உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மே 12, 2010

ஆனந்த் மீண்டும் உலக சாம்பியன்



 

சோபியா: 

           செஸ் சாம்பியன்ஷிப் தொடரை, மீண்டும் கைப்பற்றி அசத்தினார் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த்.
 
            பல்கேரியாவில் உள்ள சோபியா நகரில், இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், பல்கேரியாவின் வெசலின் தபலோவ் மோதும், உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. மொத்தம் 12 சுற்றுக்கள் கொண்ட இப்போட்டியின் 11 வது சுற்றின் முடிவில் ஆனந்த், தபலோவ் இருவரும் தலா 5.5 புள்ளிகள் பெற்றிருந்தனர்.
 
ஆனந்த் வெற்றி:  
               நேற்று 12 மற்றும் கடைசி சுற்று ஆட்டம் நடந்தது. நடப்பு சாம்பியன் ஆனந்த் கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியின் 56 வது நகர்த்தலில் தபலோவ் தோல்வியை ஒப்புக் கொண்டார். இதன் மூலம் 12 சுற்றுகளின் முடிவில் 6.5 புள்ளிகள் பெற்ற ஆனந்த் வெற்றி பெற்றார். இவ்வெற்றியின் மூலம் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார் ஆனந்த். கடந்த 2008 ம் ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில், ரஷ்யாவின் விளாடிமர் கிராம்னிக்கை ஆனந்த் வீழ்த்தியிருந்தார்.
 
நான்காவது முறை:
 
               ஆனந்த் கைப்பற்றும் நான்காவது உலக சாம்பியன்ஷிப் பட்டம் இது. இதற்கு முன் கடந்த 2000, 2007 மற்றும் 2008 ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார் ஆனந்த்.

Read more »

மக்கள் கணினி மையம் மூலம் திருமணச் சான்றுகள்: அமைச்சர் சுரேஷ் ராஜன்



            மக்கள் கணினி மையம் மூலம் வில்லங்கச் சான்றுகள், திருமணச் சான்றுகள் ஆகியன வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிவுத் துறை அமைச்சர் சுரேஷ் ராஜன் அறிவித்தார். 
 
சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பதிவுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
 
                  பதிவுத் துறையின் சேவைகளைப் பொது மக்களுக்கு எளிய முறையில் வழங்கும் பொருட்டு, இந்தத் துறையால் வழங்கப்படும் வில்லங்கச் சான்றுகள், பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் நகல்கள் மற்றும் திருமணச் சான்றுகள் ஆகியன மக்கள் கணினி மையம் மூலம் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.மாநிலம் முழுவதும் நடைபெறும் கிறிஸ்தவர்களுக்கு இடையிலான திருமணங்களுக்கு சென்னையில் உள்ள பதிவுத் துறைத் தலைவர் அலுவலகத்தில் மட்டுமே சான்று வழங்கப்படுகிறது. இது, பொது மக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது.எனவே, 1872-ம் ஆண்டு இந்திய கிறிஸ்தவ திருமணச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்யப்படும். கிறிஸ்தவர்களுக்கு இடையிலான திருமணங்களுக்கான பதிவுகள் சம்மந்தப்பட்ட மாவட்டப் பதிவாளர் அலுவலகங்களுக்கு அனுப்பப்படும். அந்த அலுவலகத்திலேயே சான்றுகள் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.கால தாமதமாக செலுத்தப்படும் முத்திரைத் தீர்வைக்கு மாதத்துக்கு 2 சதவீதம் வட்டி வசூலிக்கப்பட்டு வருகிறது.  இந்த வட்டி விகிதம் அதிகமாக இருப்பதால் இதைக் குறைக்க கோரிக்கைகள் வரப்பெற்றன. இதையடுத்து, வட்டி விகிதம் மாதத்துக்கு 2 சதவீதத்தில் இருந்து 1 சதவீதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் சுரேஷ் ராஜன்.

Read more »

"கட்டுக்கடங்காத ஆட்டோ கட்டணம்': கலங்கும் கடலூர் வாசிகள்

கடலூர்:
                 தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு கடலூரில் ஆட்டோ ரிக்ஷா கட்டணம் பெருமளவுக்கு உயர்ந்து இருக்கிறது. சென்னை, பெங்களூர், திருவனந்தபுரம் நகரங்களில் கூட இந்த அளவுக்கு ஆட்டோக் கட்டணம் இல்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள். சுமார் 2 லட்சம் மக்கள்தொகை கொண்ட சிறிய நகரமான  கடலூரில், சுமார் 3 ஆயிரம் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. மக்களின் தேவைக்கு அதிகமாக உள்ள ஆட்டோக்களால், பல வழிகளில் மக்களுக்கு தொல்லை ஏற்படுகிறது. கடலூரில் டவுன் பஸ்களும், மினி பஸ்களும் சில குறிப்பிட்ட மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டுமே இயக்கப்படுகின்றன. 25 ஆண்டுகளுக்கும் மேலாக புதிய வழித்தடங்கள் உருவாக்கப்படவில்லை. நகரம் விரிவடைந்து இருப்பதற்கு ஏற்றபடி, நகரப் பேருந்துகளை புதிய வழித்தடங்களில் இயக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது மக்களின் குற்றச்சாட்டு.

                   இதன் விளைவாக போக்குவரத்துக்கு, ஆட்டோக்களை விட்டால் வேறு கதியில்லை என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு விட்டார்கள். நகரப் பேருந்துகளில் ரூ. 5 செலவிட்டு பயணிக்க வேண்டிய இடங்களுக்கு ரூ. 30-க்கு மேல் ஆட்டோக்களுக்கு செலவிட வேண்டிய கட்டாயம் மக்கள் மீது மாவட்ட நிர்வாகத்தால் திணிக்கப்பட்டு உள்ளது. இதைப் பயன்படுத்தி கடலூரில் ஆட்டோக்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் உயந்து வருவதுபோல், அவற்றால் பிரச்னைகளும் உயர்ந்து வருகிறது. தேசிய நெடுஞ்சாலையைத் தவிர வேறு அகலமான சாலைகள் கடலூரில் இல்லை. இதுபற்றி யாருக்கும் கவலை இல்லை. விளைவு குறுகலான சாலைகளில் ஆங்காங்கே ஆட்டோக்களை நிறுத்தி போக்குவரத்துக்கு மிகவும் இடையூறு செய்கிறார்கள்.100-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆட்டோ ஸ்டாண்ட். அவற்றை ஒழுங்குபடுத்த வேண்டிய போலீஸôரோ, ஆட்டோ ஓட்டுநர்களிடம் இருந்து பெறப்படும் "சிலவற்றுக்காக’ மயங்கி, மக்களை மறந்து விடுகிறார்கள். ஆட்டோ ஓட்டுநர்கள் செய்யும் தவறுகளுக்கு முழு அங்கீகாரம் அளிக்கும் நகரங்களில் கடலூர் முதலிடம் வகிக்கிறது. ஆட்டோக்களால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படுகிறது. இத்தனை ஆட்டோக்கள் இருந்தால் ஓட்டுநர்கள் சம்பாதிப்பது எப்படி? கிடைத்தது அப்பாவிப் பொதுமக்கள் தான். 1 கி.மீ. தூரத்துக்கு கட்டணம் ரூ. 30 -க்கு மேல் வசூலிக்கிறார்கள். கடலூர் புதுநகரில் இருந்து துறைமுகம் சந்திப்பு ரயில் நிலையம் 4 கி.மீ. தூரம் தான். இதற்கு ஆட்டோ கட்டணம் ரூ. 100. துறைமுகம் சந்திப்பில் இருந்து திருச்சிக்கு ரயில் கட்டணம் ரூ. 30 தான். இதனால் நகரின் பிரதானப் பகுதிகளான திருப்பாப்புலியூர், மஞ்சக்குப்பம், புதுப்பாளையம் பகுதிகளில் வசிக்கும் மக்கள் ரயில் பயணத்தையே மறந்து விட்டனர்.
                ஏன் அபரிமிதமாகக் கட்டணம் வசூலிக்கிறீர்கள் என்றால், விலைவாசி உயர்ந்து விட்டது என்கிறார்கள். சென்னை, பெங்களூர், திருவனந்தபுரத்தில் உள்ளவர்களுக்கெல்லாம் விலைவாசி உயர்வதைவிட, கடலூர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மட்டும்தான் அதிகமாக உயர்கிறது போலும்.கேஸ் முறைகேடு எரிபொருள் செலவைக் கட்டுப்படுத்த கடலூர் ஆட்டோக்களும், ஆம்னி வேன்களும் பயன்படுத்துவது சமையல் கேஸ்தான்.  கேஸ் விநியோகஸ்தர்கள் தாராளமாக இந்த வாகனங்களுக்கு முறைகேடாக சிலிண்டர் வழங்குகிறார்கள். காரணம் கூடுதல் விலை கிடைக்கிறதே. இதன் விளைவு குறித்த காலத்தில் வீடுகளுக்கு சமையல் கேஸ் கிடைப்பது இல்லை. கேஸ் சிலிண்டர் வாங்கிய தினத்தில் இருந்து 20 நாள்கள் கழித்துத்தான் பதிவு செய்ய முடியும். தொலைபேசி மூலம் பதிவு செய்வதற்கே 5 நாள்கள் ஆகிவிடும். காரணம் கேஸ் நிறுவனங்களின் தொலைபேசிகள் பலநேரங்களில் இயங்குவது இல்லை. பதிவு செய்த 15 தினங்கள் கழித்துதான் சிலிண்டர் கிடைக்கும். இதற்கு முழுமுதற்  காரணம், சமையல் கேஸின் பெரும்பகுதி ஆட்டோக்களுக்கு எரிபொருளாகப் போய்விடுவதுதான். இதைக் கண்டுபிடித்துத் தண்டிக்க வேண்டிய அதிகாரிகளோ எப்போதும்போல் மெüனம் காக்கின்றனர். இத்துடன், ஆட்டோக்களில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டு இருக்கும் மீட்டர்களை இயங்கச் செய்து, முறைப்படி கட்டணம் வசூலிக்க வட்டாரப் போக்குவரத்துத் துறையும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுத்தால்தான் மட்டுமே மக்கள் காப்பாற்ற முடியும். செய்வார்களா?

Read more »

அட்சய திருதியை: தங்கம் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகம்

General India news in detail

          அட்சய திருதியை முன்னிட்டு, இந்தாண்டும் பொதுமக்களிடம் நகை வாங்குவது குறித்து எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக அட்சய திருதியை தினத்தன்று, தங்கம் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அன்றைய தினத்தில் தங்கம் வாங்கினால், வீட்டில் செல்வ வளம் பெருகும் என்ற நம்பிக்கையில் தங்கம் வாங்குகின்றனர். தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால், இப்போதே முதலீடு செய்து விடுவோம் என்று பலரும் நினைக்கின்றனர்.

                கடந்த இரண்டாண்டுகளுக்கு முன் ஒரு கிராம் தங்கத்தின் விலை 1,100 ரூபாயாக இருந்தது. ஒரு கிராம் தங்க நாணயம் வாங்க முடியாதவர்கள் கூட, மில்லிகிராம் கணக்கில் 200 ரூபாய்க்கு மூக்குத்தி, சிறு காதணிகளை ஆர்வமாக வாங்கினர். கடந்தாண்டு ஒரு கிராம் தங்கம் 1,399க்கு விற்பனையானது. நேற்றைய விலையில் ஒரு கிராம் 1,670 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வரும் ஞாயிறன்று (அட்சய திருதியை) 1,700 ரூபாயைத் தாண்டிவிடும் என கடைக் காரர்கள் எதிர்பார்க்கின்றனர்.தங்க நாணயங்கள்: சிறு மூக்குத்தியின் விலையே 700 ரூபாய்க்கு விற்கப்படுவதால், ஏழை, நடுத்தர மக்கள் அன்றைய தினம் தங்கம் வாங்க மலைக்கின்றனர். வாங்குவோரின் ஆர்வத் தைத் தூண்டும் வகையில், சில கடைகளில் 100, 200 மில்லி கிராமில் தங்க நாணயம் செய்யப்பட்டன என்றாலும், அவற்றின் அடக்க விலை அதிகம் என்பதால் இதை கைவிட்டனர்.

                  தற்போது குறைந்தபட்சமாக அரை கிராம் தங்க நாணயங்கள் மட்டுமே விற்பனைக்கு உள்ளன. அரை கிராம், ஒரு கிராம், இரண்டு, நான்கு, எட்டு கிராம் அளவுகளில் தங்க நாணயங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.ஒரே நாளில் தங்கம் வாங்குவோர் அதிகம் என்பதால், பெரிய கடைகளில் முன்தொகையாக பணத்தை பெற்றுக் கொண்டு, அன்றைய தினத்தில் தங்கத்தை விற்பனை செய்கின்றனர். இதனால், கூட்டத்தில் தங்க நாணயத்தை தேடி எடுத்து, எடை போட்டு பணம் செலுத்துவதை தவிர்க்க முடிகிறது.

நகைக்கடை உரிமையாளர்கள் சிலர் கூறுகையில்,  

                   'ஆன்-லைன் வர்த்தகத்தை தடை செய்யும் வரை, தங்கம் விலை குறையாது. எனவே, இப்போதே முதலீடு செய்வது நல்லது. அட்சய திருதியை தினத்தில் தங்கம் வாங்குவது குறித்து மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். வசதி படைத்தவர்கள் தங்க நாணயத்தை உருக்கி நகை செய்யலாம். ஏழை, நடுத்தர வர்க்கத்தினர் நாணயமாக வாங்கினால், வங்கியில் நகைக்கடனுக்கு வைக்க முடியாது. எனவே, ஆபரணமாக வாங்குவதே சிறந்தது' என்றனர்.

Read more »

என்.எல்.சி. ஊதியமாற்று பேச்சுவார்த்தையில் பின்னடைவு

நெய்வேலி:

              என்.எல்.சி. தொழிலாளர்களின் புதிய ஊதியமாற்று ஒப்பந்தம் தொடர்பாக செவ்வாய்க்கிழமை நிர்வாகத்துடன் நடத்திய பேச்சின் போது ஊதிய நிர்ணய அலகீட்டுத் தொகை நிர்ணயம் தொடர்பான ஃபார்முலாவில் குழுப்பம் நிலவி வருவதால் பேச்சுவார்த்தையில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக தொமுச செயலர் ஆர்.கோபாலன்  தெரிவித்தார்.  

               என்எல்சி தொழிலாளர்களுக்கு 01-01-2007 முதல் வழங்கவேண்டிய புதிய ஊதிய விகிதத்தின் அடிப்படையிலான ஊதியம் இதுவரை வழங்கப்படாததால், என்எல்சி நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்டத் தொழிற்சங்கங்கள் நிர்வாகத்துடன் பலச்சுற்று பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. இதில் தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகளில் சில அம்சங்களை நிர்வாகம் ஏற்றுகொண்ட போதிலும், இன்கிரிமென்ட் மற்றும் அலவன்ஸ் விஷயத்தில் நிர்வாகத்துக்கும் தொழிற்சங்கத்துக்கும்  முரண்பாடு இருந்துவருகிறது.

               இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பலமணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நிர்வாகம் சில நிபந்தனைகளை விதித்ததாகக் கூறப்படுகிறது. அதன்படி, ஈட்டிய விடுப்பு, வருகைப் பதிவின்போது வழங்கப்படும் கிரேஸ் டைம், மாதத்தில் இருநாள் வழங்கப்படும் தாமத வருகை சலுகை  உள்ளிட்ட சலுகைகள் திரும்பப் பெறப்படும் எனவும், அனைத்து தொழிலாளர்களும் கண்டிப்பாக சீருடை அணியவேண்டும், தொழிலகப் பகுதிகளுக்கும் ஏஎம்எஸ் முறை அமல்படுத்தப்படும் என்ற நிபந்தனைகள் விதித்ததாகக் கூறப்படுகிறது. இவற்றை தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்துள்ள நிலையில் செவ்வாய்க்கிழமை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் அடிப்படை ஊதியம் நிர்ணயம் தொடர்பாக பேசப்பட்டது. இதில் அடிப்படை ஊதியத்துக்கான ஊதிய அலகீட்டுத் தொகை வகுப்பதற்கான சூத்திரத்தை பின்பற்றுவதில் நிர்வாகம் புதிய அணுகுமுறையை புகுத்தவது ஏற்கக் கூடியதாக இல்லையென்றும், இதனால் தொழிலாளர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுவதோடு, பல்வேறு விமர்சனங்களுக்கும் ஆளாக நேரிடும். எனவே பேச்சுவார்த்தையில் தொடர்ந்து ஈடுபடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது என தொமுச செயலர் ஆர்.கோபாலன் தெரிவித்தார். 

               மேலும் புதன்கிழமை சென்னை சென்று தொமுச பேரவை நிர்வாகிகளை சந்தித்து, பேச்சு விபரங்களை தெரிவித்து, அதன்பின் பேரவை வழிகாட்டுதல்படி அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும் என்றார். அலவன்ஸ் குறித்து கேட்டபோது, தற்போது ஊதிய நிர்ணய அலகீட்டுத் தொகை மட்டுமே பேசிவருகிறோம். இதில் சரியான முடிவு எட்டிய பிறகு அலவன்ஸ் குறித்து பேசுவோம் என்றார் கோபாலன். செவ்வாய்க்கிழமை நிர்வாகத்துடன் நடந்த பேச்சுவார்த்தையில் தொமுச தலைவர் வீ.ராமச்சந்திரன், செயலர் ஆர்.கோபாலன், அலுவலகச் செயலர் எ.காத்தவராயன், பாமக தொழிற்சங்க தலைவர் பெருமாள், செயலர் திலகர், பொருளாளர் ஏஞ்சலின் மோனிக்கா, அலுவலகச் செயலர் சுப்ரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

மே 14-ல் பிளஸ் 2 முடிவு?


 
                    பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 14)  அல்லது சனிக்கிழமை (மே 15) வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த சுமார் 7.5 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர். விடைத்தாள் திருத்தும் பணி முழுவதும் முடிந்து, பாட வாரியான மதிப்பெண்கள் தயாரிக்கும் பணியும் முற்றிலும் முடிந்துவிட்டது. இப்போது சிடி வடிவில் தேர்வு முடிவு விவரம் தயாரித்து இறுதி செய்யப்பட்டு விட்டது.இதற்கிடையில், பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமை வெளியாகும் என்று தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 
 
மதிப்பெண் நகல் மூலம் விண்ணப்பிக்கலாம்...: 
 
                 தேர்வு முடிவு வெளியாகி 10 நாள்களுக்குப் பிறகு தான் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுவது வழக்கம். எனவே கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், பள்ளிக்கல்வி இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பெறப்படும் மதிப்பெண் நகலை வைத்து விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை தெரிவிக்கிறது.இந்த ஆண்டில் பொறியியல் படிப்பில் சேருவதற்கான முக்கியப் பாடமான கணிதம் மற்றும் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான உயிரியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் கடினமாக இருந்தன என்று மாணவர்கள் தெரிவித்திருந்தனர்.எனவே இந்த முறை கணிதம் மற்றும் உயிரியல் பாடத்தில்  மறுகூட்டல், மறுமதிப்பீடுக்கு அதிகமான மாணவர்கள் விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுகூட்டல், மறுமதிப்பீடு: பிளஸ் 2 பொதுத் தேர்வைத் தொடர்ந்து மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பிக்கும் மாணவர்கள் கூட பி.இ. படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். மறுமதிப்பீடு, மறுகூட்டலில் மதிப்பெண் மாறும் மாணவர்களின் விவரத்தைச் சிடியாக அண்ணா பல்கலைக்கழகத்துக்கு, தேர்வுத்துறை வழங்கிவிடும்.

Read more »

2011 டிசம்பருக்குள் வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணி நிறைவடையும்: நவீன் சாவ்லா



   
             76 கோடி வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கும் பணி 2011 டிசம்பருக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா தெரிவித்தார். தேர்தல் ஆணையத்தின் வைரவிழா கொண்டாட்டத்தைக் குறிக்கும் வகையில் புகைப்பட கண்காட்சி ஒன்றை நவீன் சாவ்லா பெங்களூரில் தொடங்கி வைத்தார். 
 
அப்போது பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா
 
                58 கோடி வாக்காளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுவிட்டன என்றார். வாக்காளர் பட்டியலில் பெயர்கள் விடுபடுவது தொடர்பாக நிறைய புகார்கள் வருவதை ஒப்புக்கொண்ட சாவ்லா, நகர்ப்புற பகுதிகளில் வாக்காளர்களின் அக்கறையின்மையை தேர்தல் அதிகாரிகள் எதிர்கொள்ள நேரிடுகிறது என்றார். வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்கள் இருக்கின்றனவா என்பது பற்றி நகர்ப்புற வாக்காளர்கள் கவலைப்படுவதில்லை என்றும் தேர்தல் நாளன்றுதான் இதுதொடர்பாக புகார் கூறுகின்றனர் என்றும் நவீன் சாவ்லா தெரிவித்தார்.

Read more »

விவசாயிகளுக்கு இம்மாத இறுதிக்குள் மழைக் காப்பீடு திட்ட இழப்பீடு

கடலூர்:

                   கடலூர் மாவட்டத்தில் 2009-ம் ஆண்டு நெல் பயிரிட்டு பாதிக்கப்பட்ட  விவசாயிகளுக்கு, வர்ஷ பீமா மழைக்காப்பீடு திட்டத்தில் இழப்பீட்டுத் தொகை இம்மாத இறுதிக்குள் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்தார்.

ஆட்சியர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:   

             வர்ஷ பீமா மழைக் காப்பீடு திட்டத்தை, 2009-ம் ஆண்டு மத்திய அரசு நிறுவனமான தேசிய வேளாண் காப்பீட்டு நிறுவனம் அமல்படுத்தியது. அந்த ஆண்டு பெய்த குறைந்த அளவு மழை, கூடுதல் மழை அளவு, வறண்ட தினங்கள் ஆகியவற்றைக் கணக்கிட்டு இழப்பீடு நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி 2009 ஆகஸ்ட் 15 முதல் டிசம்பர் 31 வரை மழை குறைந்த தினங்களைக் கணக்கிட்டும், செப்டம்பர் 15 முதல் நவம்பர் 15 வரை தொடர்ச்சியாக வறண்ட தினங்களைக் கணக்கிட்டும், செப்டம்பர் 15 முதல் ஜனவரி 31 வரை கூடுதல் மழை பெய்த தினங்களைக் கணக்கிட்டும் வட்டார வாரியாக இழப்பீடு கணக்கிடப்பட்டு உள்ளது.

                அதன்படி கடலூர் மாவட்டத்தில் கீரப்பாளையம் வட்டாரத்துக்கு ஏக்கருக்கு ரூ.606, பரங்கிப்பேட்டைக்கு ரூ.563, நல்லூருக்கு ரூ.1593, மங்களூருக்கு ரூ.493, குறிஞ்சிப்பாடிக்கு ரூ.563, மேல்புவனகிரிக்கு ரூ.606, குமராட்சிக்கு ரூ.623, காட்டுமன்னார்கோயிலுக்கு ரூ.367, கம்மாபுரத்துக்கு ரூ.211 இழப்பீடாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏனைய வட்டாரங்களுக்கு இத்திட்டத்தில் இழப்பீடு அறிவிக்கப்படவில்லை. இம்மாத இறுதிக்குள் தகுதியுடைய அனைத்து விவசாயிகளுக்கும், காப்பீட்டு நிறுவனம் மூலம் இழப்பீட்டுத் தொகை வரைவேலையாக வழங்கப்படும் என்று செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

சிதம்பரம் மாலைக்கட்டித் தெரு நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிக்கும் கருவி

சிதம்பரம்:

                       சிதம்பரம் மாலைக்கட்டித் தெரு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் குடிநீர் சுத்திகரிக்கும் கருவி பொருத்தும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. ரூ.15 ஆயிரம் மதிப்பிலான குடிநீர் சுத்திகரிக்கும் கருவியை கமல்கோத்தாரி என்பவர் இலவசமாக பள்ளிக்கு வழங்கியுள்ளார்.  இக்கருவியை பொருத்தும் விழாவுக்கு நகரமன்ற உறுப்பினரும், கல்விக்குழுத் தலைவருமான வி.என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை த.ஆ.வாசுகி வரவேற்றார்.  உத்தம்சந்த் கோத்தாரி கருவியை இயக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மகாவீர்சந்த், ஹீராசந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

வீமன் ஏரியில் மீன்கள் சாவு

விருத்தாசலம்:
 
              திட்டக்குடி அருகே வதிஸ்ட்டபுரம் கிராமத்தில் உள்ள வீமன் ஏரியில் செவ்வாய்க்கிழமை காலை மீன்கள் இறந்து மிதந்தன. இந்த ஏரியில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் மீன்கள் வளர்க்கப்பட்டு வந்தது. அதே பகுதியைச் சேர்ந்த முருகையன் கடந்த 4 மாதங்களுக்கு முன்  குத்தகை எடுத்து மீன் பிடித்து வந்துள்ளார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை ஏரி மீன்கள் இறந்து மிதந்தன. இதுகுறித்து முருகையன்  திட்டக்குடி வட்டாட்சியர் கண்ணனிடம் முறையிட்டார். இதையடுத்து, இறந்த மீன்களை ஆய்வுக்காக கால்நடைத் துறைக்கும், ஏரிநீரை உரிய ஆய்வுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

Read more »

கடலூர் மாவட்டத்தில் சிதம்பரத்தில் முதல்முறையாக புகைப்பட இளைஞரணி சங்கம் தொடக்கம்

சிதம்பரம்:

            கடலூர் மாவட்டத்தில் சிதம்பரத்தில் முதல்முறையாக புகைப்படம் மற்றும் விடியோ கலைஞர்கள் சார்பில் இளைஞர் அணி சங்கம் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. புதிய இளைஞரணி சங்க செயற்குழுக் கூட்டம் மாலைக்கட்டித்தெரு ஆறுமுகநாவலர் நிலையத்தில் அண்மையில் நடைபெற்றது. சபாபதி தலைமை வகித்தார். கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர். புகைப்படம் மற்றும் வீடியோ கலைஞர்கள் அனைவரும் ஒரே விலை நிர்ணயத்தில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பது என கூட்டத்தில் தீர்மானம் செய்யப்பட்டது.

Read more »

தடுப்பணையால் சிக்கல் 200 ஏக்கர் விளை நிலங்களுக்குள் புகுந்தது உவர்நீர்

கடலூர்:

               கடலூர் அருகே பாலம் கட்டுவதற்கு வசதியாக அமைக்கப்பட்ட தடுப்பணைகளால், உப்பனாற்றில் நீர் மட்டம் உயர்ந்து, 200 ஏக்கர் விளை நிலங்களுக்குள் உவர் நீர் புகுந்தது. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. கடலூர் அருகே சுபஉப்பளவாடிக்கும் கண்டக்காடு கிராமத்துக்கும் இடையே உப்பனாறு குறுக்கிடுகிறது. ஏற்கெனவே இந்த இடத்தில் தரைப்பாலம் இருந்தது. சுனாமிப் பேரலையின்போது, தரைப்பாலத்தின் வழியாகச் சென்று உயிர் பிழைக்கலாம் என்று நினைத்து வந்தவர்கள் தரைப் பாலத்துக்கு மேல் உப்பனாற்றின் நீர்மட்டம் உயர்ந்து இருந்ததால் அதில் மூழ்கி பலர் இறந்தனர். எனவே சுனாமி நிவாரண நிதியிலிருந்து சுபஉப்பளவாடி - கண்டக்காடு இடையே மேம்பாலம் கடந்த 6 மாதமாகக் கட்டப்பட்டு வருகிறது. பாலம் கட்டும் பணி முடிவடைய மேலும் 6 மாத காலம் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

                பாலம் கட்டும் இடத்தில் உப்பனாறு மூலம் கடல்நீர் புகுந்து, பாதிப்பு ஏற்படாமல் இருக்க பாலத்தின் இரு பக்கமும் தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது. இதனால் தடுப்பணைகளில் நீர்மட்டம் உயர்ந்து, அது உவர் நீராகக் காணப்படுகிறது. நீர் மட்டம் உயரஉயர, உவர்நீர் விளைநிலங்களுக்குள் புகத்தொடங்கி விட்டது. இதனால் கத்தரிச் செடிகள், கோழிக் கொண்டை பூச்செடிகள் மற்றும் நெல் பயிரிடப்படும் விளைநிலங்களுக்குள் உவர் நீர் புகுந்து, விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது. சுமார் 200 ஏக்கர் விளைநிலங்கள் இதுவரை பாதிக்கப்பட்டு இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். நெல்வயல்கள் பல விவசாயம் செய்ய முடியாமல் கரம்பாக மாறிவிட்டன. இரு தடுப்பணைகளையும் ஒரு குழாய் மூலம் இணைத்து விட்டால் நீர்மட்டம் குறைந்து, பாதிப்பு குறைய வாய்ப்பு இருப்பதாக விவசாயிகள் கூறுகிறார்கள். எனினும் உவர் நீர் புகுந்த நிலத்தை மீண்டும் விளைநிலமாக மாற்ற பெரிதும் சிரமப்பட வேண்டியது இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Read more »

நெய்வேலி ஆர்ச்கேட்டிலிருந்து பஸ் விட கோரிக்கை



நெய்வேலி:

               நெய்வேலி ஆர்ச்கேட்டிலிருந்து நெய்வேலி நகரியத்துக்கு புதிய பஸ்ûஸ இயக்க என்எல்சி தொழிற்சங்கங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் என்எல்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. நெய்வேலி ஆர்ச்கேட் எதிரே முந்திரிக்காடாக காட்சியளித்த விளை நிலங்கள் தற்போது வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு, அங்கு அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகரித்துள்ளன. இதனால் அப்பகுதியில் மக்கள் பெருக்கம் வெகுவாக உயர்ந்துள்ளது. இங்கு வாழும் மக்கள் 6 கி.மீ. தொலைவுள்ள நெய்வேலி நகரியத்துக்கு வர மிகுந்த சிரமமடைந்து வந்தனர். வெளியூர்களிலிருந்து வரும் அரசு பஸ்களை மட்டுமே இவர்கள் நம்பியிருக்க வேண்டிய சூழல் உருவானது. மேலும் இரவு நேரங்களில் வெளியூர் சென்றுவரும் பயணிகள், இரவு நேர பஸ் இல்லாததால், அதிக கட்டணம் கொடுத்து ஆட்டோக்களில் வர நேரிடுகிறது. மேலும் விழுப்புரம், பண்ருட்டி, வடலூர், குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நெய்வேலிக்கு பணிக்கு வரும் ஊழியர்களும், பள்ளி கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவர்களும் பஸ் கிடைக்காமல் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர் இதையடுóத்து நெய்வேலியில் உள்ள தொழிற்சங்கங்கள் மற்றும் பயோனியர் தொண்டு நிறுவனம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில், நெய்வேலி ஆர்ச்கேட்டிலிருந்து நெய்வேலி நகருக்கு என்எல்சி பஸ்களை இயக்கவேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து என்எல்சி பஸ் பிரிவு அலுவலர்கள் கூறியது 

                எங்களது பஸ் பிரிவு சேவை மனப்பான்மையுடன் இயக்கப்பட்டு வருகிறது. வர்த்தக நோக்கில் கணக்கிட்டால் எங்களது பஸ்ஸþக்கு நிரப்பப்படும் எரிபொருளுக்கு ஆகும் செலவுகூட எங்களுக்கு திரும்ப கிடைப்பதில்லை. இருப்பினும் பொதுமக்கள் நலன்கருதி ஆர்ச்கேட்டிலிருந்து பஸ் இயக்க ஒப்புதல் கேட்டு நிர்வாகத்துக்கு கோப்பு அனுப்பியுள்ளோம். நிர்வாகம் அனுமதி அளிக்கும் பட்சத்தில் பஸ் இயக்குவோம் என்றனர்.

Read more »

30 swimmers training to make it to State competitions


IN FULL SWING:Students are training vigorously at the swimming pool at Anna Stadium in Cuddalore to qualify for State-level competitions.

CUDDALORE: 

         Thirty students, including 20 boys and 10 girls, are training vigorously at the swimming pool at Anna Stadium here to qualify for State-level competitions. Already, Saba Franklin has brought laurels to Cuddalore by winning the State title in December 2009 and national title in January 2010 in the Under-10 category. The students who start swimming as a pastime soon become obsessed with it, which in turn ignites their passion to achieve greater things. They regularly practise for hours together daily under the watchful eyes of qualified coach S. Aruna, who has obtained a diploma from the National Institute of Sports.

          Mr. Aruna, employed by the Sports Development Authority of Tamil Nadu, told The Hindu that he spots talent during the ‘Learn to Swim' summer camps being organised under the aegis of the Sports Development Authority. He would then pick them up for special coaching and impart the requisite techniques. Swimming was a combination of agility and technique and those who acquired mastery over these aspects would excel in their pursuit. He insisted upon the trainees to wear a cap, goggles and swimsuit to facilitate unhindered movement in the water. To streamline the rush of aspirants during summer, he had charted out seven camps, with each camp spreading over 15 days and each session lasting an hour. Totally, six sessions of one hour duration were being held everyday, with the 3 p.m. to 4 p.m. slot exclusively allotted to children and women. While those who participate in the camp would have to shell out Rs.250, the occasional swimmer would have to pay Rs.20 for an hour of swimming.

          The fees thus collected would go to the kitty of the Sports Development Authority of Tamil Nadu. Mr. Aruna further said that a lot of care was being taken for the maintenance of the pool and in this task he was assisted by four life guards, one pump operator and one gardener. Total hygiene was maintained at the pool by cleaning it up once a month. Chlorine gas weighing three kg was being pumped into the water on weekdays and four kg of gas during weekends. The trainees were unanimous in their opinion that the plunge into the pool not only refreshed them but also brought out the latent talent in them. Swimming kept them fit and instilled in them confidence to face the vicissitudes of life.

Read more »

Failure did not deter this IFS aspirant

CUDDALORE: 

            C. Ramkumar (26) of Aruljothi Nagar in Panruti taluk has made it in the civil services examinations in the fourth attempt. Having scored 130th rank, he aspires to join the Indian Foreign Service.

          Mr. Ramkumar told The Hindu that in the globalised scenario the role of diplomats was crucial. Since the Asian countries — mostly India and China — had come to occupy a predominant position at the international level, it had become important to establish cordial ties among them. He further said that given a chance he would like to be posted in China because its growth had a direct impact on India too. Born as the first son to Chakravarthi (50), Village Administrative Officer in Koliyanur, and Santhi, Mr. Ramkumar nurtured the ambition of becoming a top government official.

            He completed his elementary education, up to Standard VII, in Jayaganapathi Matriculation School at Villupuram and later switched to John Dewey Matriculation Higher Secondary School to complete his schooling. In the Plus-Two examinations held in 2001, Mr. Ramkumar emerged a top scorer in Panruti taluk and, on the strength of his marks, got admission to B.Tech in chemical engineering at Anna University, Chennai. He got selected in the campus interview and took up a job in a private chemical concern in Mumbai. But after serving in the company for one-and-a-half years, Mr. Ramkumar resigned to pursue his dream of clearing the civil services examinations.

          However, in his maiden attempt in 2006 when he took the UPSC examinations at Puducherry, Mr. Ramkumar fumbled and did not even get through the preliminary examinations. The failure did not deter him but fired the zeal in him to prepare vigorously. He underwent training at a coaching centre in New Delhi for a few months. Meanwhile, he got through Group I services examinations in 2007 and became an Assistant Commissioner of Commercial Tax Department in Chennai. He continued to study on his own and cleared the UPSC preliminary and main examinations in the successive years of 2007-08 and 2008-09 but could not make it at the interview. Finally, in the fourth attempt in 2009-10, he emerged successful. His father, Mr. Chakravarthi, said that his determination and the tenacity to overcome the hurdles had brought him the success.

Read more »

Aid for upgraded schools

CUDDALORE: 

            Health Minister M.R.K. Panneerselvam distributed financial assistance of Rs. 3.10 crore for improving facilities in nine upgraded schools, at a function organised by the Education Department at Kurinjipadi near here on Sunday. The Minister said that the nine middle schools at Abatharanapuram, Puliyur Kaattusagai, Theerthanagiri, Pudhukooraipettai, Erumanur, Otteri, Movur, Edaiyar and Thirumuttam were made high schools in 2009-2010. The Centre had sanctioned Rs 5.24 crore for constructing new classrooms in the upgraded schools, at the rate of Rs. 58.25 lakh per school. Of this, a sum of Rs. 3.10 crore had been released.

Read more »

Bank guard's gun goes off

CUDDALORE: 

         A gun in the possession of a security guard posted at a bank located on Netaji Road in Manjakuppam area went off accidentally on Monday. However, no one was injured and no damage was caused to property. Police said that Palani, who formerly served in the Central Reserve Police Force, was employed as security guard in the bank. He said that his gun accidentally went off and the bullet hit the ceiling.

Read more »

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பயணம் சிதம்பரத்தில் இன்று துவங்குகிறது

சிதம்பரம் : 

                 சுற்றுச்சூழலை வலியுறுத்தி சிதம்பரம் போலீஸ் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் இந்தியா முழுவதும் விழிப்புணர்வு சைக்கிள் பிரசார பயணத்தை இன்று துவக்குகின்றனர்.

                இயற்கை வளங்களைப் காப்போம். ஓசோன் பாதிப்பை தவிர்ப்போம். தட்ப வெப்ப நிலையைச் சீரமைப்போம். கரும்புகை தவிர்ப்போம். உலகை பேரழிவில் இருந்து மீட்போம். உடல் ஆரோக்கியத்தை காப்போம் என்பதை வலியுறுத்தி சிதம்பரம் போலீஸ் நண்பர்கள் குழு கமாண்டர் மகேந்திரன் தலைமையில் செந்தில்குமார், அன்புச்செல் வன், வினோத் ராஜ், ராஜ செல்வம் ஆகியோர் சிதம்பரத்திலிருந்து சைக்கிள் பிரசார பயணத்தை துவக்குகின்றனர். இந்தியா முழுவதும் செல்லும் இந்த பயணத்தை எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் தலைமையில் விஜிலென்ஸ் (ஆவின்) ஐ.ஜி., பிரதீப் வி பிலிப் இன்று காலை 7 மணிக்கு துவக்கி வைக்கிறார்.
 
                  கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தராஞ்சல், உத்தர பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், சிக்கிம், அசாம், அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து மணிப்பூர், மிசோராம், திரிபுரா, மேகாலயா, ஒரிசா, புதுச்சேரி வழியாக மீண்டும் சிதம்பரம் வருகின்றனர். மொத்தம் 150 நாட்கள் பயணம் மேற்கொள்கின்றனர்.

Read more »

கல்வியில் புறக்கணிக்கப்படும் நெல்லிக்குப்பம்: படிப்பை பாதியில் கைவிடும் மாணவர்கள்

நெல்லிக்குப்பம்:

             நெல்லிக்குப்பத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இல்லாததால் ஏழை, எளிய மாணவர்கள் வெளியூர் சென்று மேல் படிப்பை தொடர முடியாத அவலம் உள்ளது.நெல்லிக்குப்பம் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். நெல்லிக்குப்பத்தில் அரசு பெண்கள் மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளி உள்ளது. ஆனால், கடந்த 23 ஆண்டுகளாக உள்ள அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த மக்கள் பிரதிநிதிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை. தனியார் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பில் அறிவியல், கணிதம் உள்ளிட்ட அனைத்து பாடப் பிரிவுகளிலும் குறிப்பிட்ட அளவிலேயே மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது. பார்டர் அளவில் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இடம் மறுக்கப்படுகிறது. இதனால் அவர்களுக்கு கடலூர், பண்ருட்டி உள்ளிட்ட அரசு பள்ளிகளில் சேர்ந்து படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
 
                பெரும்பாலான கிராமங்களைச் சேர்ந்த ஏழை, எளிய விவசாய கூலி குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர் இலவச பஸ் பாஸ், புத்தகம் என அனைத்தும் அரசு கொடுத்தாலும் படித்தவரை போதும் வெளியூர் சென்று படித்தால் கூடா நட்பு ஏற்பட்டு கெட்டு போய் விடுவாய் என கூறி தங்களுடன் விவசாய கூலி அல்லது கொத்தனார் வேலைக்கு அழைத்துச் சென்று விடுகின்றனர். பெரும்பாலான கிராமப்புற ஏழை மாணவர்கள், எஸ்.எஸ். எல்.சி.,யில் குறைந்த மதிப் பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர் கள் மேல் படிப்பை தொடர முடியாமல் கூலி வேலைக்கு செல்பவர்களே அதிகம் உள்ளனர். இதனால் அவர்களின் எதிர் காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

                     மத்திய அரசு கல்வியை கட்டாயமாக்கி சட்டம் கொண்டு வந்துள்ளது. மாநில அரசும் இலவச கல்வி, பஸ் பாஸ், சைக்கிள் என கல்வியை வளர்க்க பல முயற்சிகள் மேற்கொண்டுள் ளது. ஆண்டுதோறும் மாவட்டத் தில் பல இடங்களில் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. நெல்லிக்குப்பம் அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தினால் மாணவர்கள் கல்வி தடைபடுவதை தடுக்க முடியும். கல்வியைப் பொறுத்தவரை நெல்லிக்குப்பம் தொகுதி புறக்கணிக்கப்படுகிறது. இத்தொகுதியில் அரசு ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், பொறியியல், மருத்துவம், கலைக் கல்லூரிகள் என எதுவும் இல்லை. அருகில் உள்ள பண்ருட்டி தொகுதியில் பொறியியல் கல் லூரியும், கடலூரில் ஐ.டி.ஐ., கலைக்கல்லூரியும் உள்ளது. நெல்லிக்குப்பம் தொகுதி தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். தமிழக அரசு பட்ஜெட்டில் புதியதாக 6 பாலி டெக்னிக் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளது. அதில் ஒன்றை நெல்லிக்குப்பம் தொகுதியில் அமைக்க வேண்டும். தொகுதி மறு சீரமைப்பில் நெல்லிக்குப்பம் தொகுதி தற் போது எடுக்கப்பட்ட நிலையில் இருக்கும் ஒரே அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியை மேல் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி ஏழை மாணவர்கள் தொடர்ந்து படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

குறுவைபட்ட நாற்று நடும் பணி தீவிரம் விருத்தாசலம் பகுதியில் விவசாயிகள் 'பிசி'

விருத்தாசலம் : 

               விருத்தாசலம் பகுதியில் மோட்டார் பாசன விவசாயிகள் தற்போது குறுவைபட்ட நெல் நாற்று நடும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். விருத்தாசலத்தை சுற்றியுள்ள கம்மாபுரம், கருவேப்பிலங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் நெல் பயிரிடும் விவசாயிகள் அதிக அளவில் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் மோட்டார் பாசன விவசாயிகள் என்பதால் சம்பா, குறுவை ஆகிய இரு பட்டங்களிலும் நாற்று நட்டு நெல் அறுவடை செய்வார்கள். சம்பா பட்டம் முடிந்ததைத் தொடர்ந்து தற்போது கோடை கால நடவான குறுவை பட்ட நாற்று நடும் வேலையில் தீவிரமாக உள்ளனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன் நாற்று விட்டு வைத்திருந்த விவசாயிகள் தற்போது நடவு பணியில் இறங்கியுள்ளனர். கம்மாபுரம் பகுதியில் ஒரு சில விவசாயிகள் முன் கூட் டியே நாற்றுநட்டு நடவு பணியையும் முடித்து விட்டனர். பெரும்பாலான விவசாயிகள் கடந்த ஒரு வாரமாக நடவு பணியை மேற் கொண்டுள்ளதால் இப்பகுதியில் குறுவை நடவு தீவிரம் அடைந்துள்ளது. இதனால் வசாயிகளும், கூலி ஆட்களும் 'பிசி'யாக உள்ளனர்.

Read more »

ஆகாயத்தாமரை படர்ந்து பாழாகிய சிதம்பரம் ஞானபிரகாச தெப்ப குளம்

சிதம்பரம் :

                நடராஜர் கோவில் ஞானபிரகாச தெப்ப குளம் கழிவுநீர் கலந்தும், ஆகாயத் தாமரை படர்ந்துள்ளதால் தெப்பல் உற்சவம் நடந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. சிதம்பரம் நகர மைய பகுதியில் கனகசபை நகரில் அமைந்துள்ள ஞானபிரகாச குளம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நடராஜர் கோவிலில் ஆண்டுக்கு இரு முறை நடக்கும் ஆனித் திருமஞ்சனம், ஆருத்ரா தரிசன விழாக்களின் போது 12வது நாள் இந்த குளத்தில் தெப்பல் உற்சவம் நடக்கும். குளத்தை சுற்றிலும் மதில் சுவர், படித்துறைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் குளம் பராமரிப்பின்றி முற்றிலும் பாழாகிப் போனது. தூர்ந்து போய், சுற்றியுள்ள வீடுகளில் இருந்து கழிவுநீர் கலக்கிறது. அத்துடன் குளம் தெரியாத அளவில் ஆகாயத் தாமரைச் செடிகள் மண்டி துர்நாற்றம் வீசுகிறது. குளத்தை தூர்வாரி படகு குழாம் அமைக்க சுற்றுலா வளர்ச்சி நிதியில் இருந்து 6 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. நகராட்சியின் ஆர்வமின்மையால் அந்த பணம் திரும்பி விட்டது. குளத்தின் தற்போதைய நிலையால் நடராஜர் கோவில் தெப்ப உற்சவம் நடந்து 10 ஆண்டு ஆகிறது. சம்பிராயத்திற்காக சாமியை எடுத்துச் சென்று தண்ணீர் தெளித்து திரும்புகின்றனர். குளத்தை தூர்வாரி தீர்த்த குளமாக மாற்றி தெப்ப உற்சவம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.


Read more »

தொண்டர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வது திமு.க., மட்டும் தான் அமைச்சர் பன்னீர்செல்வம் பேச்சு

சிறுபாக்கம் : 
            
            தொண்டர்களின் உணர் வுகளை புரிந்து கொள்வது தி.மு.க., மட்டும் தான் என அமைச்சர் பன்னீர் செல்வம் பேசினார். சிறுபாக்கம் அடுத்த மலையனூர் கிராமத்தில் தி.மு.க., பிரமுகர் பொன் னுசாமி படத்திறப்பு மற் றும் நினைவு கல் வெட்டு திறப்பு விழா நடந்தது. முன்னாள் எம்.பி., கணேசன் தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் ரவிச்சந்திரன், துணை தலைவர் சின்னசாமி, அவை தலைவர் அமிர்தலிங்கம் முன்னிலை வகித்தனர். தொண்டரணி அமைப்பாளர் செங்குட்டுவன் வரவேற்றார். 

விழாவில் படம் மற்றும் கல்வெட்டை திறந்து அமைச்சர் பன்னீர் செல் வம் பேசுகையில்

                'கருணாநிதியும், ஸ்டாலினும் தொண் டர்களின் உணர்வுகளை புரிந்து கழகத்தை கோவிலாக கட்டி காத்து வருகின்றனர். தி.மு.க., இரும்புக் கோட்டை, யாராலும் அசைத்து பார்க்க முடியாது. ஒரு ரூபாய்க்கு அரிசி, 7 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி ஆகியவைகளை மக்களுக் காக செய்துள்ளோம்' என பேசினார். கூட்டத்தில் திட்டக்குடி நகர செயலாளர் பரமகுரு, நல்லூர் ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமி, ராவணன், பாண்டியன், சின்னசாமி, குமரவேலு, ஆறுமுகம், சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

கல்விக் கட்டண அரசாணை நகல் தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது

கடலூர் : 

              கடலூர் மாவட்டத்தில் செயல்படும் தனியார் பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டணம் குறித்த அரசாணை நகல் சி.இ.ஓ., அலுவலகத்தில் வழங்கப்பட்டது. தமிழகத்தில் தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம் கூடுதலாக வசூலிப்பதை கட்டுப்படுத்தப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்தார். அதன்படி அரசு சென்னை ஐகோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் கட்டண நிர்ணயிப்புக்குழு அமைத் தது. இந்த குழு தனியார் பள்ளிகளிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி கட்டணத்தை நிர்ணயித்துள் ளது.
 
            அதன்படி கடலூர் மாவட்டத்தில் 398 பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும். தற்போது 328 பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் 101 பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயம் குறித்த பட்டியலை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அமுதவல்லி தனியார் பள்ளிகளுக்கு வழங்கினார். மீதமுள்ள பள்ளிகளுக்கு விரைவில் வழங்கப்படும்.

Read more »

ஊழல் எதிர்ப்பு இயக்க பொதுக்குழு கூட்டம்

ஸ்ரீமுஷ்ணம் : 

                   ஊழல் எதிர்ப்பு இயக்க பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்தல் ஸ்ரீமுஷ்ணத்தில் நடந்தது. இயக்கத் தலைவர் வள்ளுவன் தலைமை தாங்கினார். புலவர் கண்ணன் வரவேற்றார். ஸ்ரீமுஷ்ணம் கிளைத் தலைவர் சேதுமாதவன், விருத்தாசலம் கிளைத் தலைவர் கலிவரதன் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர் மாவட்ட செயலாளர் அப்பாஜி பேசினார்.

                பொருளாளர் செல்வராஜ் வரவு செலவு கணக்குகளை வாசித்தார். கூட்டத்தில், ஊழல் வழக்குகளில் சிக்கியவர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்படுவது குறித்த விவரங்களை செய்தித் தாள்கள் மற்றும் அவர்கள் படங்களை சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் வெளியிடுவது. தகவல் ஆணையர் சாரதா நம்பி ஆரூரானை மாற்ற கோரி சென்னை தகவல் ஆணையம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து நடந்த நிர்வாகிகள் தேர்தலில் வேணுகோபால் தேர்தல் ஆணையாளராக பணியாற்றினார். மாவட்ட தலைவராக வள்ளுவன், துணைத் தலைவர் ராஜாராம், செயலாளர் அப்பாஜி, இணை செயலாளர் குணசேகரன், பொருளாளர் செல்வராசு, செயற்குழு உறுப்பினர்களாக ரவி, ரங்கராஜன், கலைமணி, பூவராகமூர்த்தி, ஸ்டெல்லா மேரி, ஜெயராமன் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.

Read more »

டாஸ்மாக் கடைகளில் 'சரக்கு'தட்டுப்பாடு! : 'குடி' பிரியர்கள் திண்டாட்டம்

கடலூர் : 

               டாஸ்மாக் கடைகளுக்கு தேவைக்கேற்ப மது பாட்டில்கள் வழங்கப்படாததால் கடலூர் மாவட்டத்தில் விற்பனை குறைந்துள்ளது. குடிபிரியர்கள் மது வகைகள் கிடைக்காமல் திண் டாடி வருகின்றனர்.

              கடலூர் மாவட்டத்தில் 228 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு தேவையான பிராந்தி, விஸ்கி, ரம், ஒயின் மற்றும் பீர் போன்ற மதுபானங்கள் தேவைக்கேற்ப கடலூர் சிப்காட் பகுதியில் உள்ள டாஸ்மாக் குடோன்களில் இருந்து வாரம் இருமுறை வழங்கப்படுகிறது. துவக்கத்தில் மாவட்டத்தில் தினசரி விற்பனை 35 லட்சம் முதல் 40 லட்சம் ரூபாயாக இருந்தது தற்போது ஒரு கோடி ரூபாயை தாண்டியுள்ளது. கோடைகாலம் என்பதால் விற்பனை மேலும் அதிகரிக்கும் சூழல் உள்ளது. ஆனால் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு, கடலூர் சிப்காட்டில் உள்ள குடோன்களில் இருந்து சரக்குகளை தேவைக்கேற்ப சரவர வழங்குவதில்லை.

                   உதாரணத்திற்கு, ஒரு கடையில் 10 பெட்டி பீர் 'இன்டென்ட்' (கேட்பு பட்டியல்) கொடுத்திருந்தால் மூன்று அல்லது நான்கு பெட்டி மட்டுமே வழங்கப்படுகிறது. அதுவும் அதிகம் விற்பனையாகும் 'மெக்டோவல்', 'மானிட்டர்' பிராந்தி, 'ஓல்ட்மங்க்' ரம் போன்ற பிரபல கம்பெனிகளின் தயாரிப்புகளை வழங்காமல், புதுப்புது கம்பெனிகளின் தயாரிப்புகளை குறைந்த அளவிற்கு வழங்குகின்றனர். பீர் வகைகள் மிக குறைந்த அளவே வழங்கப்படுகிறது. குடிப்பிரியர்கள் தங்களுக்கு தேவையான 'பிராண்ட்' மதுவகை கிடைக்காததால், டாஸ்மாக் விற்பனையாளர்களிடம் தகராறு செய்வது அதிகரித்து வருகிறது. மாவட்டத்தின் தேவைக்கேற்ப சென்னை தலைமையகத்திலிருந்து மதுபாட்டில்கள் கடலூர் சிப்காட்டில் உள்ள குடோன்களுக்கு லாரிகளில் அனுப்பட்டு வருகிறது. இதனை குடோனில் இறக்கி, பின்னர் வேறு லாரிகள் மூலம் கடைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

                        இதற்காக குடோனில் 20 லோடுமேன்கள் உள்ளனர். தற்போது விற்பனை அதிகரித்துள்ளதால் கூடுதல் மது பாட்டில்களை அனுப்பிட கூடுதலாக லோடு மேன்களை நியமிக்க வேண்டும். அதற்கு தற்போது பணியில் உள்ள லோடுமேன்கள் தங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்பதற்காக புதிதாக தொழிலாளர்களை நியமிக்க எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக மதுபாட்டில்களை கடைகளுக்கு உரிய நேரத்தில் தேவைக்கு ஏற்ப அனுப்புவதில் சிக்கல் நிலவுகிறது. அதேபோன்று மதுபான கம்பெனிகள் தங்கள் தயாரிப்பு மதுபானங்களை விற்பனை செய்வதற்காக அதிகாரிகளுக்கு 'கமிஷன்' வழங்கி வருகிறது.

                      புதிய கம்பெனிகள் அதிகமாக 'கமிஷன்' தருவதால் நுகர்வோர் அதிகம் விரும்பி வாங்கும் பிரபல கம்பெனி தயாரிப்பு மதுபானங்களை அனுப்பாமல், அதிக கமிஷன் தரும் கம்பெனிகளின் மதுபாட்டில்களை கடைகளுக்கு அனுப்புகின்றனர். மொத்தத்தில் டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் குடோனில் பணியாற்றும் லோடுமேன்களின் சுய நலத்தால் மாவட்டத்தில் மதுபானங்களின் விற்பனை பாதிக்கிறது. மேலும், தங்களுக்கு வேண்டிய 'பிராண்ட்' மதுபானங்கள் கிடைக்காததால் கடலூர், பண்ருட்டி பகுதியை சேர்ந்த குடிப்பிரியர்கள் அருகாமையில் உள்ள புதுச்சேரி மாநிலத்திற்கு செல்வதால், தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

Read more »

பண்ருட்டி பஸ் நிலையம் பகுதி கடைகளில் காலாவதியான பொருட்கள் பறிமுதல்

பண்ருட்டி : 

            பண்ருட்டி பஸ் நிலையம் பகுதி கடைகளில் நகராட்சி சுகாதார அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். பண்ருட்டி நகராட்சி சுகாதார அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் மணிகண்டன், சுதாகர், மேற்பார்வையாளர்கள் பாண்டியன், கொளஞ்சி உள்ளிட்டோர் பஸ் நிலைய பகுதியில் உள்ள ஸ்வீட் ஸ்டால், பேக்கரி, ஓட்டல்கள், பங்க் கடைகள் உள்ளிட்ட கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். சோதனையில் காலாவதியான, பெயர் விலாசம், தயாரிப்பு நாட்கள் இல்லாத ஸ்வீட்கள், பேக்கரி பொருட்கள், பிஸ்கட்டுகள், தண்ணீர் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Read more »

சத்துணவு பணியாளர் சங்க ஆர்ப்பாட்டம்

கடலூர் : 

             கடலூரில் தமிழ்நாடு அரசு சத்துணவு பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
 
                 சத்துணவு பணியாளர்களுக்கு 27 ஆண்டுகளாகியும் பணி விதிகள் ஏற்படுத்தவில்லை. பணி நிரந் தரம் செய்ய வேண்டும். அரசு விதியின் படி ஓய்வூதியம், அகவிலைப்படி வழங்க வேண்டும். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப மைய செலவினத் தொகையை இரு முறை மாற்றியமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சற்குரு தலைமை தாங்கினார். செயலாளர் செல்வராசு வரவேற்றார். ஒன்றிய தலைவர்கள் சபாநாயகம், தங்கராசு, துரைராஜ், அண்ணாதுரை, ஒன்றிய செயலாளர்கள் சேவியர், ராமதாஸ், பழனிவேல் முன்னிலை வகித்தனர். அரசு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் விஜயகுமார், செயலாளர் கோவிந்தன் உள்ளிட்டோர் பங்கேற் றனர்.

Read more »

தொடக்கக் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் வீட்டு வாடகைப்படி கோரி ஆர்ப்பாட்டம்

கடலூர் : 

               தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் தொடக்க கூட்டுறவு வங்கிப் பணியாளர்களுக்கு வீட்டு வாடகைப்படி வழங்க வேண்டும். இரண்டு ஆண்டுக்கு ஒரு ஊதிய உயர்வு என்பதை மாற்றி ஆண்டிற்கு ஒருமுறை ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். தகுதி உள்ள ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
 
                  முன்னதாக திருப்பாதிரிப்புலியூர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். பொருளாளர் விஷ்ணுராம் முன்னிலை வகித்தார். பொதுச் செயலாளர் பாண்டியன் துவக்கி வைத்தார்.

Read more »

பண்ருட்டியில் புதுச்சேரி பதிவு எண் வாகனங்கள் பிடிப்பு

பண்ருட்டி : 

                 பண்ருட்டியில் புதுச்சேரி பதிவு எண் கொண்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
                   பண்ருட்டியில் வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயக்குமார் தலைமையில் போக்குவரத்து ஆய்வாளர் வேலுமணி, கோகுலகிருஷ்ணன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தணிகாசலம் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று காலை நான்கு முனை சந்திப்பில் புதுச்சேரி பதிவு எண்கள் கொண்ட மோட்டார் பைக்குகளை சோதனை செய்தனர். சோதனையில் 31 புதுச்சேரி பதிவு எண் கொண்ட மோட்டார் பைக்குகளுக்கு 8 சதவீதம் வரி செலுத்தி வாகனங்களை எடுத்துச் செல்ல கூறி அறிவுறுத்தினர். மேலும் அனைத்து மோட்டார் பைக்குகளையும் பறிமுதல் செய்தனர்.

Read more »

ஆற்றில் மூழ்கிய மாணவர் உடல் மீட்பு

சிதம்பரம் : 

                    காட்டுமன்னார்கோயில் அருகே ஆற்றில் மூழ்கிய மாணவர் உடல் மீட்கப்பட்டது. காட்டுமன்னார்கோயில் உடையார்குடி அன்னை தெரசா நகரை சேர்ந்தவர் பவுல் சுந்தர். இவரது மனைவி கீதாரித்தா இருவரும் ஆசிரியர்கள். கடந்த 9ம் தேதி கடலூர் பள்ளியில் பிளஸ் 1 படித்த தனது மகன் லெஸ்லி டிமல்லோ (17)வை அழைத்துக் கொண்டு காட்டுமன்னார்கோவிலுக்கு மீன் வாங்கச் சென்றனர். கீழணையில் இருந்து வீராணத்திற்கு வடவாறு வழியாக தண்ணீர் வரும் நிலையில் வடவாற்றில் குளிக்க ஆசைப்பட்டனர். லெஸ்லி டிமல்லோ தண்ணீரில் இறங்கி குளிக்கும்போது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். இரவு முழுவதும் தீயணைப்பு நிலைய அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் வீரர்கள் தேடினர். நேற்று முன்தினம் உடலை மீட்டனர்.

Read more »

சிறுபாக்கத்தில் வாகன தணிக்கையின் போது இருபத்தைந்து பேர் மீது வழக்குப் பதிவு

சிறுபாக்கம் : 

                         சிறுபாக்கத்தில் வாகன தணிக்கையின் போது இருபத்தைந்து பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சிறுபாக்கம் சப் இன்ஸ்பெக்டர்கள் மனோகரன், அரிகிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று முன் தினம் மாலை அடரி - அசகளத்தூர் சாலை, அரசங்குடி - விருத்தாசலம் சாலை ஆகிய இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஹெல்மெட், டிரைவிங் லைசென்ஸ், ஆர்.சி., புத்தகம் இல்லாமலும், குடிபோதையில் வாகனம் ஓட்டியும் வந்த 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Read more »

அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு இடம் தேர்வு: சி.இ.ஓ., நேரில் ஆய்வு






 
பண்ருட்டி : 

                    பண்ருட்டியில் அரசு பெண்கள் உயர் நிலைப் பள்ளிக்கு தேர்வு செய்த இடத்தை சி.இ.ஓ., மற் றும் தாசில்தார் பார்வையிட்டனர். பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தாசில்தார் பாபு, தலைமையாசிரியர் சுப்ரமணியன் ஆகியோருடன் சி.இ.ஓ., அமுதவல்லி ஆலோசனை நடத்தினார். இதில் நகராட்சி சேர்மன் பச்சையப்பன், மாவட்ட தொழில் வர்த்தக சங்கத் தலைவர் சண்முகம், செயலாளர் வீரப்பன், மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவர் பாண்டுரங்கன், செயலாளர் ராஜா, கவுன்சிலர் தட்சணாமூர்த்தி, சிவிக் எக்ஸ்னோரா தலைவர் பசுபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து சி.இ.ஓ., விழமங்கலம் நகராட்சி துவக்கப் பள்ளி பகுதியை பார்வையிட்டார். பின்னர் பண்ருட்டி உதவி தொடக்க கல்வி அலுவலர் அறிவழகனையும், துவக் கப் பள்ளி தலைமையாசிரியரிடம் துவக்கப்பள்ளியை 6,7,8,9ம் வகுப்பு பெண்கள் உயர் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த அறிக்கை அளிக்க உத்தரவிட்டார். 

இதுகுறித்து  கூறிய சி.இ.ஓ., அமுதவல்லி

                     'வரும் கல்வியாண்டு முதல் துவக்கப் பள்ளி பெண்கள் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த இயக்குனருக்கு பரிந்துரை செய்யப்படும்' என்றார்.

Please don't print this Page unless you really need to - this will protect trees on planet earth.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior