உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 09, 2010

வில்லோ மரங்களில் 'ஒட்டு' : அலட்சியம் செய்தால் 'வேட்டு'

Tamilnadu special news update
 ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள வில்லோ மரங்களில் ஒட்டுத்தாவரங்கள் அதிகரித்து வருகிறது. ஊட்டி தாவரவியல் பூங்காவில் அரிய வகை மலர், தாவரம், மரங்கள் கண்களுக்கு விருந்தளித்து வருகின்றன. கோடை சீசனுக்கான பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன; நூற்றாண்டு கடந்த மரங்களை சுற்றி மலர் தொட்டிகள் வைக்க, பூங்கா நிர்வாகத்தினர் திட்டமிட்டுள்ளனர். இது ஒருபுறம் இருக்க, ஊட்டியில் சதுப்பு நிலங்கள் குறைந்ததால், இந்நிலங்களில் வளரக் கூடிய வில்லோ மரங்கள், தாவரவியல் பூங்காவின் முகப்பு பகுதியில் உள்ள குளங்களை சுற்றி வளர்ந்துள்ளன.  நீளமான கிளைகளை கொண்ட இந்த மரங்கள், சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்கின்றன; இந்த மரத்திலிருந்து கிரிக்கெட் மட்டை செய்யப்படுவதால், பார்வையாளர்கள் ஆவலுடன் பார்த்து செல்கின்றனர். பூங்காவில் உள்ள சில வில்லோ மரங்களில், தற்போது ஒட்டுத் தாவரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இந்த ஒட்டுத் தாவரங்கள் மரத்தின் சக்தியை பயன்படுத்திக் கொண்டு செழிப்பாக வளர்வதால், மரங்கள் பட்டுபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  கட்டுபடுத்தாவிட்டால், அரு கில் உள்ள மரங்களிலும் பரவி, அந்த மரயினங்களையும் அழித்து விடும் என, இயற்கை ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

downlaod this page as pdf

Read more »

நான் பெரிய ஐயா;​ ஸ்டாலின் சின்ன ஐயா: கருணாநிதி ருசிகரம்



 
"நான் பெரிய ஐயா;​ ஸ்டாலின் சின்ன ஐயா' என்று முதல்வர் கருணாநிதி சட்டப் பேரவையில் கூறினார். பென்னாகரம் இடைத் தேர்தலின்போது,​​ தங்களது வாகனங்கள் கூட சோதனை செய்யப்பட்டதை முதல்வர் கருணாநிதி இவ்வாறு குறிப்பிட்டார். பென்னாகரம் இடைத் தேர்தலின்போது அரசியல் கட்சித் தலைவர்களின் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டதில் தங்களுக்குள்ள கருத்தை திமுக} பாமக ஆகியவை பேரவையில் பரஸ்பரம் பரிமாறிக் கொண்டன. 
 
இது தொடர்பாக பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற விவாதம்:​​
 
வேல்முருகன் ​(பாமக):​​ 
 
                 பென்னாகரத்தில் தேர்தல் பிரசாரம் செய்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனையிடப்பட்டன.​ முதல்வர்,​​ துணை முதல்வர்,​​ முன்னாள் முதல்வரின் வாகனங்களைக் கூட சோதனையிட்டனர்.அரசியல் கட்சி தலைவர்களின் வாகனங்களை சோதனை செய்திருக்க வேண்டாம் என்பதே எங்களின் நிலைப்பாடு.​ காவல்துறை நினைத்திருந்தால் அதனைத் தடுத்திருக்கலாம்.
 
முதல்வர் கருணாநிதி:​​ 
 
                   தேர்தல் நேரத்தில் காவல் துறையினர் நடந்து கொண்ட முறைகள்,​​ உருவாக்கிய கட்டுப்பாடுகள்,​​ நடத்திய சோதனைகளுக்கு தமிழக அரசு பொறுப்பல்ல.​ தேர்தல் ஆணையம்தான் பொறுப்பு.
 
வேல்முருகன் ​(பாமக):​​
 
                    பல்வேறு தலைவர்களின் வாகனங்களை சோதனை செய்தாலும் எங்களின் அய்யா ​(ராமதாஸ்),​​ சின்ன அய்யா ​(அன்புமணி ராமதாஸ்)​ வாகனங்களை மட்டும் வெடிகுண்டு சோதனை செய்யும் கருவிகளைக் கொண்டு சோதனை செய்தார்கள்.​ ஆனால்,​​ மற்றவர்களின் வண்டிகள் தொடர்ந்து சோதனை செய்யப்படவில்லை.​ சோதனை என்ற பெயரில் அவமானப்படுத்தியுள்ளனர்.
  
முதல்வர் கருணாநிதி:​​ 
 
            தொடர்ந்து ஏன் சோதனை செய்யப்படவில்லை என்று வேல்முருகன் கேட்கிறார்?​ மார்ச் 24}ம் தேதி நான் பென்னாகரத்தில் தேர்தல் பிரசாரம் செய்த போது எங்கள் கட்சியின் பெரிய அய்யாவாகிய என்னுடைய வண்டியையும்,​​ சின்ன அய்யாவாகிய ஸ்டாலின் வண்டியையும் சோதனை செய்தார்கள்.
 
வேல்முருகன் ​(பாமக):​​ 
 
                  அதனை நான் அறிவேன்.​ தீவிரவாதிகளைப் போல சோதனை நடத்தியதைத் தான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அமைச்சர் எ.வ.​ வேலு:​​ பென்னாகரத்தில் எனது வண்டியைத்தான் முதன் முதலாக சோதனை செய்தார்கள்.​ ஒரே நாளில் மூன்று இடங்களில் அமைச்சரான எனது வண்டியை நிறுத்தி சோதனை செய்தார்கள்.
 
ஜி.கே.​ மணி ​(பாமக):​​ 
 
                     தேர்தல் ஆணையம் எவ்வளவு பெரிய அதிகாரம் படைத்த அமைப்பாக இருந்தாலும் முதல்வரின் வாகனத்தைச் சோதனையிட வேண்டிய அவசியம் இல்லை.​ எங்கள் அய்யா ​(ராமதாஸ்),​​ மற்றும் சின்ன அய்யாவை ​(அன்புமணி ராமதாஸ்)​ சோதனை என்ற பெயரில் பலமுறை அவமானப்படுத்தியுள்ளனர் என்றார்.

downlaod this page as pdf

Read more »

Collector Warns Officials Against Absenteeism


CUDDALORE: 

            Collector P. Seetharaman has warned of stringent action against officials who absent themselves from enumeration work of huts under the Kalaignar Housing Scheme. In a statement here on Thursday, he said that the work started on March 29 and would go on until May 15.

           If officials involved in the exercise had to take leave owing to circumstances, they should get prior permission from higher-ups. Any absenteeism without advance intimation would be severely dealt with, Mr. Seetharaman said. A team comprising the Village Administrative Officer, Makkal Nala Paniyalargal and panchayat assistants had been constituted to take care of enumeration in each of the 681 village panchayats in the district. For going on leave, the VAOs had to get permission from the respective tahsildars, and, the Makkal Nala Paniyalargal and the panchayat assistants from the respective Block Development Officers. If the tahsildars had to deploy VAOs on some other duty, they should get permission from the respective Revenue Divisional Officers. Mr. Seetharaman said that during inspection in Vazhudalampattu, Anukkampattu and Agaram, it was found that officials had not taken proper measurement of the huts. He urged them to use a measuring tape to record the extent of area in which each hut was located. If more than one family was living in the same tenement, the team should ensure that they were separate entities. So far, a total of 60,168 huts were enumerated in 410 panchayats and the task was completed in 42 panchayats. Mr. Seetharaman said that beneficiary families should be present at the time of enumeration and produce ration cards, electricity bills and land documents to establish their credentials. Even huts with mud walls or raw or roasted bricks with thatched roof would be eligible to be included under the scheme, he added.

downlaod this page as pdf

Read more »

அன்புமணி ராமதாஸ் பேசியது என்ன?​​ அமைச்சருடன் பாமக வாக்குவாதம்



 
 
                 பென்னாகரத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியது தொடர்பாக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்துடன் பாமகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.சட்டப் பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழக பட்ஜெட் மீதான பொது விவாதத்தின்போது 
 
இது குறித்து நடைபெற்ற விவாதம்:​​
 
வேல்முருகன் ​(பாமக):​​ 
 
                சேலம் மாவட்டம் மேச்சேரியில் பாமக நிர்வாகிகள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.​ எங்கள் மீது என்ன வெறுப்பு?​​
 
அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்:​​ 
 
                மேச்சேரியில் பாமக ஒன்றியச் செயலாளர் தாக்கப்பட்டதாக வேல்முருகன் கூறினார்.​ பாமகவினர் தான் முதலில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.​ அதற்குப் பதிலாக திருப்பிக் கொடுத்துள்ளனர்.
 
வேல்முருகன் ​(பாமக):​​ 
 
              முதல்வர் இருக்கும் போதே மூத்த அமைச்சர் ஒருவர் திருப்பித் தாக்குவோம் என்கிற தொனியில் பேசுவது சரியல்ல.
 
அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்:​​ 
 
                 நான் நடந்ததைத்தான் குறிப்பிட்டேன்.​ 27}ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்ற போது,​​ தேர்தல் பணியாற்றும் சிலரை கட்டி வைத்து உதைக்குமாறு உங்களின் சின்ன அய்யா ​(அன்புமணி ராமதாஸ்)​ பேசியுள்ளார். 
 
வேல்முருகன் ​(பாமக):​​ 
 
              எந்த இடத்திலும் அவர் அப்படிப் பேசவில்லை.​ அமைச்சர் தவறான தகவலைத் தந்துள்ளார்.
 
ஜி.கே. ​ மணி ​(பாமக):​​ 
 
               தேர்தல் முறைகேடுகள் குறித்து பேச ஆரம்பித்தால் அது குறித்து தனி விவாதமே நடத்த வேண்டியிருக்கும்.​ மேச்சேரியில் திமுகவினரை பாமகவினர் தாக்கியதாக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறினார்.​ அவருக்கு தவறான தகவல் வந்துள்ளது. மார்ச் 25}ம் தேதிக்குப் பிறகு பென்னாகரத்தில் இருந்து வெளியூர் நபர்கள் வெளியேறிவிடுவார்கள்.​ அதன் பிறகு வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்திப்போம் என்ற அர்த்தத்தில் தான் "25}ம் தேதிக்கு பிறகு மாற்றம்' என்று சின்ன அய்யா ​(அன்புமணி ராமதாஸ்)​ பேசினார்.​ கட்டி வைத்து உதைக்குமாறு பேசவில்லை.
 
வேல்முருகன் ​(பாமக):​​ 
 
                   கட்டி வைத்து உதைக்குமாறு அன்புமணி ராமதாஸ் பேசியதாக வீரபாண்டி ஆறுமுகம் கூறியதை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்.
 
அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்:​​ 
 
             பத்திரிகைகளில் வந்துள்ள செய்தியைத் தான் குறிப்பிட்டேன்.​ வேண்டுமானால் அதனைக் காட்ட தயாராக இருக்கிறேன்.
 
அவை முன்னவர் ​(க.​ அன்பழகன்):​​ 
 
             அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பேசியதை மறுத்து பாமகவினர் பேசியதும் பதிவாகியுள்ளது.​ எனவே,​​ அமைச்சர் பேசியதை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டியதில்லை என்றார்.அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கோஷமிட்டனர்.
 
அப்போது, ​​ குறுக்கிட்ட அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்,​​ 
 
                 ""நான் பேசியது உண்மைதான்.​ ஆனாலும் நான் பேசியது பாமகவினரை புண்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகிறேன்'' என்றார்.

downlaod this page as pdf

Read more »

18-ம் தேதி நெய்வேலியில் ஜெயலலிதா ஆர்ப்பாட்டம்



 
                     தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறையைக் கண்டித்து அ.தி.மு.க.​ பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஏப்ரல் 18-ம் தேதி நெய்வேலியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறார். 
 
இது குறித்து அ.தி.மு.க.​ பொதுச் செயலாளர் ஜெயலலிதா வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
 
                      2001-2006 அ.தி.மு.க.​ ஆட்சிக் காலத்தில் மின் உற்பத்தியில் தமிழகம் முன்னிலையில் இருந்தது.​ 2006 தொடக்கத்தில் தமிழ்நாட்டில் மின் உற்பத்தி நிறுவு திறன் 10 ஆயிரத்து 11 மெகாவாட்டாக இருந்தது.​ 2005-2010-ம் ஆண்டுகளில் கூடுதலாக 5 ஆயிரம் மெகாவாட் உற்பத்தித் திறனை நிறுவவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.ஆனால், ​​ 2006 மே மாதம் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.​ கடந்த நான்காண்டு கால தி.மு.க.​ ஆட்சியில்,​​ மின் உற்பத்தி நிறுவு திறன் குறைந்திருக்கிறது.தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அனல் மின் நிலையங்கள் அடிக்கடி பழுதடைவது,​​ மத்திய அரசின் தொகுப்பிலிருந்து பெறப்படும் மின்சாரத்தின் அளவு குறைந்திருப்பது,​​ மத்திய அரசு அளிக்க வேண்டிய எரிவாயு ஒதுக்கீடு குறைக்கப்பட்டது ஆகியவையும் தமிழ்நாட்டில் நிலவும் கடுமையான மின் வெட்டிற்கு முக்கியக் காரணங்கள்.மே மாதம் வரை மின் வெட்டு தொடரும் என்கிறார் மின் துறை அமைச்சர்.​ 2011 வரை மின் நிலைமை சீராகாது என்கிறார் தலைமைச் செயலாளர்.​ இப்போது மின் வெட்டு நேரம் அதிகரிக்கப்படுகிறது.அ.தி.மு.க. ​ ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் புதிய மின் திட்டங்கள் இல்லை என்பது முற்றிலும் தவறானது.​ தி.மு.க.​ ஆட்சியில் சமர்ப்பிக்கப்பட்ட 2000-2001-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மொத்த மின் உற்பத்தி நிறுவு திறன் 7 ஆயிரத்து 120 மெகாவாட் என்றும்,​​ 2006-2007-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 10 ஆயிரத்து 11 மெகாவாட் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.​ இதிலிருந்து,​​ அ.தி.மு.க.​ ஆட்சிக் காலத்தில் 2 ஆயிரம் மெகாவாட்டுக்கும் மேல் மின் உற்பத்தி நிறுவுத் திறன் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்பது தெளிவாகிறது.மின் உற்பத்தி நிறுவுத் திறனை அதிகரிக்க முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்காததன் காரணமாக,​​ தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தி,​​ பொருளாதார வளர்ச்சி,​​ மாணவர்களின் கல்வி ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.எனவே, ​​ தமிழ்நாட்டை இருளில் மூழ்கடித்துள்ள தி.மு.க.​ அரசைக் கண்டித்தும்,​​ மின் பற்றாக்குறையை சீர் செய்ய வலியுறுத்தியும் அ.தி.மு.க.​ சார்பில் 18.4.2010 அன்று நெய்வேலியில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஆர்ப்பாட்டத்துக்கு முன்னதாக,​​ நெய்வேலி நகரியத்தில் அமைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க.​ நிறுவனர் எம்.ஜி.ஆர்.​ சிலையை நான் திறந்து வைக்கவுள்ளேன் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்

downlaod this page as pdf

Read more »

அடிப்படை வசதியில்லாத ஒறையூர் தொடக்கப் பள்ளி


பூட்டு போடப்பட்டுள்ள கழிவறை மற்றும் இதன் அருகே புதிதாக போடப்பட்டு பயனற்றுக் கிடக்கும் போர்.
 
பண்ருட்டி:
 
                 ஒறையூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் குடிநீர்,​​ கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவர்களும் ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். பண்ருட்டி வட்டம் அண்ணாகிராமம் ஒன்றியத்தை சேர்ந்தது ஒறையூர் ஊராட்சி.​ இங்கு மாரியம்மன் கோயில் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது.​ 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள இப் பள்ளியில் 220-க்கும் மேற்பட்ட மாணவ,​​ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் மாணவர்களுக்கு குடிநீர் வசதியும்,​​ கழிவறை வசதியும் இல்லை.​ பள்ளி மாணவர்கள் குடிநீருக்காக பள்ளியை விட்டு வெளியே வந்து அருகில் உள்ள வீடுகளில் தண்ணீர் வாங்கி குடிக்கின்றனர்.​ பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறைகள் பராமரிப்பின்றி பூட்டு போடப்பட்டுள்ளதால் வாகனப் ​ போக்குவரத்து நிறைந்த சாலையின் ஓரத்தில் சிறுநீர் கழிக்கின்றனர்.​ இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன்,​​ மாணவர்கள் விபத்தில் சிக்கவும் வாய்ப்பு ஏற்படுகிறது. குடிநீர் வசதிக்காக பள்ளி வளாகத்தில் பல ஆயிரம் ரூபாய் செலவில் போடப்பட்ட ஆழ்குழாய் கிணறை அப்படியே விட்டுவிட்டனர்.​ இதில் மாணவர்கள் கல் மற்றும் மண்ணை ​ போட்டு விளையாடுவதால் ஆழ்துளை குழாய் தூர்ந்து போயுள்ளது.இப் பள்ளிக்கு உடனடியாக குடிநீர் மற்றும் கழிவறை வசதி செய்துகொடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு.

downlaod this page as pdf

Read more »

அலுவலகப் பணியாளர்கள் ​ பணியிட மாற்றம்

 நெய்வேலி:

              கம்மாபுரம் உதவி தொடக்கக் கல்வி அலுவலத்தில் பணியாற்றி வந்த அறிவழகன்,​​ வாசு ஆகியோர் புதன்கிழமை பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். இவர்கள் ஆசிரியர்களின் ஊதியம்,​​ விடுப்பு தொடர்பான கோப்புகளை கவனித்து வந்தனர்.​ இவர்கள் மீது கம்மாபுரம் சரக ஆரம்பப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியைகள் உதவி தொடக்கக் கல்வி அலுவலரிடம் புகார் கூறியிருந்தனர்.​ இந்நிலையில் இருவரும் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.

downlaod this page as pdf

Read more »

ஹவாலா பணம் ரூ.​ 42 லட்சம் அமலாக்கப் பிரிவிடம் ஒப்படைப்பு

 கடலூர்:

                      கடலூரில் 5 பேரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஹவாலா பணம் ரூ.​ 42 லட்சம்,​​ வருமான வரித்துறை அமலாக்கப் பிரிவிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது. கடலூர் திருப்பாப்புலியூர் பஸ்நிலையத்தில் கடந்த 3-ம் தேதி போலீஸôர் ரோந்துப் பணியில் இருந்தபோது,​​ சந்தேகப்படும் நிலையில் நின்றிருந்த நாகை மாவட்டம் திட்டச்சேரியைச் சேர்ந்த அல்பைசல் ​(32),​ திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூரைச் சேர்ந்த அஷ்ரப் அலி ​(54),​ சென்னை ஜார்ஜ் டவுனைச் சேர்ந்த ஈஸ்வர் ​(42),​ திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சகுபர் சாதிக் ​(44),​ ஜாகீர் உசேன் ​(39) ஆகிய 5 பேரைப் பிடித்து விசாரணை செய்தனர். அவர்களிடம் இருந்து ஹவாலா பணம் ​(கணக்கில் வராதது)​ ரூ.​ 42 லட்சம் கைப்பற்றப்பட்டது.​ 5 பேரும் கைது செய்யப்பட்டு கடலூர் 3-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப் பட்டனர்.​ அவர்களை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு சுந்தரம் உத்தரவிட்டார்.போலீஸ் கைப்பற்றிய பணம் குறித்து ​ வருமான வரித்துறையின் அமலாக்கப் பிரிவுக்கும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

                    அதைத் தொடர்ந்து அமலாக்கப்பரிவு உதவி இயக்குநர் கபீர்தாஸ் தலைமையில் 4 அதிகாரிகள் கொண்ட குழு கடலூர் வந்து,​​ சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 5 பேரிடமும் விசாரணை நடத்தியது.​ கைப்பற்றப்பட்ட ரூ.​ 42 லட்சத்தை ஆய்வு செய்ய அனுமதி கோரி அமலாக்கப் பிரிவு சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.​ மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு சுந்தரம்,​​ அனுமதி அளித்தார். அதைத் தொடர்ந்து ரூ.​ 42 லட்சமும் போலீஸ் பாதுகாப்புடன் சென்னைக்குக் கொண்டு போகப்பட்டது.​ இந்தப் பணம் யாருடையது எந்த வங்கியில் இருந்து,​​ யாரால் பணம் எடுக்கப்பட்டது ​ போன்ற ​ தகவல்களை அமலாக்கப் பிரிவு சேகரிக்க இருக்கிறது. இந்நிலையில் கைதான 5 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க,​​ அமலாக்கப் பிரிவு அலவலர்கள் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யத் திட்டமிட்டு உள்ளனர்.

downlaod this page as pdf

Read more »

புதுப்பேட்டையில் ஆறு மணிநேர மின் தடை: போராட்டம் நடத்த வியாபாரிகள் முடிவு

பண்ருட்டி: 

                    பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டையில் மின்தடை காரணமாக வியாபாரிகள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டையில் பாரத ஸ்டேட் வங்கி, கூட்டுறவு வங்கி, சார் பதிவாளர் அலுவலகம், பள்ளிக் கூடங்கள், பாரி கரும்பு அலுவலகம், வேளாண்மை விரிவாக்க மையம், மாடர்ன் ரைஸ் மில்கள், ஆயில் மில், உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

                     நகராட்சிக்கு இணையாக இப்பகுதி குடியிருப்பு மக்கள் தொரப்பாடி பேரூராட்சியில் சொத்து வரி செலுத்தி வருகின்றனர். ஆனால் கிராமத்திற்கு மின்சாரம் வழங்கும் முறையே புதுப் பேட்டைக்கும் வழங்கப்படுகிறது. அதன் படி தினமும் பகலில் குறைந்தது 6 மணிநேரம் மின்நிறுத்தம் செய்வதால் இப் பகுதி வணிகர்கள் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர். இதனால் இப்பகுதி வியாபார சங்க நிர்வாகிகள், நகரத்திற்கு இணையாக மின்சாரம் வழங்க வேண்டும், இல்லையெனில் தொடர் போராட்டம் நடத்துவது என திட்டமிட்டுள்ளனர்.

downlaod this page as pdf

Read more »

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரி கம்யூ., கட்சிகள் மறியல்


கடலூர்: 

                         விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரி கடலூர் மாவட்டத் தில் 13 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூ., கட்சியினர் 1252 பேரை போலீசார் கைது செய்தனர். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். உணவு பொருட் களின் ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்யவேண்டும். பொது வினியோக முறையை வலுப்படுத்த வேண்டும்.

                         தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும் என் பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மா.கம்யூ., மற்றும் இந்திய.கம்யூ,.கட்சியின் சார்பில் தமிழகத்தின் முக்கிய இடங்களில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என றிவிக்கப்பட்டது. இதன்படி கடலூர் மாவட்டத்தில் கம்யூ.,கட்சிகள் 13 இடங்களில் மறியல் செய்யப்படும் என அறிவித்திருந்தனர். நேற்று காலை கடலூர் உழவர் சந்தையிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு பாரதிரோடு வழியாக மஞ்சக் குப்பம் தலைமை தபால் நிலையத்திற்கு சென்று மறியல் செய் தனர். இந்திய கம்யூ., வட்ட செயலாளர் ஜெகத்ரட்சகன் தலைமை தாங்கினார். சுப்புராயன் முன் னிலை வகித்தார். மாநில செயற் குழு சவுந்தரராஜன் , மாநில குழு தனசேகரன், இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் மணிவாசகம், ஒன்றிய செயலாளர் மாதவன், வட்ட குழு சம்பந்தம் உள்பட மறியலில் ஈடுபட்ட 194 பேரை கடலூர் டி.எஸ்.பி., ஸ்டாலின், இன்ஸ் பெக்டர் ஆரோக்கியராஜ் மற்றும் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். 

                        பெண்ணாடத்தில் ராஜேந்திரன் தலைமையில் 82 பேரும், சிதம்பரத்தில் நகர செயலாளர் ராமச்சந்திரன் உள்ளிட்ட 92 பேரும், காசிலிங்கம் உள்பட 54 பேரும், புவனகிரியில் கற்பனைச் செல்வன் தலைமையில் 112 பேரும், விருத்தாசலத்தில் வட்ட குழு கந்தசாமி தலைமையில் 128 பேரும், மந்தாரக்குப்பத்தில் முத்துவேல் தலைமையில் 88 பேரும், குறிஞ்சிப்பாடியில் ராஜ் தலைமையில் 81 பேரும், ஸ்ரீமுஷ் ணத்தில் வட்ட துணை செயலாளர் ராஜ் தலைமையில் 22 பேரும், காட்டுமன்னார்கோவிலில் வட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் 63 பேரும், பண்ருட்டியில் மா.கம்யூ., வட்ட செயலாளர் சேதுராமன், இந்திய கம்யூ., கட்சி துரை தலைமையில் 250 பேரும், நடுவீரப்பட்டில் மா.கம்யூ., தட்சிணாமூர்த்தி தலைமையில் 31 பேரும், திட்டக்குடியில் வட்ட செயலாளர் மகாலிங்கம் தலைமையில் 55 பேர் உட்பட மொத்தம் 242 பெண்கள் உட்பட 1252 பேரை போலீசார் கைது செய்தனர்.

downlaod this page as pdf

Read more »

போலி மருந்து வழக்கில் கைதானவர்களை சி.பி.சி.ஐ.டி., விசாரிக்க கோர்ட் அனுமதி


கடலூர்: 

                      போலி மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை சி.பி.சி.ஐ.டி., போலீசார் வரும் 12ம் தேதி வரை காவலில் விசாரணை செய்ய கடலூர் மாஜிஸ்திரேட் கோர்ட் அனுமதி அளித்துள்ளது. கடலூரில் 'பெனட்ரில்' இருமல் சிரப் போலியாக தயாரித்தது திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்தனர்.

                             இது தொடர் பாக திருப்பாதிரிப்புலியூர் பிடாரியம்மன் கோவில் தெருவில் உள்ள செல்வ விநாயகர் ஏஜன்சி உரிமையாளர் வள்ளியப்பன் கடந்த 24ம் தேதி கடலூர் கோர்ட்டில் சரணடைந்தார். அவரை, போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். அதில் கிடைத்த தகவலின் பேரில், வள்ளியப்பனுக்கு உதவிய நண்பர் ஆனந்த்(34), மருந்து விற் பனை பிரதிநிதி முருகேசன்(31) ஆகியோரை கைது செய்தனர். மேலும் 35 ஆயிரம் போலி 'பெனட்ரில்' சிரப் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

                            இந்நிலையில் இந்த வழக்கு சி.பி. சி.ஐ.டி., பிரிவிற்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில் கைது செய்து சிறையில் அடைக் கப்பட்டுள்ள மூவரையும் விசாரிக்க அனுமதி கோரி சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று முன்தினம் மாஜிஸ் திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் சுந்தரம், மூவரையும் வரும் 12ம் தேதி வரை நான்கு நாட்கள் விசாரணை செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டார். அதன்பேரில் சிறையில் இருந்த மூவரையும் தங்கள் காவலில் வைத்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.

downlaod this page as pdf

Read more »

மின் பற்றாக்குறையால் வேலைவாய்ப்பு குறைந்துள்ளது: செங்கோட்டையன்


கடலூர்: 

                    தி.மு.க., ஆட்சியில் மின் பற்றாக்குறையால் வேலை வாய்ப்பு குறைந்துள்ளது என செங்கோட்டையன் பேசினார். நெய்வேலியில் 18ம் தேதி எம்.ஜி.ஆர்., சிலையை அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதா திறந்து வைத்து மின் வெட்டை கண்டித்து நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் பேசுகிறார். ஜெ., வருகையையொட்டி கடலூரில் அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் எம்.சி.சம்பத் தலைமை தாங்கினார். 

தலைமை நிலைய செயலாளர் செங்கோட்டையன் பேசியதாவது

                      வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என வள்ளலார் கூறியது இயற்கை. ஆனால் மின்தட்டுபாட்டால் விவசாய பயிர்கள் கருகி வருகின்றன. மின் வெட்டு என்பது செயற்கை. அ.தி.மு.க., ஆட்சியில் மின் உற்பத்தி அதிகரித்தது. தற்போதைய ஆட்சியில் மின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை இல்லை. இதனால் விவசாயம், தொழில்துறை பாதிக்கப்பட்டுள்ளது. 

                        மாணவர்களால் தேர்வு நேரத்தில் படிக்க முடியவில்லை. கடந்த ஆட்சியில் கரூர், திருப்பூரில் 14 ஆயிரம் கோடி ஏற்றுமதி செய்யப்பட்டது. தற்போது 10 ஆயிரம் கோடி மட்டும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் வேலை வாய்ப்பு குறைந்துள்ளது. இதனைபற்றியெல்லாம் சிந்திக்காமல் கருணாநிதி தன் குடும்பத்தை பற்றி சிந்திக்கிறார். நெய்வேலியில் 18ம் தேதி நடக்கும் சிலை திறப்பு விழாவிற்கு திரண்டு வரவேண்டும் என பேசினார்.

downlaod this page as pdf

Read more »

ஜெ., தலைமையில் ஆட்சி: தம்பிதுரை நம்பிக்கை


கடலூர்: 

                      பணம் கொடுத்தால் வெற்றி பெறலாம் என்ற தி.மு.க., வின் திட்டத்தை தமிழக மக்கள் தூக்கியெறிவார்கள் என அ.தி.மு.க., எம்.பி., தம்பிதுரை பேசினார். 

கடலூரில் நடந்த அ.தி.மு.க., செயல்வீரர் கள் கூட்டத்தில் கொள்கை பரப்பு செயலாளர் எம்.பி., தம்பிதுரை பேசியதாவது: 

                     வரும் சட்டசபை தேர் தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்று ஜெ., தலைமையில் ஆட்சி அமையும். பென்னாகரம் தொகுதியில் வெற்றி பெற மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு பணம் கொடுத்து அவர்களை கேடயமாக பயன்படுத்தி கொண்டனர் ஆளும் கட் சியினர்.

                               பென்னாகரத்தில் அ.தி.மு.க., வெற்றி பெற்றுவிடும் என்ற செய்தி தெரிய வந்ததாலேயே கருணாநிதி அங்கு பிரசாரத்திற்கு சென்றார். கடைசி இரண்டு நாளில் தி.மு.க- பா.ம.க., வினர் சூழ்ச்சி செய்து வாக்காளர்களுக்கு காசு கொடுத்து அ.தி. மு.க., வெற்றியை திசை திருப்பிவிட்டனர். இது திட்டமிட்ட சதி. இடை தேர்தலை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஜெ.,வின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். காங்., கட்சியை தன் பக்கம் வைத்துக்கொண்டு வரும் பொது தேர்தலில் கருணாநிதி வெற்றி பெறலாம் என திட்டம் போடுகிறார். தி.மு.க., வுடன் கூட்டணி கூடாது என ராகுல் நினைக்கிறார். 1967ல் பணத்தால் வெற்றி பெறமுடியாது என காங்கிரசிற்கு தமிழக மக்கள் உணர்த் தினர் என பேசினார்.

downlaod this page as pdf

Read more »

கொள்ளை வழக்கில் கைதானவரிடம் போலீஸ் விசாரிக்க கோர்ட் அனுமதி


கடலூர்: 

                        கடலூர் அருகே நல்லாத்தூர் தி.மு.க., பிரமுகர் வீட்டில் புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் ஒருவர் கைது செய்யப் பட்டார். அவரிடம் வரும் 12ம் தேதி வரை போலீஸ் காவலில் விசாரணை செய்ய கடலூர் கோர்ட் அனுமதியளித்துள்ளது. கடலூர் அடுத்த நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந் தவர் சுப்புராம்(60). தி.மு.க., பிரமுகர்.

                         இவரது வீட்டில் கடந்த 13ம் தேதி இரவு ஐந்து பேர் கொண்ட கும்பல் திருமண அழைப்பிதழ் கொடுப் பது போல் சென்று வீட்டில் இருந்தவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பீரோவை உடைத்து, அதிலிருந்த ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள 20 சவரன் நகை, வைரக்கம்மல், 18 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு சுமோவில் தப்பிச் சென்றனர். தூக்கணாம்பாக்கம் போலீசார் விசாரணை செய்து வந்தனர்.

                             இந்த வழக்கு தொடர்பாக சென்னை திருவள்ளூர் பேச்சியப்பன்(24) என்பவரை போலீசார் கைது செய்து கடலூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை மீட்கவும், சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்ய வேண்டியள்ளதால் பேச்சியப்பனை போலீஸ் காவலில் விசாரணை செய்ய முடிவு செய்து கடலூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு மீது விசாரணை செய்த மாஜிஸ்திரேட் சுதா, பேச்சியப்பனை போலீஸ் காவலில் வைத்து வரும் 12ம் தேதி வரை விசாரணை செய்ய அனுமதியளித்து உத்தரவிட்டார்.

downlaod this page as pdf

Read more »

பள்ளி நிர்வாகிகள் சங்க கூட்டம்

 கடலூர்: 

                             அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளி நிர்வாகிகள் சங்க கூட்டம் கடலூர் அடுத்த சுப்பரமணியபுரத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் மணவாளன் தலைமை தாங்கினார். சுப்ரமணியபுரம் ராமலிங்கர் உயர்நிலைப் பள்ளி நிர்வாகி ராமசுப்ரமணியன், வளையமாதேவி பள்ளி தலைமை ஆசிரியர் ராமலிங்கம், துணை தலைவர் உமாதேவன் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் சிவபூஷ்ணம் வரவேற்றார். அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கியதற்கும், சமச்சீர் கல்வியை கொண்டு வந்தமைக்காக தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சங்க நிர்வாகிகள் கலியபெருமாள், ஜெயவீரபாண்டியன், மோகன், மணிக்கண்ணன், சாம்பசிவம், மணிகண்டன், பாண்டுரங்கள், பழனிவேலு, சேதுமாதவன் உள்ளிட்டோர் கல்வி வளர்ச்சிக்காக அரசின் திட்டங்களை விளக்கி பேசினர்.

downlaod this page as pdf

Read more »

குறிஞ்சிப்பாடியில் ம.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

 குறிஞ்சிப்பாடி:

                           மின்வெட்டை கண் டித்து ம.தி.மு.க., சார்பில் வடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத் தலைவர் பெருமாள் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் பத்மநாபன், அரசியல் ஆய்வு மைய செயலாளர் செந்திலதிபன், மாநில வெளியீட்டு அணி செயலாளர் வந்தியதேவன், மாநில கலைத்துறை துணை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநில இலக்கிய அணி துணை செயலாளர் மன்றவாணன், மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் முத்துக்குமரன், தலைமை செயற்குழு உறுப்பினர் சவுந்தர்ராஜன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாவட்ட துணை செயலாளர் திராவிட அரசு, தட்சிணாமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

downlaod this page as pdf

Read more »

கணவனை இழந்த பெண்களுக்கு உதவித் தொகை வழங்கல்


குறிஞ்சிப்பாடி: 

                              விவசாய தொழிலாளர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கணவனை இழந்த 4 பெண்களுக்கு உதவித் தொகையை தாசில்தார் வழங்கினார். குறிஞ்சிப்பாடி வட்டாரம் கல்குணத்தை சேர்ந்த மணி, குமார், சவுந்தர்ராஜ், ஆரோக்கியராஜ் ஆகியோர் இறந்ததை தொடர்ந்து அவர்களது குடும்பத்தினருக்கு விவசாய தொழிலாளர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தலா 12 ஆயிரத்து 500 ரூபாய் உதவித் தொகையை பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தாசில்தார் பெரியநாயகம் வழங்கினார். துணை தாசில்தார் ராமலிங்கம், வி.ஏ.ஓ., ஞானதேசிகன் உடனிருந்தனர்.

downlaod this page as pdf

Read more »

அண்ணா கிராமத்தில் எண்ணெய் பனை அறுவடை


நெல்லிக்குப்பம்: 

                      அண்ணாகிராமம் வட்டாரத்தில் முதன் முதலில் எண்ணெய் பனை அறுவடை நடந்தது. தமிழகத்தில் விவசாய வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை உள்ளதால் கரும்பு, நெல் பயிர்களுக்கு மாற்றாக எண்ணெய் பனை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். அண்ணாகிராமம் வட்டாரத்தில் முதன்முதலாக வாழப்பட்டு பாலகிருஷ்ணன் நிலத்தில் பயிரிடப்பட்ட எண்ணெய் பனை மரத்தில் பழக்குலைகள் அறுவடை விழா நடந்தது. வேளாண்மை உதவி இயக்குனர் சம்பத்குமார் தலைமை தாங்கினார். விவசாயி ராம்குமார் முன்னிலை வகித்தார்.

வேளாண்மை இணை இயக்குனர் இளங்கோவன் அறுவடையை துவக்கி வைத்து கூறியதாவது : 

                   ஆட்கள் பற்றாக்குறை உள்ளதால் எண்ணெய் பனை பயிரிடலாம். இதற்கு ஆட்கள் தேவையில்லை. ஆடு, மாடுகளால் தொல்லையில்லை, விளைந்த பழங்களை தனியார் நிறுவனம் நேரடியாக டன் ஒன்றுக்கு நான்காயிரம் ரூபாய்க்கு வாங்குகின்றனர் என கூறினார். காவேரி பாமாயில் நிறுவன மேலாளர் சரவணக்குமார், வேளாண்மை அலுவலர் சந்திரராசு, ராமதாஸ், நடராஜன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

downlaod this page as pdf

Read more »

கடலூர் மாவட்டத்தில் 3 நாள் நிதி நிலை விளக்க கூட்டங்கள்


கடலூர்: 

                    கடலூர் மாவட்டத்தில் 2010-2011ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை விளக்க பொதுக் கூட்டங்கள் மற்றும் தெருமுனை கூட்டங்கள் 3 நாட்கள் நடக்கிறது. 

இது குறித்து தி.மு.க., மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கை: 

                     2010-2011ம் ஆண்டிற் கான நிதி நிலை அறிக்கை விளக்க பொதுக் கூட்டங் கள் மற்றும் தெருமுனை கூட்டங்கள் கீழ்கண்ட விவரப்படி நடக்கிறது. மங்களூர் ஒன்றியத்தில் 10ம் தேதியும், கம்மாபுரத்தில் 11ம் தேதியும், குறிஞ்சிப்பாடியில் 12ம் தேதியும் நடக்கும். கூட்டத்தில் டாக்டர் காஞ்சனா கமலநாதன் பேசுகிறார். புவனகிரி, கீரப்பாளையம், பண்ருட்டி நகரம் முறையே 10, 11, 12 தேதிகளில் செங்கை சந்தானம் பேசுகிறார். விருத்தாசலம் ஒன்றியம், நல்லூர், விருத்தாசலம் நகரம் 10, 11, 12ம் தேதிகளில் கோவை சம்பத் பேசுகிறார். பண்ருட்டி ஒன்றியம், அண்ணாகிராமம், கடலூர் ஒன்றியத்தில் முறையே 10, 11, 12 தேதிகளில் தமிழ் பேரின்பன் பேசுகிறார். பரங்கிப்பேட்டை ஒன்றியம், குமராட்சி ஒன்றியம், கடலூர் நகரம் ஆகிய இடங்களில் முறையே 10, 11, 12 தேதிகளில் தாம்பரம் ஏகாம்பரம் பேசுகிறார். இவ்வாறு அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.


downlaod this page as pdf

Read more »

காலாவதியான குளிர்பான பாட்டில்கள் பறிமுதல்

 விருத்தாசலம்: 

                      விருத்தாசலத்தில் கடைகளில் விற்பனை செய்த காலாவதியான குளிர்பான பாட்டில்களை நகராட்சி பொது சுகாதார பிரிவினர் பறிமுதல் செய்தனர். விருத்தாசலத்தில் காலாவதியான குளிர்பான பாட்டில்கள் விற்கப்படுவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத் தது. அதனையடுத்து விருத் தாசலம் பஸ்நிலையம், ஜங்ஷன்ரோடு ஆகிய பகுதிகளில் குளிர் பானங்கள் விற்பனை செய்யும் கடைகளில் நகராட்சி பொது சுகாதார பிரிவினர் துப்புரவு அலுவலர் பரமசிவம் தலைமையில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் காலாவதியான குளிர்பான பாட்டில் களை 200க்கும் மேல் பறிமுதல் செய்தனர்.

downlaod this page as pdf

Read more »

பண்ருட்டியில் போலி டீத்தூள் பறிமுதல்


பண்ருட்டி: 

                         பண்ருட்டியில் நகராட்சி சுகாதார அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் இரு வீடுகளில் 7.5 கிலோ போலி டீத்தூளை கைப்பற்றினர். பண்ருட்டியில் போலி டீ த்தூள் விற்பனை அதிகளவு நடைபெறுவதாக வந்த தகவலின்பேரில் பண்ருட்டி நகராட்சி சுகாதார அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் ஆய்வா ளர்கள் மணிகண்டன்,சுதாகர், மேற்பார்வையாளர் கொளஞ்சியப்பன், பொது சுகாதாரத்துறை மேற்பார்வையாளர்கள் கணேசன், சீத்தாராமன் ஆகியோர் கொண்ட குழுவினர் கந்தசாமி தெருவில் உள்ள குமார், அருள்ஜோதி நகர் ராஜ்குமார் ஆகிய இரு வீடுகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் குமார் வீட்டில் இருந்து 6.5 கிலோ போலி டீத்தூளும், ராஜ்குமார் வீட்டில் இருந்து 1 கிலோ போலி டீ த்தூளையும் கைப்பற்றினர்.

downlaod this page as pdf

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior