சிறுபாக்கம் :
சிறுபாக்கம் ஊராட்சியில் கட்டமைப்பு அடிப் படை வசதிகள் தொடர்ந்து புறக்கணிக் கப்பட்டு வருவதால் மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
மங்களூர் ஒன்றியத்தில் மிகப்பெரிய ஊராட்சியான சிறுபாக்கத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், போலீஸ் நிலையம், தொலைபேசி நிலையம், இளமின் பொறியாளர் அலுவலகம், அரசு மேல்நிலைப்பள்ளி, இரு தொடக்கப்பள்ளிகள், நர்சரி பள்ளிகள், ஸ்டேட் வங்கி, கூட்டுறவு வங்கி, ஆர்.ஐ., அலுவலகம், கிளை நூலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
குறுவட்டத்தை சேர்ந்த நாற்பது கிராம மக்கள், மாணவர்கள் தினசரி சிறுபாக்கத்திற்கு வந்து செல்கின்றனர். அண்மைக் காலமாக சிறுபாக்கம் ஊராட்சி மக்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் தன்னிறைவு பெறவில்லை. திட்டக்குடியிலிருந்து மங்களூர் மற்றும் ஒரங்கூர் வரை வந்து செல்லும் இரண்டு டவுன் பஸ்கள், கள்ளக்குறிச்சி- மாங்குளம், நரையூர் வந்து செல்லும் டவுன் பஸ்கள், விருத்தாசலம்- ரெட்டாக் குறிச்சி, பொயனப்பாடி வரை செல்லும் டவுன் பஸ்கள் என ஆறு பஸ்கள் இயங்கி வருகின்றன.
இவை அனைத்தும் அருகில் அமைந்துள்ள சிறுபாக்கம் வரை வந்து செல்வதில்லை. சிறுபாக்கம் பகுதியில் தொடர் மின்தட்டுப் பாடு, இயற்கை இடர்பாடுகளில் தொடர் மின்வெட்டு ஆகியவற்றை போக்கிட துணைமின் நிலையம் அமைப்பதற்கு போதிய இடத்தினை பார்வையிட்ட மின்துறை உயர் அதிகாரிகள் இதுவரை நடவடிக்கையின்றி கிடப்பில் போட்டுள்ளனர். இங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தும் தகுதியில் இருந்தும் டாக்டர்கள் வாரத்தில் சில நாட்களாக மட்டும் வரும் காரணத்தால் கிராமப்புற ஏழை மக்களுக்கு சிகிச்சை அளிக்க முடிவதில்லை.
சிறுபாக்கம் போலீஸ் ஸ்டேஷன் தரம் உயர்த்தப் பட்டு 15 ஆண்டுகளாகியும் மூன்று கிலோ மீட்டர் அருகிலுள்ள மங்களூர், ஒரங் கூர் கிராமங்கள் 25 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள ராமநத்தம் போலீஸ் ஸ்டேஷன் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. அரசு பள்ளிகளில் சுகாதார குடிநீர், கழிப்பிட வசதி இன்றி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர். விவசாயிகள், கூலி தொழிலாளிகள் அதிகமாக காணப்படும் இப்பகுதியில் நீண்ட காலமாக கால்நடை மருத்துவமனை திறக்கப்படவில்லை.
அறநிலையத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் புகழ்பெற்ற வரதராஜ பெருமாள், சோலீஸ்வரர் கோவில்கள் சீரமைப்பின்றி பாழடைந்து கிடக்கின்றன. சிறுபாக்கம் குறுவட்டத்தில் விவசாயிகள் பெருமளவு கறவை மாடுகளின் மூலம் பால்நிலையத்தில் பால் வழங்கி வருகின்றனர். நீண்ட காலமாக பால் குளிரூட்டும் நிலையம் அமைக்க கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தி.மு.க., அரசு அறிவித்த நலத்திட்ட உதவிகளான இலவச கலர் "டிவி', காஸ், 2 ஏக்கர் நிலம் உள்ளிட்ட அரசு உதவிகள் கிடைத்தபாடில்லை.
நாடு சுதந்திரம் பெற்ற நாள் முதல் ஒவ்வொரு ஊராட்சியிலும் கலெக்டர் தலைமையில் நடைபெறும் மனுநீதி நாள் முகாம் மிகப்பெரிய ஊராட்சியான சிறுபாக்கத்தில் நடைபெறவில்லை. இதுபோன்ற அடிப்படை திட் டங்கள், நலத்திட்ட உதவிகள் ஏதும் கிடைக்கப் பெறாத காரணத்தால் கிராம மக்கள் அதிருப்தியடைந்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் நியாயமான அடிப் படை கட்டமைப்பு வசதிகளை நிறைவேற்ற வேண் டுமென இப்பகுதி மக்கள் எதிர் பார்க்கின்றனர்.