உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 16, 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியின் அதிகாரபூர்வ இணையத்தளம் தொடக்கம்

கடலூர்:

          கடலூர் பெரியார் கலைக் கல்லூரியின் அதிகாரபூர்வ இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.  முன்னாள்,  இந்நாள்  மாணவர்கள் அனைவரும் நமது கல்லூரியின் இணையத்தளத்தினை பார்த்து தங்களது கருத்துக்களை தெரியப்படுத்தவும்.


பெரியார் கலைக் கல்லூரியின் அதிகாரபூர்வ  இணையதள முகவரி 


பெரியார் கலைக் கல்லூரியின் இணையதள குழு முகவரி 



பெரியார் கலைக் கல்லூரி முகநூல் முகவரி 


















Read more »

தமிழகத்தில் மார்ச் 8, 2012 ல் பிளஸ் 2 தேர்வுகள் தொடக்கம்: தேர்வு கால அட்டவணை விபரம்

 
         தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வுகள்  மார்ச் 8-ந் தேதி தொடங்குவதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 
 
தேர்வு கால அட்டவணை  
 
மார்ச் 8-மொழித்தாள் ஒன்று.

மார்ச் 9-மொழித்தாள் இரண்டு.

மார்ச் 12-ஆங்கிலம் முதல் தாள்.

மார்ச் 13-ஆங்கிலம் இரண்டாம் தாள்.

மார்ச் 16-  இயற்பியல்,பொருளியல்,உளவியல்.

மார்ச் 19-கணிதம்,விலங்கியல்,நுண்ணுயிரியல்.நியூட்ரிசியன்.

மார்ச் 20-வணிகவியல்,புவியியல்,மனையியல்.

மார்ச் 22- வேதியியல்,கணக்குப்பதிவியல்,சுருக்கெழுத்து.

மார்ச் 26- உயிரியியல்,வரலாறு,தாவரவியல், அடிப்படை அறிவியல், வணிகக் கணிதம்.

மார்ச் 28- கணினி அறிவியல்,உயிரி வேதியியல்,இந்திய கலாச்சாரம், தொடர்பு ஆங்கிலம், தட்டச்சு,சிறப்பு மொழி.

மார்ச் 30- தொழில்கல்வி தியரி, அரசியல் மற்றும் அறிவியல் தேர்வுகள், நர்சிங், மற்றும் புள்ளியியல். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

சென்னை பாஸ்போர்ட் சேவை மையத்தில் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய வசதி

           வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் பாஸ்போர்ட்டுக்கு நேரடியாக விண்ணப்பிக்கும் வகையில் சென்னை பாஸ்போர்ட் சேவை மையத்தில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு

             முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் பாஸ்போர்ட் அலுவலகத்தில் நேரடியாக பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வகையில் சென்னை சாலிகிராமம் பானுமதி ராமகிருஷ்ணா சாலையில் இயங்கி வரும் பாஸ்போர்ட் சேவை மையத்தில் புதிய வசதி செய்யப்பட்டு உள்ளது. இங்கு பாஸ்போர்ட் தொடர்பான அனைத்து சேவைகளையும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பெற முடியும்.

            பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள்  இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பித்து, விண்ணப்ப எண்ணை பெற்று அசல் சான்றிதழ்களுடன் சாலிகிராமம் பாஸ்போர்ட் சேவை மையத்தை அணுகலாம். இந்த புதிய சேவை இங்கு மட்டுமே செய்யப்பட்டு உள்ளது. அலுவலக வேலைநாட்களில் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

           இதேபோல், அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட்டுக்கு நேரடியாக விண்ணப்பிப்பதற்காக சிறப்பு வசதி ஏற்கனவே தாம்பரம் பாஸ்போர்ட் சேவை மையத்தில் ஏற்படுத்தப்பளட்டு உள்ளது. எனவே, அரசு ஊழியர்கள் தங்கள் வாழ்க்கை துணை, 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஆகியோருக்கு பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம். புதுப்பிக்கவும், தாம்பரம் துரைசாமி ரெட்டி சாலையில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தில் முன்பதிவு எதுவும் இல்லாமல் நேரடியாக வந்து விண்ணப்பிக்கலாம்.

            பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வருவோர் காவல்துறை சான்று (பி.சி.சி.), இ.சி.என்.ஆர். மனைவி அல்லது கணவன் பெயர் சேர்ப்பு, முகவரி மாற்றம், திருமணத்திற்குப் பிறகு பெயர் சேர்ப்பு, கூடுதல் பக்கங்கள் இணைப்பு, 3 வயதுக்கு குறைவானவர்களுக்கு பாஸ்போர்ட்டு (பெற்றோர் முறையான இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும்) ஆகிய சேவைகளுக்கு நேரடியாக அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.














Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior