உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 06, 2010

Stress on need for women study centres


CUDDALORE: 

              Women Study Centre should be formed in educational institutions to focus on issues concerning women and how to tackle them, said Nirmala Jeyaraj, former Principal of the Lady Doak College, Madurai.

                She was addressing the 100th International Women's Day celebrations organised by the Theivanai Ammal College for Women here on Friday. Ms. Jeyaraj said such a centre should also call for a change in the societal attitude towards women. The United Nations had acknowledged the fact that social progress can be achieved only with the participation and equality of women, she said. Principal Kasturibai Dhanasekaran said that the women students in the region were facing many problems that hindered their pursuit of higher studies.

                    They want to discontinue education for reasons such as marriage, child birth, transfer of family members and fear of eve-teasing. College Secretary Senthil Kumar said that the college had a tie up with the Lingnan University, Hong Kong, and soon the student-faculty exchange would take place. An interactive session with students, parents and teachers, and panel discussions on women's issues followed. An exhibition of the handicrafts and paintings of the students were showcased.

Read more »

என்எல்சி தொழிற்சங்க நிர்வாகி ​ உள்பட 2 பேர் சஸ்பெண்ட்

நெய்வேலி:

                   என்எல்சி தொழிற்சங்க நிர்வாகியான செல்வராஜ்,​​ தலைமை அலுவலக ஊழியர் ஜவகர் ஆகியோர் வெள்ளிக்கிழமை சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். என்எல்சி நிறுவனத்தில் இயங்கிவரும் டிடியுசி தொழிற்சங்கத்தின் தலைவராக இருப்பவர் செல்வராஜ்.​ இவர் கடந்த மாதம் நெய்வேலியில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் பங்கேற்று நிறுவனத்தின் பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது.​ மேலும் இதே கூட்டத்தில் பங்கேற்ற ஜவகர் என்பவரும் அவதூறாக பேசினார் எனக் கூறப்படுகிறது.  இதுகுறித்து தகவலறிந்த என்எல்சி நிர்வாகம் நிறுவன நிலை ஆணைகளின்படி வெள்ளிக்கிழமை ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.

Read more »

மருத்துவ ஆராய்ச்சிக்கு உடல் தானம்

சிதம்ப​ரம்:
 
                         சிதம்பரத்தை அடுத்த ஏ.​ புளியங்குடியில் புதன்கிழமை காலமான வி.​ நடனசபாபதியின் ​(80) கண்கள் தானமாக பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.​ பின்னர்,​​ அவரது உடல் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்காக தானமாகப் பெறப்பட்டது.​ ஏற்பாடுகளை அரிமா சங்கத் தலைவர் எம்.கமல்கிஷோர் ஜெயின்,தன்னார்வ ரத்ததானக் கழகத் தலைவர் எஸ்.​ ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Read more »

3 பேர் கண்தானம்

சிதம்பரம்:

               சிதம்பரம் கோவிந்தசாமி நகரைச் சேர்ந்த ஜி.ராஜினி ​(75),​ பூவாலையைச் சேர்ந்த டி.ஜெயலட்சுமி ​(98),​ சிதம்பரம் எஸ்.பி.கோவில் தெருவைச் சேர்ந்த டி.சந்திரா ​(85) மூவரும் காலமானார்கள். இவர்களது 3 ஜோடி கண்கள் காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கம் சார்பில் தானமாக பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.​ இதற்கான ஏற்பாடுகளை அரிமா சங்கத் தலைவர் எம்.கமல்கிஷோர் ஜெயின்,​​ தன்னார்வ ரத்ததானக்கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் செய்தனர்.

Read more »

சிதம்பரம், கடலூரில் இன்று அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் : 

                      பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் சிதம் பரம், கடலூரில் இன்று  கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித் தும், மத்திய, மாநில அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் முன் னாள் முதல்வர் ஜெ., உத்தரவின்படி மேற்கு  மாவட்ட அ.தி.மு.க., சார்பில் சிதம்பரம் மேல வீதியில் முன்னாள் அமைச்சர் கலை மணி தலைமையிலும், கிழக்கு மாவட்டம் சார்பில் கடலூர் உழவர் சந்தை முன்பு  மாவட்ட செயலாளர் சம்பத் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என மாவட்ட செயாலாளர்கள் அருண்மொழித்தேவன் , சம்பத் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Read more »

'பிட்' அடித்த 7 பேர் வெளியேற்றம்

கடலூர் :

            கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வில் "பிட்' அடித்த 5 மாணவிகள் உட்பட 7 பேர் பிடிபட்டனர். பிளஸ் 2 ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு நேற்று நடந்தது. தேர்வின் போது கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய தனித் தேர்வர் ஒருவரும், சிதம்பரம் நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தனித் தேர்வர்கள் மாணவிகள் 5 பேரும், வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளி மையத்தில் அதே பள்ளியைச் சேர்ந்த ஒரு மாணவரும் "பிட்' அடித்த போது கையும் களவுமாக பிடிபட்டனர். பிடிபட்ட அனைவரும் தேர்வு அறையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

Read more »

மனநிலை பாதித்த பெண் பெற்ற குழந்தை தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைப்பு

கடலூர்:

                    மனநிலை பாதித்த பெண் பெற்ற குழந்தை சமுநலத்துறை மூலம் சேலம் தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. சேத்தியாதோப்பில் கடந்த 6 நாட்களுக்கு முன்பு மனநிலை பாதித்த பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின் னர் அந்த பெண் தனது குழந்தையை கவனிக்காமல், தெருக்களில் சுற்றித் திருந்தார்.
                      தகவலறிந்த சைல்டு லைன் அமைப்பினர் அந்த குழந்தையை மீட்டு,  கடலூரில் உள்ள சமுக நலத் துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் சைல்டு லைன் அமைப்பின் நிர்வாகிகள் வக்கீல் அருளப்பன், சுஜாதா சீனுவாசன், பேராசிரியர் ஜெயந்திரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி புவனேஸ்வரியிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. அந்த குழந்தையை, சமூக  நல அலுவலர் சேலத்தைச் சேர்ந்த "லைப் லைன் டிரஸ்ட்' அமைப்பினரிடம் ஒப்படைத்தார். இதற்கான ஏற்பாடுகளை சைல்டு லைன் திட்ட ஒருங்கிணைப் பாளர் ராஜசேகர் செய்திருந்தார்.

Read more »

தென் மாவட்ட மக்களின் வரப்பிரசாதம் 'முட்டம் பாலம்' 40 ஆண்டு கனவு நனவாகிறது

சிதம்பரம் :

                           கடலூர், நாகை மாவட்ட மக்களின், 40 ஆண்டு கனவான, காட்டுமன்னார்கோவில் அருகே கொள்ளிடம் ஆற்றில், 43 கோடி ரூபாய் செலவில் பாலம் கட்ட, துணை முதல்வர் ஸ்டாலின், இன்று அடிக்கல் நாட்டுகிறார். கடலூர் - நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட கிராம மக்களின், 40 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், கடலூர் மாவட்ட எல்லையான காட்டுமன்னார்கோவில் அடுத்த முட்டம் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே, 43 கோடி ரூபாய் செலவில் பாலம் கட்டப்படுகிறது.இரு மாவட்டத்தை இணைக்கும் இப்பாலத்தால், வியாபாரிகள், விவசாயிகள் பயன்பெறுவர். நாகை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட மக்கள், சென்னை செல்வதற்கு பிரதான சாலையாகிவிடும். இப்பகுதி மக்கள், கும்பகோணம், சேத்தியாத்தோப்பு, வடலூர் வழியாகவும், மயிலாடுதுறை, சிதம்பரம், புதுச்சேரி வழியாகவும் சென்று வரும் நிலையில், முட்டம் பாலம் கட்டி முடித்தால், காட்டுமன்னார்கோவில், சேத்தியாத்தோப்பு வழியாக எளிதாக சென்று விடலாம். இதனால், போக்குவரத்து நெரிசல் தவிர்ப்பதுடன், 35 கி.மீ., தூரம் குறைவதால், ஒரு மணி நேர பயண நேரமும் குறையும். சென்னையில் இருந்து நாகை மாவட்டத்திற்கு செல்பவர்கள், சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார் கோவில், முட்டம், பட்டவர்த்தி, வில்லியநல்லூர், நீடூர், மயிலாடுதுறை சென்று விடலாம்.
 
                           கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் சுற்றியுள்ள கிராம மக்கள், மயிலாடுதுறை செல்ல சிதம்பரம் வந்து  சீர்காழி வழியாக செல்ல வேண்டி இருந்தது. அதே போன்று  நாகை கொள்ளிடக்கரை கிராம மக்களும்,  70 கி.மீ., சுற்றி வரவேண்டும். தற்போது பாலம் வந்துவிட்டால், 2.30 மணி நேரம் செல்ல வேண்டியதில்,  ஒரு மணி நேரம் மிச்சமாகிவிடும். கடந்த 1974ம் ஆண்டு, அப்போதை காட்டுமன்னார்கோவில் சேர்மனும், அமைச்சர் பன்னீர்செல்வத்தின் தந்தையுமான கிருஷ்ணமூர்த்தி, முட்டம் பாலம் கட்ட, ஒன்றியக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அரசுக்கு கோரிக்கை வைத்தார். அப்போது பிள்ளையார் சுழி போடப்பட்ட பாலத்திற்கு, கடந்த 1996-2000 தி.மு..க., ஆட்சியில், பாலம் கட்ட முடிவு செய்து 27 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டது. ஆனால், அப்போதைய உள்ளாட்சித்துறை அமைச்சர் கோ.சி.மணி, பாலத்தை தஞ்சை மாவட்டத்திற்கு கொண்டு சென்றார். பின், ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால், பாலம் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
 
                        தற்போது, அமைச்சர் பன்னீர்செல்வத்தில் தீவிர முயற்சியால், முட்டம் கொள்ளிடம் ஆற்றில் பாலம் கட்ட, நபார்டு உதவியுடன் தமிழக அரசு 43 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. தொடர்ந்து, சேத்தியாத்தோப்பில் இருந்து முட்டம் வரையிலும், நாகை மாவட்டம் பாப்பாக்குடியில் இருந்து பட்டவர்த்தி, நீடூர் சாலையை அகலப்படுத்தி, தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாலம் கட்ட மண் பரிசோதனை, நிலம் ஆர்ஜித பணிகள் முடிந்து கடந்த ஜனவரி 27ம் தேதி, பாலம் கட்ட பூமி பூஜை நடந்தது. ஈரோட்டை சேர்ந்த பிரபல கான்ட்ராக்டர் மூலம் பணிகள் துவங்கியுள்ளன. முதற்கட்டமாக ஆற்றில் தளவாட பொருட்கள் கொண்டு செல்ல செம்மண் சாலை அமைக்கப்படுகிறது. பாலத்தை ஒன்றரை ஆண்டிற்குள், கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தென் மாவட்ட மக்களுக்கு பிரதான சாலையாக அமையவுள்ள இப்பாலத்திற்கு, துணை முதல்வர் ஸ்டாலின், இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

Read more »

.52 கோடி மதிப்பில் கட்டடங்கள் திறப்பு

பரங்கிப்பேட்டை : 

                பரங்கிப்பேட்டையில் 1.52 கோடி ரூபாய் மதிப் பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்கள், படகு குழாம், நூலக ட்டடங்களை இன்று (6ம் தேதி) துணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
 
                        பரங்கிப்பேட்டை பேரூராட்சி பகுதிகளில் 70 லட்சம் ரூபாய் மதிப்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டம், 50 லட்சம் மதிப்பில் சுற்றுலா வளர்ச்சி மையத்தில் படகு குழாம், குடில்கள், உணவு விடுதி மற்றும் குழந்தைகள் பூங்கா, 20 லட்சம் மதிப்பில் பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்கு புதிய அலவலக கட்டடம் அடிக்கல் நாட்டுதல், 7 லட்சம் ரூபாய் மதிப்பில் வாரசந்தை, நாளங்காடி, 4 லட் சத்து 43 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நூலக கட்டடம் உள்ளிட்டவைகளை காட்டுமன்னார்கோவிலில் உள்ள எம்.ஆர்.கே., பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடக்கும் அரசு விழாவில் அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் துணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.விழாவில் பேரூராட்சி சேர்மன் முகமது யூனுஸ், துணைத் தலைவர் செழியன் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்கின்றனர்.

Read more »

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரி மறியல் கம்யூ., கட்சியினர் 1729 கைதாகி விடுதலை

கடலூர் : 

                      அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாவட்டத்தில் பல இடங்களில் மறியலில் ஈடுபட்ட இந்திய மற்றும் மா.கம்யூ.,கட்சியினர் 453 பெண்கள் உட்பட 1729 பேரை போலீசார் கைது செய்தனர்.

                            கடலூர் உழவர் சந்தை அருகில் சி.ஐ.டி.யூ., மாநில துணைத் தலைவர் சந்திரன் தலைமையில் மாவட்ட தலைவர் கருப்பையா, ஆளவந்தார், குமார், தட்சிணாமூர்த்தி, பாபு, சாவித்திரி உள்ளிட்ட 94 பேரும், 

                             அண்ணா பாலம் அருகில்  ஏ.ஐ.டி.யூ.சி., மாவட்ட பொது செயலாளர் சேகர் தலைமையில் மாரியப்பன், சம்பந்தம், குளோப், பண்டரிநாதன் உள்ளிட்ட 150 பேர் மறியல் செய்தனர். 

                     விருத்தாசலத்தில் இந்திய விவசாய தொழிலாளர் சங்க வட்ட செயலாளர் கோகுலகிறிஸ்டீபன் உள்ளிட்ட 75 பேர் கடை வீதியிலும், சி.ஐ.டி.யூ.,வினர் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் தலைமையில் 135 பேர் பஸ் நிலையம் முன்பு மறியல் செய்தனர். 

                      கார்குடல் கிராமத்தில் ஏ.ஐ.டி. யூ.சி., வட்ட செயலாளர் பழனிவேல் தலைமையில் 34 பேரும், 

                      கம்மாபுரத்தில் சி.ஐ.டி.யூ., பரமசிவம் தலைமையில் 35 பேரும் மறியல் செய்தனர். 

                      சிதம்பரத்தில் மா.கம்யூ., மூசா தலைமயில் 91 பேரும், 

                      புவனகிரியில் ஏ.ஐ.டி.யூ.சி., வீரப்பன் தலைமையில் 83 பேரும், 

                      பரங்கிப் பேட்டையில் வல்லரசு தலைமையில் 20 பேரும் மறியலில் ஈடுபட்டனர்.
                    திட்டக்குடியில் ஏ.ஐ.டி.யு.சி., பரமசிவம், ஆட்டோ ஓட்டுநர் சங்க தலைவர் ரங்கசாமி உள்ளிட்ட 26 பேரும், 

                        ராமநத்தம் மின் வாரிய அலுவலகம் முன் விவசாய தொழிலாளர் சங்க வட்ட துணை செயலாளர் மாயவன் உள்ளிட்ட 28 பேர் மறியல் செய்தனர். 

                        பெண்ணாடம் தபால் நிலையம் முன் மாவட்டக்குழு நாராயணசாமி, கரும்பு விவசாய சங்க மாநில செயலாளர் ரங்கசாமி உள்ளிட்ட 10 பேரும், 
     
                            வேப்பூரில் அருள்மணி, சுப்ரமணியன் உள் ளிட்ட 15 பேர் மறியல் செய்தனர்.
                             பண்ருட்டி தபால் நிலையம் முன் ஏ.ஐ.டி.யூ.சி., மாவட்ட பொருளாளர் பழனிவேல் தலைமையில் 37 பெண்கள் உட்பட 176 பேரும், 

                           திருவதிகை தபால் நிலையம் முன் குணசேகரன் தலைமையில் 4 பெண்கள் உட்பட 44 பேரும், 

                           தட்டாஞ்சாவடியில் பன்னீர்செல்வம் தலைமையில் 20 பெண்கள் உள்பட 56 பேரும், 

                            காடாம்புலியூரில் சரவணன் தலைமையில்  17 பெண்கள் உள்பட 68 பேரும் மறியலில் ஈடுபட்டனர்.
                             மங்களம்பேட்டை    கலிபெருமாள் தலைமையில் 27 பேரும்,
                           
                        மந்தாரக்குப்பத்தில் ஏ.ஐ.டி.யூ.சி., மாநில குழு உறுப்பினர் முத்துவேல் தலைமையில் 186 பேரும், 

                            வடலூரில் மாவட்ட துணை தலைவர் ராமலிங்கம்  தலைமையில் 59 பேரும் மறியலில் ஈடுபட்டனர். 

                             சேத்தியாத்தோப்பில்    ஏ.ஐ.டி. யூ.சி., வட்ட செயலாளர் மகாலிங் கம் சார்பில் 36 பேரும்,
                                  
                            எறும்பூரில் வட்டக்குழு குமார் தலைமையில் 21 பேரும்,

                       ஒரத்தூரில் விவசாய தொழிலாளர் சங்கம் அன்பழகன் தலைமையில் 32 பேரும், 

                        ஸ்ரீமுஷ் ணத்தில் கலியமூர்த்தி தலைமையில் 43 பேரும், 

                       சோழதரத்தில் வட்ட செயலளர் ராஜீ தலைமையில் 36 பேரும், 

                        பழஞ்சநல்லூரியில் ராமலிங்கம் தலைமையில் 24 பேரும், 

                      காட்டுமன்னார்கோவிலில் சி.ஐ.டி.யூ., சார்பில் இளைபெருமாள் தலைமையில் 50 பேர் மறியலில் ஈடுபட்டனர். 


            மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மறியலில் ஈடுபட்டவர் களை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

Read more »

இளைஞர் காங்., வேட்புமனு தாக்கல்


கடலூர் : 

                     கடலூர் சட்டசபை தொகுதி இளைஞர் காங்., நிர்வாகிகள் தேர்தலில் 500 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். கடலூர் சட்டசபை தொகுதி இளைஞர் காங்., நிர்வாகிகள் தேர்தல் வரும் 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை கடலூர் டவுன்ஹாலில் நடக்கிறது.  இதற்கான மனு தாக்கல் கடலூரில் மாவட்ட காங்., அலுவலகத்தில் நேற்று நடந்தது.  500 பேர் மனு தாக்கல் செய்தனர்.  மனுக்களை தொகுதி பொறுப்பாளரும் தேர்தல் அதிகாரியுமான ரவி பெற்றார். எம்.பி.,  செய்தி தொடர்பாளர் குமார் தலைமையில் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி,  தண்டபாணி  உட்பட பலர் கலந்து கொண்டனர்.  இன்றும், நாளையும் மனுக்கள் பரிசீலிக்கப்படுகிறது.  

                           சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் சட்டசபை தொகுதிக்கான இளைஞர் காங்., தேர்தலில் போட்டியிட நேற்று மனு தாக்கல் நடந்தது. சிதம்பரம் தொகுதிக்கு 927 பேர் மனு தாக்கல் செய்தனர். அதனை தேர்தல் அதிகாரி ரமேஷ் பெற்றார்.  காட்டுமன்னார்கோவில் சட்டசபை தொகுதிக்கு 700 பேர் மனு தாக்கல் செய்தனர். அதனை தேர்தல் அதிகாரி கிரிஜா பெற்றுக்கொண்டார்.  மனுக்கள் இன்று (6ம் தேதி) பரிசீலிக்கப்படுகிறது.

Read more »

நலத்திட்ட உதவிகள் வழங்க கடலூர் நகர தி.மு.க., முடிவு

கடலூர் : 

              கடலூர் நகர தி.மு.க., சார்பில் துணை முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

                       கடலூர் நகர தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது.  நகர தலைவர் நாராயணன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ., அய்யப்பன், நகர செயலாளர் தங்கராசு, முன்னாள் சேர்மன் ராஜேந் திரன்,  பழனி, நகர துணை அமைப்பாளர் வசந்தா, அண்ணாதுரை, தட்சிணாமூர்த்தி, கவுன்சிலர்கள் கோவலன், ரவிச் சந்திரன், ஆதிபெருமாள், ராமு, கோவிந்தசாமி உள் பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் விழுப்புரத்தில் முதல்வர் பங்கேற்கும் விழாவில் திரளாக பங்கேற்பது, துணை முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி நகரில் உள்ள 45 வார்டுகளிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read more »

துணை முதல்வர் ஸ்டாலினுக்கு கண்டரக்கோட்டையில் வரவேற்பு

பண்ருட்டி : 

                   துணை முதல்வர் ஸ்டாலினுக்கு கண்டரக் கோட்டையில் மாவட்ட தி.மு.க., சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்டத்தில் இன்று நடைபெறும்  அரசு விழாக்களில் பங்கேற்க துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு சென்னையிலிருந்து கார் மூலம் நெய்வேலி வந்தார். அவருக்கு மாவட்ட எல்லையான கண்டரக்கோட்டையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் சீத்தாராமன், எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் பன்னீர்செல்வம், சேர்மன்கள் கடலூர் தங்கராசு, பண்ருட்டி பச்சையப்பன், முன்னாள் எம்.பி., கணேசன், மாவட்ட துணைச் செயலாளர் பழனிசாமி,  நகர செயலாளர்கள் பண்ருட்டி  ராஜேந்திரன், நெய்வேலி புகழேந்தி, கடலூர் முன்னாள் சேர்மன் ராஜேந்தின், அண்ணா கிராம ஒன் றிய செயலாளர் வெங்கட் ராமன் பங்கேற்றனர்.

Read more »

நடராஜர் கோவில் தேர்களுக்கு துருப்பிடிக்காத உலோக 'ஷெட்'

சிதம்பரம் : 

              சிதம்பரம் நடராஜர் கோவில் தேர்களுக்கு துருப்பிடிக்காத உலோகத்தால் ஆன ஷெட் அமைக்கப் பட்டு வருகிறது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் எழுந்தருளி வலம் வரும் ஐந்து தேர்கள் உள்ளன.  ஆண்டுக்கு இரு முறை நடக்கும் ஆனி திருமஞ்சனம், ஆருத்ரா தரிசனம் ஆகிய தரிசன விழாக்களின்போது இந்த தேரோட்டம் நடக்கும். அதன்பிறகு கீழ வீதியில் உள்ள தேர் நிலையில் நிறுத்தப்பட்டிருக்கும்.  தற்போது சென்னையை சேர்ந்த கோவில் கட்டளைக்காரர்கள் மூன்றுபேர் சேர்ந்து தேருக்கு துருப்பிடிக்காத உலோகத்தால் ஆன ஷெட் அமைக்க முன் வந்தனர்.  அதன்படி முதற்கட்டமாக பெரிய தேரான நடராஜர் தேருக்கு 2 லட்சம் ரூபாய்  ஷெட் அமைக்கும் பணி நடந்து வருகிறது.


Read more »

செய்யூரில் ஏப்., 14ல் பஞ்சமி நீலம் மீட்பு மாநாடு சமூக சமத்துவ படை நிறுவனர் சிவகாமி பேட்டி

கடலூர் : 

                    "தாழ்த்தப்பட்டவர்கள் வாழும் பகுதிகளில் பள்ளிகள் கட்டுவதில்லை; மாறாக அப்பகுதியில் டாஸ்மாக் கடைகளை நிறுவி கலாசார சீரழிவை ஏற்படுத்தி வருகின்றனர்' என, சமூக சமத்துவ படை நிறுவனர் சிவகாமி குற்றம் சாட்டியுள்ளார். 

கடலூர் டவுன்ஹாலில் நடந்த சமூக சமத்துவ படை  நிறுவனர் சிவகாமி, கூறியதாவது:
 
                          சமூக சமத்துவ படையில் கடலூர் மாவட்டத் தை கிழக்கு, மேற்கு, மத்திய மாவட்டம் என மூன்றாக  பிரித்து நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். நிலமற்ற தாழ்த்தப்பட்டவர்களுக்கு விவசாய நிலம் வழங்க வேண் டும். அரசு இதற்கான தெளிவான வரையறை கொண்டு வர வேண்டும். 2007ம் ஆண்டோடு, இரண்டு ஏக்கர் நிலம் வழங்குவதை அரசு நிறுத்திக் கொண்டது. முழுமையாக செயல்படுத்தவில்லை. கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்கின்றனர். ஆனால், தாழ்த்தப்பட்டவர்கள் வாழும் பகுதிகளில், பள்ளிக்கூடம் கட்டுவதில்லை. மாறாக அப்பகுதியில் டாஸ்மாக் கடைகளை நிறுவி, கலாசார சீரழிவை ஏற்படுத்தி வருகின்றனர். பெண்களுக்கான இட ஒதுக்கீட்டில் நரிக்குறவர்கள், கைவினைஞர்கள், மீனவர்கள், நாவிதர்கள், சலவைத் தொழிலாளர்களுக்கு உள் ஒதுக்கீடு அளிக்க வேண்டும். 

                           கல்விக் கடன்களை ஏழைகள் பெற முடியவில்லை. தாழ்த்தப்பட்டவர்களுக்காக காலனிகளை உள்ளடக்கிய தனி பஞ்சாயத்து உருவாக்கப்பட்டு, கிராமங்கள் தன்னிறைவு கொண்டதாக இருக்க வேண்டும். மதுராந்தகம் அடுத்த செய்யூரில், வரும் ஏப்., 14ம் தேதி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளும் பஞ்சமி நிலங்கள் மீட்பு மாநாடு நடக்கிறது. மேலும், ஒவ்வொரு மாதமும் கோரிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டம், பிரசாரங்கள் மேற்கொள்ளப்படும் என்றார்.

Read more »

பல்கலை மாணவர்கள் இறந்த சம்பவம் அரசின் முதற்கட்ட விசாரணை துவங்கியது

சிதம்பரம் : 

                      சிதம்பரம் அண்ணாமலை பல்கலை மாணவர்கள் நான்கு பேர் இறந்த சம்பவம் தொடர்பாக, தமிழக அரசு நியமித்த விசாரணை அதிகாரி நேற்று முதற்கட்ட விசாரணையை துவக்கினார். மாணவர்கள் தண்ணீரில் குதித்து இறந்த இடத்தை பார்வையிட்டு விசாரித்தார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் இன்ஜினியரிங் படித்த ஜார்க்கண்ட் மாநில மாணவர் கவுதம்குமார், 28ம் தேதி விபத்தில் இறந்தார். பல்கலை மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்கவில்லை என ரகளையில் ஈடுபட்ட மாணவர்களை, போலீசார் விரட்டி அடித்தனர். அதில், பாலமான் வாய்க் காலில் குதித்த வெளி மாநில மாணவர்கள் சுமித்குமார், முகமது சர்பரேஸ் ராப், ஆஷிஷ் ரஞ்சன் குமார் ஆகியோர் இறந்தனர். வடக்கு மண்டல புலனாய்வுப் பிரிவு டி.எஸ்.பி., நாராயணசாமி, சிதம்பரத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தினர். இந்நிலையில், நடந்த சம்பவம் குறித்து விசாரிக்க டலூர் டி.ஆர்.ஓ., நடராஜனை விசாரணை அதிகாரியாக தமிழக அரசு நியமித்தது.அதையொட்டி, நேற்று சிதம்பரம் வந்த விசாரணை அதிகாரியான நடராஜன், எஸ்.பி., கோவில் தெருவில் மாணவர் கவுதம்குமார் விபத்தில் சிக்கிய இடத்தை பார்வையிட்டார். பின்னர், மாணவர்கள் மறியலில் ஈடுபட்ட துணைவேந்தர் மாளிகை, மாணவர்களால் சேதப்படுத்தப்பட்ட தேர்வுத்துறை கட்டடம், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பார்வையிட்டார்.போலீஸ் விரட்டி அடித்ததால் மாணவர்கள் தண்ணீரில் குதித்து இறந்த பாலமான் வாய்க்கால், மாணவர்கள் உடல் கிடைத்த இடத்தை பார்வையிட்டு, அப்பகுதி மக்களிடம் விசாரித்தார். ஆர்.டி.ஓ., ராமராஜ், தாசில்தார் காமராஜிடம் நடந்த சம்பவங்கள் குறித்து கேட்டறிந்த பின், மதியம் கடலூர் புறப் பட்டு சென்றார். இன்று, துணை முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகள் இருப்பதால், இரண்டாம் கட்ட விசாரணை நாளை துவங்கும் எனத் தெரிகிறது.


Read more »

இளைஞர் காங்., தேர்தல் புவனகிரியில் 874 பேர் போட்டி

புவனகிரி : 

                   புவனகிரி தொகுதியில் இளைஞர் காங்., நிர்வாகிகளுக்கான தேர்தலில் 874 பேர் போட்டியிடுகின்றனர். புவனகிரி தொகுதி இளைஞர் காங்., நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட கடந்த 2ம் தேதி மனுக்கள் பெறப்பட்டது. அகில இந்திய இளைஞர் காங், தேர்தல் ஆணைய அலுவலர் அனூப் தலைமையில் புவனகிரி தொகுதி தேர்தல் அலுவலர் மோகன்தாஸ் உள்ளிட்ட குழுவினர் மனுக்ளை பெற்றனர். தேர்தலில் போட்டியிட  ஆயிரத்துக்கும் அதிகமானோர் மனுதாக்கல் செய்தனர். பரிசீலனை முடிந்து 874  பேர் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. நிர்வாகிகளுக்கான தேர்தல் வரும் 6ம் தேதியிலிருந்து 11ம் தேதி வரை சேத்தியாத்தோப்பு ஜே.கே. திருமணமண்டபத்தில் நடக்கிறது. புவனகிரி தொகுதி இளைஞர்காங்., நிர்வாகிகளுக்கான தேர்தலில் போட்டியிட தொகுதிக்குட்பட்ட  மேல்புவனகிரி, கீரப்பாளையம், கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 152 கிராம ஊராட்சிகளில் இருந்து 882 மனுக்களும், புவனகிரி, சேத்தியாத்தோப்பு, கங்கைகொண்டான் ஆகிய 3 பேரூராட்சி பகுதிகளிலிருந்து 49 மனுக்களும் பெறப்பட்டுள்ளது. இதில் கிராம பஞ்சாயத்திற்கு தலா 5 நிர்வாகிகளும், பேரூராட்சி பகுதிக்கு தலா 10 புதிய நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

Read more »

காமன்வெல்த் போட்டியில் வெற்றி மாணவிக்கு பாராட்டு விழா

கடலூர் : 

                    சிங்கப்பூரில் நடந்த காமன்வெல்த் யோகா போட்டியில் இரண்டு வெள்ளி பதக்கம் வென்ற ஏ.ஆர்.எல்.எம்., மெட்ரிக் பள்ளி மாணவிக்கு ஜூனியர் சேம்பர் சார்பில் பாராட்டு விழா நடந்தது.
 
                 பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு ஜூனியர் சேம்பர்  தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். முன்னாள் மண்டல  தலைவர் பாலசுப்ரமணியன் யோகா போட்டியில் இரண்டு வெள்ளி பதக்கம் வென்ற 6ம் வகுப்பு மாணவி அஜித்தா மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர் பிரேமா   ஆகியோருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். மண்டல  துணை  தலைவர் கார்த்திகேயன், சென் சாய் கிருஷ்ணன், பாபுதனேஷ்வரன், ரயில்வே சங்க  இணை செயலாளர் ராஜன், தெற்கு ரயில்வே ஆலோசனை குழு  உறுப்பினர் சிவக்குமார் உட்பட  பலர் பங்கேற்றனர்.ஜூனியர் சேம்பர் செயலாளர் சிவக்குமார் நன்றி  கூறினார்.

Read more »

.தேசிய அறிவியல் தின போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

சிதம்பரம் :  

                     தேசிய அறிவியல் தின போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை அண்ணாமலைப் பல்கலைக்கழக துணை வேந்தர் பாராட்டி பரிசு வழங்கினார். தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு பரங்கிப் பேட்டை கடல் வாழ் உயிரியல் உயராய்வு மையத்தின் சார்பில் பல்வேறுப் போட்டிகள்  நடத்தப் பட்டது. இதில் அண்ணாமலைநகர் ராணி சீதையாச்சி மேல்நிலைப் பள்ளி  8ம் வகுப்பு மாணவி நசிரின் பானு கண்காட்சியிலும்,  பிளஸ் 1 மாணவர் பிரவின் ஓவியப்போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றனர்.மாணவர்களை போட்டியில் பங்கேற்க  ஊக்கப் படுத்திய ஆசிரியர்கள் ஷாஜாதீபி, சரவணன், ஜோசபின் தேவ கிருமை, பியர்லின் வில்லியம்ஸ், சசிகலாதேவி ஆகியோர் களை அண்ணாமலை பல்கலைக்கழக துணை வேந் தர் ராமநாதன், பதிவாளர் ரத்தினசபாபதி, பரங்கிப்பேட்டை கடல்வாழ் உயிரியல் உயராய்வு மைய இயக்குனர் பாலசுப்ரமணியன், பள்ளி தலைமை ஆசிரியர் தர்பாரண்யன் பாராட்டி பரிசுகள் வழங்கினர். கண்காட்சியில் எடைமேடைக்கு செல்லாமல் லாரியில் உள்ள எடையை கண்டறியும் முறை குறித்து மாணவி நசிரின் பானு வடிவமைத்திருந்த படைப்பு பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது.

Read more »

ஜெர்மன் நாட்டு சிறுமியை தீட்சிதர் அடித்ததாக புகார்

சிதம்பரம் : 

              சிதம்பரம் நடராஜர் கோவிலிலுக்கு சுற்றுலா வந்த ஜெர்மன் நாட்டு சிறுமியை தீட்சிதர் ஒருவர் அடித்ததாக புகார் செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மனைவி ஜெர்மன் நாட்டை சேர்ந்த மில்டன் தெர்க்கார். இருவரும் குடும்பத்துடன் ஜெர்மனியில் வசித்து வருகின்றனர். ஆண்டு தோறும் தமிழகத்திற்கு சுற்றுலா வருவது வழக்கம். சில நாட்களுக்கு முன் தங்களது மூன்று பெண் குழந்தைகளுடன் சுற்றுலா வந்தனர். மகாபலிபுரம், ஆரோவில் பகுதிகளுக்கு சென்று நேற்று காலை சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்தனர்.சாமி தரிசனம் செய்துவிட்டு உள்பிரகாரத்தை சுற்றி வரும்போது அவர்களது 10 வயது மகள் ஜெனனியை, மணிகண்டன் என்ற தீட்சதர் தலையில் அடித்துள்ளார். வலி தாங்க முடியாமல் குழந்தை வீரிட்டு அழுதபடி பெற்றோரிடம் ஓடிவந்தது. குழந்தையை ஏன் அடித்தீர்கள் என மணிகண்டன் தீட்சிதரை கேட்டபோது அருகில் இருந்த நவதாண்ட தீட்சதரும் சேர்ந்து ஜெர்மன் தம்பதியினரை தாக்க வந்தனர். பயந்துபோன அவர்கள் நேராக கோவில் செயல் அலுவலர் அலுவலகம் வந்து புகார் தெரிவித்தனர். நடந்த சம்பவத்தை மனுவாகவும் எழுதி கொடுத்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Read more »

கரை ஒதுங்கிய திமிங்கிலம்

கடலூர் : 

                கடலூர் சில்வர் பீச்சில் இறந்து கரை ஒதுங்கிய அறிய வகை திமிங்கிலத்தை வனத்துறையினர் பிரேத பரிசோதனைக்கு பின்னர் புதைத்தனர். கடலூர் சில்வர் பீச்சில் நேற்று காலை அறியவகை  திமிங்கிலம் இறந்து கரை ஒதுங்கியது. தகவலறிந்த மாவட்ட வன அலுவலர் துரைசாமி, வனச் சரகர்கள் பன்னீர்செல்வம், சீனுவாசன் ஆகியோர் திமிங்கிலத்தை பார்வையிட்டனர். மீன் வளத்துறை உதவி இயக்குனர் இளம்பரிதி, பரங்கிப்பேட்டை கடல் வாழ் உயிரின ஆய்வு மைய இயக்குனர் டாக்டர் பாலசுப்ரமணியன், பேராசிரியர் ரவி உள்ளிட்டோர் பார்வையிட்டனர். பிரேத பரிசோதனைக்குப்பின் புதைக்கப்பட்டது.

Read more »

மனைவி எரித்து கொலை கணவருக்கு ஆயுள்

கடலூர் :

                  மனைவியை எரித்து கொலை செய்த கணவருக்கு கடலூர் கோர்ட்டில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. பண்ருட்டி சத்தியமூர்த்தி தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(32). பூக்கடையில் வேலை செய்து வந்த இவரும், அதே பகுதியைச் சேர்ந்தவர் லோகலட்சுமி (எ) லோகநாயகி. இருவரும் 10 ஆண்டிற்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.
 
                ஆறுமுகம் தினமும் குடித்துவிட்டு லோகநாயகியிடம் தகராறு செய்து வந் தார். குடும்பச் செலவிற்கு பணம் கொடுப்பதில்லை. லோகநாயகி வீட்டு வேலை செய்து, குடும்பம் நடத்தி வந்தார். இந்நிலையில் 2008ம் ஆண்டு அக். 7ம் தேதி பகல் 2 மணிக்கு ஆறுமுகம், சாப் பாடு கேட்டதற்கு  லோகநாயகி "பணம் கொடுத்தால் தான் சாப்பாடு' என கூறினார். ஆத்திரமடைந்த ஆறுமுகம் வீட்டிலிருந்த மண்ணெண்ணையை எடுத்து லோகநாயகி மீது ஊற்றி தீவைத்தார்.  மேலும் அவர் வெளியே தப்பிச் செல்லாமல் இருக்க வீட்டின் வாயிலை அடைத் துக் கொண்டு நின்றார். அதில் தீயில் கருகிய லோகநாயகி புதுச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் ஆறுமுகத்தை கைது செய்தனர். அவர் மீது கடலூர் மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.  வழக்கை விசாரித்த நீதிபதி அசோகன், மனைவியை எரித்து கொலை செய்த ஆறுமுகத்திற்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.


Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior