உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 22, 2009

சோழவல்லி ஆழ்துளை கிணறு பயன்பாடின்றி பாழானது

நெல்லிக்குப்பம்:

                            சோழவல்லி சுடுகாட்டில் போடப்பட்ட ஆழ்துளை கிணறு பயன்படுத்தாமலே பாழானது. நெல்லிக்குப்பம் நகராட்சி வான்பாக்கம் சாலையில் சோழவல்லி சுடுகாடு உள்ளது. நகராட்சியின் பெரும் பான் மையான மக்கள் இந்த சுடுகாட்டை பயன்படுத்தி வருகின்றனர். இங்கு தண் ணீர் வசதி இல்லாததால் இறுதி சடங்கு செய்ய வருபவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். மக்கள் வசதிக்காக அங்கு பல லட்சம் மதிப்பில் குளியலறை, தண்ணீருக்காக ஆழ்துளை கிணறும் அமைத்தனர். ஆனால் மின்மோட்டார் வேலை செய்யவில்லை. ஓராண்டுக்கு மேலாகியும் மின்மோட்டார் பொருத் தாமல்  பயனற்று இருந்தது. தற்போது ஆழ்துளை குழாயின் பைப்புகளை உடைத்து குழாய் முழுவதும் மண், கற்களை போட்டனர். இதனால் ஆழ்துளை கிணறு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குளியலறை பகுதியும் பாழடைந்து வருகிறது. பணி முடிந்தால் ஒப் பந்ததாரருக்கு காசோலை வழங்கிவிட்டால் தங்கள் வேலை முடிந்துவிட்டதாக அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். செய்து முடிக்கப்பட்ட பணி முறையாக உள்ளதா பயன்படுகிறதா என அதிகாரிகள் கண்காணித்தால்  மக்கள் வரிப்பணம் பாழாவதை தடுக்க முடியும்.

Read more »

இலவச 'டிவி', காஸ் வழங்காததால் இரு கிராமங்களில் சாலை மறியல்

பண்ருட்டி:

                         இலவச "டிவி', காஸ் வழங்காததை கண்டித்து இரு இடங்களில் நடந்த சாலை மறியலால் கட லூர்- பண்ருட்டி சாலை யில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. பண்ருட்டி அடுத்த  கீழ்கவரப்பட்டு ஊராட்சி யில் ஆண்டிப்பாளையம், புதுப்பாளையம், வடக்கு பாளையம், சாலை நகர் கிராமங்கள் உள்ளன. நேற்று முன்தினம் ஆண் டிப்பாளையம் பகுதியில் உள்ள ஆயிரம் வீடுகளுக்கு இலவச காஸ் அடுப்பு வழங்கப்பட்டது.

                   இதனை அறிந்து ஆவேசமடைந்த கீழ்கவரப் பட்டு, புதுப்பாளையம் கிராம மக்கள் தங்கள் பகுதிகளுக்கு "டிவி' வழங்காமல் ஊராட்சி தலைவர் சக்கரத்தாழ்வார் தனது பகுதிக்கு மற்றும் "டிவி' மற்றும் காஸ் அடுப்பு வழங்கியுள்ளதாக குற்றம் சாட்டி நேற்று காலை 10.30 மணியளவில்  கடலூர்-பண்ருட்டி சாலையில் அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய பள்ளி எதிரில் கீழ்கவரப்பட்டு பகுதி மக்கள் 100 பேர் மறியலில் ஈடுபட்டனர்.
இதுபோல் புதுப்பாளையம் பகுதி மக்கள் 100 பேர் கடலூர்-மாளிகைமேடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடலூர்-பண்ருட்டி சாலை,  விழுப்புரம்-கடலூர் சாலையில் போக்குவரத்து பாதித்தது. தகவலறிந்த பண்ருட்டி தாசில்தார் பாபு , இன்ஸ் பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட் டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப் போது இலவச காஸ் இணைப்பு வழங்க குடும் பத்திற்கு 400 ரூபாய் கேட்பதாக குற்றம் சாட்டினர். மேலும், தங்கள் பகுதிக்கு உடனடியாக "டிவி', காஸ் அடுப்பு வழங்க வேண்டும் என்றனர். இலவச "டிவி'  மற்றும் காஸ் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார்  உறுதியளித் தார். அதனையேற்று 11.30 மணிக்கு மறியல் விளக்கிக் கொள்ளப்பட்டது.

Read more »

நூறாண்டை கடந்த அரசு பள்ளி இடிந்து விழும் அபாயம்! : விபரீதம் நடக்கும் முன் நடவடிக்கை தேவை

ஸ்ரீமுஷ்ணம்:

                                 இப்ப விழுமோ, எப்ப விழுமோ என மாணவர்களையும், ஆசிரியர்களையும் அச்சுறுத்தி வரும் தனியார் கட்டடத் தில் இயங்கி வரும் நூற்றாண்டை கடந்த ஸ்ரீமுஷ்ணம் அரசு நடுநிலைப் பள்ளியை சீரமைக்க  மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

                       ஸ்ரீமுஷ்ணத்தில் கடந்த 1892ம் ஆண்டு  ஆரம்ப பள்ளியாக துவங் கப்பட்ட ஊராட்சி ஒன்றிய பள்ளி தற்போது நடுநிலைப்பள்ளியாக இயங்கி வருகிறது. தனியார் கட்டடத்தில் இயங்கி வரும் இப்பள்ளியில் சேத்தியாத்தோப்பு, கருவேப்பிலங்குறிச்சி, கம்மாபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற் பட்ட கிராம மக்கள் படித்தனர். நாளடைவில் சுற்றுப்புற பகுதிகளில் பள்ளிகள் துவங்கியதால் தற்போது ஸ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்த நாற்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் மட்டும் படித்து வருகின்றனர். காட்டுமன்னார்கோவில் தாலுகாவிலேயே அதிக மாணவர்கள் படிக்கும் அரசு பள்ளி என்ற பெருமை பெற்ற இப்பள்ளியில் தற்போது 480 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
சுமார் 65 ஆண்டுகளுக்கு மேலாக தனியார் கட்டடத்தில் இயங்கி வரும் இப்பள்ளியின் பிரதான கட்டடத்தில் 6, 7, 8 வகுப்புகள் நடந்து வருகிறது. கட்டடத்தின் மேற்கூரை கம்பிகள் அனைத்தும் துருப்பிடித்து ஸ்திரத்தன்மை இழந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேல் தளத்தை தாங்கி நிற்கும் பக்கவாட்டு சுவர்களும் நீர் கசிந்து ஆபத்தான நிலையில் உள்ளது. சில தினங்களுக்கு முன் பெய்த மழையால் பக்கவாட்டு சுவர்களில் இருந்து நீர் கசிந்து வகுப்பறையில் ஓடியது. இதனால் வகுப்புகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கனமழை பெய் தால் அனைத்து மாணவர்களையும் பள்ளியின் பின்புறம் கட்டியுள்ள புதிய கட்டடத்தில் அமர செய்வதால் வகுப்புகள் நடத்த முடிவதில்லை. கடந்த ஏழாண்டாக கட்டடத் தின் உரிமையாளருக்கு வாடகை ஏதும் தராத காரணத்தால்  தனியார் நபரும் பள்ளியை சீரமைக்காமல் உள்ளார். இதனால் எப்போது வேண்டுமானாலும் கட்டடம் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதுபற்றிய செய்திகள் நாளிதழ்களில் வரும்போது பள்ளியில் பணி செய்யும் ஆசிரியர்களிடம் கட்டடத்தின் நிலை குறித்து அறிக்கை பெறுவதாடு சரி. பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டுவது குறித்தோ, வேறு இடத்திற்கு பள்ளியை மாற்றுவது குறித்தோ எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

                         இதனால் பள்ளியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டி ஸ்ரீமுஷ்ணத்திற்கு வந்த அமைச்சர் பன்னீர்செல்வத்திடம் இப்பள்ளி ஆசிரியர்கள் கொடுத்த மனுவும், மாவட்ட நிர்வாகத்திற்கும் பலமுறை அனுப்பிய மனுக்களும் பயனற்று போனது. நாளுக்கு நாள் கட்டடம் சேதமடைந்து வருவதால் பள்ளியில் ஆசிரியர்கள் மரண பயத்துடன் பாடம் நடத்தி வருகின்றனர். கும்பகோணம் தீ விபத்தில் பல மாணவர்கள் இறப்பிற்கு பிறகு கண் விழித்த அரசு அதன் பின்னர் கூரை கொட்டகையில் வகுப்புகளை நடத்த தடை விதித்தது. ஒரு பள்ளி வேன் விபத்தில் சிக்கி மாணவரின் உயிர் இழப்பிற்கு பின்னர் அனைத்து பள்ளிகளின் வாகனங்களையும் ஆய்வு செய்து வருகிறது.

                      ஒரு பள்ளியில் விபத்து ஏற்பட்டால் உடனே அனைத்து பள்ளிகளுக்கும் நெருக்கடி கொடுக்கும் அரசு நிர்வாகம், பாதுகாப்பற்ற நிலையில் இயங்கி வரும் அரசுப் பள்ளி கட்டடம் குறித்து தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவது வேதனையளிக்கிறது. இந்த பள்ளியில் அதுபோன்று விபரீதம் ஏற்படுவதற்கு முன்பாக மாவட்ட நிர்வாகம் விழித்துக் கொண்டு இடிந்து விழும் நிலையில், தனியார் கட்டடத்தில் இயங்கி வரும் பள்ளியை சீரமைக்கவோ அல்லது பள்ளியை வேறு இடத்திற்கு மாற்ற  நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் வரும் கல்வியாண்டில் இப்பகுதி மக்கள் அரசு பள்ளிகளை புறக்கணிக்க திட்டமிட்டுள்ளனர்.

Read more »

அமெரிக்காவிலிருந்து வந்த பார்சலால் கடலூரில் பரபரப்பு

கடலூர்:

                     கடலூர் அண்ணா விளையாட்டரங்கு பயிற்சியாளருக்கு அமெரிக்காவிலிருந்து வந்த மர்ம பார்சலால் பரபரப்பு ஏற்பட்டது,

                      கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் இறகுப்பந்து பயிற்சியாளர் வெங்கடேஷ். இவருக்கு நேற்று காலை அமெரிக்கா விலாசமிட்ட சிறிய அளவிலான அட்டை பெட்டி பார்சல் வந்தது. தனக்கு அமெரிக்காவில் தெரிந்தவர்கள் யாரும் இல்லை என்பதால், பார்சலை பிரிக்காமல் மாவட்ட விளையாட்டு அலுவலர் பத்மநாபனிடம் ஒப்படைத்தார். பார்சலின் மேல் "ரிலீஜியஸ் மெட்டீரியல்' என தலைப்பிட்டு இருந்ததால் ஏதேனும் வெடிகுண்டு பார்சலாக இருக்குமோ என அஞ்சி பார்சலை வெட்டவெளியில் தனியாக வைத்து விட்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். கடலூர் புதுநகர் சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ பார்சலை பிரித்து பார்த்த போது உள்ளே இந்து மத சம்பந்தமான ஆன்மிக புத்தகங்கள் இருந்ததை கண்டு பெருமூச்சு விட்டனர்.

Read more »

கடலூரில் விஷக் காய்ச்சல் பரவுகிறது : மருத்துவமனையில் கூட்டம் அதிகரிப்பு

கடலூர்: 

                    கடலூரில் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் விஷக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருபவர்களின் எண் ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.
கடலூரில் கடந்த ஒருவாரம் பெய்த தொடர் கன மழை காரணமாக பல பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. குறிப்பாக பாதாள சாக்கடைக்காக சாலைகளில் ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டதால் மழை நீர் ஓட வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனை வெளியேற் றவோ, கிருமி நாசினியான "பிளிச்சிங்' பவுடர் தூவ நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. போதாக்குறைக்கு நகரில் பன்றிகள் சுற்றித் திரிகின்றன.
 

              இதன் காரணமாக தேங் கிய நீரில் கொசு உற்பத்தி பல மடங்கு அதிகரித்துள்ளதால் நகரில் விஷ மற்றும் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சராசரியாக 500 பேர் புறநோயாளியாக சிகிச்சை பெறுவது வழக்கம். ஆனால் கடந்த ஒரு வாரமாக தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வருகின்றனர். 

             நேற்று காலையிலேயே விஷ மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஆயிரத் திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பாக காணப்பட்டது. கூட் டத்தை கட்டுப்படுத்த முடியாமல் மருத்துவமனை ஊழியர்கள் அல்லாடினர்.
இதேபோன்று நகரில் பாதாள சாக்கடை திட்டத் திற்காக தோண்டிய பள் ளங்களில் விழுந்து காயமடைந்து சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் தினமும் அதிகரித்து வருவதாக மருத்துவமனை ஊழியர்கள் கூறுகின்றனர்.

Read more »

தொற்று நோய் அபாயத்தில் மாணவர்கள் : வார்டு புயலால் கடலூரில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நிறுத்தம்

கடலூர்:

                            வார்டு புயல் காரணமாக கடலூரில் நடைபெற்று வந்த பாதாள சாக்கடைத்திட்டப்பணிகள்  நிறைவேற்றுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. கடலூரில் நகரில் பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள்  காலக் கெடு முடிந்து ஓராண்டாகியும் இதுவரை முடிக்கவில்லை. இதனால் கடலூரில் சின்னபின்னமான சாலைகள் மழையில் சகதிகளாகிவிட் டன. பல்வேறு நலச்சங்கங்கள் அரசியல் கட்சிகள் போராடியும் விடிவு காலம் பிறக்கவில்லை. கலெக் டர் சீத்தாராமன் இந்த பிரச்னையை கையில் எடுத்து அன்றாடம் நடந்து வரும் பணிகள்  குறித்து அவ்வப் போது தகவல் கூறுமாறு பணித்தார். ஆனால் ஒரு சில நாட்களே அவற்றை அதிகாரிகள் கடைபிடித்தனர். மேலும் பள்ளி மாணவர்கள், பொது மக்கள் வாகனம் ஓட்டுவதற்கு குண்டும் குழியுமான சாலைகளை அவ்வப் போது சமன் செய்து கொடுத்து வந்தனர். இந்நிலையில் வார்டு புயல் காரணமாக கடந்த ஒரு வாரமாக கடலூரில் தொடர்ந்து மழை பெய்து வந்தது.

                      இதையே ஒரு சாக்காக வைத்து பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள் அடியோடு நிறுத்தப்பட்டுவிட்டது. பொது மக்கள் வாகனங்கள் ஓட்டி செல்வதற்காக சாலை சமன் செய்யும் பணி கூட நடைபெறவில்லை. இதனால் அப்துல்காதர் தெரு, சப் ஜெயில் ரோடு, கவரத்தெரு, பாஷியம் ரெட்டித்தெரு, திருப்பாதிரிப்புலியூர் மாரியம்மன் கோவில் தெரு,  நெல்லிக் குப்பம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சாலையே தெரியாத அளவுக்கு குண் டும் குழியுமாக காட்சியளிக்கிறது. எனவே மீண்டும் கலெக்டர் தொடர் நடவடிக்கை மேற்கொண்டால் தான் பாதாள சாக்கடைத் திட்டம் விரைவில் முடிவடையும்.

Read more »

இலவச கண் பரிசோதனை முகாம்

 பண்ருட்டி, டிச. 21: 

                 பண்ருட்டி அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் சக்தி தொழிற் பயிற்சி மையம் இணைந்து, சக்தி ஐடிஐ வளாகத்தில் இலவச கண் பரிசோதனை முகாமை அண்மையில் நடத்தினர்.  

                       சக்தி ஐடிஐ., வினாயகா ஐடிஐ. மற்றும் சாரதா வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 261 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் பார்வை குறைபாடு உடைய 20 மாணவர்களுக்கு பரிசோதனை செய்து கண்ணாடி அணிவிக்கப்பட்டது.  

                      அகர்வால் கண் மருத்துவமனையை சேர்ந்த என்.ரேகா, எம்.பாத்திமாபேகம், அருள் ஆகியோர் பரிசோதனை செய்தனர். இதில் சக்தி ஐடிஐ., தலைவரும், முன்னாள் சட்ட மன்ற மேலவை உறுப்பினருமான அ.ப.சிவராமன், தாளாளர் ஆர்.சந்திரசேகர், இயக்குனர்கள் முன்னாள் கவுன்சிலர்கள் வி.பாலகிருஷ்ணன், டி.ஜி.ரவிச்சந்திரன், எஸ்.வி.ஜூவல்லரி உரிமையாளர் எஸ்.வைரக்கண்ணு, சாரதா வித்யாலயா மெட்ரிக் பள்ளி தாளாளர் எம்.நடராஜன், என்.சம்மந்தர் ஆகியோர் முகாமில் கலந்துக்கொண்டனர். சக்தி ஐடிஐ., முதல்வர் கே.தேவநாதன் மற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Read more »

பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநாடு

 சிதம்பரம்,  டிச. 21: 
 
                      கடலூர் மாவட்ட பிஎஸ்என்எல் ஊழியர் சங்க 5-வது மாநாடு சிதம்பரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.  பி.எஸ்.என்.எல். சிதம்பரம் கோட்டத் தலைவர் ஜி.பழனி தலைமை வகித்தார்.  பொதுச் செயலாளர் வி.சிதம்பரநாதன் வரவேற்றார். மாநில உதவிச் செயலர் எஸ்.முத்துக்குமாரசாமி தொடக்கவுரையாற்றினார்.  
 
                        பிஎஸ்என்எல் இன்றைய நிலையும், நமது கடமையும் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் மாநிலச் செயலர் எஸ்.செல்லப்பா, பொதுச் செயலாளர் டி.ராஜேந்திரன், மாவட்டச் செயலர் கே.டி.சம்பந்தம் ஆகியோர் கருத்துரையாற்றினர்.  பின்னர் நடைபெற்ற பொருளாய்வுக்குழுவில் அகில இந்திய துணைப் பொதுச்செயலர் பி.அபிமன்யு சிறப்புரையாற்றினர். அவர் பேசுகையில்,  பிஎஸ்என்எல் நிறுவன பங்கு விற்பனையைத் தடுக்கவும், சேவையை மேம்படுத்தவும் ஊழியர்கள் முழுஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். மாவட்ட பொருளாளர் வி.குமார் நன்றி கூறினார். 

Read more »

சிதம்பரம் வந்த ஆளுநருக்கு வரவேற்பு

 சிதம்புரம்,  டிச. 21: 
 
                  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக 77-வது பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இவ்விழாவில் பங்கேற்க ஆளுநர் சுர்ஜித்சிங்பர்னாலா ஹெலிகாப்டர் மூலம் சிதம்பரம் அண்ணாமலைநகர் விமான தளத்துக்கு திங்கள்கிழமை பிற்பகல் வந்திறங்கினார்.  
 
                   அவரை கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன், மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் அஸ்வின்கோட்னீஷ், மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன், இணைவேந்தர் எம்.ஏ.எம்.ராமசாமி, துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன். பதிவாளர் எம்.ரத்தினசபாபதி ஆகியோர் பூச்சென்டு அளித்த வரவேற்றனர்.  
 
              பின்னர் ஆளுநர் துணைவேந்தர் பங்களாவிற்கு சென்று ஓய்வெடுத்தார். முன்னதாக ஆளுநர் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை காலை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு சிதம்பரம் அண்ணாமலைநகர் வந்தார். 

Read more »

சுனாமியால் பாதிக்கப்பட்டோர் ஆட்சியரிடம் மனு

கடலூர், டிச. 21: 
 
                  கடலூர் அருகே சுனாமியால் பாதிக்கப்பட்ட சிங்காரத்தோப்பு பகுதியைச் சேர்ந்த மீனவப் பெண்கள் 50 பேர் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.  
 
             கடலூர் நகராட்சி துணைத் தலைவர் தாமரைச்செல்வன் தலைமையில் சென்ற அப்பெண்கள் அளித்த மனுவில் கூறியிருப்பது:  
 
 
                    சிங்காரத்தோப்பில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் இ.சி.ஐ. நிறுவனம், அம்பேத்கர் நூற்றாண்டு நிறுவனம் மற்றும் வேல்டு விஷன் நிறுவனம் ஆகியவை கட்டிக் கொடுத்த தாற்காலிக வீடுகளில் வசிக்கிறோம். இயற்கை சீற்றம் காரணமாக இந்த வீடுகள் பழுதடைந்து மோசமாகி விட்டன. மழைநீர் கசிந்து கொண்டு இருக்கிறது. வீட்டின் மேல்தளத்தில் ஓடு போடாததால் கட்டடம் மோசமாகி விட்டது. வெயில் காலத்திலும் வசிக்க முடியாத நிலை இருக்கிறது. வீடுகளில் சமைக்கவும் முடியவில்லை.  
 
             சம்பந்தப்பட்ட நிறுவனங்களைக் கேட்டால் வீடுகட்டிக் கொடுக்கும் தங்களது திட்டம் முடிந்து விட்டதாகவும் கட்டிய வீடுகள் அனைத்தும் அரசிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கிறார்கள். 
 
                       எனவே சிங்காரத் தோப்பில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பாதுகாப்பான நிரந்தர வீடுகள் கட்டித்தர வேண்டும் என்றும் மனுவில் கோரியுள்ளனர்.
 
                    மாவட்ட ஆட்சியரிடம் தாமரைச் செல்வன் அளித்த மற்றொரு கோரிக்கை மனுவில், குழந்தைக் காலனியில் ஆண்டுதோறும் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி வடியாமல் பாதிப்பு ஏற்படுகிறது.  இப்பகுதியில் உள்ள சின்ன வாய்க்காலை, ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருந்து அகற்றி, தூர்வாரி மழைநீர் வழிந்தோட ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளார். 

Read more »

மின் சிக்கன விழிப்புணர்வு பேரணி

 விருத்தாசலம்,  டிச.21: 
 
                 விருத்தாசலத்தில் தேசிய மின்சார சிக்கனம் மற்றும் சேமிப்பு விழிப்புணர்வு பேரணி சனிக்கிழமை நடைப்பெற்றது.  தமிழக அரசு மின்சிக்கனத்தை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் மின் சிக்கனம் மற்றும் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு விழாவை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக விருத்தாசலத்தில் விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது.  செயற்பொறியாளர் சிவராஜ் தலைமை வகித்தார். உதவி செயற்பொறியாளர்கள் சுகன்யா, பத்மாவதி, பாலசுப்பிரமணியன் மற்றும் மின் பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் மறியல்

 கடலூர், டிச. 21: 
 
                   மறியலில் ஈடுபட முயன்ற தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியைச் சேர்ந்த ஆசிரியர்கள் 24 பேர், கடலூரில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.  
 
                      தொடக்கப் பள்ளிகளில் வகுப்புக்கு ஒரு ஆசிரியரை நியமிக்க வேண்டும்.  மாணவர் ஆசிரியர் விகிதத்தை 30:1 என்று மாற்ற வேண்டும். மாணவர்கள் பள்ளி வாகன விபத்துக்களில் இறப்பதைத் தவிர்க்க, மத்திய அரசு அறிவித்து இருக்கும் அண்மைப் பள்ளி திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 6-வது ஊதியக்குழு பரிந்துரையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு குறைக்கப்பட்டு உள்ள ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும்.  ஒன்றுமுதல் 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக் கல்வி வழங்க வேண்டும்.  
 
                       அனைத்து நிர்வாகத்திலும் உள்ள பள்ளிகளில் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்க வேண்டும்.  சமச்சீர் கல்வித் திட்டத்தில் தாய்மொழியே பயிற்று மொழியாக அறிவிக்க வேண்டும். தமிழைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக இந்த ஊர்வலம் மற்றும் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.  
 
                 தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் மஜீது தலைமையில், சங்க அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர். அங்கு மறியலில் ஈடுபட முயன்றவர்களைப் போலீஸôர் கைது  செய்தனர்.

Read more »

என்.எல்.சி. நிர்வாகத்துடன் பேச்சு நடத்த தடையில்லை

நெய்வேலி, டிச.21: 

                       தொழிலாளர்கள் கோரிக்கைத் தொடர்பாக என்எல்சி நிர்வாகத்துடன் பேச்சு நடத்த எவ்வித தடையுமில்லை. எனவே வீண் வதந்திகளால் தொழிலாளர்கள் குழப்பமடைய வேண்டாம் என தொமுச செயலர் ஆர்.கோபாலன்  தெரிவித்தார்.  என்எல்சி தொழிலாளர்களின் போனஸ் மற்றும் இன்சென்டிவ் தொடர்பாக நிர்வாகத்துக்கும், நிர்வாகத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களுக்கும் இடையே 2 மாதத்துக்கு முன் ஒப்பந்தம் ஏற்பட்டது.  இதை மாற்று தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்து போராட்ட நடவடிக்கையில் இறங்கியதோடு நிர்வாகத்துக்கு ஸ்டிரைக் நோட்டீஸþம் அளித்ததோடு, சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்திருந்தன. வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் தொழிற்சங்கங்கள் சில துண்டு பிரசுரங்களை வெளியிட்டு தொழிலாளர்களை குழப்பி வருவதாகவும், இதனால் தொழிலாளர்கள் யாரும் குழப்பமடைய வேண்டாம் என தொமுச செயலர் ஆர்.கோபாலன் கேட்டுகொண்டுள்ளார்.  

இதுகுறித்து மேலும் அவர் கூறியது:  

                             தொழிலாளர்கள் கோரிக்கைத் தொடர்பாக நிர்வாகத்துடன் பேச எவ்வித தடையும் ஏற்படவில்லை. அதேபோன்று மாற்றுத் தொழிற்சங்கங்களைக் கேட்டுக்கொண்ட பிறகுதான் நிர்வாகத்துடன் பேச்சு நடத்தவேண்டும் என்று உயர் நீதிமன்றமோ அல்லது மத்திய தொழிலாளர் நல ஆணையரோ எவ்வித உத்தரவும் பிறப்பிக்கவில்லை.  வழக்கம்போல் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம்.  ஊதிய மாற்று ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை அடுத்த வாரத்தில் தொடங்கவுள்ளோம். மற்ற பொதுத்துறை நிறுவனங்களில் ஊதியமாற்று ஒப்பந்தம் இன்னும் ஏற்படவில்லை. 

                          இருப்பினும் என்எல்சியில் ஊதிய மாற்று ஒப்பந்தத்தை விரைவில் ஏற்படுத்துவோம். நிர்வாகம் அலுவலக ஊழியர்களுக்கு வருகைக்கான அலவன்ஸ கிடையாது என்று அறிவித்த போதிலும், தாமதிக்காமல் உடனடியாக நிர்வாகத்துடன் பேச்சு நடத்தி, அவர்களுக்கும் வருகைக்கான அலவன்ûஸப் பெற்று தந்துள்ளோம்.  எனவே தொழிலாளர்கள் தேவையற்ற வதந்திகளுக்கு இடம் கொடுக்காமல், தொழிற்சங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு வழக்கம் போல் ஆதரவு அளிக்கவேண்டும் என்று கூறினார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior