உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 05, 2012

கடலூர் செயின்ட் ஜோசப் பள்ளி 16 சாரணர்களுக்கு ஜனாதிபதி விருது வழங்கி கவுரவிக்கும் விழா

கடலூர் :

        கடலூர் செயின்ட் ஜோசப் பள்ளியில் நடந்த விழாவில் கலெக்டர் ராஜேந்திர ரத்னு 16 சாரண மாணவர்களுக்கு ஜனாதிபதி விருது வழங்கிப் பாராட்டினார்.
 
       டில்லி ஜனாதிபதி மாளிகையில் கடந்த செப்டம்பர் 12ம் தேதி நடந்த விழாவில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் 2010-11ம் ஆண்டிற்கான சாரணர்களுக்கான விருதுகளை வழங்கினார். அதில் கடலூர் மாவட்டத்திற்கு 25 சாரண மாணவர்களுக்கு ஜனாதிபதி விருதுகள் வழங்கப்பட்டதில் இந்திய அளவில் அதிகளவில் 16 ஜனாதிபதி விருதுகளை கடலூர் செயின்ட் ஜோசப் பள்ளியின் 16 சாரண மாணவர்கள் பெற்றனர். இவ்விருதுகளை சாரண மாணவர்களுக்கு வழங்கி கவுரவிக்கும் விழா செயின்ட் ஜோசப் பள்ளியில் நடந்தது. பள்ளி முதல்வர் ஆக்னல் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோசப் அந்தோணி ராஜ் தலைமை தாங்கினார். கலெக்டர் ராஜேந்திர ரத்னு 16 மாணவர்களுக்கு ஜனாதிபதி விருதுகளை வழங்கிப் பாராட்டினார். விழாவில் செயின்ட் ஜோசப் பாலர் பள்ளி முதல்வர் ஆரோக்கியராஜ், மாவட்ட சாரண செயலர் இளையகுமார், அமைப்பு ஆணையர் வேலாயுதம் உட்பட பலர் பங்கேற்றனர்.







Read more »

பிச்சாவரத்தில் சதுப்புநிலத் தாவரங்கள் பராமரிப்புமாணவர்களுக்கு செயல் விளக்கம்

கிள்ளை :

         தேசிய பசுமைப்படை மற்றும் வனத்துறை சார்பில் மாணவர்களுக்கு சதுப்பு நிலத் தாவரங்கள் குறித்தும் பாரமரிக்கும் முறை குறித்த செயல் விளக்க வகுப்பு பிச்சாவரத்தில் நடந்தது.
 

      கிள்ளை அடுத்த பிச்சாவரத்தில் உலக புகழ்பெற்ற மாங்குரோவ் சதுப்பு நிலக் காடுகள் கடலுக்கும் ஆற்றுக்கும் இடையில் இயற்கை அரண்களாக இருப்பதால் சுனாமி மற்றும் புயல் உள்ளிட்ட பேரிடர் பாதிப்புகளில் இருந்து தடுக்க முடிகிறது. தற்போது இங்குள்ள தாவரங்களை வளர்க்க பல்வேறு மாநிலத்தவர்கள் ஆய்வு செய்து விதை கரணைகளை தங்கள் பகுதிக்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் உள்ளனர்.
 

     இந்த வகைத் தாவரங்கள் குறித்து மாணவர்களுக்கு தெரிவிக்கவும், எதிர்காலங்களில் மரங்களை வளர்க்க விழிப்புணர்வு வகுப்பு சதுப்பு நிலத்தாவரங்கள் நிறைந்த கண்டத்திட்டுப் பகுதியில் நடந்தது. மாவட்ட பசுமை திட்ட அலுவலர் இளங்கோவன் மாணவர்களுக்கு விளக்கமளித்தார். முட்லூர், பரங்கிப்பேட்டை, கிள்ளை, மணலூர் எடிசன் பள்ளிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.











Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior