உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, அக்டோபர் 09, 2011

கடலூர் மத்திய சிறையில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ. அன்பில் பெரியசாமி ஜாமீனில் விடுதலை


 http://mmimages.mmnews.in/Articles/2011/Oct/fbe0ed90-3da7-4b90-9757-bc3b82ccb21e_S_secvpf.gif
 
கடலூர்: 

         முன்னாள் எம்.எல்.ஏ. அன்பில் பெரியசாமி கடலூர் ஜெயிலில் இருந்து விடுதலையானார்.   திருச்சியில் தி.மு.க. அலுவலக கட்டிடத்துக்கு நில அபகரிப்பு செய்யப்பட்டுள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, முன்னாள் எம்.எல்.ஏ. அன்பில் பெரியசாமி, தொழிலதிபர் சுந்தரராஜூலு ஆகியோர் கைது செய்யப்பட்டு கடலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

            இந்த வழக்கில் ஜாமீன்கோரி திருச்சி கோர்ட்டில் அன்பில்பெரியசாமி, சுந்தரராஜூலு ஆகியோர் மனுதாக்கல் செய்து இருந்தனர்.   நேற்று அந்த மனு மீதான விசாரணை நடந்தது. இதில் 2 பேருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது. வருகிற 10-ந் தேதி முதல் ஒரு வாரம் மதுரை கோர்ட்டில் 2 பேரும் தினமும் ஆஜராகி கையெழுத்திடவேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது. அதன்படி நேற்று மாலை கடலூர் ஜெயிலில் இருந்து அன்பில் பெரியசாமியும், சுந்தரராஜூலும் ஜாமீனில் விடுதலையானர்கள்.

பின்னர்  அன்பில் பெரியசாமி கூறியது:-


தி.மு.க. தலைவர் கருணாநிதியின் கட்டளைப்படி செயல்படுவோம். வழக்குகளை சட்டசபடி சந்திப்போம்.  இவ்வாறு அவர் கூறினார்.

Read more »

கடலூர் கங்கனாங்குப்பத்தில் புனித அந்தோனியார் மெட்ரிக் பள்ளிச்சுவர் இடிந்து மாணவர் சாவு

கடலூர்:

           கடலூர் அருகே வெள்ளிக்கிழமை பள்ளிச் சுவர் இடிந்து, மாணவர் இறந்தது தொடர்பாக பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  

               கடலூர் அருகே பெரிய கங்கனாங்குப்பத்தில் புனித அந்தோனியார் மெட்ரிக் பள்ளி உள்ளது.  இப்பள்ளியில் வகுப்பு இடைவேளையின் போது, கழிவறையின் முன்னால், மறைவுக்காக எழுதப்பட்டு இருந்த சுவர், திடீரென இடிந்து விழுந்தது.  இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி, கன்னியகோயில் சரவணனின் மகன் கிஷோர் (7), புதுவை மாநிலம் பாகூரைச் சேர்ந்த ராமலிங்கத்தின் மகன் ஹரிஷ் (7) ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.  இதில் கிஷோர் அதே இடத்தில் இறந்தார். ஹரிஷ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  

              சிறுவன் கிஷோர் இறந்த சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும், மாணவர்களின் பெற்றோரும், அப்பகுதி மக்களும் விரைந்து வந்து பள்ளி நிர்வாகிகளைக் கைது செய்ய வலியுறுத்தி, கடலூர்- புதுவை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கடலூர் போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் வனிதா தலைமையில் போலீஸôர் விரைந்து, மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி, அனைவரையும் கலைந்து போகச் செய்தனர்.  

             பின்னர் பள்ளி நிர்வாகிகள், மாணவர்களின் பெற்றோர் ஆகியோரிடம் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி செ.அமுதவல்லி, வட்டாட்சியர் அசோகன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.  இச்சம்பவம் தொடர்பாக ரெட்டிச்சாவடி போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.











Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior