உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 09, 2012

தானே புயல்: கடலூரில் இலங்கை அகதிகள் நிவாரணம் இன்றி தவிப்பு


கடலூர்: 

        தானே புயல் பாதித்த அகதி முகாமில் வசிக்கும் மக்களை சந்தித்து ஆறுதல் கூற, அகதிகள் நலவாழ்வு பற்றிப் பேசும் யாரும் அக்கறை காட்டவில்லை.
             கடலூர் அடுத்த, குள்ளஞ்சாவடி அம்பலவாணன்பேட்டை அகதிகள் முகாமில், 12 வயதிற்குட்பட்ட ஆண் குழந்தைகள், 68 பேர், பெண் குழந்தைகள், 74 பேர், 12 வயதிற்கு மேற்பட்ட, 150 ஆண்கள், 139 பெண்கள் உட்பட, 431 பேர் வசிக்கின்றனர்.டிசம்பர் 30ம் தேதி, மழையுடன் வீசிய புயல் காற்றில், இலங்கை தமிழர்கள் வசித்த வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தன. மின்சாரமும் துண்டிக்கப்பட்டன.

             இதனால், முகாம்களில் வசித்தவர்கள் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், மற்றும் பிள்ளையார் கோவில்களில், மூன்று நாட்களாக தங்கினர். அதன் பிறகு, தாங்களே செலவு செய்து வீட்டின் கூரைகளை சரிசெய்து கொண்டனர். கடந்த, 9 நாட்களாக அரிசி, மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் கடும் அவதியடைந்து வருகின்றனர். இலங்கை தமிழர்களுக்காக பரிந்து பேசிய பல தலைவர்களும், கடலூர் மாவட்டத்திற்கு வருகை தந்து, புயல் பாதிப்பு பகுதிகளில் உள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். ஒருவர் கூட அகதிகள் முகாமில் வசிக்கும் தமிழர்களை சந்தித்து ஆறுதல் கூறவில்லை.

 இலங்கை முகாமில் வசிப்போர் கூறுகையில்,

            "இங்கு வசிப்பவர்கள் அனைவரும் மீன்பிடி தொழில், கொத்தனார் உள்ளிட்ட தொழில்களை செய்து வருகின்றனர். புயல் வீசியதில் இருந்து யாரும் வேலைக்குச் செல்ல முடியவில்லை.கடந்த, 9 நாட்களாக எந்தவித வருமானம் இன்றி உள்ளோம். மின்சாரம் இல்லாததால், இரவு நேரத்தில் வெளிச்சமின்றி அவதியடைந்து வருகிறோம். அரசு உடனே மண்ணெண்ணெய் வழங்க வேண்டும். அனைவருக்கும் வழங்கும் புயல் நிவாரணத்தை, எங்களுக்கும் விரைந்து வழங்கினால் பெரிய உதவியாக இருக்கும். பள்ளிக் குழந்தைகளின் நோட்டு புத்தகங்கள் மழையில் நனைத்துள்ளன.புயலடித்து, 9 நாட்களுக்கு மேலாகியும் அரசு அதிகாரிகளோ, மக்கள் பிரதிநிதிகளோ, அரசியல் கட்சித் தலைவர்களோ யாரும் எங்களை சந்தித்து ஆறுதல் கூட சொல்ல வரவில்லை.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர். 













Read more »

தானே புயல் : கடலூர் மாவட்டத்திற்கு 10 ஆயிரம் புதிய மின் கம்பங்கள் வாங்க முடிவு

           தானே புயல் புரட்டிப் போட்ட கடலூர் மாவட்டத்தில், மின் கம்பங்களுக்கு கடும் தட்டுப்பாடு உள்ளதால், அமைச்சர்களின் சிபாரிசு கடிதங்களுக்கு முன்னுரிமை கொடுத்து, மின் கம்பங்கள் வழங்கும் சூழல் உள்ளது. 
 
         நிலைமையைச் சமாளிக்க, ஒரிசா , ராஜஸ்தான் மற்றும் கேரளா மாநிலங்களிலிருந்து, 10 ஆயிரம் மின் கம்பங்கள் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. "தானே" புயல் ஏற்படுத்திய மீளமுடியாத பாதிப்புகளால், கடலூர், நாகை, விழுப்புரம் மாவட்டங்களில் மின்சார உள்கட்டமைப்புகள் அடியோடு சேதமடைந்து, மின் இணைப்பு முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

        புயல் பாதித்த மாவட்டங்களில், இதுவரை, 45 ஆயிரம் கம்பங்கள் சேர்ந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றிற்கு பதில், அமைக்க வேண்டிய  புதிய கம்பங்களுக்கு, அதிக தட்டுப்பாடு உள்ளன. நேற்று வரை, மின் வாரியத்திற்கு, 20 ஆயிரம் புதிய கம்பங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில், 10 ஆயிரம் மின் கம்பங்கள் பல்வேறு பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளன. அனைத்து மாவட்ட மின் வாரிய கிடங்குகளிலிருந்து மின் கம்பங்களும், கேபிள்களும் கொண்டு வரப்படுகின்றன.


Read more »

தானே புயல் : அரசு ஊழியர்கள் ஒரு நாள் ஊதியத்தை கடலூர் மாவட்டத்திற்கு நிவாரணமாக அளிக்க முடிவு

            தமிழகத்தில், "தானே" புயலால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ, அரசு பணியாளர் சங்கத்தினர் ஒரு நாள் சம்பளத்தை நிதியாக வழங்குவர்'' என, பணியாளர் சங்க மாநில தலைவர் பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.இப்புயலால், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. நிவாரணப் பணிகளில் அரசு ஈடுபட்டுள்ளது. பணியாளர்களின் ஒரு நாள் சம்பளம் பெற்று, பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்கப்படும்.

Read more »

தானே புயல் : நெல்லிக்குப்பத்தில் வாழை பழம் விலை கடும் சரிவு

நெல்லிக்குப்பம் : 
 
            நெல்லிக்குப்பத்தில் தெருக்களில் வாழைப்பழத்தை கூவி விற்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். 
 
             நெல்லிக்குப்பம் சுற்றுவட்டார பகுதிகளில் பல நூறு ஏக்கரில் வாழை பயிரிட்டுள்ளனர். வியாபாரிகள் நேரடியாக விவசாயிகளின் தோட்டத்துக்கு சென்று வாழைக்குலைகளை வாங்கி வந்து பழுக்க வைத்து விற்பனை செய்வார்கள். கடந்த 30ம் தேதி வீசிய புயலில் ஒரே நேரத்தில் வாழை மரங்கள் விழுந்ததால் அவற்றை வியாபாரிகள் வாங்க முன்வரவில்லை. இதனால் கிடைத்த வரை கிடைக்கட்டும் என நினைத்து விவசாயிகள், விழுந்த வாழைக் குலைகளை பழுக்க வைத்து தாங்களே நேரடியாக விற்க துவங்கியுள்ளனர். நெல்லிக்குப்பத்தில் நேற்று விவசாயி ஒரு லோடு கேரியர் முழுவதும் 300 வாழைத் தார்களை ஏற்றிக் கொண்டு வந்து விற்பனை செய்தார். நூறு பழங்கள் கொண்ட ஒரு தாரை 10 ரூபாயிலிருந்து 20 ரூபாயிற்குள் விற்றார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior