உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, செப்டம்பர் 02, 2011

கடலூர் மாவட்டத்தில் 3 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பு ஊசி போடும் பணி தொடக்கம்

கடலூர்;

                  கடலூர் மாவட்டத்தில் 3 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பு ஊசி போடும் பணி, 27-ம் தேதி தொடங்கியது.30 நாள்கள் தடுப்பு ஊசி போடும் பணி தொடர்ந்து நடைபெறும் என்று கால்நடைத் துறை அறிவித்தது. 

                    கோமாரி என்னும் வைரஸ் நோயால் இரட்டைக் குளம்புகள் கொண்ட கால்நடைகள் குறிப்பாக மாடுகள் அதிகம் பாதிக்கப்படுகின்றன.இந்த நோய் ஒரு மாட்டிடம் இருந்து மற்றொரு மாட்டுக்கு, எளிதில் தொற்றிவிடும். இதனால் மாடுகளின் வாய் மற்றும் குளம்புகளில் புண் ஏற்படும். கறவை மாடுகளில் பால் உற்பத்திக் குறையும். எருதுகளின் வேலைத்திறன் குறையும். பசுக்கள் சினை பிடிப்பது தடைபடும்.இளம் கன்றுகள் இறக்க நேரிடும். கோமாரி நோயால் கால்நடைகள் இறப்பு குறைவாக இருந்தபோதிலும் பொருளாதார இழப்பு அதிகம். 

                 எனவே கடலூர் மாவட்டத்தில் 6 மாதங்களுக்கு ஒருமுறை கோமாரி நோய் தடுப்பு ஊசி, இலவசமாகப் போடப்பட்டு வருகிறது. தற்போது கடலூர் மாவட்டத்தில் 3 லட்சம் மாடுகளுக்கு, கோமாரி நோய் தடுப்பு ஊசி போடும் பணி, கடந்த 27-ம் தேதி தொடங்கியது.கால்நடைத் துறை மண்டல  இணை இயக்குநர் டாக்டர் குருபாக்கியம், உதவி இயக்குநர் ராமசாமி ஆகியோரின் உத்தரவின்பேரில், கால்நடைத் துறை மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் ஆங்காங்கே கிராமங்களில் மாடுகளை கொண்டு வரச் செய்து தடுப்பு ஊசி போட்டு வருகிறார்கள். 

                கடலூர் பகுதியில் கால்நடை உதவி மருத்துவர் மோகன், கால்நடை ஆய்வாளர்கள் ராஜமச்சேந்திர சோழன், நாகராஜ், உதவி ஆய்வாளர் லட்சுமி ஆகியோர் அடங்கிய குழுவினர், தடுப்பு ஊசி போடும் பணியைச் செய்து வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் ஆகஸ்ட் 27-ம் தேதி தொடங்கி 30 தினங்களுக்குள், 3 லட்சம் மாடுகளுக்கு தடுப்பு ஊசி போடப்படும் என்று கால்நடைத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.






Read more »

கடலூரில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்: 59 கிலோ எடை கொண்ட மெகா லட்டு தயாரிப்பு


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, வியாழக்கிழமை கடலூர் திருப்பாப்புலியூர் சங்கரநாயுடு தெருவில் இனிப்புக் கடை ஒன்றில் வைக்கப்பட்டு இருக்கும் 59 கிலோ லட்டு
கடலூர்,:
 
           விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கடலூரில் இனிப்புக் கடை ஒன்றில், 59 கிலோ எடை கொண்ட மெகா லட்டு தயாரித்து வைக்கப்பட்டு உள்ளது.
 
               கடலூர் திருப்பாப்புலியூர் சங்கரநாயுடு தெருவில், இனிப்புப் பலகாரக் கடை வைத்து இருப்பவர்கள் ரமேஷ், விஜய், விநய் சகோதரர்கள். அவர்கள் தங்கள் கடையில் இந்த மெகா லட்டுவைத் தயாரித்து பொதுமக்கள் பார்வைக்கு வைத்து உள்ளனர்.இந்த மெகா லட்டு 20 கிலோ சர்க்கரை, 15 கிலோ நெய், 15 கிலோ கடலை மாவு மற்றும் ஏலக்காய், முந்திரிப் பருப்பு உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டது. 
 
              8 தொழிலாளர்கள் இந்த மெகா லட்டுவை 2 நாள்களில் தயாரித்து உள்ளனர்.9 ஆண்டுகளுக்கு முன், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 50 கிலோ எடை கொண்ட லட்டுவைத் தயாரித்த ரமேஷ் சகோதரர்கள், ஆண்டுக்கு ஒரு கிலோ வீதம் எடையை அதிகரித்து வந்து, இவ்வாண்டு 59 கிலோ லட்டுவைத் தயாரித்து உள்ளனர். விநாயகரைப் பூஜிக்கும் பக்தியுடன் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த மெகாலட்டு, விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் நாளில், பொதுமக்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் என்றும் ரமேஷ் சகோதரர்கள் தெரிவித்தனர்.
 
 
 
 
 
 
 

Read more »

நெய்வேலியில் கடத்தப்பட்ட 12 வயது சிறுமி கற்பழித்து கொலை : இருவர் கைது

 http://mmimages.mmnews.in/Articles/2011/Sep/42816b6e-e408-4827-83fc-e49f79b33e94_S_secvpf.gif
 
நெய்வேலி:

           நெய்வேலி அருகே வானதிராயபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகள் கனிதா (வயது 10). இவர் வடலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 17-ந்தேதி பள்ளிக்கு சென்ற கனிதா அதன் பிறகு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கனிதா இல்லை.

          இந்த நிலையில் கடந்த 28-ந்தேதி தென்குத்து கிராமத்தில் ராஜா என்ப வரது வீட்டின் தோட்டத்தில் உள்ள கிணற்றில் தலை இல்லாமல் கனிதாவின் உடல் மிதந்தது.    இதையடுத்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் தீயணைப்பு படையினர் உதவியுடன் உடலை மீட்டனர். பின்னர் என்.எல்.சி. நிறுவனத்தின் முயற்சியால் கனிதாவின் தலையும் மீட்கப்பட்டது.

            இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சம்பவத்தன்று பள்ளி முடிந்து வீடு திரும்பிய கனிதாவை பிணம் கிடந்த கிணற்றின் உரிமையாளரான ராஜாவின் மைத்துனர் அய்யனார் (வயது 25) என்பவர் கனிதாவை சைக்கிளில் ஏற்றிச் சென்றது தெரியவந்தது. ஆனால் கனிதா மாயமான நாள் முதல் அய்யனாரும் மாயமாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.    
 
இதையடுத்து அவரை போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில் கண்ணு தோப்பு பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு பஸ்சுக்காக காத்திருந்த அய்யனாரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் கனிதாவை கழுத்தை நெறித்து கொன்று கிணற்றில் வீசியதை ஒப்புக் கொண்டார்.

கனிதாவை கொன்றது ஏன் என்பது குறித்து போலீசாரிடம் அய்யனார் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். 
 
அதில் அவர் கூறியிருப்பது:-  

                   சம்பவத்தன்று பள்ளி சென்றுவிட்டு திரும்பிய கனிதாவை தென்குத்துவில் உள்ள எனது அக்கா வீட்டுக்கு ஏமாற்றி அழைத்து சென்றேன். அங்கு கனிதாவை கற்பழிக்க முயற்சி செய்தேன். அப்போது அவள் உடன்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த நான் கனிதாவை கழுத்தை நெறித்து கொலை செய்தேன். அந்த நேரத்தில் எனது தாய் சந்திரா பார்த்து சத்தம் போட்டார். பின்னர் எனது தாய் சந்திராவை சமாதானம் செய்தேன். அவரது உதவியுடன் கனிதாவின் பிணத்தை கிணற்றில் வீசினேன்.

                மேலும் மாணவியின் உள்ளாடை காலணி ஆகியவற்றை எனது தாயார் மறைத்து வைத்தார். மேலும் வீட்டில் பதிந்திருந்த ரத்தக்கரையை கழுவி சுத்தம் செய்தார். இதையடுத்து தலைமறைவாக இருந்து வந்த நான் வெளியூருக்கு தப்பி செல்ல பஸ்சுக்கு காத்திருந்த போது என்னை போலீசார் கைது செய்துவிட்டனர்.  இவ்வாறு வாக்குமூலத்தில் அய்யனார் கூறி இருந்தார். இதைத்தொடர்ந்து அய்யனாரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது தாய் சந்திராவையும் கைது செய்தனர்.
 
 
 
 

Read more »

விவசாயத்திற்கு தீங்கு ஏற்படுத்தும் பார்த்தீனியம் செடிகளை அழிக்க மாணவர்கள் முன் வர வேண்டும்: அமைச்சர் எம்.சி.சம்பத்

சிதம்பரம்:
 
               விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் தீங்கு ஏற்படுத்தும் பார்த்தீனியம் செடியை அழிக்க பள்ளி, கல்லூரி மாணவர்கள், விவசாயிகள், வேளாண் வல்லுனர்கள் இணைந்து ஒரு மக்கள் இயக்கமாக செயல்படுத்த வேண்டும் என்று அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார். அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உழவியல் துறை தேசிய வேளாண் புதுமைத்திட்டத்தின் கீழ் பார்த்தீனியம்களை ஒழிப்பு விழிப்புணர்வு பிரசார தொடக்க விழா பல்கலைக்கழக சாஸ்திரி ஹாலில் நடைபெற்றது. விழாவில் தமிழக சிறப்பு திட்டங்கள் அமலாக்கத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்துப்பேசினார்.

அவர் பேசியது:-

                 கடந்த 2010-11-ல் தமிழகத்தில் 85 லட்சத்து 35 ஆயிரம் டன் உணவு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தற்போது முதல்-அமைச்சர் ஜெயலலிதா 2011-12-ல் அதன் பன்மடங்காக உயர்த்த 115 லட்சம் டன் உற்பத்தி குறீயீட்டை நிர்ணயம் செய்து அதற்கான திட்டங்களை வகுத்துள்ளார். அதனடிப்படையில் இந்த பார்த்தீனியம் செடி ஒழிப்பு திட்டமாகும். விவசாயத்தை பசுமை புரட்சியாக மாற்றியமைக்க முதல்வர் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். தரமான விதை வழங்குதல், விவசாயத்திற்கு தேவையான கனரக மற்றம் நடுத்தர வாகனங்கள் வாங்க மானியத்துடன் கூடிய கடன் திட்டத்தையும் அறிவித் துள்ளார்.

                கடலூர் மாவட்டத்தில் 9 சட்டப் பேரவைத் தொகுதிகள், 5 நகராட்சிகள், 16 பேரூ ராட்சிகள், 13 ஒன்றியங்கள் மற்றும் 600-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. ஒவ்வொரு நகராட்சி, பேரூராட்சி பகுதிகளிலும் இதுபோன்ற விழிப்புணர்வு முகாம்களை நடத்த அண்ணாமலைப் பல்கலை துணைவேந்தரை கேட்டுக் கொள்கிறேன். பார்த்தீனியம் செடியை முழுமையாக அகற்ற அரசு வேளாண்துறை அதிகாரிகளும், நாங்களும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் கைகோர்த்து நிற்போம் என உறுதி கூறுகிறேன்.

                பார்த்தீனியம் செடி ஒழிப்பில் தமிழகத்திலேயே கடலூர் மாவட்டம் முன்னோடியாக திகழ அண்ணாமலை பல்கலைக்கழகம் பணியாற்றி பெருமை  சேர்க்கும். இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார். விழாவில் சமூகநலத்துறை அமைச்சர் செல்விராமஜெயம் சிறப்புரையாற்றினார். துணைவேந்தர் டாக்டர் ராமநாதன் தலைமை தாங்கி பேசினார். விழாவில் அண்ணாமலைப் பல்கலைக்கழக உழவியல் துறைத்தலைவர் பேராசிரியர் கதிரேசன் வரவேற்றார். மாவட்ட கலெக்டர் அமுதவல்லி, எம்.எல்.ஏ.க்கள் பாலகிருஷ்ணன், நாக.முருகுமாறன், கடலூர் மாவட்ட இணை இயக்குனர் இளங்கோவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தோட்டக்கலைத்துறை தலைவர் மணிவண்ணன் நன்றி கூறினார்.

               விழாவில் வேளாண்புல முதல்வர் வசந்தகுமார், தொலைதூரக்கல்வி மைய இயக்குனர் நாகேஸ்வரராவ், சிண்டிகேட் உறுப்பினர்கள் சிவக்குமார், ராஜவன்னியன் உள்ளிட்டோர் பங் கேற்றனர். 
 
 
 
 
 

Read more »

Cuddalore Brahmar Cellulose Private Limited has bought an Indian pharmaceutical firm

           Dairy giant Fonterra has bought an Indian pharmaceutical firm as part of a joint venture with a Dutch dairy company.

           Fonterra announced Wednesday that its 50-50 joint venture with Royal FrieslandCampina, DMV-Fonterra Excipients (DFE), had agreed to acquire ingredient manufacturer Brahmar Cellulose Private Limited (BCPL), based in Cuddalore, Tamil Nadu, reported Xinhua. BCPL manufactures ingredients used by the pharmaceutical industry to make tablets and pills.

         DFE was already the world's leading supplier of lactose excipients -- substances used to bind or carry the active ingredients in tablets, capsules and powders for medical inhalers -- accounting for around half of the global sales and for 5 percent to 10 percent of oral tablet excipients, said a statement from Fonterra.




Read more »

NLC donates books to school libraries

             B Surender Mohan, Director (Mines), Neyveli Lignite Corporation, distributed books worth `2.25 lakh to various government school libraries in and around Neyveli, as part of its Corporate Social Responsibility (CSR) measures.
 
            Head teachers of schools from Vadalur, Karunkuzhi, Kamapuram, Erumbur, Seplanatham, Marungur, Perperiyakuppam (boys and girls School), Venkatampettai, Kizhakuppam and Melakuppam received the books. Mohan said parents and teachers should inculcate in children the habit of reading books. They should also help develop computer skills, he added.
 
           Neyveli Lignite Corporation has been providing various training programmes for self-development, motivation, amongst others, for school students at peripheral villages to improve their abilities under Peripheral Development Scheme (PDS). Neyveli Lignite Corporation has been taking up projects under PDS provided by the district administration, covering villages within a radius of 10 km and with a fund allocation of Rs 2 lakh per annum.
 
          VS Sankaran, general manager (land acquisition), outlined the infrastructural and development facilities provided by Neyveli Lignite Corporation to schools in and around Neyveli. TS Sivasubramanian, general manager (employee development centre), mentioned about various training programmes offered.




Read more »

Copies of registered documents on Internet soon

            The State government has decided to implement a project of web-based integrated solution for the issue of copies of registered land/property documents, encumbrance certificates and marriage certificates, Registration and Commercial Taxes Minister Agri S.S. Krishnamoorthy told the Assembly on Tuesday.

            Once executed, the project would enable people to get the copies through internet. An amount of Rs. 30 lakh had been set apart for the selection of a consultant to prepare software, define parameters for its use and assess the likely expenditure for the project, the Minister said, concluding the debate on the demands for grants to his department. Five more sub-registrar offices would be formed by bifurcating those five sub-registrar offices that involved the maximum number of registration of documents.

         Similarly, in respect of the Commercial Taxes Department, an end-to-end computerisation project would be carried out. The implementation partner, to be chosen through a transparent bidding process, would be responsible for design, implementation and maintenance. The one-time cost of procurement, deployment and commissioning of IT infrastructure had been tentatively worked out as Rs. 78.73 crore and the recurring cost for the first year, Rs. 21.45 crore. In five years, the total cost of the project was estimated at Rs. 185.98 crore, he said. All check posts, run by the Department, would be modernised, he added. 

 MORE DETAILS





Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior