உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜனவரி 08, 2010

Students and teachers of special schools take out procession

They demand time payscale for teachers in special schools

“Government must post 750 teachers, 250 women helpers, 250 office assistants”



Pressing demands: Children and teachers of special schools taking out a procession in Cuddalore on Thursday. — 
 
CUDDALORE:

            The students and teachers of special schools in Cuddalore, Villupuram and Nagapattinam districts took out a rally here on Thursday in support of their demands.

Demands 
 
         It was held under the aegis of the Cuddalore branch of the All India Confederation of Organisations for Persons with Mental Disability. According to M.Ravichandran, State president of the organisation, the demands included time-scale pay for the teachers in special schools and speedy distribution of benefits announced by the government for the differently abled persons. According to the 2001 Census, there were two lakh mentally challenged persons in the State, and 250 special schools run by the service organisations were catering to their needs.

Teachers appointed 
 
              Mr. Ravichandran pointed out that till 1992, the government had appointed 32 teachers in special schools, but later, no postings were made. In view of the present and future needs, the government must post at least 750 teachers, 250 women helpers and 250 office assistants in special schools.Correspondents and non-teaching staff of at least 18 special schools such as Oasis, G.V.Dhaya, Santhi Jain, Vela and John, and hundreds of students and parents took part in the rally that wound its way from the Periyar statue to the Collectorate. Later, the office-bearers of the organisation handed over a memorandum to District Collector P.Seetharaman. Those participated on the occasion included K.Kumar, district president and Kavi.Thavaraj, secretary.

Read more »

Move to re-induct retired employees opposed

CUDDALORE:

     The 11th State-level conference of the Centre of Indian Trade Unions (CITU) has urged the Tamil Nadu government to withdraw the order for appointing retired employees in existing vacancies.

                     In a resolution adopted on Wednesday, the CITU stated that when 62 lakh people, both men and women, were on the rolls of the employment offices for the past several years, such an order would close the employment avenues to them and cause frustration and dejection. It refuted the claim of Chief Minister M.Karunanidhi that in the past three years, 3.44 lakh jobs were created. It stated that in reality only 70,000 people were posted in permanent jobs and still there existed 2.25 lakh vacancies in various government departments. The conference extended its support to the agitation of the Democratic Youth Federation of India scheduled for Thursday to urge the government to rescind its order in this regard.

                      In another resolution, the CITU called for fair deal to lakhs of women employed in various sectors and formation of complaint committees in working places as directed by the Supreme Court to check sexual abuse. The CITU called upon the Centre to scrap the new pension scheme because the linking of pension funds to the volatile stock markets and government bonds would yield doubtful results and hence, make the retirement period an uncertain one.

Read more »

Students boycott classes

CUDDALORE: 

         Students of Kolanjiappar Government Arts College at Viruddhachalam boycotted classes on Thursday, seeking basic amenities and speedy opening of a girls’ hostel and a playground. There was water scarcity and inadequate toilet facility at the boys’ hostel, they claimed. Police pacified the protestors and saying that arrangements would be made soon to hold talks with Revenue Department officials.

Read more »

CITU State unit president re-elected

CUDDALORE: 

            Incumbent State president of the Centre of Indian Trade Unions (CITU), A.K. Padmanabhan, has been re-elected to the post for another two years at the 11th State-level conference that concluded here on Wednesday.
 

        The new office-bearers are: A. Soundararajan – general secretary, P.M. Kumar – treasurer (both re-elected), and R. Singaravelu, K. Palanivelu and V. Kumar – assistant general secretaries. There are 13 vice-presidents, including T.K. Rengarajan, MP, and 16 secretaries. According to Mr. Soundarajan, the CITU was aiming at increasing its membership in Tamil Nadu from the present two lakhs to three lakhs in one year.

Read more »

ஊராட்சிகளின் திட்டங்களுக்கு ரூ. 10 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு

கடலூர்: 

                கடலூர் மாவட்டத்தில் உள்ள 483 ஊராட்சிகளுக்கு திட்டங்களுக்காக ரூ. 10.23 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார்.

ஆட்சியர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

        கடலூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சி நிதிக் கணக்கில் உள்ள உபரிநிதியை திட்டப்பணிகளுக்கு செலவிட நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.÷483 ஊராட்சிகளில் கணக்கு எண். 2-ல் உள்ள (மின்சாரக் கட்டணம், கூட்டுக் குடிநீர், மற்றும் ஆட்சியர் பெயரில் மட்டுமே காசோலை வழங்கக் கூடியவை) உபரித் தொகை ரூ. 10 கோடியே 23 லட்சத்து 88 ஆயிரத்து ஐம்பத்தி ஒன்றை அவ்வூராட்சிகளின் கணக்கு எண். 3-க்கு (திட்டப் பணிகளுக்காக காசோலை வழங்கக் கூடியை) மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இத்தொகையைக் கொண்டு பள்ளிகளில் 50 சமையல் கூடங்கள், 236 தெருவிளக்குகள் அமைத்தல், 193 பள்ளிகளுக்கு மதில் சுவர் கட்டுதல், 12 மயானக் கொட்டகை கட்டுதல், 41 அங்கன்வாடிக் கட்டடங்கள் கட்டுதல் போன்ற பணிகளை ஊராட்சிகள் மூலம் அரசு விதிகளின்படி ஒப்பந்தப் புள்ளி கோரி மேற் கொள்ள வேண்டும். அங்கன்வாடிக் கட்டடம் மற்றும் பள்ளி சமையல் அறைகள் அங்கீகரிக்கப்பட்ட  மாதிரியில் கட்டப்பட வேண்டும். மயானக் கொட்டகை அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்ட மாதிரியில் கட்ட வேண்டும். அனைத்து பணிகளுக்கும் தொழில்நுட்ப அலுவலரின் அளவுகள் பதியப்பட வேண்டும் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.86 லட்சம் மோசடி: 4 பேர் கைது

கடலூர் :

              தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் போலி ஆவணங்கள் தயாரித்து 86 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். கடலூரை அடுத்த வெள்ளக்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், 1999ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை நிலம் இல்லாதவர்களுக்கு நிலம் இருப்பதாகவும், ஏற்கனவே ஒருவருக்கு கடன் வழங்கப்பட்ட நிலத்தில் வேறு ஒருவர் பெயரில் போலி ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு கடன் பெற்றது, போலி நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றது என, 86 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

               இதனடிப்படையில் வங்கியில் பணிபுரிந்த 17 பேர் கடந்த ஆண்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இது குறித்து வெள்ளக்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் துணை பதிவாளர் சுப்ரமணியன் கொடுத்த புகாரின் பேரில், கடலூர் வணிகவியல் குற்றப்புலனாய்வு பிரிவு டி.எஸ்.பி., ரீட்டா தலைமையிலான போலீசார், 85 உறுப்பினர்கள், 17 வங்கி பணியாளர்கள், எட்டு வி.ஏ.ஓ.,க்கள் உட்பட 110 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.

                  இந்நிலையில் 10 பேர் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து ஆறு லட்சம் மோசடி செய்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உறுப்பினர் கோண்டூர் சிவமுத்து(38), நிலம் இல்லாதவர்களுக்கு நிலம் இருப்பதாகக் கூறி ஆவணங்கள் தயாரித்து 8.36 லட்சம் ரூபாய் மோசடி செய்த முன்னாள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் வி.காட்டுப்பாளையம் கிருஷ்ணமூர்த்தி(58) மோசடிக்கு உடந்தையாக இருந்த வங்கியின் காசாளர் கீழ்மாம்பட்டு லோகநாதன்(39) உர விற்பனையாளர் ராமாபுரம் வேல்முருகன்(35) ஆகியோரை போலீசார் கைது செய்து கடலூர் மாஜிஸ்திரேட் கோர்ட்-1ல் ஆஜர்படுத்தினர்.

Read more »

மத்திய அரசை தி.மு.க., ஆதரிப்பது துரதிருஷ்டமானது: சி.ஐ.டி.யூ., அகில இந்திய தலைவர் பேச்சு

கடலூர் :

              மக்கள் விரோத மத்திய அரசை தி.மு.க., ஆதரிப்பது துரதிருஷ்டமானது என சி.ஐ.டி.யூ., அகில இந்திய தலைவர் எம்.கே.பாந்தே பேசினார். இந்திய தொழிற் சங்க மையம் (சி.ஐ.டி.யூ.,)

தமிழ்நாடு மாநில மாநாட்டின் நிறைவு விழா பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

அரசின் கொள்கைகள் பணக் காரர்களை மேலும் பணக்காரர்களாக உயர்த்துவதாக உள்ளது.

                 ஏழை  மக்களின் வளர்ச்சிக்கு எந்த திட்டமும் இல்லை. நேரு, லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காலத்தில் எங்களுக்குள் கருத்துவேறுபாடுகள் இருந்தன. அவர்கள் மக்களுக்கு விரோதமாக செயல்படவில்லை. எந்த நாட்டையும் சார்ந்து இருக்கவில்லை. தற்போதைய காங்., அரசு அமெரிக்க அரசை சார்ந்துள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந் துள்ளது. அதனை தடுக்க மத்திய அரசு  நடவடிக்கை எடுக்கவில்லை. தடை செய்ய வேண்டிய "ஆன் லைன்' வர்த்தகத்தை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதன் மூலம் முதலாளிகள் பொருட்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் வருகையால் இந்தியாவில் நான்கு கோடி சிறு மற்றும் சில்லறை வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளனர்.

              நேரு பொதுத்துறை நிறுவனங்களை உச்ச நிலைக்கு கொண்டு செல்ல பாடுபட்டார். தற்போதைய  மன்மோகன் அரசு அவர் கொள்கைக்கு எதிராக பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கி வருகிறது.வங்கியில் 74 சதவீதம் நேரடி அந்நி ய முதலீடு செய்யும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளது. இது எதிர்காலத்திற்கு ஆபத்தானது.வேலை வாய்ப்பை உருவாக்கும் விதத்தில் அரசின் கொள்கைகள் இருக்க வேண்டும். ஆனால் அரசு வேலை நியமன தடை சட்டத்தை அமல் செய்து வருகிறது. சீனாவில் வழங்குவது போல்  தொழிலாளர்களுக்கு வேலை இல்லா கால நிவாரணம் வழங்க வேண்டும்.

               நாடு முழுவதும் 500  சிறப்பு பொருளாதார மண்டலங்களை மத்திய அரசு நிறுவியுள்ளது. இதனால் முதலாளிகள் வருமான வரி, கலால் வரி, சுங்க வரி கட்ட தேவை இல்லை. இது நாட்டை தனியாருக்கு தாரைவார்க்கும் செயலாகும். மக்கள் விரோத மத்திய அரசை தி.மு.க., அரசு ஆதரிப்பது துரதிருஷ்டமானது. மத்திய அரசு கண்மூடித்தனமாக தமிழக அரசை ஆதரித்து வருகிறது. இதனால் தி.மு.க., எம்.பி.,க்கள் ஊழல் செய்கின்றனர். தி.மு.க., அமைச்சர் ராஜா 60 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க இடதுசாரிகள் வலியுறுத்தின. ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை. தமிழகத்தில் சி.ஐ.டி.யூ., வலிமை மிக்க சக்தியாக உருவெடுத்துள்ளது. மார்ச் 5ம் தேதி நடக்கும் சிறை நிரப்பும் போராட்டத்தில் லட்சக்கணக்கில் தொண்டர்கள் பங்கேற்று போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு எம்.கே.பாந்தே பேசினார்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் ஜன.10ம் தேதி 2.48 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து: துணை இயக்குனர் மீரா தகவல்

கடலூர் :

             கடலூர் மாவட்டத்தில் ஜன. 10ம் தேதி 2.48 லட்சம் குழந்தைகளுக்கு போலி யோ சொட்டு மருந்து போடப்படும் என சுகாதாரத்துறை துணை இயக்குனர் மீரா கூறினார்.  இது குறித்து  சுகாதார  துறை துணை இயக்குனர் மீரா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கடலூர்  மாவட்டத்தில்  ஜனவரி 10  மற்றும்  பிப்ரவரி 7 ஆகிய தேதிகளில்  இரு தவணையாக போலி யோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது. 

               தமிழ் நாட்டில்  உள்ள அனைத்து 0-5 வயதுள்ள குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போடப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் 1998 பிறகு போலியோ பாதிப்பு எந்த ஒரு குழந்தைக்கும் ஏற்படவில்லை  என ஆய் வறிக்கை உறுதிபடுத்தி உள்ளது. இருப்பினும் காற் றின் மூலம் பவும் போலி யோ வைரஸ் தாக்கம் இனியும் தமிழகத்தில் அறவே கூடாது என்ற நோக்கத்தில் மத்திய மாநில அரசின் உத்தரவுபடி  ஆண்டுதோறும்  இரண்டு தவணையாக போலியோ செட்டு மருந்து போடப்படுகிறது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளிகூடம், சத்துணவு மையம்  போன்ற இடங்களில் முகாம் தேர்வு செய்யப் பட்டுள்ளன. தேர்வு செய் யப்பட்டுள்ள 1512 மையங் கள்  மற்றும்  சிறப்பு மையங்கள், மாவட்ட  எல்லையோர குடிசை பகுதி, புதியதாக  உருவான காலனிகள் ஆகிய இடங்களில்101 சிறப்பு மையங்கள் அமைக்கபட்டுள்ளன. ஒவ்வெரு தவணையிலும் 2 லட்சத்து 28 ஆயிரத்து105 குழந்தைகளுக்கு போலி யோ  சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதற் காக  இயக்குனகரத்திலிருந்து 3 லட்சத்து 67 ஆயிரத்து 200 டோஸ் போலியோ மருந்து தருவிக்கப்பட்டுள்ளது.

         ஒவ்வொரு மையத்திலும் 4 பணியாளர்கள் பணியில் இருப்பர். இவர்கள் தவிர தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள், என்.சி.சி., மாணவர்கள், அங்கன்வாடி பணியாளர் கள், சுயஉதவிக்குழுக்கள் உள்ளிட்டோர் பணியில் ஈடுபட உள்ளனர். குழந்தைகளுக்கு போடப் படவுள்ள சொட்டு மருந்து குறித்தோ, பின் விளைவுகள் குறித்தோ பொது மக்கள் எவரும் ஐயப்படத்தேவையில்லை. தேவையற்ற வதந்திகளை நம்பவேண் டாம். இவ்வாறு சுகாதாரத் துறை துணை இயக்குனர் மீரா கூறினார்.

Read more »

விருத்தாசலத்தில் அடிப்படை வசதிகள் கோரி கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

விருத்தாசலம் :

                  விருத்தாசலம் அரசு கொளஞ்சியப்பர் கல்லூரி மாணவர்கள் அடிப்படை வசதிகள் கோரி வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். விருத்தாசலம் அரசு கொளஞ்சியப்பர் கல்லூரி மாணவர்கள்  குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப் படை வசதிகள் செய்து தரக் கோரியும், கடந்த 10 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருக்கும் மாணவியர் விடுதியை திறக்கக் கோரியும் நேற்று காலை வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

                   பின்னர் கல்லூரி சாலை வழியாக மணல் அள்ள மாட்டு வண்டிகள் தினந்தோரும் செல்வதால் மாணவ- மாணவிகளுக்கு இடையூறாக இருப்பதாக கூறி கல் லூரி சாலையில் சென்று கொண்டிருந்த மாட்டு வண்டிகளை சிறை பிடித்தனர். மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய இன்ஸ்பெக்டர் பசுபதி கல்லூரி சாலை வழியே மாட்டு வண்டிகள் செல்லாதபடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த பின் மாணவர்கள் கலைந்து சென்றனர். கல்லூரி மாணவர்கள் தமிழரசன், சுதாகர், ரவி ஆகியோர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தாரை சந்தித்து மனு கொடுத்தனர்.

Read more »

தங்கத்தின் தரம் கண்டறியும் பயிற்சி: கடலூரில் வரும் 23ம் தேதி துவக்கம்

கடலூர் :

                  கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் தங்கத்தின் தரம் கண்டறியும் பயிற்சி வகுப்பு வரும் 23ம் தேதி துவங்குகிறது. இது குறித்து கடலூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வெங்கடேசன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: கடலூரில் இயங்கி வரும் எம்.ஜி.ஆர்., கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதி நேர நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வரும் 23ம் தேதி முதல் துவங்குகிறது. அதில் நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும், அடிப்படை உலோகவியல், உலோகத்தின் பயன்பாடு, தங்கம் பற்றிய அடிப்படை விவரம், தங்கத்தின் விலை கணக்கிடும் முறை, தங்கத்தை அழித்து தரம் அறியும் முறை, அழிக்காமல் தரம் அறியும் முறை, நகைகளின் வகைகள் கண்டறிதல், வங்கிகளில் நகை கடன் வழங்கும் முறை, ஹால் மார்க், அடகு பிடிப்போர் நடைமுறை சட்டம் உள்ளிட்ட பாடங்கள் குறித்து 40 மணி நேர பயிற்சியும், 30 மணி நேரம் நகை செய்யும் பயிற்சியும், 30 மணி நேரம் உரைக்கல் முறையில் தங்கத்தின் தரம் கண்டறியும் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

                பயிற்சியின்போது தேவையான உபகரணங்கள் வழங்கப்படும். பயிற்சி முடிவில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் சான்று வழங்கப்படும். வாரத்தில் சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் என தொடர்ந்து 8 வாரங்கள் நடக்கும் இப்பயிற்சியில் சேர 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் 18 வயது முடிந்த ஆண், பெண் சேரலாம். பயிற்சியில் சேர விரும்புவோர் கடலூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்திற்கு புகைப்படத்துடன் நேரில் வந்து 50 ரூபாய் செலுத்தி விண்ணப்பம் பெற்று, பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் பயிற்சி கட்டணமாக 2,600 ரூபாய் செலுத்த வேண்டும்.

Read more »

அரசின் நலத்திட்டங்கள் வழங்காமல் சி.என்.பாளையம் ஊராட்சி புறக்கணிப்பு

நடுவீரப்பட்டு :

           சி.என்.பாளையம் ஊராட்சிக்கு அரசின் நலத் திட்டங்கள் வழங்காமல் அதிகாரிகள் காலம் கடத்தி வருவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். பண்ருட்டி அடுத்த சி.என். பாளையம் ஊராட் சிக்கு அரசின் நலத்திட் டங்களான இலவச கலர் டிவி,கேஸ் அடுப்பு, இரண்டு ஏக்கர் நிலம் போன்றவைகள் வழங்காமல் அதிகாரிகள் காலம் கடத்தி வருகின்றனர்.

             கடலூர் ஒன்றியத்தில் உள்ள அதிக மக்கள் தொகை உள்ள ஊராட்சிகளில் இதுவும் ஒன்று என அதிகாரிகள் காரணம் கூறிவந்தனர். கடலூர் ஒன்றியத்தில் அதிக மக்கள் தொகை உள்ள பாதிரிக் குப்பம், ராமாபுரம் போன்ற ஊராட்சிகளில் அரசின் இலவச கலர் "டிவி' வழங்கப்பட்டு விட் டன. ஆனால் அதை விட மக்கள் தொகை குறைவாக உள்ள சி.என்.பாளையம் ஊராட்சிக்கு மட்டும் இதுவரை எதுவும் வழங் கப்படவில்லை.  நடுவீரப்பட்டு ஊராட் சியில் இலவச கலர்  "டிவி'க்கு டோக்கன் வழங்கி மூன்று மாத மாகியும்  இதுவரை கலர் "டிவி' வழங்கப்படாமல் உள்ளது.

Read more »

இலவச பொது மருத்துவ முகாம்

ராமநத்தம் :

           லப்பைகுடிகாடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது. சின்னையா நினைவு அறக்கட்டளை, பெரம்பலூர் லட்சுமி மருத்துவமனை, மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடந்த முகாமிற்கு லப்பைகுடிகாடு பேரூராட்சி தலைவர் நூர் ஜகான் தலைமை தாங்கினார். த.மு.மு.க., மாவட்ட தலைவர் மீராமொகைதீன், பொருளாளர் முகமது இலியாஸ், முன்னாள் மாவட்ட தலைவர் ஹசன் முகமது, தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் செல் லதுரை முன்னிலை வகித்தனர்.

              லட்சுமி மருத்துவமனை டாக்டர் கதிரவன் வரவேற்றார். முகாமை மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சுல் தான் மொகைதீன் துவக்கி வைத்தார்.டாக்டர் கருணாகரன் தலைமையில் டாக்டர்கள் ஜெயலட்சுமி, அறிவழகன், கருணாநிதி, சேசு குழுவினர் பொதுமக்களுக்கு சர்க்கரை, ரத்த கொதிப்பு நோய் கண்டறிதல், இ.சி.ஜி., ஸ்கேன், எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை, பல் மருத்துவ சிகிச்சை, மகப்பேறு மற்றும் மகளிர் நோய்,பொது அறுவை சிகிச்சை, குழந்தையில் லாமை உள்ளிட்டவைகளுக்கு சிறப்பு ஆலோசனை வழங்கப்பட்டது. இவர்களில் 40 பேர் மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டனர்

Read more »

ஸ்ரீநெடுஞ்சேரியில் கண்ணொளி காப்போம் திட்டம்

ஸ்ரீமுஷ்ணம் :

          ஸ்ரீமுஷ்ணம் அருகே கண்ணொளி காப் போம் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன. ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்த ஸ்ரீநெடுஞ்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கும் விழா நடந்தது.

               பள்ளி தலைமை ஆசிரியர் வீரபாண்டியன் தலைமை தாங்கினார். ஸ்ரீநெடுஞ் சேரி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சவுந்திர பாண்டியன், பொருளாளர் ராஜவேல் முன்னிலை வகித்தனர். ஆயங்குடி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் குலோத்துங்க சோழன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு கண் கண்ணாடிகளை வழங்கி கண்களை பாதுகாப்பது குறித்து பேசினார். இதில் ஸ்ரீநெடுஞ்சேரி பள்ளியை சேர்ந்த 29 மாணவ, மாணவிகளுக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டன. ஊராட்சி மன்ற துணை தலைவர் வள்ளியம்மை, கண் மருத்துவ உதவியாளர் மகேஷ், கிராம செவிலியர் தமிழரசி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரயில் பிப்ரவரி இறுதியில் இயக்க நடவடிக்கை

சிதம்பரம் :

                "விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரயில், பிப்ரவரி இறுதி வாரத்தில் இயக்கப்படும்' என, திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் சுப்ரமணியன்  தெரிவித்துள்ளார். விழுப்புரம் - மயிலாடுதுறை 122 கி.மீ., தூர மீட்டர் கேஜ் பாதையை, அகலப்பாதையாக மாற்றும் பணி, 2006ம் ஆண்டு துவங்கியது. தற்போது, பணிகள் முடிந்த நிலையில், கடந்த 5ம் தேதி சரக்கு ரயில் வெள்ளோட்டம் விடப்பட்டது. மயிலாடுதுறையில் இருந்து ஒரு ரயிலும், விழுப்புரத்தில் இருந்து ஒரு ரயிலும் இயக்கப்பட்டன.

                  திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் சுப்ரமணியன், நேற்று, மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரம் வரை ஆய்வு மேற்கொண்டார்.  சிதம்பரம் நடைமேடை மற்றும் ஸ்டேஷன் பணிகளைப் பார்வையிட்டு,  விரைந்து முடிக்க உத்தரவிட்டார். அவர், நிருபர்களிடம் கூறியதாவது: சரக்கு ரயிலை இயக்க   முயற்சிகள் எடுத்து வருகிறோம்.  மொத்தமுள்ள 16 ஸ்டேஷன்களில், எட்டு இடங்களில் சோதனை பணிகள் முடிந்து விட்டன. மீதமுள்ள எட்டு ஸ்டேஷன்களில், சோதனை நடந்து வருகிறது.  "கிராசிங்' கொண்ட ஏழு ஸ்டேஷன்களில், வேலைகள் நடந்து வருகின்றன.  பணிகள் முடிந்ததும், பிப்ரவரி இறுதியில் பயணிகள் ரயில் இயக்கப்படும். இவ்வாறு சுப்ரமணியன் கூறினார்.

Read more »

நெல் அறுவடைக்கு பின் நேர்த்தி முறைகள் வேளாண் துணை இயக்குனர் அறிவுரை

விருத்தாசலம் :

        நெல்மணிகள் அரவையில் 62 சதவீதம் முழு அரிசி கிடைத்திட அறுவடைக்கு பின் நேர்த்தி முறைகளை கையாள வேண்டும் என வேளாண்மை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வேளாண்மை துணை இயக்குனர் தனவேல், விருத்தாசலம் கோட்ட வேளாண் அலுவலர் அமுதா கூட்டாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: 

             விருத்தாசலம் மற்றும் திட்டக்குடி தாலுகாவில் தற்போது சம்பா நெல் அறுவடை நடந்து வருகிறது. நெல்லில் கூடுதல் விலை பெறுவது அதிலுள்ள முழு அரிசியின் அடிப்படையில் தான் உள்ளது.  நெல்மணிகள் அரவையில் 62 சதம் முழு அரிசி கிடைத்திட கீழ் கண்ட நேர்த்தி தொழில் நுட்பங் களை கையாளவேண்டும்.

நெல் ரகங்களின் வயதிற்கேற்றவாறு பயிரின் அறுவடையை உரிய காலத்தில் மேற்கொள்ள வேண்டும். நெற்கதிரின் மணிகள் 80  சதவீதம் மஞ்சள் நிறமாக மாறி இருந்தாலே அறுவடையை மேற்கொள்ளலாம்.  இதனால் மணிகள் உதிர்ந்து சேதாரமாவதை தடுக்கலாம். அறுவடையின்போது ஈரப்பதம் 19 முதல் 23 சதவீதம் இருக்கவேண்டும்.  நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரும் நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும். நெல் மணிகள் அதிக ஈரப்பதம் இல்லாமல் மூட்டைகளை பாதுகாக்க வேண்டும் என ஆலோசனை கூறியுள்ளார்.

Read more »

மீனவர் மசோதாவை எதிர்த்து பிப்.,2ல் முற்றுகை

கடலூர் :

           மீனவர்களுக்கு எதிரான மசோதவை எதிர்த்து பிப்ரவரி 2ம் தேதி கவர்னர் மாளிகை முன் முற் றுகை போராட்டம் நடத் தப்படும் என எம்.பி., ரங்கராஜன் பேசினார். கடலூரில் நடந்த சி.ஐ.டி.யூ., தமிழ் மாநில மாநாடு பொதுக் கூட்டத் தில் மாநில துணைத் தலைவரான எம்.பி., ரங்கராஜன் பேசியதாவது: விலைவாசி கடுமை யாக உயர்ந்துள்ள இந்த வேலையில் அரசு இலவசமாக வழங்கும் வெல் லம், முந்திரி, பச்சரி, ஏலக்காய் ஏதும் இந் தாண்டு இல்லை. 

             தி.மு. க., ஆட்சியில் கொடுப்பதாக இருந்தால் முதல்வர் அறிவிப்பார். எடுப்பதாக இருந்தால் அதிகாரிகள் அறிவிப்பார்கள். இந்திய மீனவர்களின் வாழ்கையை நசுக்கும் மசோதாவை அரசு கொண்டு வந்துள்ளது. இதனை  தி.மு.க., அமைச்சர்களின் ஒப்புதலுடன் தான் கொண்டு வரப் பட்டுள்ளது.  ஆனால் தேர் தல் என்பதால் கருணாநிதி இதை தற்போது வேண்டாம் என தள்ளி வைத்துள்ளது தான் உண்மை. மீன்பிடி முதலாளிகளுக்கு ஆதரவாகவே இந்த மசோதாவை மத் திய அரசு கொண்டு வருகிறது. கடந்த நிதியாண்டில் 2,515 கோடி மீன்பிடி முதலாளிகள் சம்பாதித்துள்ளனர்.

              இந்த நிதியாண்டில் 20 ஆயிரம் கோடிக்கு ஏற் றுமதி செய்வோம் என கூறுகின்றனர். மீனவர் களை 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு  அப்பால் சென்று மீன் பிடித்தால் அபராதம், சிறை தண் டனை, மீன்கள் பறிமுதல் என நடவடிக்கை எடுக்க வழி செய் துள்ள மசோதாவில், வெளிநாட்டு பண முதலாளிகளின் கப்பல் எல்லையை தாண்டிவந் தால் வழி தவறி வந்துவிட்டதாக கருதி அவர்களுக்கு டீ வாங்கிக் கொடுத்து அனுப்பி விடுவார்களாம். மீனவர்களின் வாழ்கையை நசுக்கும் இந்த மசோதாவை கண் டித்து வரும் பிப்ரவரி 2ம் தேதி கவர்னர் மாளிகை முற் றுகை போராட்டத்தில் சி.ஐ.டி.யூ., தொழிலாளர்கள் பெருமாளவில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு ரங்கராஜன் பேசினார்.

Read more »

திருவதிகை கோவில்களில் உண்டியல் திறப்பு

பண்ருட்டி :

              பண்ருட்டி திருவதிகை கோவில்களில் உண்டியல் நேற்று திறக்கப்பட்டது. அதில் பக்தர்கள் செலுத் திய காணிக்கை 1லட்சத்து 37ஆயிரத்து 588 ரூபாய் கிடைத்துள்ளது. பண்ருட்டி திருவதிகை அம்பாள் பெரியநாயகி சமேத வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று உண்டியல் திறக்கப்பட் டது. கோவில் நிர்வாக அதிகாரி சிவஞானம் தலைமை தாங்கினார். ஆய்வாளர் பாலகிருஷ் ணன் முன்னிலை வகித் தார். முன்னாள் அறங்காவலர் சபாபதி செட்டியார்,  நரசிம்மன், அப்பர் சாமி, வேலு ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக் கப்பட்டு பணம் எண்ணப் பட்டது. இதில் அம்பாள் பெரியநாயகி கோவில் உண்டியலில் 88 ஆயிரத்து 770 ரூபாயும்,  சரநாராயண பெருமாள் கோவில் உண் டியலில்   48 ஆயிரத்து 818 ரூபாயும் வருமானம் கிடைத்தது.

Read more »

குறை கேட்க வராத ஊராட்சி தலைவரை அறையில் வைத்து பூட்டியதால் பரபரப்பு

பண்ருட்டி :

          மூன்றாண்டுகளாக மக்கள் குறை கேட்க வராத ஊராட்சித் தலைவரை அறையில் பூட்டியதால் பரபரப்பு ஏற்பட் டது.  கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த கீழ்கவரப்பட்டு ஊராட்சியில்,   மன்ற உறுப்பினர்களின் கூட்டம், நேற்று காலை நடந்தது.  ஊராட்சி மன்றத் தலைவர் சக்கரத்தாழ்வார் தலைமை தாங்கினார்.  ஊராட்சி உதவியாளர் மற்றும் மக்கள் நலப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

               கூட்டம் துவங்கியதும் அப்பகுதி மக்கள் திரண்டு  வந்து, "வார்டு பகுதிகளில்  சுகாதார வசதி செய்து தரவில்லை; தெருவிளக்கு வசதி இல்லை; கடந்த மூன்றாண்டுகளாக ஊராட்சி கூட்டம் நடத்தாமல், ஊராட்சி தலைவர் வீட்டில்  கூட்டம் நடக்கிறது, கிராம சபை கூட்டம் நடக்கவில்லை' என அடுக்கடுக்காக பல்வேறு புகார்களை எழுப்பினர். இதற்கு ஊராட்சிமன்றத் தலைவர் பதில் கூறாததால், ஆத்திரம் அடைந்த அப்பகுதிமக் கள்,  கூட்டம் நடந்து கொண்டிருந்த அறைக்கதவை பகல் 12 மணிக்கு பூட்டினர்.  அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கிராம பிரமுகர்கள் பேச்சு வார்த்தைக்குப் பின், ஒரு மணிக்கு பூட்டை திறந்து விட்டனர்.  போலீசார்,  இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

சிறுபாக்கத்தில் வேகமாக பரவும் விஷக்காய்ச்சல்: நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிப்பு: மக்கள் அச்சம்

சிறுபாக்கம் :

            சிறுபாக்கம் பகுதிகளில் பரவி வரும் விஷக்காய்ச்சலால் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்து சிகிச்சை பெற முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். கடலூர் மாவட்டம் சிறுபாக்கம், மங்களூர் உள் ளிட்ட கிராமங்களில் கடந்த சில நாட்களாக விஷ காய்ச்சல் கிராம மக்களிடையே வேகமாக பரவி வருகிறது.  இந்நோயால் சிறுபாக் கம் புஷ்பா (40), கண்ணன் (27), ராஜமாணிக்கம் (52), செல்வி (37), பொன்னுசாமி (50), மருதமுத்து (61) உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப் பட்டுள்ளனர். நிற்கவும், நடக்கவும் முடியாமல் படுக்கையில் இருப்பதால் சிகிச்சை பெற முடியாமல் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர்.

              மங்களூர், சிறுபாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய சிகிச்சை பெற இயலாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் கிராம மக்களிடையே வேகமாக பரவி வரும் விஷக்காய்ச்சல் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  எனவே மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் விரைந்து சிறுபாக்கம் பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து சிகிச்சையளிக்க வேண்டும்.

Read more »

கடலூரில் இயலா குழந்தைகளை பயன்படுத்தி போராட்டம்: பொது மக்கள் முகம்சுளிப்பு

கடலூர் :

             மனவளர்ச்சி குன்றிய, இயலா குழந்தைகளை பயன்படுத்தி பள்ளி நிர்வாகிகள் நடத்திய போராட் டத்தைக் கண்டு பொது மக்கள் முகம்சுளித்தனர். மனவளர்ச்சி குன்றிய, இயலா குழந்தைகளின் தொண்டு நிறுவன சிறப்பு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு அரசு காலமுறை ஊதியம் வழங்க வேண் டும், காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளி நிர்வாகிகள் இயலா குழந்தைகளை பயன்படுத்தி கடலூரில் ஊர்வலம் நடத்த திட்டமிட்டனர்.

                      இந்த ஊர்வலத்திற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் காலை 8 மணி முதல் பெரியார் சிலையருகே காத்துக் கிடந்தனர். காலை 11 மணிக்குதான் ஊர்வலம் துவங்கியது. உலகமே அறியாத சின்னஞ்சிறுசுகள், மனம் வளர்ச்சி குன்றிய குழந்தைகள், கை, கால் ஊனமுற்ற குழந்தைகள் உட்பட 250 மாணவ, மாணவிகள் 3 மணி நேரம் காத்துக்கிடந்ததோடு அல் லாமல் நெடுநேரம் சாலைகளில் பாதகைகளை ஏந்தி ஊர்வலம் வந்தனர். பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்களின் கோரிக்கையை வென்றெடுக்க இந்த இயலா குழந்தைகளையா பயன்படுத்த வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ள எத்தனையோ அகிம்சை வழியிலான போராட்டங்கள் உள்ளன. இதை ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள் மட்டுமே நடத்தி காட்டலாம். இயலா குழந்தைகளை மனவேதனையுடன் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர் ஆசிரியர்களுக்காக போராடவா?  இயலா குழந்தைகளை பயன்படுத்தி பள்ளி நிர்வாகிகள் நடத்திய ஊர்வலத்தை  கண்ட பொது மக்கள் முகம் சுளித்தவாறே சென்றனர். கோரிக்கை மனுவை பெற்ற கலெக்டர் இதை எப்படி அனுமதித்தார் என்பது வியப்பாக உள்ளது.

Read more »

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கடலூர் :

                  வேலை நிறுத்த போராட்டத்தை சட்ட பூர்வமாக்கவேண்டுவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வேலை நிறுத்த போராட்டத்தை சட்ட பூர்வமாக்க வேண்டும், பொது வைப்பு நிதி, ஊழியர்கள் வைப்பு நிதி, சிறு சேமிப்பு வட்டியை உயர்த்தவேண்டும், ஓய்வு பெற்ற அலுவலர்கள் பணியில் அமர்த்தும் போக்கை கைவிடவேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  தமிழ்நாடு அரசு ஊழியர்கள் கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

            மாவட்டத் தலைவர் காசிநாதன் தலைமை தாங்கினார். எழிலன், ஆதவன், ராமநாதன், அய்யாசாமி முன்னிலை வகித்தனர், ஞானகண்ணன் செல்லப்பா, ராஜஜேந்திரன், அருள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னாள் மாநில துணைத்  தலைவர் புருஷோத்தமன் சிறப்புரையாற்றினார். குமார் நன்றி கூறினார்.

Read more »

காணவில்லை

கடலூர் :

              நகராட்சியில் பணியாற்றிய கணவரை காணவில்லை என மனைவி போலீசில் புகார் செய்துள்ளார். கடலூர் முதுநகர் குயவன் காலனியைச் சேர்ந்தவர் பஞ்சாமிர்தம்(48). இவர் கடலூர் நகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார்.  கடந்த டிசம்பர் மாதம் 7ம் தேதி பணிக்கு சென்றவர் நேற்று வரை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.நாகம்மாள் (46) கொடுத்த புகாரின் பேரில் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

சீர்காழியில் அரசு பஸ்கள் மோதல்: 3 பேர் பலி; 24 பேர் படுகாயம்

மயிலாடுதுறை :

               சீர்காழி அருகே, நின்று கொண்டிருந்த அரசு பஸ் மீது, மற்றொரு அரசு பஸ் மோதி, மூன்று பேர் இறந்தனர். 24 பேர் படுகாயமடைந்தனர். கடலூர் மாவட்டம், சிதம்பரத்திலிருந்து மயிலாடுதுறைக்கு, நேற்று அதிகாலை, அரசு பஸ் ஒன்று சென்றது. சீர்காழி அருகேயுள்ள நல்லான்சாவடியில், "டயர் பங்சர்' ஆகி, பஸ்  நின்றது. அப் போது அவ்வழியே, வேலூரிலிருந்து மன்னார் குடி சென்ற அரசு பஸ்,  நின்றிருந்த பஸ்சின் பின்புறம் மோதியது. இவ்விபத்தில், வேலூர் அரசு பஸ் நடத்துனர், சம்பவ இடத்திலேயே இறந்தார். மருத்துவமனைக்குச் செல்லும் வழியில், மேலும் இருவர்  உயிரிழந்தனர். படுகாயமடைந்த 24 பேரை, தீயணைப்புத் துறையினர் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், மேல் சிகிச்சைக்காக  சிதம் பரத்தில் 15 பேரும்,  தஞ்சை மருத்துவக் கல் லூரி மருத்துவமனைகளில் மூன்று பேரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

                வேலூர் அரசு பஸ் டிரைவரை கைது செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். மணப்பாறையில் விபத்து: கேரள மாநிலம் கட்டப்பனா மாவட்டம், வலிய தோவாலாவை சேர்ந்தவர் தாமஸ் (எ) தங்கச்சன் (60). ஏலக்காய் வியாபாரி.இவர், மனைவி தங்கம்மாள் (55), மகள் லிசா (40), மருமகன் ரெஜி (45), பேத்தி நயா (3) ஆகியோருடன் வேளாங் கண்ணிக்கு, மாருதி ஆல்டோ  காரில் சென் றார். காரை தாமஸ் ஓட்டிவந்தார். இவர்களுடன் இவர்களது உறவினர்களும், தனித்தனியே இரு கார்களில் வேளாங்கண் ணிக்கு சென்று கொண்டிருந்தனர்.  மணப்பாறை அடுத்த முத்தபுடையான்பட்டி அருகே, நான்கு வழிச் சாலை பணிக்காக ரோடு மாற்றம் செய்யப்பட்ட இடத்தில், நேற்று காலை 11.30 மணிக்கு கார் வந்த போது, ஜெயங்கொண் டத்தில் இருந்து பழனி நோக்கி சென்ற அரசு பஸ்  மீது, நேருக்கு நேர் மோதியது.

                இதில், பஸ்சின் முன் பகுதியில், கார் பாதியளவு நுழைந்தது. காரை ஓட்டிவந்த தாமஸ், முன் சீட்டில் உட்கார்ந்து வந்த தங்கம் மாள் ஆகிய இருவரும்,  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லிசா, ரெஜி, நயா ஆகிய மூவரும் படுகாயமடைந்து, மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனையில், முதலுதவி அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக, திருச்சி கே.எம்.சி., மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ரோடு, "டைவர்ட்' செய்யப்பட்டுள்ளது தெரியாமல், காரை ஓட்டியதால்தான் விபத்து நடந்துள்ளது. போதிய அறிவிப்பு பலகை மற்றும் சிக்னல்கள் இல்லாததே, விபத்துக்கு காரணம். போலீசார் மேற்கொண்டு விசாரிக்கின்றனர்.

Read more »

கிள்ளையில் விஷச்சாராயம் வைத்திருந்த வாலிபர் கைது

கிள்ளை :

           சிதம்பரம் அருகே கிள்ளையில் பதுக்கி வைத்திருந்த 120 லிட்டர் விஷ சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.  சிதம்பரம் அருகே கிள்ளை முகமது ஜின்னா மகன் காஜாகமல்(26). இவர் வீட்டில் சாராயம் இருப்பதாக வந்த ரகசிய தகவலையடுத்து கிள்ளை சப் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் போலீசாருடன் சென்று சோதனை செய்தார்.  அப்போது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 120 லிட்டர் விஷ சாராயத்தை  பறிமுதல் செய்ததுடன், காஜாகமலை கைது செய்தனர்.

Read more »

மாட்டு வண்டிகள் மீது அரசு பஸ் மோதல்: 2 மாடுகள் பலி

பரங்கிப்பேட்டை :

              சிதம்பரம் அருகே மணல் ஏற்ற சென்ற மாட்டுவண்டிகள் மீது அரசு பஸ் மோதி இரண்டு மாடுகள் இறந்தன. 3 பேர் பலத்த காயமடைந்தனர். புதுச்சத்திரம் அருகே வில்லியநல்லூரை சேர்ந்தவர்  பன்னீர்செல்வம்(27), தேசிங்குராஜன்(25), கணேசன்(30). இவர்கள் ஆதிவராக நல்லூர் மணல் குவாரியில் மணல் ஏற்ற நேற்று அதிகாலை மாட்டு வண்டிகள் ஓட்டி சென்றுள்ளனர். அப்போது சென்னையில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி சென்ற அரசு விரைவு பஸ் மாட்டு வண் டிகள் மீது மோதியது.

            இதில் பன்னீர் செல்வம், தேசிங்கு ராஜன்  வண்டியின் வலது பக்க இரண்டு மாடுகள் இறந்தன. மற்ற மாடுகள் காயமடைந்தன. விபத்தில் பன்னீர் செல்வம், தேசிங்குராஜன், கணேசன் ஆகியோர் பலத்த காயத்துடன் அரசு மருத்துவமனையில் ஒகிச்சைக்காக சேர்க்கப் பட்டுள்ளனர்.  இது குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

பைக் மோதி ஒருவர் பலி

பரங்கிப்பேட்டை :

          புதுச்சத்திரம் அருகே மோட்டார் பைக்- சைக் கிள் மோதிய விபத்தில் ஒருவர் இறந்தார்.  புதுச்சத்திரம் அருகே காயல்பேட்டை சேர்ந்த ராமலிங்கம் மகன் சிவக்குமார்(40).  இவர் சைக்கிளில் கடைக்கு சென்றபோது எதிரே பைக்கில் வந்த அன்னப்பன் பேட்டையை சேர்ந்த சேகர் மகன் பெரியாண்டவர்(25) சிவக்குமாரின் சைக்கிள் மீது மோதினார். இதில் பலத்த காயமடைந்த இருவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் சிவக்குமார் நேற்று இறந் தார்.  இது குறித்த புகாரின் பேரில் புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

Read more »

மாணவர்கள் வாந்தி 3 பேர் தற்காலிக பணி நீக்கம்

புவனகிரி :

            சிதம்பரம் அருகே புவனகிரி அரசு மேல்நிலைப் பள்ளி சத்துணவு பொறுப் பாளர் உட்பட 3 பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப் பட்டனர். புவனகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட மாணவர்கள் வாந்தி எடுத்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதனால் பள்ளியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக  புவனகிரி பி.டி.ஓ., வாசுகி விசாரணை செய்து பள்ளியின் சத்துணவு பொறுப்பாளர் ராதாகிருஷ்ணன், சமையலர் யசோதை, சமையல் உதவியாளர் தில்லைக்கரசி ஆகிய 3 பேரையும்  தற்காலிக பணி நீக்கம் செய்தார்.

Read more »

கஞ்சா விற்றவர் கைது

பண்ருட்டி :

               பண்ருட்டி பஸ் நிலையம் பகுதியில் கஞ்சா விற்ற ஒருவரை போலீசார் நேற்று கைது செய்தனர். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் நேற்று பஸ்நிலையம் பகுதி யில் ரோந்து சென்றார். அப்போது பஸ்நிலையம் பகுதியில் கஞ்சா விற்ற அம்பேத்கார் நகரை சேர்ந்த சிவா(38) என்பவரை  கைது செய்தார். அவரிடமிருந்த 200 கிராம் கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior