உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 26, 2012

கடலூர் மாவட்டத்தில் தானே புயலால் பாதிக்கப்பட்டதெருவிளக்குகள் ரூ.14 கோடியில் சீரமைப்பு

கடலூர்:
 
          கடலூர் மாவட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளில் தெருவிளக்குகளைச் சீரமைக்க ரூ. 14 கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதாக, புயல் நிவாரணக் கண்காணிப்பு சிறப்பு அலுவலர் கால்நடை பராமரிப்புத் துறை செயலர் ககன் தீப்சிங் பேடி, மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்
 
         .புயல் பாதித்த இடங்களில் மின் விநியோகம் சீரமைப்பு குறித்து, மின் வாரிய அதிகாரிகளுடன், அரசுச் செயலர் ககன் தீப்சிங் பேடி, ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினர்.மின்வாரிய தலைமைப் பொறியாளர் அப்பாசாமி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் புயல் பாதித்த திருக்கண்டேஸ்வரம் கிராமத்தில் ஆய்வு நடத்தினர். மின் இணைப்பு பெற்ற விவசாயிகள், விவசாயப் பணிகளைத் தொடங்கி விட்டதாக தெரிவித்தனர்.
 
பின்னர் அரசுச் செயலர் ககன் தீப்சிங் பேடி, ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ ஆகியோர் கூறியது:
 
          கடலூர் மாவட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளில் தெருவிளக்குகளைச் சீரமைக்க முதல்வர் ரூ. 14 கோடி ஒதுக்கி இருக்கிறார். இதன் மூலம் 53 ஆயிரம் குழல் விளக்குகள், 9 ஆயிரம் சோடியம் வேப்பர் விளக்குகள், 2300 சி.எஃப்.எல். விளக்குகள், 125 ஹைமாஸ் விளக்குகள் பொருத்தப்பட உள்ளன.இப்பணிகளில் ஊராட்சி நிர்வாகமும், மின் வாரியமும் இணைந்து ஈடுபட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாய மின்இணைப்புகள் 69,783-ல் சனிக்கிழமை வரை 35,343 இணைப்புகள் சீரமைக்கப்பட்டு உள்ளன.மீதமுள்ள மின் இணைப்புகளை சீரமைக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது என்றும் தெரிவித்தனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

தமிழ்நாட்டில் மக்காச்சோளம் விலை உயர வாய்ப்பு


கடலூர்: 

         ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு, தமிழகத்தில் மக்காச் சோளம் விலை உயர வாய்ப்பு இருப்பதாக வேளாண்துறை அறிவித்து உள்ளது. 

          2010-11-ம் ஆண்டில் உலக அளவில் மக்காச்சோளம் 167 மில்லியன் எக்டேரில் பயிரிடப்பட்டு, 860 மில்லியன் டன் உற்பத்தி செய்யப் பட்டது. 2011-ம் ஆண்டில் மக்காச் சோளம் பயிரிடும் பரப்பளவும் உற்பத்தியும், வரலாறு காணாத அளவு உயர்ந்தது. இது 2001-ம் ஆண்டைவிட பரப்பளவில் 21 சதமும், உற்பத்தியில் 43 சதமும் அதிகமாகும். எத்தனால் தயாரிப்புக்கான மக்காச் சோளத்தின் தேவை அதிகரித்து வருவதே உற்பத்தி அதிகரிக்கக் காரணம். 

            தமிழ்நாட்டில் கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், திண்டுக்கல், கோவை, சேலம், ஈரோடு, விருதுநகர், தேனி, திருச்சி, திருநெல்வேலி மாவட்டங்களில் மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது. எக்டேருக்கு 4.68 டன் மக்காச் சோளம் உற்பத்தி செய்து, உற்பத்தித் திறனில் தமிழ்நாடு இந்திய அளவில் முன்னிலை வகிக்கிறது. தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 11.44 லட்சம் டன் மக்காச்சோளம் உற்பத்தி செய்யப்படுகிறது. இது இந்தியாவின் மொத்த உற்பத்தியில் 5 சதவீதம் ஆகும். கடந்த சில ஆண்டுகளாக மக்காச்சோளம் சாகுபடியில் தமிழகத்தில் பெரிய மாற்றம் காணப்பட்டு வருகிறது. 

            தமிழ்நாட்டில் கோழிப்பண்ணை நிறுவனங்கள் இப்போது மக்காச் சோளத்தை கர்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் கொள்முதல் செய்கின்றன. தமிழகத்தில் மக்காச்சோளம் வரத்து ஆரம்பித்து விட்டதால், கோழிப் பண்ணைகள் டிசம்பரில் இருப்பு வைத்துக் கொள்ளவில்லை. இந்த நிலையில் அறுவடையாகும் மக்காச் சோளத்தை உடனே விற்றுவிடலாமா இருப்பு வைத்து பின்னர் நல்ல விலையில் விற்கலாமா என்பது குறித்த ஆலோசனையை விவயாயிகளுக்கு வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை அறிவித்து உள்ளது. மற்ற மாநிலங்களில் இருந்து வரத்து, உள்நாட்டுத் தேவை, ஏற்றுமதி வாய்ப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ஏப்ரல் மாதம் வரை மக்காச்சோளம் விலையில் மாற்றம் இருக்காது என்று அறிவித்து உள்ளது. 

            புதிய மக்காச் சோளத்தை கோழிப் பண்ணைகள் இருப்பு வைத்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது. எனவே விலை குறைய வாய்ப்பில்லை. ஏப்ரல் வரை மக்காச்சோளம் விலை குவிண்டாலுக்கு ரூ.1,050-ல் இருந்து ரூ.1,100 வரை இருக்கும், ஏப்பரல் மாதத்துக்குப் பின், தேவை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் குவிண்டால் ரூ.1,200-ஐ தாண்டும். எனவே அறுவடையாகும் மக்காச் சோளத்தை வசதியுள்ள விவசாயிகள் ஏப்ரல் வரை சேமித்து வைக்க சிபாரிசு செய்யப்படுகிறார்கள். சேமிக்க வசதி இல்லாதவர்கள் மார்ச் வரை விலை உயர வாய்ப்பு இல்லாததால், அறுவடை செய்தவுடன், விற்பனை செய்துவிட பரிதுரைக்கப் படுவதாகவும் வேளாண் துறை அறிவித்து உள்ளது. 













Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior