மலேசியாவிற்கு வேலை தேடி செல்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மலேசியாவில் உள்ள ஆள்சேர்ப்பு முகவர்கள் மற்றும் நமது நாட்டில் உள்ள சில ஆள்சேர்ப்பு முகவர்கள் தவறாக வழிகாட்டி உரிய ஆவணங்களின்றி ஏராளமானோரை மலேசியாவிற்கு அழைத்துச் செல்கின்றனர் என அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் பல இந்தியர்கள் மலேசியாவிற்கு சென்று உரிய வேலையோ அல்லது வருவாயோ இன்றி அங்குள்ள இந்திய தூதரகத்தில் புகார்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர். மலேசியாவில் சட்டப்பூர்வமாக வேலை வாய்ப்பைப் பெறுவதற்கான வழிகாட்டுதல்களை அங்குள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது. எனவே, மலேசியாவுக்கு சென்று வேலை செய்ய விரும்புவோர் அதற்கான சட்டவிதிகள் மற்றும் பணிச் சூழ்நிலைகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். இந்த வழிகாட்டுதல்கள் www.mohr.gov.my என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மலேசியாவிற்கு வேலை செய்ய செல்ல விரும்புவோர் கீழ்கண்டவற்றைப் பின்பற்ற வேண்டும் :
1. குடியிருப்பு பர்மிட் அல்லது அடையாள அட்டை மற்றும் வேலை அட்டையை உடனடியாக பெற்றுக் கொள்ளவும்
2. தங்களது பாஸ்போர்ட்டுகளை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
3. கையில் எப்போதும் பாஸ்போர்டின் நகலை வைத்துக் கொள்ள வேண்டும்.
4. மலேசியாவில் தங்கி இருக்கும் போது எந்த வெற்று தாளிலும் கையெழுத்து போடக் கூடாது.
5. பாஸ்போர்ட் மற்றும் பணி ஒப்பந்தம் தொலைந்து போனால், உடனடியாக இந்திய தூதரகத்தில் புகார் செய்ய வேண்டும்.
6. மலேசியாவில் பணிச் சூழ்நிலை குறித்து முன்கூட்டியே கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.
7. மலேசிய சட்டப்படி தொழிலாளர்கள் போராட்டம் செய்வது சட்டவிரோதம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

downlaod this page as pdf