உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 04, 2010

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்குத் தடை இல்லை


                   தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு எந்தவிதத் தடையும் இல்லை என்று, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சேலத்தில் புதன்கிழமை தெரிவித்தார்.

                வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் இல்லத் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சேலம் வந்த அவர், அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டு வரும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டடப் பணிகளைப் பார்வையிட்டார். பின்னர், அரசு மருத்துவமனைக்குச் சென்ற அவர் இதய அறுவை சிகிச்சை வார்டுக்குச் சென்றார். அங்கு நோயாளிகள் கூட்டம் அதிகம் இருப்பதைக் கண்ட அமைச்சர், அவர்கள் ஏன் நிற்கிறார்கள் என்று கேட்டறிந்தார். நோயாளிகளை அதிக நேரம் காக்க வைக்கக் கூடாது என்று டாக்டர்களுக்கு அறிவுரை வழங்கினார். தொடர்ந்து மருந்து வழங்கும் கவுன்ட்டருக்குச் சென்ற அமைச்சர், அங்கு காலாவதி மருந்துகள் ஏதேனும் உள்ளதா என்று சோதனை செய்து, அங்கிருந்து சில மாத்திரைகளை ஆய்வுக்கு எடுத்துச் சென்றார். இதையடுத்து மருத்துவக் கல்லூரி டீன் கனகசபை, கண்காணிப்பாளர் மோகன் மற்றும் டாக்டர்களிடம் அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்  அமைச்சர் கூறியது:

              சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டுமானப் பணிகள் விரைவாகவும், திருப்திகரமாகவும் உள்ளது. கட்டுமானப் பணிகள் விரைவில் முடிவடைந்து ஆகஸ்ட் மாதத்தில் முதல்வரால் திறக்கப்படும். தமிழக மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள் உள்ளனர். புதிதாக சுமார் 6 ஆயிரம் டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடத்த எந்தத் தடையும் இல்லை. மாணவர் சேர்க்கை நிச்சயம் நடைபெறும் என்றார் அவர்

Read more »

போலி முத்திரைகள்: ஆட்சியர் எச்சரிக்கை

கடலூர்:

               அலுவலர்களின் அனுமதியின்றி அலுவல் முத்திரைகளைத் தயாரித்தால், இந்தியத் தண்டனைச் சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வியாழக்கிழமை எச்சரிக்கை விடுத்தார். 

கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

               டலூர் மாவட்டத்தில் அலுவல் சார்ந்த போலி முத்திரைகள் புழக்கத்தில் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இப்போலி முத்திரைகளால் பொதுமக்கள் ஏமாற்றப்பட்டு, பலவிதமான இழப்புகளுக்கு ஆளாகிறார்கள். எனவே முத்திரை தயார் செய்பவர்கள், சம்மந்தப்பட்ட அலுவலர்களின் அனுமதி ஆணை பெற்ற பிறகே, முத்திரை தயாரித்து அளிக்க வேண்டும்.அலுவல் சாரா தனிநபர்களுக்கு, அலுவலக முத்திரைகளை எக்காரணம் கொண்டும் செய்து தரக் கூடாது. மீறினால் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் எக்காரணம் கொண்டும் சமூக விரோதிகளை அணுகி, போலி முத்திரையிட்ட சான்றுகளை பெற முயல வேண்டாம், ஊக்குவிக்கவும் வேண்டாம் என்றும், கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதில் குற்றச் செயல்களுக்கு உடந்தையாக இருத்தல் கண்டறியப்பட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்படுகிறார்கள் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

என்எல்சி ஸ்டிரைக் போதிய ஆதரவின்மையால் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தமாக மாறியது

நெய்வேலி:

                புதிய ஊதியமாற்று ஒப்பந்தத்தை ஏற்படுத்த வலியுறுத்தி என்எல்சி தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பில் புதன்கிழமை தொடங்கிய வேலைநிறுத்தம் போதிய ஆதரவின்மையால் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தமாக மாறியது.

                 என்எல்சி தொழிலாளர்களின் நீண்டநாள் கோரிக்கையான ஊதியமாற்று ஒப்பந்தம் ஏற்படுத்த வலியுறுத்தியும், காண்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தியும் என்எல்சி தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பில் ஜூன் 2 முதல் ஸ்டிரைக் நடத்தப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

                       இதனிடையே நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்டத் தொழிற்சங்கங்கள் நிர்வாகத்திடம் வேலைநிறுத்த அறிவிப்புக் கடித்தை மே 29-ல் வழங்கினர். இதையடுத்து தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பில் வேலைநிறுத்த அறிவிப்புக் கூட்டம் நெய்வேலி மெயின்பஜாரில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் எச்எம்எஸ் சங்கத் தலைவர் சுகுமார், அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கத் தலைவர் உதயக்குமார், சிஐடியு தலைவர் குப்புசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டு வேலைநிறுத்த அறிவிப்பின் நோக்கம் குறித்து விளக்கினர்.

                      அப்போது, அறிவிக்கப்படவுள்ள வேலைநிறுத்தம் காலவரையற்றதாக இருந்தால் மட்டுமே அதில் அதிமுக தொழிற்சங்கமும், எச்எம்எஸ் சங்கமும் பங்கேற்கும் என அதன் நிர்வாகிகள் கூட்ட மேடையிலேயே அறிவித்தனர். ஆனால் சிஐடியு சங்கச் செயலர் வேல்முருகன் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடைபெறும் அறிவித்தார். இதை ஏற்க மறுத்த எச்எம்எஸ் மற்றும் அதிமுக தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தத்தை புறக்கணித்து, பணிக்குத் திரும்புவதாக அறிவித்தனர். இதனால் தொழிற்சங்கக் கூட்டமைப்பினரிடேயே கருத்துவேறுபாட்டால் குழப்ப நிலைக்கு ஆளான தொழிலாளர்களில் பெரும்பாலானோர் பணிக்குச் சென்றனர். வியாழக்கிழமை வழக்கம் போல் அனைத்துப் பகுதிகளிலும் ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தனர்.

                       இந்த ஸ்டிரைக்கில் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்ட்டத் தொழிற்சங்கங்களான தொமுச மற்றும் பாமக தொழிற்சங்கங்கள் பங்கேற்காததும், தொழிற்சங்கக் கூட்டமைப்புக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினாலும், அறிவிக்கப்பட்ட ஸ்டிரைக்கை தோல்வியை தழுவியது

Read more »

மாஜி இன்ஸ்பெக்டர் மகன் கொலை வழக்கு: சரணடைந்தவர் பரபரப்பு வாக்குமூலம்


கடலூர்: 

                    தங்கை முறை பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொள்வேன் என கூறியதால், கோடீஸ்வரபாபுவை கொலை செய்தோம் என, உறவினர் பிரசன்னா, போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

                   கடலூர் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த சிலம்பிமங்கலத்தைச் சேர்ந்தவர் ராமன் ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர். இவரது மகன் சுகுமாறன் (எ) கோடீஸ்வரபாபு (26). தனது மகனை காணவில்லை என்று ராமன் கடந்த 1ம் தேதி  புதுச்சத்திரம் போலீசில் புகார் செய்தார்.  போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், சுகுமாறனை கடத்திச் கொன்று திருச்சி காவிரி ஆற்றங்கரையில் வீசியதாக பச்சையாங்குப்பம் பிரகாஷ், பிரசன்னபாபு, வில்லியநல்லூர் ரவி ஆகியோர் புதுச்சத்திரம் வி.ஏ.ஓ.,விடம் சரணடைந்தனர்.  புதுநகர் போலீசார், சரணடைந்த மூவரையும் கடலூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட பிரசன்னா கொடுத்துள்ள வாக்குமூலம் வருமாறு: 

                    தங்கை முறையான அறிவுக்கரசியை கடத்திச் சென்ற கோடீஸ்வரபாபுவை போலீசார் மீட்டு வந்து, சமரசம் செய்து வீட்டிற்கு அழைத்துச் சென்றோம்.  அவரது தந்தை ராமன் மற்றும் குடும்பத்தினர் கண்டித்ததால், பிரச்னை ஏற்பட்டது. அதனால் நான் (பிரசன்னா), பிரகாஷ், எங்களது நண்பர் வில்லியநல்லூர் ரவி ஆகியோர் கோடீஸ்வர பாபுவை காரில் புதுச்சத்திரம் அடுத்த மடவப்பள்ளம் கிராமத்தில் உள்ள சவுக்கு தோப்பிற்கு அழைத்துச் சென்று அறிவுரை கூறினோம். அப்போது கோடீஸ்வரபாபு, அறிவுக்கரசி யாரை திருமணம் செய்துகொண்டாலும் அவளுடன் தொடர்பு வைத்துக் கொள்வேன் என கூறினார்.

                   ஆத்திரமடைந்த  நானும், ரவியும் கோடீஸ்வரபாபுவின் கழுத்தை இறுக்கி முகத்தில் குத்தியதும் மயங்கி விழுந்தார். பின், காரில் இருந்த நைலான் கயிற்றால் கழுத்தை நெரிந்து கொலை செய்தோம். அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக முகத்தை கல்லால் குத்தி சிதைத்தோம்.  பிரேதத்தை, நானும் ரவியும் காரில் எடுத்துக்சென்று திருச்சி அருகே உள்ள காவிரி ஆற்றங்கரை முட்புதரில் வீசிவிட்டு வந்தோம். இதற்கிடையே, கோடீஸ்வரபாபுவை காணவில்லை என அவரது தந்தை, போலீசில் புகார் கொடுத்ததை அறிந்து சரணடைந்தோம். இவ்வாறு வாக்குமூலத்தில் பிரசன்னா கூறியுள்ளார்.

Read more »

கொள்ளிடம் கரையில் வெள்ள தடுப்பு கரை அமைக்க ரூ.108 கோடி அனுமதி: கண்காணிப்பு பொறியாளர் தகவல்

திட்டக்குடி: 

                    திட்டக்குடி வெலிங்டன் ஏரிக்கரை சீரமைப்பு பணிக்கு கூடுதலாக 9.71 கோடி ரூபாய் நிதி பெறப்படும் என, கண்காணிப்பு பொறியாளர் கூறினார்.

                  வெலிங்டன் நீர்த்தேக்கத்தின் மூலம் திட்டக்குடி, விருத்தாசலம் தாலுகாவை சேர்ந்த 24 ஆயிரத்து 59 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று பயனடைந்து வந்தன. இதில் வலுவிழந்த  800 மீட்டர் கரைப்பகுதியை சீரமைக்க 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த ஆண்டு முதல் பணிகள் துவங்கி நடந்து வந்தன.  கூடுதலாக நிதி தேவைப்படுவதால் கடந்த மூன்று வாரங்களாக பணிகள் திடீரென நிறுத்தப்பட்டன. இது குறித்து பாசன சங்க தலைவர்களிடையே அவசர கூட்டம் நடத்தப்பட்டு, பணிகளை விரைவில் துவங்கிட முதல்வரை நேரில் சந்திக்க தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை முதல் மீண்டும் பணிகள் துவங்கியது.

வெள்ளாறு வடிநில கோட்ட கண்காணிப்பு பொறியாளர் நஞ்சன் பணிகளை துவக்கி வைத்து கூறியதாவது: 

                  வெலிங்டன் நீர்த்தேக்க கரை சீரமைப்பு பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்துள்ளன. ஜூன், ஜூலை மாதங்களுக்குள் பணிகளை முடித்திட தீர்மானித்துள்ளோம். கடந்த சில வாரங்களாக மழை, அக்னி வெயில், வாகன பராமரிப்பு, பணியாளர்களின் விடுப்பு காரணமாக பணிகளில் தொய்வு ஏற்பட்டது. பழைய வேகத்திலேயே பணிகள் துவங்கப்பட்டு, விரைவில் முடியும். வரும் பருவமழையில் தண்ணீரை வீணாக்காமல் முழுமையாக சேகரித்து விவசாயத்திற்கு வழங்கப்படும்.  கீழணைக்கு கீழிருந்து கொள்ளிடம் இடதுகரையில் வெள்ள தடுப்புக் கரை அமைத்திட 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு 108 கோடி ரூபாய் ஒதுக்கி அரசாணை அனுமதி பெறப்பட்டுள்ளது. இவ்வாறு நஞ்சன் தெரிவித்தார்.

Read more »

Rubber stamp manufacturers warned

CUDDALORE: 

            Collector P. Seetharaman has warned manufacturers of rubber stamps and seals to be wary of accepting orders, and, instructed the general public to be cautious about deceitful persons vending such articles.

             As the information on circulation of fake seals and stamps has come to light, vigil has been mounted to nab fraudulent persons perpetrating such acts, Mr. Seetharaman said in a statement here on Thursday. The manufacturers of rubber stamps and seals should not accept orders without the written consent of the officials concerned. If they do not adhere to the direction, legal action would be taken against them. Similarly, people should neither approach nor encourage any anti-social elements who were purveying false documents carrying duplicate seals and stamps. Such an act would also attract legal action, Mr. Seetharaman said.

Read more »

காவிரி பாசன வாய்க்கால் தூர் வாரும் பணி: கலெக்டர் நேரில் ஆய்வு

கடலூர் : 

                காவிரி பாசனப்பகுதி வாய்க்கால் தூர்வாரும் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

இது குறித்து செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பாதவது:

                  கடலூர் மாவட்டத்தில் காவிரி பாசனப் பகுதிகளில் அடங்கிய 56 வாய்க்கால்களை தூர்வார 2.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) மூலம் நடைபெற்று வருகிறது. நேற்று வீராணம் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்த பூதங்குடியில் கோதாவரி, மணவாய்க்கால், குணவாசல், எல்லேரி வாய்க்கால் தூர்வாரும் பணிகளை கலெக்டர் சீத்தாராமன் ஆய்வு செய்தார். பின்னர் சிதம்பரத் தில் பல்வேறு பகுதி விவசாயிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

                        அப்போது மாவட்டத்தில் தற் போது 56 வடிகால் மற்றும் வாய்க் கால் தூர்வாரும் பணிகள் 2.50 கோடி ரூபாய் செலவில் நடந்து வருகிறது. 

தூர் வாரும் பணிகள் குறித்து விவசாயிகள் தங்களது ஆலோசனைகள் மற்றும் புகார்களை 

செயற்பொறியாளர் ஒதம்பரம் 944392948, 
உதவி செயற்பொறியாளர் அணைக்கரை 9842258499, 
உதவி செயற்பொறியாளர் சிதம்பரம் 9443650656, 
உதவி செயற்பொறியாளர் லால்பேட்டை 9442312589 

                          எண்களுக்கு தெரிவிக்கலாம். பணிகள் நடைபெறும் இடங்களில் பணியின் தன்மை, நிதி ஒதுக்கீடு, வேலை துவங்கிய நாள், முடிக்க உள்ள நாள் அடங்கிய பலகைகளை வைக்க கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

Read more »

விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க., தெருமுனை பிரசார கூட்டம்

சேத்தியாத்தோப்பு : 

                  விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் சேத்தியாத்தோப்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.

                      நகர அ.தி.மு.க., செயலாளர் இளஞ்செழியன் தலைமை தாங்கினார். முன்னாள் நகர செயலா ளர் நன்மாறன் முன்னிலை வகித்தார். துணை செயலாளர் டாக்டர் முருகன் வரவேற்றார். புவனகிரி தொகுதி இணை செயலாளர் லட்சுமிநாராயணன் துவக்க உரையாற்றினார். தலைமை கழக பேச் சாளர் தில்லை கோபி, மாவட்ட இளைஞரணி செயலாளர் நவநீதகிருஷ் ணன், குணசேகரன், ஒன் றிய செயலாளர் சிவப்பிரகாசம், நகர நிர்வாகிகள் திருநாவுக்கரசு, மணி, ஸ்ரீதர், கதிர்வேல், பழனிவேல், விக்கிரமன், புவனகிரி நகர செயலாளர் செல்வகுமார், கிளை நிர்வாகிகள் குசலவன், ராமகிருஷ்ணன் உட்பட பலர் பேசினர். நகர துணை செயலாளர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.

Read more »

பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் விடுவிப்பு:மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி தொய்வு

கடலூர் : 

                கடலூர் மாவட்டத்தில் கவுன்சிலிங் மூலம் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் பணியில் இருந்து திடீரென விடுவிக்கப்பட்டதால் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியில் தொய்வு ஏற்படும் நிலை உள்ளது.

                          தேசிய மக்கள் தொகை விவர பதிவேடு, வீடுகள் கணக்கெடுக்கும் பணி ஜூன் முதல் தேதி தொடங்கி அடுத்த மாதம் 15ம் தேதி வரை நடக்கிறது. இதற்காக கடலூர் மாவட்டத்தில் 4,029 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு 9 ஆயிரம் ரூபாய் வரை அரசு அலவன்சாக வழங்குவதால், ஆசிரியர்கள் மகிழ்ச்சியுடன் இந்த பணியை தொடர உள்ளனர்.

                  இதற்கிடையே ஏற்கனவே கவுன்சிலிங் மூலம் இடமாற்றம், பதவிஉயர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் அந்த டத்தில் இருந்து உடனடியாக மாற்றப் பட்டு புதிய இடத்தில் பதவியேற்றால் கணக்கெடுப்பு பணி பாதிக்கும் என்பதால் மாவட்டக் கல்வி அலுவலகம், உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் மூலம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அந்த அறிக்கையில் 31.7.2010 அன்று பிற்பகல் பணியிலிருந்து விடுவித்தும், 2.8.2010 அன்று காலை பதவி உயர்வு பணியிடத்தில் பணியில் சேரும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளது. ஆனால் கடலூர் மாவட்டத்தில் அரசு உத்தரவுக்குப் புறம்பாக நேற்று முன்தினம் கவுன்சிலிங் மூலம் பதவி உயர்வு, மாற்றல் உத்தரவு பெற்ற ஆசிரியர்கள் திடீரென விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஆசிரியர்கள் பல மைல் தூரம் சென்று கணக்கெடுப்பு பணி செய்யவிருப்பதால் கணக்கெடுக்கும் பணியில் தொய்வு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

Read more »

கடலூர் மாவட்ட தி.மு.க., சார்பில் முதல்வர் பிறந்த நாள் விழா

கடலூர் : 

                  தமிழக முதல்வரின் 87வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தி.மு.க., சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

நெய்வேலி:

                  நகர தி.மு.க., சார்பில் நகர செயலாளர் புகழேந்தி தலைமையில் கொடியேற் றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து பிளாக்-19ல் உள்ள டேனிஷ்மிஷன் பள்ளி மற்றும் தாய் தொண்டு மையத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு சீருடை மற்றும் உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நகர தலைவர் சிவந்தான்செட்டி, ஆண்டகுருநாதன், தொ.மு.ச. நிர்வாகிகள் வீரராமச்சந்திரன், கோபாலன் பங்கேற்றனர்.

சிதம்பரம்: 

                கோவிலாம்பூண்டியில் நடந்த விழாவிற்கு சபாபதி தலைமை தாங்கினார். லட்சுமிபதி, பத்மநாபன், ராஜா முன் னிலை வகித்தனர். மாவட்ட கவுன்சிலர் நல்லதம்பி கொடியை ஏற்றி வைத்து மாணவர்களுக்கு பேனா, பென்சில், நோட்டு வழங்கினார். நிகழ்ச்சியில் கவுன்சிலர் பாஸ்கர், வெங்கடேசன், பால்ராஜ், புருஷோத்தமன் பங்கேற்றனர். 

கடலூர்: 

                  அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் நடந்த விழாவிற்கு தொ.மு.ச., தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். ஆனந்தன் முன்னிலை வகித்தார். பொதுச் செயலாளர் வீரப்பன் சங்க கொடியினை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். பணிமனை செயலாளர் பார்த்தசாரதி, புண்ணியமூர்த்தி, வெற்றிவேல், செல்வபாண்டு பங்கேற்றனர்.

விருத்தாசலம்: 

                நகர செயலாளர் தண்டபாணி தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி கொடியேற்றினார். அவைத் தலைவர் அபுபக்கர் மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் வழங்கினார். நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் ராமு, அன்பழகன், வாசு சுந்தரேசன், பாலகிருஷ் ணன், கர்ணன் உட்பட பலர் பங் கேற்றனர்.

திட்டக்குடி: 

                    பேரூர் செயலாளர் பரமகுரு தலைமை தாங்கினார். நகர தலைவர் தங்கமணி, பொரு ளாளர் கோவிந்தராஜ்,சுரேஷ், ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பஸ் நிலையத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. சிறுமுளை காலனியில் கிளை செயலாளர் பெருமாள் தலைமையில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.

வடலூர்: 

                வள்ளலார் நிறுவிய சத்திய தருமச் சாலையில் நடந்த சிறப்பு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை ஒன்றிய கல்விக்குழு தலைவர் சிவக்குமார் துவக்கி வைத்தார். அறங்காவலர் குழு தலைவர் ராமலிங்கம், அறங்காவலர்கள் விஜயகுமார், ராமகிருஷ் ணன், கனகலட்சுமி, வேல் ராமலிங்கம், செயல் அலுவலர் நாகராஜன் கலந்துக் கொண்டனர்.

ஸ்ரீமுஷ்ணம்: 

                      நகர தி.மு.க., சார்பில் நடந்த விழாவில் பேரூராட்சி சேர்மன் செல்வி தலைமை தாங்கி கொடியேற்றி மரக்கன் றுகள் நட்டார். பூவராகசாமி, பேரூராட்சி துணை தலைவர் முருகானந்தம், சீனுவாசன், சுப்ரமணியன், அன்பழகன் பங்கேற்றனர்.

Read more »

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்குகளில் சுமை தூக்கும் பணியாளர்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர் : 

              தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்குகளில் சுமை தூக்கும் பணியாளர்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

                  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கடலூர் மண்டலத்தில் இயங்கி வரும் அனைத்து வட்ட செயல் முறைக்கிடங்குகள் மற்றும் நவீன அரிசி ஆலைகளில் போதிய சுமை தூக்கும் தொழிலாளர்கள் இல்லாததால் சுமை தூக்கும் தொழிலாளர்களை தேர்வு செய்ய வேண்டியுள்ளது. எனவே அனுபவமும், தகுந்த உடல் திறனும் உள்ளவர் கள் இந்த பணிக்கு விண் ணப்பிக்கலாம். பொது வினியோக திட்டத்தின் கீழ் நியாயவிலை கடைகளுக்கு உணவுப்பொருட்களை எடையிட்டு லாரிகளில் லோடுகள் ஏற்றவும், கிடங்குகளுக்கு வரும் லோடுகளை கிடங்கில் இறக்கி, அட்டியிடுவது செய்ய வேண்டிய பணிகளாகும்.

                     கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் மற்றும் நவீன அரிசி ஆலைகள் உள்ள நெய்வேலி, சிதம்பரம் பகுதிகளில் பணியாற்ற சுமை தூக்கும் தொழிலாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். தகுதியுள்ளவர்கள் இம்மாதம் 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

இளைஞர் நீதிக்குழுமம் சமூகப்பணி உறுப்பினர்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர் : 

                 இளைஞர் நீதிக்குழுமம் மற்றும் குழந்தைகள் நலக் குழுக்களுக்கு சமூகப்பணி உறுப்பினராக நியமிக்க சமூக பணியாளர் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது:

                     இளைஞர் நீதிக்குழுமம் மற்றும் குழந்தைகள் நலக் குழுக்களுக்கு சமூகப்பணி உறுப்பினராக நியமிக்கப்படுவதற்காக கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைக் கொண்ட தகுதி வாய்ந்த சமூக பணியாளர் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பிரிவிலிருந்து ஒரு பெண் உட்பட உறுப்பினர்கள் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்ப உள்ளனர். குழந்தைகள் தொடர் பாக உடல்நலம், கல்வி அல்லது நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் தீவிர ஈடுபாடு கொண்டவர்களாக இருத்தல் வேண்டும். 35 வயதுக்கு குறையாதவராகவும், 65 வயதுக்குள் இருத்தல் வேண்டும். தற்போது சமூகப் பணி உறுப்பினராக உள்ளவர்களும் 2வது பணிக் காலத் திற்காக விண்ணப்பிக்க தகுதி  உடையவர்களாவர்.

                    அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குற்றவியல், உளவியல், சமூகவியல், சமூகப்பணி, பொருளாதாரம், மனையி யல், கல்வி அரசியல், அறிவியல், பெண்கள் சம்பந்தப்பட்ட பட்டம், ஊரக வளர்ச்சி, சட்டம் (அ) மருத்துவம் ஆகிய பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதற்கான விண்ணப்பப் படிவத்தை இளைய தளத்திலிருந்து பதிவிறக்கும் செய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்கள் 

நன்னடத்தை அலுவலர்,
சமூக பாதுகாப்புத்துறை, 
கடலூர் மாவட்டம், 
அரசினர் கூர்நோக்கு இல்லம், 
கடற்கரை சாலை. 
கடலூர்.
செல்: 9445354760.

இவ்வாறு கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

கரும்பு விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம்

சேத்தியாத்தோப்பு : 

               சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையின் சோழத்தரம் கரும்பு கோட்ட அலுவலகம் சார்பில் பு.குடிகாடு கிராமத்தில் கரும்பு விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கரும்பு அலுவலர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். கோட்ட கரும்பு அலுவலர் ராஜதுரை வரவேற்றார். புதிய ரகங்கள் பயிரிடுதல் 5 அடி பார் முறையில் அதிக பரப்பளவில் கரும்பு பயிரிடுதல், சொட்டு நீர் பாசனம், அரசின் மானிய உதவிகள் குறித்து கூட்டத்தில் கலந்தாய்வு செய்யப்பட்டது. கூட்டத்தில் கேப்டன் விவசாயிகள் சங்க செயலாளர் ராமையன், செல்வமணி, சுந்தரமூர்த்தி, கரும்பு உதவியாளர்கள் ராஜாராமன், ராமலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.சிவக்குமார் நன்றி கூறினார்.

Read more »

சிதம்பரம் பள்ளி மாணவர்களுக்கு சமச்சீர் கல்வி புத்தகம் வினியோகம்


சிதம்பரம் : 

                தமிழக அரசு இந்த கல்வியாண்டு அறிமுகப்படுத்தியுள்ள சமச்சீர் கல்வித் திட்ட புத்தகம் சிதம்பரத்தில் பள்ளி திறந்த முதல் நாளே மாணவர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. இந்த கல்வி ஆண்டு முதல் 1ம் வகுப்பு மற்றும் 6ம் வகுப்புக்கு சமச்சீர் கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான பாடநூல்கள் மாவட்ட தலைநகரங்களில் பள்ளிக்கு வழங்கப்பட்டது.

                        பள்ளி தலைமை ஆசிரியர்கள் அதனை பெற்று வந்து பள்ளி திறந்த முதல் நாளில் அரசு பள்ளிகளில் வழங்கப்பட்டது. சிதம்பரம் நகரிலும் நேற்று புத்தகங்கள் மாணவர்களுக்கு விநியோகம் செய்யப் பட்டது. சமச்சீர் கல்வி திட்ட 6ம் வகுப்பு தமிழ்ப் பாடப்புத்தகம் 9 இயல்களாகப் பிரிக்கப் பட்டு ஒவ்வொரு இயல்களிலும் செய்யுள், உரைநடை, துணைப் பாடம் மற்றும் இலக்கணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உரை நடையில் தமிழ்த் தாத்தா என்றழைக்கப்படும் உ.வே.சா., ஓலைச்சுவடியில் இருந்து பதிப்பித்த விதம் மாணவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் பாடம் அமைக்கப்பட்டுள்ளது.

Read more »

விருத்தாசலம் அரசு பள்ளிக்கு 2 தலைமை ஆசிரியர்கள் இடமாறுதல் உத்தரவு குழப்பம் குறித்து விசாரணை

விருத்தாசலம் : 

                  விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் யார் தலைமை ஆசிரியர் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 

                   கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பிரகாசம். இவர், கடந்த 2007ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி முதல், தலைமை ஆசிரியராக பணிபுரிகிறார். இதே பள்ளியில் 26 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றியவர் முருகேசன், இரண்டு ஆண்டுக்கு முன், உதவி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றார். 10 மாதங்களுக்கு முன், தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று, திருவெண்ணைநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு மாறுதலாகி சென்றார்.

                      இந்நிலையில், பள்ளிக் கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து, விருத்தாசலம் பள்ளியில் பணிபுரிய தனக்கு மனமொத்த மாறுதலுக்கான ஆணை வந்திருப்பதாகக் கூறி, நேற்று காலை 10 மணிக்கு, பதிவேட்டில் கையெ ழுத்திட, முருகேசன் வந்தார். அப்போது, "இடமாறுதல் குறித்து எனக்கு எந்த தகவலும் வரவில்லை' எனக் கூறிய தலைமை ஆசிரியர் பிரகாசம், வருகை பதிவேட்டை எடுத்து பூட்டி வைத்துவிட்டார். இதனால், பள்ளிக்கு யார் தலைமை ஆசிரியர் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

 இது குறித்து முருகேசன் கூறியதாவது:

                       மனமொத்த இடமாறுலில் செல்வதற்கு இருவரும் சம்மதம் தெரிவித்து கையெழுத்திட்டோம். அதன்படி எனக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து இட மாறுதலுக்கான உத்தரவு வந்துள்ளது. காலையில் நேரம் சரியில்லை என்பதால், பகல் 1.30 மணிக்கு மேல் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு பணியில் அமர்வேன்.இவ்வாறு முருகேசன் கூறினார்.

தலைமை ஆசிரியர் பிரகாசம் கூறுகையில், 

           "மனமொத்த மாறுதலுக்கு நான் விண்ணப்பிக்கவில்லை. அதற்காக எந்த கையெழுத்தும் போடவில்லை. அப்படியே போட்டிருந்தால் அதை, முருகேசன் என்னை ஏமாற்றி வாங்கியிருக்கலாம். மேலும், இடமாறுதலுக்கான உத்தரவு இதுவரை எனக்கு வரவில்லை' என்றார். 

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அமுதவல்லி கூறுகையில், 

                   "மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி நடப்பதால், எந்த ஆசிரியருக்கும் பணி இடமாறுதல் வழங்கக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், தலைமை ஆசிரியர் பிரகாசம் மனமொத்த இட மாறுதலுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு விண்ணப்பிக்கவில்லை. இப்பிரச்னை குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

Read more »

கடலூர் ஒன்றிய அலுவலகத்தில் டெண்டர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தகராறு

கடலூர் : 

                   கடலூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் சேர்மனின் கணவருக்கும் தகராறு ஏற்பட்டது. கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் இயங்கி வந்த 150 ஆண்டுகால பழமை வாய்ந்த கட்டடம் கடந்த டிசம்பர் மாதம் இடிந்து விழுந்தது.புதிய அலுவலகம் கட் டுவதற்காக, பழைய கட்டடத்தை இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அதிலி ருந்த 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள தேக்கு மரத் தூண்கள், இரும்பு கம்பிகளை ஏலம் விட டெண்டர் நேற்று பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது.

                நேர்முக உதவியாளர் தர்மசிவம் (வளர்ச்சி) தலைமை தாங்கினார். பி.டி.ஓ., பத்மநாபன் முன்னிலை வகித்தார். டெண்டர் போடுவதில் ஒன்றிய சேர்மன் ஆதரவாளர்களுக்கும், தி.மு.க., வினருக்கும் பிரச்னை ஏற்பட்டது. அதற்குள் பிற்பகல் 3 மணியானதால் டெண்டர் பெட்டியை பி.டி.ஓ., அறைக்கு எடுத்து செல்லப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஒன்றிய சேர்மனின் கணவர் தனது ஆதரவாளர்களுடன் சென்று பி.டி.ஓ., விடம் வாக்குவாதம் செய் ததால் பரபரப்பு ஏற்பட்ட தால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.


Read more »

விருத்தாசலத்தில் அரசு பஸ்சிற்கு கண்டக்டர் வராததால் பஸ் நிலையத்தில் பயணிகள் தவிப்பு

விருத்தாலசம் : 

                 விருத்தாசலத்தில் அரசு பஸ் கண்டக்டர் பணிக்கு வராததால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.விருத்தாசலத்திலிருந்து எம்.பரூர் செல்லும் அரசு பஸ் தடம் எண் 23 (டி.என் 32 என் 1428) நேற்று காலை பஸ் நிலையத்திற்கு டிரைவர் ஓட்டி வந்து நிறுத்தினார். பயணிகள் பஸ்சில் ஏறி அமர்ந்தனர். நீண்ட நேரமாகியும் கண்டக்டர் வராததால் 11.30 மணிக்கு எடுக்க வேண்டிய பஸ் 12.30 மணி வரை எடுக்கவில்லை. இந்நிலையில் 12.30 மணிக்கு எடுக்க வேண்டிய அடுத்த பஸ் தடம் எண்-2 (டி.என் 32 என் 2071) பஸ் நிலையத்திற்கு வந்தது.

                முன் பஸ்சில் இருந்த பயணிகள் அடுத்த பஸ்சில் ஏறி அமர்ந்தனர். இந்த பஸ்சிற்கும் கண்டக்டர் வராததால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர். இது குறித்து பஸ் நிலையத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக நேரக் காப்பக அலுவலகத்தில் இருந்தவர்களிடம் கேட்டதற்கு, விருத்தாசலம் பணிமனையில் பணிபுரியும் இரண்டு கண்டக்டர்களுக்கு இன்று (நேற்று) திருமணம் நடந்தது. இதனால் அனைவரும் கல்யாணத்திற்கு சென்றதால் கண்டக்டர் பற்றாக் குறை ஏற்பட்டுள் ளதாக கூறினார். அதன்பிறகு வேறு பஸ்சில் பணி செய்ய வந்த கண்டக்டரை மாற்றி, ஒரு மணிக்கு எம்.பரூர் பஸ் இயக்கப்பட்டது.

Read more »

அறிவிக்கப்படாத மின் வெட்டால் மக்கள் அவதி

கடலூர் : 

                கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக எந்தவித முன்னறிவிப்பின்றி பல மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்படுவதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மிழகத்தில் காற் றாலை, அனல், நீர் மின்நிலையங்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. கோடையில் நீர்தேக்கத்தில் தண்ணீர் வற்றிவிட்டதால் நீர் மின் உற்பத்தி குறைந்தது. இதனை ஈடு செய்வதற்காக தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக மின் வெட்டு அமல் படுத்தப்பட்டது. ஏற்கனவே 2 மணி நேரமாக இருந்த மின்வெட்டு பின்னர் 3 மணி நேரமாக உயர்த் தப்பட்டது. "லைலா' புயலுக்குப் பின் காற்றாலை மூலம் எதிர்பார்த்த அளவுக்கு மின்சாரம் கிடைத்ததால் ஒரு வாரம் தடையில்லா மின்சாரம் வழங்கப் பட் டது.

                   இதைக்கண்ட பொதுமக்கள் நம்ப முடியாமல் இந்த மின்வெட்டை வேறு நேரத்தில் பிடித்தம் செய் வார்கள் என அஞ்சினர். இந்நிலையில் மின் வாரியம் திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், தற்போது காற் றாலை மின்சாரம் கைகொடுத்து வருவதால் கடலூர் மாவட்ட மக்களுக்கு 3 மணி நேரமாக இருந்த மின் தடை 2 மணி நேரமாக குறைக்கப்பட்டுவிட்டது என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனால் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதனால்தான் என்னவோ, இந்த அறிவிப்பை வெளியிட்ட நாள் முதல் மீண்டும் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது. நள்ளிரவு, பகல் என எந்த நேரமும் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. மாவட்டத்தில் பல பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மின்சாரம் எப்போது வரும் எப்போது போகும் என கூறமுடியவில்லை. நள்ளிரவு நேரத்தில் மின்சாரம் தடைபடுவதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

 மின்வெட்டுக்கு காரணம் என்ன? 

இந்த மின்வெட்டு குறித்து மின்வாரிய கண் காணிப்பு பொறியாளர் ரவிராம் கூறியதாவது:

                       காற்றாலை மூலம் நமக்கு போதுமான அளவு மின்சாரம் கிடைத்ததால் மின்வெட்டு நேரத்தை குறைத்தோம். தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவ காற்றில் மழை தொடங்கியுள்ளதால் காற் றாலை மூலம் கிடைக்கும் மின்சாரம் திடீரென குறைந்தது. அதனால் வேறு வழியின்றி மின் தடை ஏற்படுகிறது என்றார்.

Read more »

மங்கலம்பேட்டையில் அடிக்கடி மின் வெட்டு ஆவேசத்தில் பொதுமக்கள் சாலை மறியல்

விருத்தாசலம் : 

                 அடிக்கடி ஏற்படும் மின் வெட்டை கண்டித்து பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டையில் தினமும் காலை 6 மணி முதல் 8 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. அறிவிப்பின்றி இரவு நேரங்களிலும் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை 6 மணிக்கு வழக்கம் போல் மின் நிறுத்தம் செய்யப்பட்டது. பின்னர் பகல் 1 மணிக்கு முன்னறிவிப்பின்றி மின் நிறுத்தம் செய்யப்பட்டது.

                  ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 200 பேர் விருத்தாசலம்-உளுந்தூர் பேட்டை சாலையில் மங்கலம்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட்டனர். 2 மணி நேரம் கழித்து கண்டியாங்குப்பம் உதவி மின் பொறியாளர் இளங்கோவன், மண்டல துணை தாசில்தார் மெகருன்னிசா மற்றும் மங்கலம்பேட்டை போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம், தினசரி 3 மணி நேரம் மின் நிறுத்தம் செய்யப்படும். பிற நேரங்களில் தடையின்றி மின்சாரம் வழங்குவதாக உறுதியளித்தனர். அதனையேற்று மறியல் கைவிடப்பட்டது.

Read more »

ஆசிரியர் பயிற்சி தேர்வு காப்பியடித்த 11 பேர் சிக்கினர்

விருத்தாசலம் : 

                  ஆசிரியர் பயிற்சி பள்ளி தேர்வில் காப்பியடித்த 11 பேர் சிக்கினர். ஆசிரியர் பயிற்சி பள்ளி தேர்வு கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது. நேற்று கற்றலை மேம்படுத்துதல், எளிமை படுத்துதல் தேர்வு நடந்தது. விருத்தாசலத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் டேனிஷ் மிஷன் பள்ளி தேர்வு மையங்களை சி.இ.ஓ., அமுதவல்லி நேற்று ஆய்வு செய்தார். டேனிஷ் மிஷன் பள்ளி தேர்வு மையத்தில் காப்பியடித்த தலா நான்கு மாணவ, மாணவிகளும், பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 3 பேரையும் பிடித்து தேர்வறையிலிருந்து வெளியேற்றினார்.
 

Read more »

பிச்சாவரம் காட்டில் தீ விபத்து:தொழிலாளிக்கு 3 மாதம் சிறை

கிள்ளை : 

                    பிச்சாவரம் காட்டில் தீ பிடித்து எரிய காரணமாக இருந்த தொழிலாளிக்கு மூன்று மாதம் சிறை தண்டனை விதித்து சிதம்பரம் கோர்ட் நீதிபதி உத்தரவிட்டார். கடலூர் மாவட்டம், சிதம்பரத்தை அடுத்த பிச்சாவரம் வனச்சுற்றுலா மையத்தில் அரிய வகை மூலிகை தாவரங்கள் மற்றும் மாங்குரோவ் காடுகள் உள்ளன. இச்சுற்றுலா மையத்தில் கடந்த ஜூலை 4ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அதில் ஒரு ஏக்கர் பரப்பளவில் இருந்த ஆவாரம்பூ, நரிப்பூண்டுகள் எரிந்து சேதமடைந்தன.

                      மாவட்ட வன அலுவலர் துரைசாமி தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு தீ விபத்திற்கான காரணம் குறித்து ஆய்வு செய்ததில், நண்டு மற்றும் மீன் சுட்டதால் தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து, எளிதில் தீப் பிடிக்கும் பொருட்களை எடுத்துச் செல்ல தடைவிதிக்கப் பட்ட பகுதியில் தீ மூட்டி மீன் மற்றும் நண்டுகளை சுட்ட கிள்ளையைச் சேர்ந்த தொழிலாளி சாமி என்கிற கலியமூர்த்தியை கைது செய்து சிதம்பரம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, சுற்றுலா மையத்தில் தீ விபத்து ஏற்படுத்திய சாமி என்கிற கலியமூர்த்திக்கு மூன்று மாதம் சிறை தண்டனை மற்றும் 300 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior