கடலூர், நவ. 25:
கடலூரில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் இந்திய கடலோர பாதுகாப்பு ரோந்துப் படையினரால் தாக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
கடலூரை அடுத்த தாழங்குடா மீனவர் காலனியைச் சேர்ந்த மீனவர்கள் சுமார் 100 பேர் 20 படகுகளில் வங்கக் கடலில் செவ்வாய்க்கிழமை மீன்பிடிக்கச சென்றனர். 12 கடல் மைல் தூரத்தில் உள்ள பாறை பகுதியில் வஞ்சரம் மீன் கிடைப்பதால் அங்கு அவர்கள் மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். காலை 10 மணி அளவில் இந்தியக் கடலோரக் காவல் படையினர் 3 ரோந்துப் படகுகளில் அங்கு வந்தனர். அவர்கள் மீனவர்களைப் பார்த்து படகுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளனவா? மீன்பிடிக்க உரிமம் பெற்று இருக்கிறீர்களா? 12 கடல் மைலுக்கு அப்பால் வரக்கூடாது என்று கூறி மிரட்டினராம். கடலோரக் காவல் படை சிப்பாய்கள் வைத்து இருந்த, கிரிக்கெட் மட்டை போன்ற கட்டைகளால் மீனவர்களை அடித்து விரட்டினராம். இதில் 10 படகுகளில் இருந்த தாழங்குடா மீனவர்கள் சீனுவாசன், கோதண்டம், மனோகர், ஞானசேகர், அமிர்தலிங்கம், முருகன், அறிவழகன், சுரேஷ், ஆறுமுகம், புண்ணியக்கோடி, செல்வகுமார், சேகர், மாரி, ஆறுமுகம், அருள்தாஸ்,. செந்தில், சக்தி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டவர்கள் தாக்கப்பட்டு உள்காயம் அடைந்தனர். உடனடியாக 20 படகுகளில் இருந்தவர்களும் அங்கு இருந்து தப்பி ஓடிக் கரை சேர்ந்தனர் என்றும் தாழங்குடா மீனவர்கள் தெரிவித்தனர். புதன்கிழமையும் தாழங்குடா மீனவர்கள் 10 படகுகளில் பாறைப் பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்று இருந்தனர். அவர்களையும் ரோந்துப் படையினர் விரட்டத் தொடங்கினர். மீனவர்கள் அங்கு இருந்து தப்பி ஓடிக் கரை சேர்ந்தனர்,.இச்சம்பவம் மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருப்பதாக தாழங்குடா மீனவர்கள் குழு உறுப்பினர் பிச்சாண்டி தெரிவித்தார். இதுபற்றி காவல் துறையில் புகார் தெரிவிக்க விரும்பவிóலலை. காரணம் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை இல்லை. எனவே அனைத்து மீனவர் கிராமங்களுக்கும் தகவல் கொடுத்து இருக்கிறோம். அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளும் வியாழக்கிழமை கூடி முடிவு எடுக்கும் என்றார். பிச் சாண்டி: மீனவர் ஒழுங்குமுறைச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர இருக்கிறது. இதில் 12 கடல் மைலுக்கு அப்பால் மீன்பிடிக்கச் செல்லக் கூடாது, மீறிச் சென்றால் ரூ.9 லட்சம் வரை அபராதம் விதிக்கப்டும், அனைத்து மீனவர்களும் லைசென்ஸ் பெற்று இருக்க வேண்டும், படகுகள் அனைத்தும் பதிவு செய்யப்பட வேண்டும். மீனவர்கள் மீது அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கைகள்பற்றி யாரும் கேள்வி எழுப்ப முடியாது என்றும், அச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.. அதன் அடிப்படையில் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வரும் முன்பாகவே, கடலோரக் காவல் படையினர் சட்டத்தை பயன்படுத்தத் தொடங்கி விட்டனரோ என்ற சந்தேகம் மீனவர்கள் மத்தியிóல் எழுந்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் சுப்புராயன் கூறுகையில், கடலில் அமைதியாக மீன்பிடித்துக் கொண்டு இருந்த நமது மீனவர்கள் தாக்கப்பட்டது கண்டனத்துக்கு உரியது. தீவிரவாதிகளை கண்காணிக்கிறோம் என்ற பெயரில், மீனவர்களையே தாக்குவது வேதனை அளிக்கிறது. அடையாள அட்டை கேட்கிறார்கள். இல்லை என்றால் மீனவளத் துறைதான் அதற்குப் பொறுப்பு. 35 சதவீதம் மீனவர்களுக்குத்தான் இதுவரை அடையாள அடை வழங்கி இருக்கிறார்கள் என்றார்.
Read more »