உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 19, 2010

அண்ணா பல்கலைக்கழகத்தின் அகராதி என்ற ஆன்-லைன் தமிழ் அகராதி


Anna university tamil agaraadhi web address

http://www.agaraadhi.com/Agaraadhi/

Read more »

மேற்கு வங்க மாநிலத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மோதல்: 60 பேர் பலி; 90 பேர் காயம்

               மேற்கு வங்க மாநிலத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மோதிய விபத்தில் 60 பேர் பலியாகினர்; 90க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். பிர்பூம் மாவட்டம் சைந்தியா ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை 1.54 மணிக்கு இந்த விபத்து நடந்தது. கோச்பெகாரிலிருந்து சியல்டா நோக்கிச் சென்று கொண்டிருந்த உத்தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயில், சிவப்பு சிக்னலை தவறாகக் கடந்து வந்ததாகக் கூறப்படுகிறது. 
               அந்த நேரத்தில் பாகல்பூலிருந்து ராஞ்சி நோக்கிச் செல்வதற்காக வனாஞ்சல் எக்பிரஸ் பிளாட்பாரம் 4-ல் இருந்து கிளம்பியது. இரு ரயில்களும் ஒரே தண்டவாளத்தில் வனாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பின்புறத்தில் உத்தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயில் பலமாக மோதியது.இதில் வனாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயிலின்  இரு பொதுப் பெட்டிகள் உள்ளிட்ட 5 பெட்டிகள் உருக்குலைந்தன. ரயில் நிலைத்தின் நடை மேம்பாலத்துக்கு மேல் பெட்டிகள் கிடப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உத்தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயிலின் டிரைவர், உதவி டிரைவர், வனாஞ்சல் எக்ஸ்பிரஸின் கார்டு ஆகியோரும் இந்த விபத்தில் பலியாகினர். 
ஹெல்ப் லைன் தொலைபேசி எண்கள்: 
                 கிழக்கு ரயில்வே சிறப்பு கட்டுப்பாட்டு அறைசியல்டா- 033-23503535, 033-23503537மால்டா 06436-222061 பாகல்பூர் 06412-4222433ஜமால்பூர் 063444-3101

Read more »

விருத்தாசலத்தில் ஐஸ்பாக்ஸ் புதிய வகை பழம் விற்பனை


விருத்தாசலம் பகுதியில் விற்பனை செய்யப்படும் புதிய தர்பூசணி வகை பழம்.
 
விருத்தாசலம்:

           விருத்தாசலத்தில் பஸ் நிலையம் அருகில் "ஐஸ்பாக்ஸ்' என்ற புதிய வகை பழம் விற்பனை வரத் தொடங்கி உள்ளது. இதை முதலில் பார்த்த மக்கள் பப்பாளிப்பழம் எனக் கருதி விற்பனை செய்தவரிடம் சென்று கேட்டனர். அப்போது அவர் இது "ஐஸ்பாக்ஸ்' என்று தெரிவித்தார். இந்த பழம் பார்ப்பதற்கு பப்பாளிப் பழம் போன்ற தோற்றத்திலும், சுவையில் தர்ப்பூசணி பழத்தின் சுவையிலும் உள்ளது. "ஐஸ்பாக்ஸ்' என்ற இந்த பழத்தை, தர்ப்பூசணி என்று அழைப்பதாக விவசாயி தெரிவித்தார்.

இதுகுறித்து "ஐஸ்பாக்ஸ்' விவசாயி பிச்சைப்பிள்ளை கூறியது: 

           பெண்ணாடத்தை அடுத்த செம்பேரி கிராமத்தில் இந்த ஐஸ்பாக்ஸ் பழத்தை 1 ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்தோம். மற்ற மகசூலைக் காட்டிலும் இது எங்களுக்கு அதிக லாபம் தருவதாக உள்ளது. இந்தவகை பழம் கர்நாடக மாநிலத்தில் அதிக அளவில் பயிர் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. கடலூர் மாவட்டம் செம்பேரியிலும், விருத்தாசலத்தை அடுத்த எருமனூர் கிராமத்திலும்தான் முதல்முதலில் பயிர் செய்யப்பட்டுள்ளது. தர்ப்பூசணியைப் போன்றே இதுவும் உடலுக்கு குளிர்ச்சியைத் தரக் கூடியது. இந்த வகை பயிரை தை, பங்குனி மற்றும் சித்திரை மாதங்களில் விதைக்கலாம். நாங்கள் சித்திரை  மாதத்தில் பயிர் செய்ததால் 3 மாதங்கள் ஆன நிலையில் தற்போது அறுவடை செய்து விற்பனை செய்து வருகிறோம்.

                 கர்நாடக மாநிலத்தில் இந்த "ஐஸ்பாக்ஸ்' பழத்துக்கு நல்ல விற்பனை உள்ளது என்று தெரிவித்தார். மேலும் கடலூர் மாவட்டத்தில் முதல்முதலாக இந்தவகை பழத்தை அறிமுகம் செய்துள்ளோம். இதற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது என்றார் அவர்.

Read more »

பண்ருட்டியில் திட்டமிடாத பணியால் ஏரி நீர் போல் தேங்கி நிற்கும் கழிவுநீர்


பண்ருட்டி போலீஸ் லைன் சாலையில் ஏரி போல் தேங்கி நிற்கும் கழிவுநீர்.

பண்ருட்டி:

              வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை மாற்று வழியில் வெளியேற்ற திட்டமிடாமல் கால்வாய் சீரமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளதால், சாலை முழுவதும் கழிவுநீர் தேங்கி சுகாதாரச் சீர்கேட்டையும், நோய் பரவும் சூழலையும் ஏற்படுத்தியுள்ளது.

           பண்ருட்டி பஸ் நிலையத்தின் மிக அருகில் போலீஸ் லைன் அமைந்துள்ளது. நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இப்பகுதியில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள், காவலர் குடியிருப்பு, மாரியம்மன் கோயில், துணை கண்காணிப்பாளர் அலுவலகம், மகளிர் காவல் நிலையம், மது விலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலகம் மற்றும் ரேஷன் கடை மற்றும் தனியார் மருத்துவமனைகள் பல அமைந்துள்ளன. இப் பகுதிகளுக்கு செல்லும் போலீஸ் லைன் சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாய் பல ஆண்டுகளாக சிதலமடைந்து கிடந்தது. இந்த கால்வாய்களை சீர் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.÷இப்பணிகளை மேற்கொண்டுள்ள ஒப்பந்ததாரர் அன்றாடம் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை வெளியேற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்காமல் கால்வாய் சீரமைக்கும் பணியை மேற்கொண்டதால், கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் ஏரி போல் தேங்கி நிற்கிறது.

            இதனால் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலகம், மகளிர் காவல் நிலையம், காவலர் குடியிருப்புகள், மாரியம்மன் கோயில் ஆகியவை தனித் தீவு போல் காட்சி அளிக்கின்றன. ÷மேலும் மேற்கண்ட இடத்துக்கு செல்பவர்கள் அனைவரும் தேங்கியுள்ள கழிவுநீரில் இறங்கி நடந்துதான் செல்ல வேண்டும். இதன் அருகே ரேஷன் கடை, துணை கண்காணிப்பாளர் அலுவலகம் அமைந்துள்ளதுடன், இவ்வழியாகத்தான் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பஸ் நிலையம் செல்லும் பொதுமக்களும் சென்று வர வேண்டும். மேற்கண்ட பகுதியில் பல நாள்களாக கழிவுநீர் தேங்கியுள்ளதால் நோய் பரப்பும் கிருமிகள் உற்பத்தியாகும் கூடமாக விளங்குகிறது. இதனால் இப்பகுதியில் குடியிருப்பவர்களும், கழிவுநீரில் நடந்துச் செல்பவர்களும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.÷மேலும் தேங்கியுள்ள கழிவுநீரில் நோய் பரப்பும் கிருமிகள் உற்பத்தியாகாமல் இருக்க நகர சுகாதாரத் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Read more »

ஆள் பற்றாக்குறையால் அவதியுறும் கடலூர் மாவட்டப் பதிவுத்துறை

கடலூர்:

             மக்கள் பயன்பாடும், பணப்புழக்கமும் நிறைந்த, தமிழகப் பத்திரப் பதிவுத்துறை, அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 5 ஆயிரம் கோடி வருவாயை ஈட்டித் தருகிறது.

            இத் துறையில், ஒரு ஐ.ஜி., 4 கூடுதல் ஐ.ஜி., 10 டி.ஐ.ஜி., 19 ஏ.ஐ.ஜி., பதவிகள், 30 துணைப் பதிவாளர், 700 சார் பதிவாளர், 1400 உதவியாளர், 900 இளநிலை உதவியாளர், 600 இரவுக் காவலர்கள் பணியிடங்கள் உள்ளன. துணைப் பதிவாளருக்குக் கீழ் உள்ள பதவிகளில் 40 சதவீதம் பணியிடங்கள் (1300 பதவிகள்) நீண்ட காலமாகக் காலியாக இருப்பதாக அரசு அலுவலர் ஒன்றியம் தெரிவிக்கிறது. ஓய்வு பெறும் அலுவலர்களுக்குப் பதில் புதிய அலுவலர்கள், உடனடியாக நியமனம் செய்யப்படுவதில்லையாம். பணிச்சுமை தவறுகளுக்கு வழிவகுக்கிறது. இதனால் 10 பேர் ஓய்வு பெற்றால் 9 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை உள்ளதாம்.

             அனைத்து பத்திரப் பதிவு அலுவலகங்களும் தினக் கூலிகளாக, அவ்வப்போது நியமிக்கப்படும் இரண்டு, மூன்று நபர்களால்தான் இயங்கிக் கொண்டு இருக்கிறதாம். பத்திரப் பதிவு அலுவலகங்கள் கணினிமயமாக்கப்பட்டு உள்ளன. ஆனால் அவற்றை இயக்குவற்கு நிரந்தர ஊழியர்கள் இல்லை. அலுவலர்களுக்குப் கணினிப் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் தினக் கூலியாக ரூ. 100 ஊதியம் பெற்றுக் கொண்டு பணியாற்றும், வெளியாள்கள்தான் கணினிகளை இயக்குகிறார்கள். அவர்கள் இளநிலை உதவியாளர் பணிகளையும் செய்கிறார்கள். ஒவ்வொரு பத்திரப் பதிவுக்கும் கணினிக் கட்டணம் என்று தலா ரூ. 100 வசூலிக்கிறார்கள்.

            தினக்கூலி ஊழியர்கள் பொறுப்பின்றிச் செயல்படுவதால், ஏராளமான பிழைகள் ஏற்படுகிறதாம். அன்றாடம் பதிவாகும் பத்திரங்கள் கணினியில், அன்றைய தினமே பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால் இதில் ஏற்படும் தாமதம் காரணமாக, சொத்து வாங்கியவர்களுக்குப் பத்திரம் கிடைக்க 15 நாள்கள் வரை ஆகிறதாம். கணினியில் பதிவு செய்வதில் ஏற்படும் தவறுகள் காரணமாக, பத்திரத்தில் சில பக்கங்களே சில நேரங்களல் காணாமல் போய்விடுகிறதாம். பின்னாளில் பத்திர நகல் கேட்டு விண்ணப்பிக்கும் போதுதான், இத்தகைய பிழையைக் கண்டுபிடிக்க முடிகிறது என்கிறார்கள், பத்திரப் பதிவுத் துறையுடன் நெருங்கிய தொடர்பு உடையவர்கள். பத்திரப் பதிவு அலுவலகங்கள் பலவற்றில் சார்பதிவாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், தலைமை எழுத்தர்கள்தான் பத்திரப் பதிவுப் பணிகளைச் செய்கிறார்கள். 

            கட்டடங்களைப் பார்வையிட்டு மதிப்பீடு செய்வதிலும் காலதாமதமும், தவறுகளும் ஏற்படுகின்றனவாம். சொத்தின் மதிப்பை நிலங்களின் சர்வே எண்கள் அடிப்படையில், அரசு வழிகாட்டுதல் விலை மதிப்பின் படிதான் நிர்ணயிக்க வேண்டும் என்பது அரசாணை. ஆனால் நகர்களில் உள்ள பிளாட்டுகளின் உச்ச மதிப்பு அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்படுவதாகவும், அது முறைகேடுகளுக்கு வழிவகுப்பதாகவும் கூறப்படுகிறது. இணையதளத்தில் உள்ள அரசு வழிகாட்டுதல் மதிப்பை சார்பதிவாளர்கள் ஏற்றுக் கொள்வது இல்லை. வில்லங்கச் சான்றுக்கு விண்ணப்பித்தால் அன்றே வழங்கப்படும் என்று கூறுவதும், வெறும் ஏட்டளவில்தான் உள்ளது. மிக அவசரம் என்று கூடுதல் கட்டணத்துடன், கொடுத்தால்கூட மறுநாள்தான் கிடைக்கும் என்கிறார்கள். பத்திரப் பதிவுக் கட்டணத்தை வரைவோலை மூலம் செலுத்தும் முறை, துறைத் தலைவரின் உத்தரவின் பேரில் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் வரைவோலை பெறுவதற்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளைத் தேடி அலைய வேண்டியது உள்ளது. கிராமத்தில் இருந்து வருவோர், பிற்பகலில் பத்திரப்பதிவுக்கு வருவோர் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

இது குறித்து மாவட்டப் பதிவாளர் வேலாயுதம்  கூறியது

            "பத்திரப்பதிவு அலுவலகங்களில் பணியிடங்கள் காலியாக இருப்பது உண்மைதான். சொத்து மதிப்பை நகர்களில் உள்ள பிளாட்டுகளின் உச்ச மதிப்பீடு அடிப்படையில் நிர்ணயிக்க சார்பதிவாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. சொத்துக்களின் அரசு வழிகாட்டுதல் மதிப்பை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். கணினி இணைப்புகள் இன்னமும் முழுமையாக இல்லாததால் கணினி மூலம் வில்லங்கச் சான்று பெறுவதில் சிக்கல் உள்ளது’ என்றார். 

பத்திரப் பதிவுத்துறை அலுவலர்கள் சங்க மாநிலத் தலைவர் செல்லதுரை (சார் பதிவாளர்) கூறுகையில்,

            "பணியிடங்கள் நிறையக் காலியாக உள்ளன. அண்மையில் 340 பேர் சார் பதிவாளராகப் பதவி உயர்வு பெற்றனர். இதனால் இளநிலை உதவியாளர் நிலையில் ஏராளமான காலிப் பணிடங்கள் ஏற்படுகின்றன. அவற்றை அரசுதான் நிரப்ப வேண்டும். கணினிப் பணிகளை சார் பதிவாளர் மேற்பார்வையில்தான் வெளியாட்களைக் கொண்டு செய்கிறோம் என்றார்.

Read more »

தீவிர சிகிச்சை பிரிவில் பிரேமானந்தா சாமியார்


கடலூர்:
 
          இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பிரேமானந்தா சாமியார், கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். திருச்சி மாவட்டம் விராலிமலையில் ஆசிரமம் நடத்தி வந்தவர் பிரேமானந்தா சாமியார். கொலை, கற்பழிப்பு வழக்குகளில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்றவர். கடந்த 10 ஆண்டுகளாக கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். பல்வேறு நோய்களால் அவர் பாதிக்கப்பட்டு உள்ளார். அண்மையில் கண்பார்வை பாதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கடலூர் மத்திய சிறையில் இருந்த அவருக்கு கடந்த மாதம் கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. பித்தப் பையில் கற்கள் இருப்பதாக அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். 
 
                 இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் பிரேமானந்தா ஒருமாதம் பரோலில் செல்ல அனுமதி வழங்கியது. கடந்த 10-ம் தேதி சிறையில் இருந்து வெளிவந்த பிரேமானந்தா, கடலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி வரை அவர் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார் என்று கூறப்படுகிறது.

Read more »

தமிழ்வழிக் கல்வி கற்றவர்களை பட்டியலிட தனி மென்பொருள்: வேலைவாய்ப்புத் துறை திட்டம்

              தமிழ்வழிக் கல்வி கற்றவர்களை பட்டியலிட தனி மென்பொருளைப் பயன்படுத்த வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக அரசாணை முறைப்படி வந்ததும் அந்த பணிகள் முடுக்கிவிடப்படும் என்று தெரிகிறது. 
 
             கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில், "தமிழில்படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை அளித்திட, உரிய சட்டம் தமிழக அரசின் சார்பில் இயற்றப்படும்' என்று முதல்வர் கருணாநிதி அறிவித்திருந்தார்.  இது குறித்த அரசாணை எந்த நேரமும் வெளியாகலாம் என்ற நிலையில் அடுத்த கட்டப் பணியில் ஈடுபட்டுள்ளது 
 
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை.61 லட்சம் பேர் பதிவு:  
 
          கடந்த ஏப்ரல் 2010 வரை தமிழகத்தில் 61 லட்சத்து 45 ஆயிரத்து 483 பேர் தங்களது கல்வித் தகுதிகளைப் பதிவு செய்து அரசு வேலையை எதிர்பார்த்து உள்ளனர். இவர்களில் 28 லட்சத்து 43 ஆயிரத்து 605 பேர் பெண்கள்.  
 
             ஆனால் இவர்களில் தமிழ் வழியில் கல்வி கற்றவர்கள், ஆங்கில வழியில் கல்வி கற்றவர்கள் என தனித்தனியாக பிரித்து பதிவு செய்யவில்லை. செம்மொழி மாநாட்டு அறிவிப்பால் இதற்கான அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளது. எனென்றால் அரசு வேலைக்கு ஆள்களைத் தேர்வு செய்யும் போது தமிழ் வழியில் கல்வி கற்றவர்களின் பதிவு மூப்பு விவரம் குறித்து அரசு கேட்டால், அதை வழங்க வேண்டியது வேலைவாய்ப்பு அலுவலகத்தின் பணி.  ஆனால் தமிழ் வழியில் கல்வி கற்றவர்களை தனியாக பிரிப்பது தனி மென்பொருளைப் பயன்படுத்துவதன் மூலமே சாத்தியமாகும். 
 
              இதுதவிர தமிழ் வழிக் கல்வி கற்றவர்களையும் தனியாக இனம் காணும் வகையில் சிறப்பு முகாம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு நடத்தினால் அந்த முகாம்களை எங்கெங்கு நடத்தலாம், மாவட்டங்கள் தோறும் எத்தனை மையங்களில் நடத்தலாம் என்பது குறித்தும் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

Read more »

கும்பகோணம் தீ விபத்தில் இறந்த மாணவர்களுக்கு கடலூரில் நினைவஞ்சலி

கடலூர்:

            கும்பகோணம் தீ விபத்தில் இறந்த மாணவர்களுக்கு 6-ம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, கடலூர் பெரியார் சிலை அருகே ஞாயிற்றுக்கிழமை நடந்தது. கடலூர் மாணவர்கள் பொது நல சேவை மையம் சார்பில் இந்த நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, கடலூர் நகராட்சித் துணைத் தலைவர் தாமரைச் செல்வன் தலைமை தாங்கி மாணவர்களின் படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, பொது நல சேவை மையத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் அ.ராஜா, ஆர்.வினோத் ஆகியோர் செய்து இருந்தனர்.

Read more »

செம்மை நெல் சாகு​ப​டிக்கு மாற​லாமே!

செம்மை நெல் சாகு​படி முறை​யில் நாற்று நடப்​ப​டும் வயல்.​ செம்மை நெல் சாகு​ப​டி​யால் ஒரு நாற்று பல்​வேறு கிளை​க​ளாக செழித்து வளர்ந்து இருக்​கும் வயல்.

கட​லூர்:
               அகில இந்​திய அள​வில் வேளாண் உற்​பத்தி குறைந்து வரு​வ​தாக புள்ளி விவ​ரங்​கள் தெரி​விக்​கின்​றன.​ தமி​ழ​கத்​தின் பிர​தான சாகு​ப​டிப் பயிர் நெல்.​ 
               நெல் உற்​பத்​தி​யில்,​​ இந்​தி​யா​வில் 7-வது இடத்​தில் தமி​ழ​கம் உள்​ளது.​ ​ ​இந்த நிலை​யில் கிரா​மப்​புற வேலை உறு​தித்​திட்​டம் செயல்​ப​டத் தொடங்​கியதும்,​​ விவ​சாய வேலை​க​ளுக்கு ஆட்​கள் கிடைப்​பது இல்லை என்ற நிலை உரு​வாகி விட்​டது.​ எனவே விவ​சா​யம் காப்​பாற்​றப்​பட வேண்​டு​மா​னால்,​​ இயந்திர மய​மாக்​கல் மற்​றும் நவீன தொழில் நுட்​பங்​கள் மூலம் உற்​பத்​தி​யைப் பெருக்​கு​த​லைத் தவிர வேறு வழி​யில்லை.​ ​இ​யந்​தி​ரங்​க​ளைப் பயன்​ப​டுத்தி,​​ நெல் உற்​பத்​தி​யைப் பெருக்​கு​வ​தில் சாதனை ஏற்​ப​டுத்​தி​வ​ரும் திட்​டம்,​​ செம்​மை​நெல் சாகு​ப​டித் திட்​டம் ஆகும்.​ 2000க்கு முன்​னால் தென்​னாப்​பி​ரிக்கா அருகே மட​காஸ்​கர் தீவில் செயல்​ப​டுத்​தப்பட்​டது இத்​திட்​டம்.​ 
                   பின்​னர் இந்​தி​யா​வி​லும்,​​ 2003-க்குப் பின்​னர் தமி​ழ​கத்​தி​லும் இத்​திட்​டம் செயல்​ப​டுத்​தப்​ப​டு​கி​றது.​ ​பா​ரம்​ப​ரிய விவ​சா​யத்​தில் ஒரு கிலோ நெல் உற்​பத்தி செய்ய 3 ஆயி​ரம் லிட்​டர் தண்​ணீர் தேவைப்​ப​டு​கி​றது.​ வேலை ஆட்​க​ளும் அதி​கம் தேவை.​ ​உற் ​பத்​தி​யைப் பெருக்க,​​ இடு​பொ​ருள் செல​வு​க​ளைக் குறைக்க,​​ நீர்​தே​வை​யைக் குறைக்க,​​ களை​களை உர​மாக மாற்ற,​​ நுண்​ணு​யி​ரி​க​ளின் செயல்​பாட்டை அதி​க​ரிக்க,​​ தழைச்​சத்து தேவை​யைக் குறைக்க,​​ அனைத்​தும் மேலாக அதிக லாபம் அடைய செம்மை நெல் சாகு​ப​டித் திட்​டம் உத​வு​கி​றது.​ ​இத் ​திட்​டத்​தில் விதை நெல் அளவு,​​ ஏக்​க​ருக்கு 30 கிலோ​வில் இருந்து 3 கிலோ​வா​கக் குறை​கி​றது.​ ஏக்​க​ருக்கு நாற்​றங்​கால் ஒரு சென்ட் என்ற அள​வுக்​கும் நாற்​றுக்​க​ளின் வயது 30 நாளில் இருந்து 14 நாட்​க​ளா​க​வும் குறை​கி​றது.​ ​வ​ழக்​க​மான விதை​நேர்த்தி முறை​கள் பின்​பற்​றப் படு​கின்​றன.​ நடவு வய​லில் ஒரு குத்​துக்கு ஒரு நாற்று மட்​டுமே நடப்​ப​டு​கி​றது.​ 22.5 க்கு 22.5 செ.மீ.​ சது​ரத்​துக்கு ஒரு நாற்று நடப்​பட வேண்​டும்.​ இதற்​காக அள​வுச் சட்​டம் ஒன்றை வேளாண் துறையே வழங்​கு​கி​றது.​ ​இ​யந்​தி​ரம் மூல​மாகோ வேலை​ஆள்​க​ளைக் கொண்டோ நடவு செய்​ய​லாம்.​ கோனோ​வீ​டர் இயந்​தி​ரம் மூலம் களை​களை அகற்றி,​​ அங்​கேயே மடித்​துப்​போட்டு உர​மாக்​கும் உத்தி இதில் கையா​ளப்​ப​டு​கி​றது.​ ​நீர்​ம​றைய நீர் கட்டி,​​ பாசன நீர் அள​வைக் குறைக்க ஆலோ​சனை தெரி​விக்​கப்​ப​டு​கி​றது.​ குறிப்​பிட்ட பயி​ருக்கு,​​ பச்சை வண்ண அட்​டை​மூ​லம் தழைச் சத்து நிர்​ண​யிக்​கப்​ப​டு​கி​றது.​ நடப்​பட்ட ஒரு தூரில் இருந்து 60 முதல் 80 செடி​கள் வரை கிளைத்து அவற்​றில் கதிர்​கள் தோன்​று​வ​து​தான் இம்​முறை நெல் சாகு​ப​டி​யின் சிறப்பு அம்​சம்.​ ​கட​லூர் மாவட்​டத்​தில் நெல் உற்​பத்தி சரா​சரி அளவு,​​ ஏக்​க​ருக்கு 2800 கிலோ.​ தமி​ழ​கத்​தின் சரா​சரி நெல் உற்​பத்​தி​யும் அது​தான்.​ ஆனால் செம்​மை​நெல் சாகு​படி மூலம் ஏக்​க​ருக்கு 5 ஆயி​ரம் கிலோ நெல் உற்​பத்தி செய்ய முடி​யும் என்​கி​றார்​கள் வேளாண் அலு​வ​லர்​கள்.​ எனி​னும் இதன் இலக்கு ஏக்​க​ருக்கு 7 ஆயி​ரம் கிலோ என​வும் தெரி​விக்​கி​றார்​கள்.​ ​க​ டந்த 10 ஆண்​டு​க​ளுக்​கும் மேலாக,​​ செம்மை நெல் சாகு​படி திட்​டம் விவ​சா​யி​க​ளி​டம் பெரு​ம​ள​வுக்​குப் பிர​சா​ரம் செய்​யப்​பட்டு வரு​கி​றது.​ வட்ட வாரி​யாக செயல்​முறை விளக்க வயல்​கள் அமைக்​கப்​ப​டு​கின்​றன.​ ​இத்​திட்​டத்​தைச் செயல்​ப​டுத்​தும் விவ​சா​யிக்கு,​​ ஏக்​க​ருக்கு ரூ.​ 2,700 மதிப்​புள்ள வேளாண் கரு​வி​க​ளும்,​​ ரூ.​ 700 மதிப்​புள்ள இடு​பொ​ருள்​க​ளும் இல​வ​ச​மாக வழங்​கப்​ப​டு​கி​றது.​ ஆனா​லும் இத்​திட்​டம் 35 முதல் 40 சத​வீத விவ​சா​யி​க​ளி​டம் மட்​டுமே சென்​ற​டைந்து இருப்​ப​தாக வேளாண் துறை அதி​கா​ரி​களே தெரி​விக்​கி​றார்​கள்.​ எனவே இத்​திட்​டம் மேலும் பல விவ​சா​யி​க​ளைச் சென்​ற​டைய வேண்​டும்.​
யோச​னை​கள்:​​  
திட்டம் குறித்து பாசி​முத்​தான் ஓடை விவ​சா​யி​கள் சங்​கத் தலை​வர் பி.ரவீந்​தி​ரன் தெரி​விக்​கும் ஆலோ​ச​னை​கள்:​ 
                  காவிரி டெல்டா பாச​னக் கடை​ம​டைப் பகு​தி​க​ளில் ஒற்றை நாற்​று​நடவு,​​ சற்று பின்​ன​டைவை ஏற்​ப​டுத்​து​கி​றது.​ 3 நாற்​று​கள் வரை நடு​கி​றோம்.​ கார​ணம் கடை​ம​டைப் பகு​தி​க​ளில் வயல்​க​ளில் தண்​ணீர் தேங்​கு​தைக் கட்​டு​படுத்த முடி​யாது.​ இத​னால் இயந்​தி​ரம் மூலம் நடவு சிர​ம​மா​கி​றது.​ மேலும் ஒற்றை நாற்று எளி​தில் வீணாகி விடு​கி​றது.​ ​​ நாற்று நடு​வோ​ரும் பாரம்​ப​ரிய முறை​யில்,​​ ஒப்​பந்த அடிப்​ப​டை​யில் நடவு செய்​வ​தால்,​​ அவ​சர அவ​ச​ர​மாக நடும்​போது நாற்​றுக்​க​ளின் வேர்ப்​ப​கு​தியை பெரும்​பா​லும் மடித்து நட்​டு​வி​டு​கி​றார்​கள்.​ இத​னால் முளைப்​புத் திறன் குறைந்து விடு​கி​றது.​ எனவே இத்​திட்​டத்​தில் விவ​சா​யி​க​ளுக்கு பயிற்சி அளிப்​பது போல் நாற்று நடும் பெண்​க​ளுக்​கும் சிறப்​புப் பயிற்சி அளிக்க வேண்​டும்.​ ​நி​தா​ன​மாக நாற்று நட்​டால்​தான் ஒற்றை நாற்று முறை வெற்​றி​பெ​றும்.​ எனவே நாற்று நடும் பணிக்​கான செல​வில் ஒரு பகு​தியை விவ​சா​யி​க​ளுக்கு மானி​ய​மாக அரசு வழங்​க​லாம்.​ காவிரி டெல்டா கடை​ம​டைப் பகு​தி​க​ளில் இத்​திட்​டம் வெற்றி பெற வடி​கால் வச​தியை மேம்​ப​டுத்த வேண்​டும் என்​றார் ரவீந்​தி​ரன்.​

Read more »

Imprisonment will not deter us, says Vaiko


MDMK general secretary Vaiko with Tamil Nationalist Movement leader P.Nedumaran in Cuddalore on Saturday. 
 
CUDDALORE: 

       The Sri Lankan Tamils' Protection Movement will relentlessly fight for the rights of the Tamils in the island nation.

          Its members will not be cowed down by the oppressive measures or deterred by imprisonment, said Vaiko, general secretary of the Marumalarchi Dravida Munnetra Kazhagam. He was speaking to presspersons immediately after his release, along with P. Nadumaran of the Tamil Nationalist Movement and others, from the Cuddalore Central Prison here on Saturday morning.

           Mr. Vaiko said that the only solution to the Tamils issue was creation of a separate Tamil Eelam, and in this endeavour, the entire Tamil diaspora across the globe would join hands. He alleged that Sri Lankan government had kept the international press at bay, denied access to non-governmental and voluntary organisations, and, turned down the United Nations officials. Only after a television channel and certain websites highlighted the cruelties perpetrated against the Tamils in the island nation did the world community awaken to the situation there.

           And yet, when a resolution was moved in the U.N. to condemn Sri Lanka, the Union government played it around and, above all, it gave a red-carpet welcome to Sri Lankan President Mahinda Rajapaksa during his visit. The formation of an expert panel by U.N. Secretary-General Ban Ki-Moon to study the human rights violations in Sri Lanka was not welcomed by India.
Because of such overt and covert support, Sri Lanka could muster courage to hunt down the Tamils and fishermen on the Indian waters.
Therefore, Mr Vaiko said, the Sri Lankan Deputy High Commission should not exist in Tamil Nadu.
He noted that the name of LTTE leader V. Prabakaran continued to weave a magic spell among the Tamils.

Read more »

Cuddalore Farmers demand water

CUDDALORE: 

          Farmers of the tail-end Delta region, comprising Chidambaram and Kattumannarkoil, have demanded immediate release of water from the Mettur dam to save the standing kuruvai crop. At a farmers' grievance day meeting held here on recently, they voiced apprehension over the prospects of samba crop in the absence of water.

Read more »

தரமற்ற விதைகளை விற்றால் வேளாண் அதிகாரி எச்சரிக்கை


சேத்தியாத்தோப்பு : 
 
          காலாவதியான பூச்சி மருந்து மற்றும் தரமற்ற விதைகள் விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் உதவி இயக்குனர் எச்சரித்துள்ளார். புவனகிரி வேளாண் உதவி இயக்குனர் கனகசபை, மாவட்ட விதை ஆய்வாளர் விஜயராகவன் ஆகியோர் சேத்தியாத்தோப்பு பகுதிகளில் உள்ள தனியார் பூச்சிக் கொல்லி மருந்து மற்றும் விதை விற்பனை கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது நடப்பு சம்பா பருவத்திற்கு ஆதார நிலை விதைகள் மற்றும் சான்று நிலை விதைகளை மட்டுமே விற்க கடை உரிமையாளர் ளுக்கு அறிவுறுத்தினர். தரமற்ற போலி விதைகள் மற்றும் காலாவதியான மருந்துகள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

Read more »

ல்லூரி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள்: கடலூரில் 27ம் தேதி துவங்குகிறது

கடலூர் : 

           மாவட்ட அளவில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் கடலூரில் வரும் 27, 28ம் தேதி நடக்கிறது.

           மாணவ, மாணவிகளிடையே எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத் தும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கமும் இணைந்து மாவட்ட அளவில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வருகிறது. அதன்படி கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் மாவட்ட அளவில் (ஆண் மற்றும் பெண்) வரும் 27ம் தேதி தடகள போட்டிகளும், 28ம் தேதி குழுப் போட்டிகளும் நடக்கிறது.அதில் 100 மீ., 200, 400, 800, 5,000 மீ., மற்றும் நீளம் தாண்டுதல், உயரம் தாண் டுதல், குண்டு எறிதல், 110 மீட்ட தடை ஓட்டம், 4க்கு100 மீ., மற்றும் 4க்கு 400 மீ., தொடர் ஓட்டம் உள்ளிட்ட தடகள போட்டிகளும் மற் றும் கூடைப்பந்து, வாலிபால், கபடி, கால்பந்து, ஹாக்கி உள்ளிட்ட குழுப் போட்டிகளும் நடத்தப்படுகிறது.போட்டியில் பங்கேற்பவர்கள் பிறந்த தேதி, பங் கேற்கும் விளையாட்டின் பெயர் ஆகியவற்றை குறிப்பிட்டு ஒவ்வொரு விளையாட்டிற்கும் தனித் தனி நுழைவு விண்ணப்பமாக 24ம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலருக்கு அனுப்ப வேண்டும்.
 
             போட்டிகள் காலை 7 மணிக்கு துவங்குகிறது. பங்கேற்பவர்கள் காலை 6.30 மணிக்கு அண்ணா விளையாட்டரங்கிற்கு வர வேண்டும். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் ஆகஸ்ட் மாதம் சென்னை நேரு விளையாட்டரங்கில் நடக்கும் மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் பங்கேற்பார்கள்.இத்தகவலை மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம் தெரிவித்துள்ளார்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் போலீஸ் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு எஸ்.பி., பாராட்டு சான்று

கடலூர் : 

           போலீஸ் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற 13 பேருக்கு எஸ்.பி., பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

           மாவட்ட போலீஸ் துறையில் பணியாற்றிய 4 சப் இன்ஸ்பெக்டர்கள், மூன்று சிறப்பு சப் இன்ஸ் பெக்டர்கள் 5 ஏட்டுகள், இளநிலை உதவியாளர் ஒருவர் என மொத்தம் 13 பேர் கடந்த மாதம் 30ம் தேதி ஓய்வு பெற்றனர்.இவர்களுக்கு சேர வேண்டிய சேம நலநிதி, பணிக்கொடை நிதி, ஈட்டிய மற்றும் மருத்துவ விடுப்பு ஒப்படைப்பு நிதி உள்ளிட்ட அனைத்து பணப் பலன்களையும் விரைந்து வழங்க எஸ்.பி., உத்தரவிட்டார். அதன்படி 13 பேருக்கும் சேர வேண்டிய பணப் பயன்களை தயார் செய்யப் பட்டது. அதனையொட்டி மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நடந்த பாராட்டு விழாவில் பணி ஓய்வு பெற்ற 13 பேரின் பணியை பாராட்டி எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கினார்.

Read more »

கடலூர் நகருக்கு புறவழிச்சாலை திட்டம் : கனரக வாகனங்களுக்கு கவலையில்லை


கடலூர் ; 

            கடலூர் நகர மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த புறவழிச்சாலை திட்டம் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 

             இத்திட்டத்திற்காக 200 கோடி ரூபாய் செலவிட அரசு முன் வந்துள்ளது. கடலூர் நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன நெரிசலை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பழைய மாவட்டமாக இருந்ததால் 40 ஆண்டுகளுக்கு முன் இருந்த சாலைகளே இப்போதும் பயன்பாட்டில் உள்ளன.மிகச் சிறிய இடத்திலேயே மக்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் வாகன நெரிசல் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. கடலூரில் இருந்துதான் காரைக்கால், நாகப்பட்டிணம், திருச்சி, சென்னை போன்ற பெரிய நகரங்களுக்கு தொலை தூர பஸ்கள் இயக்கப்படுகின்றன. போக்குவரத்து தேவை அதிகரித்து வருவதால் வாகன நெருக்கடியும் அதிகரித்து வருகின்றன.நகரப் பகுதியில் கனரக வாகனங்கள் வந்து செல்வதால் ஏற்படும் நெரிசலைக் குறைக்க ஒவ்வொரு நகரத்திலும் புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

               கடலூர் சுற்றுப் பகுதியில் உள்ள சிறிய நகரங் களான திண்டிவனம், சிதம்பரம், விருத்தாசலத்தில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டு விட்டன. ஆனால் போக்குவரத்து மிகுந்த கடலூரில் புறவழிச்சாலை இல்லாமல் இருப்பது பெரும் குறையாக இருந்தது. மக்கள் பிரதிநிதிகளின் முயற்சியால் கடலூரில் புறவழிச்சாலை திட்டத்திற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. கடலூர் நகரமே கடற்கரை ஓரத்தில் அமைந்திருப்பதால் ஆறுகள் இணையும் பகுதியாக உள்ளது. இதனால் ஏராளமான உயர் மட்ட பாலம் கட்ட வேண் டுமென்பதால் நகரத்தின் மேற்கே புறவழிச்சாலை அமைப்பதைத் தவிர வேறு வழியில்லை. எனவே, கடலூர் ஆல் பேட்டை செக்போஸ்ட்டில் துவங்கி ஆற்றுப்படுகை ஓரமாகச் சென்று குமராபுரம் ஆஞ்சநேயர் கோவில், கேப்பர் மலை வழியாக அன்னவல்லி கிராமத்தை அடைகிறது.அங்கிருந்து விருத்தாசலம், சிதம்பரம் சாலையில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செய்து முடிக்க நெடுஞ்சாலைத் துறை 200 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பப் பட்டுள்ளது. 

              அதற்கு அரசு ஒப்புக்கொண்டு திட்டம் பற்றி விரிவான அறிக்கை தருமாறு நெடுஞ்சாலைத் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த புறவழிச்சாலையினால் சிதம்பரம் மார்க்கமாக செல்வோர்களுக்கு 6 கி.மீ., வரை கூடுதல் தூரத்தை கடக்க வேண்டி இருக்கும்.அதே நேரத்தில் பண்ருட்டி, நெய்வேலி செல்பவர்களுக்கு 5 கி.மீ., தூரம் குறையும். இத்திட் டத்தில் கெடிலம் ஆற்றில் உயர்மட்ட பாலம் உட்பட 3 பாலங்கள் கட்டப்படவுள்ளன. விரைவில் இத்திட்டத்திற்காக நில ஆர்ஜிதம் செய்யும் பணி தொடங்கப்பட உள்ளது.

பழைய கஸ்டம்ஸ் சாலை :

            புறவழிச்சாலைக்கு தேவையான நிலம் ஆர்ஜிதம் செய்ய வேண்டியுள்ளதால் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தை எடுத்துக் கொள்ள அரசு முடிவு செய்துள்ளது. அதாவது, ஏற்கனவே பெண்ணையாற்று கரையோரம் பழைய கஸ்டம்ஸ் சாலை என மத்திய அரசுக்கு சொந்தமான சாலை இருந்துள்ளது. இந்தச் சாலையை தற்போது புறவழிச்சாலையாக புதுப்பித்துக்கொள்ள முடிவு செய்யப் பட்டுள்ளது. ஆல்பேட்டை செக்போஸ்ட்டில் இருந்து பெண்ணையாற்று கரையோரம் முழுவதும் மத்திய அரசுக்கு சொந்தமான பகுதியாக உள்ளதால் குமராபுரம் வரை இந்த சாலைக்காக நில ஆர்ஜிதம் செய்ய வேண்டிய தேவை இருக்காது என்பதால் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

Read more »

நெல்லிக்குப்பதில் தீ விபத்தில் வீடு இழந்தவர்களுக்கு எம்.எல்.ஏ., நிதியுதவி

நெல்லிக்குப்பம் : 

          தீ விபத்தில் வீடு இழந்தவர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. நெல்லிக்குப்பம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த கலியபெருமாள் கூரை வீடு தீ விபத்தில் எரிந்து முற்றிலும் சேதமானது. தீ விபத்தில் வீட்டை இழந்த கலியபெருமாளுக்கு எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் வேட்டி, சேலை, அரிசி, ரொக்கப்பணம் வழங்கினார். நிகழ்ச்சியில் சேர்மன் கெய்க்வாட்பாபு, துணைத் தலைவர் புகழேந்தி, தி.மு.க., முன்னாள் நகர செயலாளர் அங்கமுத்து, பழனிவேல், கவுன்சிலர்கள் நிர் மலா, வீரமணி, காங்., பார்த்திபன், விடுதலை சிறுத்தைகள் புரு÷ஷாத்தமன், புலிகொடியான் உட் பட பலர் உடனிருந்தனர்.

Read more »

என்.எல்.சி., பெண் ஊழியர்களுக்கு புற்று நோய் கண்டறியும் சிறப்பு முகாம்

நெய்வேலி : 

          என்.எல்.சி., நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கான புற்றுநோய் கண்டறியும் முகாம் நடந்தது. 

             என்.எல்.சி.,யில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு மார்பகம் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் சோதனை மேற்கொள்ள என்.எல்.சி., பொது மருத்துவமனை ஏற்பாடு செய்திருந்தது. சென்னை காமாட்சி நினைவு மருத்துவமனை சார்பில் நடந்த முகாமை என்.எல்.சி., சேர்மன் அன்சாரி துவக்கி வைத்தார்.

             காமாட்சி மருத்துவமனையின் மகப்பேறியல் மருத்துவ நிபுணர் டாக்டர் கல்பனா தலைமையிலான மருத்துவக் குழுவினர் முகாமில் பங் கேற்ற ஆயிரத்து 57 பெண்களை பரிசோதித்தனர். 

முகாமின் நிறைவு விழாவிற்கு தலைமை தாங்கிய என்.எல்.சி., பொது மருத்துவமனையின் முதன்மை கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் பேசுகையில், 

             கடந்த 20 ஆண்டாக புற்றுநோய் குறித்த சிறப்பு பரிசோதனைகளை என்.எல். சி., பொது மருத்துவமனை நடத்தி வருகிறது. தற்பொழுது புற்றுநோய் பரிசோதனைக்கான சிறப்பு கருவிகள் உள்ளது. மேலும், பெண் மருத்துவ நிபுணர்கள் கூடுதலாக நியமித்துள்ளதால் இங்கேயே அனைத்து சோதனைகளும் செய்து கொள்ளலாம் என்றார்.

சிறப்பு விருந்தினர் சேர்மனின் மனைவி கிஷ்வர் சுல்தானா பேசுகையில், 

               பெண்கள் பொதுவாக தங்கள் உடல் நலன் குறித்து கவலைப்படுவதில்லை. குறிப்பாக பணிபுரியும் பெண்களுக்கு அலுவலகம், வீடு என இருபக்கத்திலும் வேலை பளு இருப்பதால் உடல் நலன் குறித்து கவனிக்க நேரமிருப்பதில்லை. எனவே இதுபோன்ற அனைத்து பரிசோதனைகளும் ஒரே இடத்தில் நடத்தியது பெண் ஊழியர்களுக்கு மிகவும் பயனளித்துள்ளது என்றார்.

Read more »

சிதம்பரத்தில் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் சேர்ப்பு முகாம்

சிதம்பரம் : 

               சிதம்பரத்தில் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடந்தது.

               உடல் உழைப்பு, கட்டுமானம், ஆட்டோ ஓட்டுநர்கள், தையல், சலவை, கைவினைப் பொருட்கள், காலணி செய்பவர்கள், ஓவியர்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடும் அமைப்பு சாரா தொழிலாளர்களை நலவாரிய உறுப்பினர்கள் சேர்ப்பு சிறப்பு முகாம் நடந்தது. கடலூர் தொழிலாளர்கள் நல அலுவலர் சந்திரசேகர் உறுப்பினர்களை சேர்த்தார். இதில் 350 பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். முகாமில் ஐந்தொழிலா ளர் முன்னேற்ற தொழிற் சங்க மாநிலத் தலைவர் சேகர், செயலாளர் ராமச்சந்திரன், துணை செயலாளர் ரமேஷ், தையல் தொழிலாளர் சங்க மாநில பிரதிநிதி நந்தகோபால், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

சிதம்பரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு படைப்பாற்றல் பயிற்சி முகாம்

சிதம்பரம் : 

             சிதம்பரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஏழு ஒன்றியங்களை சேர்ந்த ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு எளிய படைப்பாற்றல் கல்வி பயிற்சி முகாம் நடந்தது.

            அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் பரங்கிப்பேட்டை, கீரப்பாளையம், புவனகிரி, குமராட்சி, காட்டுமன்னார்கோவில், அண்ணாகிராமம் மற்றும் கடலூர் ஒன்றியங்களை சேர்ந்த ஆசிரியர் பயிற்றுனர்கள் 90 பேருக்கு எளிய படைப்பாற்றல் கல்வி பயிற்சி முகாம் சிதம்பரம் கொத்தங்குடி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்தது. குமராட்சி மேற்பார்வையாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். மேற்பார்வையாளர்கள் சிவசண்முகம், குணபாரி முன்னிலை வகித்தனர். கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர் மணவாள ராமானுஜம் முகாமை துவக்கி வைத்து பேசினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கேத்தரின் ஆலோசனைகள் வழங்கினார்.

Read more »

சிதம்பரம் அருகே திக்...திக்... பாலம் : பாராமுகமாய் நெடுஞ்சாலைத்துறை

சிதம்பரம் : 

             சிதம்பரம் அருகே காட்டுமன்னார்கோவில் சாலையில் கான்சாகிப் வாய்க்கால் செல்லும் பெரிய மதகு பாலம் உடைந்து எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படும் நிலையில் உள்ளது. சிதம்பரத்தில் இருந்து திருச்சி செல்லும் முக்கிய சாலையாக காட்டுமன்னார்கோவில் சாலை உள்ளது. தேசிய நெடுஞ்சாலையான இச்சாலை காட்டுமன்னார்கோவில், பெரம்பலூர், அரியலூர், கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் சாலையாகவும் உள்ளது.
 
              சிதம்பரம் அடுத்த செட்டிமுட்டு என்ற இடத்தில் கான்சாகிப் வாய்க்கால் குறுக்கே கட்டப்பட்டுள்ள பெரிய மதகு பாலம் உடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மிகவும் பழமையான இப்பாலம் பழுதடைந்து பெரிய அளவில் விரிசல் விழுந்துள்ளது. முக்கிய சாலையில் உள்ள இப்பாலம் வழியாக அனைத்து விதமான இலகுரக மற்றும் கனரக வாகனங்கள் செல்கின்றன.மோசமான நிலையில் விரிசல் விழுந்துள்ள இந்த பாலத்தால் எதிர் வரும் ஆபத்தை பற்றி கவலைப் படாத நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சீர் செய்யவோ, மாற்று ஏற்பாடாக புதிய பாலம் கட்டவோ நடவடிக்கை எடுக்காமல் பாராமுகமாய் இருந்து வருகின்றனர்." வலுவிழந்த பாலம், கனரக வாகனங்கள் செல்ல வேண்டாம், வாகனங்கள் மெதுவாக செல்லவும்' என்ற எச்சரிக்கை பெயர் பலகையை மட்டும் ஒப் புக்காக வைத்துள்ளனர்.

Read more »

கூட்டுறவு தணிக்கைத் துறையில் பணியிடங்கள் நிரப்ப வலியுறுத்தல்

கடலூர் : 

          தமிழ்நாடு கூட்டுறவு தணிக்கைத்துறை அலுவலர் சங்க கடலூர் மண்டலக் கூட்டம் டவுன்ஹாலில் நடந்தது.
 
             மாநிலத் தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சந்திரசேகரன், மாவட்ட தலைவர்கள் ரவிச்சந்திரன், அன்பானந்தன், சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தனர். கடலூர் மண்டல செயலாளர் ரவி வரவேற்றார். நிறுவனர் சுப கோவிந்தராஜன், பிரசார செயலாளர் கருணாகரன் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில், கூட்டுறவு தணிக்கைத் துறையில் தற்போது 40 சதவீதத்திற்கும் மேல் உள்ள காலிபணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். பதவி உயர்வு பெற்று தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் 330க்கும் மேற்பட்ட முதுநிலை கூட்டுறவு தணிக்கையாளர்கள், கூட்டுறவு தணிக்கை அலுவலர்களுக்கு அரசின் பரிசான 500 ரூபாய் கிசான் விகாஸ் பத்திரம் வழங்க கூட்டுறவு தணிக்கை இயக் குனரை கேட்டுக் கொள்வது. புதிய ஊதியம் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த குறைபாடுகளை போக்க ஏற்படுத்தப்பட்ட ஒரு நபர் கமிஷனின் அறிக்கையை விரைந்து அமல்படுத்த தமிழக அரசை கேட்டுக் கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read more »

கடலூர் மாவட்டத்தில் போலீசார் வாகன சோதனை எதிரொலி ஷேர் ஆட்டோக்கள் இயக்கம் குறைவு


கடலூர் : 

             கடலூரில் போலீசார் நடத்திய வாகன சோதனையின் எதிரொலியாக நகரத்தில் ஷேர் ஆட்டோக்கள் இயக்கம் வெகுவாக குறைந்துள்ளது.

                 கடலூரில் இருந்து புதுச்சேரி மாநிலத்திற்கு ஏராளமான ஆட்டோ, ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நெரிசல் மிகுந்த இந்த வழித்தடத்தில் ஷேர் ஆட்டோ இயக்குவதால் பொது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. அதே போல் ஆட்டோ உரிமையாளர்களுக்கு நல்ல வருவாயும் கிடைத்தது. இதனால் ஷேர் ஆட்டோக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தன. அத்துடன் பல ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள் சாலை வரி செலுத்தாமலும், தகுதி சான்றிதழ் பெறாமலும் இயக்கப்பட்டு வந்தன. இதை கவனிக்க வேண்டிய வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் மெத்தனமாக இருந்து வந்தனர்.

            கடலூர் மாவட்டத்தில் பள்ளிக் குழந்தைகள் விபத்துக்குள்ளாகி வருவதால் போலீசார் திடீர் வாகன சோதனை நடத்தினர். அதில் ஏராளமான ஆட்டோக்கள் சாலை வரி செலுத்தாமலும், தகுதி சான்றிதழ் பெறாமலும் ஓட்டி வருவது தெரியவந்தது.போலீசாரின் இந்த நடவடிக்கையை அறிந்த சாலை வரி செலுத்தாத ஷேர் ஆட்டோ உரிமையாளர்கள் கடந்த 2 நாட்களாக ஆட்டோவை இயக்காமல் வீட்டில் நிறுத்தி வைத்துள்ளனர். இன்னும் சில ஆட்டோக்கள் பள்ளி நேரம் மட்டுமே இயக்கி வருகின்றனர். மற்ற நேரங்களில் மறைவான இடங்களில் ஆட்டோக்களில் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் கடலூரில் ஷேர் ஆட்டோக்கள் ஓடுவது பிசி நேரங்களில் கணிசமாக குறைந்துள்ளன.

Read more »

சிதம்பரம் மேல வீதியில் பொதுக் கூட்டத்திற்கு தடை: அனைத்து கட்சியினர் கடும் எதிர்ப்பு

சிதம்பரம் : 

            சிதம்பரம் மேலவீதியில் பொதுக்கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டதற்கு அனைத்து கட்சி நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

            சிதம்பரம் கீழ வீதியில் பொதுக்கூட்டங்கள் நடத்துவதால் பொதுமக்களுக்கு கடுமையான இடையூறு ஏற்படுகிறது என கூட்டம் நடத்த கோர்ட் மூலம் தடை உத்தரவு பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து மேலவீதி பெரியார் சிலை அருகில் பொதுக் கூட்டம் நடந்தது. அந்த இடத்திலும், பொதுமக்களுக்கு அதிகளவில் பாதிப்பு ஏற்படுகிறது தடை விதிக்க வேண்டும் என மேல வீதி, வடக்கு வீதி குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.

              கோர்ட் தீர்ப்பின்படி கடந்த மே மாதம் 11ம்தேதி முதல் பொதுக்கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டது.இது தொடர்பாக அனைத்து கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்ற கருத்து கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது. தாசில் தார் காமராஜ், டி.எஸ்.பி., மூவேந்தன் முன்னிலையில் நடந்த கூட்டத்தல் அ.தி.மு.க., நகர அவைத் தலைவர் ஏசுராஜ், மா.கம்யூ., நகர செயலாளர் ராமச்சந்திரன், வர்த்தக சங்கத் துணைத்தலைவர் சந்திரசேகரன், பா.ம.க., நகர செயலாளர் முத்துக்குமார், பா.ஜ., மாவட்ட செயலாளர் பால ரவி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் தாஜ்தீன், தே.மு.தி.க., மாவட்ட துணை செயலாளர் பாலு, மூ.மு.க., செயலாளர் செல்வராஜ், த.மு.மு.க., நகர செயலாளர் ஜாகிர் உசேன், இந்திய கம்யூ., நகர செயலாளர் சேகர், மூப்பனார் பேரவை காங்., மக்கின், தமிழ் தேசிய காங்., லோகநாதன் உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் பங்கேற்று கருத்துக்களை தெரிவித்தனர். கூட்டத்தில், அனைத்து கட்சி பிரமுகர்கள், மேல வீதியில் கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், மீண்டும் அதே இடத்தில் நடத்த அனுமதிக்க கோரிக்கை வைத்தனர். அதையடுத்து, கட்சியினர் விரும்பினால் மேல் முறையீடு செய்வது என தீர்மானிக்கப்பட்டது.

Read more »

கடலூரில் மண்டல விளையாட்டு போட்டி சி.கே., பள்ளி மாணவர்கள் சாதனை

கடலூர் : 
              கடலூரில் பி.எஸ். என்.எல்., சார்பில் நடந்த மண்டல விளையாட்டு போட்டியில் சி.கே., பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்தனர். கடலூரில் பி.எஸ்.என்.எல்., சார்பில் அண்ணா விளையாட்டரங்கில் மண்டல விளையாட்டு போட்டிகள் நடந் தது. அதில் நீச்சல் போட்டியில் சி.கே., பள்ளி மாணவர்கள் சபா பிராங்களின், நிர்மல்காந்த், சூரியபிரசாத், டேவிட் நிரஷன், ஜெயந்த நாக், மாணவி லட்சுமி ஆகியோர் மொத்தம் 4 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களை வென்றனர்.
            இரட்டையர் இறகு பந்து போட்டியில் மாணவர்கள் பிரசன்னாவேலன், முரளிதரன் மூன்றாம் பரிசையும், சதுரங்கத்தில் மாணவி பிரித்தா, மாணவர் மதிவாணன் மூன்றாம் பரிசு பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பாபு, கார்த்தி ஆகியோரை பள்ளியின் இயக்குனர் சந்திரசேகரன், முதல்வர் தார்ஷீயஸ், ஆலோசகர் கல்யாணி பிரகாஷ் பாராட்டினர்.

Read more »

கடலூர் வேளாண்மை பொறியியல் துறையில் வீணாகும் இரும்பு பொருட்கள்

கடலூர் : 

               கடலூர் வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தில் பல நூறு டன் எடையுள்ள பொருட்கள் மண்ணில் மக்கி வீணாகிக் கொண்டிருக்கிறது.

               கடலூர் அடுத்த சின்னகங்கணாங்குப்பத்தில் வேளாண்மை பொறியியல் துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் மூலம் விவசாயத்திற்குத் தேவையான இயந்திரங்கள், கருவிகள், உபகரணங்கள் வாடகைக்கு விடப்படுகின்றன. இதில் கனரக வாகனங்களான புல்டோசர், அறுவடை இயந்திரம் போன்ற இயந்திரங்களும் அடங்கும்.இயந்திரங்களின் பழுதான பொருட்கள் பல 100 டன் எடையுள்ள இரும்பு செயின் போன்றவை திறந்த வெளியில் மக்கி வீணாகிக் கொண்டிருக்கின்றன. அதற்கு ஒரு உதாரணமாக டிராக்டருக்கு பயன்படுத்தும் பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள "கேஜ்வீலை' கூட தென்னங்கன்றின் வேலிக்கு பயன்படுத்தியுள்ளனர். அரசின் புதிய உத்தரவால் வழக்கில் தொடர்புடைய வாகனங்கள் கூட மக்கி வீணாவதைவிட ஏலத்தில் விட்டு வருகின்றனர். அவ்வாறு இருக்கும்போது அரசின் பல லட்சம் மதிப்புள்ள இரும்பு பொருட்கள் மக்கி வீணாவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

Read more »

பண்ருட்டி சாலையில் கழிவுநீர் தொற்று நோய் பரவும் அபாயம்

பண்ருட்டி : 

             பண்ருட்டி போலீஸ் லைன் டி.எஸ்.பி., அலுவலகம் செல்லும் சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

              பண்ருட்டி போலீஸ் லைன் 4வது தெரு வழியாக அனைத்து மகளிர் காவல் நிலையம், மதுவிலக்கு பிரிவு, போலீசார் குடியிருப்பு, டி.எஸ்.பி., அலுவலகம் உள்ளிட்டவைகள் உள்ளன. இங்கு கடந்த 15 நாட்களுக்கு முன் இன்ஸ்பெக்டர் குடியிருப்பில் இருந்து கடலூர் சாலை வரையில் கால்வாய்களை சீரமைக்க பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி கான்கிரீட்டால் ஆன கால்வாயாக மாற்றி வருகின்றனர். இந்தப்பணி நடைபெறுவதற்காக கடந்த 10 நாட்களாக இன்ஸ்பெக்டர் குடியிருப்பு அருகில் அடைக்கப்பட்டது.  இதனால் தினமும் வெளியேறும் கழிவுநீர் ரோட்டில் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் தூர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது.விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய நகராட்சி அதிகாரிகளோ எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர்.

Read more »

கடலூர் சிட்கோ பகுதியில் பெண்களிடம் கேலி

கடலூர் : 

              செம்மண்டலம் சிட்கோ பகுதியில் கேலி செய்யும் "ரோமியோ' க்களால் பணிக்கு செல்லும் பெண்கள் கவலையடைந்துள்ளனர்.

                கடலூர் செம்மண்டலத்தை அடுத்து சிட்கோ தொழிற்பேட்டை உள்ளது. இப்பகுதியில் பல்வேறு வகையான தொழிற் கூடங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் பல கம்பெனிகளில் அதிகளவில் பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள போக்குவரத்து இல்லா சாலைகளில் லாரி போன்ற மோட்டார் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. காலை நேரத்தில் அவ்வழியாக பணிக்கு செல்லும் பெண்களை, லாரி மற்றும் வாடகைக்கு செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ள மறைவில் நின்று கொண்டு சிலர் கேலி செய்து வருகின்றனர். இதனால் பணிக்கு செல்லும் பெண்கள் வெளியே சொல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இது குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Read more »

சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிகளைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி வாகனங்கள் ஆய்வு

சிதம்பரம் :

             சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிகளைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி வாகனங்களில் நேற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரி வாகனங்கள் ஆவணங்களுடன் முறையாக பராமரிக்கப்படுகிறதா என மோட்டார் வாகன அதிகாரிகள் மற்றும் போலீஸ் துறையும் இணைந்து ஆய்வு செய்து வருகின்றனர். அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் கடலூர் மோட்டார் வாகன அதிகாரி ஜெயக்குமார் தலைமையில் ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. ஆர்.டி.ஓ., ராமராஜ், தாசில்தார் காமராஜ், சிதம்பரம் மோட்டார் வாகன ஆய்வாளர் ரங்கநாதன் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.
 
                சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளிலிருந்து 145 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து பள்ளி நிர்வாகிகள், பள்ளி சார்பில் வந்திருந்த பிரதிநிதிகள், டிரைவர்களுக்கு வாகனங்கள் பராமரித்தல், இயக்குதல் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior