உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 27, 2012

கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் கலந்தாய்வு துவக்கம்

.விருத்தாசலம்:

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் கலந்தாய்வு துவங்கியது.விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் நேற்று முன் தினம் முதல் கலந்தாய்வில் மாற்றுத் திறனாளிகள், இலங்கை அகதிகள், விளையாட்டு  பிரிவு மற்றும் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் 34 பேர் தேர்வு  செய்யப்பட்டு சேர்க்கப்பட்டனர்.

நேற்று காலை 9 மணிக்குத் துவங்கிய பி.ஏ., ஆங்கிலம் கலந்தாய்வில் 140 பேர் பங்கேற்றனர். இதில் காலை நேர வகுப்பிற்கு 70 பேரும், மாலை நேர வகுப்பிற்கு  70 பேரும் சேர்க்கப்பட்டனர். இன்று27ம் தேதி பி.எஸ்சி., கணிதம், கம்பியூட்டர் சயின்ஸ், 28ம் தேதி பி.எஸ்சி., இயற்பியல், வேதியியல், விலங்கியல் பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடக்கிறது. அதனைத் தொடர்ந்து  ஜூலை 2ம் தேதி பி.காம்., பி.ஏ., தமிழ், 3ம் தேதி பி.ஏ.,வரலாறு, பி.எஸ்சி.,  தாவரவியல் (இந்த கல்வியாண்டு முதல் இப்பிரிவு துவங்கப்பட்டுள்ளது) ஆகிய  பிரிவுகளுக்கு காலை 9 மணி முதல் 10.30 மணி வரைகலந்தாய்வு நடக்கிறது.
...

Read more »

மாணவியர் கொளஞ்சியப்பர் கல்லூரி மாணவியர் விடுதி திறக்க கோரிக்கை

விருத்தாசலம்:


விருத்தாசலம் அரசு கல்லூரியில் மத்திய அரசின் பல்கலை மானியக்குழு, தமிழக அரசு பங்களிப்புடன் கட்டப்பட்ட மாணவியர் விடுதி 10 ஆண்டுகளாக பூட்டிக் கிடப்பதால், பல லட்சம் ரூபாய் அரசு நிதி பாழாகி வருகிறது. அதிக மாணவியர் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் விருத்தாசலத்தைச் சுற்றியுள்ள 200 கிராமங்களைச் சேர்ந்த 2,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

        மாவட்டத்தில் மாணவியர் அதிகம் படிக்கும் ஒரே அரசு கல்லூரி இது தான். கடந்த கல்வியாண்டில் இக்கல்லூரியில் படித்த 2,700 பேரில், 1,900 பேர் மாணவியர்.கல்லூரியில் தமிழ், ஆங்கிலம், கணக்கு, தாவரவியல், விலங்கியல், வணிகவியல் உள்ளிட்ட 9 இளங்கலை படிப்புகள் மற்றும் எம்.காம்., எம்.எஸ்சி., கணிதம், எம்.ஏ., தமிழ், எம்.பில்., பி.எச்டி.,உள்ளிட்ட முதுகலை படிப்புகளும் உள்ளன.புதிய பாடப்பிரிவு துவக்கம்நடப்பு கல்வியாண்டில் புதிதாக பி.எஸ்சி., தாவரவியல் (ஆங்கில வழி), எம்.ஏ., ஆங்கிலம், எம்.ஏ., வரலாறு, எம்.எஸ்சி., விலங்கியல், எம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய ஐந்து பாடப் பிரிவுகள் துவக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நீண்ட தூரத்திலிருந்து கல்லூரிக்கு வந்து படிக்கும் மாணவிகளுக்காக விடுதி தேவை என ஆசிரியர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர். விடுதிக்கு ரூ.14.6 லட்சம் நிதிமத்திய அரசின் பல்கலை., மானியக்குழுவின் 60 சதவீத நிதி மற்றும் தமிழக அரசு 40 சதவீத நிதியில் 2002ம் ஆண்டு 14.6 லட்சம் ரூபாய் மதிப்பில் 75 மாணவியர் தங்கும் வகையில் நவீன வசதிகளுடன் விடுதி கட்டப்பட்டது.பல்கலை., மானியக்குழு நிதியில் விடுதி கட்டப்பட்டதால் கட்டணம் செலுத்தி தான் தங்க வேண்டும். ஆனால் கட்டணம் செலுத்தி மாணவியர் யாரும் தங்குவதற்கு முன்வரவில்லை. இதனால் புதிதாக கட்டப்பட்ட மாணவியர் விடுதி 10 ஆண்டுகளாக திறக்கப்படாமல் பூட்டிக் கிடக்கிறது.

         பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாததால் விடுதிக் கட்டடம் பாழடைந்து வருகிறது.

தமிழக அரசு கவனிக்குமா?


 கிராமப்புற மாணவியரின் உயர் கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் கட்டப்பட்ட விடுதி தற்போது யாரும் தங்காமல் பயனின்றி உள்ளது. தொலை தூரத்திலிருந்து கல்லூரிக்கு வந்து படிக்கும் மாணவியர்கள், தினமும் நெடுந்தூரம் பயணம் செய்ய சிரமமடைந்து வருகின்றனர். மாணவியர் நலன் கருதி, இலவசமாக தங்கும் வகையில், விடுதியை பயன்பாட்டிற்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்லூரி பேராசிரியர் ஒருவர் கூறுகையில்,

உணவு மற்றும்தங்கும் வசதியுடன் விடுதி கட்டப்பட்டுள்ளது. இங்கு தங்குவதற்கு 1,000 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டும்.  கிராமப்புற ஏழை மாணவியர் பணம் செலுத்த முடியாத நிலையில் உள்ளதால் தங்குவதற்கு தயங்குகின்றனர். பத்து ஆண்டுகளாக விடுதி பூட்டிக் கிடப்பதால் 14.6 லட்சம் ரூபாய் நிதி வீணாவதுடன், பராமரிப்பின்றி கட்டடமும் பாழாகி வருகிறது என்றார்.

கல்லூரி மாணவிகள் கூறுகையில்,

பல்கலை., மானியக்குழு கிராமப்புற மாணவிகளின் உயர்கல்வியை மேம்படுத்த கொண்டு வரப்பட்ட இத்திட்டம் வரவேற்கத்தக்கது. ஆனால் பெற்றோர்கள் கூலி வேலைக்குச் சென்று தான் எங்களை படிக்க வைக்கின்றனர். மாதம் 1,000 ரூபாய் கட்டணம் செலுத்துவது என்பது சிரமம். மாணவியர் இலவசமாக தங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior