கடலூர் :
கடலூரில் ஜப்பானிய காடை வளர்ப்பு பயிற்சி பெற விரும்பும் இளைஞர்கள் விண்ணப்பிக்குமாறு கால்நடை மருத்துவ பல்கலைக் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது
இது குறித்து கால்நடை மருத்துவ பல்கலைக் கழகம் மற்றும் ஆராய்ச்சி மைய பேராசிரியர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழத்தின் தொலை நிலைக்கல்வி இயக்ககத்தின் சுய வேலை வாய்ப்புக்கான பயிற்சி ஜப்பானிய காடை வளர்ப்பு என்ற தலைப்பில் ஒரு மாத காலத்திற்கு செம்மண்டலம், வரதராஜன் நகரில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெறவுள்ளது.
இதற்கு பயிற்சி கட்டணம் 1,000 ரூபாயும், தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்கவேண்டும். 2011ம் ஆண்டு செப்டம்பர் 1ம்தேதி அன்று 18 வயது நிறைவடைந்திருக்கவேண்டும்.பயிற்சியில் பங்குபெற விரும்புவோர் தங்கள் சொந்த செலவில் உணவு மற்றும் உறைவிட வசதியை ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.
மேலும் பயிற்சிக்கான விண்ணப்பம் இலவசமாக வரும் 13ம்தேதி வரை
செம்மண்டலம், வரதராஜன் நகரில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பெற்றுக் கொள்ளலாம். முதலில் வரும் 10 விண்ணப்பங்கள் மட்டும் ஏற்றுக் கொள்ளப்படும் என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.