உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 16, 2011

கடலூர் மாவட்ட தேர்தல் இணையத்தளம்

2011 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக கடலூர் மாவட்ட நிர்வாகம், தமிழக அரசின் கடலூர் மாவட்ட  இணையத்தளத்தில் தேர்தலுக்கென ஒரு வலைப்பக்கதினை தொடங்கி உள்ளது. 

இந்த தேர்தல் இணையதளத்தில் கடலூர் மாவட்ட சட்டமன்ற தொகுதி விவரங்கள், வாக்காளர்கள் எண்ணிக்கை, பதட்டம் நிறைந்த வாக்குசாவடிகள், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. 



மேலும் அதிக விபரங்களுக்கு 
 
 
 பார்க்கவும்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு

           2011 சட்டமன்றத் தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

            கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் திமுக கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திமுகவிற்கு 3 தொகுதிகளும், பாட்டாளி மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகளும், காங்கிரஸ் கட்சிக்கு 1 தொகுதியும், மூவேந்தர் முன்னேற்ற கழகம் கட்சிக்கு 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

விபரம்;


திமுக (3 தொகுதிகள்)  -   கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி

பாமக (2 தொகுதிகள்)  - நெய்வேலி, புவனகிரி

விசிக (2 தொகுதிகள்)  - காட்டுமன்னார்கோயில் (தனி) , திட்டக்குடி (தனி)

காங்கிரஸ் ( 1தொகுதி ) - விருத்தாசலம்

மூமுக ( 1தொகுதி ) -  சிதம்பரம்


வேட்பாளர்கள் 


குறிஞ்சிப்பாடி - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் (திமுக)

நெய்வேலி - தி. வேல்முருகன் (பாமக)

காட்டுமன்னார்கோயில் (தனி) - செல்வபெருந்தகை ( விசிக)  

திட்டக்குடி  (தனி) - தாமரைச்செல்வன்  (விசிக)





Read more »

கடலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் அரசியல் கட்சிக் கொடிகள் பறக்கத் தடை

கடலூர:

          கடலூர் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பொது இடங்களில் அரசியல் கட்சிக் கொடிகள் பறக்கத் தடை விதிக்கப்பட்டு இருப்பதாக, மாவட்ட ஆட்சியர் பெ. சீதாராமன் தெரிவித்தார்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை  மாவட்ட ஆட்சியர் பெ. சீத்தாராமன்கூறியது: 

             கடலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் ஏராளமாக கட்சிக் கொடிகள், கம்பங்களில் பறந்துகொண்ட இருக்கின்றன. தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி பொது இடங்களில் உள்ள அனைத்து அரசியில் கட்சிக் கொடிகளும், 16-ம் தேதிக்குள் அகற்றப்பட வேண்டும். கொடிக் கம்பங்களில் பூசப்பட்டு உள்ள வர்ணங்கள் மீது வெள்ளை வர்ணம் பூசப்பட வேண்டும். இதற்கு 48 மணி நேரம் கால அவகாசம் அளிக்கப்பட்டு இருக்கிறது.

             அவ்வாறு செய்யப் படாவிட்டால் தேர்தல் நடத்தை விதிகளின்படி, 17-ம் தேதி முதல் அனைத்துக் கொடிகளும் அகற்றப்பட்டு, கொடிக் கம்பங்களுக்கு வெள்ளை பூசப்படும். இதற்கான செலவு சம்பந்தப்பட்ட கட்சி வேட்பாளரின் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும். நகரப் பகுதிகளில் கண்ணில் படும்படியான, தேர்தல் விளம்பரங்கள் அனுமதிக்கப் படமாட்டாது. கிராமங்களில் தனியார் கட்டடங்களில் அவர்களின் அனுமதி பெற்று விளம்பரம் செய்யலாம்.  கடலூர் மாவட்டத்தில் வாகனத் தணிக்கைகளில் இதுவரை, 2 இடங்களில் மொத்தம் ரூ.6.25 லட்சம் பணம் பிடிபட்டு உள்ளது. இவ்வாறு பிடிக்கப்படும் பணம் வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்படும். அப்பணத்துக்கு உரிய முகாந்திரம் இருந்தால், அவற்றை அளித்து தேர்தல் முடிந்தபிறகு பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். ஒரு லட்சத்துக்கு மேல் யாரும் பணம் எடுத்துச் செல்ல வேண்டாம். 

               வங்கிகளில் ரூ.1 லட்சத்துக்குமேல் பணம் எடுக்க வேண்டாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் அளிப்பதைக் தடுக்கவே இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் வைக்கப்பட்டு இருந்த 5,651 விளம்பர பேனர்கள், டிஜிட்டல் பேனர்கள், தட்டிகள் இதுவரை அலுவலர்கள் மூலம் அகற்றப்பட்டு உள்ளன. 

இவற்றில் கட்சி வாரியாக அகற்றப்பட்டவை

தி.மு.க. 1,735, 

அ.தி.மு.க. 2,082, 

காங்கிரஸ் 205, 

பா.ம.க. 142, 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 832, 

தே.மு.தி.க. 250.

                இவைகளை அகற்றுவதற்கான செலவுத் தொகை சம்பந்தப்பட்ட கட்சி வேட்பாளர்களின் தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும். தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் கூடுதல் நபர்களை சேர்த்தல், கூடுதல் தொகை வழங்குதல், அதன்மூலம் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயற்சித்தல் உள்ளிட்ட புகார்களைக் கண்காணிக்க, வட்டார வாரியாக கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள். இதில் தவறுகள் கண்டறியப் பட்டால், சம்மந்தப்பட்ட ஊராட்சிமன்றத் தலைவரின் காசோலை பணப் பட்டுவாடா அதிகாரம் பறிக்கப்படும். 

               அரசின் பல்வேறு திட்டங்கள் வழியாக தவறுகள் நடைபெறாமல் இருக்க ஒவ்வொரு துறையிலும், கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிகள் மூலமும், நிதியளிப்பு நிறுவனங்கள் மூலமும் பணப் பட்டுவாடா நிறுத்தப்படுகிறது. 1-7-2010 முதல் 25-1-2011 வரை 1,88,899 பேருக்கு புகைப்படத்துடன் கூடிய தேர்தல் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. 427 பேருக்கு வழங்க வேண்டியது இருக்கிறது. நகல் வாக்காளர் அடையாள அட்டைகள் 16-ம் தேதிக்கு மேல் வழங்கப்பட மாட்டாது. புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 26,622 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களின் விண்ணப்பங்கள் கோட்டாட்சியர்கள் மூலம் பரிசீலிக்கப்பட்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார் ஆட்சியர். மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜேந்திரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) வீரராகவ ராவ், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பொ.முத்தையா உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் லோக் ஜனசக்தி கட்சி 2 தொகுதிகளில் போட்டி

சிதம்பரம்:

              கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளில் சிதம்பரம், புவனகிரி தொகுதிகளில் தமிழக லோக்ஜனசக்தி தனித்துப் போட்டியிடுவதாக அக்கட்சி மாநில செயலாளர் ஆர்.பன்னீர்  அறிவித்துள்ளார்.

இதுகுறித்து லோக் ஜனசக்தி கட்சிமாநில செயலாளர் ஆர்.பன்னீர்   வெளியிட்டுள்ள அறிக்கை: 

          தேசிய லோக் ஜனசக்தி கட்சி தலைவர் ராம்விலாஸ்பாஸ்வான் எம்பி, தமிழக மாநிலத் தலைவர் சி.வித்யாதரன் ஒப்புதலுடன் கடலூர் மாவட்டத்தில் மாநிலச் செயலாளர் ஆர்.பன்னீர் ஆகிய நான் சிதம்பரம் தொகுதியிலும், இளைஞரணி மாவட்டத் தலைவர் ஆர்.கமலக்கண்ணன் புவனகிரி தொகுதியிலும் வேட்பாளராக நிறுத்தப்பட்டு தனித்து போட்டியிடுவார்கள் என ஆர்.பன்னீர் தெரிவித்துள்ளார்.

Read more »

தமிழ்நாட்டில் சிறந்த மருத்துவமனையாக கடலூர் அரசு மருத்துவமனை தேர்வு

கடலூர் : 

         சிறந்த மருத்துவமனைக்கான விருது கடலூர் அரசு பொது மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழக சுகாதாரத்துறை மற்றும் இந்திய தொழில், வர்த்தக சபை சார்பில் சுகாதாரம் குறித்த மாநாடு மற்றும் கண்காட்சி சென்னையில் நடந்தது. மாநாட்டில் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் மருத்துவமனைகளை ஆய்வு செய்து விருது வழங்கப்பட்டது. இதில் தமிழ்நாட்டில் சிறந்த மருத்துவமனையாக கடலூர் அரசு மருத்துவமனை தேர்வு செய்யப்பட்டது. இதற்கான விருதை கடலூர் மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குனர் கமலக்கண்ணன் பெற்றுக் கொண்டார்.

Read more »

கடலூர் சோதனை சாவடியில் காரில் ரூ.2 லட்சம் சிக்கியது


கடலூர்

            சட்டசபை தேர்தலையொட்டி தமிழகத்தில் தேர்தல் விதிகள் அமல்படுத்தப்பட்டு தேர்தல் அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் அதிரடி வாகன சோதனை நடத்தப்பட்டதில் ஏராளமான பணம் சிக்கியது.

              அதேபோல் நேற்று மாலை கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் தொகுதி தேர்தல் உதவி அதிகாரி அசோகன், அலுவலர்கள் பழனி, சிவா மற்றும் போலீசார் வாகனங்களை சோதனையிட்டனர். இதில், திண்டிவனத்தில் உள்ள டிராவல்ஸ் உரிமையாளர் தனவேந்தன் (வயது 40), டிரைவர் செங்குட்டுவன் (28) ஆகியோர் சேர்ந்து வந்த காரில் ரூ.2 லட்சம் சிக்கியது.

              இதுபற்றி அதிகாரிகள் விசாரணை செய்தபோது, கடலூரில் புதிய கார் வாங்குவதற்காக புதுவையில் உள்ள ஒரு நண்பரிடம் இருந்து அந்த பணத்தை வாங்கி வந்ததாக 2 பேரும் தெரிவித்தனர். அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more »

Party flags should not be hoisted in public places, says Cuddalore Collector


P.Seetharaman


CUDDALORE: 

        The Election Commission has instructed political parties not to hoist party flags in public places. Even flag posts installed in public places should not have any colouring and should be white washed, said P. Seetharaman, Collector.

          Addressing a press conference here on Tuesday, he said political parties would have to remove the flags (not flag posts) within 48 hours, failing which the officials would do it themselves from Thursday. So far, over 5,600 flexi boards and posters put up by various political parties were removed by the officials and 62 cases of poll violations booked.

           The Collector further said that there were 47 polling stations having more than 1,200 voters, two with over 1,400 voters and one with over 1,500 voters. With the consent of the Election Commission, auxiliary polling stations would be set up in those areas. There were 186 critical polling locations and 199 critical polling stations in the district, the Collector said. As regards vehicle-checks and seizure of cash, the Collector said that it was being done with the objective of eliminating misuse of money in elections.

Read more »

Laptops to monitor voting in Cuddalore District



Collector P.Seetharaman explaining the functional aspects of laptops in polling stations, in Cuddalore on Tuesday.

CUDDALORE: 

         Laptops with either inbuilt cameras or external web cameras will monitor the day-long voting process in as many as 199 critical polling stations in Cuddalore district.

           Besides recording the happenings inside the polling station, the laptops would also transmit the images to the District Election Officer, the Chief Electoral Officer and the Election Commission, according to P.Seetharaman, District Collector. Before starting the training programme for officials here on Tuesday, the Collector told reporters that the laptop would be positioned in such a way that the whole interior of the polling station would be covered.

        Since, it would be placed far away from the voting compartment it could not capture the image of the Electronic Voting Machines (EVMs) The Collector also said that from the laptops the voting trend could also be obtained on an hourly basis. It would be extremely helpful to know whether there is any excessive polling towards the closing hours, as had been learnt from experience. As in the case of EVMs, all the laptops would be subjected to the scrutiny of the election observers, Mr. Seetharaman said. Additional Collector (Development) K.Veera Raghava Rao said that before putting to use all the laptops would be incorporated with the new format suitable only for the poll process.

             The software would be foolproof as it could not be hacked and could not get corrupted because of the anti-virus features. The bytes recorded in the laptops would have restricted viewers.

Read more »

Manifestos should reflect consumer rights

CUDDALORE: 

            On the occasion of the International Consumer Day, observed on Tuesday, the Consumer Federation-Tamil Nadu has appealed to political parties to incorporate the rights of consumers in their election manifestos. Federation executive general secretary M.Nizamudeen told The Hindu that the forum had sent representations to all parties, the Governor and the Chief Electoral Officer in this regard. It called for formation of separate department for consumer protection. It suggested streamlining of the public distribution department because in the existing setup the cooperative department, Tamil Nadu Civil Supplies Corporation and District Supply Officer were functioning independently with varied power structure. All these departments should be merged and brought under the public distribution department.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior