உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், செப்டம்பர் 21, 2011

கடலூர் மாவட்டத்தில் கிராம உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள பதவிகள் விவரம் ஒன்றியம் வாரியாக

 கடலூர் மாவட்டத்தில் கிராம உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள பதவிகள் விவரம் ஒன்றியம் வாரியாக

ஒன்றியம்  ஊராட்சிகள் ஒன்றியக்குழு மாவட்டக்குழு உறுப்பினர் உறுப்பினர்

1. கடலூர்    51,    33,  3
2. அண்ணாகிராமம் 42,  22,  2
3. பண்ருட்டி 42,  25,  3
4. குறிஞ்சிப்பாடி 49, 28,  3
5. கம்மாபுரம் 53, 24, 2
6. விருத்தாசலம் 51, 19, 2
7. நல்லூர் 64, 21, 2
8. மங்களூர் 66, 24,  2
9. காட்டுமன்னார்கோவில் 55, 18, 2
10. குமராட்சி 57, 20, 2
11. கீரப்பாளையம் 63, 20, 2
12. புவனகிரி 47, 15, 2
13. பரங்கிப்பேட்டை 41, 18 ,2

மொத்தம் 681, 287, 29

Read more »

கொளஞ்சியப்பர் கல்லூரியில் நடந்த பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா

விருத்தாசலம் : 

                விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் நடந்த பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. 

             விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் மாணவர்களுக்கிடையேயான பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடந்தது. இதில் கல்லூரியின் அனைத்துத் துறையிலும் ஆர்வமுள்ள மாணவ - மாணவிகள் பங்கேற்று பரிசு பெற்றனர். கல்லூரி முதல்வர் ( பொறுப்பு) சுப்ரமணியன் போட்டியில் வெற்றி வெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். விழாவில் பேராசிரியர்கள் சுகன்யா, சிவக்குமார், தயாளன், குணசேகரன் நடுவர்களாக செயல்பட்டு மாணவர்களை தேர்வு செய்தனர். போட்டிக்கான ஏற்பாடுகளை பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் செல்வமணி, அய்யாதுரை, கார்த்திகேயன், விக்னேஷ், ஆதிசிவம், மணிகண்டன், சபரிநாதன் செய்திருந்தனர்.







Read more »

உள்ளாட்சித் தேர்தல்: கடலூர் மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட 400 பேர் விருப்ப மனு

கடலூர்:

             கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, காங்கிரஸ் கட்சி சார்பில், 400க்கும் மேற்பட்டோர் திங்கள்கிழமை விருப்ப மனுக்களை அளித்தனர். 

               காங்கிரஸ் கட்சி சார்பில் உள்ளாட்சித் தேர்தலுக்கு விருப்ப மனுக்களைப் பெறுவது ஞாயிற்றுக்கிழமை கடலூர் மாவட்டக் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில்  தொடங்கியது. எனினும் ஞாயிற்றுக்கிழமை நாள் சரியில்லை என்று, யாரும் மனு அளிக்கவில்லை. திங்கள்கிழமை காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் திரளாக வந்து ஆர்வமுடன் விருப்ப மனுக்களை அளித்தனர். 

              விருப்ப மனுக்களை மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் ஏ.நெடுஞ்செழியன் பெற்றுக் கொண்டார். கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி நிறுவனப் பல்வேறு அமைப்புகளின் பதவிகளுக்கு, திங்கள்கிழமை ஒரே நாளில் 400க்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை அளித்ததாக காங்கிரஸ் கட்சி பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். விருப்ப மனுக்கள் 23-ம் தேதி வரை பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை விருப்ப மனுக்கள் பெறும் நிகழ்ச்சியில், மாவட்ட துணைத் தலைவர்கள் அருள் பிரகாசம், சுப்பிரமணியன், மாவட்டச் செயலாளர்கள் கலை விஜயகுமார், சரவணன், அலமு தங்கவேல் மற்றும் நிர்வாகிகள் செல்வகுமார், கார்த்திகேயன், காயல் ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 









Read more »

கடலூர் மாவட்டம் அரியிருந்த மங்கலம் கிராமத்தில் 61 பேருக்கு ரூ.3 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பிலான மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் விழா: அமைச்சர் எம்.சி.சம்பத் பங்கேற்பு


 
 
 
நெல்லிக்குப்பம்:

               கடலூர் மாவட்டம் அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியம் எய்தனூர் பஞ்சாயத்துக்குட்பட்ட அரியிருந்த மங்கலம் கிராமத்தில் 61 பேருக்கு ரூ.3 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பிலான மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவைகள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அமுதவல்லி தலைமை தாங்கினார். ஒன்றியக்குழுத் தலைவர் கவுரிபாண்டியன், எம்.சி.சம்பத்தும் முன்னிலை வகித்தனர். பஞ்சாயத்த தலைவர் சீத்தாராமன் வரவேற்றார். கூட்டத்தில் 64 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை சிறப்புத்திட்ட அமலாக்கத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்.

ப்போது சிறப்புத்திட்ட அமலாக்கத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியது:- 
 
             கடலூர் தொகுதியும், பண்ருட்டி தொகுதியும் எனக்கு இருகண்கள் போன்றது. எய்தனூர் கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளிக்கூடம் அடுத்த நிதியாண்டில் உயர்நிலைப் பள்ளிக் கூடமாக முதல்-அமைச்சர் தரம் உயர்த்திதருவார். ஆதி திராவிட மக்கள் மீது பாசம் கொண்டவர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆவார். இதன் மூலம் தமிழ் நாட்டில் சமதர்ம சமுதாயத்தை உருவாக்குவதே முதல்- அமைச்சரின் எண்ணம் ஆகும்.  

               தரமான மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவைகளை முதல்-அமைச்சரே நேரில் பார்வையிட்டு வழங்க உத்தரவிட்டார். மிக்சியுடன் 400 மில்லி ஜாரையும் கூடுதலாக வழங்க உத்தரவிட்டவர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மிக்சி, கிரைண்டர், மின் விசிறி வெளிமார்க்கெட்டின் விலை ரூ.7 ஆயிரம் ஆகும். ஆனால் இதைவிட அதிக தரத்துடன் ரூ.5 ஆயிரத்து 444 அடக்க விலையில் பொருட்களை கொடுக்கின்றோம். தமிழக மக்களுக்கு தாய் வீட்டு சீதனமாக விலையில்லா பொருட்களை வழங்கியவர் முதல்- அமைச்சர். கடந்த ஆட்சியில் உள்நோக்கத்துடன் டி.வி.யை வழங்கியவர் கருணாநிதி, பெண்களின் துயரங்களை போக்க வேண்டும் என்பது தான் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நோக்கம் ஆகும். இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார்.

                         விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், தாசில்தார் ஆனந்தராமன், தொகுதி இணை செயலாளர் பாண்டியன், கடலூர் நகர செயலாளர் குமரன், துணை வட்டாட்சியர் குமாரசாமி, ரெவன்யூ இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், வேளாண்மை ஆத்மக்குழுத் தலைவர் ராஜேந்திரன், முன்னாள் ஒன்றிய செயலாளர் தேவநாதன், நகர பேரவை செயலாளர் கந்தன், வக்கீல் பாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன் நன்றி கூறினார். விழா நிகழ்ச்சிகளை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் முத்தையா தொகுத்து வழங்கினார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior