உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 04, 2009

திறன் வளர்த்தல் அடிப்படை பயிற்சி

அண்ணாமலைநகர்:

சிதம்பரத்தை அடுத்த டி. புத்தூர் அரசு ஆதிதிராவிட நல துவக்கப்பள்ளியில் பிற்படுத்தப்பட்ட பகுதி மானிய நிதி திறனறிதல் பயிற்சி நான்கு நாட்கள் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள், உதவியாளர்களுக்கு முழுசுகாதாரம், எய்ட்ஸ் விழிப்புணர்வு, மகளிர் மேம்பாடு ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

                     மாநில ஊரக வளர்ச்சி பயிற்சி நிறுவன விரிவுரையாளர் வீரராகவன் பயிற்சியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பயிற்சி பெற்றவர்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் சான்றிதழ் வழங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராமு பயிற்சியை ஒருங்கிணைந்து நடத்தினார். டி. புத்தூர் ஆட்கொண்டநத்தம், செட்டிகட்டளை, பரிவிளாகம், நெடும்பூர் ஊராட்சி தலைவர்கள், உறுப்பினர்கள், உதவியாளர்கள் கலந்துகொண்டனர்.
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அடுத்த அறந்தாங்கியில் உள்ளாட்சி உறுப்பினர்களுக்கு திறன் வளர்த்தல் பயிற்சி நடந்தது.
மாநில ஊரக வளர்ச்சி துறை வீரராகவன் தலைமை தாங்கி பயிற்சி
யளித்தார். விரிவாக்க அலுவலர் சமூக நல வனசுந்தரி முன்னிலை வகித்தார். இப்பயிற்சி வகுப்பினை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜாராமன் துவக்கி வைத்து ஆலோசனை வழங்கினார். வானமாதேவி, அகரபுத்து£ர், கருணாகரநல்லு£ர், சித்தமல்லி ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த ஊராட்சி தலைவர்கள், மக்கள் நலப்பணியாளர்கள், எழுத்தர்கள், வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


பயிற்சியில் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு என பல்வேறு தலைப்புகளில் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

Read more »

திட்டக்குடி பகுதியில் அலுமினிய கம்பிகள் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு வலை

திட்டக்குடி:

         திட்டக்குடியை அடுத்த ஆவினங்குடியை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் வசந் தன், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் செந்தில், வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் ராம சாமி உள்ளிட்ட 10 பேரின் விளைநிலத்தில் இருந்த நீர்மூழ்கி மற்றும் மின்மோட்டாரின் அலுமினிய மின் கம்பிகள் திருட்டு போயிருந்தன. நேற்று  காலை வய லுக்கு சென்றவர்கள் மின் கம்பி திருடு போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து ஆவினங்குடி போலீசார் வழங்கு பதிவு செய்து மின் கம்பி திருடியவர்களை தேடி வருகின்றனர். மதிப்பு ரூ. 60 ஆயிரம் ஆகும். திட்டக்குடி, ஆவினங் குடி, பட்டூர், கோழியூர் உள்ளிட்ட 10க்கும் மேற் பட்ட கிராமங்களில் தொடர்ந்து நடந்து மின்கம்பிகள் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read more »

கிலோ ரூ.44 ஆனது கத்திரிக்காய் விலை கிடுகிடு உயர்வு

கடலூர்:

கடலூரில் காய்கறிகள் விலை அதிகரித்துள்ளது. கத்திரிக்காய் கிலோ ரூ.44 க்கு விற்கப்படுகிறது. வட கிழக்கு பருவ மழை காரணமாக கடந்த மாதத்தில் தொடர்ந்து கன மழை பெய்தது. தற்போதும் விட்டு, விட்டு பெய்து வருகிறது. காய்கறி விளைச்சல் உள்ள பகுதிகளில் பலத்த மழை காரணமாக காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டு, குறைவான அளவுக்கு காய்கறிகள் வரத்து வந்துகொண்டிருக்கிறது. இதனால் காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


                நீலகிரி, மேட்டுப்பாளையம் பகுதிகளில் பெய்யும் மழைக்காரணமாக அங்கிருந்து வரும் உருளை, பீன்ஸ், சவ்சவ், இஞ்சி, கருணை, பீட்ருட், கேரட் ஆகிய காய்கறிகள் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. ஈரோடு பகுதி யில் கனமழை காரணமாக கத்திரிக்காய் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கத்திரிக்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடைகளில் ரூ. 14க்கு விற்கப்பட்ட கத்திரிக்காய் தற்போது கிலோ ஒன்று ரூ.44க்கு விற்கப்படுகிறது. மழை காரணமாக நாணமேடு, கண்டக்காடு உள்ளிட்ட கிராமங்களில் கத்திரிக்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டுவிட்டதால் உள்ளூர் கத்திரிக்காயும் மார்க்கெட்டுக்கு வரவில்லை. இதுவும் கத்திரிக்காய் விலை உயர்வுக்கு கூடுதல் காரணம் என்கின்றனர் காய்கறி வியாபாரிகள்.

        இதனால் கத்திரிக்காய் பிரியர்கள் 100 கிராம், 200 கிராம் என குறைந்த அளவில் கத்திரிகாயை வாங்கிச் செல்கின்றனர்.

Read more »

அஞ்சல் ஊழியர் மாநாடு

கடலூர்:

         கடலூரில் தேசிய அஞ்சல் ஊழியர் சங்க தமிழ்நாடு வட்ட மாநில மாநாடு கடலூரில் நேற்று துவங்கியது.

துவக்க விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா மற்றும் பேரணி நடந்தது. பொதுச்செயலாளர் கிஷன்ராவ் தேசிய கொடியும், சம்மேளன பொதுசெயலாளர் தியாகராசன் சம்மேளன கொடி யும் ஏற்றி வைத்தனர்.


                      தொடர்ந்து நடந்த பேரணிக்கு மாநில தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செய லாளர் பிரகாஷ் வரவேற் றார். மாநில செயலாளர் முத்துகிருஷ்ணன் துவக்கவுரையாற்றினர். கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையத்தில் துவங்கிய பேரணி உப்பலவாடியில் நிறைவடைந்தது. மாநாட்டு வரவேற்பு குழு வினோலின் ஷட்ராக், ரமேஷ், மாநில சங்கம் நிர்வாகிகள் முத்துகிருஷ்ணன், அப்துல்காதிர், விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நாளை மாநாடு நிறைவுபெறுகிறது.



Read more »

பரங்கிப்பேட்டையில் பாபாஜி அவதார தின விழா

சிதம்பரம்:


           சிதம்ப ரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டையில் பாபாஜி பிறந்தார். அவர் பிறந்த இடத்தில் தற்போது கோயில் உள்ளது.  கார்த்திகை மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் ஆண்டு தோறும் இங்கு அவதார தின விழா சிறப்புடன் நடைபெறும். இந்த ஆண்டு 1806 அவதார விழாவாகும். இதை யொட்டி உலகெங் கும் உள்ள பாபாஜியின் பக்தர்கள் நேற்று முன்தினம் முதல் கோயிலுக்கு வரத்தொடங்கினர். நேற்று காலை பாபாஜி சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கிரியோ பாபாஜி யோக சங்கம் சார்பில் பக்தர் வெங்கடசுப்ரமணியன் தலைமை யில் தியான நிகழ்ச்சி நடந்தது. காலை 9 மணி அளவில் சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது.

மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடந்தது. 12 மணி நேரம் நடைபெறும் உலக அமைதி மந்த்ரா யாகம் மாலையில் துவங்கியது.





Read more »

கடலூர் எஸ்பி அலுவலகத்தில் கைகளை இழந்த பட்டதாரி பெண் முறையீடு

கடலூர் :

                          இரண்டு கைகளையும் இழந்த பட்டதாரி பெண் கடலூர் எஸ்பி அலுவலகத்தில் நிலப்பிரச்னை காரணமாக நடத்தப்படும் தாக்குதல் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லை என்றால் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்வதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.


                      கடலூர் எஸ்பி அலுவலகத்துக்கு இரண்டு கைகளை இழந்த பெண் ஒருவர் நேற்று வந்து, எஸ்பியை சந்திக்க வேண் டும் என கூறியுள்ளார். புகார் குறித்து எஸ்பி அலுவலக போலீசார் விசாரித்தனர். திருவண்ணாமலைக்கு பாதுகாப்பு பணிக்கு எஸ்பி சென்றிருப்பதால் மாவட்ட தனிப்பிரிவு போலீசாரிடம் புகார் குறித்து தெரிவிக்க கூறியுள்ளனர்.

       
                       இதையடுத்து தனிப்பிரிவு அலுவலகத்துக்கு சென்ற அந்த பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையில், பண்ருட்டி போலீஸ் லைன் பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகள் ஜீவா(28) என தெரிவித்தார். அவர் கூறுகை யில், பிஏ தமிழ் படித்துள்ளதாகவும், விபத்தில் தனது இரண்டு கைகளை யும் இழந்து விட்டதாகவும் கூறினார். கடந்த 22 வருடமாக பக்கத்து வீட்டுக்காரர் நிலப்பிரச்னையில் தன் குடும்பத்தை தாக்கி வருவதாகவும், தந்தையை தவிர வேறு ஆண் நபர்கள் இல்லை, என்றும், தனக்கு 4 இளைய சகோதரிகள் உள்ளதாகவும்,  இதனால் தொடர்ந்து மிரட்டல்கள் வருகிறது என்றும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை  என்றால் கடலில் மூழ்கி தற்கொலை செய்து கொள்வேன் என கூறினார்.


                      இதையடுத்து பண்ருட்டி போலீசாரிடம் இது குறித்து நடவடிக்கை எடுக்க தனிப்பிரிவு போலீசார் அறிவுறுத்தினர்.



Read more »

தொடர் மழை எதிரொலி வீராணம் ஏரி நிரம்புகிறது

காட்டுமன்னார்கோவில்: 

            காட்டுமன்னார்கோவில், குமராட்சி, சேத்தியாத்தோப்பு ஆகிய பகுதிகளில் கடந்த இரு தினங்களாக விட்டுவிட்டு பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கிராமங்களின் தெருக்களில் தண்ணீர் அதிகளவு செல்கிறது.
காட்டுமன்னார்கோவிலில் உள்ள வீராணம் ஏரிக்கு கருவாட்டு ஓடை வழியாக தண்ணீர் அதி களவு வருகிறது. ஜெயங்கொண்டம் பகுதியில் பெய்த மழை நீர் இந்த ஓடை வழியாக வடவாற்றில் கலந்து வீராணம் ஏரிக்கு வருகிறது. நேற்று காலை ஏரியின் நீர் மட்டம் முழு கொள்ள ளவான 47.50 அடியில் 44.50 அடியாக தேக்கி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை வழியாக ஏரிக்கு அதிகளவு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. 


ஏரியின் நீர் மட்டத்தை 45 அடிக்கு மேல் உயர்த்தக்கூடாது என ஆட்சியர் கூறியிருப்பதால் ஏரியின் நீர் மட்டத்தை தொடர்ந்து பொதுப்பணித்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.  தொடர்ந்து மழை நீடித்தால் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

                                 வெள்ளியங்கால் ஓடையில் உபரி நீர் திறக்கப்பட்டால் பல்வேறு கிராமங்கள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் உள்ளது.  ஏரியின் நீர் மட்டம் உயரும்பட்சத்தில், முதலில் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு மூலமே உபரி நீர் வெளியேற்றுவதற்கு பொதுப்பணித்துறையினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். மழை தொடர்ந்து நீடித்தால் மட்டுமே இந்த இரு வடிகால்கள் மூலம் வெள்ள நீர் வெளியேற்றப்படும் என்று தெரிகிறது.

Read more »

கெங்​கை​கொண்​டான் பேரூ​ராட்சி அலு​வ​ல​கத்துக்கு பூட்டு!

நெய்வேலி, டிச. 3: 

                           நெய்​வே​லியை அடுத்த கெங்​கை​கொண்​டான் தேர்​வு​நிலை பேரூ​ராட்சி செயல் அலு​வ​ல​ரைக் கண்​டித்து அப்​ப​குதி பொது​மக்​கள்,​ அலு​வ​ல​கப் பணி​யா​ளர்​கள் மற்​றும் கவுன்​சி​லர்​கள் வியா​ழக்​கி​ழமை ஆர்ப்​பாட்​டம் நடத்தி அலு​வ​ல​கத்தை பூட்​டி​னர்.

              கெங்​கை​கொண்​டான் தேர்வு நிலை பேரூ​ராட்​சி​யின் செயல் அலு​வ​ல​ராக இருப்​ப​வர் கலி​ய​மூர்த்தி.     இவர் மீது அவ்​வப்​போது சில புகார்​கள் எழுந்​த​வண்​ணம் இருந்​தன. இந்​நி​லை​யில் அலு​வ​ல​கத்​துக்கு வரும் பொது​மக்​களை தரக்​கு​றை​வாக பேசு​வது,​ துப்​பு​ர​வுத் தொழி​லா​ளர்​கள்,​ அலு​வ​ல​கப் பணி​யா​ளர்​கள் மற்​றும் கவுன்​சி​லர்​களை அவ​தூ​றா​கப் பேசி​ய​தா​கக் கூறப்​ப​டு​கி​றது.÷மே​லும் பேரூ​ராட்​சி​யின் பின்​பு​றம் நடை​பெ​றும் கட்​ட​டப் பணி​க​ளில் பணி​பு​ரி​யும் தொழி​லா​ளர்​களை ஓரி​னச் சேர்க்​கைக்கு அழைத்​த​தா​க​வும் கூறப்​ப​டு​கி​றது.÷இ ​தைத் தொடர்ந்து அப்​ப​குதி பொது​மக்​கள்,​ கவுன்​சி​லர்​கள்,​அலு​வ​ல​கப் பணி​யா​ளர்​கள் மற்​றும் துப்​பு​ர​வுத் தொழி​லா​ளர்​கள் உள்​ளிட்​டோர் இணைந்து வியா​ழக்​கி​ழமை செயல் அலு​வ​ல​ரைக் கண்​டித்து ஆர்ப்​பாட்​டம் நடத்தி,​ அலு​வ​ல​கத்​தைப் பூட்​டி​னர்.

           இ​தை​ய​டுத்து ஊமங்​க​லம் வரு​வாய் ஆய்​வா​ளர் முரளி,​ கிராம நிர்​வாக அலு​வ​லர் கோதண்​ட​பாணி,​ மந்​தா​ரக்​குப்​பம் இன்ஸ்​பெக்​டர் குமார் ஆகி​யோர் பொது​மக்​க​ளி​டம் சம​ர​சப் பேச்சு நடத்​தி​னர்.

           இ​தை​ய​டுத்து பொது​மக்​க​ளி​ட​மி​ருந்து சாவியை வாங்கி,​ மாலை​யில் அலு​வ​ல​கத்தை திறந்​த​னர்.    இது தொடர்​பான புகா​ரை​யும் மாவட்ட ஆட்​சி​யர் மற்​றும் பேரூ​ராட்சி உதவி இயக்​கு​ந​ரி​ட​மும் அளித்​துள்​ள​தா​க​வும் தெரி​கி​றது.

இ​தை​ய​டுத்து மாவட்ட ஆட்​சி​யர் பேரூ​ராட்சி அலு​வ​ல​கத்தை வெள்​ளக்​கி​ழமை பார்​வை​யிட இருப்​ப​தா​கத் தெரி​கி​றது.

Read more »

1008 பேருக்கு அஷ்​ட​லட்​சுமி மகா​யந்​தி​ரம்

சிதம் ​ப​ரம்,​  டிச. 3:​  

                ஸ்ரீ சந்​துரு சுவா​மி​க​ளால் உரு​வாக்​கப்​பட்ட அஷ்​ட​லட்​சுமி மகா​யந்​தி​ரம் 1008 குடும்​பங்​க​ளும் வழங்​கப்​பட்​டது.

                  ந ​ட​ரா​ஜர் கோயி​லில் ஒரு நாளும் இடை​வி​டா​மல் 1171 நாள்​க​ளுக்கு மேலாக தொடர் அங்​கப்​பி​ர​தட்​சி​னம் செய்​து​வ​ரு​கி​றார் ஸ்ரீ சந்​துரு சுவா​மி​கள். இவ​ரால் உரு​வாக்​கப்​பட்ட அஷ்​ட​லட்​சுமி மஹா​யந்​தி​ரம் பக்​தர்​க​ளுக்கு வழங்​கும் நிகழ்ச்சி கீழ​சன்​ன​தி​யில் புதன்​கி​ழமை நடை​பெற்​றது.÷க​ட​லூர் மாவட்ட ஐயப்ப சேவா சங்​கத் தலை​வர் ஆடிட்​டர் கே.நட​ராஜ பிரபு,​ ராஜேஸ்​வரி நட​ராஜ பிரபு ஆகி​யோர் முன்​னிலை வகித்​த​னர். புதுச்​சேரி முன்​னாள் முதல்​வர் என்.ரங்​க​சாமி பங்​கேற்று 1008 குடும்​பங்​க​ளுக்கு அஷ்​ட​லட்​சுமி மஹா யந்​தி​ரங்​களை வழங்​கிப் பேசி​னார். அப்​போது அவர்,​ மக்​கள் ஆன்​மி​கம்,​ மனி​த​நே​யம் தழைத்​தோங்கி ஒற்​று​மை​யு​டன் வாழ வேண்​டும் என ஸ்ரீ சந்​துரு சுவா​மி​கள் தொடர் அங்​கப்​பி​ர​தட்​சி​ணம் செய்​வது பாராட்​டுக்கு உரி​யது என தெரி​வித்​தார்.

                 இந்​நி​கழ்ச்​சி​யில் மனித உரிமை இயக்க ஒருங்​கி​ணைப்​பா​ளர் லோக​ந​டே​சன் உள்​ளிட்​டோர் பெருந்​தி​ர​ளாக பங்​கேற்​ற​னர். பின்​னர் பஞ்​ச​பூத ஸ்தல மண் எடுத்து செய்​யப்​பட்ட 1008 மஹா கல​சங்​களை பக்​தர்​கள் ஏந்தி வர ஸ்ரீ சந்​துரு சுவா​மி​கள் தேரோ​டும் வீதி​க​ளில் அங்​கப்​பி​ர​தட்​சி​ணம் மேற்​கொண்​டார்.

Read more »

கலை​ஞர் காப்​பீட்​டுத் திட்​ட​ முதற்கட்​டப் பணி நிறைவு

கட ​லூர்,​ டிச.3: 

                     முதல்​வர் கலை​ஞ​ரின் உயிர்​காக்​கும் உயர் மருத்​துவ சிகிச்சை காப்​பீட்​டுத் திட்​டத்​தில் கட​லூர் மாவட்​டத்​தில் முதல் கட்​டப் பணி​கள் நிறைவு பெற்று விட்​ட​தாக மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் அறி​வித்​தார். ​   ஆட்​சி​யர் வியா​ழக்​கி​ழமை வெளி​யிட்ட செய்​திக் குறிப்பு:​ முதல்​வர் கலை​ஞ​ரின் காப்​பீட்​டுத் திட்​டத்​தில் பய​னா​ளி​கள் பட்​டி​யல் தயா​ரிக்​கும் பணி,​ 30-8-2009-ல் தொடங்கி நடந்து வரு​கி​றது.   இ​தில் முதல் கட்​டப் பணி 2-12-2009-ல் முடி​வ​டைந்து உள்​ளது. 2-ம் கட்​டப்​பணி ஒரு வாரத்​தில் தொடங்​கும்.      


                             முதல் கட்​டப் பணி​யில் எவ​ரே​னும் புகைப்​ப​டம் எடுக்​கா​மல் விடு​பட்டு இருந்​தால்,​ 2-ம் கட்​டப் பணி​யின் போது புகைப்​ப​டம் எடுத்து திட்​டத்​தில் பய​ன​டை​யு​மாறு கேட்​டுக் கொள்​ளப்​ப​டு​கி​றார்​கள். ​     ஏற்​கெ​னவே புகைப்​ப​டம் எடுத்​துக் கொண்​ட​வர்​க​ளுக்கு அடை​யாள அட்டை வழங்​கப்​பட்டு வரு​கி​றது.     26 நல வாரி​யங்​க​ளின் உறுப்​பி​னர்​க​ளும் ரூ. 72 ஆயி​ரத்​துக்​குக் கீழ் ஆண்டு வரு​வாய் உள்​ள​வர்​க​ளும் பயன் பெறும் வகை​யில் திட்​டம் செயல்​ப​டுத்​தப் படு​கி​றது.     

                 ரூ. 72 ஆயி​ரத்​துக்கு மேல் ஆண்டு வரு​வாய் உள்​ள​வர்​கள்,​ அரசு ஊழி​யர்​கள்,​ இ.எஸ்.ஐ. திட்ட உறுப்​பி​னர்​கள் பயன்​பெ​றத் தகுதி அற்​ற​வர்​கள்.    எ​னவே தகுதி அற்​ற​வர்​கள் இதில் அடை​யாள அட்டை பெற்று இருந்​தால்,​ தாங்​க​ளா​கவே முன் வந்து,​ திரும்ப ஒப்​ப​டைக்​கு​மாறு கேட்​டுக் கொள்​ளப்​ப​டு​கி​றார்​கள் பின்​னர் விவ​ரம் தெரிந்​தால் குற்​ற​வி​யல் நட​வ​டிக்கை தொடர ஏது​வா​கும் என்​றும் செய்​திக் குறிப்பு தெரி​விக்​கி​றது.

Read more »

வக்பு சொத்து: 2 பேர் மீது வழக்கு

சிதம் ​ப​ரம்,​ டிச.3: 

               சிதம்​ப​ரம் லால்​கான்​தெரு பள்​ளி​வா​சல் சொத்தை முறைகேடாக அனுபவித்​த​தாக 2 பேர் மீது நகர போலீ​ஸôர் வழக்​குப் பதிந்​துள்​ள​னர். சி​தம்​ப​ரம் தொப்​பை​யான் தெரு​வைச் சேர்ந்​த​வர் முக​மது ஜியா​வு​தீன்.       

                இவர் லால்​கான்​தெரு பள்​ளி​வாச​லில் முறை​கே​டு​கள் நடப்​ப​தா​க​வும்,​ பள்​ளி​வா​சல் வக்பூ வாரிய சொத்து பொறுப்​பில் உள்ள இப்​ராம்ஷா,​ அதீஸ்​கான் ஆகி​யோர் முறை​கே​டாக அச் சொத்​துக்​களை அனு​ப​வித்து வரு​வ​தால் அவர்​கள் மீது வழக்​குப் பதிவு செய்து நட​வ​டிக்கை எடுக்​கு​மாறு சிதம்​ப​ரம் நம்​பர்-​2 மாஜிஸ்​டி​ரேட் கோர்ட்​டில் மனு தாக்​கல் செய்​தார்.      ம​னுவை விசா​ரித்த நீதி​பதி ஈஸ்​வ​ர​மூர்த்தி சிதம்​ப​ரம் நகர போலீ​ஸôர் இரு​வர் மீதும் வழக்​குப் பதிந்து விசா​ரணை மேற்​கொள்ள உத்​த​ர​விட்​டார்.   

            அ​தன்​பே​ரில் சிதம்​ப​ரம் நகர போலீ​ஸôர் மேற்​கண்ட இரு​வர் மீது வழக்​குப் பதிந்து விசா​ரணை மேற்​கொண்​டுள்​ள​னர்.

Read more »

மனித உரி​மைக் கட்சி ஆர்ப்​பாட்​டம்

சிதம் ​ப​ரம்,​ டிச.3: 

                 திரு​நா​ளைப்​போ​வார் என்​ற​ழைக்​கப்​ப​டும் நந்​த​னார் நுழைந்த சிதம்​ப​ரம் நட​ரா​ஜர் கோயில் தெற்​கு​வா​யிலை திறக்​கக் கோரி மனித உரி​மைக்​கட்சி சார்​பில் மேல​வீதி பெரி​யார் சிலை அருகே கண்​டன ஆர்ப்​பாட்​டம்  வியா​ழக்​கி​ழமை நடை​பெற்​றது.

             கட்சி மாநில பொதுச் செய​லா​ளர் எல்.ஆர்.விஸ்​வ​நா​தன் தலைமை வகித்​தார். மாவட்ட அவைத் தலை​வர் கே.சக்​தி​வேல் முன்​னிலை வகித்​தார். நக​ரச் செய​லா​ளர் ஆர்.சுதா​கர் வர​வேற்​றார். மக்​கள் குடி​ய​ரசு கட்சி தலை​வர் க.திரு​வள்​ளு​வன்,​ நெய்வேலி எஸ்.உத்​தி​ராசு ஆகி​யோர் கண்​டன உரை​யாற்​றி​னர். ஜே.விஜ​ய​கு​மார் நன்றி கூறி​னார்.

Read more »

ஹோட்​டல்​க​ளில் காய்ச்​சிய குடி​நீர் வழங்க வேண்​டு​கோள்

சிதம் ​ப​ரம்,​ டிச. 3:​ 
 
                   கட​லூர் மாவட்​டத்​தில் பர​வி​வ​ரும் விஷக்​காய்ச்​சலை தடுக்​கும் பொருட்டு அனைத்து ஹோட்​டல்​க​ளி​லும் பொது​மக்​க​ளுக்கு காய்ச்​சிய குடி​நீரை வழங்க மாவட்ட நிர்​வா​கம் நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும் என தமிழ்​நாடு நுகர்​வோர் குழு​மச் செய​லா​ளர் சி.டி.அப்​பாவு கோரிக்கை விடுத்​துள்​ளார்.
 
              இ​து​கு​றித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்கை:​ கட​லூர் மாவட்​டத்​தில் விஷக் காய்ச்​சல் அதி​வே​க​மாக பரவி வரு​கி​றது. குடும்​பத்​தில் ஒரு​வ​ருக்கு காய்ச்​சல் வந்​தால் அனை​வ​ருக்​கும் பர​வி​வி​டு​கி​றது. காய்ச்​சல் வந்து போன பிறகு மூட்​டுவலி ஏற்​பட்டு அந்த வலி​போக பல மாதங்​கள் ஆகி​றது. எனவே காய்ச்​சிய குடி​நீரை பொது​மக்​கள் அனை​வ​ரும் பருக சுகா​தா​ரத்​துறை மூலம் அறி​வு​றுத்த வேண்​டும். மாவட்​டத்​தில் உள்ள ஹோட்​டல்​கள்,​ திரை​ய​ரங்​கு​கள்,​ டீக்​க​டை​கள்,​ பள்​ளி​கள் உள்​ளிட்ட பகு​தி​க​ளில் காய்ச்சி குடி​நீரை பயன்​ப​டுத்த மாவட்ட நிர்​வா​கம் உத்​த​ரவு பிறப்​பிக்க வேண்​டும் என சி.டி.அப்​பாவு தெரி​வித்​துள்​ளார்.

Read more »

ஆசி​ரி​யர் பயிற்சி நிறு​வ​னத்​தில் மரக்​கன்​று​கள் நடும் விழா

பண் ​ருட்டி,​டிச.3: 

                    பண்​ருட்டி வட்​டம் கீழக்​கொல்​லை​யில் இயங்கி வரும் நெய்வேலி ஆசி​ரி​யர் பயிற்சி நிறு​வ​னத்​தின் வளா​கத்​தில் மரக்​கன்​று​கள் நடும் விழா செய்​வாய்க்​கி​ழமை நடை​பெற்​றது.   கல்வி அறக்​கட்​ட​ளை​யின் தலை​வர் ஆர்.சந்​தி​ர​சே​கர் மரக்​கன்​று​களை நட்டு வைத்து விழாவை தொடங்கி ​ வைத்​தார்.  செய ​லர் எம்.நட​ரா​ஜன்,​ பொரு​ளர் என்.தங்​க​துரை,​ இயக்​கு​நர்​கள் ஆர்.எல்.ஜெய​வெங்​கட்​ரா​மன்,​ சுதா​ரா​ம​ராசு மற்​றும் பயிற்சி ஆசி​ரி​யர் மாண​வர்​க​ளும் கலந்து கொண்டு மரக்​கன்​று​களை நட்​ட​னர்.   வி​ழா​வில் ​(பொறுப்பு)​ முதல்​வர் நா.கன​க​ரா​சன் மற்​றும் விரி​வு​ரை​யா​ளர்​கள் கலந்து கொண்டு பரா​ம​ரிப்பு,​ பயன் குறித்து விளக்​கம் அளித்​த​னர்.

Read more »

ஊராட்சி நூல​கங்​க​ளில் புத்​த​கங்​களை அதி​க​ரிக்க வேண்​டும்

கட ​லூர்,​ ​ டிச. ​ 3:​ 

                      கட​லூர் மாவட்​டத்​தில் உள்ள ஊராட்சி நூல​கங்​க​ளில்,​ புத்​த​கங்​க​ளின் எண்​ணிக்​கையை அதி​க​ரிக்க வேண்​டும் என்று மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் கேட்​டுக் கொண்​டார். ​ ​

                     அண்ணா மறு​ம​லர்ச்​சித் திட்​டத்​தில் கட​லூர் மாவட்​டத்​தில் உள்ள ஊரக விளை​யாட்டு மையங்​கள் மற்​றும் நூல​கங்​கள் பயன்​பாடு தொடர்​பாக ஊராட்சி மன்​றத் தலை​வர்​கள் மற்​றும் பள்​ளித் தலைமை ஆசி​ரி​யர்​க​ளு​டன் கலந்​தாய்​வுக் கூட்​டம் மாவட்ட ஆட்​சி​யர் தலை​மை​யில் புதன்​கி​ழமை நடந்​தது. ​

              கூட்​டத்​தில் ஆட்​சி​யர் பேசி​யது:​ பள்ளி மாண​வர்​கள் தின​மும் ஒரு மணி நேர​மா​வது,​ ​ நூல​கங்​க​ளைப் பயன்​ப​டுத்த வேண்​டும். கல்வி கற்​பது என்​பது கற்​றல்,​ கேட்​டல்,​ படித்​தல் என மூன்று வகைப்​ப​டும். படித்​த​லுக்​குப் பயன்​ப​டு​வது நூல​கங்​கள். ​

                   இந்த நூல​கங்​க​ளில் 2 தின​சரி மற்​றும் 2 வார இதழ்​கள் அவ​சி​ய​மாக இருக்க வேண்டும். நூல​கங்​க​ளில் புத்​த​கங்​க​ளின் எண்​ணிக்​கையை உயர்த்த வேண்​டும். இதற்​காக அனை​வ​ரும் ஒன்​று​கூடி முக்​கி​யப் பிர​மு​கர்​கள் மூலம் நூல​கத்​துக்​குப் புத்​த​கங்​கள் வழங்​கும் விழா,​ நன்​கொ​டை​யாக புத்​த​கங்​கள் வழங்​கும் விழா ஆகி​ய​வற்றை நடத்த வேண்​டும். நூல​கங்​க​ளில் புத்​த​கங்​க​ளின் எண்​ணிக்​கையை உயர்த்​தும் ஊராட்சி மன்​றத் தலை​வர்​கள் பாராட்​டப்​ப​டு​வார்​கள். பொது அறி​வுத் திறனை வளர்க்க நூல​கங்​கள் அவ​சி​யம். மாண​வர்​கள் ஆசி​ரி​யர்​க​ளி​டம் பயில்​வ​தை​விட பொது அறிவை நூல​கத்​தில் படித்து அதி​கம் வளர்த்​துக் கொள்ள முடி​யும் என்​றார் ஆட்​சி​யர். ​

கூட்​டத்​தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முக​மைத் திட்ட அலு​வ​லர் எஸ்.ராஜஸ்ரீ,​ ​ உத​வித்​திட்ட அலு​வ​லர்​கள் செல்​வ​பெ​ரு​மாள்,​ எம்.சேக​ரன் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​ட​னர்.

Read more »

பக்​ரைனில் கொலையுண்ட இளைஞ​ரின் உடலை மீட்க கட​லூர் எம்.பி. கடி​தம்

சிதம்​ப​ரம், ​டிச. 3: 

                         பக்​ரைன் நாட்​டில் கொலை செய்​யப்​பட்ட சிதம்​ப​ரம் வாலி​பர் உட​லைக் கொண்டு வர ஏற்​பாடு செய்​யு​மாறு இந்​திய அரசு உள்​து​றைச் செய​லா​ள​ருக்கு கட​லூர் எம்.பி. கே.எஸ்.அழ​கிரி கடி​தம் அனுப்​பி​யுள்​ளார்.

              சி​தம்​ப​ரத்தை அடுத்த சி.முட்​லூர் அம்​மன் கோயில் தெரு​வைச் சேர்ந்த சொக்க​லிங்​கத்​தின் மகன் ராஜ்​மோ​கன் ​(25). கடந்த இரண்டு ஆண்​டு​க​ளாக பக்​ரைன் நாட்​டில் மொராக் நக​ரத்​தில் தினக்கூ​லி​யாக பணி​யாற்றி வந்​தார்.÷பக்​ரைன் நாட்​டில் தமி​ழர்​களை மிரட்டி பணம் பறிக்​கும் கும்​பல் ராஜ்​மோ​கனை கடந்த வாரம் கழுத்தை அறுத்து கொலை ​ செய்​த​தா​கக் கூறப்​ப​டு​கி​றது.

              இது குறித்து ராஜ்​மோ​க​னின் அண்​ணன் எஸ்.மணி​கண்​ட​னுக்கு தக​வல் வந்​துள்​ளது. தனது தம்​பி​யின் உடலை மீட்​டுத் தரு​மாறு கட​லூர் மாவட்ட ஆட்​சி​ய​ருக்கு எஸ்.மணி​கண்​டன் கடி​தம் அளித்​துள்​ளார்.

               மே​லும் கட​லூர் எம்.பி. கே.எஸ்.அழ​கிரி சிதம்​ப​ரம் வாலி​பர் ராஜ்​மோ​கன் உடலை மீட்டு தமி​ழ​கத்​துக்​குக் கொண்டு வர ஏற்​பாடு செய்​யும்​படி உள்​து​றைச் செய​லா​ள​ருக்கு கடி​தம் அனுப்​பி​யுள்​ளார்.

Read more »

என்​எல்சி -​ என்​ஐடி நிறு​வ​னத்​து​டன் புரிந்​து​ணர்வு ஒப்​பந்​தம்

நெய்வேலி,​  டிச. 3: 

                             என்​எல்​சி​யில் உள்ள இரும்பு இயந்​தி​ரங்​கள் துருப்​பி​டிக்​கா​தி​ருக்க ஆய்வு மேற்​கொள்​வ​தற்​காக திருச்சி தேசிய தொழில்​நுட்ப நிறு​வ​னத்​து​டன் என்​எல்சி நிறு​வ​னம் புரிந்​து​ணர்வு ஒப்​பந்​தத்தை வியா​ழக்​கி​ழமை மேற்​கொண்​டது.÷என்​எல்சி நிறு​வ​னத்​தின் 3 சுரங்​கங்​க​ளி​லும் மழை​நீர் மற்​றும் நிலத்தி​லி​ருந்து கசி​யும் நீரை வெளி​யேற்ற விலை​யு​யர்ந்த பல்​வேறு நீரேற்று இயந்​தி​ரங்​கள் பயன்​ப​டுத்​தப்​ப​டு​கின்​றன. அவ்​வாறு நீரை வெளி​யேற்​றும்​போது இயந்​திர பாகங்​கள் துருப்​பி​டித்து வீணாகி நிறு​வ​னத்​துக்கு இழப்பை ஏற்​ப​டுத்​து​கின்​றன.

                              இந்த இழப்பை தடுக்​கும் வித​மாக திருச்​சி​யில் செயல்​ப​டும் தேசிய தொழில்​நுட்ப நிறு​வ​னத்​தின் உலோ​க​வி​யல் துறை​யு​டன் இணைந்து,​ நீரேற்​றும் இயந்​தி​ரங்​கள் துருப்​பி​டிக்​கா​மல் இருப்​ப​தற்​கான வழி​மு​றை​களை ஆய்வு செய்ய என்​எல்சி நிறு​வ​னம் புரிந்​து​ணர்வு ஒப்​பந்​தம் மேற்​கொண்​டுள்​ளது.

          ரூ.52 லட்​சம் மதிப்​பி​லான ஆய்​வுத் திட்​டத்​தின் மூலம் துருப்​பி​டித்த​லின் விளை​வு​க​ளை​யும்,​ அள​வி​னை​யும் ஆய்வு செய்​ய​வும்,​ அதைத் தடுக்க தேவை​யான பூச்​சுக் கல​வையை கண்​ட​றிந்து,​ அந்​தக் கல​வையை பூசிய பின் ஏற்​ப​டும் முன்​னேற்​றத்தை மதிப்​பி​ட​வும் இத் திட்​டம் வழி​வ​குக்​கி​றது.

              இது இரு நிறு​வ​னத்​தின் கூட்டு முயற்சி என்​ப​தால் இந்த ஆய்​விற்​கான செல​வு​களை இரு நிறு​வ​ன​மும் இணைந்து வழங்​க​வுள்​ளன. இந்த ஆய்​வுப்​பணி 2 ஆண்​டு​கா​லம் நடை​பெ​றும்.

                        இ​தற்​கான ஒப்​பந்​தம் என்​எல்சி தலைமை அலு​வ​ல​கத்​தில் நடை​பெற்​றது. என்​எல்சி ​ திட்​டம் மற்​றும் செய​லாக்​கத்​துறை இயக்​கு​நர் ஆர்.கந்​த​சாமி மற்​றும் திருச்சி தேசிய தொழில்​நுட்ப நிறு​வன இயக்​கு​நர் பேரா​சி​ரி​யர் எம்.சிதம்​ப​ரம் ஆகி​யோர் கையெ​ழுத்​திட்டு கோப்​பு​களை பரி​மா​றிக் கொண்​ட​னர்.÷இந் நிகழ்ச்​சி​யில் என்​எல்​சி​யின் நிர்​வா​கத்​துறை இயக்​கு​நர் பி.பாபு​ராவ்,​ திட்​டம் மற்​றும் செய​லாக்​கத்​துறை செயல் இயக்​கு​நர் பி.சிவ​ஞா​னம்,​நிலத்​தடி நீர் கட்​டுப்​பாட்டு தலை​மைப் பொது​மே​லா​ளர் எஸ்.ராஜ​கோ​பால் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​ட​னர்.

Read more »

தேசிய அறி​வி​யல் மாநாட்​டுக்​கு கட​லூர் மாண​வர்​க​ளின் ஆய்​வுக்​கட்​டுரை தேர்வு

கட ​லூர்,​ டிச. 3: 

                     கட​லூர் பள்ளி மாண​வர்​க​ளின் தேனீக்​கள் பற்​றிய ஆய்​வுக் கட்​டுரை மாநில அறி​வி​யல் மாநாட்​டில் அங்​கீ​க​ரிக்​கப்​பட்டு தேசிய அறி​வி​யல் மாநாட்​டுக்​குத் தேர்வு பெற்று உள்​ளது. 

                                 இ​ளம் விஞ்​ஞா​னி​க​ளுக்​கான அறி​வி​யல் மாநாடு மாவட்ட அள​வி​லும் மாநில அள​வி​லும் பின்​னர் தேசிய அள​வி​லும் நடத்​தப்​ப​டு​கி​றது.

                                     பு​ துக்​கோட்​டை​யில் நடந்த மாநில அறி​வி​யல் மாநாட்​டில் கட​லூர் கிருஷ்​ண​சாமி மெட்​ரிக் மேல்​நி​லைப் பள்ளி 11-ம் வகுப்பு மாண​வர்​கள் ஆதித்​யன்,​ அருள்​செல்​வன்,​ மற்​றும் சுதர்​ச​னன் ஆகி​யோர் சமர்ப்​பித்த தேனீக்​கள் குறித்த ஆய்​வுக் கட்​டுரை முதல் இடம் பெற்று,​ தேசிய அறி​வி​யல் மாநாட்​டுக்​குத் தேர்வு செய்​யப்​பட்டு உள்​ளது.

                            இது குறித்​துப் பள்ளி முதல்​வர் ​ ஆர்.நட​ரா​ஜன் வியா​ழக்​கி​ழமை செய்​தி​யா​ளர்​க​ளி​டம் கூறி​யது:​ ​

                                      அண் ​மைக்​கா​ல​மாக கட​லூர் நக​ரில் மாடிக் கட்​ட​டங்​கள்,​ ஆற்​றுப் பாலங்​க​ளின் கீழ்​ப​கு​தி​கள் உள்​ளிட்ட பல இடங்​க​ளில் ராட்​சத தேனீக்​கள் கூடு கட்​டி​யது கண்​டு​பி​டிக்​கப்​பட்டு தீய​ணைப்​புத் துறை​யி​ன​ரால் அ ழிக்​கப்​பட்​டது.

                                 கா​டு​கள் அழிந்து வரு​வ​தால் தேனீக்​கள் அவற்​றின் வாழ்​வி​டங்​களை விட்டு நகர்ப் புறங்​க​ளுக்கு வரு​கின்​றன. ​

                             இந் ​தத் தேனீக்​கள் பற்றி எம் பள்ளி மாண​வர்​கள் பல மாதங்​கள் ஆய்வு செய்​த​னர். வாயு மண்​ட​லத்​தில் உள்ள கார்​பன் வாயுவை உட்​கொண்டு தேனீக்​கள் கூடு​கட்​டு​வது கண்​டு​பி​டிக்​கப்​பட்​டது.

                                         அ​தைத் தங்​கள் ஆய்வு அறிக்​கை​யில் மாண​வர்​கள் சமர்ப்​பித்​த​னர். புவி வெப்​பம் அடை​யக் கார்​பன் கார​ணம் ஆகி​றது. எனவே தேனீக்​கள் வாயு​மண்​ட​லத்​தில் உள்ள கார்​பனை உறிஞ்சி,​ கூடு​கள் கட்​டு​வ​தன் மூலம் புவி வெப்​பம் அடை​வதை,​ கணி​ச​மா​கக் குறைக்​கி​றது என்​பது மாண​வர்​கள் ஆய்​வில் கண்​ட​றி​யப் பட்​டுள்​ளது. ​  தேனீக்​களை வீட்​டுக்கு வீடு வளர்ப்​பதை ஊக்​கு​விப்​ப​தன் மூலம்,​ புவி வெப்​ப​ம​டை​வ​தைத் தடுக்க முடி​யும் என்​பதை நிரூ​பித்​துக் காட்​டிய மாண​வர்​க​ளின் கட்​டுரை,​ குஜ​ராத் மாநி​லம் ஆம​தா​பாத்​தில் டிசம்​பர் 23-ம் தேதி நடக்க இருக்​கும் தேசிய அறி​வி​யல் மாநாட்​டில் சமர்ப்​பிக்​கப்​ப​டும். 

                             க​ட​லூ​ரில் இருந்து மாண​வர்​க​ளின் ஆய்வு அறிக்கை ஒன்று தேசிய மாநாட்​டுக்​குத் ​ தேர்வு செய்​யப்​பட்​டது இதுவே முதல் முறை​யா​கும் என்​றார் முதல்​வர். ஆய்வு அறிக்​கை​யைச் சமர்ப்​பித்த மாண​வர்​களை பள்​ளித் தாளா​ளர் டாக்​டர் கி.ராஜேந்​தி​ரன் முதல்​வர் ஆர்.நட​ரா​ஜன் ஆகி​யோர் பாராட்​டி​னர்.

Read more »

லாக்​க​ரில் இருந்த 51 பவுன் நகை மோசடி

சிதம் ​ப​ரம்,​ டிச. 3: 
     
     சிதம்​ப​ரத்​தில் இறந்து போன​வர் பெய​ரில் வங்கி லாக்​க​ரில் வைத்​தி​ருந்த ரூ.5 லட்​சம் மதிப்​பி​லான நகை​களை மோசடி செய்​த​தாக வங்கி மேலா​ளர் உள்​ளிட்ட 3 பேர் மீது நகர போலீ​ஸôர் வழக்​குப் பதிவு செய்​துள்​ள​னர். ​÷சி​தம்​ப​ரத்தை அடுத்த வையூர் கிரா​மத்​தைச் சேர்ந்த ராம​சா​மி​யின் மனைவி தில்​லை​யம்​மாள் ​(82). ​ இவ​ரது மகள் ராஜ​லட்​சுமி சிதம்​ப​ரத்​தில் உள்ள வங்கி லாக்​க​ரில் கடந்த 12-3-2009-ல் 51 பவுன் நகையை பாது​காப்​பாக வைத்​தி​ருந்​தார்.
 
                இந்​ நி​லை​யில் ராஜ​லட்​சுமி திடீ​ரென இறந்​து​விட்​டார்,​ லாக்​க​ருக்கு வாடகை செலுத்​து​மாறு ராஜ​லட்​சுமி பெய​ருக்கு வங்​கியி​லி​ருந்து கடி​தம் வந்​துள்​ளது. அந்த கடி​தத்​து​டன் தில்​லை​யம்​மாள் வங்​கிக்​குச் சென்று தனது மகள் பெய​ரில் உள்ள லாக்​கரை திறந்து பார்த்​த​போது அதில் இருந்த 51 பவுன் நகை​கள் இல்​லா​தது கண்டு அதிர்ச்​சி​யுற்​றார்.
  
                    இது குறித்து வங்கி மேலா​ள​ரி​டம் கேட்ட போது அந்த நகை​களை தில்​லை​யம்​மா​ளின் ​ பக்​கத்து வீட்​டில் வசிக்​கும் சோமு,​ வாங்​கிச் சென்​று​விட்​ட​தாக தக​வல் தெரி​வித்​துள்​ளார்.
 
                  இது குறித்து தில்​லை​யம்​மாள் தனது மகள் ராஜ​லட்​சுமி பெய​ரில் லாக்​க​ரில் வைத்​தி​ருந்த நகை​களை சோமு,​ இந்​திரா ஆகி​யோர் மோசடி செய்து எடுத்​துச் சென்​ற​தா​க​வும்,​ அவர்​க​ளி​டம் நகை​களை அளித்த வங்கி மேலா​ளர் ஆகி​யோர் மீதும் நட​வ​டிக்கை எடுக்​கு​மாறு புகார் அளித்​தார்.
 
                  ந​கர போலீ​ஸôர் 3 பேர் மீது வழக்​குப் பதிந்து சோமுவை கைது செய்​த​னர். மேலும் இந்​திரா,​ வங்கி மேலா​ளர் உள்​ளிட்​டோரை தேடி வரு​கின்​ற​னர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior