உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மே 30, 2012

தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் விபரம்



அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் (64 கல்லூரிகள்)



  1. அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரி
  2. பக்தவட்சலம் பாலிடெக்னிக் கல்லூரி
  3. பாரதியார் நூற்றாண்டு நினைவு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி
  4. சென்டரல் பாலிடெக்னிக் கல்லூரி
  5. சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரி
  6. டாக்டர் .அம்பேத்கார் பாலிடெக்னிக் கல்லூரி
  7. டாக்டர் தர்மாம்பாள் அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி
  8. அரசு சி. பி. சி. பாலிடெக்னிக்
  9. அரசு செராமிக் தொழில்நுட்பக் கல்லூரி
  10. அரசு பாலிடெக்னிக் கல்லூரி,பாலக்காடு
  11. அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி,கோயம்புத்தூர்
  12. அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி, மதுரை
  13. அரசு பாலிடெக்னிக் கல்லூரி, சென்னை
  14. அரசு பாலிடெக்னிக் கல்லூரி, கோயம்புத்தூர்
  15. அரசு பாலிடெக்னிக் கல்லூரி, குடகு
  16. அரசு பாலிடெக்னிக் கல்லூரி,நீலகிரி
  17. அரசு பாலிடெக்னிக் கல்லூரி,எர்ணாகுளம்
  18. அரசு பாலிடெக்னிக் கல்லூரி,கண்ணூர்
  19. அரசு பாலிடெக்னிக் கல்லூரி,கன்னியாகுமரி
  20. அரசு பாலிடெக்னிக் கல்லூரி,கிருஷ்ணகிரி
  21. அரசு பாலிடெக்னிக் கல்லூரி,மதுரை
  22. அரசு பாலிடெக்னிக் கல்லூரி,மலப்புரம்
  23. அரசு பாலிடெக்னிக் கல்லூரி,பதனம்திட்டா
  24. அரசு பாலிடெக்னிக் கல்லூரி, புதுக்கோட்டை
  25. அரசு பாலிடெக்னிக் கல்லூரி,தூத்துக்குடி
  26. அரசு பாலிடெக்னிக் கல்லூரி,திருச்சி
  27. அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி , ஹுப்ளி
  28. அரசு பாலிடெக்னிக் கல்லூரி, ஹசன்
  29. அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, மங்களூர்
  30. அரசு பாலிடெக்னிக், பாகேபள்ளி
  31. அரசு பாலிடெக்னிக், பெல்கம்
  32. அரசு பாலிடெக்னிக், பெல்லாரி
  33. அரசு பாலிடெக்னிக், பிடார்
  34. அரசு பாலிடெக்னிக், பிஜபூர்
  35. அரசு பாலிடெக்னிக், சமராஜநகர்
  36. அரசு பாலிடெக்னிக், சன்னபாட்னா
  37. அரசு பாலிடெக்னிக், சிந்தாமணி
  38. அரசு பாலிடெக்னிக், குல்பர்கா
  39. அரசு பாலிடெக்னிக், கொப்பல்
  40. அரசு பாலிடெக்னிக் கல்லூரி, குஷ்டகி
  41. அரசு பாலிடெக்னிக் கல்லூரி, மாண்டியா
  42. அரசு பாலிடெக்னிக் காலேஜ், ராய்ச்சூர்
  43. அரசு பாலிடெக்னிக் கல்லூரி, ஷிமோக
  44. அரசு பாலிடெக்னிக் கல்லூரி, தும்கூர்
  45. அரசு பாலிடெக்னிக், உத்தர கன்னடா
  46. அரசு பாலிடெக்னிக் பார் வோமேன், குல்பர்கா
  47. அரசு மகளிர் பாலிடெக்னிக் காலேஜ், புதுச்சேரி
  48. அரசு மகளிர் ரெசிடெண்டில் பாலிடெக்னிக்
  49. அரசு மகளிர் பாலிடெக்னிக், ராமநகரம்
  50. இன்ஸ்டிடியூட் ஆப் கெமிக்கல் டெக்னலாஜி
  51. இன்ஸ்டிடியூட் ஆப் லெதர் டெக்னாலஜி
  52. இன்ஸ்டிடியூட் ஆப் பிரிண்டிங் டெக்னாலஜி
  53. இன்ஸ்டிடியூட் ஆப் டெக்ஸ்டைல் டெக்னலாஜி
  54. கர்நாடகா அரசு பாலிடெக்னிக், மங்களூர்
  55. மகாராஜா தொழில்நுட்ப நிறுவனம்
  56. மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரி
  57. ராமகிருஷ்ணா மிஷன் டெக்னிக்கல் இன்ஸ்ட்யூட்
  58. ஸ்ரீமதி எல். வி அரசு பாலிடெக்னிக்
  59. ஸ்ரீ ராமா அரசு பாலிடெக்னிக் கல்லூரி
  60. ஸ்ரீனிவாசா சுப்பராயா பாலிடெக்னிக் கல்லூரி
  61. ஸ்டார் இன்ஸ்டிடியூட் ஆப் காமர்ஸ் எஜுகேஷன்
  62. தந்தை பெரியார் ஈ.வே.ரா. அரசு பாலிடெக்னிக் கல்லூரி
  63. வி.ஐ. எஸ்.எஸ்.ஜே அரசு பாலிடெக்னிக்
  64. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி


Read more »

திங்கள், மே 28, 2012

நெல்லிக்குப்பம் நகராட்சியில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் 290 பேர்தேர்வு

நெல்லிக்குப்பம்,:

நெல்லிக்குப்பம் நகராட்சியில் பொன் விழா ஆண்டு நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் இரண்டு நாள் திறன் வளர்க்கும் பயிற்சி முகாம் நடந்தது. இதில் சி.எஸ்.சி. கம்ப்யூட்டர், எஸ்.ஆர்.எம். இன்போடெக், டிரிமென்ட்ஸ் டெக்னாலஜிஸ், மார்டன் எஜூகேஷன் சோசியல் சர்வீஸ் சொசைட்டி நிறுவனங்கள் கலந்து கொண்டன. முகாமில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களை சேர்ந்த 5784 பேர் கலந்துக் கொண்டனர். கம்ப்யூட்டர், அழகுகலை, போட்டோகிராபி உட்பட பல பிரிவுகளில் பயிற்சி பெற 290 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். கமிஷனர் ”ரேந்திர ஷா முயற்சியில் 150 பேர் மட்டுமே தேர்வு செய்ய வேண் டிய முகாமில் 290 பேர் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.




Read more »

வெள்ளி, மே 25, 2012

திருவதிகை ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் கோயில் குடமுழுக்கு பணி

பண்ருட்டி:

பண்ருட்டி திருவதிகை ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் கோயில் குடமுழுக்கு ஜூன் 1-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.  சுமார் 1700 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த கோயிலில், முதன்முதலில் தேவாரம் பாடப்பட்டது, தேர் உருவானது, திருநாவுக்கரசரால் உழவாரப்பணி தொடங்கப்பட்டது போன்ற சிறப்புகளை உடையது.

தமிழக் கோயில்களின் வரலாற்றில் சிறப்பிடத்தைப் பெறுவது திருவிழாக்களே ஆகும். ஆண்டுதோறும் குறிப்பிட்ட தலங்களின் புராணம் மற்றும் வரலாற்று அடிப்படையில் திருவிழாக்கள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால் குடமுழுக்குப் பெருவிழா என்பது எப்போதோ அரியதாக நடைபெறக்கூடிய ஒன்றாகும். சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மற்றும் விஜயநகரம்-நாயக்க மன்னர்கள் இக்கோயிலுக்கு திருப்பணிகள் செய்து கொடைகளும் வழங்கியுள்ளனர். இக்கோயிலில் நடைபெற்றுவந்துள்ள திருப்பணிகள் மற்றும் குடமுழுக்குப் பெருவிழாக்களின் விவரங்களை கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது.
 
இக்கோயில் கல்வெட்டுகளை ஆய்வு செய்து அரிய செய்திகளை கல்வெட்டு ஆய்வாளர் பண்ருட்டி தமிழரன் கூறியது:


 ஒவ்வொரு ஊர்களிலும் காணப்படும் விநாயகர் கோயிலைப் போன்று தொன்மையில் சிறிய அளவில் இருந்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில் பல்லவர், சேர, சோழ பாண்டியர்களின் ஆட்சிக் காலங்களில் திருப்பணிகள் செய்யப்பட்டு இன்று பெரிய கோயிலாகக் காட்சியளிக்கிறது. சிவபெருமான் திரிபுரம் எரித்த புராணம் முதன்முதலில் வேதங்களின் வாயிலாக அறியப்படுகிறது. வீரட்டானத்தின் தோற்றம் சங்ககாலப் புகழுடையதாகும். ஆய்வு நோக்கில் மண்ணாலும், செங்கற்களாலும் கட்டப்பட்டிருந்த இக்கோயிலில் களிமண்ணால் செய்து சுடப்பட்ட சிவலிங்கமும், பொம்மைகளுமே வழிபாட்டில் இருந்தன. பிறகு சுண்ணாம்புக் கலவை மூலம் கோயிலும் சிற்பங்களும் மாற்றியமைக்கப்பட்ட பிறகுதான் கோயிலின் வரலாறு கல்வெட்டுகளின் மூலம் அறியப்படுகிறது. இதுபோன்ற காலகட்டங்களில் கும்பாபிஷேகம் என்கிற குடமுழுக்குப் பெருவிழா இக்கோயிலில் முதன்முதலில் எப்போது நடைபெற்றது என்ற வரலாற்றுச் செய்தி இன்று வரை கிடைக்கவில்லை. இவ்வழக்கம் உலோகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு ஏற்பட்டிருக்கலாம்.
 

கி.பி.8-ம் நூற்றாண்டு முதல்தான் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. முதல் கல்வெட்டு பல்லவ மன்னன் பரமேசுவரவர்ம பல்லவனுடைய கொடைகள் பற்றிக் கூறுகிறது. அடுத்து ஆட்சிப் பொறுப்பேற்ற நந்திவர்ம பல்லவரின் கி.பி. 850-ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டும், நந்தா விளக்கு மற்றும் 100 கழஞ்சுப் பொற்காசுகளின் கொடை பற்றியே கூறுகிறது. இவரையடுத்து அரசாண்ட நிருபதுங்கவர்ம பல்லவரின் கல்வெட்டுதான் முதன்முதலில் திருப்பணி செய்து குடமுழுக்கு நடைபெற்றதைத் தெரிவிக்கிறது. இவனது ஆட்சிக்காலத்தின் திருமுனைப்பாடி நாட்டின் குறுநில மன்னராக இருந்து திருநாவலூரை மையமாகக் கொண்டு அரசாட்சி செய்த நரசிங்க முனையரையர் மகன் முனையர்கோன் இளவரசனால் திருவதிகை வீரட்டானம் புதுப்பிக்கப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.
 

இதன் பிறகு அரசாண்ட சோழர், பாண்டியர் ஆட்சிக் காலக் கல்வெட்டுகளில் குடமுழுக்குப் பற்றிய செய்திகள் காணப்படவில்லை. ஆனால் மிக அதிசயமாக திருப்பணி மற்றும் குடமுழுக்கு செய்யப்பட்ட செய்தியை ஒரே ஒரு கல்வெட்டில் காணப்படுகிறது. சேரமன்னன் வீரகேரள ரவிவர்ம குலசேகரன் தமிழகத்தின் மீது படையெடுத்து வெற்றி பெற்று இரண்டு ஆண்டுகள் மட்டுமே இவனது ஆதிக்கம் தமிழகத்தில் இருந்த நிலையில் கி.பி.1313-ம் ஆண்டில் திருவதிகை வீரட்டானத்தை முழுமையாகத் திருப்பணி செய்து குடமுழுக்கு நடத்தினான் என்று இக்கல்வெட்டு கூறுகிறது. வீரட்டானத் திருக்கோயிலின் அறங்காவலர் குழுத் தலைவராக ராசதுரை இருந்தபோது ஐயப்ப சுவாமிகள் பெருமுயற்சியால் 19.8.1994-ம் நாளில் குடமுழுக்கு நடந்துள்ளது.
 

இப்போது நந்தன ஆண்டு வைகாசி 19-ம் தேதி இந்து சமய அறநிலைத் துறையின் ஆதரவோடு பண்ருட்டி நகர்மன்றத் தலைவர் ப.பன்னீர்செல்வம் அவர்களின் பெருமுயற்சியால் சாதி, சமய, அரசியல் சார்பற்று அனைத்துத் தரப்பினராலும் போற்றத்தக்க வகையில் வீரட்டானம் புதுப்பிக்கப்பட்டு குடமுழுக்கு நடைபெற உள்ளது. இது 21-ம் நூற்றாண்டில் வரலாற்றில் பதிக்கப்படும் இணையற்ற நிகழ்வாகும் என கல்வெட்டு ஆய்வாளர் பண்ருட்டி தமிழரசன் கூறினார்.











Read more »

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 56 பாடப் பிரிவுகளில் திருத்தம் செய்ய முடிவு

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 56 பாடப் பிரிவுகளில் திருத்தம் கொண்டுவர கல்விக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளுவர் பல்கலைக்கழகக் கல்விக்குழுக் கூட்டம் பல்கலைக்கழக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் ஜி. வணங்காமுடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்கலைக்கழக பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி, ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் முனவர் ஜான், பல்கலைக்கழக ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் குமார், கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி எம்எல்ஏ டி. செங்குட்டுவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பல்கலைக்கழக தேர்வு நடைமுறைகளை ஆன்லைனுக்கு மாற்றுவது, பாடத்திட்டங்களில் மாற்றம் கொண்டுவருவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்கள் குறித்து பல்கலைக்கழக பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியது: கல்விக்குழுக் கூட்டத்துக்கு 34 உறுப்பினர்களில் 19 பேர் வந்திருந்தனர். 2012-2013ஆம் ஆண்டுக்கான புதிய பாடத்திட்டங்கள் அமல்படுத்தப்பட உள்ளன. இதற்கான நெறிமுறைகள், வரைமுறைக்கு கல்விக்குழுக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில், பிஏ, பிஎஸ்சி, பிகாம், எம்ஏ, எம்எஸ்சி, எம்காம், எம்சிஏ உள்ளிட்ட படிப்புகளில் 56 பாடப் பிரிவுகளில் திருத்தம் கொண்டுவந்து நடப்பு ஆண்டில் நடைமுறைப்படுத்த கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.
ஆன்லைனுக்கு மாற்றம்

பல்கலைக்கழகத் தேர்வுகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிப்பது மற்றும் வருகைப் பதிவுகள் அனைத்தையும் ஆன்லைன் மயமாக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்துக் கல்லூரிகளும் ஆன்லைனுக்கு மாறவேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. முதல்வருக்கு நன்றி பல்வேறு திட்டங்கள் மூலம் பல்கலைக்கழக உறுப்புகல்லூரிகளுக்கு நிதி ஒதுக்கிய முதல்வர் ஜெயலலிதா, உயர்கல்வித்துறை அமைச்சர், செயலர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தும் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்றார்.












Read more »

கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 200/200 பெற்றவர்கள் விபரம்

கடலூர்:'


 கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களில் 73 பேர் பல்வேறு பாடங்களில் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
 
வேதியியல்-24 பேர்,
 உயிரியல்-12 பேர், 
கணினி அறிவியல்-11 பேர்,
 பொருளியல்-2 பேர், 
வணிகவியல்-12,
 கணக்குப்பதிவியல்-12 பேர் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 

கடந்த ஆண்டு கணிதத்தில் 7 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். ஆனால் இந்த கல்வி ஆண்டில் கடலூர் மாவட்டத்தில் யாரும் கணிதத்தில் முழுமதிப்பெண் பெறவில்லை.



Read more »

Suspended environment clearance to the 1,200 MW thermal power plant in the Cuddalore district

he National Green Tribunal has asked the environment ministry to notify all wetlands in the country to avoid developmental projects in its vicinity as it suspended environment clearance to the thermal power plant in Srikakulam district in Andhra Pradesh. In an order issued on Wednesday,

the tribunal also asked the ministry to finalise the guidelines and site criteria for Thermal Power Plants urgently. The tribunal had found that the existing guidelines had failed to take note of factors that affect the environment and ecology today. “It is pertinent to note that the siting criteria produced before us were framed 25 years ago,” the tribunal said, while hearing petitions by six locals against the 2,640 MW thermal power plant of Nagarajuna Construction Company.

The appellants in the case had alleged that the proposed project site was a wetland not suitable for commercial use. It will adversely affect irrigation schemes of the area and lead to scarcity of drinking water and fishing. They also said the project will stop farmers from growing seasonal crops and vegetables, and destroy a breeding area for migratory birds. The petitioners also contended that the environment ministry didn’t consider objections raised by a majority of those affected. The project proponents, however, said such claims were baseless and the site was not a notified wetland. The ministry said the project was cleared after taking into account all environmental aspects.

The tribunal said that another opportunity should be provided to locals to express their views on the project and, till then, the approval should remain suspended. The tribunal also suspended environment clearance to the 1,200 MW thermal power plant in the Cuddalore district of Tamil Nadu.


Read more »

மங்களூர் ஒன்றியத்திலுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அடையாள அட்டை


சிறுபாக்கம் :

மங்களூர் ஒன்றியத்திலுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அடையாள அட்டை வழங்க புகைப்படம் எடுக்கும் பணிநேற்று நடந்தது.
மங்களூர் ஒன்றியத்திலுள்ள 66 ஊராட்சி தலைவர்கள், 24 ஒன்றிய கவுன்சிலர்கள், 2 மாவட்ட கவுன்சிலர்கள், 456 சிற்றூராட்சி வார்டு உறுப்பினர்கள் உட்பட 548 உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளனர். இவர்களுக்கு தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை மூலம் அடையாள அட்டை வழங்கபோட்டோ எடுக்கும் பணியை ஒன்றிய சேர்மன் கந்தசாமி துவக்கி வைத்தார். பி.டி.ஓ.,க்கள் சுந்தரம், கலையரசி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இப்பணி முடிந்தவுடன் விரைவில் இவர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.
நல்லூர் ஒன்றியத்தில் 64 ஊராட்சி தலைவர்கள் 21 ஒன்றிய கவுன்சிலர்கள், 438 சிற்றூராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட 525 பேர்களுக்குபோட்டோ எடுக்கும் பணி நடந்தது. பணியை ஒன்றிய சேர்மன் ராஜலட்சுமி ராஜேந்திரன் துவக்கி வைத்தார். பி.டி.ஓ.,ராஜவேல், ஒன்றிய துணைசேர்மன் வேல்முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.




Read more »

விருத்தாசலம் நகராட்சியில் வேலை வாய்ப்பு பயிற்சி முகாம்

விருத்தாசலம்:

விருத்தாசலம் நகராட்சி சார்பில் நடந்த வேலை வாய்ப்பு மேம்பாட்டு பயிற்சி முகாமில் 329 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

விருத்தாசலம் நகராட்சி பொன்விழா ஆண்டை முன்னிட்டு நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தில் நகர்ப்புற ஏழைகளுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்இரு தினங்கள் நடந்தது. சேர்மன் அரங்கநாதன் தலைமை தாங்கி, பூர்த்திசெய்த வேலை வாய்ப்பு விண்ணப்பங்களை பெற்றார். துணை சேர்மன் சந்திரகுமார் முன்னிலை வகித்தார். கமிஷனர் (பொறுப்பு) மணிவண்ணன் வரவேற்றார்.முத்துக்குமார் எம்.எல்.ஏ., வேலை வாய்ப்பு முகாமை பார்வையிட்டு, பங்கேற்ற நிறுவனங்களின்விவரம் கேட்டறிந்தார். சி.எஸ்.சி., பிரைமெண்டஸ், ஏசிடி இன்டர்நேஷனல் கம்ப்யூட்டர் நிறுவனங் கள், அபிராமி மற்றும் விருத்தாம்பிகை ஐ.டி.ஐ., ஆகிய நிறுவனங்கள் பங்கு பெற் றன. இரண்டு நாள் முகாமில் 329 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.






Read more »

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் மாணவர்களுக்கு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வினியோகம்

விருத்தாசலம்:

      விருத்தாசலம் அரசு கல்லூரியில் நேற்று முதல் மாணவர்களுக்கு சேர்க்கைக் கான விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 22ம் தேதி வெளியானது.

 விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் இந்த கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணி நேற்று முதல் துவங்கியது.கல்லூரியில் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ், கணக்கு, வேதியியல், விலங்கியல், இயற்பியல், பி.ஏ., தமிழ், ஆங்கிலம், வரலாறு உள்ளிட்ட இளநிலை படிப்புகளும், எம்.ஏ., தமிழ், எம்.பில்., முதுநிலை, எம்.எஸ்சி., கணக்கு, எம்.காம்., உள்ளிட்ட முதுகலை படிப்புகள் உள்ளன.இளங்கலை படிப்பிற்கான விண்ணப்பத்தை முதல்வர் சுப்பிரமணியன் வழங்கினார். பேராசிரியை கலாவதி உட்பட பலர் உடனிருந்தனர்.






Read more »

வியாழன், மே 24, 2012

பிளஸ் 2 தேர்வில் குறிஞ்சிப்பாடி எஸ்.கே.வி.மேல்நிலைப்பள்ளியில் 97 சதவீதம் தேர்ச்சி

குறிஞ்சிப்பாடி : 

குறிஞ்சிப்பாடி எஸ்.கே.வி., மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் 97 சதவீதம் தேர்ச்சியடைந்தனர். குறிஞ்சிப்பாடி எஸ்.கே.வி., மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2வில் 389 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 378 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். 

மாணவி சவுமியா

தமிழ் பாடத்தில் 188 மதிப்பெண்கள், 
ஆங்கிலம் 174, 
இயற்பியல்192, 
வேதியியல் 189,
உயிரியல் 166, 
கணிதம் 197 
மதிப்பெண்களுடன்1200க்கு 1106 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார்.

மாணவர் நிர்மல் 
வேதியியல் பாடத்தில் 200 க்கு 200 மதிப்பெண், 
கணிதம் 199, 
இயற்பியல் 195 மதிப்பெண்களுடன்
1200க்கு 1098 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தை பெற்றார்.


மாணவர் யுவராஜ் 1200க்கு 1082 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பெற்றார்.

வணிகவியல் பாடத்தில் மாணவி பாக்கியலட்சுமி 200க்கு 200 பெற்றார். 
வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும், மாணவர்களின் வெற்றிக்காக உழைத்த ஆசிரியர், பெற்றோருக்கு பள்ளி செயலர் செல்வராஜ், தலைமை ஆசிரியர் நமச்சிவாயம் வாழ்த்து தெரிவித்தார்.



Read more »

தானே புயல் - ப்ளஸ் 2 தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைவு


கடலூர் : 


கல்வியில் மிகவும் பின்தங்கியிருந்த கடலூர் மாவட்டம், அதிகாரிகளின் தீவிர முயற்சியால், பிளஸ் 2 தேர்வில், ஆண்டுதோறும் முன்னேறி வந்த நிலையில், கடந்தாண்டு வீசிய, தானே புயல் பாதிப்பால், பின்தங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது

.24வது இடம்தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய கடலூர் மாவட்டம், கல்வியிலும் மிகவும் பின்தங்கி இருந்தது. கடந்த 2008 - 09ம் ஆண்டு பிளஸ் 2 தேர்வில், 74.66 சதவீதம் தேர்ச்சியுடன், மாநில அளவில் 30வது இடத்தில் இம்மாவட்டம் இருந்தது.கல்வித் துறை அதிகாரிகள் முயற்சியில், சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டதால், கடந்த 2009 -10 ஆண்டில், தேர்ச்சி சதவீதம் 78 ஆக உயர்ந்தோடு, மாநில அளவில் 26வது இடத்திற்கு முன்னேறியது. 2010 - 11ல், இது, 81.64 சதவீதமாக அதிகரித்து, மாநில அளவில், 24வது இடத்தை அடைந்தது.
தேர்ச்சி குறைவு

இதைத் தொடர்ந்து,2011 - 12 கல்வி ஆண்டிலும் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த, கல்வித்துறை அதிகாரிகள் திட்டமிட்டனர். இதற்காக, கற்றலில் சற்று பின்தங்கிய மாணவர்களை கண்டறிந்து, சிறப்பு வகுப்புகள் நடத்தினர்.இந்நிலையில், தற்போதுவெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில், கடலூர் மாவட்டத்தில் தேர்வு எழுதிய, 26,709பேரில், 81.25 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, கடந்த ஆண்டை விட 0.39 சதவீதம் குறைந்து, மாநில அளவில், 25ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

பின்தங்கவில்லை

இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரிகள் கூறியது:


மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த, பள்ளி துவங்கியதும், சிறப்பு கவனம் செலுத்தப் பட்டது. இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் வீசிய, தானே புயல் காரணமாக,ஒட்டு மொத்த மக்களும் வாழ்வாதாரத்தை இழந்து பரிதவித்ததால், மாணவர்களால்வர்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை.இதுதவிர, இந்தாண்டு மாநில அள விலேயே, மொத்த தேர்ச்சி, 0.8 சதவீதம் மட்டும் உயர்ந்துள்ளது. இதனால், 14 மாவட்டங்களின் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. இதை ஒப்பிட்டு பார்க்கும்போது, கடலூர் மாவட்டம், தேர்ச்சி சதவீதத்தில் தொடர்ந்து முன்னேறித் தான் வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.





Read more »

புதன், மே 23, 2012

கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்றவர்கள் விபரம்

கடலூர்: 
 கடலூர் வருவாய் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை மாணவிகள் பிடித்துள்ளனர். 

தமிழை முதன்மைப் பாடமாக கொண்டு படித்த கடலூர் புனித மேரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.ஃபெனிட்டாஷெர்லி 1180 மதிப்பெண்களும், 

அதே பள்ளி மாணவி எஸ்.ஏ.சாஜிதாபானு 1179 மதிப்பெண்களும்,

 நெய்வேலி செயின்ட் குளூனி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஏ,கே.கவிப்பிரியா 1178 மதிப்பெண்களையும் பெற்று கடலூர் வருவாய் மாவட்ட அளவில் மூதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர். 

இதில் கடலூர் புனித மேரி மெட்ரிக் பள்ளி மாணவிகள் முதல் இரு இடங்களைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


கடலூர் கல்வி மாவட்ட அளவில் 

முதல் மூன்று இடங்களை

 எஸ்.ஃபெனிட்டா ஷெர்லி, 
எஸ்.ஏ.சாஜிதாபானு, 
ஏ.கே.கவிப்பிரியா ஆகியோர் பெற்றுள்ளனர். 

விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில்

 ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் ஆர்.பிரேம்குமார் 1170 மதிப்பெண்களும்,

 காட்டுமன்னார்கோயில் ஜி.கே. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஏ.ஜெசிகா 1154 மதிப்பெண்களும்,

 காட்டுமன்னார்கோயில் கலைமகள் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.ரிச்வானாபேகம் 1148 மதிப்பெண்களை

 பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர்.


அரசுப் பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள் விவரம்

கடலூர் கல்வி மாவட்டத்தில் 

புவனகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி டி.முல்லைகொடி 1142 மதிப்பெண்ணும், 

சிதம்பரம் என்.தமிழ்ச்செல்வி 1139 மதிப்பெண்ணும்,

 வடலூர் ஆர்.உதயராணி 1120 மதிப்பெண்ணும்,

 விருத்தாசலம் கல்வி மாவட்ட அளவில் 

ஸ்ரீநெடுஞ்சேரி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.ஏழிலரசி 1139 மதிப்பெண்ணும்,

 திட்டகுடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜே.புவனேஸ்வரி 1088 மதிப்பெண்ணும்,

 லால்பேட்டை பள்ளி மாணவன் எம்.இம்தியாஸ்ஹமீது 1069 மதிப்பெண்ணும் பெற்றும் கல்வி மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளனர்.


நிதிஉதவி பெறும் பள்ளிகளில் முதல் மூன்று இடங்களை பெற்றவர்கள்: 

கடலூர் கல்வி மாவட்ட அளவில் 

கடலூர் மஞ்சக்குப்பம் புனித வளனார் மேல்நிலைப் பள்ளி மாணவர் வி.மகேஷ் 1176 மதிப்பெண்ணும், 

கடலூர் புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் ஏ.வைத்தீஸ்வரி 1150 மதிப்பெண்ணும்,

ஆர்.கீத்துஅபிநயா 1149 மதிப்பெண்ணும் பெற்று இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தைப் பெற்றனர்.


விருத்தாசலம் கல்வி மாவட்ட அளவில்

 காட்டுமன்னார்கோயில் பி.ஆர்.ஜி. மேல்நிலைப்பள்ளி மாணவன் எஸ்.எம்.விக்னேஸ்வரன் 1140 மதிப்பெண்ணும்,

 எறுமனூர் வி.ஈ.டி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஆர்.மனோகரன் 1135, 

பி.அபிநயா 1132 மதிப்பெண்களை பெற்று இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தைப் பெற்றனர்.



Read more »

பிளஸ் 2 தேர்வில் கடலூர் கல்வி மாவட்டத்தில் 18 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி


கடலூர்:

பிளஸ் 2 பொதுத் தேர்வில் கடலூர் வருவாய் மாவட்டத்தில் 18 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சிப்பெற்றுள்ளது.

கடலூர் கல்வி மாவட்டத்தில் 

சிறுகிராமம் அரசு மேல்நிலைப் பள்ளி,
 கடலூர் சி.கே.ப்ராட்டிகல் நாலெட்ஜ், 
புனித அந்தோனி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
 ஏ.ஆர்.எல்.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 
புனித மேரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 
நெல்லிக்குப்பம் செயின்ட் டொமினிக் சேவியர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, குறிஞ்சிப்பாடி செயின்ட் பால் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
 நெய்வேலி செயின்ட் ஜோசப் குளூனி மெட்ரிக் பள்ளி,
 தட்டாஞ்சாவடி செயின்ட் ஆன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 
புவனகிரி பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பரங்கிப்பேட்டை சேவாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப்  பள்ளி, 
மூனா ஆஸ்திரேலியன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
 பூதங்குடி எஸ்.டி. சியோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 
சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளும், 

விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 

மேலவன்னியூர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி, 
பெண்ணாடம் ஸ்ரீகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 
ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 
லால்பேட்டை இமாம் கஜலி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.



 40 சதவீதத்துக்கும் குறைவாகத் தேர்ச்சிப் பெற்ற பள்ளிகள்



 கருங்குழி அரசு மேல்நிலைப் பள்ளி, 
நெல்லிக்குப்பம் செயின்ட் பால் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 
கானூர் அரசு மேல்நிலைப் பள்ளி, 
விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி.






Read more »

செவ்வாய், மே 22, 2012

ல் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான "அடுத்து என்ன படிக்கலாம்"

சிதம்பரம்:

சிதம்பரம் ஜி.எம்.வாண்டையார் திருமண மண்டபத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான "அடுத்து என்ன படிக்கலாம், எந்தக் கல்லூரியில் சேரலாம்' என்பது குறித்த வழிகாட்டி நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. கேம்பிரிட்ஜ் ஆங்கில மையம், ஸ்ரீமதி கம்ப்யூட்டர்ஸ், கலாம் பள்ளி ஆகியவை இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்தின. அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் ஆர்.நீலகண்டன், முத்தையா தொழில்நுட்பக் கல்லூரி பேராசிரியர் கே.சின்னையன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசினர்.÷நிகழ்ச்சியில் ஸ்ரீரெங்கபூபதி கல்லூரி மக்கள்-தொடர்பு அலுவலர் ஜெயலட்சுமி, டி.எஸ்.எம்.ஜெயின் கல்லூரி அமிர்தவர்ஷினி, தாகூர் கல்லூரி சுரேஷ், ஸ்ரீகிருஷ்ணா கல்லூரி முருகன், அன்னை தெரசா கல்லூரி பாலு, ஸ்ரீரேணுகாம்பாள் கல்லூரி அம்பிகா ஆகியோர் பங்கேற்று தங்கள் கல்லூரியில் உள்ள படிப்புகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கலாம் மழலையர் பள்ளி எம்.ஜி.தியாகராஜன், ஸ்ரீமதி கம்ப்யூட்டர் நிறுவனம் ஆர்.நீலகண்டன், கேம்பிரிட்ஜ் ஆங்கிலப்பள்ளி மையம் வி.சிவக்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Read more »

ஞாயிறு, மே 20, 2012

சேத்தியாதோப்பு அருகே மரத்தில் வேன் மோதி 2 பேர் பலி: 22 பேர் படுகாயம்

சிதம்பரம் அருகே மரத்தில் வேன் மோதி 2 பேர் பலி: 22 பேர் படுகாயம்


 



சிதம்பரம்:

சிதம்பரத்தை அடுத்த சேத்தியாதோப்பு அருகே சோழதரம், புடையூர், வலசக்காடு, தம்பசமுத்திரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 25-க்கும் மேற்பட்டோர் ஒரு வேனில் நேற்று இரவு நாகை மாவட்டம் ஆனந்த மங்கலத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர். வேனை புடையூரை சேர்ந்த ஜெயமுருகன் (41) என்பவர் ஓட்டி சென்றார். பின்னர் சாமி கும்பிட்டவிட்டு வேனில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 4 மணியளவில் சிதம்பரத்தை அடுத்த சோழதரம் அருகே ஒரு தனியார் பள்ளி எதிரே வேன் வந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையோரம் நின்ற புளிய மரத்தில் வேன் மோதியது.

இதில் வேனில் பயனம் செய்த புடையூரை சேர்ந்த ராஜசெல்வம் (58), சுப்பிரமணி (45), செல்வம் (40), வலசக்காட்டை சேர்ந்த ஜெயராம் (40), முத்துசெல்வி, ராஜாராமன் (52), சோழதரத்தை சேர்ந்த ராஜகுமாரி, பானுமதி (35), மணி (45), அம்பிகா (25), தம்ப சமுத்திரத்தை சேர்ந்த சங்கர் (38), விஜயகுமார் என்ற சோமு (36) மற்றும் வேன் டிரைவர் ஜெயமுருகன் உள்பட 25 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே ராஜசெல்வம், ஜெயராம் ஆகிய 2 பேரும் பரிதாபமாக இறந்து போனார்க்ள. மற்றவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் வேன் டிரைவர் ஜெயமுருகன் மேல் சிகிச்சைக்காக புதுவை பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்து குறித்த சோழதரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதி மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Read more »

வியாழன், மே 17, 2012

சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் தமிழக முதல்வரிடம் நேரில் அளித்த மனுக்கள்:

சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழு கொறடாவுமான கே. பாலகிருஷ்ணன் 16.5.12 தமிழக முதல்வரிடம் நேரில் அளித்த மனுக்கள்:

மனு -1:

பெறுநர்
மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,
தமிழ்நாடு அரசு,
தலைமைச் செயலகம்,
சென்னை - 600 009.
மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம்.

பொருள்:- தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் - °டேட் பேங்க் ஆஃப் இந்தியா - விவசாயிகள் வாங்கியுள்ள கடன் பாக்கிக்காக டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்படுவதை தடுத்து நிறுத்தவும், பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டர்களை மீட்டு விவசாயிகளிடம் வழங்கிட கோருவது தொடர்பாக:-

தமிழக விவசாயிகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் குறிப்பாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் டிராக்டர்கள் கடனில் பெற்றுள்ளார்கள். ஏற்கனவே ஒரு பகுதி தொகையையும் செலுத்தியுள்ளார்கள்.

கடந்த ஆண்டு தானே புயல் பாதித்ததனால் கடன் நிலுவையை செலுத்த இயலவில்லை. இந்த நிலையில் பல மாவட்டங்களில் குறிப்பாக, கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடி வட்டத்தில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் சுமார் 18 டிராக்டர்களை வங்கிகள் வசூல் ஏஜெண்டுகள் மூலம் பறிமுதல் செய்துள்ளனர்.

இது தொடர்பாக சட்டப்பேரவையில் தாங்கள் “இவ்வாறு எதிர்காலத்தில் ஜப்தி நடவடிக்கை எடுக்காமல் வங்கி அதிகாரிகளோடு பேசி தீர்வு காணப்படும்” என கடந்த ஆண்டு கொடுத்த வாக்குறுதி விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் தற்போது டிராக்டர் பறிமுதல் செய்தது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

எனவே தாங்கள் தலையிட்டு வங்கி அதிகாரிகளோடு பேசி, பறிமுதல் செய்யப்பட்டுள்ள டிராக்டர்களை மீட்டு விவசாயிகளிடம் வழங்கிடவும், கடன் பாக்கியை நீண்ட தவணை முறையில் செலுத்துவதற்கும் வழிவகை செய்ய வேண்டுமென பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.
தங்களன்புள்ள,
/ஒப்பம்
(கே. பாலகிருஷ்ணன் )
சிதம்பரம் தொகுதி


மனு -2;

பெறுநர்
மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,
தமிழ்நாடு அரசு,
தலைமைச் செயலகம்,
சென்னை - 600 009.
மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம்.

பொருள்:- கொச்சின் - பெங்களூர் குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் நலன் காத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டுவது தொடர்பாக:-

கெய்ல் இந்தியா நிறுவனம் எரிவாயு குழாய் மூலம் கொண்டு வரும் திட்டத்தினை கொச்சின் - பெங்களூர் வழியாக செயல்படுத்தவுள்ளது. இத்திட்டம் தமிழகத்தில் சுமார் 8 மாவட்டங்களின் வழியாக பெங்களூர் செல்கிறது.

விளை நிலங்கள் வழியாக குழாய்கள் பதிக்கப்படுவதால் தங்களது நிலங்களுக்கு பாதிப்பு வரும் எனவும், இதற்கான நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் நிலங்களுக்கு கீழே உள்ள குழாய்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட விவசாயிகள் பொறுப்பேற்க வேண்டுமென பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் தாங்கள் பாதிக்கப்படுவோம் என்கிற அச்சம் விவசாயிகள் மத்தியில் உள்ளது.

எனவே, இந்த அச்சத்தைப் போக்குவதற்கும் இத்திட்டத்தால் எதிர்காலத்தில் விவசாயிகள் பாதிக்கப்படமாட்டார்கள் என்ற உறுதியை ஏற்படுத்திட சம்பந்தப்பட்ட விவசாயிகளோடு அரசு சுமூகமாக பேசி உடன்பாடு காண வேண்டுமெனவும், அதுவரையில் குழாய் பதிக்கும் பணியை நிறுத்தி வைக்க வேண்டுமெனவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.
தங்களன்புள்ள,
/ஒப்பம்
(கே. பாலகிருஷ்ணன் )
சிதம்பரம் தொகுதி

Read more »

கடலூர் சில்வர் பீச்சில் மே 23 முதல் கோடை விழா

கடலூர்:

கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் வரும் 23-ம் தேதி முதல் ஐந்து நாள்கள் கோடை விழா நடக்கவுள்ளது

.கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ கூறியது:

கடலூர் சில்வர் பீச்சில் வரும் 23-ம் தேதி முதல் 27-ம் தேதி வரையில் கோடை விழா நடக்கவுள்ளது. 23-ம் தேதி மாலை நடக்கவுள்ள தொடக்க விழாவில், ஊரக தொழில் துறை மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர்கள் சிறப்பிக்க உள்ளனர். ஐந்து நாள்கள் நடக்கும் விழாவில் தமிழகத்தின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான ஒயிலாட்டம், மயிலாட்டம், சிலம்பாட்டம், கரகாட்டம், தப்பாட்டம், பம்பை போன்ற கலை நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன. இதேபோல் மேற்கு வங்காளம், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநில கிராம கலைக் குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும் நடக்கவுள்ளது. பீச்வாலிபால், கபடி, பள்ளி, கல்லூரி மாணவர்களின் அறிவியல் கண்காட்சி மற்றும் பொழுதுப்போக்கு சாதனங்களும் இடம்பெறும். மாலை 4 மணி முதல் 5.30 மணி வரையில் பார்வையாளர்களுக்கான போட்டிகளும், அதற்கான பரிசளிப்பு விழாவும் நடைபெறும். 6 மணி முதல் 10 மணி வரையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
விழாக் குழு: விழாவுக்கான ஏற்பாடுகளை செய்ய 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஆட்சியர் நேர்முக உதவியாளர் உள்ளிட்ட பல்துறை அதிகாரிகளை கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்தார்.












Read more »

கடலூர் மாவட்ட ஊர் காவல் படைக்கு 110 பேர் தேர்வு

கடலூர்:

 கடலூர் மாவட்ட ஊர் காவல் படைக்கு ஆட்கள் சேர்ப்பு முகாம் கடலூர் ஆயுதப் படை வளாகத்தில் புதன்கிழமை நடந்தது. கடலூர், பண்ருட்டி (புதிய கம்பெனி), சேத்தியாதோப்பு, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி பகுதிகளுக்கு புதிய ஊர்காவல் படை வீரர்கள் சேர்ப்புக்காக இத்தேர்வு நடந்தது. 300 பேர் பங்கேற்ற முகாமில் சான்றிதழ் சரிபார்ப்பு, உயரம், மார்பளவுகளை கொண்டு 110 பேர் தேர்வு செய்யப்பட்டனர். கடலூர் மாவட்ட ஊர்காவல் படை வட்டார தளபதி ஆர்.கேதார்நாத் தலைமை தாங்கினார். துணை வட்டார தளபதி ஜெயந்தி ரவிசந்திரன் முன்னிலை வகித்தார். ஆயுதப்படை ஆய்வாளர் ராமதாஸ் (பொறுப்பு), கோட்ட தளபதி ரவீந்திரநாதன் ஆகியோர் மேற்பார்வையில் ஆட்கள் சேர்ப்பு நடந்தது.











Read more »

புதன், மே 16, 2012

கடலூரில் மாணவர்களுக்கு கோடைகால கலை பயிற்சி முகாம்



கடலூரில் மாணவர்களுக்கு கோடைகால கலை பயிற்சி முகாம்



கடலூர்:




கடலூரில் கலை பண்பாட்டுத்துறை, தஞ்சாவூர் மண்டல கலை பண்பாட்டு மையம் மற்றும் ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் கோடை கால கலைப்பயிற்சி முகாம் நிறைவு விழா நடந்தது.  விழாவிற்கு ஜவகர் சிறுவர் மன்ற தலைமை ஆசிரியர் வெங்கடேசு தலைமை தாங்கி அனைவரையும் வரவேற்றார். இதில் வக்கீல் அருணாச்சலம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். முன்னதாக மாணவ- மாணவிகள் பாட்டு போட்டி, பரதநாட்டியம், சிலம்பு ஆட்டம், ஓவியம் போன்ற கலை நிகழ்ச்சி நடைபெற்றது. முடிவில் ஓவிய ஆசிரியர் மனோகரன் நன்றி கூறினார்.






Read more »

செவ்வாய், மே 15, 2012

கடலூர் மாவட்டத்தில் மாபெரும் துப்புரவுப் பணி

கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் சுகாதாரத்தை பேணிக்காக்கும் வகையில் மாபெரும் துப்புரவு பணி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. 

நெல்லிகுப்பம் நகராட்சியில் நடந்த துப்புரவுப் பணி முகாமை மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ தொடங்கிவைத்து பேசியது: 

மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் 683 ஊராட்சிகளில் மாபெரும் துப்புரவுப் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான பயிற்சி உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இப்பணியில் துப்புரவுப் பணியாளர்கள் மட்டுமின்றி தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர். முதற்கட்டமாக திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை நடைபெறும் பணியின்போது தெருக்களில் உள்ள குப்பைகளை சேகரித்து, மக்கும் மற்றும் மக்காத குப்பை என தனித்தனியாக பிரிக்கப்படும்.

இரண்டாம் கட்டமாக 21-ம் தேதி முதல் 26-ம் தேதிவரை நடைபெறும் பணியின்போது, தமிழ்நாடு அரசு துப்புரவுப் பணி மற்றும் திடக்கழிவு மேலாண்மைக்காக அனைத்து நகராட்சிகளுக்கும் ஒருங்கிணைந்த நகர்புரம் வளர்ச்சி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.50 லட்சம் மதிப்பில் கருவிகளும், ஒவ்வொரு நகராட்சிக்கும் ரூ.18 லட்சம் மதிப்பில் டம்பர் பிளேசர் பின் 30, ரூ.15 லட்சம் மதிப்பில் டம்பர் பிளேசர் லாரி, ரூ.12 லட்சம் மதிப்பில் டிப்பர் லாரி, ரூ.5 லட்சம் செலவில் 33 தள்ளுவண்டிகளும் வழங்கப்பட உள்ளன. சேகரிக்கும் குப்பைகளை மறுசுழற்சி செய்து இயற்கை உரம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோன்று சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவு சாலை மற்றும் சிமென்ட் தொழிற்சாலை உபயோகத்துக்கு பயன்படுத்தப்படும்.
எனவே துப்புரவுப் பணிக்கு பொதுமக்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றார். நகர்மன்றத் தலைவர் சுதாகர், ஆணையர் சுரேந்திரஷா, மக்கள் தொடர்பு அலுவலர் தமிழ்செல்வராஜன் உடனிருந்தனர்.








Read more »

சனி, மே 12, 2012

Tamil Nadu government has sent a revised proposal for establis Petrochemicals Investment Region (PCPIR) in Cuddalore and Nagapattinam districts.


       The Tamil Nadu government has sent a revised proposal for establishing a Petroleum, Chemicals and Petrochemicals Investment Region (PCPIR) in Cuddalore and Nagapattinam districts.

    According to the state industries department’s policy note, which was tabled by P Thangamani, minister for industries, Tamil Nadu government, the revised and final proposal for establishing the PCPIR was sent to the department of chemicals and petrochemicals on January 18. The total investment for external linkage roads and other infrastructure augmentation and utilities projects for the PCPIR has been estimated at Rs 13,354 crore. Over a period of 10 years, investments of around Rs 92,160 crore will be mobilised in this PCPIR. The total employment generation expected during this period is estimated at about 7,50,000, the state government said in the policy note.


 It may be noted that Nagarjuna Oil Corporation Limited (NOCL) is setting up a petroleum refinery project in Cuddalore, which will be the first refinery project in the PCPIR. The petroleum refinery project of NOCL, with a six-million tonne-a-year capacity, is a joint venture between state-run Tamil Nadu Industrial Development Corporation (TIDCO) and Nagarjuna Fertilisers Limited. The project, coming up at Thiruchopuram in Cuddalore taluk, will be commissioned in the current year. The total investment in this project is estimated to be about Rs 9,660 crore, including those investments made in associate facilities. NOCL will take up its expansion project in 2014, which will be completed by 2016. By 2014, the refining capacity of NOCL will be increased from six to 15 million tonne per year. The additional investment for this expansion project is estimated at about Rs12,000 crore, the policy note said.















Read more »

பண்ருட்டி நகராட்சியில் ரூ.1.38 கோடி செலவில் சாலைப் பணி தொடக்கம்

பண்ருட்டி:


பண்ருட்டி நகராட்சியால் ரூ.1.38 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் இணைப்புச் சாலைப் பணிக்கான பூமி பூஜை புதன்கிழமை நடந்தது. பண்ருட்டி நகரில் போக்குவரத்து நெரிசல் காரணமாக பொது மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். புறவழிச் சாலைகளை ஏற்படுத்தி போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நகர நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஒருங்கிணைந்த நகர்ப் புற வளர்ச்சித் திட்டத்தின் மூலம் கும்பகோணம் சாலை அரசு மருத்துவமனையில் இருந்து சத்தியமூர்த்தி வீதி வழியாக டைவர்ஷன் சாலையை இணைக்கும் தார் சாலை 1295 மீட்டர் நீளம், 7 மீட்டர் அகலத்தில் ரூ.1.10 கோடி செலவிலும், இந்திரா காந்தி சாலையில் இருபுறமும் வடிகால் வசதிகளுடன் 150 மீட்டர் நீளம், 7 மீட்டர் அகலத்தில் ரூ.28 லட்சத்தில் தார் சாலையும் அமைக்கப்பட உள்ளது.


இதற்கான பூமி பூஜை புதன்கிழமை நடந்தது. நகர்மன்றத் தலைவர் பி.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த பூஜையில், நகராட்சி அணையர் (பொறுப்பு) ஆர்.ராதா, கவுன்சிலர்கள் ராஜதுரை, வழக்குரைஞர் வடிவேலன், முருகன், வச்சலாசெல்வமணி, பணி ஆய்வாளர் சாம்பசிவம், ஒப்பந்ததாரர்கள் கடலூர் ராமகிருஷ்ணன், சுரேஷ்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.















Read more »

வியாழன், மே 10, 2012

மாரடைப்பு நோய்க்கு புதிய சிகிச்சை முறை

சிதம்பரம்:

மாரடைப்பு நோய்க்கு புதிய முறையில் சிகிச்சை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என சென்னை அப்பல்லோ மருத்துவமனை முதுநிலை இதயநோய் மருத்துவர் ஜி.செங்கோட்டுவேலுதெரிவித்தார்.


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் இதயநோய் சிகிச்சை குறித்த சிறப்புக் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. 

கருத்தரங்கில், சென்னை அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர் ஜி.செங்கோட்டுவேலு மாரடைப்புக்கு உயிர்காக்கும் புதிய சிகிச்சை முறையை அறிமுகம் செய்து வைத்துப் பேசியது:


தீவிர மாரடைப்பின்போது எம் கார்டு மற்றும் க்ளியர்வே கத்தீட்டர் ஆகிய கருவிகளைப் பயன்படுத்தி அவற்றின் மூலம் மருந்துகளை சீராக செலுத்தி ரத்தக் கட்டியை கரைத்து இதயத்துக்குள் ரத்தஓட்டத்தை சீராக்குகிறது. மாரடைப்பு சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் புதிய மருத்துவக் கருவிகளில் க்ளியர்வே கத்தீட்டர் என்பது ஒன்றாகும். அதன் முனையில் பொருத்தப்பட்டிருக்கும் பலூன் பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிக்கு மருந்தை சீராக செலுத்தி ரத்தக்கட்டியை நீக்குகிறது. ÷பாரம்பரிய சிகிச்சை முறையில் ரத்தக்கட்டிகளை சிதறடிக்க கத்தீட்டர் மூலம் மருந்து செலுத்தப்படும். இது பாதிப்புள்ள பகுதிக்கு 20 சதவீத குறைவான அளவே மருந்து சென்றடையும்.


        ஆனால் புதிய கருவியான க்ளியர்வே கத்தீட்டர் பயன்படுத்துவதால் உயிர் சேதத்தை குறைக்க வசதியாக இருக்கும். ரத்தக்கட்டியை கட்டுப்படுத்துவதற்கான எம்கார்டு ஸ்டெண்ட் என்ற புதிய கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.÷பிரத்யோக மைக்ரான்- வலை தொழில்நுட்பத்தை கொண்டுள்ள எம்கார்டு, ரத்தக்கட்டிகளை சிக்க வைப்பதுடன், ரத்தநாளங்கள் நிவாரணமடைவதற்கு உதவுகிறது. தீவிர மாரடைப்புகள் இளம்வயதினில் குறிப்பாக புகைப்பழக்கம் உள்ளவர்களில் அதிகரித்து வருவதை காணமுடிகிறது. மார்புவலி ஏற்பட்டவுடன் மருத்துவமனைக்கு விரைந்து வருவதன் மூலம் இதய தசைகளை காப்பாற்றலாம். இந்த புதிய கருவிகளுடன் உகந்த சிகிச்சை துரிதமாக மேற்கொள்ளப்படுவதால் இதய தசைகள் பெருமளவில் சேதமடையாமல் காப்பாற்றப்பட்டு நோயாளி உயிர் பிழைக்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன என ஜி.செங்கோட்டுவேலு தெரிவித்தார்.
















Read more »

தேனீ வளர்ப்பு முறைகள்


 சிதம்பரம்: 
கடந்த சில ஆண்டுகளாக குறைந்த செலவில் அதிக லாபம் பெற்று தரும் தொழில்நுட்பங்கள் விவசாயிகளிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. அதுவும் குறிப்பாக தோட்டக்கலைப் பயிர் சாகுபடியில் சிறு மற்றும் குறு விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக குறைந்த செலவில் அதிக லாபம் பெற்று தரும் தொழில்நுட்பங்கள் விவசாயிகளிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. தோட்டக் கலைப் பயிர்களின் உற்பத்தியைப் பெருக்கும் நோக்கில் தமிழக அரசின் சார்பில் சமவெளிப் பகுதிகளில் கூட தேனீ உற்பத்தியைப் பெருக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழக விவசாயிகள் தேனீ வளர்ப்பின் நன்மைகள் குறித்து தெரிந்து கொள்வது அவசியமாகும்.


 தோட்டக்கலைப் பயிர்களும், தேனீ உற்பத்திப் பெருக்கம் குறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் தி.ராஜ்பிரவீன் தெரிவித்தது:
இவற்றின் மகரந்தச் சேர்க்கையில் மிக முக்கிய பங்கு வகிப்பது தேனீக்கள்தான். ஒரு சராசரி தேன்கூட்டில் 50 ஆயிரம் தேனீக்கள் வரை ஒரு நாளைக்கு 10 லட்சம் செடிகளில் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகின்றன.இவ்வாறு மிக குறைந்த செலவில் இயற்கை முறையில் உற்பத்திப் பெருக்க உதவும் தேனீ வளர்ப்பு வாயிலாக விவசாயிகளுக்கு தேன் விற்பனை மூலமாகவும், தேன்கூட்டின் பிற மதிப்பு கூட்டுப் பொருள்கள் விற்பனை வாயிலாகவும் விவசாயிகள் அதிகளவு லாபம் பெற முடியும்.தோட்டக் கலைப் பயிர்களின் உற்பத்திப் பெருக்கம் (சதவீதத்தில்) குறித்த விவரம்: தக்காளி-160 சதவீதம், முந்திரி-157, கொடை மிளகாய்- 227, கத்தரி- 31, துவரை- 133, கொண்டைக் கடலை- 79.5, சோளம், பீன்ஸ்- 41, மா- 68, வாழை- 63. 
 தோட்டக்கலைப் பயிர்களில் மகரந்தச் சேர்க்கைக்கு பல நன்மை தரும் பூச்சிகள் பெரிதும் துணை செய்கின்றன. குறிப்பாக எறும்பு, பட்டாம்பூச்சிகள், வண்டுகள் என பல வகை பூச்சி வகைகள் பெரிதும் உதவி செய்கின்றன.இத்தகைய நடைமுறை சூழலில் மகரந்தச் சேர்க்கைக்கு பெரிதும் உதவி செய்யும் தேனீக்களின் விளைவாக பல்வேறு தோட்டக்கலைப் பயிர்களில் உற்பத்திப் பெருக்கம் ஏற்பட்ட அளவை வேளாண் ஆராய்ச்சியாளர்கள் பல ஆண்டுகால ஆராய்ச்சியின் வாயிலாக கண்டறிந்துள்ளனர்.
 
முதலில் ஏக்கருக்கு ஒன்று அல்லது இரண்டு தேனீப் பெட்டிகள் வைத்து பழகிய பின்பு அவற்றின் பொருளாதார லாபங்களை பெற்ற பின்பு தேவையின் அடிப்படையில் விவசாயிகள் தேனீ கூடுகளின் எண்ணிக்கையை அதிகரித்து கொள்ளலாம். தற்போது தமிழக அரசு கதர்த்துறை சார்பில் சட்டப்பேரவையில் தேனீ வளர்ப்பை பிரபலப்படுத்த ஒரு கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்து முதல் கட்டமாக 440 விவசாயிகள் 4400 தேனீ குடும்பங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடவுள்ளனர் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இந்த முயற்சியில் விவசாயிகள் தங்களை இணைத்து கொண்டு தங்களின் தோட்டங்களில் உற்பத்திப் பெருக்கத்தை ஏற்படுத்த முடியும்.  குறைந்த செலவில் அதிக லாபம் பெற முடியும் என்கிறார் உதவிப் பேராசிரியர் முனைவர் தி.ராஜ்பிரவீன். 




Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior