உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 31, 2011

கடலூர் மாவட்டத்தில் செங்கல் விலை வீழ்ச்சி



 பண்ருட்டி: 

           கடலூர் மாவட்டத்தில் செங்கல் உற்பத்தி அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளது. 

               மேலும் குறையும் என உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடலூர் மாவட்டம், பண்ருட்டி பகுதியில் அங்குசெட்டிப்பாளையம், கொக்குப்பாளையம், சிறுவத்தூர், சேமக் கோட்டை, நத்தம், பணப்பாக்கம் உட்பட 50 கிராமங்களில் தினமும் ஒரு கோடி பச்சைக்கல் (செங்கல்) உற்பத்தி செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கலைஞர் வீடு வழங்கும் திட்டத்திற்காக, செங்கல் தேவை அதிகரித்துள்ளதால் கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் விறகு மூலம் கொளுத்தப்பட்ட 1,000 செங்கல் 6,500 ரூபாயும், மெலார் மூலம் கொளுத்தும் செங்கல் 6,000 ரூபாய்  அளவில் கிடுகிடுவென விலை உயர்ந்தது. கடும் விலை உயர்வு காரணமாக கான்ட்ராக்டர்கள், வீடு கட்டும் மக்கள் என அனைவரும் கடும் அவதியடைந்து வந்தனர்.

              இந்நிலையில் மழைக் காலம் முடிந்து, கடந்த 15 நாட்களாக செங்கல் உற்பத்தி பச்சைகல் தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தற்போது விறகு மூலம் கொளுத்தப்பட்ட செங்கல் 4,200 ரூபாய்க்கும், மெலார் மூலம் கொளுத்தப்பட்ட செங்கல் 4,000 ரூபாய்க்கும் கிடைக்கிறது.இதே நிலையில் உற்பத்தி அதிகரித்து விறகு, சவுக்கை மெலார் உயராமல் இருந்தால் இன்னும் 15 நாட்களில் செங்கல் 3,500 மற்றும் 3,300 ரூபாய்க்கு கிடைக்கும் என, செங்கல் சூளை உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

Read more »

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மண்சோறு சாப்பிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்


கடலூர்: 

            கடலூர் மாவட்டம் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குப், பாத யாத்திரை சென்ற 1,000 பக்தர்கள் மண் சோறு சாப்பிட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர்.

              
               ஒவ்வொரு ஆண்டும் விருத்தாசலத்தைச் சுற்றியுள்ள, கிராமங்களைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் திருச்சியை அடுத்த, சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குப் பாத யாத்திரை சென்று, தங்கள் நேர்த்திக் கடன் செலுத்துவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா நேற்று துவங்கியது. பக்தர்கள் சமயபுரம் மாரியம்மனுக்கு மாலை போட்டு விரதமிருந்து, நேற்று பாத யாத்திரையைத் துவக்கினர். முன்னதாக பாத யாத்திரை செல்லும் 1,000 பக்தர்களும் நேற்று காலை விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சமயபுரம் மாரியம்மனின் படத்தை வைத்து அபிஷேகம், சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகளைச் செய்தனர். பின் கோவிலில் மண் சோறு சாப்பிட்டு தங்கள் பாத யாத்திரையைத் தொடங்கினர்.

Read more »

கடலூர் மாவட்டம் அண்ணா கிராமம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1 கோடி செலவில் சாலைப்பணிகள்

நெல்லிக்குப்பம்:
 
            கடலூர் மாவட்டம் அண்ணா கிராமம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் அதன் தலைவர் கவுரிபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன், துணை தலைவர் எம்.சி.சம்பந்த், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஒன்றியக்குழு தலைவர் கவுரிபாண்டியன் கூறியது:-  

              கள்ளிப்பட்டில் இருந்து ஏரிப்பாளையம் வரை ரூ.19 லட்சத்து 21 ஆயிரத்திலும், கோழிப்பாக்கத்தில் இருந்து கொங்கராயனூர் வரை ரூ.10 லட்சத்து 5 ஆயிரத்திலும், மாளிகை மேட்டில் இருந்து கோழிப்பாக்கம் காலனி வரை ரூ.26 லட்சத்து 55 ஆயிரத்திலும், பைத்தாம்பாடி காலனியில் ரூ.10 லட்சத்து 75 ஆயிரத்திலும், பூண்டியில் இருந்து ஏரிப்பாளையம் வரை ரூ.15 லட்சத்து 86 ஆயிரத்திலும், எஸ்.கே.பாளையத்தில் ரூ.16 லட்சத்து 12 ஆயிரத்திலும், தட்டாம்பாளையத்தில் இருந்து இராசுபாளையத்தில் ரூ.11 லட்சத்து 75 ஆயிரத்திலும் ஆக ரூ.1கோடியே 10 லட்சத்து 29 ஆயிரத்தில் தார் சாலை போட நிதி ஒதுக்கி டெண்டர் விடப்பட்டுள்ளது.

Read more »

மத்திய அரசு நடத்தும் பேப்பர் பை, ஆபிஸ் கவர் தயார் செய்யும் பயிற்சி கடலூரில் நாளை தொடக்கம்

கடலூர்:
             மத்திய அரசு நடத்தும் பேப்பர்பை, ஆபிஸ்கவர் தயாரிக்கும் பயிற்சி கடலூரில் நடைபெற உள்ளது. மத்திய அரசின் கதர் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் மூலமாக கடலூரில் வருகிற 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை 5 நாட்களுக்கு இப்பயிற்சி நடைபெறுகின்றன.

              இப்பயிற்சி முகாமில் பேப்பர் காகிதபைகள் மற்றும் அலுவலக உபயோகத்திற்கான கவர்கள், பைல்கள் போன்றவற்றை தயாரிப் பதற்கான செய்முறை, செயல்முறை பயிற்சி கற்றுத் தரப்படுகின்றது. இத்தொழிலில் ஈடுபடு பவர்களுக்கு வங்கி மானியத்துடன் கூடிய கடனுதவி பெறுவது குறித்தும் விரிவாக கற்றுத்தரப்படுகின்றது.

              கடந்த மாதத்தில் கடலூர் மாவட்ட கலெக்டர் கேரிபேக் (பிளாஸ்டிக்பை) உபயோகிப்பதற்கான தடை உத்தரவை அமல்படுத்தியுள்ள காரணத்தினால் இந்த பயிற்சி கடலூர் மாவட்டத்திற்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என மூலிகை அக்குபஞ்சர் வல்லுனர் டாக்டர் ரவி தெரிவித்தார்.

            5 நாட்கள் நடைபெறும் இப்பயிற்சிக்கு 30 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். நபர் ஒருவருக்கு பயிற்சிக் கட்டணம் ரூ.700 மட்டுமே. பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்களது பெயரை முன்பதிவு செய்து கொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 9994711180, 9367622255. முன் பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இடம் ஒதுக்கப்படுகிறது.

Read more »

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு செல்போன் பழுதுபார்க்கும் பயிற்சி

கடலூர்:
         கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு செல்போன் பழுது பார்க்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இது தொடர்பாக கடலூர் மாவட்ட கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்தி குறிப்பு:

             கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு செல்போன் பழுது பார்த்தல் மற்றும் பராமரிப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்தே கை, கால் ஊன முற்றவர்கள் மட்டும் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

            ஊனத்தின் அளவு குறைந்த பட்சம் 40 சதவீதத்துக்கு குறையாமல் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தோல்வியடைந்தவர்களாக இருக்க வேண்டும். 18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். பயிற்சி 3 மாத காலத்திற்கு அளிக்கப்படுகிறது. பயிற்சியின் போது மாதம் ரூ.300 உதவித் தொகையாக வழங்கப்படும்.  இந்த பயிற்சி பெற விரும்பும் ஊனமுற்றவர்கள் கடலூர் புதுபாளையத்தில் உள்ள மாவட்ட ஊனமுற்ற மறுவாழ்வு அலுவலகத்திற்கு நேரில் வந்து தேசிய அடையாள அட்டை நகல், கல்விச் சான்று ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.

               விண்ணப்பத்தினை மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு அலுவலரிடம் விண்ணப்பக்காலத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கடலூர் மாவட்டத்தில் உள்ள செல்போன் பழுதுநீக்கப் பயிற்சி பெற விரும்பும் தகுதியுள்ள ஊனமுற்றவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read more »

Exotic breeds impress at dog show

CUDDALORE: 

        The large number of visitors at the multi-media government exhibition at the Manjakuppam grounds here were treated to a high-calibre dog show in which exotic and rare breeds were displayed by their proud owners on Sunday.

         The event held under the auspices of the Public Relations Department and the Animal Husbandry Department drew overwhelming response from dog breeders, dog lovers and the lay public. The audience was spellbound by certain rare breeds such as Bull Mastiff. According to Joint Director of Animal Husbandry Department M. Elangovan, a Bull Mastiff might cost around Rs 3.5 lakh.

        At least 42 high breeds, including Cocker Spaniel, Great Dane, Doberman, Rottweilers, Buck, Kombai, Dalmatian, Pomeranian, Labrador and Rajapalayam, made their presence felt. The dogs were initially lined up along with their owners and later their behavioural pattern was tested. Each breed would have distinct characteristics and the jurylooked for how well the dogs matched these aspects. The dogs were extremely faithful to the breeders and while they seemed normally docile, a quick hint from the owner would trigger them to instantaneous action as they pounced on the target.Mr Elangovan said that as far as today's show was concerned, all the breeds were well taken care of by the owners. These were drawn mostly from Cuddalore and Chidambaram towns.

           The number of entries in the show clearly established the fact that there were quite a number of dog lovers who try to possess the high breeds of their choice, regardless of the cost factor. What was unique about the event was that all the breeds were well-maintained, indicating the time spent on them by the owners for their upkeep. Asked about the objective of the show, Mr Elangovan said that it would create awareness among the people about the existence of such breeds and also would induce in them the desire to have pet dogs, thus creating a bond between the homo sapiens and the animal kingdom.

           Pon.Muthiah, Public Relations Officer, said that besides the rare breeds there were also well-kept desi varieties, in all totalling 150 dogs, that graced the occasion. Cash prizes awarded by the jury to the best dogs would act as an incentive for others too to raise pet animals, he added.

Read more »

“Air monitoring device at SIPCOT estate dysfunctional for months”

CUDDALORE: 

         The air monitoring device installed at the SIPCOT Industrial Estate for assessing atmospheric pollution remains dysfunctional for the past several months. Hence, the quality of effluents discharged from industrial units cannot be properly gauged, according to M. Nizamudeen, executive general secretary of the Consumer Federation-Tamil Nadu.

         He made a representation in this regard to the Collector at the environmental assessment meeting held here on Friday. The Federation appealed to the Collector to make the device, worth several lakhs of rupees, functional to keep track of pollution levels. Some time ago it was announced that a “care air centre” on the model of the one at Tiruvalluvr district would be established in Cuddalore. Such a centre would enable the centralised monitoring of pollution-related issues from Chennai, but it is yet to materialise. The Federation alleged that most of the units in the industrial estate were operating without renewing permissions as provided under the Air and Water Act, and, therefore, it called for immediate action in this regard.

          It was a matter of concern that the Cuddalore Municipality had an unauthorised garbage dumping yard close to the industrial estate. Most often the garbage was being set on fire, compounding the pollution problem. The Federation pointed out that sewage and stormwater drain under the jurisdiction of the industrial estate remained choked. Hence, urgent measures were needed to desilt the drain. The electronic display system on the estate was indicating the same readings all the time, creating a suspicion whether it was operational.

            A lapse was found in the transportation of chemicals by tankers without carrying the mandatory notice about the content and qualification of the crew for handling inflammatory and incendiary materials in a safe manner. According to the Union Ministry of Forests and Environment, Cuddalore, by virtue of its saturated pollution level, occupied 16th place in the Red List. However, to keep the pollution level within the permissible level, the Ministry had extended time-limit on several occasions and, now it had set a deadline of March 21, 2011.

             The Federation called upon the TNPCB to enlighten people about its much-touted action plan for controlling pollution on the industrial estate. Since there was a concentration of hazardous chemical units on the estate, a crisis group should be stationed there to tackle any emergency, it added.

Read more »

Poetry compilation released

CUDDALORE: 

           A compilation of poetry titled “Thirupadiripuliyur Thevaram,” authored by K. Kathappan, was released in a function held in connection with the Mahakumbabishekam of Sri Padaleeswarar temple here recently.

          Held under the aegis of the Aintham Ulaga Tamil Sangam, the function saw the release of the book by president of the Cuddalore Chamber of Commerce V.P.S. Ganesan.V.Veerapandian, organiser of the Saiva Siddhantha training classes of the Thiruvaduthurai Adheenam, received the first copy. 

            Mr Kathappan said that the renowned Saivite Saints Appar and Manickavasagar eulogised the presiding deity and the temple in their verses. His work consisted of 250 stanzas of the devotional outpourings on Sri Padaleeswarar who was known as Thondra Thunai Nathar (invisible companion). Rama.Muthukumaranar, founder of the Aintham Ulaga Tamil Sangam, said that the poetic rendition would be cherished by the devotees and Tamil enthusiasts.

Read more »

Get additional sheets online

CUDDALORE:

        The “N” category ration card-holders, who do not normally lift their entitlements from fair price shops, can yet get the validity of their cards extended by downloading additional sheets from
 

             do. In a statement here, Collector P. Seetharaman said that by logging in the ration card number, the sheets could be downloaded. The original cards expired on December 31, 2010 and through attachment of additional sheets, their validity could be extended.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior