உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், நவம்பர் 08, 2012

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில்விலங்கியல் மன்றம் துவக்க விழா

விருத்தாசலம்:

       விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில், விலங்கியல் மன்றம் துவக்க விழா மற்றும் முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. விலங்கியல் மன்ற துவக்க விழாவிற்கு, கல்லூரி முதல்வர் டாக்டர் கோவிந்தன் தலைமை தாங்கினார். விலங்கியல்துறைத் தலைவர் முனைவர் சாந்திஜெயரதி முன்னிலை வகித்தார். வேதியியல் துறை உதவி பேராசிரியர் சுந்தரசெல்வன் வரவேற்றார்.

       கல்லூரியில் 92ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் சாட்டை சினிமாஇயக்குனர் அன்பழகன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் சார்பில் கல்லூரிமுதல்வர் கோவிந்தனுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.  விலங்கியல் துறை இரண்டாமாண்டு மாணவி துர்கா நன்றி கூறினார்.

Read more »

சனி, நவம்பர் 03, 2012

கடலூர் மாவட்டத்தில் நீலம்' புயலில் 500 ஏக்கர் வாழை சேதம்

கடலூர்:

         நீலம் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் (30/10/2012) வீசிய சூறைக் காற்றில் 500 ஏக்கர் வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.

             கனமழை காரணமாக 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. கடலூர் அருகே வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த நீலம் புயல் காரணமாக மாவட்டத்தில் கடந்த 28ம் தேதி முதல் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் மாவட்டமே வெள்ளக்காடானது. மேலும், ஒரு லட்சம் ஏக்கரில் நடவு செய்திருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின. இந்நிலையில் கடலூர் அரகே மையம் கொண்ட நீலம் புயல் காரணமாக மாவட்டத்தில் சூறைக்காற்று வீசியது. மாலை 5 மணிவரை திடீர், திடீரென வீசிய காற்றினால் வாழைத் தோட்டங்கள் சேதத்திற்குள்ளாகின.

               மாவட்டத்தில் 78 ஆயிரம் ஏக்கரில் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர் மழைக் காரணமாக 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. தற்போது மழை நின்று விட்டதால், வயலில் சூழ்ந்த மழை நீர் வடியத் துவங்கியுள்ளது. மழை நீர் வடிந்த பிறகேசேத மதிப்பு தெரிய வரும். அதேப்போன்று மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டிருந்தது. அதில் கடந்த செப்டம்பர் மாதம் வீசிய சூறைக்காற்றில் 300 ஏக்கர் வாழைத் தோட்டம் சேதமடைந்தது. அதனைத் தொடர்ந்து 8,000 ஆயிரம் ஏக்கர் வாழை அறுவடை செய்யப்பட்டது. தீபாவளி பண்டிகைக்கு அறுவை செய்ய தயாராக இருந்த 1,500 ஆயிரம் ஏக்கர் வாழையில், நேற்று முன்தினம் வீசிய நீலம் பயலில் 500 ஏக்கர் வாழைகள் சேதமடைந்தன என்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior