உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, அக்டோபர் 09, 2009

பண்ருட்டி அருகே இளம்பெண்ணிடம் வரதட்சணை கொடுமை: கணவன்- மாமியார் மீது போலீசில் புகார்

பண்ருட்டி:

              பண்ருட்டி அருகே பக்கிரிபாளையம் சின்ன பள்ளி வாசல் தெருவை சேர்ந்தவர் அப்துல்ரகுமான் (வயது 27). இவரது மனைவி ஜரினா பேகம் (25). இவர்களுக்கு கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத் துக்கு முன்பு வெளிநாட்டில் வேலை செய்து வந்த அப்துல்ரகுமான் பின்னர் வெளிநாடு செல்ல வில்லை.

               திருமணமான சில மாதங்கள் சந்தோசமாக குடும்பம் நடத்தி வந்த அப்துல் ரகுமான் அதன்பிறகு ஜரினாபேகத்தை கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு அப்துல் ரகுமானின் தாய் சலிமாபீ, தம்பி இஸ்மாயில் ஆகியோரும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.  இதுகுறித்து ஜரினாபேகம் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் அப்துல் ரகுமான் மற்றும் அவரது தாய், தம்பி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் 73 சதவீத ஓட்டுப்பதிவு நாளை வாக்கு எண்ணிக்கை

கடலூர்:

             தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சியில் காலியாக உள்ள பதவிகளுக்கு இடை தேர்தல் நேற்று நடைபெற்றது. கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களிலும் காலி யாக உள்ள பதவிகளுக்கு இடைதேர்தல் நடந்தது. காலை 7 மணிக்கு தொடங் கிய ஓட்டு பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. பல ஓட்டு சாவடிகளில் வாக் களார்கள் ஆர்வத்துடன் வந்து ஓட்டு போட்டனர்.

                கடலூர் மாவட்டம் மங்களூர் யூனியன் 14-வது வார்டுக்கான தேர்தல் 71.6 சதவீதமும், 21-வது வார்டில் 70.4 சதவீதமும், பரங்கிப்பேட்டை யூனியன் சிலம்பிமங்கலம் பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் 77 சத வீதமும், விருத்தாசலம் யூனியன் எருமனூர் பஞ்சா யத்து தலைவர் தேர்தலில் 85 சதவீதமும் ஓட்டுகள் பதி வானது.

                எம்.பரூர் பஞ்சாயத்து 3-வது வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் 52.7 சதவீதமும், புதூர் 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 66.5 சதவீதமும், எம்.புளியங்குடி 1-வது வார்டில் 62.6 சதவீதமும், எம்.புளியங்குடி 2-வது வார்டில் 77.8 சதவீதமும், போத்திர மங்கலம் 3-வது வார்டில் 52.6 சதவீதமும் வாக்குகள் பதிவானது.

                 அண்ணாமலை நகர் பேரூராட்சி 3-வது வார்டு உறுப்பினர் தேர்தலில் 93 சதவீதமும், லால்பேட்டை 3-வது வார்டு உறுப்பினர் தேர்தலில் 69 சதவீதமும், விருத்தாசலம் நகராட்சி 25-வது வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் 83.5 சதவீதமும் ஓட்டுகள் பதிவாகி உள்ளது.

             கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ளாட்சியில் காலியான பதவிகளுக்கு நடைபெற்ற இடை தேர்தலில் சராசரியாக 73 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இடைத்தேர்தல் நடந்த அனைத்து வாக்கு சாவடி மையங்களின் வாக்குகளும் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஒரு சில மணி நேரங்களிலேயே முடிவுகள் தெரிந்து விடும்.

Read more »

கடலூர் கல்வி கடன் முகாம்

கடலூர்:

              கடலூர் மாவட்ட அனைத்து வங்கிகள் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான கல்வி கடன் வழங்கும் முகாம் கடலூர் மஞ்சகுப்பம் மைதானத்தில் நடைபெற்றது. தமிழக சுகாதாரதுறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த விழாவில் மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு கல்வி கடன் வழங்கும் முகாமை தொடங்கி வைத்தார்.

             பின்னர் கல்வி கடனுக்காக தேர்வு செய்யப்பட்ட 291 மாணவர்களுக்கு ரூ.3 கோடியே 20 லட்சம் கடன் தொகையை ப.சிதம்பரம் வழங்கினார்.  இதையடுத்து மாணவர்களுக்கான கடன் வழங்கும் முகாமில் அமைக்கப்பட்டு இருந்த இந்தியன் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஐ.சி.ஐ.சி. வங்கி உள்ளிட்ட 25 வங்கி ஸ்டால்களில் கல்வி கடனுக்கான விண்ணப் பங்களை மாணவர்கள் கொடுத்தனர். அனைத்து வங்கிகளிலும் கல்வி கடன் கேட்டு மொத்தம் 10 ஆயிரத்து 404 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.

              இதில் 3571 மாணவர்களின் கடன் விண்ணப்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூ.41 கோடியே 60 லட்சம் கடனுக்கான முன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை நடைபெற்ற கல்வி கடன் வழங்கும் விழாவில் மிக அதிக அளவில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது கடலூரில் நடந்த விழாவில்தான். மேலும் இங்குதான் கல்வி கடனுக்கு அதிக தொகையும் வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவலை கே.எஸ். அழகிரி எம்.பி. தெரிவித்துள்ளார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior