் நகர அமைப்பாளர் ஆ.குபேரன் தலைமையில் நிர்வாகிகள் பா.சுரேஷ், ரா.ராஜேஷ்குமார், சு.சுகன்ராஜ், ந.ஜான்பாண்டியன், வே.சுப்பிரமணியசிவா, செ.மணிமாறன் உள்ளிட்ட நிர்வாகிகள் சிதம்பரம் கோட்டாட்சியர் எம்.இந்துமதியிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

                அண்மைக்காலமாக தொடர் மின்வெட்டினால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். சென்னை மாநகர பகுதிகளில் 1 மணி நேரமும், ஏனைய தமிழகத்தில் அனைத்து நகரங்களிலும் 3 மணி நேர மின்வெட்டும் செய்யப்படுகிறது.  பல்வேறு கிராமம் பகுதிகளில் 6 மணி நேரம் மட்டுமே மின்சாரம் வழங்கப்படுகிறது. இதனால் உழவர்கள், வணிகர்கள், மாணவர்கள், பொதுமக்கள், சிறுதொழில் முனைவோர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

                       தமிழகத்துக்கு காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடகத்துக்கு நாள்தோறும் 11 கோடி யூனிட் மின்சாரம் நெய்வேலியில் இருந்து வழங்கப்படுகிறது. முல்லைப் பெரியாறு அணையை இடிக்கத் துடிக்கும் கேரளத்துக்கு 9 கோடி யூனிட் மின்சாரம் வழங்கப்படுகிறது. பாலாற்றை தடுக்கும் ஆந்திரத்துக்கு 6 கோடி யூனிட் மின்சாரம் வழங்கப்படுகிறது. கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் பெரும்பகுதி அண்டை மாநிலங்களுக்கே வழங்கப்படுகிறது. 

                அசாம் மாநிலம் சலகதியில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் அந்த மாநில அரசு கேட்டுப் பெற்றுள்ளது.எனவே தமிழகத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை தமிழகத்துக்கு பயன்படுத்த அரசு நடவடிக்கை வேண்டும் என மனுவில் தமிழக இளைஞர் முன்னணி நிர்வாகிகள்  தெரிவித்துள்ளனர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் சிறப்பு எழுத்தர் பணி: காவலர்களுக்கு பயிற்சி

கடலூர்:

              கடலூர் மாவட்டத்தில் காவல் நிலையங்களில் பணிபுரியும் தலைமைக் காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை உள்ளோருக்கு சிறப்பு எழுத்தர் பயிற்சிக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் ஏற்பாடு செய்துள்ளார்.  

                 பொதுவாக காவல் நிலையங்களில் எழுத்தர் (ரைட்டர்) பணி மிகவும் முக்கியமானது. காவல் நிலையங்களே பெரும்பாலும் எழுத்தர்களால்தான் இயக்கப்படும் என்று கூறுவது உண்டு. அந்த அளவுக்கு எழுத்தர் பணி முக்கியத்துவம் வாய்ந்ததும், எழுத்தர் பணிபுரிவோர் பன்முகத் தன்மை கொண்ட  திறமையானவர்களாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையும் உண்டு. ஆனால் காவல் நிலையங்களில் அத்தகைய நிலை குறைந்து வருகிறது.  

              கடலூர் மாவட்டத்தில் பணி ஓய்வுபெற்ற தலைமைக் காவலர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் சிலர் பிரிவுபசார விழாக்களில் பேசுகையில், எழுத்தர் பணிக்கு போதிய பயற்சி இல்லை, பலர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும், குற்றப் பத்திரிகை தயாரிக்கவும் இயலாதவர்களாக, அனுபவம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என்று சுட்டிக் காட்டி வருகின்றனர். இதனால் பல வழக்குகளில் புலனாய்வு சரியாக இருப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.   

             இதைக் கருத்தில் கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ், காவல் நிலைங்களில் பணிபுரியும் தலைமைக் காவலர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு எழுத்தர் பணிக்கான சிறப்புப் பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்துள்ளார்.  பயிற்சி முகாம் தொடக்க விழா திங்கள்கிழமை நடந்தது. 

 விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ்.கூறியது:  

              காவல் நிலையங்களில் தலைமைக் காவலர்கள் பொறுப்பேற்கும் எழுத்தர் பணி பன்முகத் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். முதல் தகவல் அறிக்கை, குற்றப் பத்திரிகை தயாரித்தல் போன்ற எழுத்துப் பணிகளில் அவர்கள் கைதேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். ஆனால் அந்த நிலை கொஞ்ச காலமாக மாறி வருகிறது. இதனால் வழக்குகளில் புலனாய்வில் குறைபாடு ஏற்படுகிறது.  நிலுவை வழக்குகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

                காவல் துறை கணக்கின்படி 3 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால் 9 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக நீதிமன்றங்கள் தெரிவிக்கின்றன. காவல் நிலையங்களில் எழுத்தர் பற்றாக்குறை அதிகம் உள்ளது.  எனவே கடலூர் மாவட்டத்தில் உள்ள 46 காவல் நிலையங்களிலும் பணிபுரிவோரில், ஒரு காவல் நிலையத்தில் தலா 5 பேராவது எழுத்தர் பணிக்கான சிறப்புப் பயிற்சி பெற்றவர்களாக இருக்கும் வகையில், இப் பயிற்சி முகாம் தொடங்கப்பட்டுள்ளது. 

              இதில் முதல் தகவல் தயாரித்தல், குற்றப் பத்திரிகை தயாரித்தல், சாட்சியங்கள் பதிவு செய்தல், வழக்குகளில் புலனாய்வு உள்ளிட்ட பல்வேறு பணிகளில் பயிற்சி அளிக்கப்படும். வழக்கறிஞர்கள், டாக்டர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை வல்லுநர்களைக் கொண்டும் இப்பயிற்சி அளிக்கப்படும்.  முதல்கட்டமாக 80 பேருக்கு இப்பயிற்சி அளிக்கப் படுகிறது. ஒரு விபத்து நிகழ்ந்தாலோ, குற்றச் செயல்கள் நிகழ்ந்தாலோ, வழக்குகளுக்காக எத்தகைய அம்சங்கள் கவனிக்கப்பட வேண்டும் என்பது பற்றி, இப்பயிற்சியில் செயல் விளக்கமும் அளிக்கப்படும் என்றார் எஸ்.பி. நிகழ்ச்சியில் வழக்கறிஞர் அருணாசலம், காவல் துறை உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Read more »

வடலூரில் மின் மயானம் அமைக்கக் கோரிக்கை

நெய்வேலி:
 
              வடலூர் நகரில் மின்சார மயானம் அமைக்கவேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் பேரூராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 
 
                  கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தாலுக்காவில் உள்ள வடலூரில் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் வடலூர் நகரம் விரிவடைந்து பல்வேறு அடிப்படை வசதிகளும் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் வடலூருக்கான மயானம் மட்டும் போதிய இடவசதியின்றியும், ஆக்கிரமிப்பாளர்களால் அபகரிக்கப்பட்டும் வருவதோடு. சுகாதார சீர்கேட்டின் பிடியில் சிக்கி தவிக்கிறது.
 
            அவ்வழியே சடலங்களையும் எடுத்துச் செல்லமுடியாமலும், சடலங்களை புதைக்க இடம் கிடைக்காத நிலையும் உள்ளது. வடலூர் பேரூராட்சி நிர்வாகம் இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் வடலூர் வர்த்தக சங்கம் சார்பில் மின் மயானம் அமைக்கவேண்டும் என்று கடலூர் எம்பி கே.எஸ்.அழகிரியிடம் கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக எம்.பி., அழகிரி, மாவட்ட ஆட்சியரிடமும் முறையிட்டுள்ளார். இந்நிலையில் வடலூர் நகரில் உள்ள பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், வடலுர் நகரில் மின்மயானம் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வடலூர் பேரூராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி வருகின்றன.

Read more »

வாக்காளர் அடையாள அட்டை தொலைந்தால் என்ன செய்வது ?

          புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை தொலைந்தாலோ, சிதைந்த நிலையில் இருந்தாலோ அல்லது தரம் குறைந்த புகைப்படமாக இருந்தாலோ, கருவூலம் அல்லது சார்நிலை கருவூலத்தில் முகவரி சான்றுடன், "0001சி' படிவத்தில் புகைப்படத்துடன், 15 ரூபாய் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும் அல்லது வாக்காளர் அடையாள அட்டை மையத்தில் பணமாக செலுத்தி, அதற்கான ரசீதை பெற்றுக் கொள்ளலாம். முகவரி மாறியிருந்தாலும் விண்ணப்பிக்கலாம். இதற்கும், 15 ரூபாய் செலுத்த வேண்டும்.
 
            இதற்கு, அசல் அட்டை நகலுடன் விண்ணப்பிக்க வேண்டும். அடையாள அட்டைக்கு முகவரி சான்றாக, குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம், தற்போதைய தொலைபேசி ரசீது, பாஸ்போர்ட், வங்கி, தபால் நிலைய கணக்கு புத்தகம் ஆகியவற்றில் ஒன்றை காண்பிக்கலாம். வயது சான்றுக்கு, பள்ளி சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் அல்லது பெற்றோரின் உறுதி ஆவணம் ஆகியவற்றில் ஒன்றை அளிக்கலாம்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் 2,264 தபால் ஓட்டுகள்

கடலூர்:

         கடலூரில் தபால் ஓட்டுகள் போடும் பெட்டியை கலெக்டர் நேற்று ஆய்வு செய்தார். 

         கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி, காட்டுமன்னார் கோயில், நெய்வேலி தொகுதி தேர்தல் அலுவலங்களில் தபால் ஓட்டுகள் பெறப்பட்டு வருகின்றன. நேற்று அந்தந்த பகுதிகளில் தபால் ஓட்டுக்கள் போடும் பெட்டியை கலெக்டர் ஆய்வு செய்தார்

பின்னர் கலெக்டர் கூறியது:

             கடலூர் மாவட்டத்தில் போலீஸ், தேர்தல் அலுவலர்களுக்காக 6,046 ஓட்டுச்சீட்டுக்களும், சர்வீஸ் மென்களுக்காக 439 ஆக மொத்தம் 6,485 ஓட்டுச்சீட்டுக்கள் வினியோகிக்கப்பட்டன. அவற்றில் இதுவரை சர்வீஸ் மென்களிடம் இருந்து 24ம், போலீஸ் மற்றும் தேர்தல் பணியாளர்களிடம் இருந்து 2,240 என மொத்தம் 2,264 ஓட்டுச்சீட்டுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. மேலும் கால அவகாசம் இருப்பதால் விரைவில் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு கலெக்டர் சீத்தாராமன் கூறினார்.

Read more »

கடலூரில் இகாஸ் கால்பந்தாட்ட குழு மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்கும் விழா

கடலூர் : 

           இகாஸ் கால்பந்து மாணவிகள் 40 பேருக்கு டான்ஃபேக் கம்பெனி சார்பில் இலவச விளையாட்டு சீருடைகள் வழங்கப்பட்டது. 

               கடலூரில் இகாஸ் கால்பந்து அமைப்பு, சுனாமியால் பாதிக்கப்பட்டு, அரசு காப்பகத்தில் தங்கி படித்து வரும் மாணவிகளை தேர்வு செய்து கால்பந்து பயிற்சி அளித்து வருகிறது. இக்குழுவில் உள்ள மாணவிகள் வெளி மாநிலம், மற்றும் வெளிநாடுக்குச் சென்று பெண்கள் கால்பந்து போட்டியில் பங்கேற்று பல பரிசுகளை பெற்று வருகின்றனர். 

             தற்போது இக்குழுவில் உள்ள மாணவிகள் மகாலட்சுமி, கண்ணாத்தா, பத்மாவதி ஆகியோர் உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்துவரும் தேசிய பெண்கள் கால்பந்து போட்டியில் புதுச்சேரி அணி சார்பில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதைத் தொடர்ந்து தற்போது இக்குழுவினருடன் இகாஸ் கோடை கால கால்பந்து பயிற்சி முகாமில், கடலூர் சிப்காட் டான்ஃபேக் கம்பெனி சார்பில் கால்பந்தாட்ட மாணவிகள் 40 பேருக்கு இலவச விளையாட்டு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

           இதில் டான்ஃபேக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சம்பத்குமார் மாணவிகளுக்கு சீருடை வழங்கினார். இகாஸ் செயலாளர் மாரியப்பன், பயிற்சியாளர் செங்குட்டுவன், ராஜ்மோகன், துரைசாமி, சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இகாஸ் பொருளாளர் திருமலை நன்றி கூறினார்.

Read more »

விழுப்புரம் மாவட்ட மாணவர்கள் பிச்சாவரத்தில் சுற்றுலா

கிள்ளை:

             சிதம்பரம் அருகே பிச்சாவரத்தில் விழுப்புரம் வனத்துறை சார்பில் நடந்த சூழல் சுற்றுலாவில் ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் பங்கேற்றனர். மத்திய அரசின் நிதி உதவியுடன் "கழு வெளி ஈர நில பாதுகாப்புத் திட்டத்தில்' கழுவெளியில் காடு வளர்ப்பிற்காக பல்வேறு திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

                அதில் சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், திட்டம் செயல்படுத்தப்படும் பகுதியில் உள்ள கிராம மக்கள், கிராம வனக்குழு உறுப்பினர்கள், கல்லூரி மாணவர்கள், பி.எட்., மாணவர்கள் மற்றும் பல்துறை அரசு ஊழியர்கள் பயன் பெறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சூழல் சுற்றுலா நடத்தப்பட்டு வருகிறது.
 
              பிச்சாவரத்தில் நடந்த விழாவில் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து தனியார் கலை அறிவியல் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி, பி.எட்., மாணவர்கள், ஊரக வளர்ச்சி முகமை மற்றும் வணிக வரித்துறை ஊழியர்கள் பங்கேற்றனர். திண்டிவனம் வனச்சரக அலுவலர் வெங்கடேசன், பிச்சாவரம் வனப் பகுதியில் உள்ள தாவரங்கள், அப்பகுதியல் வளர்க்கப்படும் காடுகள், கடற்கரையோரம் உள்ள மக்களின் வாழ்வாதாரம், கிராம சமுதாய அபிவிருத்திப் பணிகள், சுற்றுச்சூழல் கல்வி, விழிப்புணர்வு குறித்து மாணவர்களுக்கு விளக்கினார். பின்னர் பிச்சாவரம் வனப்பகுதி சுற்றுலாவில் பங்கேற்றவர்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.

Read more »

Cuddalore district SP orders timely filing of FIRs for cognisable offences


Ashwin Kotnis


CUDDALORE: 

           The Police department in Cuddalore district has organised a four-day training programme for the constabulary and Special Sub-Inspectors to improve their skills, right from registering the First Information Reports (FIR) to conducting investigation and filing of charge sheets, said Ashwin Kotnis, Superintendent of Police.

          The training sessions are being handled by high-level police officers, senior lawyers and Motor Vehicle Inspectors in two phases — two days each for accident cases and injury cases. Addressing a press conference here on Monday, Mr. Kotnis said Deputy Inspector-General of Police Pon.Manickavel had issued instructions that in all cases relating to cognisable offences (falling under Section 154 of the Criminal Procedure Code), FIRs must be filed without any delay.

            Police personnel were being trained in drafting investigation reports after verification of facts and witnesses. Such a measure would increase the number of “writers” in 46 police stations in the district, besides lessening the burden on Sub-Inspectors and Inspectors of Police, who would otherwise have to take care of the responsibility, besides their bandobust duty. After training the constabulary could take care of the investigation of simple offences, while SIs and Inspectors could probe major offences such as kidnappings and murders. Mr. Kotnis noted that the usual practice adopted at the accident site was to take photographs of victims and vehicles without giving a clue about any landmark such as the milestone, signboard, door numbers of houses in the vicinity and near the place of occurrence.

          Initially, a batch of 46 personnel had been selected for the programme and more personnel would be involved in due course, Mr. Kotnis added. Senior lawyer S.Arunachalam told The Hindu that from preparing FIR to the filing of charge sheet there were well-laid out procedures to be followed, including preparation of observation map, drawing rough sketches of the scene of occurrences, recording statements of the witnesses (called 161 statements as it refers to Section 161 of Cr.P.C), recovery of weapons used in the crime, tracking the accused and filing of charge sheets.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior