உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 16, 2010

நெய்வேலியில் திடீரென இடம் மாறிய மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம்

நெய்வேலி:

                நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் இயங்கி வந்த மோட்டார் ஆய்வாளர் வாகன அலுவலகம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படாமலேயே வியாழக்கிழமை திடீரென இடமாற்றம் செய்யப்பட்டது.
            
             நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மோட்டார் வாகன ஆய்வாளர் (எம்விஐ) அலுவலகம் இயங்கி வந்தது. இந்நிலையில் மந்தாரக்குப்பம் பகுதியில் என்எல்சி முதல் சுரங்க விரிவாக்கம் நடைபெறவிருப்பதால், அப்பகுதியில் உள்ள குடியிருப்பு மற்றும் அரசு அலுவலகங்கள், நீதிமன்றம், காவல்நிலையம், பள்ளிகள் உள்ளிட்டவை படிப்படியாக காலி செய்யப்பட்டு வருகின்றன.÷அதன்படி கடந்த 2 ஆண்டுக்கு முன்னர், நீதிமன்றமும் நெய்வேலி வட்டம் 20-க்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் நெய்வேலி எம்விஐ அலுவலகமும் இடமாற்றம் செய்யப்படும் நிலையில் இருந்தது. 

                    அதற்காக நெய்வேலி தெர்மல் காவல்நிலையம் அருகே என்எல்சியின் பழைய குடியிருப்பு, ரூ.40 லட்சத்தில் கூடுதல் கட்டடங்களுடன் புதுப்பிக்கப்பட்டு கட்டப்பட்டது. இருப்பினும் அலுவலகம் தொடர்ந்து மந்தாரக்குப்பத்திலேயே இயங்கி வந்தது. இந்நிலையில் புதிதாக ரூ.40 லட்சத்தில் புதுப்பித்துக் கட்டப்பட்ட நெய்வேலி எம்விஐ அலுவலகம் திடீரென வியாழக்கிழமை திறக்கப்பட்டது. இது குறித்து பொதுமக்களுக்கோ, ஓட்டுநர் பயிற்சி பள்ளி நிர்வாகிகளுக்கோ, பத்திரிகை நிருபர்களுக்கோ எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை. மேலும் வியாழக்கிழமை வழக்கம்போல் நெய்வேலி எம்விஐ அலுவலகம் சென்ற பலரிடம், "அலுவலகம் இடமாற்றம் செய்யப்படுவதால் ஒருவாரம் கழித்து வாருங்கள்' என அங்கிருக்கும் அலுவலக ஊழியர்கள் பதில் கூறி அனுப்பியுள்ளனர்.

              மேலும் புதிதாக ரூ.40 லட்சத்தில் கட்டப்பட்ட கட்டடத்தில் அலுவலகத்தின் பெயரும் இடம்பெறவில்லை. மோட்டார் வாகன ஆய்வாளரும் நியமிக்கப்படவில்லை. ஆர்.செல்வம் என்ற மோட்டார் வாகன ஆய்வாளர் கூடுதல் பொறுப்பாக இதைக் கவனிப்பார் எனக் கூறப்படுகிறது. மேலும் இவ்வலுவகத்துக்கென எல்லைகள் நிர்ணயிக்கப்படாததால், மோட்டார் வாகன ஆய்வாளர் எவரும் நெய்வேலியை விரும்புவதில்லை. இதனால் தனியாக மோட்டார் வாகன ஆய்வாளர் பதவி நிரந்தரப்படுத்தப்படாமல் உள்ளது. மேலும் மந்தாரக்குப்பம் பகுதியில் வசிப்பவர்கள் விருத்தாசலம் எம்விஐ அலுவலகத்துக்கு செல்வதா அல்லது நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் உள்ள எம்விஐ அலுவலகத்துக்கு செல்வதா என குழம்பிய நிலையில் உள்ளனர். இதுபோன்று பல்வேறு பிரச்னைகள் உள்ள நிலையில் அலுவலகம் திடீரென ரகசியமாக இடமாற்றம் செய்யப்பட்டதால் பொதுமக்கள் மேலும் குழப்பத்துக்கு ஆளாகியுள்ளனர்.

இதுகுறித்து கடலூர் மண்டல போக்குவரத்து அலுவலர் (ஆர்டிஓ) ஜெயக்குமார் கூறியது: 

             "தற்போது ஆர்.செல்வம் எனும் ஆய்வாளர் கூடுதல் பொறுப்புடன் நியமிக்கப்பட்டுள்ளார்.மேலும் வாகனப் பதிவு செய்ய விரும்புவோர் அவர்களுக்கு எங்கு விருப்பம் இருக்கிறதோ அங்கு பதிவு செய்து கொள்ளட்டும்' என்றார் ஜெயக்குமார். மேலும் திடீர் இடமாற்றம் குறித்து எதுவும் கூற மறுத்துவிட்டார். பொதுமக்களின் பயன்பாட்டுக்காக உள்ள ஒரு அலுவலகம் பல்வேறு காரணங்களால் இடமாற்றம் செய்வது என்பது தவிர்க்க முடியாதது. இருப்பினும் இடமாற்றம் தொடர்பாக அலுவலகத்தோடு தொடர்புடையவர்கள் மற்றும் பயனாளிகளுக்கு தகுந்த சமயத்தில் அவசியம் தெரிவிக்கப்பட வேண்டும் என்பது கூட அறியாமல் செயல்படும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலர்களின் இது போன்ற செயல்கள் எதிர்காலத்திலும் தொடராமல் இருக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு.

Read more »

சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் ஜூலை 18-ம் தேதி பள்ளி வாகனங்கள் தணிக்கை

சிதம்பரம்:

           சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் உள்ள கல்லூரி, பள்ளி வாகனங்கள் ஜூலை 18-ம் தேதி சிதம்பரத்தில் அதிகாரிகளால் தணிக்கை செய்யப்படவுள்ளது. 

               பள்ளி வாகனங்களின் தகுதி குறித்து தணிக்கை செய்து அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டியுள்ளதால், ஜூலை 18-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிதம்பரம் அண்ணாமலைநகர் ஐயப்பன்கோயில் அருகே உள்ள சாலையில் போக்குவரத்துறை, காவல்துறை மற்றும் வருவாய்த் துறை  அதிகாரிகளால் நேரடி தணிக்கை செய்யப்படவுள்ளது.எனவே பள்ளி வாகனங்களின் அனுமதிச் சீட்டு, பதிவு சான்று, காப்புச்சான்று, புகைச்சான்று மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகிய பதிவுகளுடன் வாகனத்துடன் ஆய்வில் பங்கேற்க வேண்டும் என சிதம்பரம் மோட்டார் வாகன ஆய்வாளர் ஜி.ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

Read more »

இந்திய ரூபாய்க்கு அடையாளக் குறியீடு


            இந்திய ரூபாய்க்கு விரைவில் அடையாளக் குறியீடு வழங்கப்பட உள்ளது.இதற்காக தேவனகிரி ரா(Ra) மற்றும் ரோமன் ஆர்(R) ஆகிய இரண்டும் இணைந்த குறியீடு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.மும்பை ஐஐடி முதுகலை பட்டதாரி உதயகுமார் வடிவமைத்த இந்த புதிய குறியீட்டுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்ததாக தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்தார்.ரூபாய் குறியீட்டுக்காக வந்த 3000 வடிவங்களிலிருந்து குமார் வடிவமைத்த குறியீடு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அவருக்கு 2.5 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.

Read more »

மரவள்ளியில் பூச்சி தாக்குதல்

பண்ருட்டி:

             மரவள்ளிப் பயிர் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து குறிஞ்சிப்பாடி  தோட்டக்கலை உதவி இயக்குநர் ஜெ.மல்லிகா விளக்கியுள்ளார்.

குறிஞ்சிப்பாடி  தோட்டக்கலை உதவி இயக்குநர் ஜெ.மல்லிகா  வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

           அண்ணாகிராமம் வட்டார பகுதியில் மரவள்ளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது இதில் மாவுப்பூச்சி, வெள்ளை ஈ தாக்குதல் காரணமாக இலைகள் மஞ்சள் நிறமாகி பழுத்து காய்ந்து விடுகிறது. இது போன்ற அறிகுறி அதிக இடத்தில் தென்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்த டிரை அசோபாஸ் (2 மிலி), பாசலோன் (2 மிலி), புரேபினோபாஸ் 50 இசி (2 மிலி), டைமெத்தோயேட் 30 இசி (2 மிலி), குளோர்பைரிபாஸ் 20 இசி (4 மிலி) (அடைப்பு குறியில் உள்ளது ஒரு லிட்டர் தண்ணீருக்கு) இதில் ஏதேனும் ஒரு மருத்துடன், வேப்ப எண்ணெய் (5 மிலி) கலந்து இலையின் அடிப்பாகம் நனையும் வரை 10 நாள்கள் இடைவெளியில் இரு முறை தெளிக்க வேண்டும். மாவுப்பூச்சி மட்டும் தென்பட்டால் ஒரு லிட்டர் தண்ணீரில் வேப்ப எண்ணெய் 20 மிலி மற்றும் 5 மிலி சோப்பு கரைசல் கலந்து இலையின் அடிப்பாகம் நனையும்படி தெளிக்க வேண்டும்.

Read more »

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் மருத்துவப் படிப்புக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல்


         சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 2010-11 கல்வியாண்டுக்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

Read more »

பல்கலைக்கழகங்களில் தமிழில் பட்டமளிப்பு விழா: அமைச்சர் க.பொன்முடி


          தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பட்டமளிப்பு விழா நடைமுறைகள் இனி தமிழ் வழியில் பின்பற்றப்படும் என்று தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார். 
 
கோவையில்  மிழக உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி வியாழக்கிழமை கூறியது: 
 
            பல்கலைக்கழகங்களில் இதுவரை ஆங்கிலத்தின்தான் பட்டமளிப்பு விழா நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வந்தன. தமிழில் இந்த நடைமுறைகள் இருப்பதே பொருத்தமாக இருக்கும். நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஏற்கெனவே தமிழ் வழியில் பட்டமளிப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. தற்போது வேளாண் பல்கலை.யிலும் அதைத் தொடர்ந்து பாரதியார் பல்கலை.யிலும் இதேநடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது. அனைத்துப் பல்கலை.களிலும் பட்டமளிப்பு நடைமுறைகள் தமிழில் இருக்கும். பொறியியல் கல்வியில் இந்த ஆண்டில் தமிழ் வழிக் கல்வி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக இயந்திரவியல், கட்டடவியல் துறைகளில் மட்டுமே தமிழ் வழிக் கல்வி தொடங்கப்பட்டுள்ளது. இதில் சேருவதற்கு மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர். இதுவரை 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழ் வழியில் சேர்ந்துள்ளனர். வரும் ஆண்டுகளில் பிற பொறியியல் பாடங்களிலும் தமிழ் வழிக் கல்வி அறிமுகம் செய்யப்படும். பொறியியல் மாணவர் சேர்க்கை கவுன்சலிங்கில் போலிச் சான்றிதழ் சமர்ப்பித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 45 பேர் அவ்வாறு சான்றிதழ்களைச் சமர்ப்பித்துள்ளனர். ஆகவே, சான்றிதழ்கள் சரிப்பார்ப்பு தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

Read more »

சுயநிதி எம்.பி.பி.எஸ். முதல் தலைமுறை மாணவர்களுக்கு ரூ.1.25 லட்சம் சலுகை

                சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்தில் சேரும் முதல் தலைமுறை மாணவர்களுக்கு ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.1.25 லட்சத்தை தள்ளுபடி செய்யுமாறு நீதிபதி பாலசுப்பிரமணியன் குழு உத்தரவிட்டுள்ளது.  

              தமிழகத்தில் உள்ள சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு ஆண்டு எம்.பி.பி.எஸ். கட்டணம் ரூ.2.5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் ஏற்றுக் கொள்ளப்பட்ட 17,610 விண்ணப்பங்களில், குடும்பத்தில் முதல் பட்டதாரிகள் (முதல் தலைமுறை) சலுகையைப் பெறும் வகையில் விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 6,440. இத்தகையோர் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்தில் சேரும் நிலையில், ஆண்டுக் கட்டணம் ரூ.2.5 லட்சத்தில் ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.1.25 லட்சத்தைச் செலுத்தத் தேவையில்லை. ஆக, எம்.பி.பி.எஸ். படிப்புக்கு ஆண்டுக் கட்டணமாக ரூ.1.25 லட்சம் மட்டும் முதல் தலைமுறை மாணவர்கள் செலுத்தினால் போதும். இத்தகைய மாணவர்களுக்கு அளிக்கப்படும் ரூ.1.25 லட்சம் சலுகையை, சுயநிதி கல்லூரி நிர்வாகங்களுக்கு தமிழக அரசு அளித்து விடும்.பி.டி.எஸ். படிப்புக்கு ரூ.40 ஆயிரம் சலுகை: சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடத்தில் முதல் தலைமுறை மாணவர்கள் சேரும் நிலையில், ஆண்டுக் கட்டணம் ரூ.82 ஆயிரத்துக்குப் பதிலாக ரூ.42 ஆயிரம் மட்டும் செலுத்தினால் போதும்.

Read more »

Government employees observe fast


Pressing rights: Members of Tamil Nadu Government Employees' Association observing a fast in front of the Cuddalore Collectrate on Thursday. 
 
CUDDALORE: 

           Members of the Tamil Nadu Government Employees' Association observed a fast in front of the Collectorate here on Thursday, urging the government to give up the outsourcing process. It also opposed the re-induction of retired employees on a contract basis and appointing people on a consolidated pay.

              The association noted that the large number of vacancies existing in government departments ought to be filled either through employment offices or Tamil Nadu Public Service Commission examinations. The government had abandoned the practice of having consultations with representatives of the government employees and teachers' associations before implementing the Pay Commission's recommendations, the members said. It was eight years since such a healthy approach was jettisoned, they added. Anomalies in the pay scale for technical hands continued in the seventh pay revision too and these ought to be removed through consultation with the respective section of employees.

             The association urged the government to declare municipal employees and temple staff serving under the Hindu Religious and Charitable Endowments Department as government employees and accordingly disburse salary through the treasury. Health insurance The association also wanted the government to take over the health insurance scheme for the employees from the Star Health and Allied Insurance Company or entrust it to a public sector undertaking. It opined that since the conduct rules were so designed “to stifle the democratic actions of the employees,” they should be scrapped and the right to strike given legal sanction.

Read more »

உளுந்தூர்பேட்டை அடுத்த பரிக்கல் கோவில் உண்டியல்கள் திறப்பு காணிக்கையில் 100 ரூபாய் கள்ள நோட்டு


உளுந்தூர்பேட்டை : 

            பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடந்தது.  

             உளுந்தூர்பேட்டை அடுத்த பரிக்கல் கிராமத்தில் உள்ள லஷ்மி நரசிம்மர் கோவிலில் உள்ள 3 உண்டியல்கள் நேற்று காலை திறக்கப்பட்டது. குறிஞ்சிப்பாடியை சேர்ந்த ஆன்மிக அன்பர்கள் உண்டியல் காணிக்கையை எண்ணினர். அப்போது 100 ரூபாய் (எண்: டிஎல்ஓ 738148) கள்ளநோட்டு ஒன்றும், ஸாம்பியா நாட்டின் குவாச்சா நோட்டும், சிங்கப்பூர், அமெரிக்க நாட்டின் டாலர் நோட்டுகளும் இருந்தன. உண்டியலில் மொத்தம் 6 லட்சத்து 68 ஆயிரத்து 307 ரூபாய் இருந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் 29ம் தேதி உண்டியல் எண்ணும் போது 6 லட்சத்து 34 ஆயிரத்து 100 ரூபாய் இருந்தது. கோவில் ஆய்வாளர் சுரேஷ், செயல்அலுவலர் பத்ராசலம் உடனிருந்தனர். 

              உண்டியல் திருட்டில் நடவடிக்கை இல்லை கடந்த 9ம் தேதி இரவு 10 மணிக்கு இதே ஊரைச்சேர்ந்த இரு சிறுவர்கள் கோவிலுக்குள் புகுந்து சூயிங்கம் மற்றும் காந்தம் மூலம் உண்டியலில் பணம் திருடியபோது ஊர் மக்கள் கையும் களவுமாக பிடித்து திருநாவலூர் போலீசில் ஒப்படைத்தனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் கூறினர். இது குறித்து திருநாவலூர் போலீசாரிடம் கேட்டபோது திருட்டு சம்மந்தமான புகார் எங்களுக்கு வரவில்லை என்றனர். கோவில் செயல் அலுவலர் பத்ராசலம் புகார் கொடுத்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறார்.

Read more »

விருத்தாசலம் அருகே மின்னல் தாக்கி இறந்த மாணவி குடும்பத்திற்கு அரசு நிவாரண உதவி

விருத்தாசலம் :

             மின்னல் தாக்கி இறந்த மாணவியின் குடும்பத் திற்கு அரசு சார்பில் நிவாரண உதவித் தொகை வழங்கப்பட்டது.

              விருத்தாசலம் அடுத்த தொரவளூரை சேர்ந்த ரவிசந்திரன் மகள் ரம்யா (15). பத்தாம் வகுப்பு படித்து வந்த இவர் கடந்த மே மாதம் 30ம் தேதி பெய்த மழையில் மின்னல் தாக்கி இறந்தார். இவரது குடும்பத்திற்கு அரசின் நிவாரண உதவி தொகையாக ஒரு லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்டது. அதற்கான காசோலையை மாணவி ரம்யாவின் பெற்றோரிடம் தாசில்தார் ஜெயராமன் நேற்று வழங்கினார். வருவாய் ஆய்வாளர் சுகுமார், வி.ஏ.ஓ., செல்வராசு, கிராம உதவியாளர்கள் வெங்கடேசன், அன்பழகன் உடனிருந்தனர்.

Read more »

கடலூரில் உலக போதை எதிர்ப்பு தின விழிப்புணர்வு போட்டிகள்

கடலூர் : 

             உலக போதை எதிர்ப்பு தினத்தையொட்டி செஞ்சுருள் சங்கம் சார்பில் கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் நடந்த பல்வேறு விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப் பட்டது.

              உலக போதை எதிர்ப்பு தினத்தையொட்டி மாவட்டசெஞ்சுருள் சங்கம் சார்பில் கடலூர் செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு பேச்சு, கட்டுரை, ஓவியம், தனி நடிப்பு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. இதன் பரிசளிப்பு விழாவிற்கு கல்லூரி முதல்வர் ரட்சகர் தலைமை தாங்கினார். செஞ்சுருள் சங்க அலுவலர் ஜான்தாமஸ் வரவேற்றார். கடலூர் அரசு தலைமை மருத்துவமனை காசநோய் பிரிவு இணை இயக்குனர் மனோகரன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.செஞ்சுருள் சங்க மாவட்ட மேலாளர் கதிரவன், கணிதத்துறை தலைவர் ஜான் ஆரோக்கியராஜ், சென்ட்ரல் ரோட்டரி சங்க உறுப்பினர் சண்முகம் பங்கேற்றனர்.

Read more »

வீராணம் திட்ட பாலத்தின் கீழ் மெகா பள்ளங்கள் மூடப்பட்டன


சேத்தியாத்தோப்பு : 

              சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் புதிய வீராணம் திட்ட பாலத்தின் கீழ் தோண்டிய பள்ளங்கள் தினமலர் செய்தி எதிரொலியால் சமப்படுத்தப்பட்டு வருகிறது.

             தமிழகத்தின் தலைநகரான சென்னை மக்களின் குடிநீர் தேவைக் காக உருவாக்கப்பட்ட புதிய வீராணம் திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் உள்ள வீராணம் ஏரியில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் பில்லர் அமைத்து அதன் மீது மெகா சைஸ் குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.வெள்ளாற்றில் அரசு அமைத் துள்ள மணல் குவாரியில் பாலத்தின் அருகிலேயே மணல் எடுப்பதால் பில்லர்கள் பலவீனமடைந்து தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டது. 

             இதுகுறித்து கடந்த 12ம் தேதி தினமலரில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் புதிய வீராணம் திட்ட பாலத்தையொட்டி மணல் எடுத்ததால் ஏற்பட்ட மெகா பள்ளங்களையும், பாலத்திற்கு கிழக்குப் பகுதியில் 300 மீட்டர் தூரத்திற்கு சமப்படுத்தும் பணியை பொதுப்பணித்துறையினர் மேற்கொண்டுள்ளனர். தற்போது மணல் எடுக்கும் பகுதிக்கு அருகில் மிகப்பெரிய மண்மேடு உள்ளது. வெள்ள காலங்களில் கூட 35 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்தால் தான் அந்த மண்மேடு மூழ்கும். இதனை கரைப்பதன் மூலம் சேத்தியாத்தோப்பு பகுதியில் வெள்ள பாதிப்பை தடுக்க முடியும் என்பதால் அந்த மண் மேட்டை அகற்றி, அங்கிருந்து மணல் எடுக்க மாவட்ட நிர்வாகம் பிறப்பித்த உத்தரவை பொதுப்பணித்துறையினர் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.

Read more »

வைகோ பழ நெடுமாறன் கடலூர் சிறையில் அடைப்பு

கடலூர் : 

            சென்னையில் கைது செய்யப்பட்ட வைகோ, பழ நெடுமாறன் நேற்று அதிகாலை கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

              சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை மூடக்கோரியும், இலங்கைத் தமிழர்கள் கொடுமைப்படுத்தப்படுவதைக் கண்டித்தும் சென்னையில் வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வைகோ, பழ நெடுமாறன், நடராஜன் உள்ளிட்ட 159 பேரை கைது செய்து, புழல் சிறைக்கு கொண்டு சென்றனர். சிறை அதிகாரிகளின் உத்தரவின் பேரில், நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4.05 மணிக்கு கடலூர் மத்திய சிறைக்கு இவர் களை கொண்டு வந்தனர். அவர்களை சிறை அதிகாரிகள் சோதனை செய்து, சிறையில் அடைக்க காலை 8 மணி ஆனது. தகவலறிந்த ம.தி.மு.க., நிர்வாகிகள், கடலூர் மத்திய சிறைக்குச் சென்று வைகோவை சந்தித்துப் பேசினர்.

Read more »

பண்ருட்டி வீரட்டானேஸ்வரர் கோவில் திருப்பணிஅறநிலையத்துறை உதவி ஆணையர் ஆய்வு

பண்ருட்டி : 

              கோர்ட் தடை உத்தரவினால் பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஓதுவார் உள் ளிட்ட காலி பணியிடங்களை நிரப்ப முடியவில்லை என அறநிலையத்துறை உதவி ஆணையர் கூறினார்.

பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் திருப்பணிகளை ஆய்வு செய்த இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெகன்நாதன்  கூறியதாவது: 

                 திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் திருப்பணி 4 ஆண்டிற்கு முன் துவங்கப்பட்டது. திருப்பணியை அரசு மானியம் 8.5 லட்சம் மற்றும் உபயதாரர் சார்பில் 26.5 லட்சம் என மொத்தம் 35 லட்சம் ரூபாய் மதிப்பில் செய்ய திட்டமிடப்பட்டது. இதில் அரசு சார்பிலான பணிகள் முழுவதும் முடிவடைந்துள்ளது. உபயதாரர் பணிகளில் 50 சதவீதம் நடைபெற வேண்டியுள்ளது. 9 லட்சம் ரூபாய் மதிப்பில் தேர் செய்யும் பணி மேற்கொண்டு இரண்டாண்டு ஆகியும் பணியை முடிக்காமல் தாமதப்படுத்தி வருவதால் ஒப்பந் தத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

              கோவில் நிர்வாக சீர்கேடுகள் குறித்து இறைபணி மன்றத்தினர் போராட்டம் நடைபெறுவது குறித்து வருவாய்துறையினர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும். தற்போது மாவட்டத்தில் மொத்தம் உள்ள 23 செயல் அலுவலர் பணியிடங்களில் 15 இடங்கள் காலியாக உள்ளதால் தற்போது இக்கோவிலுக்கு தனியாக செயல் அலுவலர் நியமிக்க முடியாது. கோர்ட் தடை உத்தரவால் ஓதுவார், பரிச்சாரகர், சுயம்பாகர் உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்ப முடியவில்லை என கூறினார்.

Read more »

இந்திய மருத்துவ சங்கம் கடலூரில் ஆர்ப்பாட்டம்

கடலூர் : 

               மத்திய அரசின் மூன்றரை ஆண்டு மருத்துவப் படிப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மருத்து சங்கம் சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

                  மத்திய அரசின் மூன்றரை ஆண்டு மருத்துவப் படிப்பு திட்டம் மற்றும் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டுள்ள மருத்துவம் சார்ந்த நிறுவனங்கள் பதிவு மற்றும் ஒழுங்குமுறைச் சட்டம், இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்தது ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மருத்துவ சங்கம் சார்பில் கடலூர் கிருஷ்ணா மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்திய மருத்துவ சங்க கடலூர் கிளைத் தலைவர் ஸ்டான்லி சந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். துணை செயலாளர் இளந்திரையன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் டாக்டர்கள் கிருஷ்ணமூர்த்தி, வேலுமணி, நடராஜன், சாமிக்கண்ணு, ராஜேந்திரன், கண்ணன், நமச்சிவாயம், பிரஜன்ட் மேரி, வனிதா, முகுந்தன், கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.டாக்டர் பாண்டியன் நன்றி கூறினார்.

Read more »

கல்விக்காக 75 ஆயிரம் கோடி கடன் வழங்கி மத்திய அரசு சாதனை: வேப்பூரில் எம்.பி., அழகிரி பேச்சு

சிறுபாக்கம் : 

              கல்விக்காக 75 ஆயிரம் கோடி கடன் வழங்கி மத்திய அரசு சாதனை படைத்துள்ளதாக எம்.பி., அழகிரி பேசினார். வேப்பூர் பஸ் நிலையத்தில் காமராஜர் 108வது பிறந்த நாள் விழா நடந்தது. காங்., மாவட்ட துணைத் தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் நீதிராஜன் முன்னிலை வகித்தார். 

பஸ் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்ட கொடிக்கம்பம் மற் றும் கல்வெட்டினை திறந்து வைத்து கடலூர் எம்.பி.,அழகிரி பேசியதாவது:

               கடந்த காலங்களில் தமிழகத்தில் பள்ளிகளில் மாணவர்கள் வருகை குறைவாக இருப்பதை அறிந்த அப்போதைய முதல்வர் காமராஜர் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்து புரட்சி செய்தார். இதனால் ஏழைகள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பினர். அவரது ஆட்சியில் நான் கில் ஒரு பங்கு நிதியை கல்விக்காக ஒதுக்கீடு செய்தார்.

                இன்று விவசாயிகளுக்கு 75 ஆயிரம் கோடி ரூபாய் கடன்களை காங்., தலைமையிலான மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது. கடந்த ஆண்டு கடலூர் மாவட்டத்தில் பொதுத் துறை வங்கிகள் மூலம் 42 கோடி ரூபாய் கல்விக் கடன் வழங்கப்பட்டது. இந்தியாவில் கல்விக்காக 75 ஆயிரம் கோடி கடன் வழங்கி மன்மோகன்சிங் அரசு சாதனை படைத் துள்ளது.ஏழை மக்கள் வறுமையில் வாடுவதை நினைத்து தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தினை சட்டமாக இயற்றியுள்ளது. இதனால் வயதானவர்களும் வாழ்வில் ஏற்றம் பெற்றுள்ளனர்.

                  இவ்வாறு எம்.பி., அழகிரி பேசினார். விழாவில் மாவட்ட இளைஞர் காங்., வனிதா, ராகுல்காந்தி பேரவை தலைவர் கிருஷ்ணமூர்த்தி, காங்., நிர்வாகிகள் வேதமாணிக்கம், மதார்ஷா உட் பட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

கடலூரில் காமராஜர் பிறந்த நாள் விழா அமைச்சர் மாலை அணிவிப்பு

கடலூர் : 

             காமராஜரின் 108வது பிறந்த நாளையொட்டி கடலூரில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் பன்னீர்செல்வம் மாலை அணிவித்தார்.

               காமராஜரின் 108வது பிறந்த நாளையொட்டி மாவட்ட தி.மு.க., சார்பில் கடலூரில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் பன்னீர்செல்வம் மாலை அணிவித்தார். எம்.எல்.ஏ., அய்யப்பன், சேர்மன் தங்கராசு உட்பட பலர் உடனிருந்தனர். காங்., சார்பில் இளைஞர் காங்., முன்னாள் மாவட்ட தலைவர் வக்கீல் சந்திரசேகரன் தலைமையில் லோக்சபா செயலாளர் தமிழ்செல்வி, தங்கவேலு, வினோத் சீனிவாசன் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர். மாவட்ட செயலாள் சேகர், ஒன்றிய கவுன்சிலர் அழகப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.

                காங்., கட்சியின் சிதம்பரம் அணி சார்பில் எம்.பி.,யின் செய்தி தொடர்பாளர் குமார் தலைமையில் ராகுல் பேரவை மாநிலத் தலைவர் சிவக்குமார், இளைஞர் காங்.,தலைவர் ராமராஜ், மாவட்ட செயலாளர் சரவணன், முருகன் காமராஜர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்தனர். கடலூர் நகர காங்., சார்பில் நகர தலைவர் ரகுபதி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் நெடுஞ்செழியன் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் இளைஞர் காங்., துணைத் தலைவர் ஞானம், பத்மநாபன், மாவட்ட செயலாளர் சுப்ரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Read more »

திட்டக்குடி தாலுகாவிலுள்ள விடுதிகளில் காலி இடங்கள் புதிய மாணவர்கள் சேர்க்கை

திட்டக்குடி : 

               திட்டக்குடி தாலுகாவிலுள்ள விடுதிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு நேற்று மாலை தேர்வுக் குழு மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

                திட்டக்குடி தாலுக்காவிலுள்ள கீழ்ச்செருவாய், தொழுதூர், புடையூர், பெண்ணாடம், சிறுபாக்கம், சேப்பாக்கம் உள்ளிட்ட பத்து அரசு மாணவர் விடுதிகள் உள்ளது. அதில் காலியாக உள்ள இடங்களில் புதிதாக மாணவர்களை சேர்ப்பதற்கான தேர்வுக்குழு கூட்டம் நேற்று மாலை நடந்தது. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் கணபதி தலைமை தாங்கினார். தனி தாசில்தார் அன்பழகன் முன்னிலை வகித்தார். தாசில்தார் கண்ணன், தேர்வுக்குழு உறுப்பினர்கள் பரமகுரு, தேவேந்திரன், விடுதி காப்பாளர்கள் புதிய மாணவர்களை தேர்வு செய்தனர். இதில் பத்து விடுதிகளிலும் 230 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

Read more »

பண்ருட்டி அருகே விவசாயியிடம் செக் மோசடி கேரள வியாபாரி சிறையிலடைப்பு

பண்ருட்டி : 

             செக் மோசடி வழக்கில் கேரளாவை சேர்ந்த முந்திரி வியாபாரி சிறையில் அடைக்கப்பட்டார்.

              பண்ருட்டி அடுத்த சாத்திபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஏசுதாஸ். முந்திரி விவசாயியான இவரிடம் கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த முந்திரி வியாபாரி அப்துல்ரகுமான் (55) முந்திரி வாங்கி வியாபாரம் செய்து வந்தார். ஏசுதாசிடம் வாங்கிய முந்திரிக்காக அப்துல்ரகுமான் 2 லட்சத்திற்கான காசோலை வழங்கினார்.

              அதனை ஏசுதாஸ் வங்கியில் செலுத்தியபோது, அப்துல்ரகுமான் கணக்கில் பணம் இல்லாததால் திரும்பியது. பலமுறை ஏசுதாஸ் கேட்டும் பணத்தை தரவில்லை. அதனைத் தொடர்ந் ஏசுதாஸ் பண்ருட்டி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கடந்த 2007ம் ஆண்டு "செக்' மோசடி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ஈஸ்வரன், "செக்' மோசடி செய்த அப்துல்ரகுமானை கோர்ட்டில் ஆஜர் படுத்த கேரள மாநில போலீசாருக்கு உத்தரவிட்டார். கேரள மாநிலம் கிளகல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அலெக்சாண்டர் தங்கச்சன், ஏட்டுகள் அனில்குமார், விஜயகுமார் ஆகியோர் முந்திரி வியாபாரி அப்துல்ரகுமானை கைது செய்து நேற்று பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ஈஸ்வரன், முந்திரி வியாபாரி அப்துல்ரகுமானை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

Read more »

கடலூர் அருகே திருமணம் நிச்சயித்த வாலிபர் அரசு பஸ் மோதி பலி

கடலூர் : 
      
            கடலூர் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபர் அரசு பஸ் மோதி இறந்தார். 

                கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அடுத்த புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் காளியப்பன் மகன் காளிதாஸ் (25). இவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில், காளிதாஸ் நேற்று காலை புதுச்சேரி சென்று புதிய மோட்டார் பைக் வாங்கிக் கொண்டு, மாலை வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.இரவு 7.30 மணி அளவில் கடலூர் அடுத்த ஆலப்பாக்கம் அருகே சென்றபோது, பின்னால் புதுச்சேரியில் இருந்து காரைக்கால் சென்ற புதுச்சேரி அரசு பஸ் மோதியது. அதில் படுகாயமடைந்த காளிதாஸ் அதே இடத்தில் இறந்தார். இது குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக் கின்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior