உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், அக்டோபர் 24, 2011

நெல்லிக்குப்பம் நகராட்சியில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் சுயேச்சை வெற்றி

நெல்லிக்குப்பம்:

        நெல்லிக்குப்பம் நகராட்சியில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தே.மு.தி.க., வேட்பாளர் தோல்வியடைந்தார்.

           நெல்லிக்குப்பம் நகராட்சியில் 3வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு தே.மு.தி.க., சார்பில் ஆனந்தனும், சுயேச்சையாக வெங்கடேசன் உட்பட 6 பேர் போட்டியிட்டனர். இதில் வெங்கடேசன் 231 ஓட்டு பெற்று வெற்றி பெற்றார். ஆனந்தன் 230 ஓட்டு பெற்று ஒரே ஒரு ஓட்டு குறைவால் தோல்வியடைந்து வருத்தத்துடன் வெளியேறினார்.















Read more »

கடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் வெற்றி பெற்ற 51 ஊராட்சி தலைவர்கள் விபரம்

கடலூர்:

          கடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 51 ஊராட்சி தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
 
கடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 51 ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் ஓட்டுகள் வாரியான விவரம்:
 
அழகியநத்தம் ராஜேஸ்வரி 673, 
அன்னவல்லி திலகவதி 1305, 
அசிரிபெரியாங்குப்பம் ஆரங்கி 822, 
செல்லஞ்சேரி அஞ்சாபுலி 660,
சி.என்.பாளையம் ராஜேந்திரன் 2,823, 
கடலூர் முதுநகர் மீனாகுமாரி 2,038,
குண்டுஉப்பலவாடி மாசிலாமணி 1,305, 
காரைக்காடு செல்வகுமாரி 1,659, 
காராமணிக்குப்பம் நடராஜன் 691.
கரைமேடு கல்யாணி 253, 
கரையேறவிட்டகுப்பம் வீரப்பன் 481, 
காரணப்பட்டு தங்கவேல் 270, 
கீழ் அழிஞ்சிப்பட்டு வெங்கடேசன் 328, 
கிளிஞ்சிக்குப்பம் கலியமூர்த்தி 1,383, 
கீழ்குமாரமங்கலம் மைதிலி 863, 
கொடுக்கன்பாளையம் அலமேலு 1,308, 
குணமங்கலம் உமா 349, 
கோண்டூர் பவானி 2,253.
குடிகாடு ஆனந்தன் 845, 
குமலங்குளம் புகழேந்தி 1,313,
மதலப்பட்டு சீதாலட்சுமி 1,510, 
எம்.பி.அகரம் சுசிலா 922, 
மருதாடு கவிதா 395, 
மேல் அழிஞ்சிப்பாட்டு ராமதாஸ் 207, 
நடுவீரப்பட்டு பாலபாஸ்கரன் 1,298, 
நல்லாத்தூர் செல்வி 799, 
நாணமேடு லட்சுமணன் 619,
நத்தப்பட்டு நித்தியானந்தன் 1,135, பச்சையாங்குப்பம் செல்வி 2,332, 
பாதிரிக்குப்பம் கோமதி 4,033.பள்ளிப்பட்டு சிவக்கொழுந்து 540, 
பெரியகங்கணாங்குப்பம் ராஜமாணிக்கம் 627, 
பில்லாலி அரிகிருஷ்ணன் 926, 
புதுக்கடை பாரதி 811,
ராமாபுரம் தரணிதரன் 1,647, 
சேடப்பாளையம் சுந்தரமூர்த்தி 974, 
 செம்மங்குப்பம் ராமச்சந்திரன் 762, 
சிங்கிரிகுடி ராஜேஸ்வரி 541, 
தென்னம்பாக்கம் ரமேஷ் 453, 
தூக்கணாம்பாக்கம் குமாரசாமி 688, 
திருமாணிக்குழி அருள் 911, 
திருப்பணாம்பாக்கம் முருகன் 911.
திருவந்திபுரம் சுதாகரன் 864, 
தோட்டப்பட்டு ராஜலட்சுமி 669, 
உச்சிமேடு விஜயரங்கன் 402, 
உள்ளேரிப்பட்டு பக்கிரி 434, 
 வானமாதேவி செண்பகம் 456, 
வரக்கால்பட்டு தரணி 676, 
வெள்ளக்கரை கிருஷ்ணசாமி 1,194, 
வெள்ளப்பாக்கம் துரைமுருகன் 706, 
விலங்கல்பட்டு ராமதாஸ் 786 
 
ஆகியோர் வெற்றி பெற்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

கடலூர் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவி: 29ல் 27 அ.தி.மு.க.வெற்றி

கடலூர் :

          கடலூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 29 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் 27 இடங்களை அ.தி.மு.க., வும், பா.ம.க., ம.தி.மு.க., தலா ஒரு இடங்களையும் பிடித்துள்ளன. 

வார்டு வாரியாக வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மற்றும் பெற்ற ஓட்டு விவரம்: 

அ.தி.மு.க.,: 

1-அழகாநத்தம் 14,645, 
2-மல்லிகா 16,798, 
3-தேவநாதன் 12,225,
4-லோகநாயகி 12,928, 
5-கந்தன் 15,474, 
6-தேவநாதன் 10,976, 
7-பூங்கொடி 7,503,
8-மாலா 10,211, 
9-பத்மபிரியா 16,492, 
10-உமாதேவி 10,694, 
11-கண்ணப்பன் 12,542, 
12-கலியமூர்த்தி 11,246,
 13-குமார் 13,939, 
14-ரவி 10,427, 
15- ராமதாசு 8,471, 
16-தங்கராசன் 11,318, 
17-முருகேசன் 13,789,
18-தென்னரசி 13, 118,
19-எழிலரசன் 17,740, 
20-பிரபாகரன் 10,536,
21-கருப்பன் 11,174 
22-ராஜேஸ்வரி 7,059, 
23-சங்கர் 5,829, 
24-சிங்காரவேலு 7,342, 
25-செல்வரங்கம் 8,148, 
27-உமா 6,883, 
28-ரேணுகா 10,544,
 
பா.ம.க.,:  26-கருணாகரன், 8,676; 
ம.தி.மு.க.,: 29-கந்தசாமி 7,959 



ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றனர். 














Read more »

மங்களூர் ஒன்றியத்தில் வெற்றி பெற்ற 66 ஊராட்சித் தலைவர்கள்

திட்டக்குடி :

           மங்களூர் ஒன்றியத்திலுள்ள 66 ஊராட்சிகளுக்கான தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மங்களூர் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 66 ஊராட்சி தலைவர்களுக்கான தேர்தல் முடிந்து தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
          இதில் கீழ்ஒரத்தூர், ஆக்கனூர், நிதிநத்தம், நாவலூர் ஊராட்சிகளுக்கு தலைவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மங்களூர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் கழுதூர் ஊராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட செல்வி ஆயிரத்து 783 ஓட்டுகள் பெற்று ஆயிரத்து 184 ஓட்டுகள் வித்தியாசத்தில் நல்லூர் ஒன்றியத்தில் மிக அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். புலிவலம் ஊராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கருணாநிதி 3 ஓட்டுகள் அதிகம் பெற்று நல்லூர் ஒன்றியத்தில் மிக குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 








Read more »

நெய்வேலி ஜவகர் பள்ளி மாணவ, மாணவிகள் சார்பில் சர்வதேச தொழுநோய் மையத்திற்கு 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் நிதி திரட்டினர்

நெய்வேலி :

           நெய்வேலி ஜவகர் பள்ளி மாணவ, மாணவிகள் சார்பில் சர்வதேச தொழுநோய் மையத்திற்கு 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. கடந்த 137 ஆண்டுகளாக தொழுநோயாளிகளுக்கு சேவை செய்து வரும் 'லெப்ரஸி மிஷன் இன்டர்நேஷனல்' எனும் சர்வதேச தொழுநோய் தொண்டு மையம் பள்ளி மாணவர்களுக்கு சமூக சேவையில் வாய்ப்பளிக்கும் வகையில்'ஓர் உயிரை காப்பாற்று' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
 
          இத்திட்டத்தின் மூலம் தொழுநோயாளிகளுக்கு உதவும் வகையில், நெய்வேலி ஜவகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் ராமச்சந்திரன் ஊக்கமளித்ததன் காரணமாக இப் பள்ளி மாணவ, மாணவிகள் தொண்டு நிறுவனத்திற்காக 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் நிதி திரட்டினர். நெய்வேலியில் நடந்த நிகழ்ச்சியில் என்.எல்.சி., சேர்மன் அன்சாரி, மாணவர்கள் திரட்டிய நிதிக்கான காசோலையை தொழுநோய் தொண்டு மைய மேலாளர் பிராங்க்ளின் மில்டனிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் நெய்வேலி ஜவகர் கல்விக் கழக தலைமை நிர்வாகிகள் ராமலிங்கம், கமலநயணன், மோகன், ஜார்ஜ் ஜேக்கப், ஜவகர் பள்ளி முதல்வர் ராமச்சந்திரன் பங்கேற்றனர்.









Read more »

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகளின் விபரம்

          தமிழ்நாட்டில் 10 மாநகராட்சிகள், 125 நகராட்சிகள், 529 பேரூராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள், 31 மாவட்ட ஊராட்சிகள், 12,524 கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன.

                 இந்த உள்ளாட்சி அமைப்பில் மொத்தம் 1 லட்சத்து 32 ஆயிரத்து 401 பதவி இடங்கள் உள்ளன. இதில் 19 ஆயிரத்து 646 பேர் போட்டியின்றி தேர்ந்துஎடுக்கப்பட்டனர். மீதமுள்ள இடங்களுக்கு தேர்தல் நடந்தது.

            மாநில தேர்தல் கமிஷன் இன்று பகல் 1 மணி வரை வெளியிட்ட தகவலின்படி அ.தி.மு.க. 9806 உள்ளாட்சி பதவிகளை கைப்பற்றியுள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, கோவை, வேலூர், நெல்லை, சேலம், தூத்துக்குடி, திருப்பூர், ஈரோடு ஆகிய 10 மாநகராட்சிகளையும் அ.தி.மு.க. கைப்பற்றியது.

              10 மாநகராட்சிகளில் உள்ள மொத்த வார்டுகளில் அ.தி.மு.க. 579 வார்டுகளை கைப்பற்றியது. தேர்தல் நடத்த 124 நகராட்சியில் அ.தி.மு.க. 89 நகராட்சி தலைவர் பதவியை பிடித்தது. 1680 நகராட்சி வார்டுகளும் அந்த கட்சிக்கு கிடைத்தது. 285 பேரூராட்சிகளையும், 2849 பேரூராட்சி வார்டுகளையும் அ.தி.மு,க, கைப்பற்றியது.

                மாவட்ட பஞ்சாயத்து வார்டுகளில் 569 பதவிகளையும், பஞ்சாயத்து யூனியன் வார்டுகளில் 3745 பதவிகளையும் அ.தி.மு.க. கைப்பற்றியது. அ.தி.மு.க.வுக்கு அடுத்தப்படியாக தி.மு.க. 4023 உள்ளாட்சி பதவிகளை கைப்பற்றியது. 23 நகரசபைகளும், 121 பேரூராட்சிகளும் அந்த கட்சிக்கு கிடைத்தது. 10 மாநகராட்சி வார்டுகளில் 128 பதவிகளையும், நகரசபை வார்டுகளில் 963 பதவிகளையும், பேரூராட்சி வார்டுகளில் 1820 பதவி களையும், மாவட்ட பஞ்சாயத்து வார்டுகளில் 26 பதவிகளையும், பஞ்சாயத்து யூனியன் வார்டில் 942 பதவி களையும் தி.மு.க. கைப்பற்றியது.

               3-வதாக சுயேட்சைகள் உள்ளாட்சி பதவிகளை கைப்பற்றினர். மொத்தம் 3309 பதவிகள் சுயேட்சைகளுக்கு கிடைத்தது. இதில் 5 நகர சபையும், 64 பேரூராட்சியும், மாநகராட்சியில் 55 வார்டு களும் அடங்கும். தே.மு.தி.க. 855 பதவிகளை பிடித்து 4-வது இடத்தை கைப்பற்றியது. இதில் 2 நகரசபையும், 3 பேரூராட்சியும், மாநகராட்சியில் 8 வார்டுகளும் இதில் அடங்கும்.

                  காங்கிரஸ் கட்சிக்கு 737 பதவிகள் கிடைத்தது. இதில் 24 பேரூராட்சி அடங்கும்.அந்த கட்சிக்கு ஒரு நகரசபை கூட கிடைக்கவில்லை. பா.ம.க. 395 பதவிகளையும், பாரதிய ஜனதா 2 நகரசபை உள்பட 270 பதவிகளையும், ம.தி.மு.க. ஒரு நகரசபை உள்பட 193 பதவிகளையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 2 நகரசபை உள்பட 159 பதவிகளையும், இந்திய கம்யூனிஸ்டு 99 பதவிகளையும் பிடித்தன. மற்றவைகள் 47 பதவிகளை பிடித்தன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

கடலூர் அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்


 http://mmimages.mmnews.in/Articles/2011/Oct/db2cb794-bbe8-42ce-b30d-0247629ef49c_S_secvpf.gif
 
கடலூர்:

         கடலூர் அருகே உள்ள வானமாதேவி விலங்கப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தனுஷ் (வயது 24). இவர் பாகூரில் உள்ள 4 சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் கடையில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். தனுசுக்கும் கடலூர் அருகே உள்ள புதுக்குப்பத்தை சேர்ந்த தேவிகா (21) என்ப வருக்கும் ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

            இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான தேவிகாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து அவரை கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள பிரசவவார்டில் உறவினர்கள் சேர்த்தனர். அவரது உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள் தேவிகாவுக்கு குழந்தை பிறப்பதற்கான அறிகுறிகள் தென்படாததால் அவருக்கு வார்டிலேயே தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.

        தேவிகாவுக்கு மீண்டும் பிரசவவலி ஏற்பட்டத்தை அடுத்து அவரை உடனடியாக பிரசவ அறைக்கு அழைத்து சென்றனர். அப்போது அவருக்கு அழகிய பெண் குழந்தை சுகமாக பிறந்தது. இதை அடுத்து தேவிகாவையும், பெண் குழந்தையையும் வார்டுக்கு அழைத்து செல்லலாம் என்று இருந்தபோது, மீண்டும் பிரசவ வலி ஏற்பட்டது.

               இதனால் தேவிகாவுக்கு மீண்டும் ஒரு குழந்தை பிறக்க வாய்ப்பு இருப்பதாக டாக்டர்கள் நினைத்தனர். ஆனால் அடுத்தடுத்து ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்தன.   ஒரே பிரசவத்தில் 2 பெண் குழந்தை, ஒரு ஆண் குழந்தை பிறந்ததை பார்த்து டாக்டர்களும், நர்சு மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் ஆச்சரியம் அடைந்தனர். ஆனால் குழந்தைகள் ஒவ்வொன்றும் சராசரி எடை(3கிலோ)- யை விட குறைவாக இருந்தன.

              ஒரு பெண் குழந்தை 2 கிலோ 400 கிராம் எடையும், இன்னொரு பெண் குழந்தை 2 கிலோ 100 கிராம் எடையும், ஆண் குழந்தை 1 கிலோ 600 கிராம் எடையும் இருந்தன. இதில் 1 கிலோ 600 கிராம் எடையுள்ள பெண் குழந்தை சிசு தீவிர சிகிச்சை கண்காணிப்பு பகுதியில் ‘இன்குபெட்டர்‘ கருவியில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  3 குழந்தைகளும், தாயும், நல முடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்   இது குறித்து தனுஷ் கூறும்போது இது எனது மனைவிக்கு தலைப்பிரசவம். அவளுடைய வயிறு பெரிதாக இருந்ததால் 2 குழந்தைகள் பிறக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்து இருக்கிறது என தெரிவித்தார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

Thumbs up to AIADMK party in all the eight municipalities in Cuddalore District

CUDDALORE: 

        Cuddalore has turned into a bastion for the ruling AIADMK as its candidates emerged victorious in all the eight municipalities in the district. The party also performed well in 14 out of 16 town panchayats in the district except for Vadalur and Parangipet.

           The state government’s welfare schemes seem to have swung both the urban and rural voters towards the AIADMK as the it won the chairmanships of Cuddalore, Nellikuppam, Panruti, Chidambaram and Virudhachalam municipalities in the district. The vote margins between AIADMK candidates and their nearest rivals are also huge.

           CK Subramaniyan (AIADMK) secured 39,634 while his nearest rival KS Raja (DMK) got 21,517. S Dhanasekaran of CPM got 5348 votes and P Thamaraiselvan of the VCK got 4799 votes.

Out of 45 wards AIADMK swept 26 wards, 

DMK won in 5 wards, 
PMK in 3 wards, 
VCK won in 2 wards while Congress and DMDK won one ward each 

and the independent candidates emerged victorious in seven wards.

Chidambaram 

             AIADMK’s Nirmala Sundar defeated DMK candidate S Ezhilmathi with a margin of 6988 votes. Nirmala secured 16, 318 votes whereas Ezhilmathi got 9330 votes. CPM’s H.Bowjiya Begam finished third with 3017 votes.

Panruti

         AIADMK candidate P Paneerselvam emerged triumphant with 14,790 votes while S Ananthi of the DMK got 6469 votes. Congress candidate R Panchavarnam finished third with 6160 votes and DMDK’s S Arivoli got 4680 votes.

Out of 33 wards in the region,

the AIADMK emerged victorious in a total of 24 wards, 
DMK in 6 wards, 
DMDK in 2 wards and 
the CPI candidate in  one ward.

Nellikuppam

S Sudhakar, AIADMK candidate, became the chairman of Nellikuppam municipality by scoring 9730 votes while his opponent S Pugazendhi of DMK got 5431 votes.

Vrridhachalam

            AIADMK candidate R D Aranganathan won by securing 13,857 votes and DMK’s V Thatchinamoorthy got 9230 votes. DMDK candidate R Ananthagopal garnered 4131 votes while PMK’s Murugan secured 2731 votes.







Read more »

Thumbs up to AIADMK party in all the eight municipalities in Cuddalore District

CUDDALORE: 

        Cuddalore has turned into a bastion for the ruling AIADMK as its candidates emerged victorious in all the eight municipalities in the district. The party also performed well in 14 out of 16 town panchayats in the district except for Vadalur and Parangipet.

           The state government’s welfare schemes seem to have swung both the urban and rural voters towards the AIADMK as the it won the chairmanships of Cuddalore, Nellikuppam, Panruti, Chidambaram and Virudhachalam municipalities in the district. The vote margins between AIADMK candidates and their nearest rivals are also huge.

           CK Subramaniyan (AIADMK) secured 39,634 while his nearest rival KS Raja (DMK) got 21,517. S Dhanasekaran of CPM got 5348 votes and P Thamaraiselvan of the VCK got 4799 votes.

Out of 45 wards AIADMK swept 26 wards, 

DMK won in 5 wards, 
PMK in 3 wards, 
VCK won in 2 wards while Congress and DMDK won one ward each 

and the independent candidates emerged victorious in seven wards.

Chidambaram 

             AIADMK’s Nirmala Sundar defeated DMK candidate S Ezhilmathi with a margin of 6988 votes. Nirmala secured 16, 318 votes whereas Ezhilmathi got 9330 votes. CPM’s H.Bowjiya Begam finished third with 3017 votes.

Panruti

         AIADMK candidate P Paneerselvam emerged triumphant with 14,790 votes while S Ananthi of the DMK got 6469 votes. Congress candidate R Panchavarnam finished third with 6160 votes and DMDK’s S Arivoli got 4680 votes.

Out of 33 wards in the region,

the AIADMK emerged victorious in a total of 24 wards, 
DMK in 6 wards, 
DMDK in 2 wards and 
the CPI candidate in  one ward.

Nellikuppam

S Sudhakar, AIADMK candidate, became the chairman of Nellikuppam municipality by scoring 9730 votes while his opponent S Pugazendhi of DMK got 5431 votes.

Vrridhachalam

            AIADMK candidate R D Aranganathan won by securing 13,857 votes and DMK’s V Thatchinamoorthy got 9230 votes. DMDK candidate R Ananthagopal garnered 4131 votes while PMK’s Murugan secured 2731 votes.







Read more »

கடலூர் காராமணிக்குப்பத்தில்தேர்தல் தகறாரு: 8 பேருக்கு அரிவாள் வெட்டு

கடலூர்:

                கடலூர் அருகே காராமணிக்குப்பத்தில் ஊராட்சித் தலைவர் நடராஜ் ஆதரவாளரும், தோற்ற ஜெயவேல் ஆதரவாளர்களும் மோதலில் ஈடுபட்டனர். தேர்தல் தகராறில் 8 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. 2 பெண் உள்பட நாகராஜ் ஆதரவாளர் 4 பேர், ஜெயவேல் ஆதரவாளர் 4 பேருக்கு காயம் ஏற்பட்டது. அரிவாள் வெட்டை நேரில் பார்த்த நடராஜ் உறவினர் தமிழரசி மாரடைப்பால் உயிரிழந்தார்.



Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior