உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், செப்டம்பர் 28, 2010

கடலூரில் ரிசர்வ் வங்கியின் புதிய நாணயங்களை கொடுத்து : வியாபாரிகளிடம் மோசடி அதிகரிப்பு

கடலூர்: 

               ரிசர்வ் வங்கியில் வழங்கப்படும் சில்லறை நாணயங்களை வைத்து "கோல்மால்' செய்து, கடைக்காரர்களை ஏமாற்றி வரும் சம்பவம் கடலூரில் அதிகரித்துள்ளது. பெரிய வியாபார நிறுவனங்கள் சில்லறை தட்டுப்பாட்டை போக்க ரிசர்வ் வங்கி ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் நாணயங்களை கிலோ கணக்கில் வழங்கி வருகிறது.  

               அதே போல வங்கிக் கிளைகளுக்கு தேவையான சில்லறை நாணயங்களை ரிசர்வ் வங்கியில் கேட்டுப் பெறலாம்.  ரிசர்வ் வங்கி நாணயங்கள் அனுப்பும் "கோனி' பையை வைத்து ஒரு மோசடி கும்பல், கடலூரில் பல கடைக்காரர்களை ஏமாற்றியுள்ளது. கடந்த வாரம் நெல்லிக்குப்பம் சாலையில் உள்ள மருந்துக்கடைக்கு இரண்டு பேர் சில்லறை நாணயங்கள் அடங்கிய மூட்டை எடுத்து வந்தனர். ரிசர்வ் வங்கியில் இருந்து வாங்கிய நாணயங்கள் இவை. எங்களுக்கு தற்போது தேவையில்லாததால் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என்றனர்.  

               மருந்து கடைக்காரரும் புதிய நாணயம் தானே என ஆசைப் பட்டார். அந்த பையில் ஒரு ரூபாய் நாணயம் 10,000 என எழுதப்பட்டிருந்தது. இதை ரிசர்வ் வங்கி தான் எழுதியுள்ளது என நம்பி கடைக்காரர் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து சில்லறையை வாங்கியுள்ளார். அவர்கள் சென்ற பின் கோனிப் பையைப் பிரித்து நாணயத்தை எண்ணிப்பார்த்த போது தான் குட்டு வெளியானது. அந்த கோனிப்பையில் வெறும் 3,000 ரூபாய் மட்டுமே இருந்தது  கண்டு கடைக்காரர் திடுக்கிட்டார். அதன்பின் பையை சோதனை செய்ததில்  ஐந்து ரூபாய் நாணயம் 2,500 எண்ணிக்கைக்குப் பதிலாக ஒரு ரூபாய் நாணயம் நிரப்பப்பட்டிருந்தது. 

                     ரிசர்வ் வங்கியில் அச்சடிக்கப்பட்ட எழுத்துக்கள் உட்புறமாக திருப்பப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபோல் இன்னும் சில கடைகளில் மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இப்படியும் சிலர் மோசடியில் இறங்கியுள்ளனர். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வர் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

Read more »

அதிகாரிகளின் அலட்சியப் போக்கு பண்ருட்டியில் வளர்ச்சிப் பணிகள் பாதிப்பு

பண்ருட்டி: 

               பண்ருட்டி  நகராட்சியில் அதிகாரிகளின் அலட்சியப் போக்கு, அலுவலக நேரத்திற்கு வருகையின்மை போன்ற காரணங்களால் வளர்ச்சிப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பண்ருட்டி நகராட்சி  கமிஷனராக பணிபுரிந்த உமா மகேஸ்வரி கடந்த 3 மாதங்களுக்கு முன் மருத துவ விடுப்பில் சென்றார். 

                இதனால் விழுப்புரத்திலிருந்து வரும் பொறியாளர் சுமதிசெல்வி பொறுப்பு வகித்து வருகிறார். சுகாதார அலுவலர் ராஜேந்திரன் மன்னார்குடியிலிருந்தும், பணி மேற் பார்வையாளர் சாம்பசிவம் கள்ளக்குறிச்சியிலிருந்தும், கட்டட ஆய்வாளர் சேகர் ஆத்தூரிலிருந்தும், மேற்பார்வையாளர் மாஜினி கடலூரிலிருந்தும் வருகின்றனர். அதிகாரிகள் அனைவரும் வெளியூரிலிருந்து வருவதால் தினமும் காலதாமதமாக காலை 11 மணிக் கும், மாலை 5 மணிக்கே சென்று விடுவதும் வழக கம். 

                வாரம் தோறும் சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் வெள்ளிக்கிழமை மதியமே சென்று விடுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் ஞானதீபம் பணியின் போது குடிபோதையில் இருப்பதால் வருகை பதிவேட்டில் கையெழுத்து போடுவது மட்டுமே இவரது பணியாக உள்ளது. ஒட்டுமொத்த அதிகாரிகளின் அலட்சியப் போக் கால் பண்ருட்டியில் 33 வார்டுகளிலும் சுகாதார, வளர்ச்சிப் பணிகள், சான் றிதழ் வழங்குவதில் காலதாமதம், திட்டங்கள் தயாரிப்பது உள்ளிட்ட பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

                    பொதுமக்கள் தங்கள் குறைகளை கூறச் சென்றால் அதிகாரிகளை பார்க்க முடிவதில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது. அதிகாரிகளே சரியில் லாததால் சில ஊழியர்கள் பணிக்கே வராமல் வருகைப் பதிவேட்டில் பதிந்து அதிகாரிகளுடன் தகராறில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து தி.மு.க., கவுன்சிலர்கள்,  காங்கிரஸ் துணை சேர்மன்  உள்ளிட்டோர் பல கூட்டங்களில்  அதிகாரிகளை  கண்டித்தும் எதைப் பற்றியும் கவலைப் படாமல் உள்ளனர். அதிகாரிகள் முறைகேடுகளை சேர்மன் சிறிதும் கண்டிப்பதில்லை. கலெக்டர் மற்றும் நகராட்சி நிர்வாக அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பண்ருட்டி நகராட்சியை காப்பாற்ற முடியும்.

Read more »

கடலூர் சில்வர் பீச்சில் அண்ணாமலை பல்கலை மாணவர்கள் துப்புரவு பணி

கடலூர் : 

                கடலூர் சில்வர் பீச் சில் அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்கள் துப்புரவு பணி மேற்கொண்டனர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக நாட்டு நலப்பணித் திட் டம் சார்பில் கடலோர சுற் றுப்புறச் சூழல் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று துவங்கியது.  துணைவேந்தர் ராமநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பதிவாளர் ரத்தினசபாபதி முன்னிலை வகித்தார். 

                   நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ் தலைமையில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். பரங்கிப்பேட்டை, சாமியார்பேட்டை, குமாரபேட்டை கடற்கரைகளை தூய்மைபடுத்தி நேற்று கடலூர் வந்தனர். தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் செயின்ட் ஜோசப் கல்லூரி பேராசிரியை ஜெயந்தி ரவிச்சந்திரன் தலைமையில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் கடலோர பகுதியில் விழிப்புணர்வு பலகையை நட்டு துப்புரவு பணி மேற்கொண்டனர்.  ஊர்வலத்தில் புல முதல்வர்கள் துறைத் தலைவர்கள் மக்கள் தொடர்பு அதிகாரி மற்றும் பல் கலைக்கழக ஊழியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Read more »

திட்டக்குடி அருகே பாலம் பழுதால் போக்குவரத்து துண்டிப்பு: 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பாதிப்பு

திட்டக்குடி:

                திட்டக்குடி அருகே பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட ஓடைப்பாலம் பழுடைந்து உடையும் நிலையில் இருப்பதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிப்படைந்துள்ளனர். 

                திட்டக்குடி அடுத்த புதுக்குளம் கிராமம் வழியாகச் செல்லும் வெள்ளவாரி ஓடை மீது பிரிட்டிஷ் காலத்தில் சிறிய அளவிலான பாலம் கட்டப்பட்டது. திட்டக்குடி முதல் பெருமுளை, சிறுமுளை, புதுக்குளம், நாவலூர், குமாரை, நெடுங்குளம் வழியாக வேப்பூர் மற்றும் விருத்தாசலம் வரை இணைப்பு சாலை செல்கிறது. இவ்வழியாக திட்டக்குடிக்கு பள்ளி மாணவ, மாணவிகளும் விருத்தாசலம், தொழுதூர், பெரம்பலூர் பகுதிகளுக்கு பொறியியல் கல்லூரி  மாணவ, மாணவிகள் மட்டுமின்றி தினசரி அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்குச் செல்வோர், கிராம மக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் செல்கின்றனர். 

                கடந்த ஆண்டு திட்டக்குடி முதல் நாவலூர் வரை 83 லட்சம் ரூபாய் மதிப்பீட் டில் சாலை சீரமைப்பு பணி நடந்தது. ஆனால் பழுதடைந்த நிலையில் காணப்பட்ட வெள்ளவாரி ஓடைப்பாலத்தை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இது குறித்து புதுக்குளம் உள் ளிட்ட பல்வேறு கிராம மக்கள் ஒன்றிய அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 10 நாட்களுக்கு முன் பெய்த மழையின் காரணமாக பாலம் முற்றிலும் வலுவிழந்து உடைந்து சரிந்தது. தற்காலிகமாக இரு சக்கர வாகனம், மாட்டு வண்டிகள் மட்டும் சென்று வரும் அளவிற்கு சீரமைக்கப்பட்டது. 

               பாலம் முற்றிலுமாக உடைந்து விடும் நிலையில் இருப்பதால் கடந்த 10 நாட்களாக பஸ் போக்குவரத்து உட்பட கனரக வாகனங்கள் செல் வது நிறுத்தப்பட்டது. திட் டக்குடியிலிருந்து நாவலூர் வரை செல்லும் தடம் எண் 4 அரசு டவுன் பஸ் புதுக்குளம் கிராமத்திலேயே நிறுத்தப்படுகிறது. பாலத்தின் மறுமுனையிலுள்ள கிராம மக்கள் மூன்று முதல் நான்கு கி.மீ., தூரம் நடந்து வந்து பஸ் ஏற வேண்டியுள்ளது.

                      இதனால் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள்  கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளனர். கிராமப்புற மாணவர்களின் கல்வி மற்றும் பொதுமக்கள், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பழுதான பிரிட் டிஷ் காலத்தில் கட்டிய ஓடை பாலத்தை முழுமையாக அகற்றி, போதிய நிதி ஒதுக்கீடு செய்து போர்க் கால அடிப்படையில் புதிய பாலம் கட்டித்தர  மாவட்ட நிர்வாகம்  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Read more »

கடலூரில் குடியிருப்பு பகுதியில் தாழ்வாக செல்லும் மின் கம்பியால் விபத்து அபாயம்: மக்கள் அச்சம்

கடலூர் : 

                 கடலூரில் குடியிருப்பு பகுதியில் மின் கம்பி மிகவும் தாழ்வாக செல்வதால் எந்த நேரத்தில் விபத்து ஏற்படுமோ என மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். 

                கடலூர் நகரின் மையப்பகுதியான சரஸ்வதி நகரின் 5வது தெருவில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுப்பதற்காக மின் கம்பங்கள் வழியாக மின் பாதை அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக மின் பாதை சாலையிலிருந்து 12 அடி உயரத்தில் அமைக்கப்படும். ஆனால் சரஸ்வதி நகரின் 5வது தெருவில் மின் பாதை கம்பிகள் மிக தாழ்வாக அமைக்கப்பட்டுள்ளது. 

                 மேலும் இந்தத் தெருவில் ஒன்னரை அடி உயரத்தில் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால்  மின் கம்பி மிகக் குறைந்த உயரத்தில் உள்ளது. தெருவில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் விளையாடுகையில் துள்ளிக் குதித்தாலோ அல்லது பெரியவர்கள் வீட்டிற்குத் தேவையான கழி, சொரடு பேன்றவற்றை சற்று கவனக்குறைவாக எடுத்துச் சென்றாலோ மின் கம்பியில் சிக்கும் ஆபத்து உள்ளது. அசம்பாவிதங்கள் நடப்பதற்கு முன்பாக மின்வாரிய அதிகாரிகள் இப்பகுதியை பார்வையிட்டு, மின் கம்பிகளை உயர்த்தி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

விருத்தாசலம் பகுதியில் விளை நிலங்களில் கழிவுநீர் விளைச்சல் பாதிப்பு

விருத்தாசலம் : 

             விருத்தாசலம் மேட்டுக் காலனி பகுதியில் விளை நிலங்களில் கழிவுநீர் பாய்ந்து வருவதால் நிலத் தின் தன்மை மாறுபடுவதோடு விளைச்சல் பாதிக்கப்படுகிறது. விருத்தாசலம் ஆலிச்சிக்குடி ரோடு மேட்டுக் காலனி பகுதியில் புறவழிச்சாலை அருகில் விளை நிலங்கள் உள்ளது. 

                  இங்கு 20 ஏக்கர் அளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. நகரத்தின் முக்கிய பகுதிகளில் இருந்து கடைவீதி வழியாக வரும் கழிவு நீர் விளை நிலங்களில் பாய்கிறது. தொடர்ந்து சில ஆண்டுகளாக கழிவுநீர் பாய்வதால் நிலத்தின் தன்மை மாறி உற்பத்தி பாதிக்கப்படுகிறது. மேலும் கழிவுநீரில் பன்றி, மாடு உள்ளிட்டவைகள் மேய்வதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. விவசாயிகள், பொதுமக்கள் நலன் கருதி விளை நிலங்களில் கழிவுநீர் பாய்வதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் மறியல்: 650 பேர் கைது


 
நெய்வேலி:
 
             என்எல்சி 2-ம் சுரங்கம் முன் சாலைமறியலில் ஈடுபட்ட 22 பெண்கள் உள்பட 650 ஒப்பந்தத் தொழிலாளர்களை மந்தாரக்குப்பம் போலீஸôர் திங்கள்கிழமை கைது செய்தனர்.சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் செப்டம்பர் 19-ம் தேதி இரவுப்பணி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
 
                 இப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியாக சென்னையில் உள்ள மண்டல தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் எம்.எம்.ஜகன்நாதராவ் முன்னிலையில் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் நிர்வாகத்துறை அதிகாரிகள் பங்கேற்ற சமரசப் பேச்சுவார்த்தை 3 முறை நடைபெற்றது.இப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததைத் தொடர்ந்து, தொழிற்சங்கத்தினர் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தம் நடவடிக்கைகளில் இறங்கினர். ஏஐடியுசி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் சார்பில் திங்கள்கிழமை 2-ம் சுரங்கம் முன் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
 
               இதன்படி திங்கள்கிழமை மந்தாரக்குப்பம் பஸ் நிலையத்தில் இருந்து தொழிலாளர்கள் ஊர்வலமாகப் புறப்பட்டு, 2-ம் சுரங்க வாயிற்பகுதிக்குச் சென்றதும் அங்கு மறியலில் ஈடுபட முயன்றனர். இதைத்தொடர்ந்து நெய்வேலி டிஎஸ்பி மணி தலைமையிலான போலீஸôர் தொழிலாளர்கள் அனைவரையும் கைது செய்தனர்.மறியல் போராட்டத்துக்கு ஏஐடியுசி மாவட்டச் செயலர் சேகர் தலைமை வகித்தார். 
 
                      சங்கத்தின் ஏனைய நிர்வாகிகள், இளஞ்செழியன், குப்புசாமி, பொன்னுசாமி  உள்ளிட்டோர் ஊர்வலத்தை வழிநடத்திச் சென்றனர். கைது செய்யப்பட்ட அனைவரும்  மாலையில் விடுவிக்கப்பட்டனர்.இதேபோன்று தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி நகரின் முக்கிய வீதிகளில் மனிதசங்கிலிப் போராட்டம் நடைபெற்றது. 
 
இன்று மீண்டும் பேச்சு:
 
                   என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் மேற்கொண்டுள்ள காலவரையற்ற வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், சென்னையில் திங்கள்கிழமை மண்டல தொழிலாளர் நல ஆணையர் ஜகன்நாதராவ் முன்னிலையில் நடந்த சமரசப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கச் செயலர் வெங்கடேசன் தெரிவித்தார். என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள், சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி செப்டம்பர் 19 இரவுப்பணி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
               இப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கத்தில் சென்னையில் உள்ள மண்டல தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் வியாழக்கிழமை ஆணையர் எம்.எம்.ஜகன்நாதராவ் முன்னிலையில் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் நிர்வாகத்துறை அதிகாரிகள் பங்கேற்ற சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.பேச்சுவார்த்தையின் போது நிர்வாகத் தரப்பில், உடனடியாக ஸ்டிரைக்கை வாபஸ் பெறுங்கள், பின்னர் பேசித் தீர்வுகாணலாம் என்று கோரியதாகக் கூறப்படுகிறது. இதை தொழிற்சங்க நிர்வாகிகள் ஏற்க மறுத்து பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறியதாகவும், செவ்வாய்க்கிழமை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பதாகவும் வெங்கடேசன் தெரிவித்தார்.
 
                          பேச்சுவார்த்தையின் போது நிர்வாகத் தரப்பில்  துணைப் பொதுமேலாளர் பெரியசாமி, கூடுதல் முதன்மை மேலாளர் அறிவு, முதுநிலை மேலாளர் சோமு உள்ளிட்டோர் இருந்தனர்.

Read more »

Irulas observe fast in Cuddalore

Seeking better amenities:Irulas observing fast in front of the Cuddalore Collectorate on Monday.

CUDDALORE: 
       
           The Irula families, residing at various places in Cuddalore district, gathered in front of the Collecatorate here and observed a day-long fast on Monday in support of their demands.

             Led by State president of the Sarpam Irula Workers' Association K.Srinivasan and district president S.Devadoss, they urged the authorities to provide basic amenities in their habitations located in all the six blocks of the district such as Cuddalore, Panruti, Chidambaram, Kattumannarkudi, Vriddhachalam and Thittakudi. They sought identity cards under the Kalaignar Housing Scheme, ration cards and Electors Photo Identity Cards.

            They alleged that the officials were denying community certificates to their wards even after submission of valid supporting documents. The tribal leaders further stated that adequate protection should be given to tribal women to safeguard their rights and to save them from sexual harassment. They sought permanent rehabilitation measures for the Irulas living in the coastal areas, as this acquired urgency particularly in the post-tsunami period. Towards evening, a section of the Irulas grew restive and started squatting on the road to block vehicular traffic. The officials intervened and persuaded them to give up the road blockade.

Read more »

Kiln owners told to supply 19 crore bricks before year-end

Collector P.Seetharaman holding a meeting with the brick kiln owners in Cuddalore on Monday. 
 
CUDDALORE: 

                With the construction works under the Kalaignar housing scheme picking up momentum, the Cuddalore district administration is gearing to meet the requirements of construction materials.

          Cuddalore has the second largest number of 2,10,758 huts, next to Villupuram, in the State and of which 1,26,735 have been found eligible for conversion into concrete houses under the scheme. But there is an enormous requirement of building materials for the purpose. For instance, for the construction of 26,119 houses in the first phase a total number of 19 crore bricks would be required this year.

              In a meeting convened here on Monday by District Collector P.Seetharaman, the brick kiln owners expressed certain constraints in meeting the demand. Since, rainy season was ahead for the next three months it would be a difficult task to turn out so many bricks within the stipulated time. Moreover, the brick industry was already facing labour shortage and hence, it would be a gigantic task to mobilise the workforce as well as funds as it would require huge investment.

            The Collector told them that this was the opportune time for the kiln owners to get bulk orders from the government. They could also use the existing stocks to fulfil the demand. Mr. Seetharaman also suggested usage of flyash in brick production and promised to get loan, with subsidy, from the Khadi and Village Industries Board for the purpose. The Collector even said that if there was any slippage in the supply position he was even contemplating to tap the resources from other districts such as Namakkal and Thanjavur where the number of houses to be built under the scheme was comparatively less.

                  The Collector underscored the point that as a supplementary measure the district administration had already trained members of about 175 Self-Help Groups in brick making and preparing the iron works for the proposed constructions. For the purpose, a loan of Rs 7 crore was given away to these SHGs, at the rate of Rs 4 lakh each. The Collector said that the kiln owners could enter into a memorandum of understanding with the respective Panchayat Presidents and the Block Development Officers for determining the number of bricks required and the price factor.

                      The market sources said that in anticipation of a huge demand for bricks under the scheme the prices of bricks had gone up significantly from Rs 2,300 to Rs 4,000 (per 1,000). The construction of private buildings would thus be hit both by the price increase in construction materials and short supply of labour, the sources added.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior