உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மே 04, 2011

பண்ருட்டியில் பலா சீசன் தொடங்கியது


பண்ருட்டியில் இருந்து வெளியூருக்கு கொண்டு செல்வதற்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ள பலாப்பழங்கள்.
 
பண்ருட்டி:
 
           பலாப்பழம் சீசன் தொடங்கியுள்ளதால் பண்ருட்டி சந்தையில் பலாப்பழத்தின் வரத்து அதிகரித்துள்ளது. சீசன் தொடக்கம் என்பதால் சராசரி அளவுள்ள ஒரு பழத்தின் விலை ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது.
 
              பலாப்பழம் என்றவுடன் அனைவரின் நினைவுக்கு வருவது பண்ருட்டி. பண்ருட்டி கெடில ஆற்றுக்கு தென்பகுதியில் வளம் நிறைந்த செம்மண் நிலப்பகுதியில் அடர்ந்து வளர்ந்துள்ள முந்திரி காடுகளுக்கு இடையேயும், வீட்டுத் தோட்டத்திலும் பலா மரம் வளர்க்கப்படுகிறது. இப்பகுதியில் விளையும் பலாப்பழம் சுவை அதிகம் கொண்டது. இதனால் தமிழகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் பண்ருட்டி பலாப்பழத்தை விரும்புவர். பண்ருட்டியில் இருந்து நாள்தோறும் டன் கணக்கிலான பலாப்பழங்கள் லாரிகள் மூலம் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
 
இதுகுறித்து பலா விவசாயிகள் சீரங்குப்பம் ஆர்.மணிவண்ணன், சாத்திப்பட்டு ஏழில் கூறியது: 
 
               மார்ச் மாதம் முதல் ஜுன் மாதம் வரை பலாப்பழம் சீசன். அவ்வப்போது காய்கள் பழுத்துள்ளதா, பூச்சி தாக்கியுள்ளதா, களவு போகாமல் உள்ளதா என பார்க்க வேண்டும். குறைவான எண்ணிக்கையில் பலா மரம் வைத்துள்ளவர்கள் அவர்களே பராமரித்துக் கொள்வர். அதிக அளவில் மரம் வைத்துள்ளவர்கள் குத்தைகைக்கு விட்டுவிடுவர்.குத்தகை விடும்போது மரத்தின் தரம், காயின் சுவை மற்றும் அளவு ஆகியவற்றை கணக்கிட்டு பிஞ்சு ஒன்று ரூ.30 முதல் 40 வரையில் விலை பேசி ஒப்பந்தம் செய்வர். மரத்தின் அளவு மற்றும் வயதுக்கு தகுந்தால் போல் 20 முதல் 50 பிச்சுகள் வரைவிட்டுவிட்டு. எஞ்சிய பிஞ்சுகளை கழித்துவிடுவர். அதிக அளவு பிஞ்சுகளை மரத்தில் விட்டால் மலட்டு தன்மை அடைவதுடன் சில சமயத்தில் மரம் இறந்துவிடும். இன்னும் ஓரிரு வாரத்தில் முழு அளவில் பலாப்பழம் அறுவடை தொடங்கிவிடும் என கூறினர்.
 
இது குறித்து பலாப்பழம் கமிஷன் மண்டி வைத்துள்ளவர்கள் கூறியது: 
 
               விவசாயிகள் மற்றும் குத்தகைதாரர்கள் அறுவடை செய்து கொண்டு வரும் பலாப்பழங்களை பெற்று விற்று கொடுத்து வருகின்றோம். இதற்கு ஊதியமாக குறிப்பிட்ட அளவு கழிவு பெற்றுக் கொள்வோம். பண்ருட்டியில் இருந்து தமிழகத்தின் பல பகுதிகளுக்கும், மும்பை, பெங்களூர், ஆந்திரம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு டன் கணக்கில் ஏற்றுமதி செய்து வருகின்றோம். மும்பையில் பலாப்பழத்தில் ஜூஸ் அதிக அளவு விற்பனை ஆவதல் அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

Read more »

8, 9-ம் வகுப்பு சமச்சீர் கல்வி புத்தகங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டன

              
               சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட 8, 9-ம் வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள் பள்ளிக் கல்வித் துறையின் இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன.

           மாணவர்களும், ஆசிரியர்களும் இந்தப் புத்தகங்களை புதன்கிழமை முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின் கீழ் புத்தகங்கள் வெளிவருவதில் தாமதம் ஏற்படுவதாக மாணவர்களும், பெற்றோர்களும் கவலை தெரிவித்தனர். இதையடுத்து, பத்தாம் வகுப்பு புத்தகங்கள் இணையதளத்தில் ஏப்ரல் 21-ம் தேதி வெளியிடப்பட்டன. இந்தப் புத்தகங்களை ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் பார்க்கவும், பதிவிறக்கமும் செய்ததால் இணையதளம் முடங்கியது. 

             இந்தப் பிரச்னை சரிசெய்யப்பட்டு, இப்போது அனைவரும் பதிவிறக்கம் செய்யும் வகையில் பத்தாம் வகுப்பு புத்தகங்கள் இணையதளத்தில் கிடைக்கின்றன.இந்த நிலையில், தனியார் பள்ளி நிர்வாகிகள் சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களை உடனடியாக வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.அதைத்தொடர்ந்து, சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட 8, 9-ம் வகுப்பு பாடப்புத்தகங்களும் பள்ளிக் கல்வித் துறையின்  இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன 

              .இந்தப் புத்தகங்களை இணையதளத்தில் பார்ப்பதில் சிறிய பிரச்னை ஏற்பட்டுள்ளது. இது புதன்கிழமை காலைக்குள் சரிசெய்யப்பட்டுவிடும். அதன்பிறகு, மாணவர்களும், ஆசிரியர்களும் புத்தகங்களைப் பார்வையிடலாம்; பதிவிறக்கமும் செய்துகொள்ளலாம்' என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.





Read more »

கடலூரில் கடல் சீற்றம்


திடீரென ஏற்பட்ட கடல் அரிப்பினால் கடலூர் தாழங்குடா மீனவர் பகுதியில் உள் புகுந்த கடல்நீர்.
கடலூர்:

                     கடல் சீற்றம் காரணமாக, கடலூர் மீனவர்கள் செவ்வாய்க்கிழமை மீன் பிடிக்கக் கடலுக்குள் செல்லவில்லை.கடல் வளத்தைப் பெருக்கும் வகையில், தற்போது கடலில் மீன்பிடிக்க பெரிய படகுகளுக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

            கட்டுமரங்கள் மற்றும் சிறிய கண்ணாடி இழைப் படகுகள் வழக்கம்போல் மீன் பிடித்து வருகின்றன. கடலூர் மாவட்டத்தில் கட்டுமரங்கள் மற்றும் கண்ணாடி இழைப் படகுகள் சுமார் 25 ஆயிரம் உள்ளன. கடலூரில் மட்டும் 10 ஆயிரம் படகுகள் உள்ளன.இந்நிலையில் கடலூர் மாவட்டக் கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றம் 2 நாள்களாக அதிகமாக உள்ளது. இதனால் திங்கள்கிழமை சுமார் 20 சதவீத படகுகளே மீன் பிடிக்கச் சென்றன. செவ்வாய்க்கிழமை படகுகள் முற்றிலும் மீன் பிடிக்கச் செல்லவில்லை என்று மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் சுப்புராயன் தெரிவித்தார்.கடல் சீற்றம் அதிகரித்து உள்ளதால் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை என்றும், பொதுவாக 10 நாள்களாக கடலில் மீன்கள் அதிகம் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார். 

               கடல் சீற்றம் அதிகரித்து இருப்பதான் காரணமாக, தாழங்குடா, சிங்காரத்தோப்பு, சொத்திக்குப்பம் கடலோரப் பகுதிகளில் பெருமளவு கடல் அரிப்பு ஏற்பட்டு உள்ளது. தாழங்குடா பகுதியில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த, 100 அடி தூரம் நிலப் பரப்பு முழுவதும் கடல் நீரில் மூழ்கி விட்டது என்றும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த படகுகள் பல கடலுக்குள், இழுத்துச் செல்லப்பட்டதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர். சிங்காரத்தோப்பு, சொத்திக்குப்பம் பகுதிகளில் கடற்கரையோரம் உள்ள சவுக்குத் தோப்புகளிலும் கடல் அரிப்பு ஏற்பட்டு, சவுக்கு மரங்கள் சாய்ந்து கிடப்பதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.

Read more »

நெய்வேலியில் எல்கேஜி சேர்க்கைக்கு ரூ.15 ஆயிரம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள்

நெய்வேலி:

               நெய்வேலியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் எல்கேஜி வகுப்புக்கு இந்த ஆண்டு ரூ.15 ஆயிரம் கட்டணம் நிர்ணயித்து வசூலிக்கப்படுவது பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

             நெய்வேலியில் என்எல்சி சார்பில் அரசு நிதியுதவியுடன் 3 மேல்நிலைப் பள்ளிகள், 2 உயர்நிலைப் பள்ளிகள், 5 நடுநிலைப் பள்ளிகளும், 6 தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மற்றும் ஒரு சிபிஎஸ்இ பள்ளி இயங்கி வருகிறது. இதில் என்எல்சி ஊழியர்களின் பிள்ளைகள் மற்றும் சுற்றுப்புறப் பகுதியைச் சேர்ந்த சுமார் 40 ஆயிரம் மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.  இந்நிலையில் மாநில அரசு கடந்த ஆண்டு முதல் சமச்சீர் கல்வியை அறிமுகப்படுத்தி, தனியார் பள்ளிகளுக்கான கட்டணங்களை நிர்ணயிக்க நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் ஒரு குழுவை நியமித்தது. அக்குழுவும் புதியக் கட்டணம் தொடர்பான பட்டியலை வெளியிட்டது. 

           ஆனால் புதிய கட்டணம் தங்களுக்கு பொருந்தவில்லை எனக்கூறி தமிழகத்தில் உள்ள 60 சதவீத பள்ளிகள் மேல்முறையீடு செய்தன.  இருப்பினும் மேல்முறையீடு தொடர்பாக ஆய்வு நடப்பதாகவும், தற்போது அறிவித்துள்ள கட்டணத்தையே அந்தந்த பள்ளிகள் வசூலிக்கவேண்டும் என குழு திட்டவட்டமாக கூறியது.  இந்நிலையில் நீதிபதி கோவிந்தராஜன் குழுவிலிருந்து விலகுவதாக திடீரென அறிவித்ததைத் தொடர்ந்து குழுவிற்கு நீதிபதி ரவிராஜபாண்டியன் தலைமையேற்றார்.  

             நீதிபதி ரவிராஜபாண்டியன் தலைமையிலான குழு புதியக் கட்டண விகிதம் தொடர்பாக ஆய்வு நடத்துவதாகவும், புதிய கட்டணம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என அறிவித்தது.  ÷இதனிடையே எல்கேஜி சேர்க்கைக்கு விண்ணப்பங்களை விநியோகித்த தனியார் பள்ளிகள், அவ்விண்ணப்பங்கள் மூலம் சேர்க்கையையும் முடித்துவிட்டன. இதர வகுப்பிற்கான கட்டணம் ஜூன் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என பெற்றோர்களுக்கு தகவல் அனுப்பிவருகின்றனர்.  

             எல்கேஜி சேர்க்கைக்கு கட்டணமாக ரூ.15 ஆயிரம் வசூலித்துள்ளது ஒரு தனியார் பள்ளி. சில பெற்றோர்கள் இதை எதிர்த்து கேட்டபோது, "எங்கள் பள்ளியில் கட்டணம் இதுதான், விருப்பம் இருந்தால் சேர்த்துக்கொள்ளுங்கள், இல்லெயெனில் அட்மிஷன் கிடையாது' எனக் கூறிவிட்டார்களாம். இது தவிர, தற்போது ரூ.15 ஆயிரம் வசூலித்தது இல்லாமல் மேற்கொண்டு சிறப்பு வகுப்புகளுக்கான கட்டணம், ஆண்டு விழா உள்ளிட்டவைகளுக்கு தனியாக கட்டணம் செலுத்த உத்தரவாதம் அளிப்போருக்கு மட்டுமே அட்மிஷன் என்றும் புது நிபந்தனை விதித்துள்ளனராம்.  

            கடந்த ஆண்டு இதே தனியார் பள்ளிகள் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை மட்டுமே கட்டணம் வசூலித்து வந்தன. இந்த ஆண்டு அதிரடியாக இரு மடங்கு கட்டணங்களை உயர்த்தியுள்ளன.  இதனால் நெய்வேலி பள்ளிகளைக் கண்டாலே பெற்றோர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கல்வி கட்டணக் கொள்ளையை உடனடியாக தடுத்து நிறுத்த கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Read more »

கடலூரில் பாஸ்போர்ட் பெற போலிச் சான்றிதழ் தயாரித்து கொடுத்த 3 பேர் கைது

கடலூர்:

            பாஸ்போர்ட் பெறுவதற்கு, கடலூரில் போலியாக சான்றிதழ்கள் தயாரித்துக் கொடுத்ததாக, 3 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.  
 
              சிதம்பரம் அருகே பெராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (21). அவர் பாஸ்போர்ட் பெறுவதற்காக சில மாதங்களுக்கு முன் கடலூர் வந்தார். பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தபோது, அவரது பிறந்த தேதி, பள்ளி மாற்றுச் சான்றிதழிலும், பிறப்புச் சான்றிதழிலும் வித்தியாசமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. எனவே பாஸ்போர்ட் பெற முடியாத நிலை ஏற்பட்டது.  அவரை கடலூர் தாழங்குடாவைச் சேர்ந்த அரிகரன் (34) சந்தித்து, ரூ.1000 கொடுத்தால், பிறந்த தேதி வித்தியாசமாக இருக்கும் பிரச்னையை சரி செய்து தருவதாக தமிழ்ச்செல்வனிடம் கூறினார். அதன்படி தமிழ்ச் செல்வன் ரூ. 1000 கொடுத்தார்.  

              தமிழ்ச்செல்வனின் பிறந்த தேதி பிரச்னை, சரி செய்யப்பட்டு மீண்டும் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கப்பட்டது. சென்னை பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஆவணங்கள் பரிசீலிக்கப் பட்டதில் முறைகேடு நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சென்னை பாஸ்போர்ட் அலுவலர், இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு, கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்துக்குப் புகார் செய்தார். மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் ஆய்வாளர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்.  

             இதுதொடர்பாக தாழங்குடா அரிகரன் (கடலூர் பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு வருவோருக்கு மனு எழுதிக் கொடுப்பவர்), கடலூர் மஞ்சக்குப்பம் குமார் (61) தொடக்கக் கல்வி அலுவலகத்தில் உருதுப் பிரிவில் கடைநிலை ஊழியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்), புதுக்குப்பம் ஆனந்தகுமார் (36) (பத்திரப் பதிவு அலுவலகம் வருவோருக்கு மனு எழுதிக் கொடுப்பவர்) ஆகிய மூவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.  

             அவர்களிடம் இருந்து பல பள்ளிகளின் சீல்கள் (ரப்பர் ஸ்டாம்ப்), தலைமை ஆசிரியர்களின் சீல்கள் உள்ளிட்ட 26 வகையான சீல்களைப் போலீஸôர் கைப்பற்றினர். இவர்கள் மூவரும் 60 பேருக்கு போலி திருமண பதிவுச் சான்றிதழ் தயாரித்துக் கொடுத்து இருப்பதாகவும், விசாரணையில் தெரிய வந்துள்ளது.  கைதான அரிகரன் உள்ளிட்ட மூவரும் கடலூர் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாள் காவலில் காவலில் வைக்கப்பட்டனர். பெராம்பட்டு தமிழ்ச் செல்வனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். 

Read more »

கடலூர் மாவட்டத்தில் பொது மேற்பார்வையாளர் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை

கடலூர்:

            வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் நடைபெறும் வெற்றி ஊர்வலங்கள், பட்டாசு வெடித்தல் உள்ளிட்ட நிகழ்வுகள், வேட்பாளர்களின் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும் என்று, தேர்தல் ஆணையம் அறிவித்து இருப்பதாக, கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் கூறினார்.  13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. 

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை குறித்து ஆட்சியர் செவ்வாய்க்கிழமை கூறியது:  

           கடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, நெய்வேலி ஆகிய 4 தொகுதிகளுக்கு கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியிலும், சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் தொகுதிகளுக்கு, பு.முட்லூர் அரசுக் கலைக் கல்லூரியிலும், திட்டக்குடி, விருத்தாசலம் தொகுதிகளுக்கு, விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி வளாகத்திலும் 13-ம் தேதி காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். காலை 5 மணி முதல் முன்னேற்பாடுகள் தொடங்கும். பொது மேற்பார்வையாளர் முன்னிலையில் வாக்கு எண்ணுவோர் நியமிக்கப்படுவர்.  

             தபால் வாக்குகள் எண்ணிக்கை காலை 8 மணிக்கும், வாக்குப் பதிவு இயந்திரங்களின் வாக்குகள் காலை 8-30 மணிக்கும் தொடங்கும். வாக்கு எண்ணிக்கையில் 300 பேர் ஈடுபடுவார்கள். வாக்கு எண்ணிக்கையில் ஒவ்வொரு மேஜையிலும் ஒரு வாக்கு எண்ணும் அலுவலர், ஒரு உதவி அலுவலர், ஒரு நுண் பார்வையாளர் ஆகியோர் பணிபுரிவர். வாக்கு எண்ணும் அலுவலர்கள் 13-ம் தேதி காலையில்தான் குலுக்கல் முறையில் தேர்ந்து எடுக்கப்படுபவர். குலுக்கல் முறையில்தான் வாக்குப் பதிவு இயந்திரங்களும் மேஜைகளில் கொண்டு வந்து வைக்கப்படும்.  

             வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்கும் முகவர் பணிக்கு வருவோர், காலை 7 மணிக்கே புகைப்படத்துடன் விண்ணப்பத்தை அளித்துவிட வேண்டும். குற்றப் பின்னணி உள்ளவர்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மேயர்கள், உள்ளாaட்சி அமைப்புகளின் தலைவர்கள், அரசு ஊழியர்கள் முகவர்களாக நியமிக்கப்படக்கூடாது. முகவர்கள், வாக்கு எண்ணும் பணிபுரிவோர், வாக்கு எண்ணிக்கை தொடங்கு முன், ரகசியம் காக்க, உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். ரகசியம் காக்கத் தவறினால், 3 மாதம் சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.  

            வாக்கு எண்ணிக்கை முழுவதும் வெப் கேமராவிலும் விடியோவிலும் பதிவு செய்யப்படும். வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு 200 மீட்டர் வரைதான் வாகனங்கள் அனுமதிக்கப்படும். பொதுமக்கள் 100 மீட்டர் தூரம் வரை அனுமதிக்கப்படுவர். வாக்கு எண்ணிக்கைக்கு வரும் முகவர்கள் குடிபோதையில் இருந்தால் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் பால்பாயின்ட் பேனா மட்டுமே எடுத்துவர அனுமதிக்கப்படுவர். ஊற்றுப்பேனா, கூர்மையான ஆயுதங்கள் எடுத்துவர தடை விதிக்கப்பட்டு உள்ளது.  

            100 மீட்டர் தூரம் வரை அனுமதிக்கப்படும் பார்வையாளர்களும் குடிபோதையில் இருந்தால் அப்புறப்படுத்தப்படுவர். இதுவரை 2,064 தபால் வாக்குகள் இதுவரை வாக்குப் பெட்டிகளில் போடப்பட்டு உள்ளன. வாக்குகள் எண்ணப்பட்டதும் வாணவெடிகள், பட்டாசுகள் வெடித்தல், சாப்பாடு போடுதல், வெற்றி ஊர்வலங்கள் நடத்துதல் போன்ற செலவினங்களும் வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும். அதனால்தான் வேட்பாளர்கள் 13-6-2011 வரை செலவு கணக்கு தாக்கல் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது என்றார் ஆட்சியர்.

Read more »

கடலூர் நகராட்சிக் குடிநீர் சுவை குறைந்தது ஏன்?

கடலூர்:

             கடலூரில் 10 ஆண்டுகளுக்கு முன், பெண்ணை ஆற்றில் ஆழ்குழாய்க் கிணறுகள் அமைத்து குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.  

               கடலூரில் ஆறுகள், வாய்க்கால்கள் கடலில் சங்கமிக்கும் வழியாகவும், உப்பங்கழிகள் வழியாகவும், கடல் நீர் சுமார் 15 கி.மீ. தூரம் வரை, நகருக்குள் புகுந்து உள்ளது. ஆறுகளில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை, தமிழக அரசு கண்டு கொள்ளவே இல்லை.  இதனால் கடலூரில் நிலத்தடி நீர், பெரும்பாலும் உவர் நீராக மாறிவிட்டது. பெண்ணை ஆற்றில் போடப்பட்டு இருந்த ஆழ்குழாய்க் கிணறுகளில் தண்ணீர் சுவை குன்றியது. எனவே மாற்றாக கேப்பர் மலையில் ஆழ்குழாய் அமைத்து குடிநீர் வழங்கும் திட்டம், 8 ஆண்டுகளுக்கு முன் ரூ.16 கோடியில் தொடங்கப்பட்டது. 

            எனினும் குடிநீர் பிரச்னை தீரவில்லை. கேப்பர் மலை குடிநீர் திட்டத்துக்காக, குடிநீர் வாரியம், நகராட்சி மூலமாக இதுவரை 32 ஆழ்குழாய்க் கிணறுகள் அமைக்கப்பட்டு உள்ளன.   இவற்றில் இருந்து கிடைக்கும் குடிநீர், ஆரம்பத்தில் நல்ல சுவையாக இருந்தது, தற்போது பெரிதும் சுவை குன்றிவிட்டது. குடிநீர் பகிர்மானக் குழாய்களில் உடைப்பு மற்றும் கசிவு அவ்வப்போது ஏற்பட்டுவதே, குடிநீர் சுவை குறையக் காரணம் என்று பலரும் கருதுகிறார்கள். அவைகள் உடனுக்குடன் சரி செய்யப்படுவதாக நகராட்சி பொறியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.  

               ஆனால் நகராட்சிக் குடிநீர் சுவை குறைவதற்கு, கேப்பர் மலையில் உள்ள ஆழ்குழாய்க் கிணறுகளில் தொடர்ந்து ஏற்படும் பிரச்னைகளே காரணம் என்று நகராட்சிப் பொறியாளர்கள் தெரிவிக்கிறார்கள். கேப்பர் மலையில் குடிநீர் வாரியம் மூலம் பெரும்பாலான ஆழ்குழாய்க் கிணறுகள், 260 மீட்டர் ஆழத்தில் போடப்பட்டு உள்ளன. இவற்றில் தண்ணீர் தாராளமாகக் கிடைக்கிறது, ஆனால் சுவை குறைந்து கொண்டே போகிறது. நகராட்சி மூலம் ஆழ்குழாய்க் கிணறுகள் 110 மீட்டர் ஆழத்தில் போடப்பட்டு உள்ளன. இவற்றில் இருந்து கிடைக்கும் குடிநீர் சுவையாக இருக்கிறது. ஆனால் போதிய அளவு நீரூற்று இல்லை.  

            கேப்பர் மலையில் போடப்படடு உள்ள 32 ஆழ்குழாய் கிணறுகளில், குடிநீர் சுவை குறைவுப் பிரச்னை காரணமாக, சுமார் 15-ல் தண்ணீர் இறைப்பது தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. பல ஆழ்குழாய் கிணறுகளில் கிடைக்கும் குடிநீரில் இரும்புத்தாது அதிகம் காணப்படுகிறது. இதுவே சுவை குறைவுக்கும், குடிநீர் குழாய்களில் சிவப்புக் கறை படிவதற்குக் காரணம் என்கிறார்கள் பொறியாளர்கள். இரும்புத் தாது பிரச்னைக்குத் தீர்வு காண, மத்திய சிறைச் சாலைப் பகுதியில் உள்ள பிரதான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு அனுப்பப்படும் குடிநீர், ஃபில்டர் தொட்டிகள் மூலம் சுத்திகரிக்கப்பட்டு அனுப்படுகிறது.  
           
             ஆனால் திருவந்திபுரம் பகுதியில் ஃபில்டர் தொட்டிகள் அமைக்கப்படாததால், அங்குள்ள மேல்நிலைத் தொட்டிகளுக்கு அனுப்பப்படும் குடிநீர், இரும்புத் தாது கலந்ததாகவே உள்ளது. இங்கும் ஃபில்டர் தொட்டிகள் அமைக்க அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  குடிநீர் ஃபில்டர் தொட்டிகளுக்குத் தேவையான மணல், கெடிலம் ஆற்றில் இருந்துதான் எடுக்கப்பட வேண்டும். அந்த மணல்தான் சரியான அளவில் (6 முதல் 12 எம்.எம்.) இருக்கிறது என்று பொறியாளர்கள் தெரிவிக்கிறார்கள். மத்திய சிறைச் சாலை அருகில் உள்ள ஃபில்டர் தொட்டிகளுக்கு மட்டும், மாதம் 140 லாரி மணல் தேவைப்படுகிறது. 

             கெடிலம் ஆற்றில் மணல் எடுக்க எங்கும் குவாரி இல்லை. சிறப்புப் பணிக்காக என்று, மணல் எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டும், திருவந்திபுரம் பகுதியில் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் மணல் எடுக்க முடியாத நிலை உள்ளது என்று, பொறியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.  கேப்பர் மலை ஆழ்குழாய் கிணறுகளில் சுவை குறைந்து வரும் குடிநீர், கிடைக்கும் குடிநீரையும் ஃபில்டர்கள் மூலம் சுத்திகரிக்க முடியாத நிலையுமே, நகராட்சி குடிநீர் சுவை குறைந்து வருவதற்குக் காரணம் என்று பொறியாளர்கள் கூறுகிறார்கள். 

             8 ஆண்டுகளுக்கு முன் கேப்பர் மலை குடிநீர் திட்டத்துக்கு ரூ.16 கோடி ஒதுக்கப்பட்டது. ஆண்டுதோறும் மேலும் பல கோடி செலவிடப்பட்டு வருகிறது. இதனால் நகராட்சி வழங்கும் குடிநீருக்கு ஆகும் செலவு லிட்டருக்கு ரூ.1.47 என்று நகராட்சி அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. எனவே கடலூர் நகர மக்களுக்கு குடிநீர் வழங்க கேப்பர் மலை ஆழ்குழாய்க் கிணறுகளை நம்பியிராமல், மாற்று வழிகளைக் காண வேண்டும் என்பதே, வல்லுநர்களின் கருத்து.

Read more »

Victory celebration expenses of candidates to be credited to poll accounts

CUDDALORE: 

         Expenses incurred on victory celebrations of candidates winning the Assembly elections will also be credited to their respective poll accounts, according to P. Seetharaman, District Electoral Officer and Collector.

           Addressing a press conference here on Tuesday, Mr. Seetharaman said that since the candidates were given 30 days time after the counting of votes to submit their poll accounts, the money spent by the successful candidates on throwing parties or hosting feasts, bursting firecrackers and taking out victory rallies would also be accounted for.

Mr. Seetharaman said that there are three counting centres : 

Periyar Government Arts College in Cuddalore (where the votes polled in the Cuddalore, Kurinjipadi, Panruti and Neyveli constituencies would be counted); 

B.Mutlur Government Arts College (Chidambaram, Bhuvanagiri and Kattumannarkoil constituencies); and, 

Kolanjiappar Government Arts College at Vriddhachalam (Thittakudi and Vriddhachalam constituencies).

           Counting would begin at 5 a.m. on May 13 with the manual draw of lots (and not the computerised randomisation as was done for allocating polling stations to the officials) by the general election observer for allocation of counting centre for the officials, and, at 6 a.m. the Assembly segment and the table number to which they would be posted would be determined, again by lots.

            The officials should report to the respective counting centre to take oath at 8 a.m. to the effect that they would safeguard the secrecy of voting. Mr. Seetharaman said that those who failed to honour the oath or violated the secrecy law would have to undergo three months rigorous imprisonment or penalty or both. Mr. Seetharaman said that ballot boxes containing postal votes would be shifted to the respective counting centres with police escort at 6 a.m. These postal votes would be taken up for counting at 7.30 a.m.

         There would be 10 to 12 tables for each Assembly segment and even though the serial number of EVMs to be counted on every table had been tabulated, the general election observer would randomise the EVM selection for each table. After every round of counting, the display of total votes polled would be recorded on web-camera fitted laptops.

          After getting the concurrence of the general election observer, the candidate-wise votes polled in every round would be displayed on LCD screens and notice board put up at the counting centres. The candidates or their agents are not allowed to carry cell phones inside the counting centres. They should not carry water bottles, food, or any sharp-edged weapon, Mr. Seetharaman said.

Read more »

Sea incursion threatens Thazhanguda near Cuddalore District


Thazhanguda residents fear damage from sea incursion, which is a serious problem here.


CUDDALORE: 

        Residents of Thazhanguda near here have become apprehensive of sea incursion in this part of the Cuddalore district.

        Coconut groves on the seashore that were once dense have now become scanty. The sea has already advanced by about 150 m towards fishermen habitations in Thazhanguda, rooting out coconut trees in that stretch. According to S. Karnan (27), a resident, there are not less than 130 fibre boats fitted with outboard engines in Thazhnguda. Even a couple of months ago, there was ample space between the sea and the shore in which they could conveniently berth boats.

          However, the land mass has greatly reduced and the space left now is hardly sufficient to accommodate long boats. If placed in such a narrow strip of land, the boats face a threat of being pushed by waves and damaged by hitting against trees on the coast. Now the waves are getting closer to houses, hardly 50 m away, giving sleepless nights to residents. Mr. Karnan was of the opinion that only after putting up groynes along the Thevanampattinam coast, a nearby fishermen colony, the sea had turned so rough at Thazhanguda.

         Therefore, Mr. Karnan said it was the considered view of people in Thazhanguda that if their place was to be saved from the advancing sea, groynes should be placed all along the coast. Unlike in other places, raising such a protective structure would not hit fishing expeditions from Thazhanguda because fishermen could safely berth their vessels in the nearby Uppanar.

        Mr. Karnan said that earlier the fishermen used to tow their boats ashore and tie them with ropes to the coconut trees. However, now they are left with no option but anchor the boats in the sea. The residents had submitted several representations to authorities, pleading for putting up groynes, but in vain, Mr. Karnan said.



Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior