கடலூர்:
தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் பா.ம.க. சார்பில் பொது மக்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. அதன்படி கடலூர் அருகே தூக்கணாம்பாக்கம், பாலூர், வழிசோதனைப் பாளையம், காடாம்புலியூர் ஆகிய இடங்களில் நேற்று மருத்துவ முகாம்கள் நடைபெற்றது.
தூக்கணாம் பாக்கத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமுக்கு ஊராட்சி மன்ற தலைவர் குமாரசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தாமரைக்கண்ணன் முன்னிலை வகித்தார். மருத்துவ முகாகை பா.ம.க. இளைஞர் அணி மாநில தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைத்து பேசினார்.

பா.ம.க. இளைஞர் அணி மாநில தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசியது:-
ரூ.15 லட்சம் செலவில் நடத்தப்படும் இந்த மருத்துவ முகாம்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும். புயலால் பெரும்பாலான மரங்கள் வேரோடு சாய்ந்து விட்ட நிலையில் பா.ம.க. பசுமை தாயகம் சார்பில் 1 லட்சம் மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளோம். மேலும் புயலால் பாதித்த விவசாயிகளுக்கு தென்னை, பலா, முந்திரி கன்றுகளை வழங்கவும் உள்ளோம். புயல் பாதித்த கடலூர் மாவட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீண்டும் பார்வையிட வேண்டும். மேலும் புயலால் பாதிக்கப்பட்ட முந்திரி விவசாயிகளுக்கு நிவாரண உதவியை உடனே வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாநில சொத்து பாதுகாப்பு குழு தலைவர் டாக்டர் கோவிந்தசாமி, மாநில துணை பொது செயலாளர் சண்முகம், ஒன்றிய செயலாளர் சண்முகம், புதுவை மாநில செயலாளர் அனந்தராமன், சமூக முன்னேற்ற சங்க மாநில பொது செயலாளர் பேராசியரிர் சிவப்பிரகாசம், நகர செயலாளர் போஸ்.ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.