உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 04, 2010

Mega job fair to be held at Varuchukkudi on March 6, 7


KARAIKAL: 

             A mega job fair 2010 would be jointly organised by the district administration and the Karaikal Employment Exchange at the Government Polytechnic College at Varuchukkudi here on March 6 and 7. Unemployed persons, who have registered their names with the Karaikal Employment Exchange, could participate in the fair.

                Over 32 organisations from Chennai, Puducherry, Cuddalore, Nagapattinam and Karaikal would recruit persons for about 8,000 vacancies. The participating organisations are being co-ordinated by Team Lease Private Limited, Bangalore. Recruitment of graduates, in both technical and non-technical streams, would be held on March 7, recruitment of those with qualifications of Tenth, Plus Two, ITI, and Diploma would be held on March 6. The fair would function from 9.30 a.m. to 5.30 p.m. on both the days. M. Kandasamy, Minister for Labour and Welfare, would inaugurate the fair

Read more »

Woman held while trying to supply liquor to Cuddalore prison inmate

CUDDALORE: 

           A woman who tried to surreptitiously supply a bottle of IMFL to an inmate of the Cuddalore Central Prison was arrested on Wednesday.

          Police said K. Mallika of Kirumambakkam in Puducherry went to the prison to meet Selvakumar, an accused in an ‘attempt to murder' case.She hid the liquor bottle on her person and handed over the bottle to the accused. The warder, who was on duty, caught hold of the woman and handed her over to the police.



Read more »

200 more vehicles for ‘108' ambulance fleet soon

CUDDALORE: 

                 As the demand for the “108” ambulance service has gone up significantly, the number of vehicles will be increased from 385 to 445 soon. Chief Minister M. Karunanidhi has made a budgetary provision for adding 200 more ambulances to the fleet, said M.R.K. Panneerselvam, Health Minister. He was speaking at a function held at Pudhuchathiram near here for the inauguration of a sub-registrar's office, on Wednesday. Mr. Panneerselvam said that after the advent of the “108” ambulance service, awareness of its utility had increased. So far, it had rendered service to over 3.21 lakh people, besides helping in 81,000 child births. For even minor ailments or accidents, people were calling the number.

                  The Minister further said that there was overwhelming response to the Kalaignar Health Insurance Scheme for Life-Saving Treatments. Mr. Panneerselvam said that under the Young Children Vision Programme, a total of 3,624 children had undergone surgery and over 1.58 lakh children given corrective glasses. He pointed out that to enable easy registration, the sub-registrar's office was established in Nallur, Orathur and Pudhuchathiram within a short period. It would benefit residents of 20 villages. Collector P. Seetharaman said that hi-tech communication facility had made the “108” ambulance service quite instantaneous and popular.



Read more »

Simple audit procedures sought

CUDDALORE: 

               The Cuddalore District Chamber of Commerce has appealed to Chief Minister M. Karunanidhi to simplify sales tax audit procedures and also take traders into confidence before finalising the percentage of the goods and service tax (GST).

            Chamber president D. Shanmugham and general secretary V. Veerappan have submitted a representation to the Chief Minister. Mr. Shanmugham told The Hindu that ever since the value added tax (VAT) regime had come into force on January 1, 2007, enforcement officials were not conducting annual audit. However, whenever they come for audit they call for accounts of all previous years, right from January 1, 2007, and it could be four to five years' accounts. It meant that the traders would have to keep the account books and sundry receipts safe for the entire period. As the officials would be doing audit on the business premises for days together, trading activity would be affected. Hence, the chamber was of the opinion that the officials could scrutinise accounts of the financial year immediately preceding the current fiscal to save time and facilitate unhindered trade transactions. They further said there was a clause that made it clear that those who pay compound tax of 0.5 per cent through Form-K were exempted from VAT audit. But, contrary to the guidelines, the accounts of these traders too were subjected to audit. There was also an inordinate delay in issuing assessment order (after completion of the scrutiny of accounts) by the officials. Therefore, the chamber suggested issuance of assessment order every year in conformity with the Form I-1 procedure. The chamber alleged anomaly in the levy of input tax. As per the rules, the traders were entitled to get a deduction of a 4 per cent as input tax. However, there were certain raw materials that suffered a tax of 12.5 per cent and, therefore, it would be only appropriate if the input tax deduction was also raised to 12.5 per cent in such cases. As far as pharmaceuticals were concerned, a compound tax of 0.5 per cent was being levied for a turnover of up to Rs. 50 lakh. The chamber was of the opinion that with prices of drugs soaring owing to various factors, the turnover limit ought to be raised to Rs. 1 crore.



Read more »

கடலூர் மாவட்டத்தில் இதுவரை 31,557 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

கடலூர்:

                     கடலூர் மாவட்டத்தில் 115 கொள்முதல் நிலையங்கள் மூலம் இதுவரை 31ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 

இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

                              தமிழக அரசு உத்தரவுப்படி தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம், சிதம்பரம்,  காட்டுமன்னார்கோவில், விருத்தசாலம், திட்டக்குடி, கடலூர், குறிஞ்சிப்பாடி மறறும் பண்ருட்டி வட்டங்களில் 115 கொள்முதல் நிலையங்கள் திறந்து நெல் கொள்முதல் செய்து வருகிறது.

                         கடந்த 27ம் தேதிவரை 31557 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலன் கருதி, கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் எடுத்து வரும் நெல்லினை அன்றைய தினமே கொள் முதல் செய்வதற்கும் விவசாயிகள் சுத்தம் செய்து எடுத்து வரும் தரமான நெல்லாக இருப்பின் தூற்றிட தேவையில்லை என்றும் ஒரே ஊரில் ஒரு லோடுக்கு குறைவாக நெல் வைத்திருக்கும் விவசாயிகள் ஒன்று சேர்ந்து அது ஒரு லோடு இருக்குமேயானால் அது குறித்து அதன் விவரத்தினை 04144-238280 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது துணை மேலாளருக்கு 99940 83409 என்ற மொபைல் எண் ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவித்தால் அருகில் உள்ள கொள்முதல் நிலையத்தின் மூலம் உடன் கொள்முதல் செய்திட நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. கொள்முதலில் குறைபாடு இருப்பின் அதன் விவரத்தினை மேற்கண்ட தொலைபேசி எண்கறில் தெரிவித்தால் உடன் நடவடிக்கை எடுக்கப்படும்.



Read more »

உற்பத்தி அதிகரிப்பால் செங்கல் விலை குறைந்தது! சூளை பணியாளர்களுக்கு கூலி கிடு, கிடு


பண்ருட்டி : 

                        பண்ருட்டி பகுதியில் செங்கல் உற்பத்தி அதிகரிப்பால் செங்கல் விலை குறைந்து வருகிறது. பண்ருட்டி அடுத்த அண்ணாகிராமம், கொக்குப்பாளையம், அங்குசெட்டிப் பாளையம், பணப்பாக்கம், சிறுவத்தூர், மணம்தவிழ்ந்தபுத்தூர், மந்திப் பாளையம், சேமக்கோட்டை, வரிஞ்சிப்பாக்கம், திருவதிகை, ஒறையூர், வீரப்பெருமாநல்லூர், கோட்லாம்பாக்கம் ஆகிய கிராமங்களில் தினசரி 20 லட்சம் செங்கல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இப் பகுதியில் தயாரிக்கப்படும் செங்கல் தரமானதாக உள்ளதால் கடலூர் மாவட்டம் மட்டுமின்றி சென்னை உள்ளிட்ட பல நகரங்களுக்கும் இங்கிருந்து தினந்தோறும் 20 லோடு லாரிகள் அனுப்பப்படுகிறது.

                  கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் மாவட்டத்தில் சுனாமி குடியிருப்பு கட்டும் பணி அதிகளவில் நடந்ததால் செங்கல் விலை ஏற்றமாக இருந் தது. இதனால் சாதாரண விவசாயிகள் கூட சூளை வியாபாரத்தை ஆரம்பித் தனர்.அப்போது ஆயிரம் செங்கல் 3500 ரூபாய் வரை விலை போனது. ஆனால் கடந்த ஆண்டு சுனாமி குடியிருப்பு பணிகள் முடிவடைந்ததால் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் கட்டை சூளை செங்கல் 2500 ரூபாயாகவும், மெலார் சூளை 2,200மாக வீழ்ச்சியடைந்தது. கடந்த நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் விட்டு விட்டு தொடர் மழை பெய்ததால் செங்கல் உற்பத்தி கடுமையாக பாதித்தது. இதனால் விறகு கட்டைகள் மூலம் சூளைபோடப்படும் செங்கல் ஆயிரம் 2800 ரூபாயும், சவுக்கு மெலார் சூளை 2400ம் விலை போனது. கடந்த ஒரு மாதமாக மழை அறவே நின்றதால் செங்கல் அறுக்கும் பணி தீவிரமடைந்து சூளைபோடும் பணிகள் அதிகளவில் நடந்து வருகிறது.

                     இதனால் கட்டை சூளை ஆயிரம் கல் 2500 ரூபாயாகவும், மெலார் சூளை கல் 2200மாக குறைந்தது. கடந்த ஆண்டு ஆயிரம் பச்சைக் கல் அறுப்பதற்கு கூலியாக 200ம், கல் அடுக்குவதற்கு 250ம் கூலி இருந்தது.ஆனால் வேலையாட்கள் பற்றாக்குறை காரணமாக கல் அறுப்பதற்கு 225 முதல் 250 ரூபாயும், கல் அடுக்க 275ரூபாயும், 300 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால் இந்த மாதத்தில் செங்கல் விலை மேலும் குறையவாய்ப்பில்லை என சூளை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.இருப்பினும் செங்கல் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்தால் ஏப்ரல் மாதத்தில் கட்டை சூளை செங்கல் 2200 ரூபாயும், மெலார் செங்கல் 2000மாக குறையும் என வியாபாரிகள் கூறுகின்றனர்.



Read more »

குழந்தைகளுக்கு பெற்றோர் வழி காட்டியாக இருக்க வேண்டும் : என்.எல்.சி., சேர்மன்'அட்வைஸ்'

நெய்வேலி:

                        பெற்றோர்கள் தங்களது எண்ணங்களை குழந்தைகள் மீது திணிப்பது தவறு என என்.எல்.சி., சேர்மன் அன்சாரி பேசினார். தமிழ்நாடு அறிவியல் மையம் சார்பில் நெய்வேலி லிக்னைட் அரங்கில் தேசிய அறிவியல் தினம் நடந்தது. அறிவியல் மற்றும் தொழில் நட்பத் தகவல் தொடர்பு தேசியக் குழுவின் இணை செயலாளர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். நெய்வேலி மைய செயலாளர் தாமோதரன் வரவேற்றார். பள்ளி, மாணவர்களின் அறிவியல் கண் காட்சி அரங்கை என். எல்.சி., கல்வித் துறை பொது மேலாளர் சுகுமார் திறந்து வைத்தார்.

                       தேசிய அறிவியல் தின போட்டிகளில் வெற்றி பெற்றவர்களக்கு பரிசு மற் றும் சான்றிதழும், அறிவியல் கண்காட்சியில் சிறந்த காட்சி பொருளை வடிவமைத்திருந்த மாணவர்களுக்கு சர்.சி.வி. ராமன், சுபாஷ் சந்திர போஸ் மற்றும் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருதுகளை வழங்கிய என்.எல்.சி., சேர்மன் அன்சாரி பேசியதாவது:உலகில் நாம் பார்ப்பது அனைத்தும் அறிவியல் கோட்பாடுகளின் படியே நடந்து வருகின்றன. நம் நாடு வெள்ளையர்கள் ஆட்சியின் கீழ் இருந்த நேரத்தில் சுதந்திர போராட்டம் நடந்து கொண்டிருந்த சூழலில் சர்.சி.வி. ராமன் தனது மிகச் சிறந்த கண்டுபிடிப்பால் நோபல் பரிசு பெற்று நமது நாட்டிற்கு பெருமை தேடி தந்தார்.

                     ஒவ்வொரு குழந்தைக்கும் தனித் திறமைகள் உள்ளன. அதனை உணர்ந்து பெற் றோர்கள் தங்களது எதிர் பார்ப்புகளை அமைத்து கொள்ள வேண்டும். தங்களின் ஆசைகளை குழந்தைகள் மீது திணிப்பது தவறு. 16 வயதிற்குள் நடக்கும் சம்பவங்கள் குழந்தைகளின் மனதில் வெகு ஆழமாக பதிந்து விடுகின்றன. அதனால் அத்தருணம் வரை பெற்றோர்கள் அவர் களுக்கு சிறந்த முன்மாதிரியாக வழி காட்ட வேண்டும். அதனை விடுத்து, தங்களது எதிர்கால கனவுகளை நிறைவேற்றும் வகையில் குழந்தைகளை வளர்க்கக்கூடாது.இவ்வாறு அன்சாரி பேசினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயற்குழு உறுப்பினர் நாராயணன், நெய்வேலி மையத்தின் தலைவர் செல்வராஜ், ராஜகோபால், ரவீந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.



Read more »

நாட்டுத்துவரை விளைச்சல் அமோகம்

சிறுபாக்கம்:

              நாட்டுத்துவரையின் அமோக விளைச் சலால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சிறுபாக்கம் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 40 கிராமங்களில் விவசாயிகள் மானாவாரி நிலங்களில் இயற்கை உரத்துடன் கடந்த டிசம்பர் மாதம் மல்லி பயிருடன் ஊடு பயிராக நாட்டு துவரையினை விளைவித்தனர். தற்போது மல்லி பயிர் அறுவடை செய் தபின், நாட்டு துவரை பூத்துக்குலுங்கி அதிகளவு காய்ப் பிடிப்புடன் காணப்படுவதால் நல்ல விவசாயிகள் மகிழ்ச்சியுடன் உள் ளனர்.



Read more »

காப்பீட்டு திட்டத்தில் 1.23 கோடி'ஸ்மார்ட் கார்டு : அமைச்சர் பன்னீர்செல்வம்தகவல்

கடலூர்:

                       கட்சி பாகுபாடின்றி அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பு பெற் றுள்ள மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 1.23 கோடி குடும்பங்களுக்கு "ஸ்மார்ட் கார்டு' வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித் துள்ளார்.கடலூர் அடுத்த புதுச் சத்திரத்தில் பத்திரப்பதிவு அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது. கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். துணை பதிவுத்துறை தலைவர் சுந்தரேசன், பரங்கிப்பேட்டை ஒன்றிய சேர்மன் முத்துபெருமாள் முன்னிலை வகித்தனர். மாவட்ட பதிவாளர் (பொறுப்பு) வேலாயுதம் வரவேற்றார். பத்திரப்பதிவு அலுவலகத்தை திறந்த வைத்து, வில்லியநல்லூர் ஊராட்சியை சேர்ந்த 1040 குடும் பங்களுக்கு இலவச கலர் "டிவி' வழங்கிய 

 அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியதாவது:

                    கடந்த ஆட்சியில் 40 பத்திரப் பதிவு அலுவலங்கள் மூடிபட்டன. அதனை தற்போது தி.மு.க., அரசு லாப நஷ்ட கணக்கு பாராமல் மக்கள் நலன் கருதி திறந்து வருகிறது. அதில் இன்று திறக்கப்பட்டுள்ள புதுச்சத்திரம் அலுவலகம் மூலம் குள்ளஞ்சாவடி, பரங்கிப்பேட்டை பகுதிகளை சேர்ந்த 15 கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன் பெறுவார்கள். தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்காக 385 வாகனங்கள் வழக்கப்பட்டன. இதன் மூலம் மூன்று லட்சத்து 21 ஆயிரத்து 16 பேர் பயனடைந்துள்ளனர். 81 ஆயிரம் பிரசவங்கள் நடந்துள்ளது. இந்த சேவை மூலம் பல உயிர் கள் காக்கப்பட்டுள்ளது. 108 ஆம்புலன்சிற்கான அழைப்பு அதிகரித்து வருவதால் வரும் ஆண்டில் 200 ஆம்புலன்ஸ் தேவை என முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மருத்துவ காப்பீட்டு திட்டம், ஆம்புலன்ஸ் சேவை, விவசாய கடன் தள்ளுபடி, இலவச "டிவி' உள்ளிட்ட பல திட்டங்கள் கட்சி பாகுபாடின்றி செயல்படுத்தி வருவதால் அ.தி.மு.க.,வினர் மத்தியிலேயே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு இதுவரை 148.75 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. புகைப் படம் எடுக்கப்பட்ட 1.44 கோடி குடும்பங்களில் 1.23 கோடி குடும்பங்களுக்கு "ஸ்மார்ட் கார்டு' வழங்கப் பட்டுள்ளது.

                    இளம் சிறார் கண் ணொளி வழங்கும் திட்டத்தில் ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 968 பேருக்கு கண் கண்ணாடி வழங்கப்பட் டுளளது. இது போன்று பல்வேறு சிறப்பான திட் டங்களை செயல்படுத்தி வரும் முதல்வர் கருணாநிதியின் அரசிற்கு பொதுமக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்.இவ்வாறு அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார். மாவட்ட பதிவாளர் (தணிக்கை) ஜெயவேலு நன்றி கூறினார்.விழாவில் டி.ஆர்.ஓ., நடராஜன், மாவட்ட கவுன்சிலர் நல்லதம்பி, ஒன்றிய கவுன்சிலர் அம்சாயள், வில்லியநல்லூர் ஊராட்சி தலைவர் ராசாயாள், ஆத்மா விவசாய குழு உறுப்பினர் ராஜாராமன் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.



Read more »

பாலம் கட்டுமான பணி எம்.எல்.ஏ., ஆய்வு

நடுவீரப்பட்டு:

                  நடுவீரப்பட்டில் நடைபெற்று வரும் பாலம் கட் டுமான பணியை எம்.எல்.ஏ., பார்வையிட்டார். நடுவீரப்பட்டு - சி.என்.பாளையம் இடையே கட்டப்பட்டு வரும் உயர் மட்ட பாலத்தை எம்.எல். ஏ., சபா ராஜேந்திரன் பார் வையிட்டு, தற்போது நடந்து வரும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.பாலம் கட்டி முடித்ததும், இந்த வழியாக நடுவீரப்பட்டிலிருந்து சி.என்.பாளையம் கடைவீதி வழியாக அரசு பஸ் இயக்க போக்குவரத்து அதிகாரிகள் தயாராக உள்ளனர். அதனால் கடை வீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை வியாபாரிகளே முன்வந்து அகற்றிக் கொள்ள வேண் டும் என்றார். அதற்கு வியாபாரிகள் எந்த அளவு ஆக்கிரமிப்பு உள்ளது என அதிகாரிகள் கூறினால், அதனை அகற்றிக் கொடுக்க தயாராக உள்ளதாக வியாபாரிகள் கூறினர். மாவட்ட கவுன்சிலர் ஸ்ரீ மதி, ஒன்றிய கவுன்சிலர்கள் தட்சணாமூர்த்தி, கந்தசாமி, ஒன்றிய செயலாளர் ஜெயபால், முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன் மற்றும் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.



Read more »

தமிழக அரசு மக்களின் தேவைகளை நிறைவேற்றி வருகிறது சபா ராஜேந்திரன் பெருமிதம்

நடுவீரப்பட்டு:

                  குடிசை வீடுகளை கான் கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டத்தில்  கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் அதிகம் பயனடைய உள்ளதாக எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் பேசினார்.

                 நடுவீரப்பட்டு ஊராட்சியில் இலவச "டிவி' வழங் கும் விழா நடந்தது. ஒன் றிய கவுன்சிலர் தட்சணாமூர்த்தி தலைமை தாங்கினார். தாசில்தார் தட்சணாமூர்த்தி வரவேற்றார். 

பயனாளிகள் 1068 பேருக்கு இலவச "டிவி'க்களை வழங்கி எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் பேசியதாவது:

                    தமிழக அரசு சொன்னதைதான் செய்கிறது. துணை முதல்வர் உத்தரவின் பேரில் ரேஷன் கார்டு உள்ள அனைவருக்கும் இலவச "டிவி' வழங்கப் பட்டுள்ளது. நடுவீரப் பட்டு ஊராட்சியில் 32 லட் சம் மதிப்பில் "டிவி'க்கள் வழங்கப்பட்டுள்ளது.தமிழக முதல்வர் ஆட்சி பொறுப்பேற்றதும் வரும் முன் காப்போம் திட்டம், 108 ஆம்புலன்ஸ் வசதி, பள்ளி மாணவர்களுக்கு கண்ணொளி காப்போம் திட்டம், இருதயம் காப்போம் திட்டம், மருத்துவ காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்தினார். தற் போது குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள் ளது.இந்த திட்டத்தில் மாநிலத்தில் அதிக குடிசைகள் உள்ள கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள் தான் பயனடைய உள்ளது. தற்போது 3 லட்சம் வீடுகளுக்கு கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று நடுவீரப்பட்டு- சி.என்.பாளையம் இடையே உள்ள நரியன் ஓடையில் 1.35 கோடி ரூபாய் மதிப்பில் உயர் மட்ட பாலம் கட்டப்பட்டு வருகிறது. 90 சதவீத பணிகள் முடிந்துவிட்டது. சில நாட்களில் பாலம் திறக்கப்பட உள்ளது. மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் இந்த ஆட்சி செய்து வருகிறது என்றார். விழாவில் மாவட்ட கவுன்சிலர் ஸ்ரீ மதி, ஒன்றிய கவுன்சிலர் கந்தசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனுவாசன், பத்மநாபன், வருவாய் ஆய் வாளர் வேணி,  கடலூர் ஒன்றிய தி.மு.க., செயலாளர் ஜெயபால், மாவட்ட பிரதிநிதி அண் ணாதுரை, கிளை செயலாளர்கள் கணேசன், சம்மந்தம், ஞானசேகர், குருராஜன் பங்கேற்றனர்.



Read more »

பயறு வகைகளில் கூடுதல் மகசூல் : டி.ஏ.பி., தெளிக்க பரிந்துரை

கடலூர்:

                   பயறு வகை பயிர்களில் டி.ஏ.பி., தெளிப்பதால் அதிகமான பூக்கள் உற்பத்தியாகி திரட்சியான மணிகளும், இதனால் 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை கூடுதல் மகசூல் கிடைக்கும். 

இதுகுறித்து வேளாண் இணை இயக்குனர் இளங்கோவன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

                   கடலூர் மாவட்டத்தில் பயறு வகை பயிர்களில் உற்பத்தியை பெருக்குவதற்காக வேளாண் துறை மூலம் டி.ஏ.பி., உரம் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. எக்டேர் ஒன்றுக்கு இருமுறை தெளிப்பு செய்ய தேவையான 25 கிலோ டி.ஏ.பி., 200 ரூபாய் மானிய விலையில் வழங்கப்படுகிறது. பயறு வகை பயிர்களில் டி.ஏ.பி., தெளிக்க எக்டேர் ஒன்றுக்கு 12.5 கிலோ டி.ஏ.பி., உரத்தை 25 லிட்டர் தண்ணீரில் முதல் நாளே கரைத்து ஊற வைக்க வேண்டும.

                     மறுநாள் தெளிந்த கரைசலை மட்டும் எடுத்து வடிகட்டி இத்துடன் 6.25 லிட்டர் தண்ணீர் சேர்த்து மாலை நேரத்தில் கைத் தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.பயிர்கள் பூக்கும் நிலையில் விதைப்பு செய்த 25ம் நாள் ஒரு முறையும் பின்னர் 15 நாள் இடைவெளி விட்டு 2ம் முறையும் டி.ஏ.பி., தெளிக்க வேண்டும். பயறு வகை பயிர்களில் டி.ஏ.பி., தெளிப்பதால் அதிகமான பூக்கள் உற்பத்தியாகி திரட்சியான மணிகளும், இதனால் 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை கூடுதல் மகசூல் கிடைக்கும். எனவே, பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண் துறை அலுவலர்களை அணுகி வேளாண் துறை மூலம் செயல்படுத்தப்படும் மானிய திட்டத்தை பயன்படுத்தி டி.ஏ.பி., உரத்தை வாங்கி பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.



Read more »

ஊனமுற்ற மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா

விருத்தாசலம்:

                  விருத்தாசலம் அடுத்த வீராரெட்டிக்குப்பம் ஜெஸிக்கா சிறப்பு பள்ளியில் பயிலும் ஊனமுற்ற மாணவர்களுக்கு ஏரிஸ் தொண்டு நிறுவனம் சார்பில் உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. தொண்டு நிறுவன இயக்குனர் பிச்சைப் பிள்ளை தலைமை தாங்கினார். ஜான்போஸ்கோ செல்வம், சுரேஷ், ரவிசந்திரன், நாகராஜ் முன்னிலை வகித்தனர். களப்பணியாளர் ஜெயராணி வரவேற்றார்.முத்தனங்குப்பம் ஊராட்சி தலைவர் மார்ட்டின் இமானுவேல், வீராரெட்டிக்குப்பம் ஊராட்சி தலைவர் அல்போன்ஸ் மாணவர்கள் 27 பேருக்கு வீல் சேர், செயற்கைகால் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கி பேசினர்.விழாவில் பள்ளி தாளா ளர் ஜூலியானா, களப்பணியாளர் மகேஸ் வரி உட் பட பலர் கலந்து கொண்டனர்.



Read more »

காட்டுமன்னார்கோவிலில் ஐந்து இடங்களில் மின் மாற்றி

சிதம்பரம்:

           காட்டுமன்னார்கோவிலில் 5 இடங்களில் புதிய மின் மாற்றிகள் துவக்கப்பட்டது. காட்டுமன்னார்கோவில் அருகே சர்வராஜன்பேட்டை, மா.கொளக்குடி, பழஞ்சநல்லூர் பாவடிதோப்பு, பல்வாய்க்கண்டன் மற்றும் பாப்பான்தோப்பு பகுதிகளில் மத்திய அரசின் ராஜிவ்காந்தி கிராம வித்யூத் யோஜனா திட்டத்தின் கீழ் 20 லட்சம் ரூபாய் செலவில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது. சிதம்பரம் செயற்பொறியாளர் செல்வசேகர் புதிய மின்மாற்றியை இயக்கி வைத்தார். நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர்கள் இளங்கோவன், குமார், வெங்கடேசன், மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



Read more »

ரேஷன் கார்டுகளுக்கு கூடுதல் மண்ணெண்ணெய்

கடலூர்:

        நகர பகுதிகளில் காஸ் இணைப்பு இல்லாத புதிய ரேஷன் கார்டுகளுக்கு கூடுதலாக 2 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்படும். 

இது குறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

                    மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் காஸ் இணைப்பு இல்லாத, புதிய ரேஷன் கார்டுகளுக்கு இந்த (மார்ச்) மாதத்திற்கு மட்டும் இரண்டு லிட்டர் மண்ணெண்ணெய் கூடுதலாக வழங்கப்படும். ஏனைய ரேஷன் கார்டுகளுக்கு வழக்கம் போல் மூன்று லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.



Read more »

மக்கள் தொகை கணக்கெடுப்புசெயல்விளக்க பயிற்சி முகாம்

திட்டக்குடி:

                     திட்டக்குடி தாலுகாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து செயல்விளக்க பயிற்சி நடந்தது. திட்டக்குடி தாலுகாவில் 2011ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து பவர் பாய்ண்ட் செயல் விளக்க பயிற்சி, இடைச்செருவாய் வட்டார வளமையத்தில் நடந்தது. இதில் தாலுகா அலுவலக ஊழியர்கள், பேரூராட்சி ஊழியர்கள் பங்கேற்றனர். பயிற் சிக்கு தாசில்தார் கண்ணன் தலைமை தாங்கினார். தேர்தல்துறை தனி தாசில்தார் மெகருனிசா, உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர். மங்களூர் ஒன்றிய எஸ்.எஸ்.ஏ., மேற் பார்வையாளர் முருகேசன் துவக்கி வைத்தார். மக்கள் தொகை கணக்கெடுப்பு பிரிவு மேற்பார்வையாளர் சென்னை நடராஜன் பவர்பாய்ண்ட் மூலம் செயல் விளக்க பயிற்சியளித்தார். இதில் பேரூராட்சி உதவியாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஊர்காவலன், வி.ஏ.ஓ., பாலகிருஷ் ணன், ஆசிரிய பயிற்றுநர்கள் மங்களூர் மணிகண்டன், நல்லூர் தமிழ்வேந்தன், விருத்தாசலம் அய்யப்பன் பங்கேற்றனர்.ஊராட்சி தலைவர் ஜெயமணி நன்றி கூறினார்.


Read more »

சிதம்பரம் பகுதியில்மின் தடை நேரம் மாற்றம்


சிதம்பரம்:

               சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் மின் தடை நேரம் மாற்றப்பட்டுள்ளது.

இது குறித்து சிதம்பரம் கோட்ட மின் வாரிய செயற்பொறியாளர் செல்வசேகர் விடுத்துள்ள செய்திகுறிப்பு:

                  சிதம்பரம் துணை மின் நிலையத்தில் சிதம்பரம் நகரம்,அம்மாப்பேட்டை மற்றும் மணலூர் பகுதியில் காலை 8 மணிமுதல் 10 மணி வரையும், மாரியப்பா நகர், அண்ணாமலைநகர் பகுதியில் மாலை 4 முதல் 6மணி வரையும், பி.முட்லூர் துணை மின் நிலையத்தில் புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மாலை 4மணி முதல் 6மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. காட்டுமன்னார்கோவில் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட காட்டுமன்னார்கோவில் நகரம், லால்பேட்டை பகுதிகள் சேத்தியாத் தோப்பு துணை மின் நிலையம்,சேத்தியாத் தோப்பு நகரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் பகல் 2 மணி முதல் 4 மணி வரையும், ஸ்ரீமுஷ்ணம் துணை மின் நிலைய மின் வினியோக பகுதிகளில் காலை 8 மணி முதல் 10 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.



Read more »

மெகா பள்ளங்களால் விபத்துகள் அதிகரிப்பு

பண்ருட்டி:

                   பண்ருட்டி - வீரப்பெருமாநல்லூர் சாலையில் உள்ள மெகா பள்ளங்களால் விபத்துகள் அதிகரித்து வருகிறது. கடலூர்-சித்தூர் சாலையில் பண்ருட்டி நான்கு முனை சந்திப்பு முதல் வீரப்பெருமாநல்லூர் வரையிலான 13 கிலோ மீட்டர் சாலை குண்டும் குழியுமாக உள்ளது.

                     கடந்த 2008ம் ஆண்டு பெய்த மழையின் போது குண்டும் குழியுமாக இருந்த பகுதிகளை நெடுஞ்சாலைத்துறையினர் பெயரளவிற்கு "பேட்ஜ் ஒர்க்' செய்தனர். ஆனால் முழுமையாக பாதித்த இடங்களை சீரமைக்கவில்லை. கடந்த பருவ மழையின் போது சாலையின் பல பகுதிகளில் மெகா பள்ளங்கள் உருவானது. மேலும் சாலையில் உள்ள "சிப்ஸ்' பெயர்ந்தது. ஆனால் நெடுஞ்சாலைத்துறையினர் நிதி வரவில்லை என கூறி வழிநெடுக உள்ள பள்ளங்களை "பேட்ஜ் ஒர்க்' கூட செய்யவில்லை.இந்த சாலையில் உள்ள மெகா பள்ளங்களால் இவ்வழியே வரும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் பள்ளங்களில் விழுந்து விபத்தில் சிக்குவது அதிகரித்து வருகிறது.பெரும் விபத்து ஏற்படும் முன்பாக இந்த சாலையை சீரமைக்க நெடுஞ்சாலை துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.



Read more »

வீட்டு உபயோக மின் இணைப்பை தவறாக பயன்படுத்தினால் சிறை

கடலூர்:

                          வீட்டு உபயோக மின்சாரத்தை வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தினால் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து கடலூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ரவிராம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

                  வீட்டு உபயோகத்திற்கு வழங்கபடும் மின்சாரம் அந்த குறிப்பிட்ட வீட்டு உபயோகத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.  வணிக பயன் மற்றும் தொழில் சாலைக்கோ பயன்படுத்தினால் மின் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன், அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும். எந்த உபயோகத்திற்கு பெறப்பட்டதோ அது தவிர வேறு உபயோகத்திற்கு பயன்படுத்தினால் மின் திருட்டாக கருதி அபராதம் மற்றும் சிறை தண்டனை வழங்கப்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட் டுள்ளது.



Read more »

நந்தவனத்தில் குடியேறும் போராட்டம் சமாதான கூட்டத்தில் கைவிட முடிவு

விருத்தாசலம்:

                     விருத்தாசலத்தில் நேற்று நடைபெற இருந்த கோவில் நந்தவனத்தில் குடியேறும் போராட்டம் சமாதான கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவால் கைவிடப்பட்டது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் முன்பு கோவிலுக்கு சொந்தமான நந்தவன இடம் உள்ளது.
                   
                                 இந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதாகவும், ஆக்கிரமிப்பை அகற்றி அங்கு வாகன நிறுத்தம் அமைக்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நகர வாழ் மக்கள் மற்றும் வட்டார மக்கள் சார்பில் நேற்று (3 ம் தேதி) கோவில் நந்தவனத்தில் குடியேறும் போராட்டம் நடத்துவது என அறிவித்திருந்தனர்.இதையடுத்து நேற்று காலை தாசில்தார் ஜெயராமன் தலைமையில் தாலுகா அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. சேர்மன் முருகன், கவுன்சிலர் பாலகிருஷ்ணன், கோவில் செயல் அலுவலர் ராஜாசரவணகுமார், சப் இன்ஸ் பெக்டர் கண்மணிசுப்பு மற்றும் வியாபாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் கோவில் செயல் அலுவலர் ராஜாசரவணகுமார் உயர் அதிகாரிகளிடம் அனுமதி வாங்கி ஆக்கிரமிப்புகளை அகற்றி, வாகன நிறுத்தம் அமைக்கப்படும் எனவும், அதற்கு ஒரு மாதம் கால அவகாசம் வேண்டும் என கேட்டார். இதை ஏற்று நேற்று நடைபெற இருந்த போராட்டம் கைவிடப் பட்டது.



Read more »

ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் பொதுமக்கள் கலெக்டரிடம் மனு

கடலூர்:

                    சுடுகாட்டுபாதை மற் றும் அய்யனார் கோவில் இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சுய உதவிக்குழு பெண்கள் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.

இது குறித்து பெரிய சோழவல்லி பொதுமக்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினர் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனு:

                      நெல்லிக்குப்பம் பெரிய சோழவல்லி கிராம மக்களுக்கு பொதுவான சுடுகாட்டு பாதை, அய்யனார் கோவிலுக்கு செல்லும் பாதைகள் தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நகராட்சி சேர்மன், தாசில்தாரிடம் புகார் செய்தோம். ஆனால் நகராட்சி சர்வேயர் ஒருதலைபட்சமாக நடந்துகொண்டதால், அளக்க வேண்டும் என நிறுத்திவிட்டோம். எனவே எங்கள் ஊருக்கு சொந்தமான சுடுகாட்டுப்பாதை, அய்யனார்கோவில் பாதை ஆக்கிரமிப்புகளை மாவட்ட நிர்வாகம் அகற்றி , பொதுவான இடத்தை அளந்து கொடுக்க வேண்டும்.



Read more »

அதிகாரிகளின் சமரச முயற்சியால் உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைப்பு


திட்டக்குடி:

                  திட்டக்குடி பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற இருந்த தொடர் உண்ணாவிரத போராட்டம் அதிகாரிகளின் சமரச முயற்சியால் ஒத்திவைக்கப்பட்டது. திட்டக்குடி பேரூராட்சி 5வது வார்டு கவுன்சிலர் செந்தில் மற்றும் பொதுமக்கள் சார்பில், 5வது வார்டில் உள்ள ரேஷன் கடைக்கு சொந்த கட்டடம் கட்டவேண்டும். கொசு மருந்து அடிக்க வேண்டும்.

                       திட்டக்குடியில் உழவர் சந்தை துவங்க வேண்டும். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நீக்கப்பட்ட என்.சி.சி., பிரிவிவை மீண்டும் துவங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 21 கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை பேரூராட்சி அலுவலகம் முன்பாக தொடர் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டது.இதனையடுத்து நேற்று முன்தினம் மாலை தாசில்தார் கண்ணன் தலைமையில், துணை தாசில்தார் பாலு, வார்டு கவுன்சிலர் செந்தில் மற் றும் போராட்டக்குழுவினர் முன்னிலையில் அமைதி கூட்டம் நடந்தது. இதில் வரும் 31ம் தேதி அனைத்துத்துறை அலுவலர்களுடன் மீண்டும் அமைதிக்குழு கூட்டம் நடத்துவது என்றும், அதற்குள் போதிய குறைகளை நிறைவேற்றுவதாக தாசில்தார் தெரிவித்தார். இதனையேற்று தொடர் உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.



Read more »

நவரைப் பட்ட நெல் சாகுபடிக்கு ​ வேளாண்துறை ஆலோசனை

கடலூர்:

                    நவரைப் பட்ட நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு கீழ்காணும் ஆலோசனைகளை கடலூர் மாவட்ட வேளாண்துறை புதன்கிழமை அறிவித்தது.​ ​ ​​ 

இதுதொடர்பாக வேளாண் இணை இயக்குநர் ச.இளங்கோவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:​ ​​

                    ​ கடலூர் மாவட்டத்தில் நவரைப்பட்ட நெல் உற்பத்தியைப் பெருக்கும் வகையில்,​​ தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் மானிய விலையில் சிங்க் சல்பேட் உரம் விவசாயிகளுக்கு வேளாண் துறைமூலம் வழங்கப்படுகிறது.​ ​ நவரைப் பட்ட நெல் பயிருக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 25 கிலோ சிங்க் சல்பேட் உரத்துடன்,​​ 50 கிலோ மணல் கலந்து,​​ ந ன்கு சமப்படுத்தப்பட்ட வயலில்,​​ நாற்று நடுமுன் ஒரே சீராக இடவேண்டும்.​​ ​ நவரைப் பட்ட நெல் சாகுபடி விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண்துறை அலுவலர்களை அணுகி சிங்க் சல்பேட் உரத்தை மானிய விலையில் பெற்று பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.



Read more »

திமுக செயற்குழுக் கூட்டம்

பண்ருட்டி

                      பண்ருட்டி நகர திமுகவின் செயற்குழுக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.​ ​ அவைத்தலைவர் சின்னத்தம்பி தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில்,​​ 7-ம் தேதி விழுப்புரத்தில் மருத்துவக் கல்லூரி திறந்து வைக்க வரும் தமிழக முதல்வர் நிகழ்ச்சியில் நகர கழகம் சார்பில் பெரும் திரளாக கலந்து கொண்டு மாவட்டத்துக்கு பெருமை சேர்ப்பது,​​ 6-ம் தேதி கடலூரில் நலத்திட்ட உதவிகள் வழங்க வரும் துணை முதல்வர் ஸ்டாலினுக்கு நகர எல்லையில்,​​ நகர கழகம் சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிப்பது.​ மருத்துவத்துறையில் சாதனை படைத்து முதல்வரிடம் பாராட்டு பெற்ற மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும்,​​ மாவட்டச் செயலருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.​ ​ கூட்டத்தில் நகரச் செயலர் கே.ராஜேந்திரன்,​​ முன்னாள் எம்.எல்.ஏ.,​​ டாக்டர்.​ நந்தகோபாலகிருஷ்ணன்,​​ நகர்மன்றத் தலைவர் எம்.பச்சையப்பன்,​​ மாவட்ட பிரதிநிதிகள் முத்துகிருஷ்ணன்,​​ செங்குட்டுவன்,​​ நகரத் துணைச் செயலர் சையத்காதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



Read more »

பட்டதாரி ஆசிரியர் கழகத் தேர்தல்

பண்ருட்டி:

                      தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் பண்ருட்டி வட்ட பொறுப்பாளர்கள் தேர்தல் பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.​ ​ மாவட்ட பொருளாளர் பி.ராமச்சந்திரன் தலைமையில்,​​ துணைத் தலைவர் கே.தேவநாதன்,​​ மாநில பொதுக்குழு உறுப்பினர் பி.அழகுச்செல்வம் முன்னிலையில் தேர்தல் நடைபெற்றது.​ இதில்,​​ வட்டத் தலைவராக பி.வடிவேலு,​​ செயலராக பி.பாண்டுரங்கன்,​​ பொருளராக ஏ.திருப்பதிவெங்கடாஜலம்,​​ துணைத் தலைவராக பி.எஸ்.பாலமுருகன்,​​ மாவட்ட பொதுக் குழு உறுப்பினர்களாக கே.சுப்ரமணியன்,​​ ஜி.சந்திரபாபு,​​ அ.சுப்ரமணியன்,​​ என்.நந்தகோபால்,​​ எம்.சந்திரசேகரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.​ முன்னாள் வட்ட பொறுப்பாளர்கள் சக்கரவர்த்தி,​​ கார்த்திசன் ஆகியோர் தேர்தல் அலுவலர்களாக பணியாற்றினர்.​​ ​ அமைப்பு செயலர் ஜெ.நாகராஜன் நன்றி கூறினார்.



Read more »

தேர்வு செய்யப்பட்ட அரிமா துணை ஆளுநருக்கு பாராட்டு

சிதம்பரம்:

                           அரிமா மாவட்ட ​(324 அ3 மாவட்டம்)​ துணை ஆளுநராக தேர்வு செய்யப்பட்டுள்ள சிதம்பரம் மூத்த உறுப்பினர் ஆர்.எம்சுவேதகுமாருக்கு அரிமா சங்கங்கள் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பிப்ரவரி 27,28 தேதிகளில் புதுச்சேரியில் நடைபெற்ற மாவட்ட மாநாட்டில் ஆர்.எம்.சுவேதகுமார் துணை ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.​ சிதம்பரம் பகுதியில் கடந்த 39 ஆண்டுகளாக மக்களுக்கு சேவை பணியாற்றி வரும் சிதம்பரம் அரிமா சங்கத்தில் ஆர்.சுவேதகுமார் முக்கிய பங்கு வகித்து வருகிறார். சிதம்பரத்திலிருந்து முதல்முறையாக அரிமா சங்க மாவட்ட துணை ஆளுநராக இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.



Read more »

கடலூர் மாணவிக்கு ​ இரு வெள்ளிப் பதக்கங்கள்

கடலூர்:

                 சிங்கப்பூரில் நடந்த காமன்வெல்த் யோகா போட்டியில்,​​ கடலூர் மாணவி ஆர்.அஜித்தாவுக்கு 2 வெள்ளிப் பதக்கங்கள் கிடைத்தன. கடலூர் ஏ.ஆர்.எல்.எம்.​ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 6-வது படிக்கும் மாணவி அஜித்தா.​ உலக நாடுகள் பலவும் பங்கேற்கும் காமன்வெல்த் யோகா போட்டி,​​ பிப்ரவரி ​ முதல் வாரத்தில் சிங்கப்பூரில் நடந்தது. இதில் அஜித்தா கலந்து கொண்டார்.​ யோகாசனப் போட்டிகளில் அவர் இரு வெள்ளிப் பதக்கங்களை வென்றார்.​ இதற்காக மாணவி அஜித்தாவுக்கு பாராட்டு விழா கடலூர் ஜூனியர் சேம்பர் சார்பில் செவ்வாய்க்கிழமை நடந்தது.​ மாணவி அஜித்தாவை பாராட்டி மாவட்ட செஞ்சிலுவைச் சங்கச் செயலாளரும்,​​ ஜூனியர் சேம்பர் முன்னாள் மண்டலத் தலைவருமான ஆர்.எம்.பாலசுப்பிரமணியன் பரிசு வழங்கினார். அஜித்தாவுக்குப் பயிற்சி அளித்த ஆசிரியை பிரேமா முருகேசன் பாராட்டப்பட்டார்.​ ​நிகழ்ச்சிக்கு ஜூனியர் சேம்பர் தலைவர் என்.மனோகர் தலைமை வகித்தார்.​ கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். அகில இந்திய ரயில் நிலைய அலுவலர்கள் சங்க இணைச் செயலர் எம்.ராஜன் ​(அஜித்தாவின் தந்தை),​​ தென் ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் முனைவர் பி.சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.​ ஜூனியர் சேம்பர் செயலர் சிவகுமார் நன்றி கூறினார்.



Read more »

சில்வர் பீச்சை சுத்தம் செய்த ​ கடலூர் திரைப்பட இயக்கத்தினர்

கடலூர்:

                      கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சை,​​ கடலூர் திரைப்பட இயக்கத்தினர் புதன்கிழமை சுத்தம் செய்தனர். கோடைகாலம் தொடங்கி விட்டதால் கடலூர் சில்வர் பீச்சுக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.​ மேலும் கடந்த ஞாயிறுக்கிழமை மாசிமகம் திருவிழா சில்வர் பீச் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் நடந்தது. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அங்கு கூடினர்.​ இதனால் கடற்கரை முழுவதும் பாலித்தீன் பொருள்கள் உள்ளிட்ட குப்பைகள் நிறைந்து காணப்பட்டன. குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை எழுந்தது.​ இதைத் தொடர்ந்து கடலூர் திரைப்பட இயக்கத்தினர் புதன்கிழமை சில்வர் பீச்சில் குப்பைகளை அகற்றி சுத்தப்படுத்தும் பணியைத் தொடங்கினர்.÷இந்த நிகழ்ச்சிக்கு கடலூர் திரைப்பட இயக்கச் செயலர் சாமி கச்சிராயர் தலைமை வகித்தார்.​ இயக்குநர் தமிழாதரன்,​​ உதவி இயக்குநர் ​ தமிழ்ச் சான்றோன்,​​ ​ செயற்குழு உறுப்பினர்கள் ரஞ்சனி,​​ காத்தமுத்து தட்சிமாமூர்த்தி,​​ சிவா,​​ பிரசாத் உள்ளிட்டோர் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். 

இது குறித்து அவர்கள் பேசுகையில்,​​ 

                    கடலூர் சில்வர் பீச்சுக்கு திரைப்படம் ஒன்றிற்கான கலந்துரையாடலுக்காக வந்தோம்.​ ஆனால் இங்கு குப்பைகள் நிறைந்து மிக மோசமாகக் காட்சி அளித்தது சில்வர் பீச். எனவே மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த,​​ துப்புரவுப் பணியில் ஈடுபட்டோம் என்றும் தெரிவித்தனர்.



Read more »

கல்லூரி மாணவர்கள் திடீர் மறியல் போராட்டம்

கடலூர்:

                     ​ கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி மாணவர்களில் ஒரு பிரிவினர் புதன்கிழமை திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.​ ​​ பெரியார் அரசு கலைக் கல்லூரியில் புதன்கிழமை காலை 8.45 மணிக்கு சில மாணவர்கள் கல்லூரி வாயில் அருகே நின்றிருந்தனர்.​ ​ அப்போது தாவரவியல் பேராசிரியர் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு வந்தார்.​ அப்போது அங்கு நின்றிருந்த 3-ம் ஆண்டு மாணவர் விநோத்தின் கால் ​மீது மோட்டார் சைக்கிள் டயர் பதிந்து விட்டதாகக் கூறப்படுகிறது.​ ​ ​​ இதனால் மாணவர்களுக்கும் பேராசிரியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.​ ​இதையடுத்து பேராசிரியர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி,​​ கல்லூரி மாணவர்களில் ஒரு பிரிவினர் கல்லூரி வாயிலில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.​ ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இந்தப் போராட்டம் நீடித்தது.​  பின்னர் கல்லூரி முதல்வர் வந்து பேச்சு நடத்தி மாணவர்களைக் கலைந்து போகச் செய்தார்.

Read more »

ரூ.200 கோடி செலவில் திட்டம் ​ திருப்பூர் சாயப் பட்டறைக் கழிவுகளை கடலூர் கடலில் கலக்க எதிர்ப்பு

கடலூர்,:

                    ரூ.200 கோடி செலவில்,​​ திருப்பூர் சாயப்பட்டறைக் கழிவுகளை கடலூர் கடலில் கலக்க முடிவு செய்து இருப்பதற்கு,​​ கடலூர் நகர அனைத்து குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.​ ​​ 

கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மு.மருதவாணன் புதன்கிழமை தமிழக முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனு:​ ​​ 

                    மத்திய அரசு நிதிநிலை அறிக்கையில் திருப்பூர் சாயப்பட்றைக் கழிவுகளை சுத்திகரிப்பதற்கு ரூ.200 கோடி ஒதுக்கி இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.​ கழிவுநீரைச் சுத்திகரிக்க ரூ.200 கோடி ஒதுக்கியதற்கு ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதிமாறனுக்கு பாராட்டு தெரிவிக்கிறோம்.​ ​ ​ 

                              ஆனால் அந்தக் கழிவுகளை அகற்றும் இடமாகக் கடலூரைத் தேர்ந்து எடுத்ததற்கு எங்கள் கண்டனத்தைத் தெரிவிக்கிறோம்.​ ​​ கடலூரில் உள்ள ரசாயனத் தொழிற்சாலைகளின் கழிவுகளால் ஏற்கெனவே கடலூர் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது.​ புற்றுநோய் மருத்துவமனைக்கு வரும் 20 பேரில் ஒருவர் கடலூரைச் சேர்ந்தவராக இருப்பதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி இருக்கிறது.​​ ​ புளோரோஸிஸ் என்ற பல் மற்றும் எலும்பு வியாதி தமிழகத்தில்,​​ கடலூரில்தான் அதிகம் இருப்பதாகக் கண்டறியப்பட்டு உள்ளது.​ கடலூர் மக்கள் சுவாசிக்கும் காற்று மற்ற பகுதிகளைவிட 5 மடங்கு மாசுபட்டு இருக்கிறது.​ ​​ தமிழகத்தில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்ட நகரங்களில்,​​ தண்ணீர் காரத் தன்மையாக மாறியிருக்கும் அல்லது அமிலத் தன்மையாக மாறியிருக்கும்.​ ஆனால் கடலூரில் காரத் தன்மையும்,​​ அமிலத் தன்மையும் காணப்படுவது அதிர்ச்சி தரும் தகவலாக உள்ளது.​ ​ ​​ ​ 

                                அதற்கு ரசாயன ஆலைகளே காரணம்.​ பல தொழிற்சாலைகள் தங்களது சுத்திகரிக்க முடியாத ரசாயனத் திரவக் கழிவுகளை நிலத்தில் ரகசியமாக ஆழ்குழாய்க கிணறுகள் அமைத்து,​​ பூமிக்குள் செலுத்துகின்றன.​​ ​ இந்த நிலையில் கடலூரில் மிகப்பெரும் ஜவுளிப் பூங்கா அமைய இருக்கிறது.​ திருப்பூர் மற்றும் கோவைப் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் துணிகளைக் கடலூருக்குக் கொண்டு வந்து,​​ ரசாயனங்களைக் கொண்டு பதப்படுத்துதல்,​​ சாயம் தோய்த்தல் உள்ளிட்ட பணிகளை மட்டும் கடலூர் ஜவுளிப் பூங்காவல் மேற்கொள்ள திட்டமிட்டு இருப்பதைக் கண்டிக்கிறோம்.​​ ​ இப்பணிக்காகத் தான் மத்திய அரசு ரூ.200 கோடி ஒதுக்கி இருப்பது வருத்தம் அளிக்கிறது.​ ​ இப்போதே கடலூரில் 30 கி.மீ.​ நீளத்துக்கு கடலில் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது.​ சாயப் பட்டறைக் கழிவுகளையும் கடலில் கொட்டினால் விளைவுகள் மிகவும் மோசமாகும் என்றும் மனுவில் மருதவாணன் கேட்டுக் கொண்டு உள்ளார்.




Read more »

முதல்வருக்கு கடலூர் தொழில் வர்த்தக சங்கத்தினர் நன்றி

பண்ருட்டி:

               தமிழக முதல்வருக்கு கடலூர் தொழில் வர்த்தக சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.​ ​ 

இது குறித்து கடலூர் தொழில் வர்த்தக சங்கத் தலைவர் டி.சண்முகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:​​ ​ 

                   வணிக வரித்துறை சார்பில் பட்ஜெட்டுக்கு முன்னர் நடைபெற்ற வணிக சங்க பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.​ ​​ இதில் கடலூர் மாவட்டத் தொழில் வர்த்தக சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட 6 கோரிக்கைகளை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டமைக்கு,​​ தமிழக முதல்வர்,​​ நிதி அமைச்சர்,​​ வணிக வரித் துறை அமைச்சர்,​​ செயலர் மற்றும் ஆணையர் ​ உள்ளிட்டவர்களுக்கு கடலூர் மாவட்டத் தொழில் வர்த்தக சங்கத்தினர் சார்பில் நன்றி தெரிவிப்பதாக டி.சண்முகம் கூறியுள்ளார்.



Read more »

எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு தனி கரும்பு அலுவலர் நியமிக்க கோரிக்கை


சேத்தியாத்தோப்பு:

                சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு தனி பொறுப்புடன் கூடிய தலைமை கரும்பு அலுவலரை நியமிக்க துல்லிய பண்ணை விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கீரப்பாளையம் ஒன்றிய துல்லிய பண்ணை விவசாயிகள் (கரும்பு)  சங்க ஆலோசனை கூட்டம் சேத்தியாத்தோப்பில் நடந்தது.  சங்க தலைவர் அப்பாதுரை தலைமை தாங்கினார். சக்திசித்தானந்தம், குணசேகரன் முன்னிலை வகித்தனர். வெங்கடாஜலபதி வரவேற்றார். ரவிச்சந்திரன், தெய்வசிகாமணி, அன்பழகன் பேசினர். பேரூர் உழவர் மன்ற தலைவர் குஞ்சிதபாதம் சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 

                    எம்.ஆர்.கே., கூட்டுறவு ஆலையிக்கு தனிப் பொறுப்புடன் நிர்வாக திறன்மிக்க தலைமை கரும்பு அலுவலரை நியமிக்க வேண்டும். பணியிடமாறுதலில் முறைகேடாக செயல்பட்ட கரும்பு அலுவலர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு டன்னுக்கு ரூ.2 ஆயிரத்து 500 வழங்க வேண்டும். நடப்பு ஆண்டு கரும்பு அரவை பருவத்திற்குள் கரும்பு அறுவடை இயந்திரத்தை ஆலை நிர்வாகம் வாங்கி விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டும். வெட்டுக்கூலியை ஆலை நிர்வாகம் ஏற்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



Read more »

சுண்ணாம்பு மண் கடத்திய லாரி பறிமுதல்

சேத்தியாத்தோப்பு:

               அனுமதியின்றி சுண்ணாம்பு மண் ஏற்றி வந்த லாரியை சேத்தியாத் தோப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். சேத்தியாத்தோப்பு இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையில் போலீசார் இரவு வாகன சோதனை மேற்கொண்டனர்.  அப்போது அரியலூரிலிருந்து வடலூருக்கு சுண்ணாம்பு மண் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தததில் அனுமதியின்றி சுண்ணாம்பு மண் ஏற்றி வருவது தெரிய வந்தது. உடன் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் வழக்கு பதிந்து டிரைவர் கலியமூர்த்தியை கைது செய்தனர்.



Read more »

முன்விரோத தகராறில் 7 பேரை தாக்கிய இருவர் கைது

கடலூர்: 

                     முன் விரோதத்தில் 7 பேரை தாக்கிய வழக்கில் இருவர் கைது செய்யப் பட்டனர். கடலூர் வண்ணாரப்பாளையத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (21). இவரை அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் தனது உறவினர் முருகன் டைலர் கடைக்கு தீவைத் துவிட்டதாக தாக்கினார். இது குறித்து ஸ்ரீதர் தேவனாம்பட்டினம் போலீசில் புகார் செய்தார்.  இதனை அறிந்த கார்த்திகேயன், மற்றும் அவரது ஆதரவாளர்கள் சேர்ந்து ஸ்ரீதர், அவரது ஆதரவாளர்களை தாக்கினர். இதில் காயமடைந்த ஸ்ரீதர், ராஜ்குமார், சக்திவேல், தமிழரசன், ருக்குமணி, வினோத், பானு ஆகியோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். தேவனாம்பட்டினம் போலீசார் வழக்கு பதிந்து கார்த்திகேயன்(31), சாரங் கன்(33) இருவரையும் கைது செய்தனர். மேலும் ஆனந்த், சரவணன், சதீஷ் குமார், சசி, முத்து தேடி வருகின்றனர்.




Read more »

மக்காசோளம் கொள்முதலில் முறைகேடுவியாபாரி, புரோக்கர்கள் சிறைபிடிப்பு

ராமநத்தம்:

                   விவசாயிகளிடம் மக்காசோளம் கொள்முதல் செய்வதில் முறைகேடு செய்த வியாபாரி மற்றும் புரோக்கரை கிராம மக்கள் சிறை பிடித்தனர். ராமநத்தம் அடுத்த அதர்நத்தம் கிராமத்தில் அறுவடை செய்யப்படும் மக்காச்சோளங்களை உள் ளூர் புரோக்கர்கள் மூலம் கள்ளக்குறிச்சி, ஆத்தூர் பகுதி வியாபாரிகள் கொள் முதல் செய்து வருகின் றனர். 100 கிலோ மூட்டை ஒன்று 850 ரூபாய் வரை விற்பனையாகிறது.

                            நேற்று முன்தினம் மதியம் கள்ளக்குறிச்சி வியாபாரி நல்லதம்பி, அதர்நத்தத்தை சேர்ந்த புரோக்கர் மூலம் பச் சையம்மாள் என்பவரிடம் 15 மூட்டை மக்காச்சோளம் வாங்கினார். அப்போது தராசில் மோசடி செய்து, மூட்டைக்கு 9 கிலோ கூடுதலாக மக்காச்சோளம் எடுப்பது தெரியவந்தது. ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பா.ம.க., பிரமுகர்கள் கோபி, வேல்முருகன் மற்றும் கிராம மக்கள் கள்ளக்குறிச்சி வியாபாரி நல்லதம்பி, புரோக்கர் ராஜேந்திரன், லாரி டிரைவர் ஆனந்தனை சிறைபிடித்தனர். தகவலறிந்த ராமநத்தம் சப் இன்ஸ்பெக்டர் அரியபுத்திரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று கிராம மக்களை சமாதானம் செய்து, சிறை பிடிக்கப்பட்ட மூவரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.



Read more »

ஆம்புலன்சில் பிரசவம்

நெல்லிக்குப்பம்:

                 நெல்லிக்குப்பம் அருகே ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் நடந்தது. நெல்லிக்குப்பம் அடுத்த வடக்குபாளையத்தை சேர்ந்த அருள் மனைவி ராஜேஸ்வரி. இவரை பிரசவத்துக்காக அரசின் இலவச ஆம்புலன்சில் ஏற்றி வந்தனர். கோழிப்பாக்கம் அருகே ராஜேஸ்வரிக்கு பிரசவ வலி அதிகமிருந்ததால் சாலையோரம் வாகனத்தை நிறுத்தி உள்ளேயே பைலட் ரமேஷ், மருத்துவ உதவியாளர் அமலா பிரசவம் பார்த்தனர். பெண் குழந்தை பிறந்தது.  இதுவரை ஆம்புலன்சில் 40 பெண்களுக்கு பிரசவம் நடந்துள்ளது.



Read more »

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாணவர்களுக்கு தனித்திறன் போட்டிகள்

புவனகிரி:

                       புவனகிரியில் பள்ளி மாணவர்களுக்கிடையே நடந்த தனித்திறன் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

                       புவனகிரி கள்ளிக்காட்டு தெரு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் மூலம் பள்ளி மாணவர்களுக்கடையே மாவட்ட அளவில் தனித்திறன் போட்டிகள் நடத்தப் பட்டன. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் சீத்தாலட்சுமி தலைமை தாங்கினார். கவுன்சிலர் புஷ்பரேகா சுதாகர் முன்னிலை வகித்தார். அறிவியல் இயக்க கிளை தலைவர் அறிவழகன் வரவேற்றார். மாவட்ட துணைச் செயலாளர் சிகாமணி துவக்கி வைத்தார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களை முன்னாள் எம்.எல்.ஏ., சரவணன் வழங்கினார். உதவி தொடக்க கல்வி அலுவலர் சவரிமுத்து, கூடுதல் உதவி தொடக்ககல்வி அலுவலர் பிரான்சிஸ் ஜெயராஜ், வட்டார வள மைய மேற்பார்வையாளர் கலைச்செல்வன் பங்கேற்றனர். செயலாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.





Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior