உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, பிப்ரவரி 05, 2010

மருத்துவமனைக்கு கூடுதல் டாக்டர்கள் : என்.எல்.சி., சேர்மன் அன்சாரி தகவல்

நெய்வேலி : 

              என்.எல்.சி., மருத்துவமனையில் கூடுதலாக டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளதாக சேர்மன் அன்சாரி பேசினார். என்.எல்.சி., நிறுவனம், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு சங்கமும் இணைந்து நடத் திய இலவச கண் சிகிச்சை முகாம் என்.எல்.சி., பொது மருத்துவமனையில் நேற்று நடந்தது.  முதன்மை மருத்துவ கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் வரவேற்றார். என்.எல்.சி., இயக்குனர்கள் சுரேந்தர்மோகன், கந்தசாமி, சேகர், பாபுராவ், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மருத் துவ குழு தலைமை டாக்டர் ஜெயகாயத்திரி முன்னிலை வகித்தனர். முகாமை துவக்கி வைத்த என்.எல்.சி., சேர்மன் அன்சாரி பேசியதாவது:என்.எல்.சி., நிறுவனத்தின் சுற்றுப்புற மேம் பாட்டு பணிகளுக்காக நிறுவனம் ஒதுக்கீடு செய்யும் தொகை மேலும் உயர வேண்டுமெனில் நிறுவனம் முதலில் வளர்ச்சிடைய வேண்டும். அதற்காக ஒவ்வொரு பணியாளரும் முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும். என். எல்.சி., மருத்துவமனையில் புதியதாக டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்றார். முகாமில் 700 பேர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களில் 88 பேர் அறுவை சிகிச்சைக்காக புதுச்சேரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். என். எல்.சி., மருத்துவமனையின் டாக்டர்கள் வெங்கட்ராமன், சுப்ரமணியன், உஷா, வெண் மால் தேவி, தாரிணி, மவுலி, பாக்கியமேரி, சுகுணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

கோவிலை திறக்கக்கோரி பொது மக்கள் திடீர் சாலை மறியல்

பண்ருட்டி : 

                பண்ருட்டி அருகே கோவிலை திறக்க வலியுறுத்தி பொதுமக்கள் நடத்திய திடீர் சாலைமறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பண்ருட்டி அடுத்த காட்டுகூடலூர் ஊராட்சியில்  அய்யனார், பிடாரி நொண்டிவீரன் கோவில்கள் உள்ளன.  இந்த கோவிலுக்கு சொந்தமாக இரண்டரை  ஏக்கர் நிலம் உள்ளது.  கோவில் மற்றும் நிலத்தை நிர்வகித்து வந்த சக்கரபாணி  பரம்பரை அறங்காவலராக  நியமிக்க இந்து சமய அறநிலையத்துறையில் மனு கொடுத்தார். இதில் விழுப்புரம் இணை ஆணையர் சக்ரபாணியின் மனுவை தள்ளுபடி  செய்து கோவிலுக்கு  செயல்அலுவலர் நியமனம் செய்து,  கோவில் முன்னாள்  நிர்வாகி சக்கரபாணியிடம் உள்ள அனைத்து பொறுப்புகளையும் அதிகாரிகள் ஏற்க உத்தரவிட்டார்.அதன்படி நேற்றுமுன்தினம்  கோவில் நிர்வாக அதிகாரி வெங்கடகிருஷ்ணன், உதவியாளர் முத்து ஆகியோர் சக்கரபாணியிடம் பொறுப்புகளை ஒப்படைக்க கோரினர். ஆனால் அதற்கு  சக்கரபாணி ஒப்படைக்க முடியாது என மறுத்து கூறினார்.இதுகுறித்து  தாசில்தார் பாபு உள்ளிட்டோர் நடத்திய பேச்சு வார்த்தையும் தோல்வி அடைந்தது. கோவில் நிர்வாகத்தை உடனே அரசு பொறுப்பேற்க கூறி கோவில் அதிகாரிகளை சிறைபிடித்தனர். நேற்று காலை 11 மணியளவில் காட்டுகூடலூர்-விருத்தாசலம் சாலையில் ஊராட்சி மன்ற தலைவர் பாரிவள் ளல் தலைமையில் 150 பெண்கள் உள் ளிட்ட 300 பேர் கோவிலை உடனே பூஜைக்கு திறக்க வேண்டும் என வலியுறுத்தி மறியல் செய்தனர்.இதுகுறித்து தகவலறிந்த முத் தாண்டிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் சந்திரபாபு, வருவாய் ஆய்வாளர்கள் சித்ரா, பூபாலன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகள் , தாசில்தார் உள் ளிட்டோர் வந்தால் தான் முடிவு ஏற்படும் என கூறினார். இதனால் பிற்பகல் 3 மணிவரை தீர்வு ஏற்படாமல் பஸ்போக்குவரத்து பாதித்தது.

Read more »

என்.எல்.சி., பணியாளர்கள் சலுகைகளை விரைந்து முடிக்க எம்.பி., அழகிரி வலியுறுத்தல்

நெய்வேலி : 

              என்.எல்.சி., நிரந்தர, ஒப்பந்த பணியாளர்களுக்கான சலுகைகளை விரைந்து நிறைவேற்றி தருமாறு சேர்மன் அன்சாரியிடம் எம்.பி., அழகிரி வலியுறுத்தினார். என்.எல்.சி.,யில் நேற்று முன்தினம் சேர்மன் அன்சாரியை கடலூர் எம்.பி., அழகிரி சந்தித்து என்.எல்.சி.,யில் பணியாற்றும் நிரந்தர, ஒப்பந்த பணியாளர்களின் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார். 

இதுபற்றி எம்.பி., அழகிரி கூறும் போது : 

                    என்.எல்.சி., பணியாளர்களுக்கான அனைத்து சலுகைகளையும் விரைந்து நிறைவேற்றிட வேண்டும் என சேர்மன் அன்சாரியிடம் தெரிவித்தபோது, நியாயமான அனைத்து கோரிக்கைகளையும் ஒவ் வொன்றாக விரைவில் செய்து முடிப்பேன் என தெரிவித்தார்.மேலும் என்.எல்.சி., நிறுவன வளர்ச்சி எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவிற்கு நிரந்தர தொழிலாளர் கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக் கான தேவைகளை பெற்று தருவது எனது கடமை. எனவே தொடர்ந்து என். எல்.சி., நிர்வாகத்தின் முழுமையான ஒத்துழைப்புடன் எனது கடமைகளை செய்து முடிப்பேன் என எம்.பி., அழகிரி கூறினார்.

Read more »

குடிசைகளை கான்கிரீட் வீடுகளாக்குவது முதல்வரின் சாதனை திட்டம்: அய்யப்பன்

கடலூர் :  

                 குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டம் மணி மகுடத்தில் வைரக்கள் பதித்தது போன்ற திட்டமாகும் என எம்.எல்.ஏ., அய்யப்பன் பேசினார். கடலூர் வில்வநகரில்  10 லட்ச ரூபாய் மதிப்பிலான சமுதாயக்கூடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா, அங்கன் வாடி மையம் திறப்பு விழா நடந்தது. சேர்மன் தங்கராசு தலைமை தாங்கினார். அங்கன்வாடி மையத்தை சேர்மன் தங்கராசு திறந்து வைத்தார். எம்.எல்.ஏ., அய்யப்பன் சமுதாயக்கூட அடிக்கள் நாட்டினார். விழாவில் துணைத் தலைவர் தாமரைச்செல்வன்,கமிஷனர் குமார், பொறியாளர்மனோகர் சந்திரன், பங்கேற்றனர். 

விழாவில் எம்.எல்.ஏ., அய்யப்பன் பேசியதாவது: 

                    முதல்வரின் சிறப்பான திட்டங்கள் நிறைவேற் றப்பட்டு வருவதற்கு இந்த விழா ஒரு எடுத்துக்காட்டாகும். இதுபோன்று அனைத்து பகுதிகளிலும் எங்களால் முடிந்த அளவுக்கு மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
             கிராமப் புறங்களில் இலவச கலர் "டிவி' வழங்கி முடிக்கப்பட்டுள் ளது. இனி நகர் புறத்தில் வழங்கும் பணி தொடங்க உள்ளது.முதல்வர் கருணாநிதி ஆட்சியில், பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம், ஒரு ரூபாய்க்கு அரிசி, இலவச கலர் "டிவி', காஸ் அடுப்பு, ஏழை மக்கள் சிகிச்சை பெறும் வகையில் மருத்துவ காப்பீட்டு திட்டம் என பல்வேறு சிறப்பு திட் டங்கள்  நிறைவேற்றப் பட்டுள்ளன.இவற்றிக்கெல்லாம் மேலாக மணி மகுடத்தில் வைரக்கல் பதித்தது போன்று, தமிழகம் முழுவதும் உள்ள குடிசை வீடுகளை ஆண்டுக்கு 3 லட்சம் வீடுகள் என படியாக  கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டம் முதல்வர் கருணாநிதியில் சாதனை திட்டமாக திகழ்கின்றது என பேசினார்.

Read more »

புதுக்குளம் மாரியம்மனுக்கு மகா கும்பாபிஷேகம்

திட்டக்குடி : 

                  திட்டக்குடி அடுத்த புதுக்குளம் மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. புதுக்குளம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு மேல் விநாயகர் பூஜை, பூர்வாங்க பூஜைகள், வாஸ்து சாந்தி நடந்தது. இரவு 9 மணிக்கு மேல் முதல் கால யாகபூஜை, பூர்ணாஹூதியும் தீபாராதனையும் நடந்தது. நேற்று காலை 7.30 மணிக்கு மேல் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது.வேத விற்பன்னர்கள் சிவாச்சாரியார்கள் என் கண் சிரோன்மணி ரத்தினசபாபதி, சோமசுந்தரம், திட்டக்குடி தண்டபானி குருக்கள் தலைமையில் யாகசாலை பூஜைகளும், 10 மணிக்கு மேல் மகா பூர்ணாஹூதி, தீபாராதனை, கடம் புறப்பாடு நடந்தது. யாகசாலையில் சிறப்பு பூஜைகள் செய்யப் பட்ட புனிதநீர் கலசங் களை சுமந்து கோவில் வெளிப்பிரகாரத்தில் வலம் வந்து ஆகம முறைப்படி மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடந்தது.புதுக்குளம், சிறுமுளை, பெருமுளை, நிதிநத்தம், திட்டக்குடி பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Read more »

அதிவிரைவுப்படை போலீசாருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி: எஸ்.பி., பரிசு வழங்கி பாராட்டு

கடலூர் : 

             கடலூர் கேப்பர் மலை துப்பாக்கி பயிற்சி மைதானத்தில் அதிவிரைவுப் படை போலீசார் சிறப்பு துப்பாக்கி சுடும் பயிற்சி மற்றும் போட்டிகளை எஸ்.பி., அஷ்வின் கோட் னீஸ் பார்வையிட்டார். கடலூர் மாவட்டத்தில் விரைவுப்படை, மற்றும் அதிவிரைவுப்படை போலீசார் என இரு பிரிவுகள் உள்ளன. விரைவுப்படை போலீசார் மாவட்டத்தில் கலவரம்,மோதல் போன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த பிரத்தியேகப் பயிற்சி அளிக்கப்பட்டுள் ளது. மாவட்டத்தில் தற் போது அதிவிரைவுப்படை போலீஸ் பிரிவு உருவாக்கப்பட்டு 30 போலீசார் தேர்வு செய்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும் கடலோர மாவட்டம் என்பதால் தீவிரவாதிகள் அச்சுறுத்தலை எந்த நேரத்திலும் எதிர் கொள்ளும் விதமாக அதிவிரைவுப்படை போலீசாருக்கு கடந்த இரண்டு நாட் களாக துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட் டது.2வது நாளான நேற்று பயிற்சி முடிக்கப்பட்டு, போட்டி நடத்தப்பட்டது. குறி பார்த்து சிறப்பாக துப்பாக்கி சுடும் பயிற்சியில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

Read more »

கடலூரில் மத்திய அரசு நடத்தும் மூலிகை தொழில் பயிற்சி வகுப்பு

கடலூர் : 

                     மத்திய அரசின்  கதர் கிராம தொழில் ஆணையமும், கடலூர் மஞ்சக்குப்பம், சுசான்லி மருத்துவமனையும் இணைந்து மூலிகை தொழில் பயிற்சி மற்றும் அழகு கலை பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.இப்பயிற்சிகள் வரும் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை 5 தினங்கள் நடக்கிறது.இம் முகாமில் மூலிகைகளின் வகை, தரம் தெரிந்து கொள்வது, இதர பற்பம், செந்தூரம், லேகியம், சூரணம் தயாரிப்பது செயல் முறை, மூலிகை தொழில் விற்பனை குறித்து 30 நபர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இதுதவிர அழகு கலை பயிற்சியில் ஐபுரோ, ஹெர்பல் பிளீச்சிங், முடி உதிர்தல், மசாஜ், பேசியல் மற்றும் இதர அழகு சம்மந்தப் பட்ட பயிற்சி வகுப்புகள் பிப். 8ம் தேதி முதல் மார்ச் 13ம் தேதி வரை நடக்கிறது. ஆண் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே பயிற்சி அளிக்கப் படவுள்ளது. இந்த பயிற்சிக்கு 15 பேர் மட்டுமே அனுமதிக்கப் படுவார்கள்.  தொழில் தொடங்கிட 15 முதல் 35 சதவீதம் வரை வங்கி மானியத்துடன் கடனுதவி பெறலாம். இது குறித்த முன்பதிவு மற்றும் விளக்கம் வேண்டுவோர் 93676 22256 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

Read more »

விருத்தாசலத்தில் என்.சி.சி., மாணவர்களுக்கு தகுதி தேர்வு


விருத்தாசலம் : 

                           விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள் ளியில் என்.சி.சி., மாணவர்களுக்கு தகுதி தேர்வு நடந்தது. விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள் ளியில் இரண்டு ஆண்டு பயிற்சி முடித்த என்.சி.சி., மாணவர்களுக்கு "எ' சான்றிதழ் வழங்குவதற் கான தகுதி தேர்வு நடந்தது. எழுத்து தேர்வு, ஆயுதம் கையாளுதல், வரைபடம், நடைபயிற்சி உள்ளிட்ட நான்கு வகை தேர்வுகள் நடைபெற்றன. கர்னல் ஐயப்பசாமி தலைமையில் ராணுவ அதிகாரிகள் சுபேதாரெட்டி, அவில்தார்மேஷாக், அண்ணாவி, சாகித் ஆகியோர் மேற்பார்வையில் தேர்வுகள் நடந்தன. 40 மாணவர்கள் தேர் வில் கலந்துகொண்டு "எ' சான்றிதழுக்கு தகுதி பெற் றனர். பள்ளி என்.சி.சி., அலுவலர் ராஜ்குமார், ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

Read more »

சிதம்பரம் சாலைகளில் சுற்றி திரிந்த கால்நடைகளுக்கு அபராதம்

சிதம்பரம் : 

                         சிதம்பரத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலைகளில் சுற்றி திரிந்த கால்நடைகளை நகராட்சி அதிகாரிகள் பிடித்து அபராதம் விதித்தனர். சிதம்பரம் நகராட்சி பகுதியில் முக்கிய வீதிகளான மேலவீதி, கீழ வீதி, வடக்கு வீதி, தெற்கு வீதி, எஸ்.பி கோவில் தெரு, மார்க்கெட் பகுதி, காசுக்கடை தெரு உள்ளிட்ட இடங்களில் ஆடு, மாடுகள் மேய்ந்துக்கொண்டு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி வந்தன. இது குறித்து நகராட்சி சார்பில்  ஆடு, மாடுகளின் உரிமையாளர்களை பலமுறை கண்டித்தும் பயன் இல்லை. இதனால் நேற்று நகராட்சி கமிஷனர் ஜான்சன் உத்தரவின்பேரில் துப்புரவு ஆய்வாளர் குழந்தைவேலு தலைமையில் நகராட்சி ஊழியர்கள் சாலைகளில் சுற்றி திரிந்த 20 ஆடுகள், 15 மாடுகளை பிடித்து நகராட்சிக்கு கொண்டு வந்தனர்.தகவல் அறிந்த கால்நடை உரிமையாளர்கள் நகராட்சியில் முறையிட்டனர். இனி ஆடு, மாடுகளை சாலை பகுதியில் மேயவிடமாட்டோம் என உறுதியளித்ததன் பேரில்  அவர்களிடம் அபராதத்தொகை வசூலித்துக்கொண்டு கால்நடைகளை அனுப்பினர்.

Read more »

போலியோ சொட்டு மருந்து முகாம்: ரோட்டரி சங்கம் ஏற்பாடு

கடலூர் : 

                  ரோட்டரி சங்கம் சார் பில் போலியோ ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் கடலூரில் நடந் தது.
 
                 ரோட்டரி சங்க போலியோ ஒழிப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். உதவி ஆளுனர் தாயுமானவன், சங்க தலைவர் டாக் டர் கோவிந்தராஜ், மிட்டவுன் ரோட்டரி சங்க தலைவர் சத்தியநாராயணன், செயலாளர் ஜனார்த் தனன், பயிற்சியாளர் அருளப்பன், ஆடிட்டர் சுந்தரமூர்த்தி, புனிதா பரத் முருகன், ஜெயபிரகாஷ் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

பின்னர் டாக்டர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:
 
                  போலியோ வைரஸ் முதுகு தண்டுவடத்தை முதலில் தாக்குகிறது. இதனால் கால்கள் பாதிக்கும். போலியோவை ஒழிக்க ரோட்டரி சங்கங்கள் நிதி உதவி வழங்கி வருகிறது. ரோட்டரி சங்கங்கள் முதன் முதலில் போலியோவை ஒழிக்க 120 மில்லியன் டாலர் பணம் கொடுத்தது. இந்தியாவில் 2009 அக்., 30 வரை 528 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர்.தமிழ்நாட்டில் 2004 ம் ஆண்டு ஒருவர் பாதிக் கப் பட்டார்.  வரும் 7ம் தேதி நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது. போலியோ மருந்தால் பக்கவிளைவுகள் இல்லை.  வயிற்றுப் போக்கு உள்ள குழந்தைகளுக்கு சிங்க் கலந்து உப்புக்கரைசலுடன் சேர்த்து கொடுக்கலாம். இந்த நோய் நரிக்குறவர் கள், ஒரு இடத்திலிருந்து வேறு இடத்திற்கு இடம் பெயர்கிறவர்கள் மூலம் தான் பரவுகிறது.  போலியோ விழிப்புணர்வு குறித்து பல் வேறு நிகழ்ச்சிகளை நடத்த ரோட்டரி சங்கம் ஏற்பாடு செய்து வருகிறது என்றார்.

Read more »

விவசாய சங்கத்தினர் திடீர் சாலைமறியல்

கிள்ளை : 

                    சிதம்பரம் அருகே மிஷின் மூலம் அறுவடை செய்வதை நிறுத்தக்கோரி விவசாய சங்கத்தினர் திடீர் சாலைமறியல் செய்ததால்  போக்குவரத்து தடைபட்டது. சிதம்பரம் அருகே பின்னத்தூர் சுற்றுப்பகுதியில் சம்பா நடவு செய்யப் பட்டது.  தற்போது அறுவடைக்கு தயாரான நிலையில் கூலியாட்கள் கிடைக் காததால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இதனால் ஆட்களில் கூலி உயர்வாலும், குறிப் பிட்ட நேரத்தில் ஆட்கள் கிடைக்காததாலும் விவசாயிகள் குறைந்த செலவில் குறிப்பிட்ட நேரத்தில் அறுவடை வேலையை முடித்து வருகின்றனர். இதனால் விவசாய சங்கத்தினர் நேற்று ஒன்று கூடி சிவலிங்கம் தலைமையில் ஆண்கள், பெண்கள் கிள்ளை சிதம்பரம் சாலையில் திடீர் சாலைமறியலில் ஈடுபட் டனர். மறியலில் ஈடுபட் டவர்களை தாசில்தார் காமராஜ்  பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்து வைத்தார். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு காணப்பட்டது.

Read more »

ரேஷன் கடை பணியாளர் தற்காலிக பணி நீக்கம்

கடலூர் : 

           எடைக் குறைவாக பொருட்களை வழங்கிய ரேஷன்கடை பணியாளர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து கலெக்டர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

               குறிஞ்சிப்பாடி அடுத்த அம்பலவாணன்பேட்டையில் உள்ள ரேஷன் கடையில் டி.ஆர்.ஓ., நடராஜன் திடீர் ஆய்வு மேற் கொண்டார். அப்போது பொதுமக்களுக்கு வழங்கிய துவரம் பருப்பு, உளுந்து உள்ளிட்ட பொருட்களின் எடை குறைவாக இருந் தது. பில் போடப்பட்டும் சர்க்கரை வழங்கவில்லை. கடையில் பாமாயில, துவரம் பருப்பு, உளுந்து இருப்பு குறைவாக இருந்ததை தொடர்ந்து விற்பனையாளர் சுராஜ் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

நெய்வேலியில் ஆசிரியர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் தர்ணா

நெய்வேலி : 

                    நெய்வேலி செயின்ட் பால் பள்ளி ஆசிரியர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக மாணவர்களும் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெய்வேலி டவுன்ஷிப், பிளாக்-4ல் உள்ள செயின்ட் பால் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வை பள்ளி நிர்வாகம் அமல்படுத்த மறுப்பதால் ஆசிரியர்கள் தொடர் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பிரச்னையில் போலீசார் தலையிட்டு சமாதானப்படுத்தியும் பள்ளி நிர்வாகம் அமல்படுத்தவில்லை. அதனால் ஆசிரியர்கள் நேற்றும் தொடர்ந்து கறுப்பு பேட்ஜ் அணிந்து வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.ஆசிரியர்களுக்கு  ஆதரவாக நேற்று மாணவர்கள் திடீரென வகுப்புகளை புறக்கணித்து தர்ணா செய்தனர். ரியர்கள் மட்டுமின்றி மாணவர்களும் போராட்ட நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால் 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொது தேர்வுகள் தொடங்கிவிட்ட சூழலில் இந்த போராட்டம் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read more »

ள்ளி கணினி அறைக்கு பூட்டு

விருத்தாசலம் : 

                         பூதாமூர் நகராட்சி பள்ளி கணினி அறை பூட் டியே கிடப்பதையொட்டி அ.தி.மு.க., கவுன்சிலர்கள் தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விருத்தாசலம் பூதாமூரில் நகராட்சி நடுநிலை பள்ளியில் கடந்த மாதம் 22 ம் தேதி மாணவர்களுக் கான கணினி அறை திறப்பு விழா நடந்தது.  மாணவர்களுக்கு அடிப் படை கணினி பயிற்சி அளிப்பதற்காக திறக்கப்பட்ட அறை கடந்த பத்து நாட்களாக பயன்பாடின்றி பூட்டியே கிடக்கிறது. இதுகுறித்து அப்பகுதி அ.தி.மு.க., கவுன்சிலர் ரங்கநாதன் மற் றும் பொதுமக்கள் பள் ளிக்கு சென்று மாணவர்கள் கல்வி கற்க திறக்கப்பட்ட கணினி அறை ஏன் பூட் டியே கிடக்கிறது என  தலைமை ஆசிரியரிடம் கேட்டனர். பின்பு அங்கு வந்த அ.தி.மு.க., கவுன்சிலர்கள் அருளழகன், காமராஜ், சந்திரகுமார் உள்ளிட்டோர் தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Read more »

மோட்டார் பைக் விபத்து ஒருவர் பரிதாப பலி

பண்ருட்டி : 

                     புதுச்சேரி அடுத்த ஏம்பலம் பாலமுருகன் நகரை சேர்ந்தவர் கோவிந்தன்(45). வில்லியனூர் செல்லியம்பட்டு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ரவி(52) இருவரும் நேற்று முன்தினம் சென்னை-கும்பகோணம் சாலையில்  மோட்டார் பைக்கில் சென்றனர். அப்போது பண்ருட்டி அடுத்த சித்திரைசாவடி யில் நிலைதடுமாறி மோட்டார் பைக் அருகில் உள்ள பள்ளத்தில்  விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த கோவிந்தன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். மேலும்  ரவி பலத்த காயத்துடன்   பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். இதுகுறித்து பண்ருட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior