உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 17, 2011

கிணற்றுக் குளியல் - என் அனுபவம்





           கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் ஆயினும்,  கிணற்றில்  குளித்த அனுபவம் இல்லை, முதல் முறையாக   கடந்த ஞாயிற்றுகிழமை ( 12.06.2011) அன்று 200 அடி ஆழமுள்ள கிணற்றில் குளிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிணற்றில் குளிக்கும் வாய்ப்பு என்பதைவிட நீச்சல் கற்றுகொள்ளும்  வாய்ப்பாக இருந்தது.

கவனிக்க : எனக்கு தண்ணீரைக் கண்டாலே  பயம், கடற்கரைக்கு சென்றாலே கடலில் இறங்கினாலும் அதிகம் தூரம் சென்று குளிக்க மாட்டேன், சும்மா கரையிலே நின்று குளித்து விட்டு வருவேன்.  

            அவ்வளவு பயம் உள்ள நான் முதலில் கிணற்றில் குளிப்பவரை வேடிக்கை பார்க்கும்  எண்ணத்தோடுதான்  சென்றேன்.  என்னுடன் நன்கு நீச்சல் தெரிந்த உறவினர் 2 பேர் வந்திருந்தார்கள். முதலில் அவர்கள் தான் களத்தில் குளித்தார்கள்.  என்னைவிட சிறியவர்கள் கூட மிக அழகாக நீச்சல் அடித்தனர். 

               அவர்கள் நீச்சல் அடிப்பதை  பார்க்க  பார்க்க, எனக்கும் ஒரு வித ஆசையாக இருந்தது. சுமார் 15 நிமிடத் தற்குப் பிறகு  ஒருவழியாக தைரியத்தை வரவைத்து களத்தில் இறங்கினேன்.  முதலில் தண்ணீரில் மூழ்கிவிட்டேன். துணைக்கு வந்தவர்கள்தான் ஒரு வழியாக மேலே தூக்கினர். பிறகு அவர்கள் பிடித்து கொள்ள நான் நீச்சல் பழக ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் இருந்த பயம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து ஆர்வமாக மாறியது. ஒரு வழியாக கை கால்களை உதைத்து நீச்சல் பழக  ஆரம்பித்தேன்......கற்றுக்கொண்டு இருக்கிறேன்.........விரைவில் ஒரு நீச்சல்காரனாக.................உங்கள் முன்.......................

இடம்: திருத்தணி அருகே உள்ள திருவலங்காடு கிராமத்தில் வபதியம்மன் கோயில் பின்புறம் கோடையிலும் வற்றாத பசுமையான நெற்வயல்களுக்கிடையே உள்ள 200அடி ஆழம் உள்ள கிணறு.



அதிர்ச்சி : நான் கிணற்றில் நீச்சல் பழக ஆரம்பித்த அன்றுதான் ஞாயிற்றுகிழமை ( 12.06.2011 , திருத்தணியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கிணற்றில் குளித்தபோது இறந்தனர் என்பதுதான் அதிர்ச்சியான செய்தி.







Read more »

எம்.பி.பி.எஸ்.: 20,765 மாணவர்களுக்கு ரேண்டம் எண் வெளியீடு

            தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு "ரேண்டம் எண்' (சம வாய்ப்பு எண்) வியாழக்கிழமை (ஜூன் 16) வழங்கப்பட்டுள்ளது.

               தமிழகத்தில் நடப்புக் கல்வி ஆண்டில் (2011-12) எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர 21,000-த்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்தனர். விண்ணப்ப ஆய்வுக்குப் பிறகு, சில விண்ணப்பங்களை நிராகரித்தது போக 20,765 மாணவர்களுக்கு ரேண்டம் எண் வழங்கப்பட்டுள்ளது.ஒரே கட்-ஆஃப் மதிப்பெண் எடுத்துள்ள மாணவர்களை ரேங்க் பட்டியலில் வரிசைப்படுத்த "ரேண்டம் எண்' வழங்கப்படுகிறது. 

        சுகாதாரத் துறையின் இணையதளம் http://www.tnhealth.org/  மற்றும் அரசின் இணையதளம்  http://www.tn.gov.in/ ஆகியவற்றில் ரேண்டம் எண் விவரத்தை மருத்துவக் கல்வி தேர்வுக் குழு வெளியிட்டுள்ளது. 

                 எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்கள், இணையதளத்தில் விண்ணப்ப எண்ணைப் பூர்த்தி செய்து 10 இலக்க "ரேண்டம் எண்ணை' தெரிந்து கொள்ளலாம்.

ஜூன் 21-ல் ரேங்க் பட்டியல்:

                 எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு வரும் 21-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கில் முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 30-ம் தேதி தொடங்குகிறது.




Read more »

கடலூர் வெள்ளிக் கடற்கரை (சில்வர் பீச்) வனப்பகுதியில் திடீர் தீ

கடலூர்:
 
            கடலூர் கடற்கரை வனப் பகுதியில் வியாழக்கிழமை திடீரென தீப்பற்றி பரவியது.  

            கடலூர் கடற்கரையில் தேவனாம்பட்டினம் முதல் அக்கரை கோரி வரை, வனத்துறைக்குச் சொந்தமான வனப்பகுதி உள்ளது. இங்கு சவுக்கு மரங்கள் அதிக அளவில் உள்ளன.  தேவனாம்பட்டினம் அருகில் உள்ள சவுக்குத் தோப்பில், வியாழக்கிழமை திடீரெனத் தீப்பற்றிக் கொண்டது. சவுக்கு மரங்களில் இருந்து உதிர்ந்து கிடக்கும் இலைகள், சருகுகளில் தீப்பற்றி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. 

              சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் உதிர்ந்து கிடக்கும் சருகுகளில் தீப்பற்றி, மரங்களுக்கும் பரவி வருகிறது.  சவுக்குத் தோப்புக்குள் தீயணைப்பு வண்டிகளும் செல்ல முடியவில்லை. எனவே வனத்துறை ஊழியர்கள், தோப்புக்குள் புகுந்து, கடற்கரை மணலைத் தூவி தீயணை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மற்ற பகுதிகளுக்கு தீ பரவாதவாறு தடுத்து நிறுத்தும் முயற்சியிலும் அவர்கள் ஈடுபட்டனர்.



Read more »

கடலூர் மாவட்டத்தில் வாகனத் தணிக்கை: ரூ.2.75 லட்சம் வரி வசூல்

 கடலூர்:

              கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக நடந்த வாகனத் தணிக்கைகளின்போது ஆம்னி பஸ்களிடம் இருந்து, வாகன வரி ரூ. 2.75 லட்சம் வசூலிக்கப் பட்டதாக வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெய்சங்கர் தெரிவித்தார். 

                 கடலூர் மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, வேன்கள், ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள் மற்றும் பஸ்களின் ஓட்டுநர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை வலியுறுத்தும் வகையில், வேன், ஆட்டோ, ஷேர் ஆட்டோ, மற்றும் பஸ் ஓட்டுநர்கள் கூட்டத்துக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெய்சங்கர் ஏற்பாடு செய்து இருந்தார்.  

கூட்டம் முடிந்ததும் போக்குவரத்து அலுவலர் ஜெய்சங்கர் கூறியது:  

          பள்ளி வாகனங்கள் கடைபிடிக்க வேண்டிய உச்சநீதிமன்றத்தின் 9 வழிகாட்டுதல்கள் குறித்து, மீண்டும் ஓட்டுநர்கள் மற்றும் வாகன உரிமையாளர்களுக்கு எடுத்துரைக்கப் பட்டது. பஸ்களில் கண்டிப்பாக தீயணைப்புக் கருவிகள் வைத்து இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. வாகனங்களில் அங்கீகரிக்கப்பட்ட எண்ணிக்கையில் மட்டுமே மாணவர்களையும் இதரப் பயணிகளையும் ஏற்ற வேண்டும் என்று வலியுறுத்தப் பட்டது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி விதிமுறைகளை கடைபிடிக்காத ஓட்டுநர்கள் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

               ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச்சான்று உள்ளிட்ட ஆவணங்களை கண்டிப்பாக வைத்து இருக்க வேண்டும். இல்லையேல் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரித்து இருக்கிறோம்.  கடலூர் மாவட்டம் முழுவதும் நாளொன்றுக்கு 20 வாகனங்கள் வீதம் ஆம்னி பஸ்களை சோதனையிட்டு வருகிறோம். அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் பிற மாநிலங்களில் பதிவு செய்து, தமிழகத்தில் இயக்கப்படும் ஆம்னி பஸ்களுக்கு வாகன வரி செலுத்தாதது கண்டுபிடிக்கப்பட்டு, இதுவரை ரூ. 2.75 லட்சம் வசூலிக்கப்பட்டு இருக்கிறது. 

                    வாகனங்களில் காற்றொலிப்பான்கள் பயன்படுத்தக் கூடாது என்றும், உத்தரவிடப் பட்டுள்ளது. இனி அடிக்கடி சோதனையிட்டு காற்றொலிப்பான்களை அகற்றுவோம், அபராதமும் விதிக்கப்படும் என்றார் ஜெய்சங்கர்.





Read more »

சிதம்பரம் அருகே தொடர் விபத்து நடக்கும் ஆபத்தான பாலம்

சிதம்பரம்:

            சிதம்பரம் அருகே கடலூர் செல்லும் புறவழிச்சாலையில் சி.முட்லூர் அருகே ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையினால் தொடர் விபத்து நடைபெறுகிறது. 

            நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  சிதம்பரம் அருகே புறவழிச்சாலையில் சி. முட்லூர் அரசு கலைக்கல்லூரி, வட்டார வாகன போக்குவரத்து அலுவலகம், பிச்சாவரம் செல்லும் வழியில் இந்த பாலம் உள்ளது. இந்த பாலத்தில் இருபுறமும் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.  அந்த நடைபாதையின் தொடக்கப்பகுதி உயரமாக உள்ளது. இதில் எந்த ஒளி பிரதிபலிப்பானும் அமைக்கப்படவில்லை.

           இதனால் இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பாலத்தில் உள்ள நடைபாதை கட்டை தெரியாததால் அதில் மோதி தொடர்ந்து விபத்து நடைபெறுகிறது.  கடந்த வாரம் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த சிதம்பரம் நகரமன்ற உறுப்பினர் ஆ. ரமேஷ் மோட்டார் சைக்கிளில் சென்ற போது எதிரே வந்த பஸ்ஸின் லைட் வெளிச்சத்தில் பாலத்தின் நடைபாதை கட்டை தெரியாமல் அக்கட்டையில் மோதி தூக்கி எரியப்பட்டு படுகாயம் அடைந்தார்.  அவர் தற்போது புதுச்சேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். 

             ஏற்கனவே இதே சாலையில் சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி என்பவர் மோட்டார் சைக்கிள் விபத்தில் இறந்து போனார்.  இது போன்று அடிக்கடி தொடர் விபத்து சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. எனவே நெடுஞ்சாலைத்துறையினர் இந்த பாலத்தின் நடைபாதையை சரி செய்து பிரதிபலிப்பானை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




Read more »

தமிழகம் முழுவதும் 61 அரசு கலைக்கல்லூரிகளில் முதல்வர்கள் இல்லாததால் மாணவர் சேர்க்கை பாதிப்பு

                   தமிழ்நாட்டில் 62 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. 7 அரசு கல்வியியல் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 61 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதல்வர்கள் இல்லாமல் செயல்படுகிறது.

             கடந்த ஏப்ரல் மாதத்திற்கு முன்பாக 40 முதல்வர் பணியிடங்கள் காலியாக இருந்தன. மே மாதம்இறுதியில் 21 முதல்வர்கள் ஓய்வு பெற்றனர். இதனால் இவற்றின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்தது. ஒரே ஒரு அரசு கல்லூரியில் மட்டும்தான் முதல்வர் உள்ளார்.  இதேபோல கல்லூரி கல்வி இயக்குனர் பணியிடம், இணை இயக்குனர் பணியிடம் இரண்டும் காலியாக இருக்கின்றன. 7 கல்வியியல் கல்லூரியிலும் முதல்வர்கள் பணி இடங்கள் காலியாக உள்ளன.   இதுதவிர மண்டல கல்லூரி கல்வி இயக்குனர் பணியிடங்கள் காலியாக இருப்பது தெரியவந்துள்ளது.

               6 மண்டல கல்லூரி கல்வி இயக்குனர் பதவிகளில் 4 இயக்குனர் பணியிடங்கள் காலியாக கிடக்கின்றன. உயல் கல்வி துறையில் உள்ள அரசு கலைக் கல்லூரி களில் முதல்வர்கள் இல்லாததால் மாணவர்கள் சேர்க்கை பாதிக்கப்படுகிறது.  ஒவ்வொரு கல்லூரிகளில் பணியாற்றும் சீனியர்கள் முதல்வர்கள் பொறுப்பை கவனித்து வருகிறார்கள். தற்போது அனைத்து அரசு கலைக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. குறைந்த அளவில் உள்ள இடங்களுக்கு ஆயிரக்கணக்கான மாணவ- மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

            பி.ஏ.ஆங்கிலம், பி.காம்., பி.எஸ்.சி. பட்டப்படிப்புகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வரும் வேளையில் அரசு கலைக் கல்லூரிகளில் முதல்வர்கள் இல்லாமல் இருப்பதால் சேர்க்கை பணி பாதிக்கிறது. 
 
 
 
 
 
 
 

Read more »

விருத்தாசலத்தில் நடிகர் விஜய் பிறந்த நாளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

விருத்தாசலம்:
 
          விருத்தாசலத்தில், விஜய் மக்கள் இயக்கத்தின் நகர இளைஞரணி ஆலோசனை கூட்டம் இளைஞரணி தலைவர் பாபு கணேஷ் தலைமையில் நடைபெற்றது. பொருளாளர் கார்த்திக் அனைவரையும் வரவேற்றார்.

            கூட்டத்தில் நிர்வாகிகள் சத்தியராஜ், அப்துல்அஜிம், வேலய்யன், ஈஸ்வர், சையத் மூசா, போக்கிரி, வாசு, அன்சர்அலி, சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-   

           மக்கள் இயக்க நிறுவனர் எஸ்.ஏ. சந்திரசேகர், மாநில நிர்வாகி புஸ்சி ஆனந்த் ஆகியோர் வழி காட்டுதலுடன் சமூக பணி ஆற்றுவது.  நடிகர் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ந்தேதி ரத்ததானம் வழங்குவதும், ஏழை- எளிய மாணவ- மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்குவதும்,  மேலும் விஜய் பிறந்த நாள் அன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசாக வழங்குவதும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
 
 
 
 

Read more »

ராசிபுரத்தில் நெய்வேலி மாணவி தற்கொலை: அனைத்து கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்


             ராசிபுரம், ம.தி.மு.க நகர செயலாளர் ஜோதிபாசு தலைமையில் கூடிய அனைத்து கட்சி கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் மணிமாறன், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் கந்தசாமி, பா.ம.க மாநில மாணவரணி செயலாளர் நல்வினை விஸ்வராஜ், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ராஜாமுகமது உட்பட சமுக ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

              ராசிபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் இருக்கும் எஸ்.ஆர்.வி ஹை டெக் பள்ளியில் +2 படித்துக் கொண்டிருந்த 17 வயதான மாணவி ரபிதுல் அச்சாரியா (கடலூர் மாவட்டம் நெய்வேலியைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா மகள்) கடந்த 13.06.2011 அன்று மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டதற்கும் வருத்தம் தெரிவிக்கப்பட்டது. அவரது குடும்பத்தருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

              மாணவியின் தற்கொலைக்கு என்ன காரணம் என்பது பற்றி நீதி விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. விசாரணையில், காவல்துறை அதிகாரிகள் மட்டுமில்லாமல், மனித உரிமை அமைப்பினர், வழக்குரைஞர்கள் மற்றும் சமுக ஆர்வலர்களும் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என வலியுருத்தப்பட்டது. மாணவி, என்ன காரணத்தால், தற்கொலை செய்துகொண்டார் என்பதை கண்டுபிடித்து, விசாரணை அறிக்கை மூலமாக பொதுமக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொண்டனர்.

                 தமிழக பள்ளியில் தொடர்ந்து நடந்து வரும் மாணவ ,
மாணவவியரின் தற்கொலைகள், பள்ளியிலிருந்தும், விடுதியிலிருந்தும் மாணவ மாணவியர்கள் பாதியில் ஓடிப்போவது போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க தமிழக அரசும், கல்வித்துறையும் இணைந்து திட்டமிடவேண்டும் என்பதையும் வழியுறுத்தியும். மாணவியின் தற்கொலைக்கு காரணமான, அல்லது தற்கொலைக்கு தள்ளிவிட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி வரும், 20 தேதி மாலை நான்கு மணிக்கு ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகில், அனைத்து கட்சி சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்து. அந்த கண்டன கூட்டத்தில், தற்கொலை செய்துகொண்ட மாணவியின் தந்தையார் முகமது அலி ஜின்னாவும் கலந்துகொள்கிறார்.

 

Read more »

Two fishermen killed near Cuddalore

  Cuddalore:

                 Two fishermen die in deep sea after getting entangled in net Cuddalore,June 16 (PTI) A father and son today died after they got entangled in a fishing net in deep sea while trying to free it from an iron rod,a police official said. 

             The deceased were part of a four-strong group of fishermen which had put to sea from the Chithiraipettai village, near here last night, P Babu, Sub-inspector of police, Cuddalore, said. He said while fishing,their nylon-net got stuck with an irod rod attached to the mechanised boat.Twenty-year-old Suresh jumped into the water to free it but when he did not come up, his 53-year-old father too jumped. When both did not surface, another fisherman jumped into the sea and found that the two had drowned after getting entangled in the net,he said. The bodies have been sent for autopsy, the official said, adding, a case has been registered.





Read more »

Forest Minister K.T. Pachamal promises steps to increase forest cover in Tamil Nadu


Forest Minister K.T. Pachamal giving away funds to a panchayat president at a function held in Cuddalore on Thursday.

CUDDALORE: 

           The National Forest Policy has stipulated that 33 per cent of the total land mass should be forests, but Tamil Nadu has forest area of only 17 per cent, according to K.T. Pachamal, Forest Minister.

         All efforts would be made to extend forest cover to the mandated level within five years, he said at an official function held at St. Anne's Girls Higher Secondary School here on Thursday. He called upon every citizen to plant one sapling.

            Mr. Pachamal gave away a sum of Rs. 51.62 lakh from the proceeds of auctioning of “karuvelam” trees (acacia nilotica) grown in the lake and tank beds to 33 panchayats in Cuddalore district. Under the Swedish International Development Agency-aided Social Forestry Project that had come into vogue in 1981, local bodies were encouraged to raise karuvelam trees.

          On a 10-year cycle, the matured trees were felled and sold, and, the revenue thus earned was being shared by the government and the panchayats on a ratio of 25:75. The panchayats would utilise the funds for improving basic amenities and development works in villages. Till 2003, a total of 1,452 villages in Cuddalore district were given a sum of Rs 6.80 crore through revenue sharing. The Minister said that extension of forest cover would bring in several benefits: it would curb encroachments, provide jobs to the poor and fodder to cattle heads, birds' droppings would act as rich manure and above all it would protect environment and induce precipitation of rain.

           In response to suggestions made by Rural Industries Minister M.C.Sampath and Social Welfare Minister Selvi Ramajayam, who also attended the function, Mr. Pachamal said that the possibility of making Pichavaram an attractive tourist destination would be explored. Both the Forest Department and the Tourism Department were taking care of mangrove forests that were of tourist interest. It was likely that the guest house that remained dysfunctional now would be reverted to the Tourism Department for revival.

           Collector V.Amuthavalli, Conservator of Forests (Villupuram circle) Yogesh Singh, Forest Ranger (Chidambaram) A.Babu, and, MLAs P.Sivakolundu, Naga.Murugmaran and P.Muthukumar participated.





Read more »

NLC to adopt e-contract system

CUDDALORE: 

          The Neyveli Lignite Corporation, a Navratna company, will soon adopt the e-contract system to ensure transparency in the execution of works assigned on a contractual basis. The Indian Institute of Technology-Kharagpur, has been working on the project, according to A.R.Ansari, Chairman-cum-Managing Director, NLC.

         He was addressing a meeting convened on the NLC premises for reviewing and evaluating the Integrity Pact programme, attended by independent external monitors and senior executives. Mr Ansari said that already the e-auction, e-procurement, e-payment and e-tender systems were in vogue in the NLC. These measures would ensure transparency in the functioning of the NLC and give no room for criticism. The pact had come into force after a Memorandum of Understanding was signed with the Transparency International (India) on December 29, 2007.

           The pact provided for ethical practices and honest dealings with the suppliers, service providers and contractors, and, would be applicable to the contracts valued at Rs 1 crore and above. The implementation of the pact was being monitored by the government machinery and independent external monitors. The present review meeting was held to make the officials and the contractors familiarise with the guidelines of the pact and to sort out the problems, if any, that might crop up while awarding or executing the contracts.






Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior