உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 05, 2011

கடலூர் மாவட்டத்தில் படகுகளைப் பழுதுபார்ப்பதில் மீனவர்கள் மும்முரம்

கடலூர் முதுநகர் துறைமுகம் பகுதியில் மீன்பிடிப் படகுகளைப் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள். (வலது படம்) பழுதுபார்க்கும் பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் படகுகள் 
கடலூர்:
            மீன்பிடித் தடை காலத்தை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் கடலூர் மாவட்ட மீனவர்கள் தங்கள் படகுகளை பழுதுபார்க்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். 
             சுமார் 2 ஆயிரம் தொழிலாளர்கள் இப் பணியில் ஈடுபட்டு உள்ளதாக கணக்கிடப்படுகிறது. மீன்கள் இனப் பெருக்கத்தை தடை செய்யாமல், மீன் வளத்தைப் பெருக்கும் வகையில் கடலூர் மாவட்டத்தில் ஏப்ரல் 15-ம் தேதி முதல் மே 29-ம் தேதி வரை, வங்கக் கடலில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடைக்காலத்தில் கட்டுமரங்கள், சாதாரண கண்ணாடி இழைப் படகுகள் மூலம் மீன் பிடிக்கலாம். ஆனால் சிறிய மீன்களையும் வாரிக் கொண்டு வரும் வலைகளுடன் செல்லும் தோணி, ஐ.பி., எஸ்.பி.வி. ரக இயந்திரப் படகுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 
                    கடலூர் மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் குடும்பங்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளன. சுமார் 1,000 கட்டுமரங்கள், 25 ஆயிரம் கண்ணாடி இழைப் படகுகள், 100 தோணிப் படகுகள், 400 ஐ.பி. படகுகள், 100 எஸ்.பி.வி. என்ற மிகப் பெரிய படகுகள் மீன்பிடித் தொழில் பயன்பாட்டில் உள்ளன. கட்டுமரங்களின் விலை ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 10 ஆயிரம் வரையிலும், கண்ணாடி இழைப் படகுகள் விலை ரூ. 75 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரையிலும், எஸ்.பி.வி. போன்ற பெரிய படகுகள் விலை ரூ. 25 லட்சம் முதல் ரூ. 30 லட்சம் வரையிலும் உள்ளன.கடலூர் கோரி உப்பனாறு, துறைமுகம், சோனங்குப்பம் ஆகிய பகுதிகளில் படகுகள் பழுதுபார்க்கும் வேலை தற்போது, மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. 
                  வலைகளைப் பழுதுபார்த்தல், புதிய வலைகளை தயாரித்தல், படகுகளில் உள்ள ஓட்டைகளை அடைத்தல், இயந்திரங்களைப் பழுதுபார்த்தல், புதிய வர்ணம் தீட்டுதல், உடைந்து இருக்கும் பலகைகளை பழுதுபார்த்தல், படகுகளின் அடிப்பகுதியில் ஓட்டிக் கொண்டிருக்கும் கிளிஞ்சல்கள் உள்ளிட்டவற்றை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். பழுதுபார்க்கும் பணிக்கு ஒரு படகுக்கு ரூ. 25 ஆயிரம் முதல் ரூ. 1.50 லட்சம் வரை செலவாகும் என்று மீன்பிடிப் படகு உரிமையாளர்கள் தெரிவிக்கிறார்கள். 500 க்கும் மேற்பட்ட தச்சுத் தொழிலாளர்கள், பழுதுபார்க்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 
                அவர்களுக்கு உதவியாக அந்தந்தப் படகுகளில் நிரந்தரமாகத் தொழில் புரியும் மீனவர்கள் சுமார் 1,500 பேர் வேலை செய்கிறார்கள். ஏற்கெனவே படகுகள் கட்டும் தொழில் சிறப்பாக நடந்துவரும் கடலூரில் மீன்பிடித் தடை காலத்தில் நூற்றுக் கணக்கான படகுகளை குறிப்பிட்ட இடங்களில் நிறுத்தி வைத்து பழுதுபார்க்கப்படுவதன் மூலம், அவைகள் மிகப்பெரிய தொழிற்கூடங்களாகக் காட்சி அளிக்கின்றன. இதன் மூலம் மீன்பிடித் தொழில் அரசின் முதலீடுகளோ, வெளிநாட்டு முதலீடுகளோ இன்றி, பல்லாயிரம் பேருக்கு தொழில் வாய்ப்பைக் கொடுப்பதுடன், பன்னாட்டு தொழிற்சாலைகளைப்போல் எத்தனை பிரமாண்டமான தொழிற்சாலை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. 
               மீன்பிடித் தடைகாலம் மே 29-ம் தேதி முடிவடைந்து, ஆகஸ்ட் இறுதியில் மழைக் காலம் தொடங்கி விடும். அப்போது வடகிழக்குப் பருவமழை, வங்கக் கடலில் உருவாகும் புயல்கள் காரணமாக, மீன் பிடித் தொழிலில் மந்தம் அடைவதுடன் வேறெந்த வேலையையும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிடும் என்பதால், தற்போது பழுதுபார்க்கும் வேலை, மும்முரமாக நடந்து வருவதாக மீனவர் பேரவை மாவட்டத் தலைவர் சுப்புராயன் தெரிவித்தார் 
                .பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பையும், நாட்டின் உணவுத் தேவையில் கணிசமான அளவுக்கு பூர்த்தி செய்யும் இத்தனை பிரமாண்டமான தொழிற்சாலைக்கு, அரசின் உதவிகளும் சலுகைகளும் போதாது, மீன்பிடித் தடை காலத்தில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை போதாது, மீன் இறங்கு தளங்களில் போதிய அடிப்படை வசதிகளைக்கூட அரசு செய்து கொடுப்பதில்லை என்றும் அவர் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்தார்.

Read more »

வாழைச் சாகுபடிக்கு 65% அரசு மானியம்


திசு வளர்ப்பு முறையில் உருவாக்கப்பட்டுள்ள வாழைக் கன்றுகள்.
 
விருத்தாசலம்: 

           நீர்வள, நிலவள திட்டத்தின்கீழ் கோமுகி நதி உபவடி நிலப் பகுதியில் வாழைச் சாகுபடிக்கு விவசாயிகளுக்கு அரசு 65 சதவீத மானியம் வழங்குகிறது.

இதுகுறித்து விருத்தாசலத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத் தலைவர் பேராசியர் கா.சுப்பிரமணியன், வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் அருட்செந்தில் ஆகியோர் தெரிவித்தது:

                தமிழகத்தில் உள்ள 63 ஆற்றுப்படுகை பகுதியில் விவசாயப் பாசனப் பரப்பை அதிகரிக்கும் வகையில் தமிழக அரசு, உலக வங்கி நிதி உதவியுடன் நீர்வள, நிலவள திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.இதன்கீழ் விழுப்புரம், கடலூர், சேலம் மாவட்டத்தின் சில பகுதிகளில் கோமுகி நதி பாயும் விளை நிலங்களில் வாழை உற்பத்தியை அதிகப்படுத்தும் வகையில் 65 சதவீத மானியத்தை வாழை பயிரிடும் விவசாயிகளுக்கு அரசு மானியமாக வழங்குகிறது. 

வாழை சாகுபடிக்கு ஏற்ற மண்ணின் தன்மை: 

                வாழை பயிரிடுவதற்கு நல்ல வடிகால் வசதியுடைய அமில, காரத் தன்மை 5.5-7.5 வரையுள்ள மண் சிறந்ததாகும். காரத் தன்மை மிக அதிகமாக உள்ள உப்பு கலந்த களிமண் வாழைப் பயிருக்கு ஏற்றதல்ல. இத்தகைய மண்ணில் நுண்ணூட்டச் சத்துகள், மணிச்சத்து வாழைச் செடிக்கு எளிதில் கிடைப்பதில்லை. மேலும் சுண்ணாம்பு கற்கள் அதிகமுள்ள மண்ணாக இருப்பின் நுண்ணூட்டச் சத்துப் பற்றாக்குறை செடி வளர்ச்சியின் ஆரம்ப நிலையில் இருந்தே தெரியவரும்.

திசு வாழை: 

              திசு வளர்ப்பு வாழைக் கன்றுகளை தேர்வு செய்து நடும்போது ஜூன் முதல் டிசம்பர் மாதத்துக்குள் நடவு செய்ய வேண்டும். திசு வாழைக் கன்றுகளை ஜனவரி முதல் மே வரையிலான காலங்களில் நடவு செய்தால் பாக்டீரியா நோய், வைரஸ் நோய்களின் தாக்குதல் அதிகமாக இருப்பதுடன் செடியின் வளர்ச்சியும் குறைந்து சில நேரங்களில் 5 மாதத்துக்கு உள்ளேயே குலை தள்ளும் நிலை உருவாகும்.

திசு வளர்ப்பு கன்றுகளை தேர்வு செய்யும் முறை: 

            திசு வாழைக் கன்றுகளை தேர்வு செய்யும் போது 5 முதல் 6 இலைகள் உள்ள நன்கு வளர்ந்த செடிகளை தேர்வு செய்ய வேண்டும். நோய் தாக்குதல் இல்லாத ஆரோக்கியமான வாழைத் தோப்பில் 1.5 முதல் 2 கிலோ எடையுள்ள கன்றுகளை தேர்வு செய்து வேர்கள், அழுகிய பகுதிகளை நீக்கிவிட்டு கிழங்கிலிருந்து 20 செ.மீ. அளவுக்கு மேல்புறம் விட்டுவிட்டு மீதமுள்ள பகுதியை வெட்டி எடுக்க வேண்டும். வாடல் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த கார்பென்டாசிம் 0.1 சதவீதக் கரைசலில் 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும். நூற்புழு தாக்குதலை கட்டுப்படுத்த 4 பங்கு களிமண், 5 பங்கு நீருடன் சேர்த்து கரைத்த சேற்றில் கன்றுகளை நனைத்து ஒரு கன்றுக்கு 40 கிராம் என்ற அளவில் கார்போபியூரான் 3 ஜி குருணை மருந்தை கன்றில் தூவி பின்னர் நடவு செய்ய வேண்டும்.

நடவு முறை: 

            நடவு வயலை உளிக்கலப்பை கொண்டு ஒரு முறையும் பின்னர் சட்டிக் கலப்பை கொண்டு ஒரு முறையும் உழவு செய்ய வேண்டும். பின் கொக்கிக் கலப்பை கொண்டு 2 முறை உழவு செய்ய வேண்டும். நடவுக்கு ஒரு மாதத்துக்கு முன்பு 1.5க்கு 1.5க்கு 1.5 அளவுள்ள குழிகளை 6க்கு 6 அடி அல்லது 5க்கு 7 அடி இடைவெளியில் எடுக்கவேண்டும். குழிக்கு 5 கிலோ அளவுக்கு தொழு உரத்தை மேல் மண்ணுடன் கலந்து குழிக்குள் இட வேண்டும். அத்துடன் வேப்பம்புண்ணாக்கு 500 கிராம் மற்றும் பியூரடான் 20 கிராம் இட்டு கன்றுகளை நடவு செய்ய வேண்டும். 1 ஹெக்டேரில் நடவு செய்ய குறைந்தபட்சம் 3 ஆயிரம் வாழைக் கன்றுகள் வேண்டும்.

Read more »

பக்க விளைவுகள் ஏற்படுத்தாத தாவரப் பூச்சிக் கொல்லிகள்


கற்றாழை 
 
கடலூர்: 
 
              விவசாயிகள் தாவரப் பூச்சிக் கொல்லிகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கி இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி தரும் செய்தியாக உள்ளது. 
 
                 குறைந்த பரப்பளவு நிலத்தில், அதிக விளைச்சல் காண வேண்டும் என்ற ஆவல் தான் பசுமைப் புரட்சி திட்டங்களுக்கு வித்திட்டது. அதற்காகப் பயன்படுத்தப்படும் ரசாயன உரங்கள், ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளால், மனித இனம் பெருமளவுக்கு பாதிப்புகளை சந்திக்கும் நிலை உருவாகி இருக்கிறது. பல லட்சம் கோடி பணம், ரசாயன உரங்கள், ரசாயனப் பூச்சிக் கொல்லி மருந்துகள் தயாரிக்கும் தொழிலில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. 
 
              ரசாயனப் பூச்சிக் கொல்லி மருந்துகள் மற்றும் ரசாயன உரங்களின் பயன்பாட்டால் அந்த ரசாயனங்கள் மனிதனின் உடலில் புகுந்து பல்வேறு நோய்களுக்கும், சுகாதாரக் கேடுகளுக்கும், பக்க விளைவுகளுக்கும் காரணமாகி விடுகின்றன. உதாரணமாக தென்னை மரத்தில் ஏற்படும் பூச்சித் தாக்குதல்களை ஒழிக்க மோனோ குரோட்டோபாஸ், கார்போசல்பான் போன்ற மருந்துகளை தென்னையின் வேர்கள் மூலம் செலுத்தினர். இந்த மருந்துகளின் ரசாயனங்கள் இளநீரில் காணப்பட்டது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதன்பிறகுதான் தென்னை விவசாயிகள் விழித்துக் கொள்ளத் தொடங்கினர். 
 
                வேப்பங் கொட்டைகளில் இருந்து தயாரிக்கப்படும் அசாடிராக்டின் போன்ற தாவரப் பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்த தற்போது தொடங்கியுள்ளனர். தாவரப் பூச்சிக் கொல்லிகள் கிராமங்களில் கிடைக்கும் தாவரங்களான ஆடாதோடா, நொச்சி, எருக்கு, வேம்பு, சோற்றுக் கற்றாழை, எட்டிக் கொட்டை போன்றவற்றைக் கொண்டு, வேக வைக்கும் முறையிலும், ஊறல் முறையிலும் தயாரிக்கப்படுகின்றன. ஊறல் முறை: நொச்சி, ஆடாதோடா, வேம்பு, எருக்கன், பீச்சங்கு (உண்ணி முள்), போன்றவற்றின் இலைகள் 2 கிலோ, எட்டிக் கொட்டை 2 கிலோ ஆகியவற்றை இடித்துப் பொடி செய்து கொள்ள வேண்டும். 
 
               அவை மூழ்கும் அளவுக்கு 12 லிட்டர் மாட்டு சிறுநீர், 3 லிட்டர் சாணக் கரைசல் ஆகியவற்றில் 7 முதல் 15 நாள்கள் வரை ஊறவிட வேண்டும். இலைகள் கரைந்து கூழ் ஆகிவிடும். இதில் ஒரு லிட்டருக்கு 10 லிட்டர் தண்ணீர் கலந்து பயிர்களில் தெளிக்கலாம். வேக வைக்கும் முறை: மேற்கண்ட இலைகள், எட்டிக் கொட்டை தலா 2 கிலோ எடுத்து பாத்திரத்தில் இட்டு, 15 லிட்டர் நீரை ஊற்றி 2 முதல் 3 மணி நேரம் வேக வைக்க வேண்டும். வெந்தபின் சாற்றை வடித்து எடுக்கவேண்டும். ஆறியபின் அதில், ஒரு படி மஞ்சள் தூள் கலந்து 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இதன்மூலம் கிடைக்கும் வடிசாற்றில், 100 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கலாம். 
 
                பூசண நோய் கட்டுப்பாட்டுக்கு மேற்கண்ட சாறில் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் 500 கிராம் முதல் 1 கிலோ வரை கலந்து தெளிக்கலாம். நுண்ணுயிர் இலைக் கருகல் நோய்களுக்கு, சோற்றுக் கற்றாழை 3.5 கிலோ, இஞ்சி 200 கிராம், இவற்றுடன் புதினா அல்லது சவுக்கு இலை 2 கிலோ சேர்த்து மூழ்கும் அளவுக்கு நீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். ஆற வைத்து வடித்த சாற்றுடன் மஞ்சள் தூள் ஒரு படி கலந்து, சூடோமோனாஸ் புளோரசன்ஸ் 500 கிராம் அல்லது ஒரு கிலோ கலந்து தெளிக்கலாம். வேப்பங்கொட்டை சாறு சிறந்த இயற்கைத் தாவர பூச்சிக் கொல்லி மருந்தாக பயன்படுகிறது. 
 
             5 கிலோ வேப்பங் கொட்டையை உரலில் இட்டு இடித்து, சல்லி சாக்கு அல்லது மெல்லிய துணியில் கட்டி, 10 லிட்டர் தண்ணீரில் 24 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் சாற்றினை பிழிந்து எடுத்து வடிகட்டி, 190 லிட்டர் தண்ணீர் கலந்து பயிர்களுக்குத் தெளிக்கலாம். மூலிகை மட்கா என்ற இயற்கைப் பூச்சிக் கொல்லி மருந்து, 5 வகையான மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
 
 
 

Read more »

லாபம் தரும் ரோஜ சாகுபடி


பூண்டி ஒன்றியம் ரங்காபுரத்தில் உள்ள ரோஜாத் தோட்டம். (உள்படம்) விவசாயி வேலு.
 
        
      தோட்டப்பயிரில் ஒரு முறை முதலீடு செய்தால் 3 ஆண்டுகள் வரை தொடர்ந்து தினம், தினம் லாபம் தருவது ரோஜா தோட்டம். 
 
             சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் மலர்களில் ஒன்று ரோஜா. திருமண சுபக் காரியங்களுக்கும், இறந்தவர்களின் மேல் அணிவிக்கும் மாலைகளிலும் ரோஜாமலர் இடம்பெறும். ரோஜாவில் நாட்டு ரோஜா, பெங்களூர் ரோஜா, பன்னீர் ரோஜா, வெள்ளை ரோஜா, மஞ்சள் ரோஜா என பல வகையான ரோஜாக்கள் தமிழகத்தில் விளைகின்றன.
 
குறைந்த முதலீட்டில் அதிக லாபத்தை ஈட்டித் தரும் ரோஜா தோட்டம் குறித்து பூண்டி ஒன்றியம் ரங்காபுரத்தைச் சேர்ந்த விவசாயி வேலு கூறியது:
 
             ""ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் இருந்து ஒரு செடி ரூ.5 என்ற விலையில் 1600 செடிகளை வாங்கி வந்தேன். ரோஜா செடியை ஒரு அடிக்கு ஒரு செடி என இடைவெளி விட்டு நட்டு வைத்தால் ஏக்கருக்கு 3600 செடி வரை நட்டு வைக்க முடியும். ரோஜா செடிகளை பொறுத்தவரை நட்டு வைத்த 3 மாதத்துக்குப் பிறகு பூக்களை பறித்துக் கொள்ளலாம். தினமும் காலை நேரத்தில் பூக்களைப் பறித்து விற்பனைக்கு எடுத்துச் செல்லலாம். ரோஜா தோட்டத்தை பொறுத்தவரை பராமரிக்க ஆட்கள் அதிகளவில் தேவையில்லை. பராமரிப்பு செலவும் குறைவு.
 
            மாதம் இருமுறை அதற்கு தண்ணீர் ஊற்றி தோட்டத்தைக் கிளறி அதற்கேற்றார் போல் உரங்களையோ அல்லது அதன் தேவைகளைப் பூர்த்தி செய்தால் ஒரு தடவை நட்ட செடியில் இருந்து 3 ஆண்டுகள் வரை தொடர்ந்து லாபம் பெறலாம். நான் பயிரிட்டிருப்பது நாட்டு ரோஜா. இந்தப் பூக்களை தினமும் காலையில் பறித்து திருவள்ளூர் உழவர் சந்தை அல்லது கோயம்பேடு மார்க்கெட் போன்ற பகுதிகளில் சென்று 100 ரோஜா ரூ.20 முதல் அன்றைய மார்க்கெட் விலை நிலவரத்துக்கேற்ப விற்று விடுவேன் என்றார்.

Read more »

வணிகர் தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் இருந்து 250 வாகனங்களில் வணிகர்கள் சென்னை பயணம்

கடலூர்:

          வணிகர் தினத்தை (மே 5) முன்னிட்டு சென்னையில் வியாழக்கிழமை நடைபெறும் வணிகர் சங்க மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கடலூர் மாவட்டத்தில் இருந்து 250 வாகனங்களில் வணிகர்கள் புதன்கிழமை புறப்பட்டனர்.  

              இத்தகவலை வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கடலூர் மண்டல (கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்கள்) தலைவர் சண்முகம் புதன்கிழமை தெரிவித்தார். 

மேலும் கடலூர் மண்டல தலைவர் சண்முகம் கூறியது:  

             வணிகர் தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் இருந்து சுமார் 2 ஆயிரம் வணிகர்கள், சென்னை ஒய்.எம்.சி.ஏ. கல்லூரி வளாகத்தில் நடைபெறும் மாநாட்டுக்குச் செல்வதாகவும், 250 வாகனங்களில் வணிகர்கள் செல்கின்றனர்.  வணிகர் தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை கடலூர் மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரம் கடைகள் முடப்பட்டு இருக்கும். அட்சய திரிதியை முன்னிட்டு நகைக் கடைகளுக்கு கடையடைப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது, அவர்கள் 10 மணிக்கு மேல் கடை திறப்பார்கள் என்றும் சண்முகம் தெரிவித்தார்.

Read more »

சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்புடன் இலவச டிப்ளமோ படிப்பு

        சென்னை பல்கலையில், வரும் கல்வியாண்டு முதல் முதுகலை பட்டப்படிப்புகளில் சேரும் மாணவர்கள், பாடம் தொடர்பான டிப்ளமா படிப்பையும் கண்டிப்பாக சேர்த்து படிக்க வேண்டும்,'' என்று, துணைவேந்தர் திருவாசகம் கூறினார்.

துணைவேந்தர் திருவாசகம்  கூறியதாவது: 

               மாணவர்களுக்கு, வேலைவாய்ப்பு அளிக்கக் கூடிய கல்வியை அளிப்பதில், சென்னை பல்கலை முனைப்பாக செயல்பட்டு வருகிறது. வரும் கல்வியாண்டில், முதுகலை படிப்புகளில் சேரும் அனைத்து மாணவர்களும், பாடம் தொடர்பான, வேலைவாய்ப்புக்கு ஏற்ற ஒரு டிப்ளமா படிப்பை கண்டிப்பாக சேர்த்து படிக்க வேண்டும். டிப்ளமா படிப்பிற்கு தனியாக தேர்வு நடத்தி, சான்றிதழ் வழங்கப்படும். டிப்ளமாவில் தேர்ச்சி பெற்றால் தான், முதுகலை பட்டம் வழங்கப்படும். 

             மாணவர்கள் சேரும் போதே, இந்த நிபந்தனைகள் தெரிவிக்கப்பட்டு, அதில் சம்மதம் தெரிவிப்பவர்கள் மட்டும் சேர்த்துக் கொள்ளப்படுவர். மாணவர்கள், படிப்பை முடித்ததும் வேலை வாய்ப்பை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல்கலையில் உள்ள ஒவ்வொரு துறையிலும், முதுகலை படிப்புடன், டிப்ளமா படிப்பு கூடுதலாக நடத்தப்படும். இதற்காக, மாணவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த தேவையில்லை. மேலும், சம்பந்தபட்ட துறைகளைச் சேர்ந்தவர்களை அழைத்தும், பாடம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

ஜாக்பாட் மாணவர்கள்: 

               பிரான்ஸ், பெல்ஜியம், சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்வி உதவித் தொகையுடன் படிக்க ஆசிய நாடுகளைச் சேர்ந்த பல்கலை மாணவர்களுக்கு அழைப்பு விடுத்தது. இதில், இந்தியாவில் இருந்து 15 பேர் தேர்வாகியுள்ளனர். சென்னை பல்கலையில் இருந்து ஒரு இளங்கலை மாணவர், ஒரு முதுகலை மாணவர், ஆராய்ச்சி பிரிவில் இருந்து மூன்று பேர் மற்றும் பேராசிரியர்கள் இருவர் என, ஏழு பேர் தேர்வாகியுள்ளனர். மாணவர்கள் இருவரும், பிரான்சில் உள்ள பல்கலையில் படிக்க உள்ளனர். இவ்வாறு துணைவேந்தர் திருவாசகம் கூறினார். 

              முன்னதாக, பி.எச்டி., ஆய்வு மாணவர்களுக்கான புதிய இணையதள வசதியை, துணைவேந்தர் திருவாசகம் துவக்கி வைத்தார். சென்னை பல்கலையில் பி.எச்டி., முடிக்க பதிவு செய்பவர்கள், தங்களின் அப்போதைய நிலையை தெரிந்து கொள்ள, பல்கலை இணையதளத்தில் புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. இணையதளத்தின் முகப்பில் உள்ள இ-மெயில் பகுதியை, "கிளிக்' செய்து, தங்களைப் பற்றிய விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன்பின், பி.எச்டி., குறித்த விவரங்களை அவ்வப் போது அறிந்து கொள்ளலாம். வரும் 15ம் தேதிக்குப் பின் பதிவு செய்பவர்கள், இந்த இணையதள வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Read more »

கடலூர் முதுநகரில் பராமரிக்கப்படாத காந்தி பூங்கா

முதுநகர்:

         முதுநகர் காந்தி பூங்கா சரியாக பராமரிக்கப்படாததால் பொலிவிழந்து காணப்படுகிறது.

             முதுநகர் மக்களின் வார விடுமுறை நாட்களில் நேரத்தை செலவழிப்பதற்கு பொழுது போக்குவதற்கான இடம் இல்லாமல் இருந்து வந்தது. இதனை கருத்தில் கொண்டு ஏற்கனவே இருந்த முதுநகர் காந்தி பூங்கா 11.50 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டது. புதிய விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டதால் குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர்கள் கூட்டம் அதிகரித்தது. 

             வார விடுமுறை நாட்களில் பூங்காவில் கூட்டம் அலை மோதியது. ஆனால் தற்போது முறையான பராமரிப்பில்லாததால் பூங்கா பொலிவிழந்து காணப்படுகிறது. பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் பழுதடைந்தும், பூங்காவிற்கு வருபவர்கள் அமர்வதற்காக அமைக்கப்பட்டிருந்த நாற்காலிகள், பெஞ்சுகள் பெரும்பாலானவை உடைந்து காணப்படுகிறது. பூங்காவில், விடுதலை போராட்டத்தில் சிறை சென்று சிறையிலேயே உயர் நீத்த 27 விடுதலை வீரர்களின் நினைவாக கல்வெட்டுடன் கூடிய நினைவு கோபுரம் அமைக்கப்பட்டது. 

            வரலாற்றுச் சுவடாக உள்ள இந்த நினைவு கோபுரமும் முறையாக பராமரிப்பில்லாமல் பொலிவிழந்து வருகிறது. இதன் காரணமாக குழந்தைகள் மகிழ்ச்சியாக விளையாடுவதை பார்ப்பதற்காக விரும்பி அழைத்து வரும் பெற்றோர்கள் தற்போது இந்த பூங்கா பக்கம் வருவதேயில்லை. நகராட்சி நிர்வாகம் பூங்காவை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

கடலூரில் வாக்காளர்களுக்கு கொடுத்த பணத்தில் கள்ள நோட்டு

கடலூர் : 

             கடலூரில், 500 ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கம் அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

              சட்டசபைத் தேர்தலில், வாக்காளர்களிடம் இருந்து ஓட்டுகளை பெற, வேட்பாளர்கள், அன்பளிப்பு மற்றும் பணத்தை தண்ணீராக செலவு செய்தனர். இந்த பணத்தை, கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள், வீடு வீடாக வினியோகம் செய்தனர். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சில சமூக விரோதிகள், தேர்தலுக்கு வினியோகிக்கப்பட்ட பணத்தில் கள்ள நோட்டுகளை கலந்து கொடுத்துள்ளது தெரிய வந்துள்ளது. தேர்தல் முடிந்தவுடன், பிரபல நகைக்கடை மற்றும் வணிக நிறுவனங்களில் விற்பனையாகும் தொகையில், நாளொன்றுக்கு, 4,000 முதல், 6,000 வரை, 500 ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பது, வங்கிகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

             இதனால் ஏற்படும் பிரச்னைகளை சமாளிக்க, பெரிய வணிக நிறுவனங்கள், 500 ரூபாய் நோட்டுகள் கொடுப்பதை, அறவே தவிர்த்து விட்டு, வெறும் 100 ரூபாய் நோட்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன. அதேபோன்று, போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் நடத்துனர்களிடம், 500 ரூபாய் கள்ள நோட்டுகள் வருவதாக கூறப்படுகிறது. இதை, நடத்துனர்கள் உடனடியாக சோதித்துப் பார்க்கும் வசதியில்லாததால், டெப்போவில் கலெக்ஷன் பணத்தை செலுத்தும் போது தான் தெரிய வருகிறது. இதனால் ஏற்படும் இழப்பைக் கண்டு, 500 ரூபாய் நோட்டு என்றாலே நடத்துனர்கள் பலர் அலறுகின்றனர்.

Read more »

Three held for fraud for getting passports

CUDDALORE: 

           Police on Wednesday arrested three persons here on charges of preparing fake birth certificates for getting passports and remanded them to judicial custody.

         Sources said Tamil Selvan (23) of Perampattu near Vallambadugai at Chidambaram approached R. Hariharan (34) of Thazhanguda to get him a passport for taking up an overseas job. However, the date of birth mentioned in the transfer certificate and the original birth certificate varied. Hariharan reportedly took Rs. 1,000 from Tamil Selvan for preparing a bogus birth certificate.

                When the papers were presented at the passport office in Chennai, officials detected the fraud and alerted the police. The police tracked down Hariharan and his accomplices, U. Anandakumar (36) and C. Kumar (61).

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior