உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 26, 2009

உண்மை அறியும் குழு கோரிக்கை என்எல்சி தலைவர் மீது சி.பி.ஐ.விசாரணை

கடலூர்:

                            உண்மை அறியும் குழுவின் மதுரை வழக்கறிஞர் ரத்தினம், மக்கள் கல்வி இயக்கம் பேராசிரியர் திண்டிவனம் கல்யாணி, மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் பேராசிரியர் சென்னை மார்க்ஸ், மக்கள் உரிமை கூட்டமைப்பு புதுச்சேரி சுகுமாறன், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் திருவாரூர் சிவகுருநாதன் ஆகியோர் நேற்று கடலூரில் நிருபர்களிடம் கூறியதாவது;
என்.எல்.சி தலைவர் ஏ.ஆர்.அன்சாரி பல முறைகேடுகள் செய்துள்ளதாக புகார்கள் உள்ளன. இது குறித்த தகவல்களை பரப்பினார்கள் என ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் அனைவர் மீதும் எடுக்கப்பட்ட  நடவடிக்கையை  வாபஸ்பெற வேண்டும். அவர்களுக்கு  பணி நீக்க காலத்திற்கு முழு ஊதியம் அளிக்க வேண்டும். நியாயமற்ற முறையில் இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரி யான துரைக்கண்ணு, பரமசிவம் ஆகியோரது இடமாற்ற ஆணைகள் ரத்து செய்யப்பட வேண்டும். பரமசிவத்திற்கு இயல்பாக வரவேண்டிய பதவி உயர்வு உடனடியாக அளிக்கப்பட வேண்டும்.   ஊழியர்களை பயமுறுத்தும்  வகையில் நிர்வாகம் வெளியிட்டள்ள  அறிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். ஊழியர்களை கண்காணிக்க தனியார் உளவுத்துறையை பணியமர்த்தப்போவ தாக  ஆணையை வெளியிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பதவிகள் ஒருவரிடமே குவிக்கப்படுவது ஊழல்களுக்கு வழிவகுக்கிறது. இப்பதவிகள் பிரிக்கப்பட்டு தனித்தனி அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Read more »

திட்டக்குடி பேரூராட்சியில் தாசில்தார் திடீர் சோதனை

 திட்டக்குடி: 

                 திட்டக்குடி பேரூராட்சியில் வளர்ச்சி பணிகள், மாதந்திர கூட்டத்திற்கான பொருள்,  திருக்குளம் தூர்வாருதல், ஆக்கிரமிப்பு அகற்றுதல் குறித்து  நேற்று கவுன்சிலர்கள்,  மன்ற தலைவர் மன்னன்  தலை மையில் ஆலோசனை செய்து கொண்டிருந்தனர். 

               துணை தலைவர் கமலிபரமகுரு, விடுதலை சிறுத்தைகள் கவுன்சிலர் ராஜாஅலெக்சாண்டர், கவுன் சிலர்கள் செந்தில், செந்தில்குமார், ராதாகனக சபை, பழனியம்மாள்பாஸ்கர், செல்விதாமோ தரன், ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 

                   அப்பொழுது   தாசில் தார் ஜெயராமன் தலைமையில் உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி, கிராம நிர்வாக அலுவலர் பிச்சபிள்ளை ஆகியோர் கொண்ட  குழுவினர் கூட் டம் நடந்து கொண்டு இருந்த மன்ற வளாகத்தில் வந்து சோதனை மேற்கொண்டனர். அதனை பார்த்த கவுன்சிலர்கள்    திடீர் விசிட்  குறித்து  கேட்டனர். அதற்கு விடுமுறை தினத்தில் என்ன செய்கின்றீர்கள் என பார்க்க வந்தோம் என கூறினர். இதில் சந்தேகம் அடைந்த கவுன்சிலர்கள்  துருவிதுருவி கேட்டதற்கு பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை  முன்னிட்டு சிலர் குடித்து கொண்டு இருப்பதாக ஆட்சியர் அலுவலகத்திற்கு  புகார் சென்றுள்ளது. இது குறித்து  சோதனையிட உத்தரவு வந்ததால்  வந்தோம் என கூறினர். பொது பிரச்னை குறித்து விவாதம் செய்து கொண்டு இருக்கும் போது இப்படி ஒரு பிரச்னையா என அதிர்ச்சி அடைந்த கவுன்சிலர்கள் பொய் வதந்தியை பரப்பிய நபர் யாராக இருக்கும் என தங்களுக்குள் விவாதம் செய்தனர். மன்ற கூடத்தில் வருவாய்த்துறையினர் சோதனை செய்த சம்பவம்  திட்டக்குடியில்  பரபரப்பை ஏற்படுத்தியது.

Read more »

கிணற்றில் வாலிபர் சடலம்

நெய்வேலி: 

                            குறிஞ்சிப்பாடி ராஜீவ் காந்திநகரை சேர்ந்தவர் ராமலிங்கம். விவசாயத் தொழிலாளி. இவரது மகன் அருள்ஜோதி (26). இவர்அதே பகுதியில் உள்ள தோல் பை தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.  கடந்த 22ம் தேதி மதியஉணவுக்கு வேலை செய்யும் இடத்தில் இருந்து வீட்டுக்கு சென்றவர் அவர் திரும்பவில்லை. இது குறித்து நிறுவன மேலாளர் அவரது வீட்டுக்கு தகவல் கொடுத்தார்.  இதை யடுத்து அவரது தந்தை ராமலிங்கம் உறவினர் வீடு உள்பட பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. நேற்று முன்தினம் மாலை அவரது உடல் குறிஞ்சிப்பாடி ரயில்நிலை யம் அருகே உள்ள கிணற் றில் மிதப்பதாக தகவல் கிடைத்தது.  சம்பவ இடத்துக்கு சென்ற குறிஞ்சிப்பாடி போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பிணமாக கிடந்த அருள் ஜோதி அடித்து கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வாலிபர் பிணமாக கிணற்றில் மிதந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Read more »

திருக்கோவிலூர் அருகே புதையலுடன் தலைமறைவான சூளை தொழிலாளி கைது போலீசார் அதிரடி

திருக்கோவிலூர்:

                திருக்கோவிலூர் அருகே புதையலுடன் தலைமறைவான சூளை தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

                திருக்கோவிலூர் அருகே கழுமரம் கோட்டகத்தை சேர்ந்த சரவணன் என்பவரது நிலத்தில் அமைத்திருந்த செங்கல் சூளையில் ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்த சக்கரை மகன் ராதாகிருஷ்ணன்(30)  வேலைபார்த்து வந்தார். கடந்த 7 மாதங்களுக்கு முன் மண்ணில் புதைந்தவாறு ராதாகிருஷ்ணனுக்கு ஒரு புதையல் கிடைத்தது. அதனை யாருக்கும் தெரியாமல் திருவண்ணாமலையில் விற்க முயற்சி செய்த போது அந்த புதையலில் தங்கம் இருப்பதும் அதன்  மதிப்பு சுமார் 30 ஆயிரம் இருக்கும் என்பதை அறிந்து கொண்டார். பின்னர் அந்த புதையல் கூடுதல் விலை இருக்கும் என்று கருதிய ராதாகிருஷ்ணன் தனது வீட்டிற்கு கொண்டு வந்து வைக்கும் போது இதுபற்றிய விஷயம் அக்கம்பக்கத்தாருக்கு தெரிந்தது. அப்பகுதியை சேர்ந்த சிலர் வருவாய்த்துறையினருக்கு  தெரிவித்தனர். அப்போதிருந்த கோட்டாட்சியர் கோதண்டராமகுப்தா, தாசில்தார் சண்முகம் ஆகியோர் கழுமரம், ஆலம்பாடி கிராமங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

                  ராதாகிருஷ்ணனுக்கு புதையல் கிடைத்ததை உறுதி செய்தனர்.  ஆனால் விசாரணையின்  போது ராதாகிருஷ்ணன் குடும்பத்துடன் தலைமறைவானார். இதுபற்றி நடவடிக்கை எடுக்க கோட்டாட்சியர் மாவட்ட வருவாய் அலுவலருக்கு பரிந்துரை செய்தார். அதன்படி மாவட்ட வருவாய் அலுவலர் கதிரவன் உத்தரவின் பேரில் மணலூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து ராதாகிருஷ்ணனை கைது செய்தனர். அவரிடமிருந்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்க புதையலை பறிமுதல் செய்தனர்.

Read more »

சுனாமி பாதித்த பகுதிகளில் ரூ.17.61 கோடியில் மேம்பாட்டு பணிகள் 40 ஆயிரம் பேர் பயன்பெற்றனர்

கடலூர்: 

             கடலூர் மாவட்டத்தில் சுனாமி பாதித்த பகுதிகளில் மக்களின் வாழ்வாதார வசதிகளை மேம்படுத்த  ரூ.17.61 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 40 ஆயிரம் மகளிர் பயன் பெற்றுள்ளனர்.  

                       கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி கடலூர் மாவட்டத்தில் சுனாமியால் ஏற்பட்ட பேரழிவு  மக்கள் மனதில்  நீங்காத சுவடாக அமைந்துள்ளது.  கடலூர் மற்றும் சிதம்பரம் வட்டத்தில் 1 லட்சம் பேர் சுனாமியால் பாதிக்கப்பட்டனர். 610 பேர் இறந்தனர்.  18 பேர் காணாமல் போயினர். கடற்கரை கிராமங்களில் அமைந்திருந்த 4000 ஆயிரம் வீடுகள், குடிசைகள் சேதமடைந் தது. மீனவர்களின் தொழில் ஆதாரமான 7000 கட்டுமரங்கள், 1200 இயங்திர படகுகள், 29 விசைப்படகுகள் சேதமடைந்தது. 5,000 மீன் வலைகள் நாசமாகியது. 2 ஆயிரம் கால்நடைகள் செத்து மிதந்தன. 415 ஹெக்டர் வேளாண் பயிர்களும், 193 ஹெக்டர் தோட்டக்கலை பயிர்களும் கடல்நீர் புகுந்ததால் வீணாகியது. சுனாமியின் தாண்டவத்தால் மீனவ மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்தனர். இந்நிலையில் மத்திய& மாநில அரசுகள் மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள், தொண்டு அமைப்புகள் மீட்பு, நிவாரண புனரமைப்பு பணிகளை மேற்கொண் டன. இதன் எதிரொலியாக மீனவ கிராமங்களில் இயல்பு நிலை திரும்பியது.  

                               சுனாமியால் பாதிக்கப்பட்ட ஊரக பகுதிகளில் வாழ்வாதார வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு ஊரக வளர்ச்சி துறை, வருவாய் துறை, மீன்வள துறை, வேளாண்மை துறை, கால்நடை துறை ஆகிய துறைகளில் உள்ள மாவட்ட அலுவலர்கள், தன்னார்வ தொண்டு அமைப்பு, ஊராட்சி பிரதிநிதிகள் அடங்கிய மாவட்ட அளவிலான திட்ட செயல்பாடு ஆலோ சனை குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சி யர் தலைமையில் செயல்படும் இக்குழு மூலம் ரூ.17.61 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதில் 3962 சுய உதவிக்குழுக்களுக்கு சுழல்நிதியும், 332 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பொருளாதார கடன் உதவியும், 2197 ஊனமுற்ற நபர்களுக்கு வாழ்வாதார உதவியும் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 40 ஆயிரம் மகளிர் நேரிடையாக பயன் அடைந்துள்ளனர்.
 

                      கல்வி உதவி தொகை: சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த மாணவ& மாணவியருக்கு 2008&09ம் ஆண்டிற்கு ரூ.2700 வீதம் 7649 மாணவ& மாணவிகளுக்கு ரூ.2 கோடியே 6 லட்சத்து, 52 ஆயிரத்து 300 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இது போன்று 17,3329 குடும்பங்களுக்கு தேசிய காப்பீடு திட்டத்தில் மருத்து அடை யாள அட்டை வழங்கப்பட்டு இதில் 976 குடும்ப அட்டைதாரர்கள் ரூ.45 லட்சம் மருத்து உதவி தொகை பெற்று பயன் பெற்றுள்ளனர். பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் கடற்கரை கிராமங்கள் மற்றும் நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என ஆட்சியர் அலுவலகம் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.



Read more »

30 குழந்​தை​க​ளுக்கு ​ காப்​பீட்டுத் திட்ட அடை​யாள அட்டை

 பண்​ருட்டி: ​ 

                  மன வளர்ச்​சிக் குறை​பாடு உடைய குழந்​தை​க​ளுக்கு இல​வச மருத்​துவ காப்​பீட்​டுத் திட்ட அடை​யாள அட்டை வழங்​கும் விழா,​​ பண்​ருட்டி வட்​டம் ​ பூங்​கு​ணம் வட்​டார வள மைய வளா​கத்​தில் அண்​மை​யில் நடை​பெற்​றது.​  ÷இவ் விழா​வில் கட​லூர் ஓயா​சீஸ் தன்​னார்வ தொண்டு நிறு​வ​னத்​தின் ஒத்​து​ழைப்​போடு,​​ மைய அர​சின் தேசிய அறக்​கட்​டளை மூலம் மன வளர்ச்​சிக் குறை​பாடு,​​ மூளை முடக்கு வாதம் உள்​ளிட்ட நோயால் பாதிக்​கப்​பட்ட 30 குழந்​தை​கக​ளுக்கு தலா ரூ.2 லட்​சம் மதிப்​பு​டைய இல​வச மருத்​து​வக் காப்​பீட்டு திட்​டத்​துக்​கான அடை​யாள அட்​டை​கள் வழங்​கப்​பட்​டன.​  வட்​டார வள​மைய மேற்​பார்​வை​யா​ளர் தங்​க​சாமி தலை​மை​யில் நடை​பெற்ற விழா​வில்,​​ பூங்​க​ணம் ஊராட்​சித் தலை​வர் கிருஷ்​ண​மூர்த்தி,​​ உதவி தொடக்​கக் கல்வி அலு​வ​லர் அறி​வ​ழ​கன் முன்​னிலை வகித்​த​னர்.​  தே​சிய அறக்​கட்​ட​ளை​யின் மாவட்ட பிர​தி​நிதி ஓயா​சீஸ் செய​லர் டாக்​டர் தவ​ராஜ்,​​ திட்​டத்தை செயல்​ப​டுத்​தும் ஐஇ​பிசி செய​லர் முரு​கா​னந்​தம் ஆகி​யோர் விழிப்​பு​ணர்வு சார்ந்த ஆலோ​ச​னை​க​ளை​யும்,​​ இல​வச மருத்​து​வக் காப்​பீட்டு அடை​யாள அட்​டை​யை​யும் வழங்கி​னர்.

Read more »

கரும்பு விவ​சா​யி​கள் கலந்தாய்வு கூட்​டம்

நெய்வேலி:​ 

                       விருத்​தா​ச​லத்தை அடுத்த கார்​கு​டல் கிரா​மத்​தில் கரும்பு சாகு​ப​டி​யில் இயந்​தி​ர​ம​யம் மற்​றும் புதிய தொழில்​நுட்​பங்​கள் பற்​றிய கலந்​தாய்​வுக் குறித்த கரும்பு விவ​சா​யி​கள் கூட்​டம் புதன்​கி​ழமை நடை​பெற்​றது.​  ​ பெண்​ணா​டம் அம்​பிகா சர்க்​கரை ஆலை சார்​பில் நடத்​தப்​பட்ட இக்​க​லந்​தாய்​வுக் கூட்​டத்​துக்கு,​​ அதன் துணைப் பொது​மே​லா​ளர் செந்​தில்​கு​மார் கலந்து கொண்டு,​​ கரும்பு சாகு​ப​டி​யில் ஏற்​ப​டும் ஆள்​பற்​றாக்​கு​றையை போக்​கும் வகை​யில்,​​ இயந்​தி​ர​ம​ய​மாக்​கு​தல் மற்​றும் புதிய தொழில்​நுட்​பங்​கள் குறித்து விளக்​கி​னார்.​ ​ விருத்​தா​ச​லம் பகுதி மேலா​ளர் ஜான​கி​ரா​மன்,​​ உதவி மேலா​ளர் பால​கி​ருஷ்​ணன் மற்​றும் கார்​கு​டல்,​​ பூதா​மூர்,​​ கோ.பொன்​னேரி கிரா​மத்​தைச் சேர்ந்த விவா​சா​யி​கள் பங்​கேற்​ற​னர்.​

Read more »

வாஜ்​பாய் பிறந்​த​நாள் விழா

 சிதம்​ப​ரம்:​ 

          முன்​னாள் பிர​த​மர் வாஜ்​பாய் 86-வது பிறந்​த​நாள் விழா சிதம்​ப​ரம் நகர பாஜக சார்​பில் வெள்​ளிக்​கி​ழமை கொண்​டா​டப்​பட்​டது.​  கட்​சி​யின் நக​ரத் தலை​வர் ஆர்.பால​கி​ருஷ்​ணன் தலை​மை​யில் மின்​ந​கர் அன்​ப​கம் முதி​யோர் இல்​லத்​தில் உள்ள ஆத​ர​வற்ற முதி​யோர்​க​ளுக்கு பிரட்,​​ பால்,​​ பழம் வழங்​கப்​பட்​டது.​ ஸ்ரீ நட​ரா​ஜர் ஆல​யத்​தில் சிறப்பு தீபா​ரா​தனை செய்​யப்​பட்​டது.​  மாவட்​டத் தலை​வர் எஸ்.வி.ஸ்ரீத​ரன்,​​ மாநில பொதுக்​குழு உறுப்​பி​னர் வி.நட​னம்​பிள்ளை,​​ உள்​ளிட்​டோர்  பங்​கேற்​ற​னர்.​

Read more »

ஆதர​வற்​றோ​ருக்கு உதவி

 நெய்வேலி:​ 
 
                      வட​லூர் ஆர்​சீஸ் தொண்டு நிறு​வ​னம் சார்​பில் ஏழை மாண​வர்​கள்,​​ பெற்​றோரை இழந்​த​வர்​கள்,​​ உடல் ஊன​முற்​றோர்,​​ முதி​யோர் உள்​பட சுமார் 600 பேருக்கு கிறிஸ்​து​மஸ்,​​ புத்​தாண்டு மற்​றும் பொங்​கல் விழாவை முன்​னிட்டு புத்​தாடை மற்​றும் இதர உத​வி​கள் வியா​ழக்​கி​ழமை வழங்​கப்​பட்​டன.​  ÷வி​ழா​வுக்கு ஆர்​சீஸ் தொண்டு நிறு​வ​னத் தலை​வர் அன்​ப​ர​சன் தலைமை வகித்​தார்.​  விழா​வில் வட​லூர் ​ வெங்​க​டங்​குப்​பம் அரசு துவக்​கப் பள்​ளி​யில் பயி​லும் 65 ஆதி​தி​ரா​விட பழங்​கு​டி​யின மாண​வர்​க​ளுக்​கும்,​​ நரிக்​கு​ற​வர் காலனி பள்​ளி​யில் பயி​லும் 40 மாண​வர்​க​ளுக்​கும்,​​ வட​லூர் ஆர்.சி.​ பள்​ளி​யில் பயி​லும் ஆத​ர​வற்ற மாண​வர்​க​ளுக்​கும் புத்​தாடை வழங்​கப்​பட்​டது.​  
 
                அ​ரிமா சங்க மாவட்ட கவர்​னர் ரத்​தி​ன​ச​பா​பதி,​​ துணை கவர்​னர் கல்​யாண்​கு​மார்,​​ இந்​தி​யன் வங்கி முது​நிலை மேலா​ளர் சீனு​வா​சன்,​​ சந்​தி​ர​காசு,​​ ஞான​சே​கர் ஆகி​யோர் கலந்​து​கொண்​ட​னர்.​  விழா ஏற்​பா​டு​களை தொண்டு நிறு​வன துணைத் தலை​வர் ஆரோக்​கி​ய​தாஸ்,​​ செய​லர் ஏசு​தாஸ் உள்​ளிட்​டோர் செய்​தி​ருந்​த​னர்.​ ​ 

Read more »

நெய்வேலில் கிறிஸ்​து​மஸ் கொண்​டாட்​டம்

நெய்வேலி:​ 
 
                    நெய்வேலி மந்​தா​ரக்​குப்​பத்தை அடுத்த ஏ.குற​வன்​குப்​பத்​தில் உள்ள டி.சி.எம்.​ மன​வ​ளர்ச்​சிக் குன்​றி​யோர் பள்​ளி​யில் கிறிஸ்​து​மஸ் விழா வியா​ழக்​கி​ழமை கொண்​டா​டப்​பட்​டது.​  
 
                          நெய்வேலி பங்​கு​தந்தை ஆரோக்​கி​ய​தாஸ் அடி​கள் சிறப்பு விருந்​தி​ன​ரா​கக் கலந்​து​கொண்டு மாண​வர்​க​ளின் முன்​னேற்​றத்​திற்​கான ஜெபம் நடத்தி,​​ கிறிஸ்​து​மஸ் செய்தி வழங்​கி​னார்.​  நெய்வேலி லிக்​னைட் சிட்டி அரிமா சங்​கத் தலை​வர் வெற்​றி​வே​லன்,​​ ஆஸ்​தி​ரே​லிய மரி​யன்னை ஊழி​யர் சபை சகோ​தரி ரோஸ்​மேரி ஆகி​யோர் ​  மாண​வர்​க​ளுக்கு இனிப்​பு​க​ளும் பரி​சு​க​ளும் வழங்​கி​னர்.​  நி​யூ​லைட் அறக்​கட்​டளை பொரு​ளா​ளர் ஆரோக்​கி​ய​சாமி தலைமை வகித்​தார்.​ தலைமை ஆசி​ரியை பாக்​கி​யம் வர​வேற்​றார்.​ மன​நல ஆலோ​ச​கர் சகா​ய​ராஜா நன்றி கூறி​னார்.​  கெங்​கை​கொண்​டான்:​​ இதே​போன்று கெங்​கை​கொண்​டான் அரசு கிளை நூல​கத்​தில் நடை​பெற்ற கிறிஸ்​து​மஸ் விழா​விற்கு நூல​கர் வேல்​மு​ரு​கன் தலைமை வகித்​தார்.​  மனி​த​நேய மேம்​பாட்டு மைய நிறு​வ​னர் கே.சி.தம்பி,​​ தமி​ழர் நல அறக்​கட்​டளை தலை​வர் பெரி​யார்​பே​ரன்,​​ ஆன்​மிக நெறி​யா​ளர் சவ​ரி​முத்து ஆகி​யோர் மத நல்​லி​ணக்​கத்​தில் மாண​வர்​க​ளின் பங்கு எனும் தலைப்​பில்  உரை​யாற்​றி​னர்.

Read more »

கடலூ​ரில் கிறிஸ்​து​மஸ் கொண்​டாட்​டம்

கடலூர்​: 

                     கடலூ​ரில் வெள்​ளிக்​கி​ழமை கிறிஸ்​து​மஸ் பண்​டிகை கோலா​க​ல​மா​கக் கொண்​டா​டப்​பட்​டது.​  கிறிஸ்​த​வர்​கள் புத்​தாடை அணிந்து தேவா​ல​யங்​க​ளுக்​குச் சென்று வழி​பட்​ட​னர்.​ தேவா​ல​யங்​கள் சிறப்​பாக அலங்​க​ரிக்​கப்​பட்டு இருந்​தன.​  

                  சில ஆல​யங்​க​ளில் வியா​ழக்​கி​ழமை நள்​ளி​ரவு 12 மணிக்​கும்,​​ பல ஆல​யங்​க​ளில் வெள்​ளிக்​கி​ழமை அதி​காலை 5 மணிக்​கும் சிறப்பு ஆரா​த​னை​கள் நடை​பெற்​றன.​  க​ட​லூர் மஞ்​சக்​குப்​பம் மைதா​னத்​தில் உள்ள புனித கார்​மேல் அன்னை ஆல​யத்​தில் வியா​ழக்​கி​ழமை நள்​ளி​ரவு 12 மணிக்கு கிறிஸ்​து​மஸ் ஆரா​தனை சிறப்​பாக நடை​பெற்​றது.​  குழந்தை யேசுவை வர​வேற்று பாடல்​கள் பாடப்​பட்​டன.​ பங்​குத் தந்தை அல்​போன்ஸ் சந்​தா​னம் அடி​கள் தலை​மை​யில் சிறப்பு பிரார்த்​தனை நடந்​தது.​  

                 தி​ருப்​பாப்பு​லி​யூர் கம்​மி​யம்​பேட்டை புனித சூசை​யப்​பர் ஆல​யத்​தில் பங்​குத்​தந்தை ஆரோக்​கி​ய​நா​தன் தலை​மை​யில் கிறிஸ்​து​மஸ் சிறப்பு ஆரா​தனை நடந்​தது.​  க​ட​லூர் புனித வள​னார் கல்​லூ​ரிச் சாலை​யில் உள்ள தூய எப்​பி​பெனி ஆலயம்,​​ பழைய மருத்​து​வ​ம​னைச் சாலை​யில் உள்ள தூய​யோ​வான் ஆலயம்,​​ பாரதி சாலை​யில் உள்ள ஏ.எல்.சி.​ ஆல​யம்,​​ செம்ண்​ட​லம் டி.இ.எல்.சி.​ பாவ​நா​சர் ஆலயம் சொரக்​கல்​பட்டு ஏழாம் நாள் அட்​வென்ட் ஆல​யம்,​​ முது​ந​கர் புனித சவே​ரி​யார் ஆல​யம் உள்​ளிட்ட பல்​வேறு ஆலயங்​க​ளி​லும் சிறப்​புப் பிரார்த்​த​னை​கள் நடந்​தன.

Read more »

கார் மீது பைக் மோதல் 2 மாணவர்கள் படுகாயம்

கடலூர் :

                    கார் மீது பைக் மோதியதில் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் இருவர் படுகாயமடைந்தனர். சிதம்பரம் ராஜாமுத் தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிபவர் டாக்டர் சத்தியநாராயணன் ஸ்ரா(55). இவர் நேற்று முன்தினம் இரவு காரில் (பி.ஒய்-01-ஏ.ஜே-1407) சிதம்பரத்திலிருந்து அண் ணாமலை பல்கலை கழக துணைவேந்தர் பங்களா அருகே வலது புறமாக வந்து திரும்பினார். அப் போது எதிரே வந்த மோட் டார் சைக்கிள் (பி.ஒய்-01-ஆர்.கியூ-2643) கார் மீது மோதியது.

                   இந்த விபத்தில் மோட் டார் சைக்கிளில் வந்த இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் அருண்குமார் சிங்(20), பிரேம்குமார் சிங்(19) இருவரும் படுகாயமடைந்தனர். உடன் அவர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

சிறுமி பாலியல் பலாத்காரம்

கடலூர் :

              சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர். விழுப்பரம் அடுத்த சொர்ணாவூரை சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி மகள் இலக்கியா (10) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 5ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை இயற்கை உபாதைக்காக தோப்பிற்கு சென்றார். அங்கிருந்த மர்ம ஆசாமி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ஆபத்தான நிலையில் இருந்த இலக்கியாவை அவரது பெற்றோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். வளவனூர் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபரை தேடிவருகின்றனர்.

Read more »

மீனவர்களுக்கிடையே மோதல் பரங்கிப்பேட்டையில் பதட்டம்

பரங்கிப்பேட்டை :

                          பரங்கிப்பேட்டை அருகே மீனவர் களுக்கிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலை தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் பரங்கிப் பேட்டை அடுத்த புதுப்பேட்டை மீனவர் கிராமத்தில் சின்னபட்டினம், பெரியபட்டினம் என இரு பிரிவினர் உள்ளனர். சின்னபட்டனத்தை சேர்ந்தவர்கள் பல ஆண்டுகளாக கிராம தலைவராக இருந்து வந்தனர். கடந்த 6 மாதத்திற்கு முன் நடந்த தலைவர் தேர்வின் போது தங்கள் பிரிவைச் சேர்ந்த ஒருவர் தலைவராக இருக்க வேண்டும் என பெரியபட்டினத்தை சேர்ந்தவர்கள் கூறினர். இதனால் ஏற்பட்ட பிரச்னை காரணமாக இரு பிரிவினரும் தனித்தனியே தலைவரை தேர்வு செய்தனர்.

                         இந்நிலையில் நேற்று இரு பிரிவைச் சேர்ந்த இளைஞர்கள் அன்னப் பன்பேட்டையில் நடந்த கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டு விளை யாடினர். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. சின்னபட்டினம் பிரிவில் குட்டியாண்டி தலைமையிலும், பெரியபட்டினம் பிரிவில் நமச் சிவாயம் தலைமையிலும் இரு கோஷ்டியினரும் மோதிக் கொண்டனர். இதில் படுகாயமடைந்த நமச்சிவாயம் கோஷ்டியைச் சேர்ந்த மணிவண் ணன் (40), கந்தன் (28), சக்திவேல் (35) பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.இருபிரிவினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலைத் தொடர்ந்து பதட்டம் நிலவி வருவதால் பரங் கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Read more »

வாலிபர் சங்கத்தினர் 96 பேர் கைது

விருத்தாசலம் :

                      விருத்தாசலம் அருகே தடையை மீறி அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க முயன்ற வாலிபர் சங்கத்தினர் கைது செய்யப் பட்டனர்.கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பழையபட்டினம் கிராமத்தில் நூலகம் அருகில் அரசின் அனுமதியின்றி கடந்தாண்டு அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது.

                              இதனால் அப்பகுதியில் உள்ள இரு தரப்பினருக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கீழ் வெண்மணி நினைவு தினமான நேற்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க அப்பகுதி ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முடிவு செய்தனர். இதற்கு மற் றொரு தரப்பில் எதிர்ப்பு தெரிவித்ததால் பதட்டம் நிலவியது. அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் தாசில் தார் பூபதி தலைமையில் நடந்த சமாதானக் கூட்டம் தால்வியடைந்தது. இதனால் திட்டமிட்டபடி அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்படும் என ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அறிவித்தனர்.இதனால் நேற்று காலை பழையபட்டினம் கிராமத்தில் கூடுதல் எஸ்.பி., சக்திவேல் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தாசில் தார் பூபதி, ஆர்.ஐ., முரளி மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் முகாமிட்டிருந்தனர். பலத்த பாதுகாப்பையும் மீறி வாலிபர் சங்கத்தினர் மாவட்ட தலைவர் அசோகன், செயலாளர் ராஜேஷ்கண்ணா, துணை செயலாளர் வாஞ் சிநாதன் உள்ளிட்ட 96 பேர் பகல் 12.45 மணி அளவில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க காலனி வழியாக ஊர்வலமாக சென் றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

Read more »

பி.ஆர்.ஓ., அலுவலக ஊழியர்கள் இடமாறுதல் உத்தரவால் கலக்கம்



கடலூர் :

                          கடலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் தொடரும் அதிரடி இடமாற்றல் உத்தரவால் ஊழியர்கள் கலக்கமடைந் துள்ளனர். கடலூர் மாவட்ட உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணிபுரிந்தவர் நெடுமாறன். இவர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஒன்னரை ஆண்டு பி.ஆர். ஓ.,வாக பொறுப்பு வகித்து வந்தார். அப்போது முதல்வர் நிவாரண நிதி மற்றும் அண்ணாதுரை நூற் றாண்டு விழாவில் மோசடி என அடுக்கடுக்கான புகாரின் காரணமாக அலுவலக பணியாளர்கள் அனை வரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

                           அதன் அடிப்படையில் கடந்த 24ம் தேதி நெடுமாறன் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். மேலும் உதவி மக்கள் தொடர்பு அதிகாரி ராமசாமி தேனி மாவட்டத்திற்கும், டிரைவர் முருகன் கோவை மாவட்டத் திற்கும் மாற்றப்பட்டனர். இந்நிலையில் போட்டோகிராபர் ஈஸ் வரன் தர்மபுரி மாவட் டத்திற்கு மாற்றம் செய்து உத்தரவிடப் பட்டுள்ளது. மேலும், அலுவலகத்தில் உள்ள அனைவரும் மாற்றப்படுவர் எனக் கூறப்படுவதால், மாறு தல் உத்தரவு வராதவர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

Read more »

சமச்சீர் கல்வி திட்டத்தில் பாடம் நடத்த உத்தரவு 30ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்க வேண்டும்

கடலூர் :

                      சமச்சீர் கல்வி முறைக்கான பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட ஆறாம் வகுப்பு அறிவியலில் மாதிரிக்காக இரண்டு பாடங்கள், அந்தந்த கல்வி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் பாடத்தை நடத்தி மாணவர்களின் கற்கும் திறனையும், ஆசிரியர்களின் கருத்தையும் அறிய, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி பயிற்சி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் தற்போது ஸ்டேட் போர்டு, மெட்ரிகுலேஷன், சி.பி.எஸ்.இ., ஆகிய பாடத்திட்டத்தின் கீழ் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. வெவ்வேறு பாடத்திட்டத்தில் நடைபெறுவதை தவிர்த்து, ஏழை, எளியவர்கள் என அனைவரும் ஒரே மாதிரியாக கற்க வேண்டிய சூழல் ஏற்படுத்த வேண்டும். ஒரே பாடத்திட்டத்தின் கீழ் கல்வி முறையை மாற்றியமைக்க வேண்டுமென அரசுக்கு பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்தன.


                           இதைத் தொடர்ந்து, சமச்சீர் கல்வியைக் கொண்டு வர அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. ஸ்டேட் போர்டு, மெட்ரிகுலேஷன் பாடங்களை இணைத்து ஒரே பாடத்திட்டத்தின் கீழ் கொண்டு வர திட்டமிடப்பட்டது. இதற்காக ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் கொண்ட குழுக்கள் அமைத்து பாடத்திட்டங்கள் வரையறுக்கப்பட்டன. பின்னர் மின் அஞ்சல் மூலம் ஆசிரியர்கள், கல்வியாளர்கள் கருத்துக்களை ஏற்ற பாடத் திட்டங்களில் சில திருத்தங்களைச் செய்து இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. வரும் கல்வி ஆண்டில் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வித் திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.

                             முதல் கட்டமாக ஆறாம் வகுப்பு அறிவியல் பாடத்தில் மாதிரிக்காக இரண்டு பாடங்களை, மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு மின் அஞ்சல் மூலம் நேற்று முன்தினம் இரவு அனுப்பப்பட்டது. இதுகுறித்த தகவல், அந்தந்த கல்வி மாவட்டங்களுக்கு நேற்று காலை தெரிவிக்கப்பட்டது. மேலும், இரண்டு பாடங்களையும் அரையாண்டு விடுமுறை நாட்களில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ, மாணவியரை அழைத்து, அனுபவமுள்ள ஆசிரியர்களைக் கொண்டு பாடம் நடத்தி மாணவர்கள் கற்கும் திறனை கண்டறியவும், ஆசிரியர்களின் கருத்துக்களையும் வரும் 30ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டுமென ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி பயிற்சி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.சமச்சீர் கல்வி முறை என்பது அனைத்து ஆசிரியர்கள், கல்வியாளர்களால் வரவேற்கக் கூடிய ஒன்று. ஆனால், அவசர கோலத்தில் அள்ளித் தெளித்தாற் போல் இரண்டு நாட்களுக்கு முன் பாடத்திட்டத்தை அனுப்பி, அரையாண்டு விடுமுறையில் நடத்தி அதற்கான முடிவுகளை 30ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என நினைப்பது, ஆசிரியர்கள் மத்தியில் சற்று தொய்வை
ஏற்படுத்தியுள்ளது.

                               அரையாண்டு விடுமுறையில் மாணவர்களை தேடிப் பிடித்து பள்ளிக்கு கொண்டு வருவது சிரமம். மேலும், அனுப்பி வைக்கப்பட்டுள்ள பாடத்தை ஆசிரியர்களுக்கு வழங்கி, அவர்கள் முழுமையாக தெரிந்து கொள்ள சற்று கால அவகாசம் தேவை.அது மட்டுமின்றி, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழை காரணமாக காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் அரையாண்டு தேர்வின் போது விடுமுறை விடப்பட்டது. இந்த தேர்வுகள் ஒரு சில மாவட்டங்களில் அரையாண்டு விடுமுறையில் வைக்கப்பட்டுள்ளது. எனவே, கருத்துக்களை அறிய வரும் 30ம் தேதி என்பதை நீட்டிக்க வேண்டுமென ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Read more »

சுனாமி 5ம் ஆண்டு இன்று நினைவு நாள்

கடலூர் :

                சுனாமி ஐந்தாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, கடலூரில் அமைதி ஊர்வலம் நடக்கிறது.

                          கடந்த 2004ம் ஆண்டு டிச. 26ம் தேதி, இந்தோனேசியாவில் உள்ள சுமத்திரா தீவில் ஏற்பட்ட பூகம்பம் காரணமாக உருவான சுனாமி பேரலைகள் இந்தோனேசியா, மலேஷியா, தாய்லாந்து, இலங்கை, உட்பட பல நாடுகளின் கடலோர பகுதிகளில் கோரத்தாண்டவம் ஆடியது. அந்தமான் தீவுகள், தமிழகத்தில் நாகை மற்றும் கடலூர் மாவட்டங்கள் சுனாமியால் அதிகளவு பாதிப்புகள் ஏற்பட்டன.

                         இந்த சுனாமியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். தமிழகத்தில் மட்டும் 8,018 பேர் இறந்தனர். ஒரு லட்சத்து 96 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். கடலூர் மாவட்டத்தில் 610 பேர் இறந்தனர்.பெரும் சோகத்தை ஏற்படுத்திய சுனாமி ஏற்பட்டு இன்றுடன் ஐந்தாண்டு நிறைவு பெருகிறது. அதையொட்டி, கடலூர் குழந்தைகள் காப்பகம், தேவனாம்பட்டினம், பில்லுமேடு கிராமம், பரங்கிப்பேட்டை, அன்னங்கோவில் மாதாகோவில் தெரு, சின்னூர், சி.புதுப்பேட்டை, வேளங்கிராயன்பேட்டை, புதுக்குப்பம், சாமியார்பேட்டை பகுதிகளில் அமைதி ஊர்வலம் மற்றும் நினைவு தூண்களில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன.சுனாமியின்போது ஊட்டியில் இருந்து கடலூர் சில்வர் பீச்சுக்கு வந்த தம்பதிகள்-சபியுல்லா, பர்வீன், இவர்களது குழந்தைகள் தன்வீர்(7), தெல்கா(3), மற்றும் எட்டு மாத கை குழந்தை பிலால் ஆகியோர் சிக்கினர். இதில் சபியுல்லா, பர்வீன், பிலால் பலியாயினர். தன்வீர் மட்டும் தப்பினார். அப்போது, எஸ்.பி., முகாம் அலுவலகம் அருகே காருடன் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் தெல்காவை எஸ்.பி., பன்னீர்செல்வம் காப்பாற்றி அருகிலிருந்தவரிடம் ஒப்படைத்துவிட்டு, தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டார். தெல்காவை வாங்கிச் சென்றது யார் என்ன என்று தெரிய வில்லை. இதற்கிடையே, சபியுல்லா உறவினர்கள் இறந்தவர்களின்உடலை பெற்றுக்கொண்டு உயிர் தப்பிய தன்வீருடன் தெல்காவை தேடினர். எங்கு தேடியும் சிறுவன் தெல்கா இன்று வரை கிடைக்கவில்லை.

                     இது குறித்து, தெல்கா உறவினர் கூறுகையில், "கடந்த ஐந்து ஆண்டுகளில் தெல்காவை கண்டுபிடிக்க பல லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளோம். ஆனால், இதுவரை தெல்கா இருக்குமிடம் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. சுனாமியில் உயிர் தப்பிய தன்வீர் எங்களுடன் இருப்பது மட்டுமே எங்களுக்கு கிடைத்த ஆறுதல்' என்றனர்.குளச்சலில் பிறந்து, சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், தட்டுதடுமாறி செல்லும் முதியவர்கள் வரை 414 பேரை காவு கொண்டது சுனாமி. இதில் 21 நாட்களே ஆன சின்னஞ்சிறு குழந்தை உட்பட 23 பேரின் உடல்களை கூட கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு சுனாமியின் கோரதாண்டவம் இருந்தது. 5வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, இன்று குளச்சல் மற்றும் கொட்டில்பாட்டில் உள்ள சுனாமி நினைவிடங்களில் அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்துகின்றனர்.

Read more »

.மதுவிலக்கு வழக்கு வாகனங்கள் வரும் 30ம் தேதி கடலூரில் ஏலம்

கடலூர்:

                         மது விலக்கு வழக்கு வாகனங்கள் வரும் 30ம் தேதி கடலூரில் ஏலம் விடப்படுகிறது.

இதுகுறித்து கூடுதல் எஸ்.பி., சக்திவேல் விடுத் துள்ள செய்திக்குறிப்பு:


கடலூர் மாவட்டத்தில் மதுவிலக்கு தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட 44 இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனம் ஒன்று, நான்கு சக்கர வாகனங்கள் மூன்று என மொத்தம் 48 வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது.

                          இந்த வாகனங்களை இன்று முதல் எஸ்.பி., அலுவலக வளாகத்தில் அலுவலக நேரத்தில் பார்வையிடலாம்.கலால் பிரிவு உதவி ஆணையர், அரசு தானியங்கி பொறியாளர் ஆகியோர் முன்னிலையில் 30ம் தேதி காலை 10 மணிக்கு ஏலம் நடைபெறும். வாகனத்திற்கு உரிமையாளர் இருக்கும்பட்சத்தில் ஏலத் தொகையுடன் 12.5 சதவீதம் விற்பனை வரி செலுத்த வேண்டும். உரிமையாளர் இல்லாதபட்சத் தில் 4 சதவீதம் விற்பனை வரி செலுத்த வேண்டும்.ஏலம் கேட்க விரும்புவோர் இரு சக்கர வாகனத்திற்கு 500 ரூபாயும், நான்கு சக்கர வாகனத்திற்கு 5,000 ரூபாயும் முன்பணமாக 30ம் தேதி காலை 8.30 மணிக்குள் மதுவிலக்கு பிரிவு கூடுதல் எஸ்.பி.,யிடம் செலுத்த வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

விக்கிரவாண்டி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலைசீரமைப்பு பணி விரைவில் துவக்கம்

கடலூர் :

                        விக்கிரவாண்டி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ் சாலை திட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் 25.20 கி.மீ., சாலை 10.87 கோடி ரூபாய் செலவில் விரிவுபடுத்தப்பட உள்ளது.கடலூர் கலெக்டர் சீத்தாராமன் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி முதல் கும்பகோணம் வழியாக, தஞ்சாவூர் வரையிலான 165 கி.மீ., நீளமும், 7 மீட்டர் அகலமும் கொண்ட சாலை, "45சி' தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப் பட்டுள்ளது. இது, விக்கிரவாண்டியிலிருந்து (150/4 தேசிய நெடுஞ்சாலை) கடலூர் மற்றும் அரியலூர் வழியாக, தஞ்சாவூர் வரை (80/4 என்.எச்) அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.இதில், கடலூர் மாவட்டத்தில் 25.20 கி.மீ., சாலை 2008-09ம் ஆண்டிற்கு 10.87 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு, அரசால் ஒப்புதல் அளிக் கப்பட்டு, விரைவில் பழுதடைந்த சாலையை சரி செய்து அகலப்படுத்தப்பட உள்ளது. இச்சாலை பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக அரசால் 2.80 கோடி ரூபாய்க்கான திட்ட மதிப்பீடு ஒப்புதல் அளித்து பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. விக்கிரவாண்டி-கும்பகோணம் தேசிய நெடுஞ் சாலையில் சில பாலங்கள், தேசிய நெடுஞ்சாலை யின் தரத்தில் இல்லாததால், இந்த பாலங்களை 12 மீட்டர் அகலத்தில் அமைக்க, ஒப்பந்த புள்ளிகள் 17ம் தேதி கோரப்பட்டுள்ளன. ஒப்பந்த புள்ளிகள் முடிவு செய்தவுடன், பணிகள் விரைவில் துவங்கும்.

                        தற்போது, வடலூர் அடுத்த கண்ணுத்தோப்பு பாலத்தில், பக்கவாட்டு தடுப்புச் சுவர்கள் 22ம் தேதி கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இத்தகவல்கள் தஞ்சாவூர் திட்ட இயக்குனர் தேசிய நெடுஞ் சாலைத்துறை "அத்தாரிட்டி ஆப் இந்தியா'விடம் இருந்து பெறப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட் டுள்ளது.

Read more »

சுனாமி சோகத்திற்கு இன்று ஐந்தாம் ஆண்டு சிதம்பரம் கடற்கரை கிராமங்களில் அஞ்சலி

சிதம்பரம் :

                        சுனாமி சோகம் நடந்து இன்றுடன் ஐந்தாம் ஆண்டு நிறைவு பெறுவதையொட்டி சிதம்பரம் கடற்கரை மீனவ கிராமங்களில் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடக்கிறது.சுனாமி ஆழிப்பேரலை, நொடிப்பொழுதில் லட்சக்கணக்கான உயிர்களை பலிவாங்கியதும், கடற்கரை கிராமங்களை சின்னாபின்னமாக்கியதும் நெஞ்சை விட்டு நீங்கா பெரும் சோகமாகும். இந்த கோர சம்பவம் நடந்து இன்றுடன் (26ம் தேதி) ஐந்து ஆண்டு நிறைவு பெறுகிறது.

                      சுனாமியால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் அரசு மற்றும் தொண்டு அமைப்புகள் சார்பில், நிவாரணங்கள் மேற்கொண்டு அவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்திக் கொடுத்துள்ள போதும் தாய், தந்தையை இழந்த குழந்தைகள், குழந்தைகளை இழந்த பெற்றோர், உறவுகளை இழந்தவர்கள் இன்றும் அந்த சோகத்தில் இருந்து முழுமையாக விடுபடாதவர்களாகவே உள்ளனர்.இந்நிலையில், சுனாமி சோக சம்பவம் நடந்து இன்றுடன் ஐந்து ஆண்டு நிறைவு பெறுவதையொட்டி பல இடங்களில் இன்று அஞ்சலி நிகழ்ச்சி நடக்கிறது.சிதம்பரம் கிராமங்களான; பரங்கிப்பேட்டை, அன்னன்கோவில், பெரியக்குப்பம், சாமியார்பேட்டை மற்றும் கிள்ளை முழுக்குத்துறை, சின்னவாய்க்கால், நடுமுடசல் ஓடை, பிச்சாவரம் உள்ளிட்ட பல கிராமங்களில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் புண்ணியாதானம், மனித சங்கிலி, தீப ஜோதி ஓட்டம், அமைதி ஊர்வலம் என பல்வேறு நிகழ்ச்சிகள் இன்று நடக்கின்றன.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior