உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, டிசம்பர் 04, 2011

திட்டக்குடி அருகே நிதிநத்தம் ஓடை பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது


 http://mmimages.mmnews.in/Articles/2011/Dec/37bdfb2c-1dc3-4484-bfc4-9b20b7956922_S_secvpf.gif
திட்டக்குடி:

        திட்டக்குடி அருகே நிதிநத்தம் ஓடை பாலத்தை ஒன்றிய குழுத்தலைவர் பார்வையிட்டார். திட்டக்குடியை அடுத்துள்ள நிதிநத்தம் ஓடையில் பெறுமுளை சிறுமுளை குமாரை வேப்பூர் உட்பட 20 கிராமங்களை இணைக்கும் ஓடைப்பாலம் ஒன்று உள்ளது இந்தபாலம் வழியாக இப்பகுதி மக்கள் அருகில் உள்ள திட்டக்குடி வந்து செல்லவும் விவசாய பொருட்களை எடுத்து வரவும் பயன் படுத்தி வந்தனர்

           இந்நிலையில் கடந்த 1992-ல் பெய்த கனமழை காரணமாக நிதிநத்தம் ஓடைப்பாலம் உடைந்து பாலத்தின் ஒரு பகுதி ஓடை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் திட்டக்குடியில் இருந்து நிதிநத்தம் வழியாக வேப்பூர் வரை சென்ற அரசு டவுன் பஸ் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளிலும் தற்போதும் பெய்த கனமழைகாரணமாக இந்தபாலம் முழுமையாக சேதமடைந்தது.இதனால் விவசாயிகள் மாணவர்கள் கிராமமக்கள் பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.

             இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மங்களூர் ஒன்றியக்குழுத்தலைவர் கே.பி.கந்தசாயிடம் முறையிட்டனர் அதன் பேரில் கே.பி.கந்தசாமி அந்த ஓடையை நேரில் பார்வையிட்டார். இதில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து நபார்டு அலுவலர்கள் மற்றும் ஒன்றிய பொறியாளரிடம் விவாதிக்கப்பட்டது. ஓடைப்பாலத்தை கட்டு வதற்கு மட்டும 30 லட்சம் ரூபாயும் நிதிநத்தம் இணைப்பு சாலையை (3 கிமி) புதுப்பிக்க 20 லட்சம் ரூபாயும் தேவைப்படுவதாய் அதிகாரிகள் தெரிவித்தனர். 

             வெள்ளப்பாதிப்பு காரணமாக ஓடைபாலம் சேதம் அடைந்துள்ளதால் குறிப்பிட்ட நிதியை மாவட்ட கலெக்டரின் பரிந்துரை பேரில் வெள்ளப்பாதிப்பு நிதியில் இருந்து பெறுவது குறித்து மாவட்ட கலெக்டரிடம் முறையிடப்பட்டது. மேலும் நபார்டு நிதி பெற்று குறிப்பிட்ட பணியை மேற்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஒன்றியக்குழுத்தலைவர் கே.பி.கந்தசாமியிடம் அந்தபகுதியை சேர்ந்த கிராமமக்கள் திரண்டு வந்து அவரிடம் முறையிட்டனர் அப்போது அவர் கிராமமக்களிடம் உரிய நடவடிக்கை எடுக்க உறுதி அளித்தார்.

                அவருடன் ஒன்றியக்குழு துணைத்தலைவர் அன்னக்கிளிகுனசேகரன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் தியாகராஜன், பாக்கியலட்சுமி, ஒன்றிய கவுன்சிலர் முருகானந்தம், ஒன்றிய அதிமுக துணை செயலாளர் தங்கவேல், மாவட்ட பிரதிநிதி சுப்ரமணியம், ஊராட்சி செயலாளர்கள் தங்கவேல், முத்துராமன், அண்ணா தொழில் சங்க மாவட்டத்தலைவர் ராமலிங்கம் ஆகியோர் வந்திருந்தனர். 
















Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior