உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஆகஸ்ட் 18, 2011

நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் எம்.பி..எஸ்.சிவசுப்ரமணியன் சட்டமன்றத்தில் பேசினார்

           நெய்வேலி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சிவசுப்பிரமணியன் பேச்சால் பேரவையில் புதன்கிழமை சிரிப்பலை எழுந்தது.

பேரவையில் புதன்கிழமை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசியநெய்வேலி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சிவசுப்பிரமணியன்

             நெய்வேலி அரசுப் போக்குவரத்து பணிமனையை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் எடுத்துச் சென்றுவிட்டார். அதை மீண்டும் அங்கு கொண்டுவர வேண்டும் என்றார். 

அப்போது, குறுக்கிட்ட பேரவைத் தலைவர் டி.ஜெயக்குமார், 

             ""பணிமனையை முன்னாள் அமைச்சர் எடுத்துச் சென்றாரா? வேறு இடத்துக்கு மாற்றி விட்டாரா?'' எனக் கேள்வி எழுப்பினார். இதைத் தொடர்ந்து, பேரவையில் சிரிப்பலை எழுந்தது. 

உறுப்பினரின் கேள்விக்குப் பதிலளித்த போக்குவரத்து அமைச்சர் செந்தில் பாலாஜி, 

               ""நெய்வேலியில் போக்குவரத்து பணிமனையை வேறு இடத்துக்கு மாற்றியுள்ளதாக உறுப்பினர் தெரிவித்தார். அதை மீண்டும் பழைய இடத்துக்கேக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.





Read more »

கடலூர் மாவட்டத்தில் தாட்கோ திட்டத்தில் 540 ஆதிதிராவிட மாணவர்களுக்கு தொழில் பயிற்சிகள்

கடலூர்:

               கடலூர் மாவட்டத்தில் தாட்கோ திட்டத்தில் இவ்வாண்டு, ஆதிதிராவிட மாணவ மாணவியர் 540 பேருக்கு ரூ. 53.50 லட்சத்தில், பல்வேறு தொழில் பயிற்சிகள் அளிக்கப்படுவதாக, மாவட்ட ஆட்சியர் வே. அமுதவல்லி தெரிவித்தார். 

            கடலூர் மாவட்டத்தில் தாட்கோ திட்டத்தில் 55 மாணவ மாணவியருக்கு பஅககவ கணினி பயிற்சி, தனியார் நிறுவனம் மூலம் அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி 4 மாதங்கள் நடைபெறும். இப்பயிற்சிக்காக ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் ரூ. 400 ஊக்கத் தொகை வழங்கப் படுகிறது. இப்பயிற்சிக்காக அரசு, மாணவர்களுக்குத் தலா ரூ. 2,090 செலவு செய்கிறது.  பயிற்சி தொடக்க விழா புதன்கிழமை நடந்தது. மாவட்ட ஆட்சியர் வே. அமுதவல்லி குத்து விளக்கேற்றி, பயிற்சியைத் தொடங்கி வைத்தார். 

ஆட்சியர் பேசுகையில், 

              கணினி பயிற்சி அளிக்க 55 மாணவர்களுக்கு அரசு ரூ. 2,47,500 செலவிடுகிறது. இதுதவிர இவ்வாண்டு ஆதிதிராவிட மாணவ மாணவியர் 540 பேருக்கு பல்வேறு தொழில் பயிற்சிகள் ரூ. 53.50 லட்சம் செலவில் வழங்கப்பட்டு வருகிறது,  எனவே இத்தகைய பயிற்திகளைப் பெறும் ஆதிதிராவிட மாணவ மாணவியர் ஒவ்வொருவரும் திறம்பட பயிற்சி பெற்று, தாங்கள் மேலும் பலருக்கு பயிற்சி அளிக்கும் வகையில் கிறமை பெற்று சுயதொழில்களைத் தொடங்க முன்வர வேண்டும். அவ்வாறு தொழில் தொழில் தொடங்க முன்வருவோருக்கு தாட்கோ திட்டத்தில் வங்கிக்கடன் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றார் ஆட்சியர்.  நிகழ்ச்சியில் தாட்கோ மாவட்ட மேலாளர் எஸ். ரங்கநாதன் வரவேற்றார்.







Read more »

கடலூர் மாவட்டச் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் பெண்கள் பள்ளிகளுக்கு 17 நேப்கின் இயந்திரங்கள்

கடலூர்:

              கடலூர் மாவட்டச் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில், பள்ளி மாணவிகள் பயன்படுத்தும் சானிட்டரி நேப்கின் வழங்கும் 17 தானியங்கி இயந்திரங்கள் செவ்வாய்க்கிழமை பெண்கள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டன. 

                 கனடியன் செஞ்சிலுவைச் சங்க உதவியுடன், நாளைய தலைவர்கள் என்ற திட்டத்தில், கடலூர் மாவட்ட செஞ்சிலுவைச் சங்கம் இந்த இயந்திரங்களை பள்ளி மாணவிகளுக்கு வழங்கியது. 

மஞ்சக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளி, 
கடலூர் முதுநகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி,
பெரியக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளி, 
சாமியார் பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி, 
பரங்கிப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி 

             ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், இந்த சானிட்டரி நாப்கின் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.  திட்டத் தொடக்க விழா, கடலூர் முதுநகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. கடலூர் மாவட்ட செஞ்சிலுவைச் சங்க கௌரவச் செயலாளர் ஆர்.எம்.பாசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.அமுதவல்லி கலந்துகொண்டு, நாப்கின் இயந்திரங்களை பள்ளிகளுக்கு வழங்கி உரையாற்றினார்.  இளைஞர் செஞ்சிலுவைச் சங்க மாவட்டப் பொறுப்பாளர் ஜி. கோவிந்தராஜன், வாழ்த்திப் பேசினார். பள்ளித் தலைமை ஆசிரியர் முருகன் நன்றி கூறினார். பள்ளி இளைஞர் செஞ்சிலுவைச் சங்க ஆலோசகர்கள் மால்மருகன், சுதா ஆகியோர் கலந்து கொண்டனர்.




Read more »

சி. முட்லூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

சிதம்பரம்:

             சிதம்பரம் அருகே உள்ள சி. முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் கல்லூரி மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை வகுப்புகளை புறக்கணித்தனர். 

                 இதனால் புதன்கிழமை கல்லூரி வகுப்புகள் நடைபெறவில்லை. கல்லூரிக்கு பேருந்து வசதி, குடிநீர், கழிப்பரை உள்ளிட்ட அடிப்படை வசதி, அதிக எண்ணிக்கையில் மாணவர்களைச் சேர்க்க வேண்டும், சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களை உடனடியாக பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர்.






Read more »

பொதுத் தேர்விற்காக பிளஸ் 2 மாணவ, மாணவியர் விவரம் சேகரிப்பு

              தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவியரின், "குரூப்' விவரங்களை, அரசு தேர்வுத்துறை கணக்கெடுத்து வருகிறது. 

              வரும் மார்ச்சில் நடைபெறும் பொதுத்தேர்வில், "குரூப்' வாரியாக தேவையான அளவிற்கு கேள்வித்தாள்களை அச்சடிப்பதற்கு வசதியாக, இந்த புள்ளிவிவரம் சேகரிக்கப்படுகிறது. தனித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர் சேர்க்கைப் பணிகள் முடிந்ததும், அடுத்த மாதம் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரங்கள் எடுக்கப்படும். தேர்வெழுதுவோர் பட்டியலை தயாரிப்பதற்காக, இந்த புள்ளிவிவரங்கள் எடுக்கப்படும். இந்த பட்டியல், டிசம்பர் மாதத்தில் மீண்டும் ஒருமுறை சரிபார்க்கப்பட்டு, பொதுத்தேர்வு எழுதுவோர் பட்டியல் இறுதி செய்யப்படும். 

              ஆசிரியர்களுக்கு பயிற்சி: சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க, பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு ஏற்கனவே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 2, 3, 4, 5, 7, 8, 9, 10 ஆகிய வகுப்புகளை நடத்தும் ஆசிரியர்களுக்கு, பயிற்சிகள் அளிக்கப்படும். ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித்துறை, பள்ளிக் கல்வித்துறை, மத்திய இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் இணைந்து, இந்த பயிற்சியை அளிக்க உள்ளனர்.







Read more »

தமிழகத்தில் '4ஜி' சேவை வசதி

                 

                 ""தமிழகத்தில், பி.எஸ்.என்.எல்., சார்பில், "4 ஜி' (ஒய்-மக்ஸ்) கம்பியில்லா அகண்ட அலைவரிசை மூலம், "பிராட்பேண்ட்' வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது,'' என, தமிழக வட்ட பி.எஸ்.என்.எல்., முதன்மை பொது மேலாளர் முகமது அஷ்ரப்கான் தெரிவித்தார். 

                  பி.எஸ்.என்.எல்., மூலம் "2ஜி', "3ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசையின் அடுத்தக்கட்ட தொழில்நுட்ப வளர்ச்சியாக, "4ஜி' கம்பியில்லா அகண்ட அலைவரிசை சேவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சேலம், காரிப்பட்டி பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் 4ஜி அகண்ட அலைவரிசை பிராட்பேண்ட் சேவையை, தமிழக வட்ட பி.எஸ்.என்.எல்., முதன்மை பொது மேலாளர் முகமது அஷ்ரப்கான் துவக்கி வைத்தார். 

அஷ்ரப்கான் கூறியது: 

            தமிழகம் முழுவதும், 201 இடங்களில், "4ஜி' தொழில்நுட்பத்திலான அகண்ட அலைவரிசை, "பிராட்பேண்ட்' சேவையை துவக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, 22 இடங்களில், "4ஜி' சேவை பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது, 113 இடங்களில், "4ஜி' சேவை துவங்கப்பட்டுள்ளது. இந்த "4ஜி' அகண்ட அலைவரிசை சேவையை, 15 கி.மீ., தொலைவுக்குள் பெற முடியும். 

             "4ஜி' சேவை தங்குதடையின்றி வாடிக்கையாளர் பெறுவதற்கு ஏற்ப, மூன்று வகையான, "ஆன்டனா'க்கள் பொருத்தப்படுகின்றன. இவ்வாறு அஷ்ரப்கான் கூறினார். "தமிழகத்தில், 10 லட்சம் மாணவ, மாணவியருக்கு இலவச "லேப்-டாப்' வழங்க, அரசு முடிவு செய்துள்ளது. இந்த மாணவ, மாணவியருக்கு "பிராட்பேண்ட்' வசதி ஏற்படுத்திக் கொடுக்க, தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்' என, பி.எஸ்.என்.எல்., தலைமை பொது மேலாளர் ஜெகதீசன் கூறினார்.




Read more »

சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் பதிவிறக்கம் செய்ய


 சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் பதிவிறக்கம் செய்ய

http://pallikalvi.in/Students/Text%20Book.htm













Read more »

சிதம்பரம் தியாகவல்லியில் காதலனை கைபிடிக்க தர்ணா செய்யும் பெண்


 http://mmimages.mmnews.in/Articles/2011/Aug/0f5b73c9-7748-4759-9faa-e56294e843ba_S_secvpf.gif
சிதம்பரம்:

              சிதம்பரத்தை அடுத்த தியாகவல்லியை சேர்ந்தவர் மோகன், கட்டிட மேஸ்திரி. இவரது மகள் தமிழரசி (வயது 19). என்ஜினீயரிங் கல்லூரி மாணவி. இவருக்கும் திருச்சோபுரம் பகுதியை சேர்ந்த சந்துரு (25) என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

               தமிழரசி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சந்துருவிடம் கேட்ட போது அவர் திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.   இதனால் ஆத்திரமடைந்த தமிழரசி நேற்று காலை திருச்சோபுரத்தில் உள்ள சந்துரு வீட்டு முன்பு தரையில் உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.  இதனை கண்ட பொது மக்கள் அங்கு திரண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்தவுடன் புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமால் மற்றும் போலீசார் விரைந்து சென்று தமிழரசியிடம் விசாரணை நடத்தினர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior