கட லூர், நவ.27:
கடலூரில் ஆட்டோ ஓட்டுநர்கள் வெள்ளிக்கிழமை வேலை நிறுத்தம் செய்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வேலை நிறுத்தம் காரணமாக பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப் பட்டனர். ÷நகரில் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், திருப்பாப்புலியூர் பஸ் நிலையத்தில் ஆட்டோக்கள் நிறுத்த அனுமதிக்க வேண்டும்.
உடல் ஊனமுற்றவர்கள், நோயாளிகள் போன்றவர்களை பஸ்நிலையத்துக்குள் ஆட்டோக்களில் கொண்டுவிட அனுமதிக்க வேண்டும். வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஆட்டோக்களுக்கு அதிக அளவில் பெர்மிட் கொடுப்பதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஆட்டோ ரிக்ஷாக்கள் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் கடலூரில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்க வில்லை. வேலைநிறுத்தம் செய்த ஆட்டோ ஓட்டுநர்கள், உழவர் சந்தை அருகில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அடைந்தனர். அங்கு ஆர்பாபட்டம் நடத்தினர். கடலூரில் ஆட்டோக்கள் ஓடாததால் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்கள் பெரிதும் அவதிப்பட்டனர். வாகன வசதி உள்ள பெற்றோர் பலர் தங்கள் குழந்தைகளை இரு சக்கர வாகனங்களில் அழைத்துச் சென்றனர். பஸ்களில் கூட்டம் அதிகமாகக் காணப்பட்து. சில பஸ்களில் கூரை மீதும் பயணம் செய்தனர்.