உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மே 06, 2011

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் காலிப் பணியிடங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கீழ்கண்ட காலிப் பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகி உள்ளது.


Name of the Post Last Date Advt. No. Service Code No.
24.05.2011 276 047
17.05.2011 275 052/048
17.05.2011 274 003
17.05.2011 273 050/053/071



Read more »

பிளஸ் 2 மாணவர்களுக்கு மே 25-ல் மதிப்பெண் சான்றிதழ்

          பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ள மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் மே 25-ம் தேதி வழங்கப்படும் என்று தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

             பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9 (திங்கள்கிழமை) வெளியிடப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை தேர்வுத்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. 

இந்த ஏற்பாடுகள் குறித்து தேர்வுத்துறை அதிகாரிகள் கூறியது: 

               பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்களைப் சரிபார்க்கும் பணியும், தவறுகளைத் திருத்தும் பணியும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்தப் பணிகள் அனைத்தும் சனிக்கிழமை மாலை நிறைவடையும். ஞாயிற்றுக்கிழமை மாலை அந்தந்தப் பள்ளிகளுக்கு மதிப்பெண் பட்டியல் அனுப்பிவைக்கப்படும். மாணவர்கள் தங்களது மதிப்பெண் விவரங்களை திங்கள்கிழமை தெரிந்துகொள்ளலாம். தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பிறகு, டேட்டா சென்டர்களில் மதிப்பெண் சான்றிதழ் அச்சடிக்கும் பணி தொடங்கும். 

              இந்தப் பணி பத்து நாள்களுக்கு மேல் நடைபெறும்.ஒவ்வொரு நாளும் அச்சடிக்கப்பட்டு வரும் மதிப்பெண் சான்றிதழ்களை தேர்வுத் துறை பணியாளர்கள் சரிபார்ப்பர். மதிப்பெண், பெயர் விவரங்கள், சான்றிதழின் உண்மைத் தன்மை ஆகியவற்றை சரிபார்த்த பிறகு அரசுத் தேர்வுகள் இயக்குநர் முத்திரை அதில் இடப்படும். மதிப்பெண் சான்றிதழ்களை முழுமையாகச் சேகரித்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு ஒரே நாளில் அனுப்பி வைக்கப்படும்.பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் மே 25-ம் தேதி மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மொத்தம் 7.7 லட்சம் மாணவர்கள்: 

            இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வை மொத்தம் 7 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் பள்ளிகள் மூலம் நேரடியாகவும், 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தனித் தேர்வர்களாகவும் எழுதினர். தேர்வு முடிவு மே 14-ம் தேதி வெளியிடப்படலாம் என்று பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் சபிதா அறிவித்தார். ஆனால், அவரது அறிவிப்பு தன்னிச்சையானது என்று கூறிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தேர்வு முடிவுகள் மே 9-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Read more »

கடலூர் அருகே உப்பங்கழிப் பகுதிகளில் உருவாக்கப்படும் சதுப்பு நிலக் காடுகள்


ஆலமரம் என்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் உருவாக்கப்பட்ட தில்லஞ்செடி காடுகள். (உள்படம்) ஆலமரம் அமைப்பினரால் நடப்படும் சுரபுன்னை விதைகள்.
 
கடலூர்:

            கடலூர் அருகே ஆலமரம் என்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் சார்பில், தில்லஞ்செடி என்ற மரங்களை பெருமளவில் வளர்த்து சதுப்பு நிலக் காடுகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. 

                தமிழகத்தில் சிதம்பரத்தை அடுத்த பிச்சாவரத்தில், சதுப்பு நிலங்களில் மாங்குரோவ் காடுகள் அதிகளவில் உள்ளன. அலையாத்தி காடுகள் என்றும் அழைக்கப்படும், இக்காடுகள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கடல் அரிப்பு, மீன் வளம் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் சதுப்பு நிலக்காடுகளால் விளைகின்றன. கடலூர் மாவட்டத்தில் உப்பங்கழிப் பகுதிகளில் சதுப்பு நிலக் காடுகள் பெருமளவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. எனினும் பராமரிப்பு இன்மை, ஆடு, மாடுகளால் சேதம், இயற்கை மாற்றங்கள், ரசாயனத் தொழிற்சாலைகளின் சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சதுப்பு நிலக் காடுகள் அழிந்து கொண்டு வருகின்றன. 

               எனவே கடலூர், சுற்றியுள்ள பகுதிகளில் சதுப்பு நிலக்காடுகளை வளர்ப்பதில் ஆலமரம் என்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு ஆர்வமுடன் செயல்பட்டு வருகிறது. சதுப்பு நிலக் காட்டு மரங்களில் 100-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. கடலூர் அருகே நொச்சிக்காடு, தியாகவல்லி, நடுத்திட்டு, குடிகாடு, ஈச்சங்காடு, ராசாப்பேட்டை, சொத்திக்குப்பம் பகுதிகளில் சதுப்பு நிலக் காடுகளில் வளரும் தில்லஞ்செடி என்ற வகை மரங்கள் பெருமளவில் இருந்தன. அவைகள் தற்போது பெரும்பாலும் அழிந்து கொண்டு இருக்கின்றன. உப்பனாற்றங்கரைகளில், உப்பங்கழிகளில் தில்லஞ்சடிகள் அதிகம் இருந்தால், அவற்றின் வேர் பகுதிகளில் கிலோ ரூ. 400 வரை விலை போகும் கல்நண்டு வகைகள், உயர் ரக இறால்கள், உப்பங்கழிப் பகுதி மீன்கள் பெருமளவில் உற்பத்தியாகும் என்றும், மற்ற மரங்கள், செடிகளைவிட தில்லஞ்செடிகள், 3 மடங்கு அதிகமாகக் காற்றில் உள்ள கார்பன் வாயுக்களை உருஞ்சும் தன்மை கொண்டவை என்று ஆய்வில் கண்டறியப்பட்டு இருப்பதாகவும் ஆலமரம் அமைப்பின் நிர்வாகியும், சமூக சேவகருமான தியாகவல்லி இளையராஜா தெரிவித்தார்.

                உப்பனாற்றில் சிப்காட் ரசாயன ஆலைக் கழிவுகள் கலப்பதாலும், ஆடு-மாடுகள் மேய்ச்சல், விறகுக்காக காடுகளை அழித்தல் போன்ற செயல்களால், தில்லஞ் செடிகள் பெருமளவு அழிவைச் சந்தித்து உள்ளன.இதனால் தில்லஞ்செடிகளை விதை போட்டு வளர்க்கும் முயற்சியில், சில ஆண்டுகளாக ஆலமரம் அமைப்பின் நிர்வாகிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் விளைவாக தியாகவல்லி, தோணித்துறை பழத்தோட்டம் பகுதிகளில் அதிகளவில் தில்லஞ்செடிகள் வளர்ந்து இருப்பதாக இளையராஜா தெரிவித்தார். மேலும் இச்செடிகளை யாரும் அழித்து விடாதவாறு பாதுகாக்கும் முயற்சியிலும் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இப் பகுதிகளில் தற்போது கல் நண்டு, இறால்கள், மீன்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், மேலும் எண்ணிக்கை பெருகிய பிறகு மீன்கள், இறால்கள் மற்றும் கல்நண்டுகளை பிடிக்க, உப்பனாற்று மீனவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் ஆலமரம் அமைப்பை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். 

            மேலும் தியாகவல்லி, நொச்சிக்காடு பகுதிகளில் உள்ள உப்பங்கழிகளை அடுத்துள்ள கரைகளில், சுரபுன்னை மரங்களின் பல்வேறு வகைகளின் விதைகளை நட்டு, பாதுகாக்கும் பணியிலும் இந்த அமைப்பு ஈடுபட்டு வருகிறது.

Read more »

சிறுதொழில்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கடலூர்:

              சிறுதொழில்களை அழிவில் இருந்து காப்பாற்ற தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும் என்று கடலூர் மாவட்ட சிறு, குறு தொழில்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.  

கடலூர் மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கத் தலைவர் எஸ்.அசோக், செயலாளர் ஜி.ராமலிங்கம், பொருளாளர் டி.தேவன் உள்ளிட்ட நிர்வாகிகள், வியாழக்கிழமை கடலூர் மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனு:  

                சிறு மற்றும் குறுந்தொழில்கள் நிறுவனங்களுக்கு மின் தடையில் இருந்து முற்றிலும் விலக்கு அளிக்க வேண்டும். நிலுவையில் உள்ள மின் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.  தமிழகம் மின் உற்பத்தியில் தன்னிறைவு அடையும் வரை தமிழகத்தில் உள்ள என்.எல்.சி. அனல் மின் நிலையம், கல்பாக்கம், கூடங்குளம் அணு மின் நிலையங்களின் முழு உற்பத்தியையும் தமிழகத்துக்கே வழங்க வேண்டும். பிற மாநிலங்களுக்கு வழங்கக் கூடாது.  உயர் அழுத்த மின்சாரம் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு, மாலை 6 முதல் இரவு 10 மணி வரை உள்ள மின் தடையை ரத்து செய்ய வேண்டும். 

                மின் தடை நேரங்களில் டீசல்  ஜெனரேட்டர்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்துக்கு ஒரு யூனிட்டுக்கு 10 சதவீதம் அரசு மானியம் வழங்க வேண்டும். ஜெனரேட்டர் மின்சாரத்துக்கு அதிகம் செலவிட வேண்டியது இருப்பதால், உற்பத்திப் பொருள்களை சந்தைப்படுத்தும் திறன் குறைந்து விடுகிறது.  வட மாநிலங்களில் இருந்து மின்சாரம் பெறும் வகையில், தென்னக கிரீடுகளின் திறனை அதிகரிக்க வேண்டும். ஜெனரேட்டர்களுக்கான வரியை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும். மின்சாரத்தை பயன்படுத்தாவிட்டாலும் குறைந்தபட்சக் கட்டணம் விதிக்கப்படுகிறது. 

              இதனால் பல நிறுவனங்கள் குறைந்தபட்சக் கட்டண அளவுக்கு மின்சாரத்தை வீணாகச் செலவழிக்கின்றன. மின் வெட்டு அமலில் இருக்கும் காலத்தில் குறைந்தபட்சக் கட்டண விதிப்பை ரத்து செய்து, பயன்படுத்தும் மின்சாரத்துக்கு மட்டும் கட்டணம் விதிக்க வேண்டும்.  மின் பற்றாக்குறையை சரிசெய்ய தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான மின் வெட்டை அமல்படுத்த வேண்டும். சென்னையில் மின் வெட்டு இல்லை, அல்லது ஒரு மணி நேரம் என்றும், மாநிலத்தின் பிறபகுதிகளில் பல மணி நேரம் மின் வெட்டு என்ற இரட்டை நிலை கூடாது என்றனர்.

Read more »

இன்று அட்சய திருதியை

             பழைய நகைகள் விற்பனை செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதன் எதிரொலியாக நேற்று ஒரே நாளில் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.176 குறைந்தது. இன்று அட்சய திருதியை என்பதால் ஏராளமானோர் நகை வாங்க முன்பதிவு செய்துள்ளனர்.

               சர்வதேச மார்க்கெட்டில் தங்கம் விலை குறைவதாலும், நல்லவிலை கிடைப்பதினால் பழைய நகைகளை ஏராளமானோர் விற்பனை செய்வதினாலும் வெளிநாட்டில் உள்ளவர்கள் தங்க கட்டிகளை வங்கிகள் மூலமாக விற்பனை செய்வதினாலும் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக இறங்கு முகமாக உள்ளது.

             இன்று (வெள்ளிக்கிழமை) அட்சய திருதியை ஆகும். இந்தநிலையில், தங்கம் விலை குறைந்து வருவது பெண்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. அட்சய திருதியை நாளான இன்று நகை வாங்குவதற்காக ஏராளமான பேர் நகைக்கடைகளில் முன்பதிவு செய்துள்ளனர். ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் வரக்கூடிய திருதியை திதியை அட்சய திருதியை என்று அழைக்கிறார்கள். அட்சய திருதியை அன்று தங்க நகை வாங்கினால் அந்த ஆண்டில் எல்லா வளமும் பெருகும் என்பதும், ஆண்டு முழுவதும் நகை வாங்கும் யோகம் கிடைக்கும் என்பதும் பெண்களிடையே அசைக்கமுடியாத நம்பிக்கையாக உள்ளது.

                இந்த ஆண்டு அட்சய திருதியை திதி நேற்று மாலை தொடங்கியது. வளர்பிறை நாளில் அட்சய திருதியை வந்துள்ளது. அதிலும் குருவாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமையில் அட்சய திருதியை திதி தொடங்கி இன்று (வெள்ளிக்கிழமை) மாலை வரையில் அட்சய திருதியை திதி இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. இன்று முகூர்த்த நாள் வேறு சேர்ந்து கொண்டது. எனவே, வழக்கத்தைவிட அதிக அளவில் நகை விற்பனை இருக்கும் என வியாபாரிகள் கருதுகிறார்கள்.

                 அட்சய திருதியை யொட்டி, பெரும்பாலான நகைக்கடைகள் சலுகைகளை அறிவித்துள்ளன. சில கடைகளில் தங்கத்தின் மார்க்கெட் விலையில் கிராமுக்கு ரூ.50 தள்ளுபடி என்றும், சில கடைகளில் ரூ.60 தள்ளுபடி என்றும், சில கடைகளில் செய்கூலி, சேதாரம் இல்லை என்றும் சலுகைகள் கடைக்கு கடை வித்தியாசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான விற்பனையைவிட அதிக அளவில் அட்சய திருதியை நாளில் விற்பனையாகிறது.

              சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் கடந்த ஆண்டு அட்சய திருதியை தினத்தில் 20 கிலோ தங்கம் விற்பனையானதாக தெரிவித்தனர். இந்த ஆண்டு அதைவிட அதிகமாக இருக்கும் என்று நம்புவதாகவும் தெரிவித்தனர். அட்சய திருதியை திதியை முன்னிட்டு, சென்னையில் உள்ள நகைக்கடைகளில் நேற்று மாலையே தங்கம் வாங்குவதற்கு பெண்கள் அதிக ஆர்வம் காட்டியதைக் காண முடிந்தது. தங்களுக்கு பிடித்த டிசைனில் நகை கிடைக்காத பட்சத்தில் சிலர் தங்க காசு வாங்கிச்சென்றார்கள்.

                 அட்சய திருதியை திதிக்காக, சென்னை தியாகராய நகரில் உள்ள நகைக்கடைகளில் சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. வழக்கமாக காலை 9 மணிக்கு மேல் திறக்கக்கூடிய கடைகள் அட்சய திருதியைக்காக இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கே திறக்கப்படும் என்று அறிவித்துள்ளனர். நேற்று முன்தினம் தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூ.16664-ஆகவும், ஒரு கிராம் ரூ.2083-ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் எதிர்பாராதவிதமாக தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.176 குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ.16 ஆயிரத்து 488-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.2061-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Read more »

கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் கண்டன ஊர்வலம்

 

ராஜபக்சே கொடும்பாவி எரிப்பு; 

விடுதலை சிறுத்தைகள் போராட்டம்

கடலூர்:

              இலங்கை அதிபர் ராஜபக்சேவை கைது செய்ய கோரி கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் கண்டன ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் திருமாறன் தலைமை தாங்கினார். துணை செயலாளர்கள் அறிவுடைநம்பி, செல்லப்பன், ராஜாமுகமது, கதிரவன், பொருளாளர் அன்பழகன், செய்தி தொடர்பாளர் ஆதவன், நகர செயலாளர் பாவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

              இதில் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் படத்தினை வைத்து அவருக்கு சவப்பாடைகட்டி, தாரை தப்பட்டையுடன் ஊர்வலமாக எடுத்து வந்தனர். கடலூர் உழவர் சந்தையில் இருந்து ஊர்வலம் தொடங்கி அண்ணாபாலம், புதுநகர் காவல் நிலையம் வழியாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே வந்து முடிந்தது. பாரதிசாலை அருகே ராஜபக்சேவின் கொடும்பாவி எரிக்கப் பட்டது. ஊர்வலத்தில் மாநில நிர்வாகிகள் திருமார்பன், பன்னீர்செல்வம், அணிகளின் மாவட்ட செய லாளர்கள் நாகவேந்தன், அரச்செல்வன், புரட்சி வேந்தன், மருதமுத்து, செந்தமிழ்செல்வன், காத்தவராயன், அறவாழி, ரகு, மற்றும் அறிவு உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கடலூர் ஒன்றிய அமைப்பாளர் ஜித்தன் நன்றி கூறினார்

Read more »

Small units in Cuddalore face touch-and-go situation

CUDDALORE:

         Micro and small enterprises in Cuddalore district are placed in a disadvantaged position vis-à-vis their counterparts in Puducherry.

         The reasons are extended power cuts, higher tariff structure, and, above all, disincentive to own captive power units, according to G.Ramalingam, secretary of the Micro and Small Enterprises Association of Cuddalore District. He told The Hindu that the Puducherry units were not dogged by the problem of load-shedding and, moreover, the power tariff was Rs. 3.50 per unit as against Rs 5.50 per unit in Tamil Nadu.

         Such a situation had denied a level-playing field to Cuddalore entrepreneurs, thereby making them to lose out to the Puducherry competitors in terms of price, production and productivity factors. Mr Ramalingam said that the precarious power situation had either forced the small units in the district to close down or cut down the production or to migrate to other places. In Cuddalore district there were at least 10,000 registered small units and several other unregistered units, with a total workforce exceeding one lakh.

         Mr Ramalingam said that because the three-hour load-shedding in force (from 10 a.m. to 1 p.m., and, 3 p.m. to 6 p.m. in turns) the labourers would have to be kept idle for the duration but they would have to be paid full wages. If the production process was halted abruptly due to hiccups in power supply, the quality of products would suffer, besides inflicting heavy material losses .

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior