உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 03, 2010

கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை: 1.24 லட்சம் ஏக்கர் பயிர்கள் மூழ்கின


சிதம்பரம் தாலுகா, காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கீழவன்னியூர் கிராமத்தில் நீரில் மூழ்கியுள்ள நெற்பயிர்கள்.
 
கடலூர்:

              பலத்த மழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் 1.24 லட்சம் ஏக்கரில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி இருப்பதாக வேளாண் துறை வியாழக்கிழமை தெரிவித்தது.

                 வங்கக் கடலில் ஏற்பட்ட புயல் சின்னம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கன மழை கொட்டி வருகிறது. பெண்ணையாறு, கெடிலம் ஆறு, பரவனாறு, உப்பனாறு, வெள்ளாறு, மணிமுத்தாறு, கொள்ளிடம் ஆகியவற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டு இருக்கிறது.வீராணம் ஏரி, பெருமாள் ஏரி, வாலாஜா ஏரி, சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு, மணிமுத்தா அணைக்கட்டு, பெலாந்துரை அணைக்கட்டு, மேமாத்தூர் அணைக்கட்டு உள்ளிட்டவை நிரம்பி விட்டன.

               இவற்றில் இருந்து பெருமளவுக்கு உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வெலிங்டன் ஏரியில் நீர்மட்டம் 24.4 அடியாக நிலை நிறுத்தப்பட்டு வருகிறது. உபரி நீர் 1,600 கன அடி வெள்ளாற்றில் திறந்து விடப்படுகிறது. புவனகிரி வெள்ளாற்றில் தற்போது விநாடிக்கு 86 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் சென்று கொண்டு இருக்கிறது. கொள்ளிடத்தில் 40 ஆயிரம் கனஅடி நீர் சென்று கொண்டு இருக்கிறது.

                 வெள்ளாற்றில் பெருமளவுக்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் மிராளூர், மேலமணக்குடி, மணவெளி, பூதவராயன்பேட்டை உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்து உள்ளது. 15 ஆயிரம் ஏக்கரில் நெல் பயிர்கள் மூழ்கி உள்ளன.  பயிர்களுக்கு மேல் அரை அடி முதல் 3 அடி உயரம் வரை தண்ணீர் தேங்கி உள்ளது. நட்டு 15 நாள்கள் முதல் 1 மாதம் வரையிலான இந்தப் பயிர்களில் பெரும்பாலானவை அழுகிவிடும் என்றும் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் முட்லூர் விஜயகுமார் தெரிவித்தார்.

                  வீராணம் கடைமடைப் பகுதிகளான கோவிலாம்பூண்டி, கீழ்அணுவம்பட்டு, மஞ்சக்குழி, நஞ்சைமகத்து வாழ்க்கை, புஞ்சைமகத்து வாழ்க்கை உள்ளிட்ட 25 கிராமங்கள் அபரிமிதமான மழைநீரால் சூழப்பட்டு உள்ளன.÷வெள்ளாறு, கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், வயல்களில் தேங்கும் நீரை வெளியேற்ற முடியவில்லை.  25 ஆயிரம் ஏக்கர் நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன என்று பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன் தெரிவித்தார்.

                  வீராணம் ஏரியின் உபரிநீர் பெருமளவுக்கு வெளியேற்றப்பட்டு வெள்ளியங்கால் ஓடையில் கொள்ளளவுக்கு அதிகமான நீர் செல்வதால், திருநாரையூர், சிறகிழந்தநல்லூர், வீரநத்தம், எடையார் உள்ளிட்ட 25 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து இருப்பதாகவும், 10 ஆயிரம் ஏக்கர் நெல்பயிர் தண்ணீரில் மூழ்கிக் கிடப்பதாகவும் கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்கச் செயலர் விநாயகமூர்த்தி தெரிவித்தார்.ஏரி தூர்ந்து போனதால் 1.44 டி.எம்.சி.யாக இருந்த வீராணம் ஏரியின் கொள்ளளவு, 0.96 டி.எம்.சி.யாக தற்போது குறைந்து விட்டது. 

                   வீராணம் ஏரியை ஆழப்படுத்தாமல், கரைகளை மட்டும் உயர்த்துவதும், ஏரியில் மழைக்காலத்தில் 44 அடிக்கு மேல் நீரைத் தேக்கி வைத்ததுமே, சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் தாலுகாக்களில் வெள்ளச் சேதத்துக்கு காரணம் என்று, காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க துணைத் தலைவர் கண்ணன் தெரிவித்தார். 

                  தொடர்ந்து பெய்து வரும் மழையால் கடலூர் மாவட்டத்தில் 1.24 லட்சம் ஏக்கரில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதில் நெல் பயிர் மட்டும் 80,675 ஏக்கர், தோட்டக் கலைப் பயிர்கள் 3 ஏக்கர் என்றும் வேளாண்துறை தெரிவித்துள்ளது.

Read more »

அண்ணாமலைப் பல்கலை. சென்னை மையத்தில் விடியோ கான்ஃபரன்சிங் வகுப்பறை

அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வித் துறையின் சென்னை கல்வி மையத்தில் விடியோ கான்ஃபரன்சிங் வகுப்பறையைத் தொடங்கிவைத்து பேசுகிறார் பல்கலைக்கழக துணை வேந்தர் எம். ராமநாதன்

              அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வித் துறையின் சென்னை கல்வி மையத்தில் விடியோ கான்ஃபரன்சிங் வகுப்பறை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. பல்கலைக்கழக துணைவேந்தர் எம். ராமநாதன் இதை தொடங்கி வைத்தார். 

பின்னர்  அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் எம். ராமநாதன்   கூறியது:

                  அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வியில் படிக்கும் மாணவர்களும், ஆசிரியர்களும் கல்வி மையங்களுக்கும் வெகுதூரம் அலைக்கழிக்கப்படுவதைத் தடுக்கும் பொருட்டு, முதல் முறையாக விடியோ கான்ஃபரன்சிங் வகுப்பறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. முதல் கட்டமாக சென்னை, தில்லி மையங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. விரைவில் அதிக மாணவர்களைக் கொண்ட மற்ற பெரிய மையங்களிலும் இந்த வசதி அறிமுகம் செய்யப்படும்.மேலும் பல்வேறு துறைகளின் கீழ் ஆன்-லைன் படிப்புகளும் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன என்றார்.

Read more »

பங்குகளை விற்கும் அதிகாரம் என்எல்சிக்கு இல்லை: என்.எல்.சி. நிறுவனம்


நெய்வேலி:
 
              நிறுவனப் பங்குகளை விற்கும் அதிகாரம் என்.எல்.சி.க்கு இல்லை என்றும் என்.எல்.சி.யின் பங்குகள் விற்பனை மத்திய அரசின் கொள்கை முடிவை சார்ந்தது என என்.எல்.சி. நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
 
இது தொடர்பாக என்.எல்.சி. நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட விளக்க அறிக்கை:
 
               என்.எல்.சி. பங்குகள் விற்பனை தொடர்பாக, 10 சதவீத பங்குகளை அடுத்த நிதியாண்டுக்குள் அரசு விற்பனை செய்ய இருக்கிறது என என்.எல்.சி. தலைவர் ஏ.ஆர்.அன்சாரி தெரிவித்ததாக செய்திகள் வெளியாயின. அவர் அவ்வாறு கூறவில்லை. என்.எல்.சி.யின் பங்குகள் விற்பனை தொடர்பான கொள்கை முடிவுகள் மத்திய அரசினை சார்ந்தது. எனவே இவ்விற்பனைத் தொடர்பான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் என்.எல்.சி. நிறுவனத்துக்கு இல்லை என குறிப்பிட்டுள்ளார். 
 
               மேலும் என்.எல்.சி. நிறுவனத்தின் பங்குகளை எப்போது, எத்தனை சதவீதம் விற்பது என்பதெல்லாம் மத்திய அரசுதான் முடிவு எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். என்.எல்.சி. நிறுவனம் தனது புதிய திட்டங்களுக்கு முதலீடு செய்வதற்கு போதுமான நிதி ஆதாரங்களைக் கொண்டுள்ளது. எனவே பங்கு சந்தையின் மூலம் நிதி திரட்டும் எண்ணம் எதுவும் இல்லை எனவும், இது தொடர்பாக மத்திய அரசு வழங்கும் வழிகாட்டுதல்படி என்.எல்.சி. முடிவு எடுக்கும் என ஏ.ஆர்.அன்சாரி தெரிவித்துள்ளார்.

Read more »

10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதோரும் உதவித் தொகை பெறுவது எப்படி?

                பத்தாம் வகுப்பு (பள்ளி இறுதி) தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகையை எப்படி பெறுவது என்ற  விளக்கத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: 

               9-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, பின்னர் 10-ம் வகுப்பு இறுதித் தேர்வில் கலந்து கொண்டு தோல்வி அடைந்தவர்களாக இருந்தாலும், கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திட வேண்டும். 5 ஆண்டுகளுக்கு மேல் உயிர்ப் பதிவேட்டில் காத்திருப்பவராக இருத்தல் அவசியம்.இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற ஆதி திராவிடர், பழங்குடியினர் பயனாளிகளைப் பெறுத்தவரை அதிகபட்ச வயது வரம்பு 45. இதர வகை பயனாளிகளுக்கு வயது வரம்பு 40. பயனாளிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். 

                அரசு நிறுவனங்களிலோ அல்லது எந்தவொரு தனியார் நிறுவனங்களிலோ பணிபுரிபவராக பயனாளி இருக்கக் கூடாது. சுய தொழிலிலும் ஈடுபடக் கூடாது.பயனாளி பள்ளி அல்லது கல்லூரியில் பயிலும் முழு நேர மாணவராக இருக்கக் கூடாது. குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் தமிழகத்தில் வசிப்பவராக இருப்பது அவசியம். அதிகபட்சமாக 3 ஆண்டுகளுக்கு தேசிய மயமாக்கப்பட்ட ஏதாவது ஒரு வங்கியில் பயனாளி தனது சேமிப்புக் கணக்கை பராமரித்து வர வேண்டும். 

                     அந்தக் கணக்கில் ஒவ்வொரு காலாண்டு முடிவிலும் உதவித் தொகை அளிக்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 100 வீதம் உதவித் தொகையாக 3 ஆண்டுகளுக்கு, இதர நிபந்தனைகளுக்கு உள்பட்டு நிதியுதவி அளிக்கப்படும். இந்தத் திட்டத்தில் சேர விரும்பும் பயனாளிகள், பள்ளியிறுதித் தேர்வு தேர்ச்சி பெறாத பதிவுதாரர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தை அனைத்து சான்றிதழ்களுடன் தொடர்பு கொள்ளும்படி வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more »

கலைஞர் வீடு வழங்கும் திட்டம்: டிசம்பர் 7 முதல் அடையாள அட்டைகள்

                 கலைஞர் வீடு வழங்கும் திட்டப் பயனாளிகளுக்கு டிசம்பர் 7-ம் தேதி முதல் அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன.குடிசைகளுக்குப் பதிலாக கான்கிரீட் வீடுகளைக் கட்டும் திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. 

                 மாவட்ட வாரியாக இந்தத் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பயனாளிகள் ஒவ்வொருவருக்கும் | 75 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில், கடந்த மாதம் 10-ம் தேதி சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் துணை நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தில் பங்கெடுத்துப் பேசினார், காங்கிரஸ் கட்சிக் கொறடா பீட்டர் அல்போன்ஸ். அப்போது, ""கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழுள்ள பயனாளிகள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்தார்.

                           இதற்குப் பதிலளித்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், ""டிசம்பர் 2-வது வாரத்துக்குள் அடையாள அட்டை வழங்கும் பணிகள் தொடங்கும்'' என்றார் .

டிசம்பர் 7-ம் தேதி முதல்: 

               இந்த நிலையில், அடையாள அட்டைகள் டிசம்பர் 7-ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன. சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் பயனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்குவர். டிசம்பருக்குள் 3 லட்சம் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டிலிருந்து ஆறு ஆண்டுகளுக்குள் 21 லட்சம் குடிசைகள் வீடுகள் கான்கிரீட் வீடுகளாக மாற்றப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Read more »

வெள்ளநீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ. 15 கோடி செலவில் வெள்ளத் தடுப்புப் பணிகள்

சிதம்பரம்:

               ரூ. 15 கோடி செலவில் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டிலிருந்து வெள்ளாற்றின் கரையை பலப்படுத்தி வெள்ளத் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது என பொதுப்பணித்துறை கொள்ளிட வடிநில கோட்ட செயற் பொறியாளர் எஸ்.செல்வராஜ் தெரிவித்தார்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை கொள்ளிட வடிநில கோட்ட செயற் பொறியாளர் எஸ்.செல்வராஜ் தெரிவித்தது:

              வெள்ளநீர் மேலாண்மை திட்டத்தின்கீழ் ரூ. 6.8 கோடி செலவில் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டிலிருந்து தாதம்பேட்டை வரை வெள்ளாற்றின் இடதுகரையும், சேத்தியாத்தோப்பு அணைக்கட்டிலிருந்து சக்திவிளாகம் வரை வலதுகரை பலப்படுத்தப்படுகிறது. மேலும் சாக்காங்குடி பகுதியில் வெள்ளாற்றில் குறுக்கே 6 தடுப்புச் சுவர்களும்,  மேல்புவனகிரி பகுதியில் 5 தடுப்புச் சுவர்களும், தீர்த்தம்பாளையத்தில் 4 சுவர்களும், மடுவங்கரையில் 4 தடுப்புச் சுவர்களும் ஆக மொத்தம் வெள்ளாற்றின் 27 தடுப்புச் சுவர்கள் ரூ. 4.96 கோடி செலவில் அமைக்கப்படுகிறது.     

                    மேலும் ரூ. 1.3 கோடி செலவில் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டில் மண் அரிப்பை தடுக்க 130 மீட்டர் தூரத்துக்கு தடுப்புச் சுவரும், புவனகிரி வலதுகரையில் ரூ. 66 லட்சம் செலவில் 70 மீட்டர் தூரத்துக்கு தடுப்புச் சுவரும் அமைக்கப்படுகிறது. சேத்தியாத்தோப்பு அணைக்கட்டின்கீழ் வெள்ளாறு பகுதியில் ரூ. 59 லட்சம் செலவில் 9 வடிகால் மதகுகள் அமைக்கப்படவுள்ளது. ஆக மொத்தம் வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கை தடுக்க ரூ. 15 கோடி செலவில் திட்டப் பணிகள் தொடங்க ஜனவரி மாதம் ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் மார்ச் 2012-ல் முடிவுறும் என செயற்பொறியாளர் எஸ்.செல்வராஜ் தெரிவித்தார்.

                  இவையல்லமால் ரூ. 6.8 கோடி செலவில் வாலாஜா ஏரியிலிருந்து பொன்னேரி வரை வெள்ளப் பெருக்கில் உடைப்பெடுத்த மத்திய பரவனாறு கரையை 9.4 கி.மீ. தூரத்துக்கு  15 அடி அகலத்துக்கும், 16 அடி உயரத்துக்கு பலப்படுத்தி தூர்வாரி 180 அடியாக அகலப்படுத்துவது. 24 மதகுகள் கட்டவும் திட்டப் பணிகள் தொடங்கப்படவுள்ளது.  இதன் மூலம் இதுவரை 15 ஆயிரம் கனஅடி கொள்ளளவு 25 ஆயிரம் கனஅடி கொள்ளளவாக உயர்ரத்தப்படும் என செயற்பொறியாளர் எஸ்.செல்வராஜ் தெரிவித்தார்.

Read more »

ஏழைகள் ரதம் ரயிலை கடலூர் மார்க்கத்தில் இயக்கக் கோரிக்கை

கடலூர்:

            பெங்களூர் இடையே இயக்கப்படும் ஏழைகள் ரதம் ரயிலை, கடலூர் வழியாக இயக்க வேண்டும் என்று கடலூர் அனைத்து நகரக் குடியிருப்போர் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மு.மருதவாணன் தென் ரயில்வே பொதுமேலாளருக்கு அனுப்பிய கோரிக்கை மனு: 

               சென்னை- திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் தாற்காலிகமாக திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் நின்று போக உத்தரவிடப்பட்டு உள்ளது. இதை நிரந்தரம் ஆக்க வேண்டும். மேலும் செந்தூர், காசி எக்ஸ்பிரஸ் ரயில்களை திருப்பாப்புலியூர் துறைமுகம் சந்திப்பு ரயில் நிலையங்களில் நின்று போக, நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில், லூப் லைன் வசதி செய்யப்பட்டு விட்டதால், துறைமுகம் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து திருச்சிக்கு இயக்கப்படும் பாசஞ்சர் ரயிலை, திருப்பாப்புலியூரில் இருந்து இயக்க வேண்டும்.

               புதுவையில் இருந்து பெங்களூர் செல்லும் ஏழைகள் ரதம் ரயில் விழுப்புரம், விருத்தாசலம் மார்க்கத்தில் இயக்கப்படுகிறது. விழுப்புரம், விருத்தாசலம் மார்க்கத்தில் ஏற்கெனவே நெரிசல் அதிகமாகி விட்டதாக, ரயில்வே போக்குவரத்துத்துறை ஆய்வு செய்து அறிவித்து உள்ளது. எனவே கடலூர் மக்களின் வசதியைக் கருத்தில் கொண்டு, அந்த ரயிலை புதுவை, விழுப்புரம், கடலூர், விருத்தாசலம் மார்க்கத்தில் இயக்க வேண்டும். இதனால் 11 கி.மீ. தூரம் மட்டுமே அதிகரிக்கும். இதனால் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவாய் உயரும்.

                 பெருங்குடி- கடலூர் இடையே புதிய ரயில் பாதை அமைக்கும் பணிக்கு ஆய்வு முடிந்து, அனுமதியும் அளிக்கப்பட்டு உள்ளது. இப்பணியை துரிதப்படுத்த வேண்டும். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கடலூரில் இருந்து ஏற்கெனவே இயக்கப்பட்ட ரயில்கள் அனைத்தையும் மீண்டும் கடலூரில் இருந்த இயக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Read more »

பாடத்திட்டத்தில் இல்லாத வினா திருவள்ளுவர் பல்கலை மாணவர்கள் பாதிப்பு

பண்ருட்டி:

                    திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அண்மையில் நடத்திய செமஸ்டர் தேர்வுகளில் சில வினாத்தாள்களில் பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகள் கேட்கப்பட்டிருந்ததால் தேர்வு எழுதிய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

                2002-ம் ஆண்டு முதல் வேலூர் மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு திருவள்ளுவர் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இதன் கட்டுப்பாட்டில் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் உள்ளன. மேற்கண்ட மாவட்டங்களில் மொத்தம் 83 அரசு, நிதி உதவி பெறும் மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

                இக்கல்லூரியின் செமஸ்டர் தேர்வு நவம்பர் மாதம் நடைபெற்றது. இதில் பி.காம்., மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்களின் 5-வது செமஸ்டர் தேர்வில் வருமானவரி சட்டம்  தேர்வு எழுதியுள்ளனர். முழுக்க முழுக்க கருத்தியல் கேள்விகளாக கேட்கப்பட வேண்டிய வினாத்தாளில் சுமார் 40 சதவீத மதிப்பெண்களுக்கான கேள்விகள் கணக்காக கேட்கப்பட்டதால் மாணவர்கள் குழப்பம் அடைந்து சரியாக தேர்வு எழுதவில்லை என தெரிவித்தனர்.இதேபோல் இரண்டாம் ஆண்டு வணிகப் பொருளியல்  தேர்வு  எழுதிய மாணவர்களுக்கான வினாத்தாளிலும் பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகள் வந்துள்ளதாக தெரிய வருகிறது.

                இதே குழப்பம் கடந்த ஆண்டும் ஏற்பட்டதாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் கூறினர்.பல்வேறு குடும்ப சூழலில் ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற லட்சியத்துடன் மாணவர்களும்; பிள்ளைகளை எப்படியாவது படிக்க வைத்து நல்ல நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்ற நோக்கில் பெற்றோர்களும் பாடுபடுவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பொறுப்பற்ற தன்மையால் இந்த ஆண்டு தேர்வு எழுதிய ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

                இதனால் குழப்பம் அடைந்த மாணவர்கள் தொடர்ந்து வந்த தேர்வுகளையும் சரியாக எழுதவில்லை என மன வேதனையுடன் தெரிவித்தனர்.இதேபோல் கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியலில்  ஆப்சென்ட் போடப்பட்டிருந்ததால் மேற்படிப்புக்கு விண்ணப்பிக்க முடியாமல் தவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more »

கடலூர் மாவட்டத்தில் 200 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை



கடலூர் : 

                   கடலூர் மாவட்டத்தில் நீடித்து வரும் கன மழை காரணமாக வீராணம் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வழிவதால், 200க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

                 கடலூர் மாவட்டத்தில் கடந்த வாரம் வடகிழக்கு பருவ மழை காரணமாக வீராணம், பெருமாள், வெலிங்டன் ஏரிகள் உள்ளிட்ட அனைத்து நீர் நிலைகளும், கடந்த 26ம் தேதி நிரம்பின. உபரி நீர் வெளியேற்றப்பட்டதால் வெள்ளாறு, பரவனாறு, கெடிலம் மற்றும் பெண்ணையாறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. கடந்த 27ம் தேதி முதல் மழையின் தீவிரம் குறைந்து, நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து குறைந்ததால், கிராமங்களில் சூழ்ந்திருந்த மழைநீர் வடிய துவங்கியது. இந்நிலையில் வங்கக் கடலில் மீண்டும் உருவான புதிய புயல் சின்னத்தால் மீண்டும் மழை தீவிரமடைந்தது.

                  கடந்த 30ம் தேதி தமிழகத்திலேயே அதிகபட்சமாக பரங்கிப்பேட்டையில் 22 செ.மீ., அளவு மழை கொட்டியது. ஏற்கனவே நீர் நிலைகள் நிரம்பி வழிந்த நிலையில், கன மழையால் நீர் வடிய வழியின்றி கிராமங்களிலும், வயல்வெளிகளிலும் புகுந்ததால் மாவட்டத்தின் பெரும் பகுதி வெள்ளக்காடானது. குறிப்பாக காவிரி ஆற்றின் வடிகால் பகுதியான காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் தாலுகாக்கள் பெரும் பாதிப்பிற்குள்ளானது. 

                வெள்ளாற்றின் குறுக்கே உள்ள சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டிய நிலையில், கூடுதலாக வரும் நீர் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது. நேற்று முன்தினம் மதியம் 12 மணிக்கு 22 ஆயிரம் கன அடி நீர், படிப்படியாக நேற்று காலை 10 மணிக்கு 86 ஆயிரத்து 675 கன அடியாக அதிகரித்து, வெள்ளாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்ததில் பல இடங்களில் கரை உடைந்து கிராமங்களில் புகுந்துள்ளது.

                      இதனால் புவனகிரி - சேத்தியாத்தோப்பு, கீரப்பாளையம் - சேத்தியாத்தோப்பு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. வெள்ளாறு கரையோரத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது. ஏற்கனவே பரவானாறில் உடைப்பு ஏற்பட்டு பாதித்த பகுதிகளில், மீண்டும் தண்ணீர் உட்புகுந்ததால், அப்பகுதி மக்கள் அருகில் உள்ள பள்ளிகள், கோவில்கள், சமுதாய நலக்கூடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். 

                 வயல்வெளிகள் முழுமையாக மூழ்கி கடல் போல் காட்சியளிக்கிறது. வெள்ளாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் வீராணம், பெருமாள் ஏரிகள் நிரம்பி வழிவதை பார்வையிட்ட கலெக்டர் சீத்தாராமன், சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார் கோவில் தாலுகாக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Read more »

பண்ருட்டி அருகே மழை, வெள்ளத்திலும் மணல் கொள்ளை: 3 டிப்பர் லாரிகள் பறிமுதல்


 

பண்ருட்டி : 

               பண்ருட்டி அருகே அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ற மூன்று டிப்பர் லாரிகளை, போலீசார் பறிமுதல் செய்தனர். தமிழகம் முழுவதும் கடந்த 10 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், மணல் எடுக்க முடியாமல் அனைத்து மணல் குவாரிகளும் மூடப்பட்டன. ஆனால், கடலூர் மாவட்டம் பண்ருட்டி, புதுப்பேட்டை பகுதிகளில் உள்ள தென்பெண்ணையாறு, மலட்டாறுகளில் தொடர்ந்து இரவில் டிப்பர் லாரிகளில் மணல் திருட்டு நடந்தது. 

             எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ், டி.எஸ்.பி., பிரசன்னகுமார் உத்தரவின் பேரில் புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். நேற்று அதிகாலை 2 மணியளவில் எனதிரிமங்கலம், கொரத்தி மாரியம்மன் கோவில் அருகில், வரிஞ்சிப்பாக்கம் ஆகிய மூன்று இடங்களில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்தனர். லாரி டிரைவர்கள் பிடாகம் அய்யப்பன், வரிஞ்சிப்பாக்கம் ராஜேந்திரன்(37), கண்டரக்கோட்டை பாண்டியன்(26) ஆகியோர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் மழையால் பாதித்த பகுதிகளுக்கு கூடுதல் மண்ணெண்ணெய்: கலெக்டர்

சிதம்பரம் : 

              கடலூர் மாவட்டத்தில் மழை, வெள்ளம் சூழ்ந்த பகுதி மக்களுக்கு கூடுதலாக 2 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்படும் என கலெக்டர் சீத்தாராமன் அறிவித்துள்ளார். 

                 சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் மழை, வெள்ள பாதிப்புகளை கலெக்டர் சீத்தாராமன் நேற்று பார்வையிட்டார். பின்னர் வெள்ள பாதிப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் சிதம்பரத்தில் ஆலோசனை நடத்தினார். சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவில் வட்டத்திற்குட்பட்ட கரையோர கிராமங்களில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. இதன் தொடர்பாக ஒலிப்பெருக்கி மூலம் அபாய எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

                 மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு சமைத்து வழங்க 170 டன் அரிசி வழங்கப்பட்டுள்ளது. காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் மட்டும் 131 டன் அரிசி டன் வழங்கப்பட்டுள்ளது. மழை, வெள்ளத்தால் சூழ்ந்துள்ள கிராமங்களில் உள்ள மக்களுக்கு கூடுதலாக குடும்ப அட்டைக்கு 2 லிட்டர் மண்ணெண்ணெய் கூடுதலாக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.  அதன் அடிப்படையில் கடலூர் மாவட்டத்திற்கு 60 கிலோ லிட்டர் கூடுதல் மண்ணெண்ணெய் பெறப்பட்டு உடனடியாக வழங்கப்பட உள்ளது.

மேலும், 

சிதம்பரம், சேத்தியாத்தோப்பு, ஒரத்தூர் பகுதிக்கு மாவட்ட பிற்பட்ட நல அலுவலர் கணபதி (எண்- 9842723080), 

பரங்கிப்பேட்டை, புவனகிரி, திருவக்குளம் பகுதிக்கு சிதம்பரம் ஆர்.டி.ஓ., ராமராஜ் (எண்- 9445000425), 

காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் உடையார்குடி, புத்தூர், குமராட்சி ஆகிய பகுதிக்கு உதவி ஆணையர் கலால்  கேசவமூர்த்தி (எண்-  9842405631), 

காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம் பகுதிக்கு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) உமாபதி (எண்- 9444564037) 

                  ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். வெள்ளப் பாதிப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து உடனுக் குடன் அவர்களை தொடர்பு  கொண்டு தகவல் தெரிவிக்கலாம்என கலெக்டர் சீத்தாராமன் தெரி வித்தார்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் குற்ற நிகழ்வுகள் குறைந்துள்ளது :எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ்

பண்ருட்டி : 

                  திருட்டு சம்பவம் குறித்து  நிலைய அலுவலர் வழக்குப்பதிவு செய்யவில்லையெனில் டி.எஸ்.பி., அல்லது என்னிடம் முறையிட்டால் உடன்  வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி., தெரிவித்தார். பண்ருட்டி டி.எஸ்.பி., அலுவலகத்தில் எஸ்.பி., அஷ்வின்கோட்னீஸ் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் எஸ்.பி., அஷ்வின்கோட்னீஸ் கூறியது: 

                  கடந்த 2001ம் ஆண்டு முதல் மாவட்டத்தில் குற்ற நிகழ்வுகள் குறைந்துள்ளது. பண்ருட்டி சப் டிவிஷனில் கடந்த 2001ம் ஆண்டு 91 குற்ற வழக்குகள் பதிவானது. ஆனால் கடந்த 2009ல் 83 வழக்கும், 2010ல் 43 வழக்கும் பதிவாகியுள்ளது. திருட்டு சம்பவம் குறித்து  நிலைய அலுவலர் வழக்குப்பதிவு செய்யவில்லையெனில் டி.எஸ்.பி., அல்லது என்னிடம் முறையிட்டால் உடன்  வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும். 

                ஸ்காட்லாந்து போலீசுக்கு இணையாக தமிழக போலீஸ் செயல்பட்டு வருகிறது.  போலீஸ் கமிஷனர் பொதுமக்கள் புகார்கள் குறித்து உடன் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார். நகை அடகுகாரரிடம் இருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நகைகள் கிடைக்க குற்றப்பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.  பழைய 7 குற்றங்களில் குற்றவாளிகள் பிடிக்கவும்,  நகரத்தில் நடைபெறும் குற்றங்களை தடுக்க கூடுதலாக 10 போலீசார் மற்றும் தனிப்படையினர் முகாமிட்டுள்ளனர். இவ்வாறு எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் கூறினார். டி.எஸ்.பி., பிரசன்னகுமார், பயிற்சி டி.எஸ்.பி., கீதா ஆகியோர் உடனிருந்தனர்.

Read more »

நரியன் ஓடை பாலம் இடிந்து விழும் முன் நடவடிக்கை தேவை

நடுவீரப்பட்டு : 

                 நடுவீரப்பட்டு - சி.என். பாளையம் நரியன் ஓடையில் உள்ள சிறிய பாலம் உடையும் அபாய நிலை உள்ளது.பண்ருட்டி அடுத்த நடுவீரப்பட்டு - சி.என். பாளையம் நரியன் ஓடையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஒன்றிய பொது நிதியில் சிறிய உயர் மட்ட பாலம் கட்டப்பட்டது.

                இந்த பாலத்தை நடுவீரப்பட்டு ஊராட்சியை சேர்ந்த தெற்கு தெரு, மற்றும் சி.என்.பாளையம் ஊராட்சியைச் சேர்ந்த பழையபாளையம், கச்சிராயர்குப்பம், புத்திரன்குப்பம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்  நடுவீரப்பட்டு வந்து செல்ல பயன்படுத்தி வருகின்றனர்.

                  கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் நரியன்  ஓடையை ஆழப்படுத்த கூறி அதிகாரிகள் பொக்லைன் மூலம் வாய்க்காலில் பள்ளம் தோண்டி பரவலாக ஓடிய மழை நீரை 10 அடி அகலத்திற்கு மட்டும் தண்ணீர் ஓடக்கூடிய அளவிற்க்கு வாய்க்கால் வெட்டினர். இதனால் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் இந்த பாலத்தின் பில்லர்களில் மண் அரிப்பு ஏற்பட்டு சிறிது மண்ணில் புதைந்தது. இதனால் பாலத்தில் தொய்வு ஏற்பட்டதால் வாகனங்கள் செல்வது நிறுத்தப்பட்டது.

                 பாலத்தின் கைப்பிடி கம்பிகளை சமூக விரோதிகள் திருடிச் சென்று விட்டதால் இரவு நேரத்தில் நடக்க முடியாமல் பலர் ஓடையில் விழுந்த சம்பவங்களும் நடந்துள்ளது.  இப்பாலம் தொடர்ந்து பெய்து வரும் கன மழையில் உள்வாங்கி உள்ளது. ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழும் முன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் மழைவெள்ளத்தால் பாதித்த 10 ஆயிரம் பேருக்கு உணவு: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

கடலூர்

                  கடலூர் மாவட்டத்தில் சமீப நாட்களாக பெய்த தொடர்மழையால் பல பகுதிகளும் வெள்ளக் காடானது. சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், குறிஞ்சிப்பாடி பகுதிகளில் பல ஏரி, குளங்களும் நிரம்பி வழிந்ததால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது.

                 இதனால் தவித்த அந்த பகுதி மக்களுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தனது சொந்த செலவில் உணவு வழங்கினார். நேற்று குறிஞ்சிப்பாடியில் உள்ள திருமண மண்டபத்தில் உணவு தயார் செய்யப்பட்டு வெள்ளத்தால் பாதித்த பகுதிகளுக்கு வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.

              இலவச உணவு வினியோகம் குறிஞ்சிப்பாடி ஒன்றிய தி.மு.க. செயலாளர் சிவகுமார் மேற்பார்வையில் நடந்தது.

Read more »

Flood alert sounded in Cuddalore district


Inundated: Housing colonies in Cuddalore town are surrounded by water. 
 
CUDDALORE:

            Owing to heavy rainfall during the past few days, major waterbodies in Cuddalore district are surplussing, necessitating voluminous discharge from these sources. 

           Collector P. Seetharaman has sounded a flood alert and urged the people living in low-level areas to move to safer places. The announcement is being made through public address system in flood-prone areas.

              Given the quantum of inflow - 5,000 cusecs - into the Veeranam tank, it should be already overflowing. However, officials are maintaining the water level in the tank at 45.8 ft, against the maximum height of 47.5 ft. The excesses are being let out at the rate of 74 cusecs to the Chennai water supply system, 340 cusecs into the Vellar and 4,456 cusecs through the Velliangal Odai. Farms lying alongside the course of the Odai are facing the threat of submergence. The Sethiathope anicut is full and is getting an inflow of 62,000 cusecs. From this anicut, 86,049 cusecs is being released into the Vellar, which is already carrying a lot of water.

           The swollen Then Penniyar is being fed to the extent of 5,226 cusecs from the Sornavur anicut and the Gedilam 18,830 cusecs from the Thiruvahindrapuram anicut. 

An enormous quantum of water is released from various sources as follows:

Pelandurai dam – 31,391 cusecs, 

Vriddhachalam dam – 28,796 cusecs,

Me.Mathur dam – 21,853 cusecs, 

Tholudur dam – 20,039 cusecs, 

Kumaraudaippu Vaikkal – 6,846 cusecs, 

Perumal Eri – 6,753 cusecs, 

Wallajah Eri – 5,094 cusecs, 

Wellington reservoir – 2,823 cusecs, 

Gomukhi dam – 1,152 cusecs, 

Manimuktha dam – 563 cusecs, 

Sathanur dam – 521 cusecs.

                People living near the water sources are facing an impending threat of floods. The district administration has so far dispatched 170 tonnes of rice from the Tamil Nadu Civil Supplies Corporation godowns to rain-affected areas and 131 tonnes have gone to Kurinjipadi block.

             Panchayat presidents are making arrangements for serving cooked food to the respective areas. On the request of Health Minister M.R.K. Panneerselvam, the Neyveli Lignite Corporation has been supplying 20,000 food packets to affected people, through the district administration. Hutments in Dhaanam Nagar and Navaneetham Nagar in Cuddalore are under knee-deep water as a 20-foot pond in the neighbourhood breached. At Palani Pillai Nagar, Subbu Nagar and Vijayalakshmi Nagar, residents are facing hardships due to inundation owing to lack of drainage facility.

         Meanwhile, the Cuddalore Municipality has set up a round-the-clock flood control room which can be contacted over telephone number 04142-230021.

Rainfall

Kothavacheri – 130 mm, 

Panruti – 113 mm, 

Parangipettai – 112 mm, 

Me.Mathur – 110 mm, 

Bhuvanagiri – 96 mm, 

Vanamadevi – 94 mm, 

Singarathope – 80 mm, 

Chidambaram – 78 mm, 

Vriddhachalam – 78 mm, 

Tholudur – 72 mm,

Kattumannarkoil – 60 mm, 

Annamalai Nagar – 57.20 mm,

Lalpet – 48 mm, 

Cuddalore – 47.8 mm,

Sri Mushnam – 45 mm and

Vepur – 42 mm

Read more »

Additional kerosene for card-holders in flood-hit areas

CUDDALORE:

           Ration card-holders in flood-affected areas in Cuddalore district will get an additional supply of two litres of kerosene, according to Collector P. Seetharaman.

          In a statement released here on Thursday, he said that the district had been allotted 60 kilo-litres of kerosene for the purpose and the distribution would start soon. Mr. Seetharaman said that Deputy Collectors and officials of equivalent ranks had been put in charge of flood control measures in various places.

They could be contacted as follows: 

Chidambaram, Sethiathope and Orathur – 98427 23080, 

Parangipettai, Bhuvanagiri and Thirukuvalam – 94450 00425, 

Udayarkudi, Puthur and Kumaratchi – 98424 05631, and

Kattumannarkoil and Sri Mushnam – 94445 64037.

Read more »

MLA T.Velmurugan seeks Rs 300 crore for relief in Cuddalore,

CUDDALORE: 

               Since the floods have caused extensive damage in Cuddalore, the State government should declare it a disaster-prone district and sanction an initial sum of Rs. 300 crore for relief works, T.Velmurugan, MLA and State joint general secretary of the PMK, told a press conference here on Thursday.

Read more »

Two school student killed at Thirumanikuzhi

CUDDALORE: 

              Sivabalan (15), a school student, who had gone to watch the floods in the Gedilam at Thirumanikuzhi on Thursday, accidentally fell into the river and was washed away. Police and Fire personnel have launched a search. In another incident, 50-year-old Govindasamy fell into the Sengal Odai at Solatharam and drowned.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior