உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 31, 2010

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

உலக நண்பர்கள் அனைவருக்கும் எமது நண்பர்கள் தின  வாழ்த்துக்கள் ( ஆகஸ்ட் 01- ஞாயிற்றுக் கிழமை )

படித்த கவிதை :

"நண்பர்களை தேடி சென்றேன் ஒருவரும் கிடைக்கவில்லை

நண்பனாக சென்றேன் உலகம் முழுவதும் நண்பர்கள் கிடைத்தனர்"

Read more »

வலைப்பூ அறிமுகம்: ஹைக்கூ குடில்

ஹைக்கூ குடில்,

        தலைப்பிற்கு  ஏற்றார்போல் இந்த வலைப்பூ ஹைக்கூ கவிதைகளின் குடில் என்றே  சொல்லலாம். வலைப்பூ   ஆரம்பித்து  சில நாட்களே ஆனாலும் இந்த வலைப்பூவில் உள்ள இரு வரி கவிதைகள் அருமை, ஹைக்கூ கவிதைகள் எழுதுவதோடில்லாமல் ஹைக்கூ பற்றிய செய்திகளையும், வெளியிட்டு வருகிறார். அவருக்கு எமது வாழ்த்துக்கள், தொடர்ந்து ஹைக்கூ கவிதைகளை எதிர்பார்கிறோம். 


       நண்பர் திரு. சார்லஸ் அவர்களின் வேண்டுகோளிற்கு இணங்க அவரது வலைப்பூவை இங்கே அறிமுகம் செய்கிறோம். 

நண்பர்கள் தின பரிசு :

நண்பர்களுக்கு ஊர் வேண்டுகோள் :

        உங்களுக்கு தெரிந்த (அல்லது ) உங்களது வலைப்பூ முகவரியினை எங்களுக்கு அனுப்பினால் அதை பற்றி நமது தளத்தில் வலைபூக்கள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்படும்.  

Read more »

சென்னை விமான நிலையத்தில் என் அனுபவம்



     
             கடந்த  ஞாயிற்றுக்கிழமை (18-07-2010) சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு சென்றிருந்தேன். அந்த இரவு பொழுதிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. முன்பெல்லாம் பார்வையாளர்கள், தகவல் அறிவிக்கும் பலகை அருகே வரை செல்லலாம், அனால் இப்பொது வெளியிலே தடுப்பு வைத்து பயணிகள் மட்டும் உள்ளே செல்ல மாற்றி அமைத்து இருக்கிறார்கள். 

      அங்கே வெளியில் வரும் வழியில்  வைக்கபட்டிருக்கும் வழிகாட்டி பலகையில் (TOILET) ன்ற ஆங்கில சொல்லிற்கு இணையாக தமிழில் ஒப்பனை என்று எழுதப்பட்டுள்ளது. TOILET என்ற வார்த்தைக்கு சரியான தமிழ் சொல்லா என்பதில் எனக்கோர் சந்தேகம், யாராவது விளக்குவீர்களா?கடந்த முறை சென்றபோதே இதை பற்றி எழுதலாம் என்றும் இருந்தேன். ஆனால.................


Read more »

பி.எட்., விண்ணப்பம் விநியோகம்: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி

       பி.எட்., படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வெள்ளிக்கிழமை (ஜூலை 30) முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை விநியோகிக்கப்படுகின்றன. 

          உயர் ஆசிரியர் கல்வியியல் நிறுவனங்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள் ஆகியவற்றில் விண்ணப்பங்கள் கிடைக்கும்.  விண்ணப்பத்தைப் பெற நேரில் வர வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான பி.எட்., விண்ணப்பத்தின் விலை ரூ.175. மற்ற பிரிவினருக்கு ரூ.300. 

           விண்ணப்பக் கட்டணத்தை பணமாகவும் செலுத்தலாம். அல்லது செயலர், தமிழ்நாடு பி.எட்., மாணவர் சேர்க்கை, சென்னை -5 என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் வங்கி வரையோலையாகவும் செலுத்தலாம். 

விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம்: 

           குமாரபாளையம், ஒரத்தநாடு, புதுக்கோட்டை, கோவை, வேலூர் காந்திநகர் ஆகிய இடங்களில் உள்ள அரசு ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். விண்ணப்பங்கள் கிடைக்கும். 
  
இது தவிர, 
  1.              உயர் ஆசிரியர் கல்வியியல் நிறுவனம் (சென்னை, சைதாப்பேட்டை), 
  2.             வெலிங்டன் உயர் ஆசிரியர் கல்வியியல் நிறுவனம் (சென்னை, திருவல்லிக்கேணி) 
  3.                என்.கே.டி. தேசிய பெண்கள் ஆசிரியர் கல்வியியல் கல்லூரி (சென்னை, திருவல்லிக்கேணி), 
  4.              மெஸ்டன் ஆசிரியர் கல்வியியல் கல்லூரி (சென்னை, ராயப்பேட்டை), 
  5.            ஸ்டெல்லா மேடிடோனா பெண்கள் ஆசிரியர் கல்வியியல் கல்லூரி (சென்னை, அசோக்நகர்), 
  6.  
  7.            கிறிஸ்டோபர் பெண்கள் ஆசிரியர் கல்வியியல் கல்லூரி (சென்னை, வேப்பேரி) 
  8.             அண்ணாமலை ஆசிரியர் கல்வியியல் கல்லூரி (சென்னை, தூத்துக்குடி), 
  9.              வ.உ.சி. ஆசிரியர் கல்வியியல் கல்லூரி (தூத்துக்குடி) 
  10.              தியாகராஜர் ஆசிரியர் கல்வியியல் கல்லூரி (மதுரை),  
  11.              புனித ஜஸ்டின் பெண்கள் ஆசிரியர் கல்வியியல் கல்லூரி (மதுரை), 
  12.              புனித சேவியர் ஆசிரியர் கல்வியியல் கல்லூரி (பாளையங்கோட்டை), 
  13.         புனித இக்னேஷியஸ் பெண்கள் ஆசிரியர் கல்வியியல் கல்லூரி (பாளையங்கோட்டை), 
  14.               ஸ்ரீ ஆர்.கே.எம்.வி. ஆசிரியர் கல்வியியல் கல்லூரி (கோவை),  
  15.               ஸ்ரீ சாரதா ஆசிரியர் கல்வியியல் கல்லூரி (சேலம்) 
  16.            லட்சுமி ஆசிரியர் கல்வியியல் கல்லூரி (காந்திகிராமம்), 
  17.            என்.வி.கே.எஸ்.டி. ஆசிரியர் கல்வியியல் கல்லூரி (திருவட்டாறு) 
  18.              ஆகிய கல்லூரிகளிலும் கிடைக்கும்.

Read more »

ம.தி.மு.க.வின் அங்கீகாரம் ரத்து



          
             ம.தி.மு.க.வின் மாநில கட்சி அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.  
 
             ஒரு அரசியல் கட்சி தேர்தல் ஆணையத்தால் மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட வேண்டுமானால், சட்டப்பேரவையில் உள்ள ஒவ்வொரு 30 உறுப்பினர்களுக்கும் ஒரு உறுப்பினர் என்ற வீதத்தில் அந்தக் கட்சியின் பலம் இருக்க வேண்டும். இல்லையெனில், மாநிலத்திலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு 25 உறுப்பினர்களிலும், ஒரு உறுப்பினர் சம்பந்தப்பட்ட கட்சியின் உறுப்பினராக இருக்க வேண்டும். 
 
               இந்த விதிகளின்படி, தமிழ்நாட்டில் ஒரு அரசியல் கட்சி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டுமானால், அந்தக் கட்சிக்கு சட்டப்பேரவையில் குறைந்தது 8 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். இல்லையெனில், மக்களவையில் 2 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், கடைசியாக நடைபெற்ற பொதுத்தேர்தலில் பதிவான செல்லத்தக்க மொத்த வாக்குகளில், அந்தக் கட்சி குறைந்தது 6 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும்.  ம.தி.மு.க.வைப் பொருத்தவரை இந்த மூன்று நிபந்தனைகளையும் நிறைவேற்ற முடியாததால், அந்தக் கட்சியின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அண்மையில் தில்லி சென்ற அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, தலைமை தேர்தல் ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். 
 
            இந்நிலையில், ம.தி.மு.க.வின் மாநிலக் கட்சி அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதாக தலைமை தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.  அதேபோல், அகில இந்திய வானொலி, தூர்தர்ஷன் மூலம் இனி ம.தி.மு.க.வால் தேர்தல் பிரசாரம் செய்ய முடியாது.  அடுத்த பொதுத்தேர்தலில் பெறும் வாக்குகளைப் பொருத்து, ம.தி.மு.க.வுக்கு மீண்டும் அங்கீகாரம் வழங்குவது பற்றி தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்.  இதேபோல் புதுச்சேரியில் பா.ம.க. அங்கீகாரத்தை இழந்துள்ளது. அருணாசல பிரதேசத்தில் அருணாசல காங்கிரஸ், உத்தராஞ்சல், மத்தியப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி, பிகார், ஜார்க்கண்டில் ஐக்கிய ஜனதா தளக் கட்சி ஆகியவற்றின் மாநில கட்சி அங்கீகாரத்தையும் தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.
 
                     னினும், புதுச்சேரியில் அங்கீகாரத்தை இழந்துள்ள பா.ம.க., தமிழகத்தில் தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக செயல்படும்.  குறைந்தது ஐந்து மாநிலங்களிலாவது மாநிலக் கட்சியாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை நிறைவேற்றாததன் காரணமாக, லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் தேசிய கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது. 
 
"பம்பரம் நீடிக்கும்' 
 
               அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் சின்னத்தை தொடர்ந்து பயன்படுத்தலாம் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் ம.தி.மு.க.வின் பம்பரம் சின்னம் நீடிக்கும்.

Read more »

வருமான வரிக் கணக்கு: இன்று கடைசி

          தமிழகம் உள்பட நாடு முழுவதும் உள்ள சம்பளதாரர்கள் 2009-10-ம் நிதியாண்டுக்கு தங்களது வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய சனிக்கிழமை (ஜூலை 31) கடைசி நாளாகும்.  

            சென்னை நுங்கம்பாக்கம் தலைமை அலுவலகத்தில் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் கவுண்ட்டர்கள் ஜூலை 28-ம் தேதி முதல் செயல்பட்டு  வருகின்றன. தாம்பரம், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சம்பளதாரர்களும் சிறப்புக் கவுண்ட்டர்களில் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்து வருகின்றனர்.  சென்னையில் கடந்த 3 தினங்களில் மட்டும் மொத்தம் 93,000 சம்பளதாரர்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்துள்ளனர். 

                சிறப்புக் கவுண்ட்டர்கள் மூலம் மூன்றாவது நாளான வெள்ளிக்கிழமை (ஜூலை 30) மட்டும் 30,000 சம்பளதரார்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்தனர்.  சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரி தலைமை அலுவலக சிறப்புக் கவுண்ட்டர்களில் கடைசி நாளான சனிக்கிழமை (ஜூலை 31), காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை சம்பளதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட வருமான வரிக் கணக்குப் படிவத்தை அளிக்கலாம். கூட்டம் அதிகமாக இருக்கும் நிலையில், மாலை 6 மணி வரை வருமான வரிப் படிவங்களைப் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Read more »

பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வு முடிவு இன்று வெளியீடு

         பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு முடிவுகள் சனிக்கிழமை வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவை www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in  ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம். 

           மதிப்பெண் சான்றிதழ்கள் மாணவர்கள் தேர்வெழுதிய மையங்களில் ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் வழங்கப்படும். தட்கல் திட்டத்தின் கீழ் தேர்வெழுதியவர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கு மதிப்பெண் சான்றிதழ் அனுப்பப்படும். 

இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் கூறியிருப்பது: 

      சிறப்பு துணைத் தேர்வின் விடைத்தாள் நகல், மறுகூட்டல் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை வழங்கப்படும்.  இந்த விண்ணப்பங்கள் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்கள், புதுச்சேரி இணை இயக்குநர் (கல்வி) அலுவலகம், சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஆகியவற்றில் கிடைக்கும்.

விடைத்தாள் நகலுக்கான விண்ணப்பக் கட்டணம்: 

           மொழிப் பாடம் ரூ.550; ஆங்கிலம்-ரூ.550, மற்ற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.275.மறு கூட்டலுக்கான கட்டணம்: தமிழ், ஆங்கிலம், உயிரியல் என ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.305; மற்ற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.205. 

               கட்டணத்தை "இயக்குநர், அரசு தேர்வுகள், சென்னை -6' என்ற பெயரில் வங்கி வரைவோலை மூலம் செலுத்த வேண்டும். விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து, விண்ணப்பங்களை வாங்கிய இடங்களிலேயே ஆகஸ்ட் 4-ம் தேதி மாலை 5.45-க்குள் அளிக்க வேண்டும்.

Read more »

இந்தியாவில் 2020-ல் கடும் தண்ணீர் பற்றாக்குறை: அமெரிக்கா எச்சரிக்கை

      இந்தியாவில் இன்னும் 10 ஆண்டுகளில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என அமெரிக்க அமைச்சர் ராபர்ட் பிளேக் எச்சரித்துள்ளார். 

தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சரான ராபர்ட் பிளேக் வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேலும் பேசியதாவது:

           மக்கள் தொகை பெருக்கம் மற்றும் நகரமயமாக்கல் ஆகியவற்றால் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் என்பது இந்தியாவில் சவாலாக உருவெடுத்துள்ளது. மாநிலங்களுக்கு இடையே மோதல் மற்றும் எல்லைப் பிரச்னைகளுக்கு தண்ணீர் ஒரு காரணமாக ஆகிவருகிறது. இந்தியாவில் 12 சதவீதம் பேருக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை. நாட்டில் மொத்தம் உள்ள 626 மாவட்டங்களில் பாதிக்கும் மேற்பட்டவை 2009-ல் வறட்சியால் பாதிக்கப்பட்டன.

          இந்தியாவின் தண்ணீர்த் தேவையில் 75 சதவீதம் 3 மாதங்களில் பெய்யும் மழை மூலம் கிடைக்கிறது. ஆனால், அதை தேக்கிவைக்க போதுமான வசதிகள் இல்லை. நகரப் பகுதிகளில், எல்லா வருவாய் தரப்பினரும் தண்ணீரை பணம் கொடுத்து வாங்கும் நிலையே உள்ளது. நகரங்களில் 40 சதவீத குடும்பங்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை. 36 சதவீதம் குடும்பங்களுக்கு மட்டுமே கழிப்பிட வசதி உள்ளது. அசுத்தமான குடிநீர் காரணமாக பலவிதமான நோய்களுக்கு மக்கள் ஆளாகிறார்கள். இதனால் குழந்தை இறப்பு விகிதமும் அதிகரிக்கிறது.

            நாட்டின் பல பகுதிகளில் விவசாயத்துக்கு போதுமான நீர் கிடைப்பதில்லை. 2025-ல் உலகில் மூன்றில் இரண்டு பங்கு நாடுகளில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மக்கள் தொகை பெருக்கம், பருவநிலை மாற்றத்தால் பனிமலைகள் உருகுதல் உள்ளிட்டவையால் தோன்றும் இதுபோன்ற சவால்களை அரசாங்கத்தால் மட்டுமே எதிர்கொள்ள முடியாது. மக்களும் ஒத்துழைக்க வேண்டும் என்றார் பிளேக்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் கலப்படம் அதிகரிக்கும் கலப்பு உரங்கள்

கடலூர்:

          கடலூர் மாவட்டத்தில் கலப்பு (மிக்ஸர் உரங்கள்) உரங்களில் கலப்படம் அதிகரித்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கிறார்கள்.

          வேளாண்மையில் ரசாயன உரங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இயற்கை உரங்கள் குறித்து விழிப்புணர்வுப் பிரசாரங்கள் அதிகரித்து வரும் நிலையிலும், விவசாயிகளிடமும் ரசாயன உரங்கள் மீதான மோகம் குறைந்ததாகத் தெரியவில்லை. இதனால் ரசாயன உரங்களின் பயன்பாடு அதிகரித்து, கலப்படமும் அதிகரித்து வருகிறது. தரமற்ற உரங்களால் ஏற்படும் பாதிப்பு அறுவடையின் போதுதான் விவசாயிகளால் உணர முடிகிறது.

         வேளாண்மையில் தழைச்சத்து (நைட்ரஜன்), மணிச்சத்து (பாஸ்பரஸ்), சாம்பல் சத்து (பொட்டாஷ்) ஆகிய மூன்றும் பேரூட்டச் சத்துக்களாகக் கருதப்படுகிறது. இவற்றுக்கான ரசாயன உரங்களான யூரியா, சூப்பர் பாஸ்பேட், மியூரேட் ஆப் பொட்டாஷ் ஆகியவை அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவ் உரங்கள் தனித்தனியாகவும், மூன்றையும் குறிப்பிட்ட விகிதங்களிலும் கலந்து, கலப்பு உரங்களாகவும் விற்பனை செய்யப்படுகின்றன. பயிர்களுக்கு ஏற்றவாறு 14 வகையான கலப்பு உரங்களை (காம்ப்ளக்ஸ் உரங்கள்) தயாரித்து விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதி அளித்து இருக்கிறது. 

         உரங்களை பெரிய உரத் தொழிற்சாலைகளும் உற்பத்தி செய்து விநியோகிக்கின்றன. அதே நேரத்தில் மிக்ஸர் உரங்கள் என்ற பெயரிலும், சாதாரண தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்க்கப்படுகின்றன. கலப்பு உரங்களைத் தயாரித்து விநியோகிக்கும் நிறுவனங்கள் தமிழகத்தில் விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், வேலூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் அதிகம் உள்ளன. கடலூரில் 2-ம், விழுப்புரத்தில் 25 நிறுவனங்களும் உள்ளன. இவை குடிசைத் தொழில்போல் பெருகிவருவதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். 

         பொதுவாக முக்கிய 3 உரங்களில், சாதாரண உப்பு, மணல், களிமண், டோலமைட் என்ற மண், ஜிப்ஸம், பாறை பாஸ்பேட், செங்கல்தூள், மெக்னீஷியம் சல்ஃபேட் போன்ற பொருள்கள் கலப்படம் செய்யப்படுவதாகக் கூறும் விவசாயிகள், மிக்ஸர் உரங்கள் என்று கூறப்படும் காம்ப்ளக்ஸ் உரங்களில்தான் கலப்படம் அதிகரித்து வருவதாகவும் கவலை தெரிவிக்கிறார்கள். 

இதுகுறித்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் அமைப்புச் செயலர் ரவீந்திரன் கூறுகையில், 

           "கடலூர் மாவட்டத்தில் 1000க்கும் மேற்பட்ட தனியார் உர விற்பனை நிலையங்கள் உள்ளன. இவற்றில் விற்பனை செய்யப்படும் மிக்ஸர் உரங்கள் கலப்படம் நிறைந்ததாகவும், தரமற்றதாகவும் உள்ளன. இந்த உரங்கள் பற்றி விவசாயிகளுக்கு சரியான விழிப்புணர்வு இல்லை. விலையிலும் கம்பெனி கலப்பு உரங்களுக்கும் மிக்ஸர் உரங்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. வேளாண் துறை உரக் கட்டுப்பாடு அதிகாரிகள், மேலும் தீவிரமாக இந்த உரங்களை கண்காணித்து மாதிரிகளை சேகரித்து, தர நிர்ணய ஆய்வுக் கூடங்களுக்கு அனுப்ப வேண்டும். தனியார் உர விற்பனை நிலையங்கள் அதிகம் உள்ள கடலூர் மாவட்டத்தில், அரசு உர ஆய்வுக்கூடம் அமைக்க வேண்டும்' என்றார்.

இதுகுறித்து வேளாண் உதவி இயக்குநர் (உரங்கள் தரக் கட்டுப்பாடு) அலுவலகத்தில் விசாரித்தபோது 

             ஆண்டுதோறும் அனைத்து ரக உரங்களிலும் மாதிரிகள் எடுத்து ஆய்வுக் கூடத்துக்கு அனுப்புகிறோம். கடந்த ஆண்டு 750 மாதிரிகள் எடுத்து ஆய்வுக்கு அனுப்பினோம். இதில் 25 மாதிரிகளில் மட்டும் தரக்குறைவு கண்டறியப் பட்டது. தரக்குறைவின் அளவுக்கு ஏற்ப லைசென்ஸ் ரத்து, குறிப்பிட்ட காலத்துக்கு லைசென்ஸ் நிறுத்தி வைப்பு உள்ளிட்ட தண்டனைகள் வழங்கப்படுகின்றன. கலப்பு மற்றும் மிக்ஸர் உரங்களில் குறைபாடுகள் அதிகம் காணப்படுவதால், அவற்றில் மட்டும் 40 சதவீத மாதிரிகள் சேகரித்து, ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என்று, வேளாண் இயக்குர் உத்தரவிட்டு இருக்கிறார் என்றும் தெரிவித்தனர்.

Read more »

சிறுவனை கடத்திக்கொன்ற கொடூரனுக்கு இரட்டை மரண தண்டனை:கடலூர் மகளிர் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு


கடலூர்:
  
           பணத்திற்காக சிறுவனை கடத்தி கொலை செய்தவருக்கு இரட்டை மரண தண்டனை விதித்து கடலூர் மகளிர்  கோர்ட்டில் நேற்று இரவு தீர்ப்பு கூறப்பட்டது. கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கார்குடல் கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சிநாதன். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி, மகள்கள் சரஸ்வதி (15), சுகன்யா (14), சூர்யா (11) மகன் சுரேஷ் (7). இவர்கள் கிராமத்தில் வசித்து வந்தனர். சிறுவன் சுரேஷ் விருத்தாசலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தார்.

              இவர் கடந்த 2009ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்ற போது, மோட்டார் சைக்கிளில் வந்த நபர், சுரேஷிடம் பாட்டியை மருத்துவமனையில் அனுமதித்திருப்பதாக கூறி அழைத்துச் சென்றார். இதனை பார்த்த அதே பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள், சுரேஷின் தாய் மகேஸ்வரியிடம் கூறினர். பல இடங்களில் தேடியும் சுரேஷ் கிடைக்காததால் கம்மாபுரம் போலீசில் புகார் செய்தார்.இந்நிலையில் மாணவனை கடத்திச் சென்ற மர்ம நபர் அன்று இரவு மகேஸ்வரியை மொபைல் போனில் தொடர்பு கொண்டு சிறுவன் பத்திரமாக இருப்பதாகவும், ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்தால் விடுவிப்பதாகவும், போலீசில் கூறினால் குழந்தையை கொலை செய்து விடுவேன் என மிரட்டினார்.

              இதுகுறித்து விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., மாசானமுத்து, எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ், விருத்தாசலம் டி.எஸ்.பி., ராஜசேகரன் உள்ளிட்ட போலீசார் தனிப் படை அமைத்து தீவிர விசாரணை செய்தனர். அதில் மகேஸ்வரியின் தூரத்து உறவினரான கூடலூர் கிராமத்தைச் சேர்ந்த புகழேந்தியின் மனைவி பாலாயி (34)யும், அவரது கள்ளக் காதலன் திருச்சி சமயபுரம் சாமுவேல் மகன் சுந்தர் (எ) சுந்தர்ராஜன் (25) என்பவரும் சிறுவன் சுரேஷை கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டுவதும், இருவரும் அரியலூர் மாவட்டம் செங்குணம் கிராமத்தில் இருப்பதும் தெரியவந்தது. ஜூலை 30ம் தேதி அதிகாலை போலீசார், செங்குணம் கிராமத்தில் பதுங்கி இருந்த சுந்தர்ராஜன், அவரது கள்ளக்காதலி பாலாயியை பிடித்து விசாரணை செய்தனர்.

               விசாரணையில் பணம் கேட்டு மாணவன் சுரேஷை கடத்தியதும், போலீசாருக்கு விஷயம் தெரிந்து விட்டதால், போலீசிலிருந்து தப்பிப்பதற்காக இருவரும் சிறுவன் சுரேஷை கழுத்தை நெறித்து கொலை செய்து சாக்கில் மூட்டையாக கட்டி பெரம்பலூர் மாவட்டம் வயலப்பாடி மீன்றான் குளத்தில் வீசியதை ஒப்புக் கொண்டனர்.பாலாயியின் கள்ளக்காதல் விவகாரம் அம்பலமானதால் அவரது கணவர் புகழேந்தி வீட்டை விட்டு விரட்டி விட்டார். அதனால் பாலாயியியும் சுந்தர்ராஜனும் சேர்ந்து குடும்பம் நடத்த பணம் தேவைப்பட்டதால் பாலாயியின் உறவினரான மகேஸ்வரியின் மகனை கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டி கொலை செய்ததும் தெரியவந்தது.போலீசார் தீயணைப்பு படையினர் உதவியுடன் வயலப்பாடி ஏரியில் சாக்கு மூட்டையில் இருந்த மாணவன் சுரேஷ் உடலை மீட்டனர். பணம் கேட்டு சிறுவனை கடத்தி, கொலை செய்து, உடலை மறைத்த சுந்தர் (எ) சுந்தர்ராஜன், அவரது கள்ளக்காதலி பாலாயி ஆகியோர் மீது விருத்தாசலம் போலீசார் கடலூரில் உள்ள மாவட்ட மகிளா கோர்ட்டில் வழக் குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில் அரசு வக்கீல் சிவராஜ் ஆஜராகி வாதிட்டார்.

                  வழக்கை விசாரித்த நீதிபதி அசோகன் நேற்று இரவு தீர்ப்பு கூறினார். வழக்கின் முதல் எதிரியான சுந்தர் என்கிற சுந்தர்ராஜனுக்கு, பணம் கேட்டு சிறுவன் சுரேஷை கடத்தியதற்காக மரண தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம், கொலை செய்ததற்காக மரண தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம், கொலை செய்து உடலை மறைத்ததற்காக ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனையும், இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். வழக்கின் இரண் டாம் எதிரியான பாலாயி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் அவரை விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.அதனைத் தொடர்ந்து சுந்தரை ஆயுதப்படை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று கடலூர் மத்திய சிறையில் ஒப்படைத்தனர்.


நீதிபதி அசோகன் தனது தீர்ப்புரையில் கூறியிருப்பதாவது:

               தற்கால சூழ்நிலையில் குழந்தைகளையும், பெரியவர்களையும் பணத்திற்காக கடத்துவதும், அவர்கள் பிடிபடுவதும் அல்லது எதிர் பார்த்த பணம் கிடைக்கவில்லை என்றால் கடத்தப் பட்டவர்கள் கொலை செய்யப்படுவதும் அன்றாட வாழ்க்கையில் மலிந்த குற்றங்களாக காணப்படுகின்றன. இந்த சூழ்நிலையில் இதுபோன்று பணத்திற்காக கடத்தப்படும் குற்றவாளிகளுக்கு மிக அதிகபட்ச தண்டனை கொடுத்து தண்டிக்காத பட்சத்தில் எதிர் காலத்தில் பணத்திற்காக பெரியவர்களையும், சிறுவர்களையும் கடத்தும் கும்பல் அதிகமாகி சமுதாயமே சீரழிந்து மிகப் பெரிய ஆபத்தை எதிர் நோக்க வேண்டி வரும் என்பதில் சற்றும் ஐயமில்லை.

               இதையெல்லாம் கருத்தில் கொண்டு பார்க்கும் போது இந்த குற்றவாளிக்கு (1ம் எதிரி) அதிக பட்ச தண்டனை வழங்குதல் நீதிக்கு உகந்ததாக இருக்கும் என தீர்மானிக்கப்படுகிறது. அதோடு மட்டுமின்றி ஏழு வயது சிறுவனை வளர்த்து சீராட்டி பார்த்த அந்தத் தாய் மனம் பதறும் நிலையை கோர்ட்டில் காண முடிந்தது. கோர்ட்டில் இருந்தவர்கள் அனைவரும் கண்ணீர் விட்டு பார்த்த காட்சியை யாரும் மறக்க முடியாது.எனவே, இதுபோன்ற குற்றவாளிகளை கடுமையாக தண்டித்தால் தான் நீதிக்கு உகந்தது என முடிவு செய்யப்படுகிறது. எனவே, இந்த குற்றவாளிக்கும் (1ம் எதிரி) இ.த.ச. பிரிவு 364 (ஏ)ன் படியான குற்றத்திற்கு மரண தண்டனை, 1,000 ரூபாய் அபராதமும், இ.த.ச. பிரிவு 302ன் படியான குற்றத்திற்கு மரண தண்டனை மற்றும் 1,000 ரூபாய் அபராதமும், இ.த.ச. பிரிவு 201ன் படியான குற்றத்திற்கு ஏழு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் 1,000 ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பளிக்கப்படுகிறது.

             இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும். இந்த கோர்ட்டில் வழங்கிய மரண தண்டணையை ஐகோர்ட்டில் உறுதி செய்யும் விதமாக கு.வி.மு.ச. பிரிவு 366ன் படி இந்த கோர்ட் நடவடிக்கைகள் அனைத்தும் ஐகோர்ட்டிற்கு சமர்ப்பிக்க உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு நீதிபதி அசோகன் தனது தீர்ப்புரையில் கூறியுள்ளார்.

Read more »

வீராணம் நீருக்காக காத்திருக்கும் விவசாயிகள்

சிதம்பரம்:
 
           கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியின் நீர் மட்டம் குறைந்தது. சம்பா சாகுபடிக்கான உழவுப்பணிகளை மேற்கொள்ள மேட்டூரிலிருந்து திறக்கப்படும் நீருக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
 
           வீராணம் ஏரியின் நீர்மட்டம் மொத்தம் 47.5 அடியாகும். தற்போது போதிய மழை இல்லாததாலும், நீர்வரத்து இல்லாததாலும் வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைந்து வெள்ளிக்கிழமை நிலவரப்படி 42 அடியாக உள்ளது.  ஏரியின் நீர்மட்டம் குறைந்துள்ளதால் ஏரியிலிருந்து சென்னை குடிநீருக்காக விநாடிக்கு 32 கனஅடி நீர் அனுப்பப்படுகிறது. ஏற்கெனவே விநாடிக்கு 76 கனஅடி நீர் அனுப்பப்பட்டு வந்தது. சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகாக்களில் 1 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்ய மேட்டூரிலிருந்து திறந்துவிடப்படும் நீருக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர். 
 
               மேட்டூரிலிருந்து ஜூலை 28-ம் தேதி நீர் திறந்து விடப்பட்டது. அந்த நீர் கல்லணைக்கு வந்தபின்னர் அங்கிருந்து ஆகஸ்ட் 1-ம் தேதி நீர் திறந்துவிடப்படுவதால் கீழணைக்கு ஆகஸ்ட் 4-ம் தேதி நீர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் ஆகஸ்ட் 5 அல்லது 6-ம் தேதி கீழணையிலிருந்து வீராணம் ஏரிக்கும், வேளாண் பாசனத்துக்கும் நீர் திறந்துவிடப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Read more »

பண்ருட்டி நகராட்சிக்கு உலக வங்கி நிதியுதவியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும்

பண்ருட்டி:
 
          33 வார்டுகளில் அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்வதற்காக ரூ.5 கோடி திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு அதற்கான நிதியுதவி உலக வங்கியிடம் இருந்து கிடைத்தவுடன் அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படும் என நகர்மன்றத் தலைவர் எம்.பச்சையப்பன் தெரிவித்தார்.
 
இது குறித்து மேலும் நகர்மன்றத் தலைவர் எம்.பச்சையப்பன் கூறியது: 
 
           செங்கல்பட்டு நகராட்சி நிர்வாக இயக்குநர் அலுவலகத்துக்கு (கடலூர் மாவட்ட நகராட்சிகளின் தலைமையிடம்) உலக வங்கி மூலம் ஒவ்வொரு நகராட்சியிலும் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வதற்கான நிதியுதவி பெற,திட்ட பட்டியல் மதிப்பீடு அறிக்கை கோரியது.
 
            அதன்படி பண்ருட்டி நகராட்சிக்கு ரூ. 5 கோடியில் நிதி உதவி கேட்டு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். பண்ருட்டி நகராட்சியின் நகர்மன்ற அவசரக் கூட்டம் அதன் தலைவர் எம்.பச்சையப்பன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
 
பழனி (திமுக): 
 
           நகரப் பகுதியில் மரம் நடப்படுவதே இல்லை. கெடில நதியிலும் மரங்கள் இல்லை. உடனடியாக மரங்களை நட நடவடிக்கை எடுக்க வேண்டும். பல இடத்தில் தெரு விளக்குகள் எரியவில்லை. குப்பை வண்டிகள் ஓட்டை உடைச்சலாக உள்ளது. புதிய வாகனங்கள் வாங்க வேண்டும்.
 
 பரமேஸ்வரி: 
 
          காந்தி நகரில் உள்ள சுகாதார நிலையத்தை சரி செய்யவில்லை என்றால் சாலை மறியல் செய்ய போவதாக பொது மக்கள் கூறுகின்றனர்.
 
எம்.பச்சையப்பன் (தலைவர்): 
 
          துப்புரவுப் பணியாளர்கள் 109 பேர் உள்ளனர், இதில் 20 பேர் விடுமுறை எடுத்துக் கொள்கின்றனர். ஆட்கள் பற்றாக்குறையால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. விரைவில் சரி செய்து தருகிறேன்.
 
சரஸ்வதி (அதிமுக): 
 
          திருவதிகை தெற்கு பெருமாள் கோயில் தெரு, ராசாப்பாளையம் மாரியம்மன் கோயில் தெருவில் சாலை சரியில்லாததால் பக்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  எனவே தார்ச்சாலை அமைத்து தர வேண்டும். தண்ணீர் வரவில்லை போர் போட்டு தர வேண்டும்.
 
துரைராமு (திமுக): 
 
          பண்ருட்டி நகரம் விரிவடைந்து வருகிறது. பணியாளர் இல்லை என கூறுகிறீர்கள், பணியாளர்களை நியமிக்க வேண்டும். தெருவெல்லாம் சாக்கடை நீர், கொசு தொல்லை அதிகம் உள்ளது. மருந்து அடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தெரு நாய் தொல்லை அதிகம் உள்ளது.
 
முருகன் (அதிமுக): 
 
          யாதவர் தெருவில் தண்ணீர் வரவில்லை. நகராட்சிப் பள்ளியில் பராமரிப்புப் பணி நடைபெறவில்லை.
 
எம்.பச்சையப்பன் (தலைவர்): 
 
              ஒப்பந்ததாரர்கள் பணி செய்யவில்லை. இது போல் பணிகளை பட்டியலிட்டு டெண்டரை நீக்க உத்தரவிட்டுள்ளேன் என கூறியவர் ஒரு வாரத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் பட்டியலை தயாரித்து வழங்குமாறு உறுப்பினர்களிடம் கூறினார்.   

Read more »

கடலூர் மாவட்டத்தில் 1 லட்சம் மரக் கன்றுகள் நடும் பணி

கடலூர்:

           கடலூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதத்துக்குள் 1 லட்சம் மரக் கன்றுகள் நடும் பணியை, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். 

            புவிவெப்பம் அடைவதைத் தடுக்கவும், சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும், பருவ நிலை மாற்றங்களை எதிர்கொள்ளும் வகையிலும் கடலூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் 1 லட்சம் மரக் கன்றுகள் நடப்பட உள்ளன .மரங்கள் நடும் பணியை சிப்காட் பகுதியில் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தொடங்கி வைத்தார். கெம்ப்ளாஸ்ட், சாசன் கெமிகல்ஸ், டாக்ராஸ் கெமிகல்ஸ், டான்ஃபேக் ஆகிய தொழிற்சாலைகளை ஒட்டிய சாலையோரங்களில் மாவட்ட ஆட்சியர் மரங்களை நட்டார். 

அங்கு மாவட்ட ஆட்சியர் பேசுகையில், 

                   கடலூர் மாவட்டத்தில் 1 லட்சம் மரங்கள் நடப்படும். சிப்காட் தொழிற்சாலைப் பகுதிகளில் தொழிற்சாலைத் துணைத் தலைமை ஆய்வாளர் மூலமாக 10 ஆயிரம் மரக் கன்றுகள் நடப்படும்.ஊராட்சி மன்றத் தலைவர்கள் மூலமாக 50 ஆயிரம் மரக் கன்றுகள் நடப்படும்.  மற்றும் வனத்துறை, நெடுஞ்சாலைத் துறை, உழவர் மன்றங்கள், எக்ஸ்னோரா, செஞ்சிலுவைச் சங்கம் மூலமாகவும் மரங்கள் நடப்படும். நடப்படும் மரக் கன்றுகளைப் பாதுகாக்கவும் தண்ணீர் ஊற்றவும் ஏற்பாடுகள் செய்யப்படும் என தெரிவித்தார்.

              தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் நிலத்தில் மண் சட்டிகளையும், மூங்கில் கம்புகளையும் பதித்து, அதில் தண்ணீர் ஊற்றி வேர்களைச் சென்றடையும் வகையில் சொட்டு நீர்ப்பாசன முறையை பயன்படுத்தவும் ஏற்பாடு செய்யப்படும். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன், தொழிற்சாலைகள் துணைத் தலைமை ஆய்வாளர் வீ.தங்கராஜ், ஆய்வாளர் எம்.ராமமூர்த்தி, கெம்ப்ளாஸ்ட் முதன்மை நிர்வாகி என்.எஸ்.மோகன், சிப்காட் தொழிற்சாலைகள் சங்கத் தலைவர் இந்திரகுமார், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.நிஜாமுதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

கிராமப் பகுதியில் குறைகளை கேட்டறிந்தார் நெல்லிக்குப்பம் எம்எல்ஏ

பண்ருட்டி:

           நெல்லிக்குப்பம் தொகுதியில் நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில் கலந்துகொண்ட சட்டமன்ற உறுப்பினர் சபா.இராஜேந்திரன் பொதுமக்களிடம் இருந்து குறைகள் குறித்த மனுக்களை பெற்றுக்கொண்டார்.

              நெல்லிக்குப்பம் தொகுதிக்கு உள்பட்ட எய்தனூர், கீழ்அருங்குணம், பல்லவராயநத்தம், நத்தம், சுந்தரவாண்டி ஆகிய கிராமப் பகுதியில் மக்கள் குறை சார்ந்த மனுக்களைப் பெறும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்எல்ஏ சபா.இராஜேந்திரன், நத்தம் கிராமத்தைச் சேர்ந்த தமயந்திக்கு இலவச மனைப்பட்டா வழங்கினார். 5 பஞ்சாயத்தில் நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சபா.இராஜேந்திரன் கூறினார்.

                 ஊராட்சி மன்றத்தலைவி சுந்தரி தலைமையில் நடைபெற்ற விழாவில், பண்ருட்டி வட்டாட்சியர்  பி.பன்னீர்செல்வம், அண்ணாகிராம ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மனோகர், தமிழரசி, திமுக முன்னாள் ஒன்றியச் செயலர் பலராமன் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Read more »

Exhibition highlights intricacies of English language



Appreciation:Winners of the Spell Bee contest at Krishnasamy Memorial Matriculation School in Cuddalore on Friday. 
 
CUDDALORE: 

             “Krishtionary” is a new word coined by the Krishnasamy Memorial Matriculation Higher Secondary School for an exhibition dedicated to English language.

          Starting from the common usage of idioms and phrases, the expo gradually progresses into unravelling the intricacies and nuances of the English language in its varied dimensions. It has displayed a wide range of homonyms, similar sounding words with different meanings. Organisers have collected the words to prove that English is best understood in contextual manner. Vocabulary is as important as pronunciation, and, grammar is another vital aspect to master the language. How English is a vibrant and evolving language has been amply proved by culling out the words that have originated from other languages.

List of phobias

             The section devoted to science and technology has showcased the development in space science and communication technology. It has made out an exhaustive list of phobias that mankind is prone to, and, a cursory glance will reveal that none will be exempt from it. The event also traces the history of newspapers and showcases a wide range of English magazines to give an inkling to the global reach of English which has made its learning inevitable.

           The Spell Bee contest is another event that tested English knowledge base of students. Deputy Superintendent of Police S.S. Mageswaran, in his address, said that the exhibits, enriched and endowed with knowledge, ought to be studied leisurely and not in a hurried fashion. He called upon the students to concentrate on extra curricular activities, besides studies, and join National Cadet Corp or National Social Service to do service to the nation.

          He recalled that a student of the school who found currency notes wrapped in a newspaper lying unclaimed on the road promptly handed it over to the police, who later traced the owner, a differently abled person.

Indicator

            It was an indicator of the character he imbibed from the school, Mr. Mageswaran said. School president K .Rajendran said that the school was preparing students not only for examinations but also inculcating in them good habits and moral values so as to equip them to become good citizens and make a mark in their chosen fields. A. Selavarj Gnanaguru, Principal of Krishnasamy College of Education for Women, explained the power of words, while Sujatha Srinivasan, Member of the Juvenile Justice Board, complemented the school management for kindling the intellectual quest of students. Principal R. Natarajan and vice-principal Chandrika Balasubramanian participated.

Read more »

சிதம்பரத்தில் பணிகள் நிறைவேற்றப்படவில்லை:தி.மு.க., கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு

சிதம்பரம்:

              சிதம்பரம் நகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானப் பணிகளை நிறைவேற்றவில்லை எனக் கூறி தி.மு.க., கூட்டணி கவுன்சிலர்கள் வெளி நடப்பு செய்தனர். சிதம்பரம் நகர்மன்றக் கூட்டம் சேர்மன் பவுஜியாபேகம் தலைமையில் நடந்தது. புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 1வது வார்டு உறுப்பினர் தியாகராஜனை சேர்மன், உறுப்பினர்கள் வரவேற்றனர்.

தி.மு.க., உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன்:

            கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்கள்படி எந்த பணியும் நடக்கவில்லை. மேலும் நகரில் குடிநீர் தட்டுப்பாடு, நாய்,குரங்கு தொல்லை அதிகரித்துள்ளது. இதற்கு நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தி.மு,க., கூட்டணி கட்சிகளான காங்., வி.சி., உறுப்பினர்களுடன் சுயேச்சை உறுப்பினர்கள் சேர்ந்து வெளி நடப்பு செய்கிறோம் என வெளி நடப்பு செய்தனர்.அரங்கில் அ.தி.மு.க., உறுப்பினர்கள் மட்டும் இருந்ததால் கூட்டத்தை சேர்மன் அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைத்தார். ஆணையாளர் பொறுப்பு மாரியப்பன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Read more »

அண்ணாமலைப் பல்கலையில்பன்னாட்டு கருத்தரங்கம்

சிதம்பரம்:

           சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மேலாண்மைத் துறையில் பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது.
  
            சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மேலாண்மைத் துறை மற்றும் தொலைதூரக் கல்வி இயக்க மேலாண்மை பிரிவு சார்பில் நிலையான வளர்ச்சிக்கான மேலாண்மை நடைமுறைகள் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. துணைவேந்தர் ராமநாதன் குத்துவிளக் கேற்றி துவக்கி வைத்தார். ஒருங்கிணைப் பாளர் பேராசிரியர் பிரகதீஸ்வரன் வரவேற்றார்.

               புதுச்சேரி பிரெஞ்ச் மையத்தின் இயக்குனர் மாரிமுத்து வேலாயுதம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். துறைத் தலைவர் பேராசிரியர் பஞ்சநதம் தலைமை உரை நிகழ்த்தினார். தொலைதூரக் கல்வி இயக்குனர் நாகேஸ்வரராவ் மற்றும் இலங்கை ஈஸ்டன் பல்கலைக்கழக கனகசிங்கம், பல்கலைக்கழக யோகா மைய இயக்குனர் விஸ்வநாதன், பன் னாட்டு மேலாண்மை பயிற்சியாளர் விஷ்ணுகுமார் உள்ளிட்டோர் பேசினர். இலங்கை, இந்தோனேஷியா, ஈரான் உள் ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து 500 பேர் பங்கேற்றனர்.

Read more »

விருத்தாசலத்தில் வேலைவாய்ப்பு முகாம்

விருத்தாசலம்:

           விருத்தாசலம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் வேலை வாய்ப்பு முகாம் இன்று நடக்கிறது.

இதுகுறித்து வாழ்ந்து காட்டுவோம் மாவட்ட திட்ட மேலாளர் நித்தியானந்தம் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

            விருத்தாசலம் தென் கோட்டை வீதி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சார்பில் இன்று (31ம் தேதி) வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. காலை 9.30 மணிக்கு துவங்கும் நல்லூர், விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில் மற்றும் மங்களூர் ஒன்றியங்களைச் சேர்ந்த இளைஞர் கள் கலந்து கொள்ளலாம். சென்னையை சேர்ந்த ரிலையன்ஸ், ஓரல் பி, டாடா குரூப் ஆப் கம்பெனி, விஸ்வம் இன்ஸ்டியூட் ஆப் டெக் னாலஜி மற்றும் கேப்பிடல் சி.என்.சி., சென்டர் ஆகிய நிறுவனங்கள் இளைஞர்களை தேர்வு செய்கின்றன.முகாமில் 8ம் வகுப்பு முதல் டிகிரி வரையில் படித்த இளைஞர்களும், ஐ.டி.ஐ., முடித்த இளைஞர்கள் கலந்து கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Read more »

கடலூர் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரியில்மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

நெல்லிக்குப்பம்:

           கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரி மாணவர்கள் நிர்வாகத்தை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். 

               கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த குமராபுரம் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்கள் நேற்று கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். கடந்த 2007ம் ஆண்டு வரை கல்லூரியில் படித்த பொறியியல் படிப்பு மாணவர்களுக்கு "இ லேர்னிங்' கட்டணம் கிடையாது. 2008ம் ஆண்டு முதல் சேரும் மாணவர்களுக்கு "இ லேர்னிங்' கட்டணம் வசூலிக்க வேண்டுமென அரசு அறிவித்துள்ளது. ஆனால் இக்கல்லூரியில் 2007ம் ஆண்டு சேர்ந்தவர்களிடமும் ஆண்டுக்கு 2,000 வீதம் நான்கு ஆண்டுகளுக்கு 8,000 ரூபாய் வசூல் செய்துள்ளனர். மாணவர் கள் பல்கலைக்கழகத்தில் விசாரணை செய்ததில் 2007ம் ஆண்டு மாணவர்களுக்கு "இ லேர்னிங்' கட்டணம் கிடையாது என கூறியுள்ளனர்.

மாணவர்கள் கூறுகையில், 

               "குடிநீர், கழிவறை அடிப்படை வசதிக்காக ஒவ்வொரு மாணவரும் வாரம் 10 ரூபாய் கட்டுகிறோம். ஆனால் அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை. பள்ளி மாணவர் களைப் போல் நடத்துகின் றனர். சட்டத்துக்கு புறம் பாக வசூல் செய்த 8,000 ரூபாயை திரும்பத் தர வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடத்துகிறோம். மூன்று நாட்களில் பேசி தீர்வு காண்பதாக கல்லூரி நிர்வாகத்தினர் கூறினர். ஆனால் பணத்தை திருப்பித் தரும் வரை போராட்டம் தொடரும்' என மாணவர்கள் கூறினர்.

Read more »

கடலூரில் தீ விபத்து:மூன்று வீடுகள் சேதம்

கடலூர்:

             கடலூரில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தீவிபத்தில் மூன்று கூரை வீடுகள் எரிந்து சேதமடைந்தன.

                 கடலூர் ஆல்பேட்டை செக்போஸ்ட் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல்ரஹீம். இவரது வீட்டையொட்டி உள்ள கூரை கொட்டகை நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு திடீரென தீப்பிடித்து எரிந்தது. காற்று வீசியதால் அருகில் இருந்த வீடுகளுக்கும் தீ பரவியது.அதில் அலாவுதீன் பாபுலான், முரளி ஆகியோரது கூரை வீடுகளும் தீப்பிடித்து எரிந்தன. தகவலறிந்த கடலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இருப்பினும் தீ விபத்தில் வீடுகளில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. தீவிபத்து குறித்து ரெட்டிச்சாவடி இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சப் இன்ஸ்பெக்டர் தண்டபாணி மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior