உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 26, 2011

கடலூர் மாவட்ட வலைபூக்கள் - பகுதி 4

கடலூர் மாவட்ட வலைபூக்கள் 


கடலூர் மாவட்ட நண்பர்களின் வலைபூக்கள் பகுதி 4 

http://thamizhanthadaiyam.blogspot.com/- தமிழன் தடயம்
http://microbleo.blogspot.com/ - THE BEST or NOTHING

Read more »

கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி 300 மாணவர்கள் படிக்கும் வசதியுடன் அமையும்: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

கடலூர்:

             300 மாணவர்கள் படிக்கும் வசதி கொண்டதாக கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி அமையும் என்று, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.  

             கடலூர் அருகே வெள்ளக்கரை, ஆயிபுரம் கிராமங்களில் தலா ரூ. 21.79 லட்சத்தில் கட்டப்பட்ட, ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடங்களை அமைச்சர் பன்னீர்செல்வம் புதன்கிழமை திறந்து வைத்தார். 

விழாவில் அமைச்சர் பேசியது:  

                கடலூர் மாவட்டத்தில் 9 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. கடலூரில் அடிக்கல் நாட்டப்பட்டு இருக்கும் அரசு மருத்துவக் கல்லூரிக்கு விரைவில் கட்டடங்கள் கட்டப்படும்.  இது 300 மாணவர்கள் படிக்கும் வசதி கொண்டதாக அமையும். எண்ணற்ற திட்டங்களை மக்களுக்காக நிறைவேற்றி வரும் முதல்வர் கருணாநிதிக்கு, மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார் அமைச்சர்.  கடலூர் அருகே ராமாபுரத்தில் கால்நடை கிளை மருத்துவமனையும், குடிகாடு, ஊராட்சி ஈச்சங்காடு, சேடப்பாளையம் கிராமங்களில் அங்கன்வாடி மையங்களையும், பிள்ளையார்மேடு கிராமத்தில் ரேஷன் கடையையும் அமைச்சர் பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.  

சின்னகாரைக்காடு கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 1.03 கோடியில் கட்டப்பட இருக்கும் 15 வகுப்பறைக் கட்டடங்களுக்கு, அடிக்கல் நாட்டி அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியது:  

               கடலூர் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 29 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும், 25 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டு உள்ளன.  81 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக உயர்த்தப்பட்டு உள்ளன. முதல்வர் ஆண்டுதோறும் 100 பள்ளிகளைத் தரம் உயர்த்த உத்தரவு பிறப்பித்து வருகிறார் என்றார் அமைச்சர்.  நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜேந்திரன், சுகாதாரத் துறை துணை இயக்குநர் டாக்டர் ஆர்.மீரா, மருத்துவத் துறை இணை இயக்குநர் கமலக்கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Read more »

6 அலோபதி மருந்துகளுக்கு தமிழக அரசு தடை

           தமிழக அரசு 6 அலோபதி மருந்துகளுக்கு வெள்ளிக்கிழமை தடை விதித்துள்ளது. மத்திய அரசின் சுகாதாரத் துறை சில அலோபதி மருந்துகளுக்கு அண்மையில் தடை விதித்தது. 

அதைத் தொடர்ந்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

              12 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு "நிமுஸ்லைடு', அது தொடர்பான கலவைகள்; "சிஸாபிரைடு', அது சேர்ந்த கலவை; "பினைல் புரோப்பலமைன்', அது சார்ந்த கலவை மருந்துகள்; மனித தொப்புள் கொடி நஞ்சுச்சாறு, அது சார்ந்த கலவைகள், "சிபுட்ரைமன்', அது சார்ந்த கலவைகள்; "ஆர்.சிபுட்ரைமன்', அது சார்ந்த கலவைகள்.

               மேற்கூறிய மருந்துகளை தயாரிக்கவோ, விற்கவோ, விநியோகம் செய்யவோ தடை விதிக்கப்பட்டுள்ளது என அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more »

கடலூர் மாவட்டத்தில் மின் திருட்டு குறித்து தகவல் தந்தால் வெகுமதி

கடலூர்:

              மின் திருட்டு குறித்து தகவல் தந்தால் வெகுமதி வழங்கப்படும், மேலும் தகவல் அளிப்போரின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று மின் வாரியம் அறிவித்து உள்ளது.  

கடலூர் மின் வாரிய செயற்பொறியாளர் சி.மூர்த்தி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:  

           மின்சாரத்தை முறையாகப் பயன்படுத்தி, மின் திருட்டை அறவே ஒழிக்குமாறு மின் நுகர்வோர் கேட்டுகொள்ளப்படுகிறார்கள். மின் திருட்டு பற்றி தகவல் தெரிவிப்போருக்குத் தகுந்த வெகுமதி வழங்கப்படும். மேலும் தகவல் தெரிவிக்கும் நபர் பற்றிய தகவல்கள் ரகசியமாகப் பாதுகாப்பப்படும்.  மின் வாரிய அலுவலர்கள், பணியாளர்களுக்கு வாரியப் பணியை முறையாகச் செய்வதற்கு, மின் நுகர்வோர் உரிய ஒத்துழைப்பு அளிப்பதுடன் மின் சேமிப்பின் அவசியத்தையும் கருதி, விதிமுறைகளை தவறாது கடைபிடிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  

                மின் திருட்டில் ஈடுபடுவோரது மின் இணைப்பு  துண்டிக்கப்படுவதுடன், அபராதம், சிறை தண்டனைக்கு ஆளாக நேரிடும். மின் நுகர்வோர் தங்களது மின்சார மீட்டரைத் தவிர்த்தல், சேதப்படுத்துதல், அதில் உள்ள பாதுகாப்பு முத்திரைகளைச் சேதப்படுத்துதல், போலி முத்திரைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றிóல் ஈடுபட்டால், மின் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன், அபராதம் மற்றும் சிறை தண்டனை கிடைக்கும்.  வீட்டு உபயோகத்துக்கு வழங்கப்படும் மின்சாரம் வீட்டு உபயோகத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அண்டை வீட்டின் பயன்பாட்டுக்கோ, தொழிற்சாலைக்கோ. கட்டுமானப் பணிக்கோ பயன்படுத்தினால் மின் இணைப்பு துண்டிக்கப்படும். அபராதம், சிறை தண்டனைக்கு உரிய குற்றமாகும்.  

                  விவசாயத்துக்கு வழங்கப்படும் மின்சாரத்தை, தொழிற்சாலைக்கோ, கட்டுமானப் பணிக்கோ, நீர் இறைத்து விற்பனைக்கோ, செங்கல் சூளைக்கோ, வீட்டு உபயோகத்துக்கோ பயன்படுத்தினால், மின் இணைப்பு துண்டிப்பு, அபராதம் மற்றும் சிறை தண்டனை கிடைக்கும்.  கட்டுமானப் பணிகளுக்கு தனி மின் இணைப்பு பெற வேண்டும். குடிசைகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் ஒரு 40 வாட்ஸ் விளக்கு, 70 வாட்ஸ் இலவச வண்ணத் தொலைக்காட்சிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். கூடுதல் மின் பளு உபயோகித்தால், மின் துண்டிப்பு, அபராதம், சிறைத் தண்டனை வழங்கப்படும் என்றும் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

மெக்சிகன் பல்கலைக்கழகத்துடன் அண்ணாமலைப் பல்கலை. புரிந்துணர்வு ஒப்பந்தம்

சிதம்பரம்:

            அண்ணாமலைப் பல்கலைக்கழக மருந்தாக்கவியல் துறை கல்வி பரிமாற்றம் செய்து கொள்ள அமெரிக்காவில் உள்ள மெக்சிகன் பல்கலைக்கழகத்துடன் கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.  

           பல்கலைக்கழக துணைவேந்தர் விடுதியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் முன்னிலையில் பதிவாளர் எம்.ரத்தினசபாபதி, மெக்சிகன் பல்கலைக்கழக உலக சுகாதார மைய இயக்குநர் டாக்டர் சோபியா மெஹ்ஜ்வேர் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.  நிகழ்ச்சியில், மெக்சிகன் பல்கலை இணை இயக்குநர் டாக்டர் ராஜேஷ் பாலகிருஷ்ணன், செயல் இயக்குநர் ராணிகோட்டா, மருத்துவப் புல முதல்வர் என்.சிதம்பரம், மருந்தாக்கவியல் துறைத் தலைவர் பேராசிரியர் டாக்டர் மணவாளன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

ஒப்பந்தம் குறித்து துணைவேந்தர் எம்.ராமநாதன் தெரிவித்தது: 

                 இந்த ஒப்பந்தத்தின் மூலம் மாணவர்களும், ஆசிரியர்களும் அமெரிக்க மருந்து முறைப்பணி நடைமுறைகளை அறிந்து கொள்ள முடியும்.  மேலும் நாட்டிலுள்ள மற்ற கல்வி நிறுவனங்களை விட சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் படிக்கும் டி.பார்ம் பிரிவு மாணவர்கள் நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்களாகவும், உயர் கல்வித் தரத்தையும், அமெரிக்காவில் வேலைவாய்ப்புகளையும் பெற முடியும் என துணைவேந்தர் எம்.ராமநாதன் தெரிவித்தார்.

Read more »

சிதம்பரம் அருகே தேர்தல் புறக்கணிப்பு பேனர்

கிள்ளை:

         சிதம்பரம் அருகே கிள்ளை சிசில் நகரில், தேர்தல் புறக்கணிப்பு செய்யப்போவதாக பேனர் வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

               கடலூர் மாவட்டம், சிதம்பரம் அடுத்த கிள்ளை சிசில் நகரில், சர்ப்பம் இருளர் தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் குமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். மாநிலத் தலைவர் சிவா, ஆலோசகர் சித்தம்மா மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். 

                கூட்டத்தில், எஸ்.டி., இருளர் வசிக்கும் பகுதியில் உள்ள பழங்குடியினருக்கு இருளர் ஜாதிச்சான்று வழங்க வேண்டும். ரேஷன் கார்டு, வீட்டுமனை மற்றும் வீட்டு மனை மாற்றம், கலைஞர் காப்பீட்டுத் திட்டம், பழங்குடி இருளர் நல வாரியம் அமைக்க ‌வேண்டும். ஓட்டுரிமை, மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, குடிநீர், மயானம் மற்றும் சாலை வசதிகள், தனி ரேஷன் கடை, எஸ்.டி., - எஸ்.சி., இனத்தவருக்கு தனி போலீஸ் ஸ்டே ஷன் அமைக்க ‌வேண்டும்.அரசு அறிவித்தது போல், எஸ்.டி.,யினருக்கு தலா இரண்டு ஏக்கர் நிலம், இலவச "டிவி', காஸ், அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் சட்டசபை தேர்தலை புறக்கணிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும்,  தேர்தல் புறக்கணிப்பு பேனர் வைத்துள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Read more »

தமிழகத்தில் விரைவில் 11,307 ஆசிரியர்கள் நியமனம்

தமிழகத்தில் விரைவில் 11,307 ஆசிரியர்கள், 648 ஆசிரியர் அல்லா ஊழியர்கள் பள்ளிகளில் நியமிக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.  1999ம் ஆண்டு மே மா‌தம் வரையிலான காலத்தில் அனுமதி பெற்ற சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத‌ பள்ளிகளில் இவர்கள் பணியமர்த்தப்பட உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more »

அண்ணாமலை பல்கலைக்கழக நுழைவு தேர்வு விண்ணப்பம் விற்பனை

சிதம்பரம்:
 
              சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 2011-12-ம் கல்வி ஆண்டிற்கான பி.இ., பி.எஸ்.சி. (விவசாயம்), பி.எஸ்.சி. (தோட்டக்கலை), எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.பி.டி., பி.எஸ்.சி. (நர்சிங்), பி.பார்மஸி போன்ற பட்ட படிப்பு வகுப்புகளுக்கான நுழைவுத் தேர்வு விண்ணப்பங்களின் விற்பனையை பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் ராமநாதன் தொடங்கி வைத்தார்.

               பி.இ., பி.எஸ்.சி. (விவசாயம்), பி.எஸ்.சி. (தோட்டக்கலை) போன்ற பட்டபடிப்பு வகுப்புகளுக்கான நுழைவுத்தேர்வு விண்ணப்பத்தின் விலை ரூ.400. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.பி.டி., பி.எஸ்.சி. (நர்சிங்), பி.பார்மசி போன்ற பட்ட படிப்பு வகுப்புகளுக்கான விண்ணப்பத்தின் விலை ரூ.300 ஆகும்.    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 31-3-2011. பல்கலைக்கழகத்தின் வகுப்புகளில் இந்த கல்வியாண்டில் சேர்ந்து பயில இந்த நுழைவுத்தேர்வு அவசியம் என்றும் இந்த மார்ச் மாதம் பிளஸ்2- தேர்வு எழுதும் மாணவர்கள் இந்த தேர்வை எழுத வேண்டும் என்றும் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் ராமநாதன் கூறினார்.

            மேலும் இந்த விண்ணப்பங்களை வேலை நாட்களில் பல்கலைக்கழகத்தில் நேரடியாக பணம் செலுத்தியோ அல்லது தபால் மூலமாகவோ மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

Read more »

Sale of entrance test applications on

CUDDALORE: 

          Filled-in applications for writing entrance examination to get admission to B.E., B.Sc (agriculture), B.Sc (horticulture), M.B.B.S., B.D.S., B.P.T., B.Sc (nursing) and B.Pharm., programmes of Annamalai University should reach the university by March 31, 2011. A statement from the university said Vice-Chancellor M.Ramanathan inaugurated the sale of applications on the university premises on February 23. The applications could be obtained either in person or by post.

Read more »

Compensation sought of Rs. 50 lakh

CUDDALORE: 

        Members of Samuga Samathuva Padai, led by its founder P.Sivagami, former IAS officer, observed fast in front of the Collectorate here on Friday. They demanded a compensation of Rs. 50 lakh and two acres of land to the family of A.Subramanian (30) of Kambalimedu, who died following an attack on Masi Maham day.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior