உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 02, 2011

லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பு: அ.தி.மு.க.விற்கு வெற்றி வாய்ப்பு


சென்னை லயோலா கல்லூரியில் உள்ள மக்கள் ஆய்வகம் சார்பில் பேரவைத் தேர்தலையொட்டி நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பை பேராசிரியர் ராஜநாயகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டனர் 
 
               தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அணிக்கு சாதகமாக 105 தொகுதிகளும், தி.மு.க. அணிக்கு சாதகமாக 70 தொகுதிகளும் உள்ளதாக சென்னை லயோலா கல்லூரியில் உள்ள மக்கள் ஆய்வகம் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.மீதமுள்ள 59 தொகுதிகளில் இரு அணிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
            லயோலா கல்லூரியில் உள்ள மக்கள் ஆய்வகம் சார்பில் தமிழகம் முழுவதும் 117 பேரவைத் தொகுதிகளில் மார்ச் 21 முதல் 29 வரை கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. ஒவ்வொரு மக்களவைத் தொகுதிக்கும் மூன்று பேரவை தொகுதிகள் வீதம் மொத்தம் 117 தொகுதிகளில் 3,171 பேரிடம் கருத்துகள் சேகரிக்கப்பட்டன.பேராசிரியர் ச.ராஜநாயகத்தின் தலைமையில் மாணவர்கள், பேராசிரியர்கள் உள்பட 30 பேர் இதில் ஈடுபட்டனர்.சென்னை லயோலா கல்லூரியில் பேராசிரியர் ச.ராஜநாயகம் இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகளை வெள்ளிக்கிழமை வெளியிட, கல்வியாளர் ஹென்றி ஜெரோம் பெற்றுக்கொண்டார்.
 
கருத்துக் கணிப்பு முடிவுகள் விவரம்
 
                தற்போதைய சூழலில் எந்தக் கட்சிக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு 48.6 சதவீதம் பேர் அ.தி.மு.க. அணிக்கு வாக்களிக்கப்போவதாக தெரிவித்துள்ளனர். 41.7 சதவீதம் பேர் தி.மு.க. அணிக்கும், பிற கட்சிகளுக்கு 1.5 சதவீதம் பேரும், முடிவு செய்யவில்லை என்று 8.2 சதவீதம் பேரும் பதிலளித்துள்ளனர்.அதிமுக அணி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றும் என்று 51.1 சதவீதம் பேரும் , தி.மு.க. அணி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றும் என 36.7 சதவீதம் பேரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
 
ம.தி.மு.க. புறக்கணிப்பால் பாதிப்பில்லை
 
             ம.தி.மு.க.வின் தேர்தல் புறக்கணிப்பால் யாருக்கும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்று பெரும்பான்மையானோர் (53.6 சதவீதம்) கருத்து தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பால் அதிமுக அணி பாதிக்கப்படும் என நான்கில் ஒருவர் (25.4 சதவீதம்) கருத்து தெரிவித்துள்ளார். ம.தி.மு.க.வுக்குத்தான் பாதிப்பு என 7.4 சதவீதத்தினரும், தி.மு.க. அணியைப் பாதிக்கும் என 3.8 சதவீதத்தினரும் கூறியுள்ளனர்.
 
மின்வெட்டு முக்கியப் பிரச்னை
 
                   தங்கள் தொகுதியின் மிக முக்கியப் பிரச்னையாக மின்வெட்டை (25.2 சதவீதம்) பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். விலைவாசி உயர்வு, குடிநீர், போக்குவரத்துப் பிரச்னை, ரேஷன் உள்ளிட்ட பிரச்னைகள் அடுத்தடுத்த முக்கியப் பிரச்னைகளாக மக்கள் தெரிவித்துள்ளனர். எந்த அணியின் வேட்பாளர் ஜெயித்தாலும் தொகுதியின் பிரச்னை தீராது என 42.5 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். தங்களது தொகுதியில் உள்ள பிரச்னைகளை தி.மு.க. அணியினரோடு ஒப்பிடும்போது அ.தி.மு.க. அணியினரால் தீர்க்க முடியும் என்று சற்று அதிகமானோர் (33.7) கருதுகின்றனர்.
 
வாக்களிக்கப் பணம்
 
               பணம் வாங்கிக்கொண்டு வாக்களிப்பது தவறு என்று 80 சதவீதத்தினர் தெரிவித்திருந்தாலும், கடந்த தேர்தல்களில் ஒருமுறையாவது பணம் பெற்றதாக 47.9 சதவீதம் பேர் ஒத்துக்கொள்கின்றனர். பணம் வாங்கிக்கொண்டு தான் விரும்பும் வேறொருவருக்கு வாக்களிப்பது தவறல்ல என 31.5 சதவீதம் பேர் கருதுகின்றனர்.
 
அதிமுக அணிக்கு 105 தொகுதிகள்
 
               இந்த ஆய்வு நடத்தப்பட்ட காலக்கட்டத்தில், 5 சதவீதத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்துடன் அ.தி.மு.க. அணிக்கு சாதகமாக 105 தொகுதிகள் வரை உள்ளன. தி.முக. அணிக்கு சாதகமாக 70 தொகுதிகள் வரையும், மீதமுள்ள 59 தொகுதிகளில் கடுமையான போட்டியும் நிலவுகிறது. கடுமையான போட்டி நிலவும் தொகுதிகள் எந்த அணிக்குச் செல்லும் என்பது வாக்குப் பதிவுக்கு முன்பாக மதிமுக எடுக்கும் நிலைப்பாடு, பணப்பட்டுவாடா உள்ளிட்ட காரணங்களைப் பொருத்து அமையும்.தேர்தல் வியூகத்தில் தி.மு.க. முன்னிலை: தேர்தல் வியூகத்தை சிறப்பாகச் செயலாக்கி வருவதில் தி.மு.க. அணி முன்னிலைப் பெற்றுள்ளது. தேர்தல் அறிக்கை, சுமூகமான தொகுதிப் பங்கீடு, சரியான வேட்பாளர்கள் தேர்வு, சிறுபான்மையினர் ஆதரவு, டி.வி., பத்திரிகை விளம்பரம், தெருமுனைக் கூட்டம், தலைவர்களின் பிரசாரம் ஆகியவற்றில் தி.மு.க. அணி முன்னிலை பெற்றுள்ளது.உள்கட்சிப் பூசல் இன்மை, சுவரொட்டி, பேனர் விளம்பரம், வாக்காளருடன் நேரடிச் சந்திப்பு ஆகியவற்றில் அ.தி.மு.க. அணி முன்னிலை பெற்றுள்ளது.
 
கள அனுபவம், திகட்டும் சலுகை அறிவிப்புகள்:
 
            சலுகைகள், இலவச அறிவிப்புகள் குறித்த கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் மக்களைத் திகைத்துப்போக வைத்துள்ளன. அதேபோல், அனைத்துத் தொகுதிகளிலும், அனைத்துக் கட்சிகளிலும் பூசல்கள் மலிந்துள்ளன. சில சூழல்களில் மனக்கசப்பாகவும், சில சூழல்களில் வெளிப்படையான எதிர்ப்பாகவும் அவை உள்ளன.
 
தடை உத்தரவு போன்ற சூழல்
 
               தேர்தல் ஆணையத்தின் கடுமையான செயல்பாடுகளால், வழக்கமாகத் தேர்தல் காலங்களில் காணப்படும் திருவிழாச் சூழல் எங்கும் காணப்படவில்லை. பல இடங்களில் உள்ள வெளி மாநிலக் காவலர்களால் தடை உத்தரவு போடப்பட்டுள்ளதைப் போன்ற இறுக்கம் நிலவுகிறது.சுவர் விளம்பரத்துக்கு காட்டப்படும் கெடுபிடிகளால் சிறுகட்சிகளைச் சேர்ந்தவர்கள், சுயேச்சைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான இடங்களில் அவர்கள் குறித்த எந்த விவரமும் வாக்காளர்களுக்குத் தெரியவில்லை. எனினும், தேர்தல் ஆணையம் மிகப் பொறுப்பாக செயல்படுவதாக 60.5 சதவீதம் பேரும், தன்னுடைய அதிகார வரம்பை மீறிய கண்டிப்புடன் செயல்படுவதாக 24.7 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.
 
தே.மு.தி.க. வாக்கு வங்கிக்கு சேதமிருக்காது: பேராசிரியர் ராஜநாயகம்
 
               வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தே.மு.தி.க.வின் வாக்கு வங்கிக்கு சேதமிருக்காது என்று பேராசிரியர் ராஜநாயகம் தெரிவித்தார். லயோலா கல்லூரி சார்பில் கடந்த தேர்தல்களில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளில் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாக தே.மு.தி.க. இருப்பதாக கூறப்பட்டது. இந்த முறை தே.மு.தி.க. அ.தி.மு.க. அணியில் இணைந்திருக்கிறது. இது அந்தக் கட்சியின் வாக்கு வங்கியைப் பாதிக்குமா என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில்:தே.மு.தி.க. தனித்துப் போட்டியிட்டதால் அந்தக் கட்சிக்கு வாக்கு வங்கி உருவாகியுள்ளது. கூட்டணியில் போட்டியிடுவதால் வாக்கு வங்கியில் சிறிய சிராய்ப்பு ஏற்படலாம். ஆனால், பெரிய சேதம் ஏற்படாது. அ.தி.மு.க. அணியில் தே.மு.தி.க. இருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலம்
 
2-ஜி ஸ்பெக்ட்ரம் - கேட்கவில்லை:
 
                2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், தி.மு.க.வின் கடந்த 5 ஆண்டுகால ஆட்சி ஆகிய கேள்விகள் எங்களது கேள்விப்பட்டியலில் இடம்பெறவில்லை. மக்களைப் பாதிக்கும் விஷயங்களை அவர்களாகவே முன்வந்து தெரிவித்திருந்தார்கள்.மணல் கொள்ளை, திருப்பூர் சாயப்பட்டறை போன்ற பகுதிகள் சார்ந்த பிரச்னைகளை மக்கள் தாங்களாகவே முன்வந்து தெரிவித்தனர். 2-ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரமும் மக்களைப் பாதிக்கும் பிரச்னையாக இருந்தால் அவர்களாகவே தெரிவித்திருப்பார்கள். இது ஊடகங்களால் திணிக்கப்பட்ட பிரச்னையாகவே களத்தில் தெரிகிறது என்றார் ராஜநாயகம்.
 
             ஏற்கெனவே உங்களது கல்லூரியின் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்படாமல் தடுக்கப்பட்டதா என்ற கேள்விக்கு, என்னுடைய நேரடி மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வு இது ஒன்றுதான் என்றார்.
 
 
 
 

Read more »

2011 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கடலூர் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

கடலூர்:

              சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கடலூர் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.  

             கடலூர் மாவட்டத்தில் 9 தொகுதிகளுக்கும் 2011-ம் ஆண்டுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல், 10-1-2011-ல் வெளியிடப்பட்டது.  தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, தொடர்ச்சியாகத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி 16-3-2011 வரை 37,271 மனுக்கள் பெறப்பட்டு விசாரணை அடிப்படையில் 31,140 மனுக்கள் தகுதியானவை என்று கண்டறியப்பட்டு, பெயர்கள் சேர்க்கப்பட்டு உள்ளன.  

கடலூர் மாவட்டத்தில் 9 தொகுதிகளிலும் தற்போது உள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை தொகுதி வாரியாக:  


கடலூர் மாவட்டம்

மாவட்ட மொத்த வாக்காளர்கள் 16,76,117. 
ஆண்கள் 8,52,305. 
பெண்கள் 8,23,812. 

திட்டக்குடி (தனி): 

மொத்தம் 1,75,724. 
ஆண்கள் 88,711.
பெண்கள் 87,013. 

விருத்தாசலம்: 

மொத்தம் 1,95,839. 
ஆண்கள் 1,00,054. 
பெண்கள் 95,785. 

நெய்வேலி: 

மொத்தம் 1,66,077. 
ஆண்கள் 85,486. 
பெண்கள் 80,591. 

பண்ருட்டி: 

மொத்தம் 1,93,886. 
ஆண்கள் 97,252.
பெண்கள் 96,634. 

கடலூர்: 

மொத்தம் 1,81,846. 
ஆண்கள் 90,834. 
பெண்கள் 91,012. 

குறிஞ்சிப்பாடி: 

மொத்தம் 1,81,881. 
ஆண்கள் 93,381. 
பெண்கள் 88,500. 


புவனகிரி: 

மொத்தம் 2,07,469. 
ஆண்கள் 1,05,864. 
பெண்கள் 1,01,605. 

சிதம்பரம்: 

மொத்தம் 1,91,399. 
ஆண்கள் 96,560. 
பெண்கள் 94,839. 

காட்டுமன்னார்கோயில் (தனி):

மொத்தம் 1,81,996. 
ஆண்கள் 94,158, 
பெண்கள் 87,838. 



                மேற்காணும் வாக்காளர் பட்டியல், அனைத்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி ஆணையர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது.  பொதுமக்கள் தங்கள் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று உள்ளதா? என்று சரிபார்த்துக் கொள்ளலாம் என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் 4, 5 தேதிகளில் வாக்காளர் சீட்டு : ஆட்சியர்

கடலூர்:

              கடலூர் மாவட்டத்தில் 9 தொகுதிகளுக்கும் 4, 5 தேதிகளில் வாக்காளர் சீட்டு வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார்.  

ஆட்சியர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

              கடலூர் மாவட்டத்தில் 4-4-2011, மற்றும் 5-4-2011 ஆகிய இரு தேதிகளில் வாக்கு நிலை அலுவலர்களால் பொதுமக்களுக்கு வாக்காளர் சீட்டு வீடு வீடாக வழங்கப்படும்.  இந்த அரிய வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 9 தொகுதிகளுக்கும் வாக்காளர் சீட்டு கிடைக்கப் பெறாதவர்கள் கீழ்காணும் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத் தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தகவல் பெற்றுக் கொள்ளலாம்.  


கடலூர் 04142- 295189, 

பண்ருட்டி 04142- 242174, 

சிதம்பரம் 04144- 222322, 

காட்டுமன்னார்கோவில் 04144- 262053, 

விருத்தாசலம் 04143- 238289, 

திட்டக்குடி 04143- 255240, 

குறிஞ்சிப்பாடி 04142- 258901.  

                வாக்காளர் சீட்டை வாக்களிப்பதற்கான அடையாள ஆவணமாகப் பயன்படுத்தலாம். வாக்காளர் வசதிக்காக இது வழங்கப்படுகிறது. வாக்காளர் சீட்டைப் பெற்றுக் கொண்டு ஒப்புகை அளிக்க வேண்டும்.  வாக்காளர் சீட்டில் தவறுகள் இருந்தால் மேற்கண்ட வட்டாட்சியர் அலவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம். வாக்காளர் சீட்டில் தேர்தல் நடத்தும் அலுவலரின் நகல் கையொப்பம் இடம்பெற்று இருக் கும்.  

            வாக்காளர் சீட்டுகள் நிர்ணயிக்கப்பட்ட 2 தினங்களில் வழங்கப்பட்டுவிடும். சீட்டைப் பெற்றுக் கொண்டதற்கு ஆதாரமாக வாக்காளர் பட்டிலில் உள்ள குடும்ப நபர் ஒருவர், வாக்காளர் பட்டியலில் கையெழுத்திட வேண்டும். 2 நாள்களில் விநியோகிக்கப்படாத மீதம் உள்ள வாக்காளர் சீட்டுகள், தாலுகா அலுவலகங்களில் ஒப்படைக்கப்படும்.  

             வாக்காளர் சீட்டு விநியோகிக்கும்போது வாக்குச் சாவடி அலுவலர்கள், அரசியல்வாதிகளையோ உள்ளாட்சிப் பிரதிநிகளையோ உடன் அழைத்துச் செல்லக் கூடாது. தாலுகா அலுவலகங்களில் உள்ள உதவி மையங்களில் பெறப்படும் புகார்களுக்கு உடனடியாக உரிய பதில் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்றும் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

குறிஞ்சிப்பாடி நெசவாளர்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு: சொரத்தூர் ராஜேந்திரன்

நெய்வேலி:

             கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடித் தொகுதியில் உள்ள நெசவாளர்களின் பிரச்னை தீர நிரந்தரத் திட்டம் உருவாக்கப்படும் என குறிஞ்சிப்பாடித் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரன் கூறினார்.  

                 கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடித் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சொரத்தூர் ராஜேந்திரன், தொகுதிக்குட்பட்ட விருப்பாட்சி, பெத்தநாயக்கன்குப்பம், தம்பிப்பேட்டை, கஞ்சமாநாதன்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் வெள்ளிக்கிழமை வாக்குச் சேகரித்தார்.  அப்போது குறிஞ்சிப்பாடியில் உள்ள நெசவாளர்கள் நெய்யும் ஆடைகளுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு கிட்டியது. ஆனால் நெசவாளர்களின் தேவையறிந்து செயல்படக் கூடிய மக்கள் பிரதிநிதி இல்லாததால், இப்பகுதி நெசவாளர்கள், மிகவும் நலிவடைந்துள்ளனர்.  

              நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்று வேறுதொழில் தெரியாமல், அல்லல்பட்டு வருகின்றனர். மேலும் இத்தொழிலை ஊக்குவிக்கும் வகையில் யாரும் செயல்படவில்லை.  எனவே இப்பகுதி நெசவாளர்களின் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்பட பாடுபடுவேன் எனவும், அதற்கு இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் ராஜேந்திரன் கேட்டுக் கொண்டார்.

Read more »

மதுரை காமராஜர் பல்கலைக்கழக தேர்வுகள்: மே 18ல் துவக்கம்

மதுரை : 

         மதுரை காமராஜர்  பல்கலை தொலைநிலைக் கல்வி இளநிலை மாணவர்களுக்கான தேர்வுகள் மே 18ம் தேதி முதல் துவங்குகிறது.

          இளங்கலை பட்டப் படிப்பிற்கு மே 18, முதுகலை பட்டப் படிப்பு, தொழில்சார் பட்டப் படிப்புகள் மற்றும் பி.எட்., - எம்.எட்., படிப்புகளுக்கு மே 25ம் தேதி, எம்.பில்., மே 27ம் தேதி துவங்குகின்றன. இதற்கான விண்ணப்பங்களை ஏப்., 20 மற்றும் பி.எட்., - எம்.எட்., படிப்புகளுக்கு ஏப்., 25ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை www.mkudde.org இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம் என, பல்கலை கூடுதல் தேர்வாணையர் சேதுராமன் தெரிவித்தார்.

Read more »

Cuddalore district has over 16 lakh voters

CUDDALORE: 

          Collector P.Seetharaman released the supplementary electoral rolls at his Camp Office here on Friday.

        He told presspersons that on the direction of the Election Commission, the rolls had been revised with March 16, 2011 as the cut-off date. Accordingly, a total of 37,271 petitions were received and after field verification, 31,140 names were included in the voters' lists.

As per the revised figures there are 16,76,117 voters, 
including 8,52,300 men 
and 3,23,812 women and five others, 
in the nine Assembly constituencies.

The Collector said that the new created Neyveli constituency has the lowest number of voters, 1,66,077, and Bhuvanaigiri, the highest, 2,07,469.

The Assembly segment-wise voters are as follows:

Thittakudi (Reserve) – 1,75,724 (88,711 men and 87,013 women); 
Vriddhachalam – 1,95,839 (1,00,05 men and 95,780 women); 
Neyveli – 1,66,077 (85,486 men and 80,591 women) 
Panruti – 1,93,886 (97,252 men and 96,634 women).
Cuddalore – 1,81,846 (90,834 men and 91,012 women); 
Kurinjipadi – 1,81,881 (93,381men and 88,500 women); 
Bhuvanaigiri – 2,07,469 (1,05,864 men and 1,01,605 women); 
Chidambaram – 1,91,399 (96,560 men and 94,839 women); 
Kattumannarkoil (Reserve) 1,81,996 (94,158 men and 87,838 women).

          The rolls have been displayed for public view in the offices of the Revenue Divisional Officer, Municipal Commissioners, taluk offices and the Collectorate. The Collector further said that booth level officers would be handing over booth slips, carrying the name, address and photographs, of the voters at their doorstep on April 4 and 5. Mr. Seetharaman called upon the people to extend cooperation to the officers and if there were any shortcomings such as mis-spelt names or change of format they could convey the message to the helpline set up in the respective taluk offices.

Read more »

Short film, skits to spread awareness in Cuddalore



A campaign to create awareness among voters apace in Cuddalore.

CUDDALORE: 

        Even as parties battle it out for the coming elections, the Election Commission has launched a campaign for the Assembly elections, but with a difference.

          While the political parties are seeking votes for their respective candidates and symbols, the Election Commission is trying to impress upon the voters to discharge their democratic duty of casting votes, as per their conscience, Elecwithout fail. The timings of the poll campaign applicable to the political parties also apply to the awareness campaign which has to be wound up by 10 p.m.

            The officialdom has roped in a galaxy of actors, including Suriya, Karthi, Rohini, Suhasini and Jayam Ravi, and sportspersons such as Krishnamachari Srikkanth and Mahendra Singh Dhoni to drive home the message through a video programme being screened in the van belonging to the information and publicity wing at public places.

         Titled ‘Voter education and electoral participation,' the short film calls for greater voter participation for ushering in a stronger democracy. The pre-requisite is “be the change you want to see.” Chief Electoral Officer Praveen Kumar in his brief appearance says that the election is being conducted in a transparent manner and any complaints could be registered over the toll-free telephone number 1965

         Additional Electoral Officer P. Amudha says that the officials would issue the booth slips, carrying the names, addresses and the photographs of the voters. She emphasises that all must vote as per their conscience to establish the people's rule. Former President A.P.J. Abdul Kalam says that “you want to move ahead, further ahead, for which you need to exercise your democratic right this time and every time.” Mr Srikkanth and Mr Dhoni too advocate voting without any fear or favour.

            Moreover, to reach the constituencies of the illiterates, semi-literates and the youth, the Election Commission has also strung together a few skits. For instance, two boys stalking a girl are taken by surprise when she turns back and asks them how come they are trailing her to every place except the polling station. Her remarks that “only a good citizen can make a good family man” prompts them to immediately rush to the polling station. In another enactment, a man tells his wife that he is going to school to seek LKG admission for their child.

            Since, it happens to be a polling day, she suggests that they should not shirk their democratic responsibility and therefore should take turns in the queues at the school and at the polling station because the future well-being of the country is as important as that of their child. Certain youths also crisply convey the message that ill health, migration, government holiday and work compulsion should not deter the voters from going to the polling stations.

           While shifting residences the people never forget to change the address in the ration cards and the electricity bills, and, in the case of electoral rolls also they should act with equal alacrity. The campaign-van that attracts the curious onlookers then rolls on to another destination.

Read more »

Change in EVM format sought

CUDDALORE: 

           The residents of Cuddalore have made an appeal to Chief Electoral Officer Praveen Kumar to change the format of the candidates' lists to be inserted in the Electronic Voting Machines.

          The Federation of All Residents Welfare Associations-Cuddalore in a representation to the CEO has stated that hitherto the lists were prepared on the alphabetical order of the candidates' names. This presented a jumbled appearance as the Independents would get precedence over the candidates of the recognised and registered political parties and this baffled the electorate. Therefore, to avoid any such confusion, the candidates' lists should be prepared starting with the candidates of the recognised parties followed by that of the registered parties and the Independents. 

           It further stated that since there were restrictions on publicity materials, the electorate did not get the opportunity to know the candidates. Hence, it would be appropriate to display the details of the candidates, including their assets and antecedents, in public places for the perusal of the voters of the respective constituencies at the expense of the Election Commission.

          It called for putting the poll expenses of the candidates, as and when these were filed with the returning officers, in public domain by posting these on the Internet. The Federation called for closure of the TASMAC retail outlets and attached bars from April 1 to 13, the day of polling. It suggested provision of transport by the Election Commission for the fully disabled voters and those crossed 80 years of age, and, setting up of separate polling stations for the hospitalized voters.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior