உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, பிப்ரவரி 11, 2011

கடலூருக்கு மென்பொருள் பூங்கா சட்டசபையில் அய்யப்பன் வலியுறுத்தல்

கடலூர் : 

       கடலூருக்கு மென்பொருள் பூங்கா அமைத்துத் தரவேண்டும் என சட்டசபை கூட்டத்தில் எம்.எல்.ஏ., அய்யப்பன் பேசினார்.

சட்டசபை கூட்டத்தில் கடலூர் எம்.எல்.ஏ., அய்யப்பன் பேசியது: 

         கடலூர் மாவட்டத்திற்கு பெருமைச் சேர்க்கும் வகையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், தாசில்தார் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம் உள்ளிட்ட புதிய கட்டடங்களை அரசு கட்டித் தந்துள்ளது. இதற்காக கடலூர் தொகுதி மக்களின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

             மேலும் கடலூர் மாவட்டத்தில் கடலோரப் பகுதியில் மண் அரிப்பை தடுக்கும் வகையில் பொதுப்பணித்துறை அமைச்சர் மூலம் 2 ஆண்டுகளுக்கு முன்பு 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தாழங்குடாவில் இருந்து தேவனாம்பட்டினம் வரை கருங்கற்கள் கொட்டி தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.

               அதே போல் தேவனாம்பட்டினத்தில் இருந்து அக்கரைகோரி வரை கருங்கற்களை கொட்டி தடுப்புச் சுவர் அமைத்து மீனவ மக்களை காப்பாற்ற வேண்டும். கடலூர் பின் தங்கிய மாவட்டமாக உள்ளதால் கடலூருக்கு மென்பொருள் பூங்காவை முதல்வர் உருவாக்கித் தரவேண்டும். அதே போல் நீண்ட நாளைய கோரிக்கையாக உள்ள கலெக்டர் அலுவலகத்தை மாற்றி புதிய கட்டடமாக மாற்றித் தரவேண்டும். 

               கம்மியம்பேட்டைச் சாலையை தார் சாலையாக மாற்றித் தரவேண்டும். கடலூர் மாவட்ட மக்களின் நீண்ட நாளைய மருத்துவக் கல்லூரி கோரிக்கையை நிறைவேற்றி தந்த முதல்வருக்கும், துணை முதல்வருக்கும், நிதியமைச்சருக்கும், சுகாதார அமைச்சருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு எம்.எல்.ஏ., அய்யப்பன் பேசினார்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

கடலூர்:

 
            தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் தங்களது 3 நாள் வேலைநிறுத்தத்தை காலவரையற்ற வேலைநிறுத்தமாக வியாழக்கிழமை அறிவித்தனர்.  ஊதிய உயர்வு உள்ளிட்ட 16 அம்சக் கோரிக்கைகளுக்காக ஊரக வளர்ச்சித் துறை பணியாளர்கள் அலுவலர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். 

            அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில், 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தினர்.  இந்த நிலையில் சங்கத்தினரை அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தாததைக் கண்டித்து தங்களது போராட்டத்தைக் காலவரையற்ற வேலைநிறுத்தமாக மாற்றி இருப்பதாக வியாழக்கிழமை அறிவித்தனர். இதனால் மக்களுக்கான ஊரக வளர்ச்சித் திட்டங்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகி இருக்கிறது.  வேலைநிறுத்தத்தை முன்னிட்டு, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (ஊரக வளர்ச்சித் துறை) வியாழக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  

              ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் பி.துரை தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஆதவன் கோரிக்கை விளக்க உரை நிகழ்த்தினார். மாவட்ட நிர்வாகிகள் சணமுக சிகாமணி, உதயகுமார், வீரபாண்டியன், தமிழ்மணி, பழநிசாமிநாதன், குமார், கலையரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  அரசு ஊழியர்கள் சங்க மாவட்டத் தலைவர் காசிநாதன், செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பேசினர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் நவீன தெளிப்பான் கருவிகள் அறிமுகம்

கடலூர்:

          கடலூர் மாவட்டத்தில் புதியதாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ள நவீன தெளிப்பான் கருவிகள் பற்றி, விவசாயிகளுக்கு புதன்கிழமை வேளாண் அலுவலர்கள் செயல் முறை விளக்கம் அளித்தனர்.  

           கடலூர் மாவட்டத்தில் தற்போது குறைந்த தூரத்துக்கு தண்ணீரைத் தெளிக்கும் தெளிப்பான் கருவிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்போது ரெயின் கன் என்ற சக்தி வாய்ந்த தெளிப்பான் கருவி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் 40 மீóட்டர் தூரம் வரை தண்ணீரைத் தெளிக்க முடியும்.  கரும்பு வயல்கள், மலர்த் தோட்டங்கள், காய்கறித் தோட்டங்கள் போன்றவற்றுக்கு இது பயன் உள்ளதாக இருக்கும் என்று வேளாண் அலுவலர்கள் தெரிவிக்கதிறார்கள்.  

              ஒரு ஏக்கருக்கு நீர் பாசனம் செய்யும் வகையில் இந்த தெளிப்பான் கருவிக்குச் செலவு ரூ. 21 ஆயிரம். இதில் 50 சதவீதம் மானியம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. ரெயின் கன் தெளிப்பான் கருவிகளை விவசாயிகளுக்கு செயல் விளக்கம் செய்து காண்பிக்கும் நிகழ்ச்சி, கடலூர் கரும்பு ஆராய்ச்சி நிலையத்தில் புதன்கிழமை நடந்தது.  வேளாண் இணை இயக்குநர் இளங்கோவன் தலைமையில், துணை இயக்குநர்கள் சந்திரசேகரன், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட வேளாண் அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.  மாவட்ட உழவர் மன்றங்களின் கூட்டமைப்பின் தலைவர் பி.ரவீந்திரன், பட்டாம்பாக்கம் விவசாயி அறவாளி உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Read more »

கடலூர் கந்தசாமி மகளிர் கல்லூரியில் வேதியியல் கண்காட்சி துவக்கம்

கடலூர் : 

        கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் "உலக வேதியியல் ஆண்டு 2011' தலைப்பில் கண்காட்சி துவங்கியது. 

            வேதியியல் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கண்காட்சியின் துவக்க விழா நேற்று நடந்தது. கலெக்டர் சீத்தாராமன் கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். கல்லூரி முதல்வர் மல்லிகா சந்திரன் வரவேற்றார். பச்சையப்பன் அறக்கட்டளை உறுப்பினர் சிவ சுப்ரமணியம் முன்னிலை வகித்தார். வேதியியல் துறைத் தலைவர் ஜெ. அனுசுயா துவக்க உரையாற்றினார்.

               இக்கண்காட்சியில் வேதியியல் சம்பந்தமான 50 படைப்புகள் இடம் பெற்றுள்ளன. விழாவில் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவிகள் பங்கேற்றனர். நாளை வரை நடைபெறும் இக்கண்காட்சியை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பார்வையிட உள்ளனர். இறுதி நாளான்று சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இணைப் பேராசிரியர் அனுசுயா நன்றி கூறினார்.

Read more »

The Faculty of Agriculture of Annamalai University signs pact with Canadian institution


Bernie MacDonald, vice-president (administration), Canada, and M. Ramanathan, Vice-Chancellor of Annamalai University, exchanging documents on the university campus at Chidambaram on Thursday. M.Rathinasabapathi, Registrar (second from right), is in the picture.


CUDDALORE: 

          The Faculty of Agriculture of Annamalai University and Nova Scotia Agricultural College (NSCA), Canada, have entered into an agreement for offering collaborative educational and research programmes.

          A Memorandum of Understanding was signed by M. Ramanathan, Vice-Chancellor of Annamalai University, and M. Rathinasabapathi, Registrar, and Bernie MacDonald, vice-president (administration) and Brian Crouse, Manager of Student Recruitment, NSCA.

            According to Mr. Ramanathan, the collaborative programme would enable agriculture students of Annamalai University to pursue one or two years of their four-year integrated programme at NSCA. After completion of the programme, they would be awarded two undergraduate degrees - one by NSCA and another by Annamalai University. Mr. Ramanathan said the two institutions would also introduce common courses in agriculture that may be in demand in both the countries. Students who complete their undergraduate programmes in Annamalai University could join the post-baccalaureate diploma of one year and continue with their masters' degree in Canada.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior