உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 09, 2011

B.Sc. Microbiology Colleges in Chennai

Annai Violet College for Women
3, Menambedu
Ambattur
Chennai - 600053
Tamil Nadu 
Phone: (44) 26861611 , 26863714

Alpha Arts & Science College 

No. 16, Thundulam Porur
Chennai - 600116
Tamil Nadu 
Phone: (44) 24762368 , 24767765

Asan Memorial College of Arts & Science 

Jaladampet, Velacherry Tambaram Road, Medavakkam Post
Gowrivakkam
Chennai - 600100
Tamil Nadu 
Phone: (44) 22460216 , 22461418 , 22460032
Bhakthavatchalam Memorial College for Women 
  
Affiliated to: University of Madras
No. 14, 31st Street, Periyar Nagar, Korattur
Korattur
Chennai - 600080
Tamil Nadu 
Phone: (44) 26242891 , 26242699

Chevalier T. Thomas Elizabeth College for Women 

Affiliated to: University of Madras
No. 16, St. Marys  Road, Sembium, Maryland
Perambur
Chennai - 600011
Tamil Nadu 
Phone: (44) 25375753

Chennai National College of Arts & Science

Affiliated to: University of Madras
College Road
Avadi
Chennai - 600054
Tamil Nadu 
Landmark: Near St. Peters Engineering College Campus 
Phone: (44) 26558086
Ethiraj College for Women  

Affiliated to: Madras University
Ethiraj Salai
Egmore
Chennai - 600008
Tamil Nadu 
Phone: (44) 28279189 , 28271166

Dr. M.G.R. Janaki Collage of Arts & Science for Women 

Affiliated to: University of Madras
11 & 13 Durgabhai Deshmukh Road
R.A. Puram
Chennai - 600028
Tamil Nadu 
Landmark: Near Sathya Studio 
Phone: (44) 24937382 , 24937392

The New College 

Affiliated to: University of Madras
87, Peters Road
Royapettah
Chennai - 600014
Tamil Nadu 
Phone: (44) 28267269 , 28267386

Pachaiyappas College for Men 

Affiliated to: University of Madras
E.V.R. Periyar Salai
Shenoy Nagar
Chennai - 600030
Tamil Nadu 
Phone: (44) 26412844 , 26412094


Read more »

கட​லூர் மாவட்​டத்​தில் பார்​வை​யற்​ற​வர்​க​ளுக்​கான பிரெய்லி டம்மி வாக்​குச் சீட்​டு​கள் சரி​பார்ப்பு

கட​லூர்:

        கட​லூர் மாவட்​டத்​தில் பார்​வை​யற்​ற​வர்​கள் பிரெய்லி எழுத்து முறை​யில் அமைந்​துள்ள டம்மி வாக்​குச் சீட்​டு​களை பயன்​ப​டுத்தி வாக்​க​ளிக்​கும் முறை,​​ வெள்​ளிக்​கி​ழமை சரி​பார்க்​கப்​பட்​டது.​

             கட​லூர் மா​வட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் முன்​னி​லை​யில் இதற்​கான கூட்​டம் நடந்​தது.​ பார்​வை​யற்​ற​வர்​கள் வாக்​க​ளிக்க பிரெய்லி முறை​யி​லான டம்மி வாக்​குச் சீட்​டு​கள் 100 சத​வீ​தம் தணிக்கை செய்​யப்​பட்​டது. ​டம்மி வாக்​குச்​சீட்​டு​கள் அரசு பார்​வை​யற்ற மாற்​றுத் திற​னா​ளி​க​ளுக்​கான சிறப்​புப்​பள்ளி தலைமை ஆசி​ரி​யர் சௌந்​த​ர​ரா​ஜன்,​​ ஆசி​ரி​யை​கள் நாக​வல்லி,​​ பிரியா,​​ ஆசி​ரியர் சத்​தி​ய​நா​ரா​ய​ணன்,​​ ஆகி​யோ​ரால் ஒப்​பிட்​டுச் சரி​பார்க்​கப்​பட்​டன.​

பின்​னர் கட​லூர் மாவட்​ட ஆட்​சி​யர் கூறி​யது:​ 

              பிரெய்லி எழுத்து படிக்​கத் தெரிந்​த​வர்​கள் பிரெய்லி வாக்​குச்​சீட்டை பயன்​ப​டுத்தி வாக்​க​ளிக்​க​லாம்.​ பிரெய்லி எழுத்​துக்​க​ளைப் படிக்​கத் தெரி​யா​த​வர்​கள் மற்​றும் கண்​பார்​வை​யின்மை அல்​லது உடல்​ஊ​னம் கார​ண​மாக வாக்​க​ளிக்க இய​லா​த​வர்​கள்,​​ தங்​க​ளு​டன் ஒரு உத​வி​யா​ளரை அழைத்து வர​லாம்.​அ ​வ​ரி​டம் உறுதி மொழிப் பத்​தி​ரத்​தில்,​​ ரக​சி​யம் காப்​ப​தா​க​வும்,​​ வேறு யாருக்​கும் உத​வி​யா​ள​ராக இல்லை என​வும் கையொப்​பம் பெற்று அனு​ம​திக்​க​லாம்.​அ​வர் 18 வயது நிரம்​பி​ய​வ​ராக இருக்க வேண்​டும்.​ 

             ஒரு உத​வி​யா​ளர் பார்​வை​யற்ற ஒரு​வ​ருக்​காக மட்​டுமே,​​ உதவ வேண்டும்.​ பி ரெய்லி முறை​யில் தயா​ரிக்​கப்​பட்ட டம்மி வாக்​குச் சீட்டை,​​ வாக்​குப் பதிவு அலு​வ​லர் பார்​வை​யற்ற வாக்​கா​ள​ரி​டம் வழங்க வேண்​டும்.​ வாக்​குப்​ப​திவு செய்த பின்​னர் அந்த டம்மி வாக்​குச்​சீட்டை திரும்​பப் பெற வேண்​டும் என்​றார் ஆட்​சி​யர்.

Read more »

கடலூர் திமுக எம்.எல்.ஏ. கோ.அய்யப்பன் கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்

கடலூர்:

              கடலூர் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டி வேட்பாளராக களம் இறங்கியுள்ள திமுக எம்.எல்.ஏ. கோ.அய்யப்பன் கட்சியில் இருந்து வெள்ளிக்கிழமை நீக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளரும், நிதியமைச்சருமான க.அன்பழகன் வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.

                கடலூர் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளராக இள.புகழேந்தி அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து, அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ. அய்யப்பன் போட்டி வேட்பாளராக களம் இறங்கியுள்ளார்.கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து களம் இறங்கியுள்ள போட்டி வேட்பாளர்கள் தங்களது மனுக்களை வாபஸ் பெற வேண்டும் என முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்திருந்தார். 

              இதுபோன்று போட்டியிடுவது தனக்கு வலியை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்திருந்தார். ஆனாலும், எம்.எல்.ஏ. அய்யப்பன் தனது வேட்புமனுவை வாபஸ் பெறவில்லை. போட்டிக் களத்தில் உள்ளார். இந்த நிலையில், அவரை கட்சியில் இருந்து நீக்கி திமுக பொதுச் செயலாளரும், நிதியமைச்சருமான க.அன்பழகன் வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.



Read more »

கடலூர் தி.மு.க. வேட்பாளர் இள.புகழேந்தியை ஆதரித்து நடிகை குஷ்பு பிரச்சாரம்

கடலூர்:

            முதல்வர் கருணாநிதியின் திட்டங்களுக்காக தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள் என்று நடிகை குஷ்பு கேட்டுக் கொண்டார்.

கடலூர் தி.மு.க. வேட்பாளர் இள.புகழேந்தியை ஆதரித்து கடலூர் உழவர் சந்தை அருகே நடிகை குஷ்பு பேசியது:

             முதல்வர் கருணாநிதி 5 ஆண்டுகளில் மக்களுக்காக நிறைய திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறார். விவசாயிகளின் கடன்கள் ரூ. 7 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்தார்.அதில் கடலூர் மாவட்டத்தில் மட்டும் 1.10 லட்சம் பேர் பயன் அடைந்தனர். முந்தைய தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஏழைப் பெண்கள் திருமண உதவித் திட்டத்தை ஜெயலலிதா நிறுத்தினார். அதை மீண்டும் கொண்டு வந்தவர் கருணாநிதி.

             கடலூர் மாவட்டத்தில் மட்டும் பெண்கள் திருமண உதவித் திட்டத்தில் 22 ஆயிரம் குடும்பங்கள் பலன் அடைந்து உள்ளன. பிரசவ காலத்தில் பெண்களுக்கு நிதிஉதவி அளிக்கும் திட்டத்தில், கடலூர் மாவட்டத்தில் 1.25 லட்சம் பெண்கள் பலன் அடைந்து உள்ளனர். ஒவ்வொரு கிராமத்திலும் மக்கள் இத்திட்டங்களால் நன்மை அடைந்து உள்ளனர். 

             கருணாநிதியின் திட்டங்களுக்காக கடலூர் தி.மு.க. வேட்பாளர் இள.புகழேந்திக்கு வாக்களியுங்கள். அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சராக இருந்தபோது தொகுதிக்கும் கடலூர் மாவட்டத்துக்கும் எதுவும் செய்யவில்லை. தி.மு.க. கூட்டணி சாதனையைச் சொல்லி வாக்கு கேட்கிறது. ஆனால் அ.தி.மு.க. கூட்டணியில் யாரும் சாதனையை சொல்லி வாக்குக் கேட்க முடியாது என்றார் குஷ்பு.

Read more »

கடலூர் அ.தி.மு.க தீவிர தொண்டர் வெங்கடேசன்





கடலூரில், அ.தி.மு.க., தீவிர தொண்டர் வெங்கடேசன், இரட்டை இலை வடிவத்தில் சிகை அலங்காரம் செய்து கொண்டு, வேட்பாளருக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.



Read more »

அண்ணாமலை பல்கலையில் மருத்துவம், பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விற்பனை தொடக்கம்

சிதம்பரம்:

          சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் எம்.பி.பி.எஸ்., இன்ஜினியரிங் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விற்பனை துவங்கியது.

           சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் 2011 - 2012ம் ஆண்டிற்கான இன்ஜினியரிங் (அனைத்து பாடப்பிரிவுகள்), பி.பார்ம்., பி.பார்ம் (லேட்ரல் என்டரி), 6 வருடம், 3 வருடம் படிப்பு, எம்.எஸ்., முதுகலை டிப்ளமோ மருத்துவ படிப்புகள், பி.எஸ்சி., வேளாண்மை, பி.எஸ்சி., தோட்டக்கலை, எம்.பி.பி.எஸ்., - பி.பி.டி., - பி.எஸ்சி., நர்சிங், எம். பி.டி., - எம்.எஸ்சி., நர்சிங், பி.டி.எஸ்., மற்றும் பல் மருத்துவ சான்றிதழ் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் விற்பனை துவங்கியது.



பல்கலைக்கழக பதிவாளர் ரத்தினசபாபதி துவக்கி வைத்து கூறுகையில், 



            "விண்ணப்பங்கள் வரும் ஜூன் 10ம் தேதி வரை வழங்கப்படும். அன்றே பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும். எம்.பி.டி., - எம்.எஸ்சி., நர்சிங், டிப்ளமோ நர்சிங் வகுப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு ஜூன் 30ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும்' என்றார். நிகழ்ச்சியில், தொலைதூர கல்வி இயக்குனர் நாகேஸ்வரராவ், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி மீனாட்சி சுந்தரம், சிண்டிகேட் உறுப்பினர் முத்துக்குமார், அனைத்து துறை முதல்வர்கள், துறைத் தலைவர்கள் பங்கேற்றனர்.

Read more »

Braille list of candidates verified

CUDDALORE: 

          The dummy list of candidates prepared in Braille format was checked by the faculty of the Blind School in the presence of Collector P. Seetharaman here on Friday. The list would be kept in all polling stations. It has been prepared in English and, therefore, for visually impaired voters who could not decipher the alphabets, they could bring an assistant to the polling station.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior