உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மே 05, 2012

சிதம்பரம் நகர் பகுதிகளில் மாணவர்களின் அதிவேக பயணம் தொடரும் விபத்துகள்


அண்ணாமலைநகர் மேம்பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் அதிவேகத்தில் சென்ற மாணவர்கள், மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியதால் ஏற்பட்ட விபத்து.

சிதம்பரம்:

       சிதம்பரம் அண்ணாமலை நகர் பகுதிகளில் மாணவர்களின் அதிவேக மோட்டார் சைக்கிள் பயணத்தால் அடிக்கடி விபத்துகள் தொடர்கின்றன. இதனைக் கட்டுப்படுத்த போக்குவரத்து போலீஸார் துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதிகளிலும், சுற்றுப்புற பகுதிகளில் வீடு எடுத்தும் தங்கியுள்ளனர். இதில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் சுமார் 5 ஆயிரம் பேர் பயிலுகின்றனர். வெளிமாநிலங்களிலிருந்து வந்துள்ள பெரும்பாலான மாணவர்கள் விலை உயர்ந்த, அதிவேகத்தில் செல்லும் மோட்டார் சைக்கிள்களை வைத்துள்ளனர். இம்மாணவர்கள் கல்லூரியிலிருந்து தாங்கள் தங்கியிருக்கும் இடத்துக்கு குறிப்பிட்ட நிமிடத்தில் செல்வதாக மற்ற மாணவர்களிடம் பந்தயமிட்டு வேகமாக செல்கின்றனர்.

    இவையல்லாமல் இம்மாணவர்கள் எதிரிலும், அக்கம், பக்கத்தில் வரும் வாகனங்களை பற்றி சிறிதுகூட கவலைப்படாமல் அதிவேகத்தில் செல்வதால் தினம் ஒரு விபத்து ஏற்படுகிறது. அண்மையில் சிதம்பரம்-அண்ணாமலைநகர் ரயில்வே மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் அதிவேகத்தில் சென்ற மாணவர்கள், எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் இருவர் படுகாயமுற்றனர்.

மாணவர்கள் அதிவேகத்தில் மோட்டார் சைக்கிளில் செல்வதால் பல்கலைக்கழகத்துக்கு வாகனங்களில் செல்லும் ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவியர்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். வட்டார போக்குவரத்து துறையும், போக்குவரத்து காவல்துறையும் இணைந்து மாணவர்கள் மோட்டார் சைக்கிள்களில் அதிவேகத்தில் செல்வதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.


Read more »

ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோயில் தேரோட்டம்


ஸ்ரீமுஷ்ணத்தில் நடைபெற்ற ஸ்ரீபூவராகசுவாமி கோயில் தேரோட்டம்.

சிதம்பரம்:


 கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீபூவராகசுவாமி கோயில் தேர் திருவிழா வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக தொடங்கியது. ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீபூவராகசுவாமி கோயில் சித்திரை திருவிழா ஏப். 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா மே 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. உற்சவ மூர்த்தியான ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீயக்ஞவராகசுவாமி திருத்தேரில் எழுந்தருளி தேரோடும் நான்கு வீதிகளில் உலா வந்தார். திரளான பக்தர்கள் தேர்திருவிழாவில் பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுத்தனர். ஆனால் கடை வீதி அருகே வந்தபோது அங்கிருந்த கட்டட முகப்பின் மீது மோதி தேர் நின்றுவிட்டது. சனிக்கிழமை காலை தேரை நிலைக்கு கொண்டுசெல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தாரின் உதவியுடன் திருத்தேர் அச்சு மற்றும் சக்கரம் பொருத்தப்பட்டு, பழுதுபார்த்து கடந்த ஏப். 25-ம் தேதி திருத்தேர் திருப்பணி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தேர் நிலைக்கு வருவதில் தடை

தேர் கடைவீதி அருகே வந்தபோது கானூர் செட்டியாருக்கு சொந்தமான கட்டடத்தில் தேரின் மேல்பகுதி இடித்து அதில் சிக்கியது. இதனால் தேர் நிலைக்கு செல்வது தடைபட்டு நிறுத்தப்பட்டுள்ளது. இடிபாடுகளிலிருந்து தேரை நகர்த்தினால் தேரின் மேற்கூரை முற்றிலுமாக சேதமடையும் என்பதால் சனிக்கிழமை காலை தேரை சீரமைத்து நிலைக்கு கொண்டு வர கோயில் நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர். இதனால் சுவாமியுடன் தேர் அதே இடத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

















Read more »

வன்னியர் இளைஞர் பெருவிழாவில் கடலூர் மாவட்ட பா.ம.க.வினர் பங்கேற்க முடிவு

கடலூர்: 

மாமல்லபுரத்தில் சனிக்கிழமை நடைபெறவுள்ள சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழாவில் ஒரு லட்சம் பேர் கலந்துகொள்ள வேண்டும் என கடலூர் மாவட்ட பா.ம.க. தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. கடலூர் மாவட்ட பாமக அவசர ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடந்தது. கூட்டத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பில் உட்பிரிவுகளை கூறாமல் வன்னியர் குல சத்திரியர் என பதிவது, கடலூர் சுரங்கப்பாதை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்சியின் கடலூர் மாவட்டத் தலைவர் பழ.தாமரைக்கண்ணன் தலைமை தாங்கினார். மாநில இளைஞர் சங்க செயலர் அறிவுசெல்வன், மாறன் முன்னிலை வகித்தனர். தாஸ் வரவேற்றார். மாநில துணைப் பொதுச் செயலர்கள் ப.சண்முகம், திருஞானம் சிறப்புரையாற்றினர்.






Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior