உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, நவம்பர் 11, 2011

கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி . 750 மாணவர்களுக்கு இலவச திருக்குறள் நூல்கள்

கடலூர்:

            மாணவர்களுக்கு இலவசமாக திருக்குறள் நூல்கள் வழங்கும் விழா கடலூரில் வியாழக்கிழமை நடந்தது.  கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்த இந்த விழாவுக்கு குவைத் பொங்குதமிழ் மன்றம், கடலூர் மாவட்ட உலகத் திருக்குறள் பேரவை ஆகியன ஏற்பாடு செய்திருந்தன. 750 மாணவர்களுக்கு இலவச திருக்குறள் நூல்கள் வழங்கப்பட்டன.  நிகழ்ச்சிக்கு கடலூர் தமிழ்ச் சங்கத் தலைவரும் உலக திருக்குறள் பேரவை கடலூர் மாவட்டச் செயலாளருமான ராம.சனார்த்தனன் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகங்களை வழங்கினார். சேதுமாதவன் வரவேற்றார். முனைவர் இளங்கோவன் விளக்க உரை நிகழ்த்தினார். பள்ளி தலைமை ஆசிரியர் உதயகுமார் சாம் நன்றி கூறினார்.









Read more »

பரங்கிப்பேட்டை முத்துக்குமரசாமி கோவிலில் திருத்தேர் வெள்ளோட்டம்: 3 அமைச்சர்கள் பங்கேற்பு

பரங்கிப்பேட்டை: 

            பரங்கிப்பேட்டை முத்துக்குமரசாமி  கோவிலில் வரும் 13ம் தேதி திருத்தேர் வெள்ளோட்டத்தில் மூன்று அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். பரங்கிப்பேட்டையில் பழமை வாய்ந்த முத்துக்குமரசாமி கோவில் உள்ளது. ஆண்டுதோறும் தைப்பூசம், கந்தசஷ்டி திருவிழா மற்றும் ஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமைகளில் சத்ரு சம்ஹரா திருசதி வழிப்பாடு நடந்து வருகிறது. வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமரசாமிக்கு சத்ருசம்ஹரா த்ரிசதி வழிப்பாட்டு குழு சார்பில் சுமார் 20 லட்சம் மதிப்பில் நூதன திருத்தேர் செய்யப்பட்டது. 

        திருத்தேர் வெள்ளோட்டம் வரும் 13ம் தேதி நடக்கிறது. இந்த விழாவில் சத்துணவுத்துறை அமைச்சர் சம்பத், சமூக நலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பரஞ்ஜோதி பங்கேற்று திருத்தேர் வெள்ளோட்டத்தை துவக்கி வைக்கின்றனர். ஏற்பாடுகளை சத்ருசம்ஹரா த்ரிசதி வழிப்பாட்டு குழுவினர் செய்து வருகின்றனர்.













Read more »

இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் சார்பில் சபரிமலை சுற்றுலா ரெயில் திட்டம்


           இந்தியன் ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) ஆண்டுதோறும் பல்வேறு சுற்றுலா திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  கோடை வாசஸ்தலங்கள், புனித யாத்திரை மையங்களுக்கு சுற்றுலா “பேக்கேஜ்” அறிமுகப்படுத்தி பாதுகாப்பான ரெயில் பயணத்தை அளித்து வருகிறது.  

 சபரிமலை பக்தர்கள் வசதிக்காக சபரிமலைக்கு சிறப்பு பேக்கேஜ் ஒன்றை ஐ.ஆர்.சி.டி.சி. அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஐ.ஆர்.சி.டி.சி. மண்டல மேலாளர் கே. ரவிக்குமார் கூறியது:-

             ஐ.ஆர்.சி.டி.சி. கடந்த ஆண்டுகளை போலவே இந்த ஆண்டும் சபரிமலை அய்யப்பன் தரிசனத்துக்காக சிறப்பு யாத்திரைகளை நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதம் நடத்த முடிவு செய்துள்ளது. அய்யப்ப பக்தர்களின் வசதிக்காகவும் கூட்ட நெரிசலை தவிர்க்கவும் உறுதி செய்யப்பட்ட இரண்டாம் வகுப்பு ரெயில் டிக்கெட்டுகளுடன் இந்த சபரிமலை யாத்திரை ரெயில் பயணம் மேற்கொள்ளப்படுகிறது.    இந்த மாதம் 21, 24, டிசம்பர் 1, 5, 15, 19, 22 மற்றும் ஜனவரி 5 ஆகிய தேதிகளில் சபரிமலை ரெயில் பயணத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஒருவர் சென்னையில் இருந்து செல்லவும், தரிசனம் முடித்து விட்டு மீண்டும் சென்னை திரும்பவும் என 4 நாட்கள் பயணத்துக்கு ரூ.1,890 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

            இந்த கட்டணத்தில் உறுதி செய்யப்பட்ட 2-ம் வகுப்பு படுக்கை வசதி மற்றும் கோட்டயம்-நிலக்கல்-கோட்டயம் சென்றுவர வாகன வசதி உட்பட்டது. குறைந்த நாட்களில் சிரமம் இல்லாமல் சபரிமலை சென்று அய்யப்பனை தரிசனம் செய்து உடனடியாக சென்னை திரும்புவதற்கு வசதியாக இந்த பயணத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.    சபரிமலை யாத்திரை பயணம் செய்ய விரும்புபவர்கள் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் உள்ள இந்தியன் ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக மையத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். 
 
மேலும் விவரங்களுக்கு 
 
044-64594959, 90031-40681 
 
 
என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். 
 
 
 
 
 
 
 More  details 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

கடலூரில் மழையில் சேதம் அடைந்த சாலைகள் சீரமைப்பு பணி தீவிரம்


 http://mmimages.mmnews.in/Articles/2011/Nov/db855dff-5b21-4ce3-ab7e-b28c3a9ccfc3_S_secvpf.gif
 
கடலூர்:
 
             கடலூரில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்தது. இதனால் கடலூர் நகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் சேதம் அடைந்தது. மேலும் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் வெளியேற முடியாமல் உள்ளது.  இந்நிலையில் கடலூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் நகரசபை தலைவர் சி.கே. சுப்பிரமணியன், கமிஷனர் டாக்டர் இளங்கோவன் மற்றும் அதிகாரிகள், கவுன்சிலர்கள் போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

             இந்நிலையில் நேற்று தேசிய நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் செல்வராஜ், கண்காணிப்பு பொறியாளர் அபிஷேக் ராஜன் ஆகியோர் கடலூர் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு முதல் முதுநகர் வரை நடைபெற்று வரும் தற்காலிக சாலை சீரமைப்பு பணியை நேரில் வந்து ஆய்வு செய்து பார்வையிட்டனர். அப்போது நகரமன்ற தலைவர் சி.கே. சுப்பிரமணியன், கோட்ட பொறியாளர் ராஜேந்திரன் கோட்ட உதவி பொறியாளர் சிவசக்திவேல், கவுன்சிலர் ரமேஷ், அன்பு, சங்கர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

புவனகிரியில் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் விழா: 176 குடும்பங்களுக்கு அமைச்சர் செல்வி ராமஜெயம் வழங்கினார்


 http://mmimages.mmnews.in/Articles/2011/Nov/8d4ecb03-ca97-405a-a1ec-380fd0925712_S_secvpf.gif

புவனகிரி:

          கடலூர் மாவட்டம் மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றியம் அழிக்சிக்குடி ஊராட்சியை சேர்ந்த வண்டுராயன்பட்டு கிராமத்தில் தமிழக அரசின் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவை வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் அமுதவல்லி தலைமை தாங்கினார்.

            சிதம்பரம் ஆர்.டி.ஓ. இந்துமதி, தாசில்தார் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக அழிச்சிக்குடி ஊராட்சி மன்ற தலைவர்டி கவிதா பாரி வரவேற்று பேசினார்.   விழாவில் சிறப்பு விருந்தினராக சமூகநலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் கலந்து கொண்டு 176 குடும்பங்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவற்றை வழங்கினார்.

              விழாவில் ஒன்றியக்குழு தலைவர்கள் கீதா, ஜெயபாலன், அசோகன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் சிவப்பிரகாசம், புவனகிரி பேரூராட்சி மன்ற தலைவர் வள்ளி சச்சிதானந்தம், புவனகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயபால், கலையரசி, புவனகிரி தொகுதி செயலாளர் கருப்பன், இணை செயலாளர் லட்சுமி நாராயணன், புவனகிரி நகர அவைத்தலைவர் கனகராஜ், மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணை தலைவர் லெனின், ஒன்றிய இளைஞரணி செயலாளர் செழியன்,

           ஒன்றிய ஜெயலலிதா பேரவை சீனுவாசன், அமைச்சரின் உதவியாளர் ஜெயசீலன், வண்டுராயன் பட்டு ஊராட்சி செயலாளர் ரகுநாதன், கிளை செயலாளர் ஜெய்சங்கர் மற்றும் வருவாய் அதிகாரிகள், ஊராட்சி மன்ற துணை தலைவர் உறுப்பினர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர். கடலூர் மாவட்டத்தில் இதுவரை 8 ஆயிரத்து 720 பயனாளிகளுக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்பட்டு உள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

கடலூர் மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம்: நவம்பர் 13 ல் ராமதாஸ் கடலூருக்கு வருகை

கடலூர்:
            கடலூர் மாவட்ட பா.ம.க. செயற்குழு கூட்டம் கடலூரில் நடைபெற்றது. இதற்கு மாநில துணை பொதுச்செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். செயலாளர் தர்மலிங்கம் வரவேற்றார். செயலாளர்கள் வேணுபுவனேஸ்வரன், சின்னதுரை, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் பழ. தாமரைக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

            இதில் துணைச் செயலாளர் ரவிச்ச்நதிரன், முன்னாள் செயலாளர் வைத்தியலிங்கம், கவுன்சிலர் போஸ் ராமச்சந்திரன், முன்னாள் கவுன்சிலர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட தலைவர் ஆடியபாதம், துணை தலைவர் திருமூர்த்தி, என்.எல்.சி. தொழிற்சங்கம் திலகர், நெய்வேலி நகர செயலாளர் சக்கரவர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் தட்சிணாமூர்த்தி, செல்வம், கோவிந்தராஜ், கவுன்சிலர் சரவணன், ஒன்றிய குழு துணைத்தலைவர் வெங்கடேசன், அமைப்பு செயலாளர் சங்கர், அரங்கநாதன், வேல்முருகன், செல்வகுமார், பேச்சாளர் சாமிக்கச்சிராயர், 22-வது வார்டு செயலாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் :

                வருகிற 13-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு கடலூர் மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டத்துக்கு வருகை தரும் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மாநில தலைவர் ஜி.கே. மணி, மாநில வன்னியர் சங்க தலைவர் குரு, ஆகியோருக்கு கடலூர் அருகே உள்ள கங்கணாங்குப்பத்தில் சிறப்பான வரவேற்பு அளிப்பது அதில் பா.ம.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளாக கலந்து கொள்வது.

              கடலூர் நகர பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தால் பிரதான சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாகி விபத்து நடக்கும் நிலை உள்ளது. இந்த நிலைமை மாற்ற மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.   கடலூர் சிப்காட் பகுதியில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலையால் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பல்வேறு நோய்களின் தாக்கத்துக்கு ஆளாகி இருக்கின்றனர்.

           இதே நிலை நீடித்தால் கடலூர் மாவட்டம் முழுவதும் போபாலில் நடந்த விபத்து போல நடந்து விடுமோ என்ற பீதி மக்களிடம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட தனியார் தொழிற்சாலையின் மீது நடவடிக்கை எடுத்து மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Read more »

நெய்வேலியில் போலி டாக்டர் கைது

நெய்வேலி:

           நெய்வேலி அருகே ஊ.மங்கலம் கோட்டேரி மெயின் ரோட்டில் பல ஆண்டுகளாக கிளினிக் வைத்து நோயாளி ளுக்கு மருத்துவம் பார்த்து வந்தவர் நாராயணசாமி. இவரது சிகிச்சையில் பலருக்கு பல்வேறு உபாதைகள் ஏற்பட்டு அவதி அடைந்து வந்தனர். மேலும் இவரது சிகிச்சை மீது பலருக்கு அதிருப்தி இருந்து வந்தது.

            இவர் எம்.பி.பி.எஸ் டாக்டர் தானா என்பதில் பலருக்கு சந்தேகம் ஏற்பட்டது.   இதுகுறித்து பாதிக்கப்பட்ட பலர் அப்பகுதி கிராம நிர்வாகி வெங்கடாசலத்திலடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் வெங்கடாசலம் ஊ.மங்கலம் போலீசில் புகார் செய்தார்.  இதைத்தொடர்ந்து போலீசார் நாராயணசாமி நடத்தி வந்த கிளினிக்குக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மருத்துவம் படித்ததற்கான சான்றிதழோ கிளினிக் நடத்துவதற்கான அனுமதியோ, ஆவணங்களோ இல்லை.  மேலும் நாராயணசாமி எஸ்.எஸ்.எல்.சி. மட்டும் படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து நாராயணசாமியை போலீசார் கைது செய்தனர். 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior