உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், நவம்பர் 24, 2009

பள்ளி வேன் கவிழ்ந்து சிறுவன் சாவு

கடலூர், நவ. 23:

பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற வேன் விபத்துக்கு உள்ளானதில் ஒரு குழந்தை இறந்தது. 47 குழந்தைகள் காயம் அடைந்தன. திங்கள்கிழமை காலை இந்த விபத்து நிகழ்ந்தது. கடலூரை அடுத்த ஆலப்பாக்கம் அருகே கடலூர்- சிதம்பரம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் பெரியப்பட்டு கிராமத்தில் தனியார் மெட்ரிக் பள்ளி உள்ளது. 8-ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளிக்கு, ஆலப்பாக்கம் பகுதியில் இருந்து, மாணவ மாணவியரை ஏற்றிக் கொண்டு வேன் சென்று கொண்டு இருந்தது. டிரைவர் விமல்ராஜ் (25) வேனை ஓட்டினார். பெரியப்பட்டு அருகே வேன் முன்பக்க அச்சு முறிந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. பள்ளத்தில் 2 அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கி இருந்தது. இந்த விபத்தில் பள்ளிக் குழந்தைகள் 48 பேர் மற்றும் ஆசிரியை ஒருவர், வேன் டிரைவர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி எல்.கே.ஜி. மாணவன் ராமு (4) இறந்தார். அவர் ஆலப்பாக்கம் ராஜ்மோகன் என்பவரின் மகன். காயம் அடைந்த ஆசிரியை ராஜதிலகம் (35), நிவேதா (4), அறிவழகன் (4), தீனா (6), விக்ரமன் (4), திலீப் (5), ராஜ் (5), சிந்துஜா (6), கார்த்திகா (5) உள்ளிட்ட 47 மாணவ மாணவியர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இவர்களில் ஆசிரியை ராஜதிலகம், ஓட்டுநர் விமல்ராஜ் மற்றும் 34 மாணவ, மாணவிகள் உள் நோயாளிகளாகச் சிகிச்சை பெற்று வருகிறார்கள். புதுச்சத்திரம் போலீஸôர் விசாரணை நடத்தினர். தகவல் அறிந்ததும் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ், மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன், மருத்துவத்துறை இணை இயக்குநர் டாக்டர் ஜெயவீரகுமார் ஆகியோர் கடலூர் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று, குழந்தைகளுக்கு துரிதமாக முறையான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தில்லியில் இருக்கும் கடலூர் மக்களவை உறுப்பினர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் மாவட்ட ஆட்சியருடன் தொடர்பு கொண்டு, குழந்தைகளின் உடல் நலம் விசாரித்ததுடன் முறையான சிகிச்சை அளிக்கக் கேட்டுக் கொண்டனர்.

Read more »

25 பேர் பயணிக்கும் வாகனத்தில் 48 பேர்

கடலூர் அருகே திங்கள்கிழமை பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற வேன், 25 பேர் பணிக்கும் வசதி கொண்டதாக இருந்தும் 48 மாணவ மாணவியரை ஏற்றிச் சென்றது தெரிய வந்துள்ளது. விபத்து நிகழ்ந்த சற்று நேரத்துக்கெல்லாம், கடலூர் நகராட்சி துணைத் தலைவர் தாமரைச் செல்வன் தனது விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்களுடன் அந்த வழியாக வந்தார். விபத்து பற்றி அவர் கூறியது: விபத்து நடந்த சிறிது நேரத்தில் அந்த வழியாக நாங்கள் வந்துகொண்டு இருந்தோம். வேனுக்கு அடியில் யாரும் சிக்கியிருக்கக் கூடும் என்ற எண்ணத்தில், சேற்றில் கிடந்த வேனை புரட்டிப் பார்த்தோம். உள்ளே யாரும் இல்லை. ஆனால் 25 பேர் பயணிக்கும் வசதி கொண்ட அந்த வேனில் 48 பேர் ஏற்றப்பட்டு இருந்தது மிகவும் கொடுமையானது. மேலும் அந்த வேன் மிகமிகப் பழையது. நன்றாக பெயிண்ட் அடித்து வைத்து இருந்தனர். இத்தகைய வாகனங்ளை எல்லாம் மாணவர்களை ஏற்றிச் செல்ல அனுமதிக்கக் கூடாது. பள்ளிப் பணிக்கு பயன்படுத்தும் வாகனங்களை எல்லாம் வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகளும், போலீஸôரும் சோதனை செய்ய வேண்டும். பயணிகளை ஏற்றத் தகுதி இல்லாத வாகனங்களை இயக்க அனுமதிக்கக் கூடாது. இதில் கடுமையா இருக்க வேண்டும் என்றார் தாமரைச் செல்வன். இதுகுறித்து தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் ச.அப்துல்மஜீது கூறுகையில், மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்து இருக்கும் சட்டத்தில் சிறப்பு அம்சம், அண்மைப் பள்ளி திட்டம் ஆகும். அந்தந்த பகுதி மாணவர்கள் அந்த்தந்த பகுதி பள்ளிகளிலேயே படிக்க வேண்டும். காமராஜர் ஆட்சிக் காலத்தில் இந்த நடைமுறை இருந்தது. இச்சட்டத்தை தமிழக அரசு உடனே அமல்படுத்த வேண்டும். இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி, ஆசிரியர்கள் கடலூர் மாவட்ட உதவிக் கல்வி அலுவலகங்கள் முன் 18-ம் தேதி மக்கள் சந்திப்பு இயக்கம் மற்றும் மறியல் போராட்டம் நடத்தவர் என்றார் மஜீது.

Read more »

பள்ளி வாகனங்களை தணிக்கை செய்ய தனிக்குழு: ஆட்சியர்

கடலூர், நவ. 23:

கடலூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களைத் தணிக்கை செய்து அறிக்கை அனுப்ப, தனிக்குழு அமைக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் திங்கள்கிழமை அறிவித்தார். ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பள்ளி கல்லூரி வாகனங்களில் அனுமதிக்கப் பட்ட இருக்கைகளுக்கு அதிகமாக பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லக் கூடாது. வாகனங்களில் முன்புறமும் பின்புறமும் பள்ளி வாகனம், கல்லூரி வாகனம் என்று தெளிவாக எழுதப்பட வேண்டும். வாகனங்களின் இருபுறமும் பள்ளி, கல்லூரி பெயர் முழு முகவரி, தொலைபேசி எண்கள் தெளிவாக எழுதப்பட வேண்டும். அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட கூடுதல் வேகத்தில் இயக்கக் கூடாது. பள்ளி கல்லூரி வாகனங்களை ஓட்டுபவர்கள் 10 ஆண்டுக்குக் குறையாத அனுபவம் மிக்கவர்களாக, போக்குவரத்துத் தொடர்பான வழக்குகளில் சம்பந்தப்படாதவராக இருக்க வேண்டும். வாகனங்களின் ஜன்னல்களில் இரும்பு குறுக்குக் கம்பி பொருத்தப்பட்டு இருக்க வேணடும். முதல் உதவிப்பெட்டி கட்டாயம் இருக்க வேண்டும். தாழ்பாள்கள் தரமானதாக இருக்க வேண்டும். குழந்தைகள் ஏறிய பின், தாழ்பாள்கள் சரியா மூடப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். தீயணைப்புக் கருவிகள் பொருத்தி இருக்க வேண்டும். மேற்கண்ட அறிவுரைகள் உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற வழிகாட்டுதல்படி, கட்டாயம் பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் பின்பற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். அனுமதி மற்றும் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும். மேலும் இதுதொடர்பாக ஒவ்வொரு வட்டத்திலும் வட்டாட்சியர் தலைமையில் காவல்துறை மற்றும் போக்குவரத்துத் துறை அலுவலர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, பள்ளி கல்லூரி வாரியாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஆணையிடப்பட்டு இருக்கிறது என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

பள்ளிப் பயன்பாட்டில் தரமற்ற வாகனங்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கடலூர், நவ. 23:

பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் தரமற்றதாக இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடலூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புப் பேரவை கோரிக்கை விடுத்து உள்ளது.

பேரவையின் மாவட்ட பொதுச் செயலாளர் எம்.நிஜாமுதீன் திங்கள்கிழமை தமிழ முதல்வர், கல்வித்துறை அமைச்சர் மற்றும் அலுவலர்களுக்கு அனுப்பிய கோரிக்கை மனு: பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் பஸ்கள், வேன்கள், ஆட்டோக்கள், தரமற்றவைகளாக உள்ளன. பள்ளிப் பணிக்குச் செல்லும் வாகனங்களை ஓட்டுவோர் குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று போக்குவரத்து விதிகளில் உள்ளது. ஆனால், அனுபவம் இல்லாத ஓட்டுநர்கள்தான் அதிக அளவில் வாகனங்களை இயக்குகிறார்கள். விதிகளின்படி மஞ்சள் வண்ணம் பூசாமலும், மாநிலம் விட்டு மாநிலம், மாவட்டம் விட்டு மாவட்டம் பள்ளி வாகனங்கள் இயக்கப்படுகின்றன. அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலாக ஏற்றுகிறார்கள். போக்குவரத்துத் துறையும், காவல் துறையும் இதைக் கண்டு கொள்வதில்லை. பெயருக்கு சில வழக்குகளைப் போட்டுவிட்டு தங்கள் கடமை முடிந்ததாக நினைக்கிறார்கள். மேலை நாடுகளில் மாணவர்கள் தங்களது பெற்றோர் வசிக்கும் பகுதியில் உள்ள பள்ளிகளிலேயே பயில வேண்டும் என்று சட்டம் உள்ளது. இதனால் விபத்துகள் தவிர்க்கப் படுகின்றன. குழந்தைகளின் பயண நேரம் குறைகிறது. அவர்களுக்குள் சண்டை குறைகிறது. கல்வி நிறுவனங்களிடையே போட்டா போட்டியும் குறைகிறது. இந்தியாவிலும் அண்மைப் பள்ளிகள் திட்டத்தை சட்டமாக மத்திய அரசு இயற்றி இருக்கிறது. தமிழகத்தில் இச்சட்டத்தை அமுல்படுத்த வேண்டும். அருகாமையில் உள்ள பள்ளிகளில் மட்டுமே குழந்தைகளைச் சேர்க்க வேணடும். இதனால் அந்தந்த பகுதிகளில் தரமான பள்ளிகள் உருவாகும் பல குழந்தைகளின் உயிரை எதிர்காலத்தில் காப்பாற்ற முடியும் என்றார் நிஜாமுதீன்.

Read more »

கடலூரில் டெங்குக் காய்ச்சல் அபாயம் மழை நீரை வெளியேற்றக் கோரிக்கை

கடலூர், நவ. 23:

கடலூர் நகரில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி இருப்பதால், டெங்குக் காய்ச்சல் அபாயம் உள்ளது. எனவே தேங்கி நிற்கும் மழைநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடலூர் நகர அனைத்து குடியிருப்போர் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மு.மருதவாணன் மாவட்ட ஆட்சியருக்கு சனிக்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு: கன மழையால் கடலூர் மற்றும் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகள் சின்னாபின்னமாகி மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப் போயிருக்கிறது. மாவட்ட நிர்வாகமும் நகராட்சியும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, கடலூர் மக்களைக் காப்பாற்ற வேண்டும். நகராட்சிப் பகுதிகளில் மழைநீர் தேங்கி வெளியேற வழியில்லாமல், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. போக்குவரத்தும் முடங்கிக் கிடக்கிறது. மோட்டார் பம்புகள் மூலம் உடனடியாகத் தண்ணீரை வெளியேற்ற வேண்டும். மழைநீர் தேங்கி நிற்பதால், கொசுக்கள் பெருமளவுக்கு உற்பத்தியாகி மலேரியா, டெங்குக் காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. உடனடியாக நகரப் பகுதிகளை 25 கோட்டங்களாகப் பிரித்து, கொசு ஒழிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பொதுநல அமைப்புகள் பலமுறை முறையிட்டும், நகரின் பிரதான சாலைகள் சரிசெய்யப்படாததால் தொடர்ந்து சேறும் சகதியுமாக்க காட்சி அளிக்கிறது. மாணவ மாணவிகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, எப்போது என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் பெற்றோர் உள்ளனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சாலைகளை சீரமைக்கவும், கொசக்களைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டு உள்ளது.

Read more »

பட்டா வழங்கக் கோரிக்கை

கடலூர், நவ. 23:

காட்டுமன்னார்கோவில் வட்டம் கள்ளிப்பாடி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டும் வழங்காமல் இருக்கும் வீட்டுமனைப் பட்டாக்களை விரைந்து வழங்க வேண்டும் என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

மேலக்கள்ளிப்பாடி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த 100 குடும்பங்கள் உள்ளன. இவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க 1994-ம் ஆண்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு இருக்கிறார். நிலமும் குறிப்பிடப்பட்டது. ஆனால் பட்டா வழங்கப்படவில்லை. 15 ஆண்டுகளாக செல்படுத்தப்படாமல் இருக்கும் ஆட்சியரின் உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என்று கடலூர் மாவட்டச் செயலாளர் சு.திருமாறன் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை அளித்த மனுவில் கோரப்பட்டு உள்ளது.

Read more »

இட​ஒ​துக்​கீடு:​ மத்​திய அர​சுக்கு ​மக​ளிர் மாநாடு கண்​ட​னம்

கட ​லூர்,​ நவ.23:​

சட்​டப்​பே​ரவை,​ மக்​க​ள​வை​யில் பெண்​க​ளுக்கு 33 சதவீத இட​ஒ​துக்​கீடு மசோ​தாவை நிறை​வேற்​றாத மத்​திய அர​சுக்கு ​ மக​ளிர் காப்​பீட்​டு​க​ழக ஊழி​யர் சங்க வேலூர் கோட்ட உழைக்​கும் மக​ளிர் மாநாடு கண்​ட​னம் தெரி​வித்​துள்​ளது. ​​ காப்​பீட்​டுக் கழக 14-வது உழைக்​கும் மக​ளிர் மாநாடு கட​லூ​ரில் சனிக்​கி​ழமை நடந்​தது. மாநாட்​டில் நிறை​வேற்​றப்​பட்ட தீர்​மா​னங்​கள்:​​ ஐக்​கிய முற்​போக்​குக் கூட்​டணி அரசு ஆட்​சிக்கு வந்து 100 நாள்​க​ளில்,​ மக​ளிர் இட​ஒ​துக்​கீட்டு மசோ​தாவை நிறை​வேற்​று​வோம் என்று தெரி​வித்​தது. ஆனால் இந்த மசோதா குறித்து தற்​போது வாய் திறப்​பதோ இல்லை. மத்​திய அர​சின் அலட்​சி​யப் போக்கை மாநாடு கண்​டிக்​கி​றது. ​ இந்த மசோ​தாவை நிறை​வேற்ற அனைத்து அர​சி​யல் கட்​சி​க​ளும் ஆத​ர​வ​ளிக்க வேண்​டும். ​​ ​ ஊரக வேலை உறுதி சட்​டத்​தில் பெண்​க​ளுக்கு ஊதி​யம் முழு​மை​யாக வழங்​கப்​பட வேண்​டும்,​ பேறு​கால விடுப்​பில் தேவைக்கு ஏற்ற மாற்​றங்​க​ளைக் கொண்​டு​வர வேண்​டும். அனைத்து எல்.ஐ.சி. அலு​வ​ல​கங்​க​ளி​லும் குழந்​தை​கள் காப்​பக வசதி வேண்​டும். பெண்​க​ளுக்கு ஒழுங்​கான ஓய்​வ​றை​கள் ஒதுக்​கப்​பட வேண்​டும் உள்​ளிட்ட ​ தீர்​மா​னங்​கள் நிறை​வேற்​றப் பட்​டன. ​​ மாநாட்​டுக்கு விழுப்​பு​ரம் மாவட்ட இணை அமைப்​பா​ளர் காமாட்சி தலைமை தாங்​கி​னார். கட​லூர் மாவட்ட இணை அமைப்​பா​ளர் எஸ்.ஜெயஸ்ரீ வர​வேற்​றார். தமிழ்​நாடு முற்​போக்கு எழுத்​தா​ளர் சங்​கப் பொதுச் செய​லா​ளர் தமிழ்ச்​செ​ல​வன் தொடக்க உரை நிகழ்த்​தி​னார். அனைத்​திந்​திய ஜன​நா​யக மாதர் சங்க மாவட்​டச் செய​லா​ளர் வாலன்​டீனா,​ காப்​பீட்​டுக் கழக ஊழி​யர் சங்க வேலூர் கோட்​டத் தலை​வர் தச​ர​தன் ஆகி​யோர் வாழ்த்​திப் பேசி​னர். மக​ளிர் துணைக்​குழு கோட்ட அமைப்​பா​ளர் ஃபி​ளா​ரன்ஸ் லிடியா அறிக்கை சமர்ப்​பித்​தார். கோட்​டப் பொதுச் செய​லா​ளர் ராமன் தொகுப்​புரை வழங்​கி​னார். புதுவை இணை அமைப்​பா​ளர் தில​கம் நன்றி கூறி​னார். ​

Read more »

எனது பேச்சைக் கேட்​டால் தமி​ழ​கத்​தில் நல்​லாட்சி

சிதம் ​ப​ரம்,​ நவ. 23:​

தேர்​தல் நேரத்​தில் எனது பேச்சை கேட்டு வாக்​க​ளித்​தால் தமி​ழ​கத்​தில் நல்​லாட்சி நடத்த முடி​யும். அனை​வ​ருக்​கும் சமூ​க​நீதி கிடைக்​கும். அனைத்து சாதி​யி​ன​ரும் நன்​றாக வாழ்​வார்​கள் என பாட்​டாளி மக்​கள் கட்சி நிறு​வ​னர் ச.ராம​தாஸ் தெரி​வித்​தார்.​ ​ சிதம்​ப​ரத்​தில் ஞாயிற்​றுக்​கி​ழமை நடை​பெற்ற சமூக முன்​னேற்ற சங்​கக் கூட்​டத்​தில் பங்​கேற்று அவர் பேசி​யது:​ விவ​சா​யத்தை மட்​டுமே நம்பி பயன் இல்லை. விவ​சா​யம் பொய்த்​து​விட்​டது. எனவே வன்​னிய சமு​தாய மக்​கள் கல்வி பயில வேண்​டும். இட​ஒ​துக்​கீட்​டுக்​காக பல்​வேறு போராட்​டங்​கள் நடத்​திய பிற​கு​தான் வன்​னி​யர்​க​ளுக்கு இவ்​வ​ளவு இட​ஒ​துக்​கீ​டா​வது கிடைத்​தது. இட​ஒ​துக்​கீடு என்​பது திரை​ய​ரங்​கிலோ,​ திரு​மண வீட்​டில் உண​விற்கோ இடம் பிடிப்​பது அல்ல. கல்வி,​ வேலை​வாய்ப்​பில் உரிய ஒதுக்​கீடு தேவை.​ ​ ஆனால் இது​வரை வன்​னி​யர் சமு​தா​யத்​துக்கு உரிய இட​ஒ​துக்​கீடு கிடைக்​க​வில்லை. அதற்​காக நாம் இன்​றும் ஆட்​சி​யா​ளர்​க​ளி​டையே கையேந்தி வரு​கி​றோம். கடந்த நாடா​ளு​மன்ற தேர்த​லில் பெரும்​பா​லான பெண்​கள் தங்​கள் வாக்​கு​களை விலைக்கு கொடுத்​து​விட்​ட​னர். அனைத்து சாதி​யி​ன​ரும் ஒன்று சேர்ந்து தோற்​க​டித்​து​விட்​ட​னர்.

வன்​னி​யர்​கள் 120 தொகு​தி​க​ளில் உள்​ள​னர். அவர்​கள் அனை​வ​ரும் ஒற்​று​மை​யாக வாக்​க​ளித்​தால் 234 தொகு​தி​க​ளில் 120 தொகு​தி​க​ளில் வெற்​றி​பெ​ற​லாம். வன்​னி​யர்​க​ளுக்கு 20 சத​வீதி இட​ஒ​துக்​கீடு வழங்​கக்​கோரி விரை​வில் மிகப்​பெ​ரிய போராட்​டம் நடத்​தப்​ப​டும் என ச.ராம​தாஸ் தெரி​வித்​தார்.​

Read more »

என்எல்சி பள்ளியில் இளம் பரு​வத்​தி​ன​ருக்​கான கருத்​த​ரங்​கம்

நெய்வேலி, நவ. 23:

நெய்வேலி வட்​டம் 11-ல் உள்ள என்​எல்சி பெண்​கள் மேல்​நி​லைப் பள்​ளி​யில் வளர் இளம் பரு​வத்​தி​ன​ருக்​கான கருத்​த​ரங்​கம் சனிக்​கி​ழமை நடை​பெற்​றது.​ ​ நெய்வேலி ரோட்​டரி சங்​கம் சார்​பில் நடை​பெற்ற கருத்​த​ரங்​குக்கு ரோட்​டரி சங்​கத் தலை​வர் பாபுஜி தலைமை வகித்​தார். பள்​ளித் தலை​மை​யா​சி​ரியை ஆர்.எஸ்.மணி​மொழி வர​வேற்​றார்.​ ​

நெய்வேலி குழந்​தை​கள் நல மருத்​து​வர்​கள் செந்​தில் மற்​றும் ஜெய​மோ​கன்​தாஸ் ஆகி​யோர் இளம் பெண்​க​ளுக்கு பருவ வய​தில் ஏற்​ப​டும் பிரச்​னை​கள் குறித்​தும்,​ அவற்றை எவ்​வாறு கையாள வேண்​டும் என்​பது குறித்​தும்,​ பெற்​றோர்​க​ளி​டம் எவ்​வாறு நடந்​து​கொள்ள வேண்​டும் என்​பது குறித்து செயல்​முறை விளக்​கங்​க​ளு​டன் எடுத்​துக் கூறி​னர். 300-க்கும் மேற்​பட்ட மாண​வி​கள் கருத்​த​ரங்​கில் பங்​கேற்​ற​னர்.

Read more »

42வது தேசிய நூலக வார விழா

பண்​ருட்டி,​ நவ. 23:

பண்​ருட்டி கிளை நூல​கத்​தில் 42-வது தேசிய நூலக வார விழா அண்​மை​யில் கொண்​டா​டப்​பட்​டது.​ ​ விழா​வில் சாத்​திப்​பாட்டு ஆன்டோ சாரிட்​ட​பிள் டிரஸ்ட் சார்​பில் அதன் நிறு​வ​னர் ஏ.சவ​ரி​நா​தன்,​ தலை​வர் எஸ்.லெசி​ஜோஸ்​பின் ஆகி​யோர் கிளை நூல​கர் வெ.செல்​வ​ராஜ் இடம் ரூ.1000 செலுத்தி நூலக புர​வ​ல​ராக இணைத்​துக்​கொண்​ட​னர். இதே போல் முன்​னர் புர​வ​ல​ராக சேர்ந்த இரா​ஜேஸ்​வரி காளி​தாஸ்,​ கே.எஸ்.செல்​வ​ரா​ஜன்,​ வி.சுகு​மார்,​ சொ.ஆறு​மு​கம்,​ என்.சௌந்தரராஜன் உள்​ளிட்​டோ​ருக்கு நூலக புர​வ​லர் பட்​ட​யம் கொடுத்து கௌரவிக்கப்பட்டது.

Read more »

பண்​ருட்​டி​யில் விட்டு விட்டு மழை

பண் ​ருட்டி,​ நவ. 23:​

பண்​ருட்டி பகு​தி​யில் திங்​கள்​கி​ழமை விட்​டு​விட்டு மழை பெய்​த​தால் பொது மக்​க​ளின் இயல்பு வாழ்க்கை பாதித்​தது.​ ​ கடந்த சில வாரங்​க​ளாக தீவி​ர​மாக பெய்து வந்த வட​கி​ழக்கு பருவ மழை,​ 4 நாள்​க​ளாக ஓய்ந்​தி​ருந்​தது. மீண்​டும் வங்​கக் கட​லில் குறைந்த காற்​ற​ழுத்த தாழ்வு நிலை ஏற்​பட்​டுள்​ள​தால் தமி​ழ​கம் மற்​றும் புதுச்​சே​ரி​யில் மழை பெய்​யும் என வானிலை ஆய்வு மையம் இரு நாள்​க​ளுக்கு முன் அறி​வித்​தி​ருந்​தது. இந்​நி​லை​யில் திங்​கள்​கி​ழமை காலை முதல் பல முறை வெயி​லும்,​ திடீர் மழை​யும் மாறி மாறி பெய்​தது. இத​னால் பொது மக்​கள் மற்​றும் சாலை​யோர வியா​பா​ரி​க​ளின் இயல்பு வாழ்க்கை பாதிக்​கப்​பட்​டது.

Read more »

நிய​ம​னம்​:இளை​ஞ​ரணி பொதுச் செய​ல​ராக மணப்​பாக்​கம் ஆர்.எஸ்.கே.தேவா

பண்​ருட்டி,​ நவ. 23:​

இந்து மக்​கள் கட்​சி​யின் கட​லூர் மாவட்ட இளை​ஞ​ரணி பொதுச் செய​ல​ராக மணப்​பாக்​கம் ஆர்.எஸ்.கே.தேவா நிய​மிக்​கப்​பட்​டுள்​ளார். ​ மாநி​லத் தலை​வர் அர்​ஜூன்​சம்​பத் பரிந்​து​ரை​யின் பேரில்,​ மாநில இளை​ஞ​ரணி பொதுச் செய​லர் டி.குரு​மூர்த்தி இவரை நிய​மித்​துள்​ளார்.​

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior