உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 05, 2012

அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

சிதம்பரம்:

      சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதனுக்கு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கி கௌரவித்துள்ளது. சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 2-ல் நடைபெற்ற "ஆயுஷ் டே' விழாவில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் மருத்துவ அறிவியல்துறைக்கு ஆற்றியை சேவையை பாராட்டி வாழ்நாள் சாதனையாளர் விருதினை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் வி.எஸ்.விஜய் வழங்கினார். விழாவில் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் மயில்வாகனன் நடராஜன், பதிவாளர் டாக்டர் ஆர்.ஸ்ரீலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.








Read more »

குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரில் ஆண்டு மற்றும் விளையாட்டு விழா

குறிஞ்சிப்பாடி :

      குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரில் ஆண்டு மற்றும் விளையாட்டு விழா நடந்தது.

       தமிழ்த்துறைத் தலைவர் சிவபாலன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் சேரமான் தலைமை தாங்கினார். கல்லூரி நிர்வாக குழுத்தலைவர் சட்டநாதன் முன்னிலை வகித்தார். கல்லூரி நிர்வாக அதிகாரி பேராசிரியர் முத்துக்குமரன் ஆண்டறிக்கை வாசித்தார். பேராசிரியர் முனைவர் அகரமுதல்வன் கட்டுரை, கவிதை, கையெழுத்துப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், துறைவாரியாக முதல் மதிப்பெண் பெற்றவர்களுக்கும் பரிசு வழங்கினார். கல்லூரி நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ராமலிங்கம், சுந்தரமூர்த்தி வாழ்த்திப் பேசினர். விளையாட்டு விழாவில் அண்ணாமலைப் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் பேராசிரியர் முனைவர் ரவீந்திரன் சிறப்புரையாற்றி கல்லூரில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.

       விளையாட்டுப் போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை பி.பி. எ., பிரிவு மாணவர்களும், இரண்டாவது இடத்தை பி.காம்., பிரிவு மாணவர்களும் பெற்றனர். விழா ஏற்பாடுகளை மேலாளர் சிவராஜ், உதவிப் பேராசிரியர் வேல்முருகன், கல்லூரி அலுவலர்கள் செய்திருந்தனர்.





Read more »

குள்ளஞ்சாவடி பகுதியில் காசநோய் தின விழிப்புணர்வு முகாம்

கடலூர் : 

     குள்ளஞ்சாவடி பகுதியில் காசநோய் தின விழிப்புணர்வு முகாம் நடந்தது. கடலூர் பொயட்ஸ் தொண்டு நிறுவனம் மற்றும் சென்னை ரீச் தொண்டு நிறுவனமும் இணைந்து கடலூர் அடுத்த அன்னவல்லி, பெரியகாட்டுசாகை, சுப்ரமணியபுரம், பள்ளிநீரோடை, தாதங்குப்பம், ராமநாதன்குப்பம், கள்ளையங்குப்பம், அகரம், குள்ளஞ் சாவடியில் காசநோய் குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. அதில் காசநோயின் அறிகுறி, "டாட்ஸ்' குறுகிய கால நேரடி கண்காணிப்பு சிகிச்சை விவரம், காசநோ ய்க்கு அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அளிக்கப்படும் இலவச சிகிச்சை குறித்து கிராம மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை பொயட்ஸ் தொண்டு நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் செய்திருந்தார்.




Read more »

என்.எல்.சி., நிறுவன தொழிற்சங்க தேர்தலில் அ.தி.மு.க.தொழிற்சங்கத்தினருக்கு அங்கீகாரம்

நெய்வேலி :

   நெய்வேலி நகரில் தொழிற்சங்க அங்கீகாரம் பெற்றதையடுத்து அ.தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

       என்.எல்.சி., நிறுவன தொழிற்சங்கங்களுக்கான ரகசிய ஓட்டுப்பதிவில் அ.தி.மு.க., தொழிற்சங்கத்தினருக்கு அங்கீகாரம் கிடைத்தது. இதையடுத்து, நெய்வேலி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள அ.தி.மு.க., தொழிற்சங்க அலுவலக வளாகத்தில் திரண்டிருந்த தொழிலாளர்களுக்கு எம்.எல்.ஏ.,க்கள் சொரத்தூர் ராஜேந்திரன், சிவசுப்ரமணியன் மற்றும் சின்னசாமி நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து எம்.எல். ஏ.,க்கள் தலைமையில் நகர செயலர் ரவிச்சந்திரன், தொழிற்சங்க தலைமை நிர்வாகிகள் ராம உதயகுமார், அபு, தட்சணாமூர்த்தி, ஜெ., பேரவை நிர்வாகிகள் ஜெயக்குமார், மனோகரன், சொர்ணமூர்த்தி, தொழிற்சங்க நிர்வாகிகள் வெற்றிவேல், பாலசுப்ரமணியன், ரகுராமன், ராமலிங்கம், தமிழ்ச்செல்வன், அல்போன்ஸ், ஜோதி, ராஜா, கஞ்சமலை, தனவேல், ராஜகோபால், இளங்கோவன், சேகர், ஆறுமுகம், சுரேஷ்குமார் உட்பட 200க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.








Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior